Re: Poem

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 14, 2016, 9:59:34 AM9/14/16
to சந்தவசந்தம், kumarvis...@gmail.com, vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Wednesday, September 14, 2016 at 4:09:29 AM UTC-7, visgop wrote:
'கூகுள் ஆண்டவன்' கொடுத்தான்.
அதே ஆண்டவனை நானும் கெஞ்சினேன். கொடுக்கவில்லை.
நன்றியுடன்
கோபால்.

2016-09-14 16:18 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
திரு சுப்பராமன் அவர்களுக்கும் திரு கோபால் அவர்களுக்கும் நன்றி.
நான் என்ன செய்தேன் : கூகுள் ஆண்டவன் கொடுத்தான். உங்களால் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் வாரானைப் பருவத்தில் சில பாடல்களைப் படித்து இன்புற்றேன். அழகோ அழகு!


பகழிக்கூத்தர் பாடிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், புலவர் புன்னைவனநாதர் உரையுடன்:

பகழிக்கூத்தர் - ஐயனார் கோவில் இருக்கும் ஊர். அவ்வூரில் கிடைத்த கல்வெட்டு பற்றி அறிய:
(பகழிக்கூத்தர் பற்றி அவ்விழையில் சொல்லப் பல விஷயங்கள் உள்ளன.)

தமிழில் ஒரு 2 லட்சம் அச்சுநூல்கள் படிப்பார் இல்லாமையாலும், அந்நூல்களைப் படிக்க ஆர்வமிருப்போருக்கு அவை
கிடைக்கும் வகையில் இல்லாமலும் கிடக்கின்றன. பல அழியும் தறுவாயில், வப்படம் போல் நொறுங்கும் தாள்களில்
(due to acidity of old paper). இணையம் இந்த நூல்களுக்கு ஓர் வரப்ரசாதம். பழைய பக்தி இலக்கியங்களில்
ஸ்தலபுராணங்களும், ப்ரபந்தங்களும் தமிழிலே தான் மிக அதிகம். அதுவும் சைவத்தில் நனியதிகம்.
அரசுக்கோ காலேஜ்களில் இருப்போருக்கோ இவற்றில் ஆர்வமில்லை, பலருக்கு இவற்றைப் படித்துப் பார்க்கும்
வாய்ப்பும் 50+ ஆண்டுகளாய் தரப்படவுமில்லை.

I have a dream என்றார் அமெரிக்க மார்ட்டின் லூதர் கிங். அதுபோல, இந்த 2 லட்சம் நூல்கள் இணையஒளி பிடிஎப் களாக,
அதன் பின்னர் யூனிகோட் எழுத்துக்களாக காணுமா? I have a dream. நாமெல்லாம் ஆளுக்கொரு பழைய அச்சுநூலை,
சொந்தக்காரர், ஊர்க்காரர், வாத்தியார், .... எழுதியதை இணையம் ஏற்றினால், அரசு அதிகாரிகளை தூண்டினால் நடக்கும்.

ஆறாம்திணைத் தெய்வம் கூகுளாண்டவரின் தோற்றம் - Jonathan Fletcher's contribution,

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்,
நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages