என்குரல் / என்குறள் : பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2

19 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
May 22, 2017, 7:30:01 AM5/22/17
to பண்புடன், நட்புடன், தென்றல், தமிழ் சிறகுகள்

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...

என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய 
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில் 
கால்வைத்தால்
 ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]

ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும் 
நின்ற திருமணமும் நன்று
[பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]

ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன் 
ஆவான் அரைமருத்து வன்
[பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]

நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
May 22, 2017, 9:35:17 AM5/22/17
to தமிழ் சிறகுகள், பண்புடன், நட்புடன், தென்றல்


2017-05-22 18:26 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
நல்ல முயற்சி.  தொடருங்கள்.

​வாழ்க ஐயா .. மிக நன்றி 

அப்படியே முதல் பதிப்பையும் பார்த்து விடுங்கள் ஐயா 

பெண்கள் பற்றிய பழமொழிகளின் உண்மை நிலவரம் :

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 1


சேல்அகட்டிச் சாலையில் ஆள்வரப் பார்த்திருக்கும்
மாதரை நம்பிவிடா தே
(சேல் – கண்)
[மூலம்- சேலை கட்டிய மாதரை நம்பாதே]


உண்டி சுருக்கும் வழியை அறிந்தோரின்
பண்டிக்குக் சேரும் அழகு
(உண்டி – உணவு , பண்டி – வயிறு)
[மூலம்- உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு]

மாமி உழைத்தால்மண் ணுக்குஉரம் ஆகும்
மருமகளால் பொன்னுக்கு உரம்
[மூலம்- மாமியார் உடத்தால் மண்குடம்...... ]

பெண்புத்தி என்பதோர் ஆணின்பின் நின்றவனை
முன்செலுத்தும் புத்தியா கும்
[மூலம்- பெண்புத்தி, பின்புத்தி]

தாய்மேல் பழிசொல்லிக் கொல்வோரும் நீர்மேல் 
பிழை
கண்டு சொல்வோரும் ஒன்று
[மூலம்- தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே]
 

வேந்தன் அரசு

unread,
May 22, 2017, 10:18:02 AM5/22/17
to தமிழ் சிறகுகள், பண்புடன், நட்புடன், தென்றல்


22 மே, 2017 ’அன்று’ முற்பகல் 4:29 அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]


இதைமட்டும் மேம்படுத்தலாம். பிற அருமை.

துரை.ந.உ

unread,
Jun 18, 2017, 7:55:11 AM6/18/17
to பண்புடன், தமிழ் சிறகுகள், நட்புடன், தென்றல்
 நன்றி ஐயா 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages