ஜூபிடரும் இந்திரனும்

3 views
Skip to first unread message

செல்வன்

unread,
Aug 5, 2016, 3:44:42 AM8/5/16
to mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், tamilpayani

நம் ஊர் இந்திரன், ரோமானிய ஜூபிடர், கிரேக்க ஸூZ (Zeus) மூவரும் ஒன்று என சொல்லபடுவதுண்டு.

கொஞ்சம் ஐரோப்பா பக்கமும் போய் நார்டிக் தெய்வமான தோரையும் இந்திரனுடன் ஒப்பிடுவார்கள். தோர் பெயரால் அமைந்ததே வியாழக்கிழமை (Thor's day = Thursday )

எர்ட் பார்க்மன் எழுதின நூல் ஒன்றை(How Jesus became God) படிக்க ஆரம்பித்தேன்..கிழே வைக்க விடாமல் தொல்லை செய்கிறது.

அதில் ஜூபிடர் பற்றி வரும் சுவாரசியமான கதை இந்திரந் அகலிகை சம்பவத்தை நினைவூட்டுகிறது

இதன் மூலநூல் ஆம்பைட்ரான் எனும் ரோமானிய நூல்.

இதன்படி ரோமில் திபியஸ் எனும் புகழ்பெற்ற படைதளபதி இருந்தார். அவருக்கு ஆல்க்மேனா எனும் மிக அழகிய மனைவி இருந்தாள். கர்ப்பமான மனைவியை வீட்டுவிட்டு தளபதி போருக்கு சென்றார்.

ஆல்க்மைனாவின் அழகை கேள்விப்பட்ட ஜூபிடர் அவளை அடைய திபியஸ் போல உருவெடுத்து வந்தார். அதன்பின் இரவு அவளுடன் தங்கி தன் மந்திர சக்தியால் பூமி சுற்றுவதை கூட நிறுத்தி இரவை நீட்டித்தாராம்.

காலையில் மனைவி களைப்புடன் எழுகையில் ஜூபிடர் போய்விட்டார், உண்மையான கணவன் வெற்றிவாகை சூடி வீடு திரும்புகிறான். மனைவி அவனை உற்சாகத்துடன் வரவேற்காததால் கடுமையான கோபமடைந்து விசாரிக்க உண்மை தெரிகிறது. ஆனால் இதில் ஜூபிடரை திபியஸால் எதுவும் செய்ய முடிவதில்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே கர்ப்பமாக இருந்த ஆல்க்மைனா ஜூபிடர் மூலம் இரன்டாவது கருவையும் வயிற்றில் தாங்குகிறாள்..(பண்டைய ரோமில் பயாலஜி அறிவு அத்தனை இல்லை போல :-) ஜூபிடரின் மகனாக மாவீரன் ஹெர்க்குலிஸும், திபியஸின் மகனாக ஐபிகிள்ஸும் பிறக்கிறார்கள்.

கிரேக்க கடவுள் ஸூஸுக்கும் இதுபோல ஒரு வரலாறு உண்டு.

கிரேக்க மன்னர் பிலிப்...அவர் மனைவி ஒலிம்பியா...இருவரும் திருமணம் செய்து முதலிரவு அறையில் நுழைகையில் ஸூஉஸ் பாம்புவடிவெடுத்து ஒலிம்பியாவை அடைகிறான். பிலிப்பால் அதை தடுக்க முடியாமல் மயக்கநிலையில் இருக்கிறார். ஒலிம்பியாவுக்கும், ஸூஸுக்கும் பிறந்தவனே மாவீரன் அலெக்சாந்தர்

ஆக அகலிகை கதையின் வடிவம் உலகெங்கும் உள்ளது வியப்பை அளிக்கிறது. ஆனால் இது தற்செயலாக கூட இருக்கலாம். ஏனெனில் அலெக்சாந்தர் தான் பிடித்த நாடுகளில் தன்னை கடவுளின் மகன் என அறிவிக்கிறான். அப்படி தன்னை கடவுளின் மகனாக அறிவிக்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவும் தன் தாயின் கற்பை ரஜினிமுருகன் பாணியில் அவனே கதைகட்டியும் அழித்திருக்கலாம்..அல்லது அக்கால அரசவம்சங்களில் இம்மாதிரி நிறைய ஹான்கிபாங்கி விஷயங்கள் நடந்துமிருக்கலாம்..

வேந்தன் அரசு

unread,
Aug 5, 2016, 5:31:02 AM8/5/16
to தமிழ் சிறகுகள், mintamil, vallamai, பண்புடன், tamilpayani
<
கிரேக்க கடவுள் ஸூஸுக்கும் இதுபோல ஒரு வரலாறு உண்டு>

ஜீசஸுக்கும் இதுபோல் ஒரு வரலாறு உண்டு.

5 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 3:44 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

G.Sridharan

unread,
Aug 5, 2016, 5:40:41 AM8/5/16
to panb...@googlegroups.com, Neander Selvan
(Thor's day = Thursday ), 

இங்கு  எப்படி இந்தியாவில் குருவார்(இந்தி) ஆகவும் , அதையே தமிழில் வியாழனாகவும் பெயர் பெற்றது ?

With Regards
G Sridharan

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Reply all
Reply to author
Forward
0 new messages