கூடங்குளம்

332 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Jul 10, 2012, 11:50:43 AM7/10/12
to பண்புடன்

In the shadow of Fukushima

Postnoon News | July 9, 2012 | 1 Comment

in_the_shadow_of_fukushima_postnoon_news_7

There’s something in the songs that children in and around Kudankulam sing: for whom is this nuclear power plant if the people for whom it is intended don’t want it? Idinthakarai and surrounding villages have vowed to not let a Fukushima happen here.

S Senthalir
feed...@postnoon.com
in_the_shadow_of_fukushima_postnoon_news_6

S Senthalir

Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.

In this small coastal village of Idinthakarai in Tirunelveli district, Tamil Nadu, children don’t sing the usual rhymes or film songs, but borrow their tunes and sing songs penned in protest against the nuclear project.

At the behest of the gathering, Mahima and her friends huddle on the ground near the Lourdes Matha Church — the venue of the relay fast against the Kudankulam Nuclear Power Project — to sing again. Every child in this coastal belt will tell you that they do not want Idinthakarai to be another Chernobyl or Fukushima; they ask the government why a project they do not want is being forced upon them.

On July 1, the protest’s 321st day, thousands, including children, gathered at Lourdes Matha Church. Representatives from over 20 organisations addressed the protesters, voicing solidarity with them.

Who told these kids about the dangers that the Kudankulam project poses? “No one,” says Mahima. “I composed these songs after 12 people went on indefinite fast. We learnt about the harmful effects of the nuclear power project on the environment by participating in the protest, watching news on TV and documentaries screened in our village.”

The first phase of the indefinite strike in Idinthakarai began on September 11, 2011. Then, women in the 20-28 age group organised campaigns at every college in their taluk to garner support against the commissioning of the nuclear plant. They submitted a memorandum to the district collector and held a press meet when 127 people went on an indefinite fast.

“We went to colleges along with our friends and spoke about the nuclear power plant,” 23-year old Shalini says. “After obtaining permission from the college principal, we took students on a rally to the district office shouting slogans in support of the people on hunger strike.”

in_the_shadow_of_fukushima_postnoon_news_2

The tipping point was a prohibitory order that was imposed on villages near the plant on March 19, 2012; that day the government cleared project though it had promised not to.

A massive force of 5,000 armed professionals was deployed. All roads leading to Idinthakarai were blocked; The supply of electricity, water and food to the village was cut for nearly two weeks.

A 29-year old fisherman, Sangeeth, recalled that people from neighbouring villages brought them essential goods by sea and provided them with food. “If it was not for their efforts, we would not have survived. This brought the villages in the area, which were otherwise always at fighting, together. We look out for each other now,” he says.

Following the prohibitory orders, sedition cases were filed against thousands of people here. A fact-finding team, headed by senior journalist Sam Rajappa, reported that between September and December 2011, the police had filed 107 FIRs against 55,795 people and ‘others’. Of these, 6,800 people were charged with ‘sedition’ and/or ‘waging war against the State’.

“People have been charged with at least 21 sections of the Indian Penal Code, including Section 121 (waging war against the Government of India) against 3,600 people, and Section 124A (sedition) against 3,200 people. The Kudankulam police station may have the dubious distinction of being the station where the largest number of ‘sedition’ and ‘waging war’ cases has been filed in the shortest time in the history of colonial and independent India,” the report stated.

in_the_shadow_of_fukushima_postnoon_news_3

Youngsters have been playing a major role in the protests. When Section 144 of the CrPC (unlawful assembly) was imposed, young men spent all night alerting villagers of the police action. They planted thorny bushes around the village periphery when there was a threat of the Coordinator of People’s Movement Against Nuclear Energy (PMANE) S.P. Udayakumar being arrested.

“The more than 13 days of prohibitory orders imposed on our village changed us completely. Instead of girls, our topics of discussion are now politics and environment. We screened documentary films on the damages caused due to nuclear plants in Chernobyl and Fukushima in seven villages near the plant, including Koothenkuly, Perumanal, Kootapanal, Kootapuli, Periyathalai, Kooduthaalai and Uvari. We plan to continue our campaign to create awareness among people about the environmental impact of the project,” says 23-year-old Vivek, a graphic designer. Vivek left his job in Chennai to support the campaign.

“The dissent against the nuclear plant continues, with more villages joining every day. Villagers from Koothenkuly, Kootapuli and Perumanal have also joined the relay fast,” says Sangeeth.

in_the_shadow_of_fukushima_postnoon_news_4

IMPENDING DANGER

PMANE has pointed out that more than 1.2 million people live in nearly 150 villages and towns within a 30 km radius of the plant. This exceeds the Atomic Energy Regulatory Board’s stipulations. It is estimated that nearly 33,000 people live within the five-km sterilisation zone and it will be impossible to evacuate these people quickly in case of a nuclear disaster. PMANE submitted a memorandum to the Prime Minister in October last year. They say the government has not taken it into consideration.

Social activist Sathish Kumar, who was arrested and charged with waging war against the state for supporting the anti-nuclear protest, points out that no safety guidelines have been followed while setting up the nuclear power plant in Kudankulam. He adds that according to the International Atomic Energy Agency (IAEA), the site must not have experienced any volcanic eruptions in the last 10 million years.

The region around the Kudankulam project site had experienced minor volcanic tremors during 1998-2001 and the terrain has signs of past volcanic activity. A summary of the findings published in 16 research papers on volcanism near Kudankulam Nuclear Power Plant (KKNPP) on land and in the Gulf of Manna (GoM) was included in the report by the Expert Committee of PMANE on December 12, 2011. There were four volcanic eruptions within 32 to 75km from the Kudankulam reactor campus between 1998 and 2001. All eruptions occurred near electric poles. The first occurred on August 5, 1998 at Abhishekappatti, 60km northwest of Kudankulam, 45 days after the commission of the detailed project report (DPR) for KKNPP. The latest eruption occurred four months before the foundations were laid. All sites of eruption are located in the northwest-southeast regions.

“When the tsunami hit the region in December 2004, we were able to move everyone to a safe place. What has happened in Fukushima has added to our fears. We don’t want this to happen here. Why doesn’t the government understand this? It has become our duty to make people understand,” says Vivek.

Sixteen-year old Rossary Deepa adds, “This project will destroy our livelihood. We have seen how politicians betrayed us after winning the elections. We want to live here and will not stop the protest till they close the plant,” she asserts.

Here, youngsters are not only creating awareness about the environment, but also assist in village administration. They also plan to start a self-help group to assist women through a microfinance project. SP Udayakumar credits the women and children to be the driving force of this struggle. “It was their initiatives to get support from schools and colleges that pulled in thousands of youngsters and more women to this protest. We only coordinated the movement,” he explains.

As we waited at the bus stop to leave Idinthakarai after a two-day stay, some youngsters requested us to spread the message of their fight. “There must be people fighting for many issues in your state. Tell them about us. We want their support, too. People should know that there are many ways to generate power but not at the cost of people’s lives and livelihood,” says Sangeeth.

in_the_shadow_of_fukushima_postnoon_news_5

How it started?

The construction of the Kudankulam Nuclear Power Plant started in 1997, nearly a decade after Prime Minister Rajiv Gandhi and Soviet Union President Mikhail Gorbachev signed an Inter-Government Agreement for the construction of the two reactors. Currently, two 1 GW reactors are being built by the Nuclear Power Corporation of India Limited (NPCIL) and Atomstroyexport. It is expected to be the largest nuclear power generation complex in India.

Protests against the project intensified after the March 2011 Fukushima nuclear disaster in Japan. Locals objected to the plant on the basis that more than 1 million people live within a 30-km radius of the powerplant, which far exceeds the Atomic Energy Regulation Board’s stipulations. A PIL has also been filed against it at the apex court. Scientists have stated that Kudankulam’s reactors are safe and the locals’ fears are unfounded. The Centre’s and Tamil Nadu government’s panels of experts which were set up to assess the vulnerability of the project gave it a clean chit.

Yarukkaaga Anuulai Yarukkaaga… Indha Anu ulai NasaAnuulai… Anuulai Tamil Inathai

Alzhikkum Anuulai…Maranamennum Thoodu Vandadu… Adu Anuulaiin Vadivil

Vandadu… Swargamaga Avan Ninaithathu Adu Naragamaga Marivittadu…

(For whom is this nuclear plant… this nuclear plant…

The plant that would destroy Tamil people…

The harbinger of death has come in the form of a nuclear plant…

He thought it was heaven but it has now turned into hell…)

Snabak Vinod (SV)

unread,
Jul 10, 2012, 11:54:07 AM7/10/12
to பண்புடன்

Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.

There’s something in the songs that children in and around Kudankulam sing: for whom is this nuclear power plant if the people for whom it is intended don’t want it? Idinthakarai and surrounding villages have vowed to not let a Fukushima happen here.

யாருக்காக அணுஉலை யாருக்காக…
இந்த அணு உலை நாச அணுஉலை…
தமிழ் இனத்தை அழிக்கும் அணுஉலை…
மரணமென்னும் தூது வந்தது… அது அணுஉலையின் வடிவில் வந்தது… 
சொர்க்கமாக அவன் நினைத்தது அது நரகமாக மாறிவிட்டது…



(For whom is this nuclear plant… this nuclear plant…
The plant that would destroy Tamil people…
The harbinger of death has come in the form of a nuclear plant…
He thought it was heaven but it has now turned into hell…)

--In the shadow of Fukushima
(http://postnoon.com/2012/07/09/in-the-shadow-of-fukushima/58068)

Ramesh Murugan

unread,
Jul 11, 2012, 4:48:10 AM7/11/12
to panb...@googlegroups.com
கூடங்குளம் = புகுஷிமா
கல்பாக்கம் = ???
:))

2012/7/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.

There’s something in the songs that children in and around Kudankulam sing: for whom is this nuclear power plant if the people for whom it is intended don’t want it? Idinthakarai and surrounding villages have vowed to not let a Fukushima happen here.


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Srimoorthy.S

unread,
Jul 11, 2012, 1:34:00 PM7/11/12
to panb...@googlegroups.com

அத்வானி=சோனியா
மன்மோஹன்= ???

சோ மன்மோஹன் நல்லவர்.

(அச்சச்சோ. திருப்பி படிச்சா எனக்கே புரிய நேரமெடுக்குதே)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Snabak Vinod (SV)

unread,
Jul 12, 2012, 5:53:33 AM7/12/12
to panb...@googlegroups.com
தமிழரின் உடனடித் தேவை
சுப. உதயகுமார்

நமது தமிழ் சமுதாயம் ஒரு திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. அதன் குறியீடாக பல சமூக, அரசியல், கலாச்சார பிரச்சினைகளைப் பற்றி நாம் இன்று விவாதிக்க துவங்கியிருக்கிறோம். தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, கு...டும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் நம்மைத் தள்ளி திமுகவும், அதிமுகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெற்று வார்த்தைகளையும், வீர வசனங்களையும் கேட்டு வீணாகிப்போன நமது தமிழினம், நமது எதிர்காலத்தைப் பற்றி கரிசனத்துடனும் கவனத்துடனும் அலசி ஆராயத் துவங்கிவிட்டது.

திராவிடம், பெரியாரியம், திமுக-அதிமுக கட்சிகளின் இன விரோதப் போக்கு, தமிழ் தேசியம், இந்த சித்தாந்தம் பேசுகிற அமைப்புகளின் இடையேயான சிறு சிறு வேறுபாடுகள், ஈழப் பிரச்சினையில் நமது நிலைப்பாடு பற்றியெல்லாம் ஒர் ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, ஒலியை விட அதிக ஒளியை உருவாக்கும், உருவாக்கவேண்டும் என விரும்புவோம்.

அதோடு நமது தமிழ் சமுதாயத்தின் பொருளாதாரத்தைப் பற்றியும் நாம் விவாதிக்க முன்வர வேண்டும். “வரவு எட்டணா, செலவு பத்தணா” என்ற வகையில்தான் நமது மாநில நிதி நிர்வாகம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. சாராயம் விற்று, நம் தமிழ் சகோதரர்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, நமது குடும்பங்களை எல்லாம் குட்டிசுவராக்கித்தான் அரசை நடத்துகின்ற ஒரு இழிநிலை நிலவி வருகிறது. இலவசமாக பொருட்கள் கொடுத்து, குடும்பத் தலைவர்களைப் பொறுப்பற்றவர்களாக்கி, தமிழ் மக்களை பிச்சைக்காரர்களாக்கி ஒரு பெரும் அசிங்கம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாய அபிவிருத்தி, தொழில்வள உருவாக்கம், வேலை வாய்ப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார மேம்பாடு என சிந்திப்பதற்குப் பதிலாக, இனாம் கொடுப்பது, கை ஏந்தியே பிழைக்க வைப்பது, இடையில் கிடைப்பதை சுருட்டிக் கொள்வது என செயல்படுகிறார்கள் ஆட்சியாளர்கள்.

பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலத்தில் ஏழ்மை தலைவிரித்து ஆடியபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, இலவச உணவோடு முட்டைப் போடுகிறோம், முளைப்பயிறு தருகிறோம் என்று இறுமாப்பு பேசுகிறது ஆட்சி பீடம். இந்த சத்துணவு வேலை கிடைத்தால் நமது பங்குக்கு நாமும் திருடலாம் என்று மக்கள் போட்டி போடுகிற நிலையைப் பார்க்கிறோம். ரூபாய் 5,500தான் மாதச் சம்பளம் என்றாலும், ஒரு சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 632 பெண்கள் திருச்சியில் போட்டி போட்டதாக செய்திகள் சொல்லுகின்றன.

வெறுப்பு, கோபத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை கேள்விக்குள்ளாக்குவதுபோல; இலவசம், லஞ்சம் மீது எழுப்பப்பட்ட பொருளாதாரத்தை எதிர்க்க முனைவதுபோல; பழம்பெருமை, வெளிவேடம் மீது நிறுவப்பட்ட கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை பண்ணியாகவேண்டும். திரைப்படங்களில் ஆபாசம், சின்னத்திரையில் சிறுமைத்தனம், பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது பாவிப்பது, பாலியல் கல்வி எதிர்ப்பு, மறுமணம் மறுப்பு, முதியோர் புறக்கணிப்பு என கலாச்சார அழிவுக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்.

முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலைக்கு ஆளானாலும், நம் ஈழத்துச் சொந்தங்கள் நீதி கேட்டு நடுத்தெருவில் நின்றாலும், முல்லைப்பெரியாரிலும், கூடங்குளத்திலும் ஒரு புது வரலாற்றை நம் தமிழ் சொந்தங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் தாண்டி, நமது வாழ்வுரிமைகளை, வாழ்வாதாரங்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிட்டோம் நாம்.

இந்த நேர்மறைப் போக்கை எப்படி நெறிப்படுத்துவது, எப்படி தக்கவைத்துக்கொள்வது, எங்ஙனம் விரிவு படுத்துவது என்பது பற்றி நாம் விவாதித்தாக வேண்டும். தமிழ் சமுதாயத்தின் பல தலைவர்கள் இடிந்தகரையில் யூலை முதல் நாள் கூடுவது இந்த முயற்சிக்கு ஒரு துவக்கமாக இருக்குமாயின் சிறப்பாக அமையும். இடிந்தகரை தமிழ் சமுதாயத்தின் விடிந்த கரையாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், அணுசக்திக்கும் மற்றும்அணுவாயுதங்களுக்கும் எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறோம். கடந்த பதினோரு மாதங்களாக இடிந்தகரையிலேயே ஒரு முனைப்பான போராட்டத்தைத் துவங்கி துவளாது நடத்தி வருகிறோம்.

நம்மில் பலர் எங்கள் போராட்டம் பற்றிய அரசின் பொய்களை, போலிக் குற்றச்சாட்டுக்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்நிய நாடுகளிடம் நம்மை, நமது நாட்டை விற்று விட்டவர்கள் சொன்னதைக் கேட்டு, எங்களை கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்றே பலர் நினைத்தார்கள். பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் மட்டுமே பொதுவாழ்க்கைக்கு வரும் புல்லுருவிகள் போன்று நாங்கள் பார்க்கப்பட்டோம்.

அதற்கும் மேலாக செயற்கை மின்வெட்டு என்ற சக்திமிக்க ஆயுதத்தை பிரயோகித்து, இரவும் பகலும் தோன்றும் போதெல்லாம் மின்தடை எற்படுத்தின அரசுகள். தமிழ் மக்களை துன்பத்திற்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளி உங்களை எங்கள் மேல் கோபமடையச் செய்து, எங்கள் போராட்டம் நின்றால் மின்சாரம் தங்குதடையின்றி வரும் என்ற மாயையினை உருவாக்கி எங்களை தமிழின எதிரிகளாகச் சித்தரித்தனர். தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்க அடுத்தடுத்து ஆண்ட கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்ன செய்தார்கள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பதற்கு பதிலாக பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.

எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த தமிழக முதல்வர், ஏதோ காரணத்தால் அல்லது நெருக்கடியால் தனது அரசின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அப்படி மாற்றிக் கொண்டபிறகு, மின்சார நிலைமை திடீரென மேம்பட்டதை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். எங்கே இருந்து, எப்படி இந்த மின்சாரம் உடனடியாக ஓடி வந்தது? நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டால், கூடங்குளம் உடனே இயங்கும், திரும்பும் திசையெல்லாம் மின்சாரம் பெருக்கெடுத்து ஓடும் என்றார்கள். மூன்று மாதங்கள் ஆனபிறகும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லையே? ஏன்? என்ன ஆயிற்று? கடன்காரனுக்கு அவதி சொல்வது போல, பத்து நாளில் வரும், இரண்டு வாரத்தில் வரும் என்று உளறிக் கொண்டிருக்கிறார்களே, பொய் சொல்கிறார்களே? இப்படி செய்வதற்கு ஒரு மத்திய மந்திரி நியமிக்கப் பட்டிருக்கிறாரே?

1965-ம் ஆண்டு இந்தி மொழி நம் மீது திணிக்கப்பட்டபோது எப்படி வெகுண்டெழுந்து நமது மொழியுரிமையை, அடிப்படை தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வென்றோமோ, அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் தமிழ் மக்கள் இன்று நிற்கிறோம். தற்போது மொழியைவிட முக்கியமான நமது இயற்கை வாழ்வாதாரங்களும், நமது எதிர்கால சந்ததியின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இதனை நாம் உணர்ந்தாகவேண்டும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் அம்மக்கள் தங்கள் இயற்கை வளங்களை எவ்வளவு கவனமாகப் போற்றி பாதுகாக்கிறார்கள் பாருங்கள். அங்கே ஓர் அணுமின் நிலையம் நிறுவ முயற்சித்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக நின்று எதிர்த்தார்கள். இன்றும் எதிர்க்கிறார்கள். கூடன்குளத்திலிருந்து 500 மெகவாட் மின்சாரம் வேண்டும் என உரிமையோடு கேட்கும் கேரள முதல்வர் எங்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டுங்கள் என மத்திய அரசைக் கேட்பாரா? கேட்க முடியுமா? கேட்டால் மலையாள மக்கள் விடுவார்களா? அந்த மாநிலத்தில் ஓர் அனல் மின் நிலையம் கூட நிறுவ முடியாது. கூடங்குளம் இயங்கினால் 150 கிமீ தூரத்திலுள்ள தமக்கு கதிர்வீச்சுக் கேடுகள் வரும் என அஞ்சி பத்து இடங்களில் கதிர்வீச்சின் அளவை அளக்க, அவதானிக்க ஆய்வு மையங்கள் அமைத்து விட்டார்கள் இலங்கையிலே! ஆனால் நமது தமிழகத்தில்?

தமிழனின் உயிருக்குகூட விலை கிடையாது என்பதுதான் உண்மை. நக்கநேரி நாடகம் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். கூடங்குளம் அணுஉலை இயங்கத்துவங்கும் முன்னர் பேரிடர் பயிற்சி நடத்தப்படவேண்டும் என்பது விதி. இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுஉலை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலை, நாட்டின் முதல் மென்நீர் உலை, அதிகமான மக்கள் அடர்த்தியாக வாழ்கிற ஒரு தீபகற்ப மூலையில் அமைக்கப்பட்டிருக்கிற பூதாகரமானத் திட்டம் கூடங்குளம். குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்திலாவது மக்களுக்கு பேரிடர் பயிற்சி கொடுப்பது மிகமிக முக்கியமானது. ஆனால் 10,000 பேர் வாழும் இடிந்தகரை, 20,000 பேர் வாழும் கூடங்குளம் போன்ற கிராமங்கள் அருகே இருக்கும்போது, வெறும் 300 பேர் மட்டுமே வாழ்கின்ற நக்கநேரிக்குப் போய் தினசரி கூலி வேலைக்காக 200 பேர் ஊருக்கு வெளியே போன பிறகு, சுமார் 100 எழுத படிக்கத் தெரியாத பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போது நூற்றுக்கணக்கான காவல் துறையினரும், துணை ஆட்சியரும், வட்டாட்சியரும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் போய் பாவலாக் காட்டிவிட்டு, பேரிடர் பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது, இனி அடுத்தக் காட்சி 2014-ம் ஆண்டு என்று அறிவித்தனர்.

இப்படித்தான் பேரிடர் பயிற்சி நடத்துவதா? ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் தீயணைப்பு பயிற்சி நடத்திவிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த பயிற்சிக் கொடுத்துவிட்டதாக சொல்ல முடியுமா? எங்கோ ஒரு திரை அரங்கில் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டு, நாடு முழுவதும் உள்ள திரை அரங்குகள் பாதுகாப்பாக உள்ளன என்று சொல்ல முடியுமா? நமது உயிர்களை துச்சமென நடத்தும் அரசை, அரசு நிறுவனங்களை ஏன் தட்டிக்கேட்க தயங்குகிறோம்?

1984ம் ஆண்டு போபால் விடவாயு விபத்து நடந்தபோது ஓர் ஈரத்துணியை எடுத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு ஓடுவதற்கு பயிற்சி அளித்திருந்தால் இத்தனை பேர் உயிரிழந்திருக்கமாட்டார்கள், ஊனமடைந்திருக்கமாட்டார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. இருபத்து எட்டு ஆண்டுகள் ஆனபிறகும் அந்த விடவாயு ஆலையில் மண்டிக்கிடக்கும் ஆபத்தான கழிவுகளை இன்னும் ஏன் அப்புறப்படுத்தவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் அரசுகளை கடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது இந்த விபத்துக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல அந்த நாட்டிலே தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள். இதைப் பற்றிக்கூட நீங்கள் சிந்தித்து பார்க்காதது ஏன்?

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 58 பேர், பெரும்பாலும் குழந்தைகள், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஒரு மனிதனுக்கு வாழ்வில் நிகழும் மிகப்பெரிய இழப்பு, துயரம் எது? தனது குழந்தையை அநியாயமாகப் பறிகொடுத்து, குழிக்குள் போட்டு மூடுவதுதான். இத்தனைக் குழந்தைகள் இறந்ததற்கு யார் பொறுப்பு? மாவட்ட ஆட்சித்தலைவரும், வருவாய்த் துறை அதிகாரிகளும், சுகாதாரத்துரை அதிகாரிகளும் சரியாக பணியாற்றி ஏன் இந்த தொற்று நோயைத் தவிர்க்கவில்லை, தடுக்கவில்லை? இது ஒரு மனித குலத்துக்கு எதிரானக் குற்றமில்லையா? சம்பளமும் கிம்பளமும் வாங்கிக்கொண்டுதானே இருந்தார்கள் இந்த அதிகாரிகள்?

நாளை கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் என்ன ஆகும்? விபத்தே நடக்காது, இதுதான் உலகிலேயே மிகச் சிறந்த, மிக உன்னதமான அணுஉலை என்று ரசிய நிறுவனமும், அரசும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை என்றால், எவ்வளவு தொகை இழப்பீடு வேண்டுமென்றாலும் தருகிறோம், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் தருகிறோம் என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
உங்கள் வீட்டுக்கு ஒரு சலவை இயந்திரம் வாங்குகிறீர்கள். ‘ஓஹோ ப்ரொடக்சன்ஸ்’ நிறுவனம் தயாரித்த அந்த இயந்திரத்தை ‘மன்னார் & கம்பனியில்’ வாங்குகிறீர்கள். ஒருநாள் சலவை செய்துகொண்டிருக்கும்போது, உங்கள் துணைவியாரின் கை இயந்திரத்தில் சிக்கி ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இந்திய-ரஷிய ஒப்பந்தத்தின்படி, சலவை இயந்திரத்தை உருவாக்கிய அல்லது விற்ற நிறுவனங்களுக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இயந்திரத்தை ஓட்டியவர்தான் இழப்பீடு தர வேண்டும். உங்கள் மனைவி உங்கள் குடும்ப நிதியிலிருந்து ஒரு தொகையை எடுத்து உங்களுக்கு தருவார். உங்கள் பணத்திலேயே உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தால் ரஷ்ய நிறுவனமோ, ரஷ்ய அரசோ இழப்பீடு தரமாட்டார்கள். என்.பி.சி.ஐ.எல் எனும் நமது பொதுத்துறை நிறுவனம் நமது வரிப்பணத்தை எடுத்து நமக்கு இழப்பீடு தருவார்கள். வருமானம் எல்லாம் ரஷ்யாவுக்கு, இழப்பு எல்லாம் நமக்கு. இதைக்கூட கேள்வி கேட்காமல் இருக்கிறோமே, என்ன நியாயம்?

நமது கல்பாக்கத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத ஈனுலைகளை நிறுவி வருகிறார்களே, கவனித்தீர்களா? தமிழகத்தின் தென்கோடியாம் கூடங்குளத்திலிருந்து அபாயகரமான அணுக்கழிவுகளை வடகோடிக்கு எடுத்துச் சென்று அதை எரிபொருளாக உபயோகிப்பார்களாம். எப்படி எடுத்துச் செல்வார்கள்; நமது தமிழ் சமுதாயத்திற்கு என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்பது பற்றிக் கூட சிந்திக்காது இருப்பதை எப்படி நியாயப் படுத்துகிறீர்கள்?

இந்தியக் குடியரசு தலைவர் பிரதிபா பாடீல் கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனை கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுருக்கி இருக்கிறார். ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டும் இன்னும் அது பற்றி சிந்திக்கக் கூட முடியாமல் இருக்கிறதே ஏன்?

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதாக தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலே 20 ஆண்டுகள் சிறையில் தள்ளப்படுவார்கள் என புதிய சட்டம் இயற்றிகொண்டிருக்கிறதே அந்த அரசு? நமக்காக இந்திய அரசு இன்னும் குரல் கொடுக்கவில்லையே ஏன்?

ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா, இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் வேண்டுமா எனக் கேட்டிருக்கும் சிங்கள அமைச்சர் ரணவக்க என்பவரை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லையே ஏன்?

நான்கு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்தின் ஆதாரமான அமராவதி நதியின் துணை ஆறுகளான சின்னாறு, மாயாறு, பாம்பாறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லையே ஏன்?

அதுபோல சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பகுதியில் 4.5 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணையைக் கட்டுவதற்கு கேரள அரசு முனைகிறது. இதையாவது யாராவது கேட்கிறார்களா?

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் எரிவாயுக் குழாய் கேரளா-கர்நாடகா வழியாக நேரடியாகப் போவதற்கு பதில், வளைந்து தமிழகத்தின் ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக ஏராளமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்துச் செல்கிறது. இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை ஏன்?

ஒரு வருடத்துக்கு முன் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக முதல்வர் தமிழகத்துக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை, நிதி உதவியை, கூடுதல் மின்சாரத்தை, ஆதரவைக் கேட்டபோதெல்லாம் திரும்பிப் பார்க்காத, ஏன் என்று கூட கேட்காத மன்மோகன் சிங் அரசு பாகிஸ்தானுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தருவதும், ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலையை சீரமைக்க 56,000 கோடி ரூபாய் உதவி செய்வதும் எப்படி நியாயமாகும்?

எதையுமேப் பார்க்காதே, எதையுமேக் கேட்காதே, எதையுமேப் பேசாதே என்று வாளாவிருப்பதுதான் தமிழனின் வாழ்விலக்கணமா என கேட்கத்தோன்றுகிறது. இல்லை என நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் உரக்கச் சொல்வதுதான் இன்றைய உடனடித் தேவை. தமிழகத்தின் இளம் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை புறந்தள்ளி, மனமாச்சார்யங்களை ஒதுக்கி வைத்து, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்காக உடனடியாக ஒன்று படவேண்டும். பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அனைத்து தளங்களிலும் ஒரு புதிய தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

Snabak Vinod (SV)

unread,
Jul 12, 2012, 5:54:45 AM7/12/12
to panb...@googlegroups.com
பச்சைத் தமிழ் தேசியம்
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை, யூலை 10-12, 2012

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமை...ந்தது. இவை எல்லாவற்றையும் விட பிரமணீய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது.

இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பிராமணர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக்கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பிராமணர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன். தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது. பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழையக் கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.

முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.

பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.

யார் தமிழர்?

இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரியப் பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள் எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான் பேசும்போது, “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.

இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களை பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை. அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வடுகர்களுக்கும், மார்வாடிகளுக்கும் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கி கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளையத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா?

தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தமிழகத்தில் ஒரு சில தலைமுறைகளாக நிரந்தரமாக வாழும் குடும்பத்தில் பிறந்த, பெற்றோரில் ஒருவரையேனும் தமிழராய்க் கொண்ட, தமிழ் மொழி மேல் சராசரிக்கும் மேலான பாண்டித்தியம் பெற்ற, தன்னை தமிழ் மண்ணின் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

எது தமிழ் தேசியம்?

இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்கு பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ் தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தமிழ் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ் தேசியம். தமிழ் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம். தமிழ் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம்.

பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர் இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா தமிழ் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிட அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ் தேசியம்.

இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதிவைப்பதும் தமிழ் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ் தேசியம்?

தனியொரு தமிழனக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச்செய்வதுதான் தமிழ் தேசியம்.

“மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ் தேசியம். திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை மீட்டெடுத்து இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ் தேசியம். அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி சாதி, மத குழுக்களால் யாரும் யாரையும் அடக்கமுடியாதபடி, அதட்டமுடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ் தேசியம்.

வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ் தேசியம். விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ் தேசியம். “எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ் தேசியம்.

பச்சைத் தமிழ் தேசியம்

இன்றையப் பன்னாட்டுச் சூழலில், பாரத அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து கூடவே பசுமை உணர்வுகளை, விழுமங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.

இன்றைய தமிழகத்தினுடையத் தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம்.

பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.

நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒருசில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கேக் குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுபூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து,
“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ் தேசியம்.

Ramesh Murugan

unread,
Jul 12, 2012, 6:15:20 AM7/12/12
to panb...@googlegroups.com
இவரும் அரசியல் பேச ஆரமிச்சிட்டார... அப்போ சீக்கிரமாவே அவரோட போராட்டத்தை கொச்சை படுத்திடுவாங்க.

2012/7/12 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்


---

Sent via Epic Browser

Raja sankar

unread,
Jul 12, 2012, 6:16:57 AM7/12/12
to panb...@googlegroups.com
காமெடி பண்ணாதீங்க ரமேஷ்.

அணு உலை போராட்டத்தை கையில் எடுத்ததே அரசியலுக்கு வரனுமின்னு தானே? அப்புறம் இப்படியெல்லாம் பேசாம எப்படி பேசுவாரு?

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/12 Ramesh Murugan <rames...@gmail.com>

ஸ் பெ

unread,
Jul 12, 2012, 6:19:46 AM7/12/12
to panb...@googlegroups.com
ஏன்ன, அரசியலுக்கு வர விரும்பாத சூனா, பானா எல்லாம் ஏற்கனவே தூங்கிட்டு இருக்காங்க....


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Snabak Vinod (SV)

unread,
Jul 12, 2012, 6:42:57 AM7/12/12
to panb...@googlegroups.com


2012/7/12 Ramesh Murugan <rames...@gmail.com>

இவரும் அரசியல் பேச ஆரமிச்சிட்டார... அப்போ சீக்கிரமாவே அவரோட போராட்டத்தை கொச்சை படுத்திடுவாங்க.
 
 
இரண்டு வினாக்கள்...
 
1ஏற்கனவே இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லையா?
 
அரசியல் பேசுவது அரசியலில் ஈடுபடுவது, இரண்டும் வேறுவேறு. அரசியல் பேசுவது: ஒரு தேசத்தில் விவரம் தெரிந்து, குடிமகன் என்று ஆகி, இந்த குடி அரசை மக்களாட்சியை அமைக்கும் மக்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அரசியலில் ஈடுபடுவது: தன்னலமற்ற நாட்டை சுரண்டும் குடிமக்களை மந்தமாக்கும் அரசியல்வாதிகள் இருப்பதால், அரசியலில் ஈடுபடுவர்கள் அல்லது ஈடுபட விரும்புவர்களையும் அப்படி பார்க்கும் சூழலை உருவாக்கி வைத்துள்ளார்கள். எப்படியும் இந்த தலைமுறை அரசியல் வாதிகள் போய், முப்பது நாற்பது வயதுகளில் இருக்கும் அடுத்த தலைமுறை இந்த அரசியலுக்கு வரும்போது எப்படிப்பட்ட எண்ணத்தில், அரசியல் அரவில் இருக்கிறார்கள் என்பதே, அடுத்த தலைமுறை அரசை நிர்மாணிக்கிறது.
 
2தற்போதைய அரசியல் சூழலைத் தவிர்த்து, அரசியல் பேசுவதிலும், அரசியலில் ஈடுபடுவதிலும் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசினால் ஏன் ஒருவரின் செயலைத் தவறாக பார்க்க வேண்டும்? ஏன் அந்த பொதுப்புத்தி இன்னமும் இருக்க வேண்டும்?

Ramesh Murugan

unread,
Jul 12, 2012, 9:42:36 AM7/12/12
to panb...@googlegroups.com
2012/7/12 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
இரண்டு வினாக்கள்...
 
1ஏற்கனவே இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லையா?
 
அரசியல் பேசுவது அரசியலில் ஈடுபடுவது, இரண்டும் வேறுவேறு. அரசியல் பேசுவது: ஒரு தேசத்தில் விவரம் தெரிந்து, குடிமகன் என்று ஆகி, இந்த குடி அரசை மக்களாட்சியை அமைக்கும் மக்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அரசியலில் ஈடுபடுவது: தன்னலமற்ற நாட்டை சுரண்டும் குடிமக்களை மந்தமாக்கும் அரசியல்வாதிகள் இருப்பதால், அரசியலில் ஈடுபடுவர்கள் அல்லது ஈடுபட விரும்புவர்களையும் அப்படி பார்க்கும் சூழலை உருவாக்கி வைத்துள்ளார்கள். எப்படியும் இந்த தலைமுறை அரசியல் வாதிகள் போய், முப்பது நாற்பது வயதுகளில் இருக்கும் அடுத்த தலைமுறை இந்த அரசியலுக்கு வரும்போது எப்படிப்பட்ட எண்ணத்தில், அரசியல் அரவில் இருக்கிறார்கள் என்பதே, அடுத்த தலைமுறை அரசை நிர்மாணிக்கிறது.
 
பாஸ்,
அரசை விமர்சிப்பதுங்கிறது வேறு. அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா திராவிட இயக்கங்களின் கருத்தை அரசியலாக பேசுறது வேறு. அவரோட கட்டுரையுன் தொடக்கமே டெரராத்தான் ஆரமிக்கும். இப்படியே பேசினார்னா, இருக்கிற கொஞ்ச ஆதரவும் குறைய ஆரமிச்சிடும்.

 
2தற்போதைய அரசியல் சூழலைத் தவிர்த்து, அரசியல் பேசுவதிலும், அரசியலில் ஈடுபடுவதிலும் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசினால் ஏன் ஒருவரின் செயலைத் தவறாக பார்க்க வேண்டும்? ஏன் அந்த பொதுப்புத்தி இன்னமும் இருக்க வேண்டும்?

ஒரு அரசியல்வாதியின் அரசியல் பேச்சுக்கும், போராட்டம் நடத்துபவரின் அரசியல் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. முன்னவர் பேசிய பேச்சுக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனா மக்கள் ஆதரவோட போராட்டம் நடத்தனும்னு நினைக்கிறவரு ஜாதி/மதம்/இனம் தாண்டி சிந்திக்கனும். அல்லது அவர் எதிர்பார்க்குற மாதிரி மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது.

Snabak Vinod (SV)

unread,
Jul 17, 2012, 7:55:56 AM7/17/12
to panb...@googlegroups.com

Urban press glosses over rural protests


 
Major English newspapers are disinclined to present rural protests to urban readers. Coverage given to anti-nuclear protests at Kudankulam is an example, says SHILPA KRISHNAN.

 
Posted  Sunday, Jul 08 20:14:38, 2012

 
 
Are urban newspaper readers well-informed about resistance in rural India to energy projects that generate power for urban consumers? Do Indian newspapers inform urban readers of the nature and scale of protests in rural India to controversial energy projects? The anti-nuclear protests at Kudankulam present an opportunity to examine if urban readers are kept informed of protests in rural India. This paper analyses the coverage of a 14-day protest in the four most widely read English newspapers in the biggest metro cities in India.
 
Background
 
The Kudankulam Nuclear Power Project in southern Tamil Nadu was initiated in 1989. Ever since, there have been protests demanding that the plant be shut down. As the plant neared commissioning, the protests increased in scale. The most dramatic protests were in the first fortnight of May 2012 when about 300 women and 25 men went on an indefinite fast at Idinthakarai village, adjacent to the nuclear plant. Over 9,000 people supported the protest, assembling daily on the protest grounds. With each passing day, the health of the protesters deteriorated. The government refused to negotiate with the protesting villagers. On May 10,the government declared curfew in all the villages surrounding the plant and deployed over 2,000 policemen around the protest site. On May 14, the protesters finally called off the fast as they felt it was futile to continue the protests in the face of government apathy. This agitation in rural Idinthakarai did not win massive support in urban India.
 
It is in this context that this paper analyses if urban newspaper readers are kept informed of the nature and scale of protests in rural India. This is significant since the electricity generated from these energy projects in rural India is primarily for urban consumption.
 
Major newspapers
 
Four major English newspapers--The Hindu, The Times of India, Hindustan Times and The Telegraph—have been analysed for this research. They represent the leading English newspapers in Chennai, Mumbai, New Delhi, and Kolkata.
 
All articles that mentioned the word Kudankulam between May 1 and May 15 were read closely. The author counted the number of articles where the fast was mentioned, the number of photographs showing the fast and the number of times the size of the crowd of supporters was mentioned.
 
The table below summarises the frequencies.

 
The Hindu
The Times of India
Hindustan Times
The Telegraph
# Articles which mentioned Kudankulam
34
9
6
0
# Articles which mentioned the fast
5
3
3
0
# Photographs of the fast
0
0
0
0
# No. of times the size of the crowd was mentioned
1
2
1
0

 
Findings
1. Urban readers had very few opportunities to read about the fast at Idinthakarai:
While The Hindu gave widespread coverage to the Kudankulam Nuclear Plant, less than 15% of the articles mentioned that there was a protest fast at Idinthakarai. The Times of India and Hindustan Times had very few articles on Kudankulam; they had even fewer articles that mentioned the fast. The Telegraph mentioned neither Kudankulam nor the protests during that fortnight. That is striking, as West Bengal had called off the nuclear power plant at Haripur owing to protests there.
 
2. Urban readers did not get a visual sense of the protests at Idinthakarai:
 
Photographs of protests provide a visual sense of the protests: how big are these protests really? Who are the people protesting? Is this really believable?
None of the newspapers studied showed photographs of those on fast or the crowds that assembled daily in their support. Meanwhile, photographs from the protest grounds were circulating on social media networks such as Facebook and Twitter. However, urban readers dependent on their English newspaper for their daily news did not get to see these pictures.
 
3. Urban readers did not get a sense of the scale of the protests:
 
Although none of the newspapers presented photographs of the protest, they could still inform the readers of the scale of protests by mentioning the likely size of the crowds. This study showed that even that information was sparingly given to readers--twice in The Times of India and once each in The Hindu and Hindustan Times.
 
(Shilpa Krishnan is an independent researcher.)

 

Snabak Vinod (SV)

unread,
Jul 17, 2012, 8:06:32 AM7/17/12
to panb...@googlegroups.com

பெருநகரங்களில் நடுநிலை மக்களைச் சென்றடையும் இந்திய ஆங்கில நாளிதழ்கள் எப்படி கிராமப்புற செய்திகளையும் போராட்டங்களையும் அவர்களுக்கு சென்றடையாமல் இருட்டடிப்பு செய்கின்றன, தடுத்து நிறுத்துகின்றன என்பதை கூடங்குளம் போராட்டச் செய்திகள் பற்றிய ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் இந்த செய்திதாள்களின் போலி நடுநிலைத் தன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் சிறந்த கட்டுரை.

ஸ் பெ

unread,
Jul 17, 2012, 3:13:43 PM7/17/12
to panb...@googlegroups.com
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'

>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
*
--------------------------------------------------------------------------------------------------------------
*
*இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
-------------------------------------------------------------------------------------------------------------------------
*நொடியில் நொறுங்கியவனுக்காக......
* <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
----------------------------------------------------------------------------------------------

581940_424320500946317_320388687_n.jpg

ஸ் பெ

unread,
Jul 17, 2012, 3:23:15 PM7/17/12
to panb...@googlegroups.com
Vel Kumar
என்னப்பா இது? நம்ம அணுவிஞ்ஞானி நாரயணசாமிய காணோம்! ஒரு வாரமா டிவியில
வந்து கூடங்குளம் அணு உலை இன்னும் 10 நாட்களில் செயல்படும்னு சொல்லாம
இருக்காரு?# யாராவது நாடு கடத்திட்டாங்களா?

அச்சு !!!

unread,
Jul 18, 2012, 1:45:18 AM7/18/12
to panb...@googlegroups.com
2012/7/18 ஸ் பெ <stalinf...@gmail.com>

அணுவிஞ்ஞானி நாரயணசாமிய

ஹா ஹா ஹா


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


ஸ் பெ

unread,
Jul 18, 2012, 1:50:37 AM7/18/12
to panb...@googlegroups.com
ஆமா..... அவர் தானே ஒரு ஆறு மாசமா இன்னா திறந்திடும்,, அன்னா திறந்திடும்
அப்படின்னு சொல்லிட்டு இருக்கார்.......

:))

On 18/07/2012, அச்சு !!! <achusu...@gmail.com> wrote:
> 2012/7/18 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>> அணுவிஞ்ஞானி நாரயணசாமிய
>
>
> ஹா ஹா ஹா
>
>
> --

> *அன்புடன்


> அச்சு(சுதாகர்)

> **-------------------------------------------


> கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,

> **அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு*


>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jul 18, 2012, 2:09:25 AM7/18/12
to பண்புடன்
கூடங்குளத்துல மின்சாரத்தை விவ‌சாய‌ம் செய்ற‌த‌ விட்டுப்போட்டு யாருப்பா
இதுக்குள்ள‌ கொண்டு போயி "ஒட்டுவ‌ங்கியை"சொருகுன‌து?அதான்.முனிசிபாலிடி
குப்பைவ‌ண்டி மாடு குப்பைத்தொட்டி வ‌ந்தா ஆடோமேடிக்கா நிக்குமே அது மாரி
ஓட்டுப்பெட்டியை பாக்குற‌வ‌ரைக்கும்
போயிக்கிட்டே நிக்குற‌ மாரி நிக்கும்.போகுற‌ மாரி போவும்.

அன்புட‌ன்
ருத்ரா


On Jul 12, 3:16 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> காமெடி பண்ணாதீங்க ரமேஷ்.
>
> அணு உலை போராட்டத்தை கையில் எடுத்ததே அரசியலுக்கு வரனுமின்னு தானே? அப்புறம்
> இப்படியெல்லாம் பேசாம எப்படி பேசுவாரு?
>
> ராஜசங்கர்
> (Rajasankar)
>

> 2012/7/12 Ramesh Murugan <ramesh....@gmail.com>


>
>
>
> > இவரும் அரசியல் பேச ஆரமிச்சிட்டார... அப்போ சீக்கிரமாவே அவரோட போராட்டத்தை

> > கொச்சை படுத்திடுவாங்க.- Hide quoted text -
>
> - Show quoted text -

Srimoorthy.S

unread,
Jul 18, 2012, 2:57:04 AM7/18/12
to panb...@googlegroups.com

சின்னச் சின்ன சறுக்கல்கள் சில விஷயங்களில் வருவது எதார்த்தம்தான்.
ஆனா மிக ஆபத்தான அணுக்கையாளலிலும் நம் அரசு மெத்தனமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அனுமானித்ததே.

ஸ் பெ

unread,
Jul 18, 2012, 3:07:13 AM7/18/12
to panb...@googlegroups.com
கடந்த ஒருவாரத்துல ரெண்டு வாட்டி பிரச்சனை வந்திருக்கு தூத்துக்குடி அனல்
மின் நிலையத்துக்கு........அதையே சமாளிக்கக் தெரியாதவனுங்க புதுசா ரெண்டு
அணுவுளை கட்ட ரஷ்ய கூட ஒப்பந்தம் போடுரன்கலாம்......

அரசுக்கு தான் சிக்கல் மீது சிக்கல் அதிகரிச்சிட்டே வருது..... இருபத்தி
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு பேரிடர் தடுப்பு பயிற்சி
கொடுக்கணும்..... அத மட்டும் இவங்களால எந்த காலத்திலையும் நடத்தவே
முடியாது...... மக்கள் விழிச்சிக்குவாங்க இல்ல.......

இதுல, பேச்சிப்பாறை அணைக்கட்டு தண்ணீரை கூடங்குளம் அணுமின நிலையத்துக்கு
கொண்டு போற யோசனையில இருக்கானுவ........ அது மட்டும் நடக்கவே,
நடக்காது...

Snabak Vinod (SV)

unread,
Jul 19, 2012, 8:27:29 AM7/19/12
to panb...@googlegroups.com

‎19 Jul 2012 01:06:57 PM IST

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்!

திருநெல்வேலி, ஜூலை 18: கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அணு உலைகள் அமைப்பது குறித்து அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
...
இது தொடர்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உறுப்பினர்கள் ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

ரூ. 32,000 கோடி செலவில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கு இந்தியா- ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், ரஷ்யா ரூ. 18,700 கோடி கடன் அளிக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.

இந்த 3, 4-வது அணு உலை குறித்து தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக, திமுக கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அணு உலைத் திட்டங்கள் மக்களுக்கு, மக்களின் நலவாழ்வுக்கு, வாழ்வாதாரங்களுக்கு உகந்தவை அல்ல என்பது உலகறிந்த உண்மை.

எனவே தான் ஜப்பானிய மக்கள் தங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளை மூடி வருகிறார்கள்.

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் அணு உலை வேண்டாம் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாகவே சேர்ந்து செயல்படுகிறார்கள்.

பிற மாநிலங்களிலும் இந்திய மக்கள் அணு உலைகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் கூடங்குளம், கல்பாக்கம் என்று மேலும் மேலும் அணு உலைகளை நம் மீது திணிக்கிறார்கள் என்றனர் அவர்கள்.

© Copyright 2008 Dinamani

ஸ் பெ

unread,
Jul 20, 2012, 1:51:51 AM7/20/12
to panb...@googlegroups.com

கூடங்குளத்தில் அரசின் ஏமாற்று வேலைகள் -அம்பலப் படுத்தியது உண்மை கண்டறியும் குழு!
http://koodalbala.blogspot.com/2012/07/blog-post.html

 3:42 PM  koodal bala

9-6-2012 திருநெல்வேலி மாவட்டம் நக்கநேரி கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட கூடங்குளம் அணு உலை அவசர கால ஒத்திகை நிகழ்வு குறித்த மக்கள் சிவில் உரிமைக் குழுவின் (PUCL) உண்மை அறியும் குழு அறிக்கை 
 
கூடங்குளம் அணு உலை யூனிட் 1, தற்போது அது தன் மின் உற்பத்தியைத் துவங்க ஆயத்தம் ஆகிவரும் நிலையில், அதில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெரும் நிலையில், அணு உலையைச் சுற்றி 16 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு அணு விபத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அவசியமான அவசரகாலத் தற்காப்பு ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் வழங்கவேண்டிய சட்ட ரீதியான கடமை உள்ளது. 
 
இந்நிலையில் 9-6-2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நக்கநேரி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம், அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம், இந்திய அணுசக்திக் கட்டுமானக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை ஆகியோருடன் இணைந்து இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக வழங்கி விட்டதாக செய்தி ஊடகங்களுக்குத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார். 
 
கடந்த 2011 மார்ச் 11 ஆம் தேதியன்று ஜப்பானில் உள்ள புக்கிஷிமா அணு உலைகளில் விபத்து நடந்தபின்பு உலகளவில் துவங்கப்படவுள்ள முதல் அணு உலைதான் கூடங்குளம் அணு உலை; எனவே மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், அணு உலை சுற்றியுள்ள பகுதியில் அவசரகால பயிற்சி குறித்தும் கரிசனத்தோடு மக்கள் சிவில் உரிமைக் கழகம் உற்று நோக்குகிறது. 
 
9-6-2012 ஆம் தேதியன்று நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் பயிற்சி குறித்து மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை ஒன்றாகவும், ஊடகங்கள் சிலவற்றில் அது குறித்து வந்த செய்திகள் முரண்பட்டதாகவும் இருந்தது. இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களின் தலைவரான திரு.சுப.உதயகுமார் பயிற்சி குறித்து வெளியிட்ட அறிக்கையில் இடிந்தகரை போன்ற அணு உலைக்கு வெகு அருகாமையில் உள்ள பெரிய கிராமங்களை விட்டு விட்டு நக்கநேரி போன்ற தொலைவில் உள்ள குக்கிராமத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார். 
 
இதன் பின்னணியில், மக்களுக்கு வழங்க வேண்டிய உயிர்காக்கும் பயிற்சி ஒத்திகை குறித்து நக்கநேரி கிராமத்துக்கு சென்று அதன் உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் குழு 13-6-2012 மற்றும் 20-6-2012 ஆகிய தேதிகளில் அப்பகுதியில் கள ஆய்வு மற்றும் மக்களிடம் நேர்காணல்களை நடத்தியது. மேலும் இதனுடன் தொடர்புடைய அரசு மற்றும் அணுசக்தித் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது குறித்த விசாரணையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது. 
 
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்:

வழக்குரைஞர் ச.பாலமுருகன் – மாநிலச் செயலர், பியுசிஎல்
ஜார்ஜ் வில்லியம்ஸ் – துணைத் தலைவர், குமரி மாவட்டம்
பொன் சந்திரன் – தலைவர், கோவை மாவட்டம்,
பேராசிரியர் பாத்திமா பாபு – உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம்
சந்திரசேகர் – பொருளாளர், கோவை மாவட்டம்
மருத்துவர் ரா.ரமேஷ் – உறுப்பினர், கோவை மாவட்டம்,
தனலட்சுமி – உறுப்பினர், கோவை மாவட்டம்
ஃபெலிக்ஸ் – உறுப்பினர், குமரி மாவட்டம்
நக்கநேரி கிராமம்:

நக்கநேரி கிராமம் சுமார் 150 வீடுகளைக் கொண்டது; அவற்றில் பெரும்பாலானவை ஓட்டு வீடுகளே. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர் சாதியைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் விவசாயக் கூலி வேலை, காற்றாலை, கட்டுமானப் பணிகள், மீன் தொரடர்பான தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள். மேலும் தமிழகம், மற்றும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து மீள் குடியேறியவர்களாகவும் உள்ளார்கள். இந்த கிராமம் ராதாபுரத்திற்கும், அஞ்சுகிராமத்திற்கும் இடையிலும், கூடங்குளத்திற்கும் வடக்கன்குளத்திற்கும் இடையிலும் உள்ள இரண்டு சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. சாலையின் கிழக்குப் புறத்தில் புள்ளமங்கலம் கிராமமும், மேற்குப் புறத்தில் நக்கநேரியும் அமைந்துள்ளன. இந்த கிராமம் தனக்கர்குளம் பஞ்சாயத்துக்குக் கீழ் வரும் கிராமமாகும். இந்தக் கிராமத்தைச் சுற்றி அதிக அளவில் காற்றாலைகள் உள்ளன. 230 கிலோவாட் துணை மின் நிலையமும், சுஸ்லான் நிறுவனத்தைச் சார்ந்த 715 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளும் இங்கு உள்ளன.
கள ஆய்வு
 
உண்மை அறியும் குழு 13-6-2012 அன்று காலை நக்கநேரி சென்றது. நக்கநேரி சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிழற்குடை, ஆட்டோ ஸ்டேண்ட், தேனீர்க் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் இருந்த மக்களிடம் தன் விசரணையைத் தொடங்கியது. 
அந்த கிராமத்தில் அன்றைய தேதியில் மரணம் ஒன்று நடந்துவிட்டிருந்த படியால் எவரும் பணிக்கு சென்றிருக்கவில்லை. எனவே, பகல்வேளையில் சாதாரணமாக வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஊரில் பலரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் கண்ட நேர்காணல்களை குழு வீடியோவில் பதிவு செய்து கொண்டது. 
அன்று மாலை பயிற்சி குறித்து ஏற்கனவே மாற்றுக் கருத்தைத் தெரிவித்திருந்த அணுசக்தி எதிர்ப்புத் தலைவரான சுப.உதயகுமாரை இடிந்தகரை கிராமத்தில் சந்தித்தது. மேலும், பயிற்சியை முன் நின்று நடத்திய அணு சக்தித் துறை அதிகாரிகளான - கூடங்குளம் அணு மின் நிலையத் தலைவர் சுந்தர், மென்நீர் அணு உலைகளின் தலைவரான காசிநாத் பாலாஜி ஆகியோரைத் தொடர்பு கொண்டது. 
திரு.சுந்தர் அணு சக்தித் துறையின் இந்தப் பயிற்சிக்கு அறிவியல் பூர்வமான ஆலோசனை மட்டும் வழங்கியதாகவும், உண்மையில் அதனை மாவட்ட நிர்வாகம்தான் நடத்தியதாகவும், மேலும் தங்கள் துறையினைச் சேர்ந்த சில அதிகாரிகள் பயிற்சியில் பங்கெடுத்ததாகவும், தான் தனிப்பட்ட முறையில் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறினார். எனவே உண்மை அறியும் குழுவின் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். 
 
மற்ற அதிகாரியான காசிநாத் பாலாஜி பேச மறுத்து விட்டார். 
 
மேலும் வருவாய்த்துறை அதிகாரியான சேரன்மாதேவி சப் கலெக்டர் ரோகிணி ராமதாஸ், மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே இதுகுறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்த செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துவிட்டபடியால், தன்னால் எதுவும் பேச இயலாது என்று கூறிவிட்டார். 
ராதாபுரம் தாசில்தாரும் இது குறித்து பேச மறுத்து விட்டார். 
மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போது, அவரை உண்மை அறியும் குழு சந்திக்க முடியாது என்றும், வேறொரு நாளில் இந்தக் குழுவே அவரை நேரடியாக வந்து அவரைச் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியரின் பொது உதவியாளர் கூறிவிட்டார். 
 
அதன் பின்பு, 20-6-2012 அன்று மீண்டும் இக் குழு நக்கநேரி கிராமத்திற்குச் சென்று பல்வேறு தரப்பட்ட சமூக, பொருளாதார நிலையைச் சேர்ந்த மக்களை சந்தித்தது. அவர்களிடம் பயிற்சி குறித்த எழுத்துப் பூர்வமான வாக்குமூலங்களையும் பெற்றது. இதில், தனக்கர்குளம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.விஜயலட்சுமி, நக்கநேரி கிராம உறுப்பினர் திருமதி.இசக்கியம்மாள், வள்ளியூர் யூனியன் கவுன்சில் உறுப்பினர் திரு.சுயம்புலிங்கத்துரை ஆகியோரும் அடக்கம்.
 
இவர்கள் அனைவரும் 9-6-2012 ஆம் தேதியன்று மாவட்ட நிர்வாகம் நக்கநேரி கிராம மக்களுக்கு எவ்வித அணு விபத்து அவசரகால ஒத்திகைப் பயிற்சியும் வழங்கவில்லை என்றும், அதுகுறித்து மக்களான தங்களுக்கு அதிகாரிகள் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் பத்திரிகையில் கூறியிருந்த மூன்று கட்ட ஒத்திகைகளான 
1) அணு விபத்து நடந்து விட்டது என்பதை அறிவித்தல்
2) மக்களை வீட்டுக்குள் இருக்க வலியுறுத்துதல், மற்றும் அவர்களை அயோடின் மாத்திரைகளை உட்கொள்ள வலியுறுத்துதல் 
3) மக்களையும், கால்நடைகளையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல் 
 
போன்ற ஒத்திகைகளை நடத்தவில்லை என்றும் கூறினர். 
 
உண்மையில், அன்று காலை சுமார் 9 மணியளவில் காவல்துறையினர் நக்கநேரி சாலை சந்திப்பில் கூடியதாகவும், வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், எதற்காக அவர்கள் வந்துள்ளார்கள் என்று கேட்ட மக்களிடம் பதில் எதையும் கூறாமல் மதியம் சுமார் 12-1 மணியளவில் கிளம்பிப் போய்விட்டதாகவும் கூறினர். மறுநாள் காலையில் பத்திரிகை செய்திகளைப் பார்த்த பொழுது நக்கநேரியில் முந்தைய நாள் அதிகாரிகள் அணு விபத்துத் தற்காப்புப் பயிற்சி அளித்ததாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார்கள். 
 
இதுகுறித்த உண்மை விபரம் அறிவதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கத் திருநெல்வேலியில் உள்ள அவரது கேம்ப் அலுவலகத்திற்கு அன்று மாலை உண்மை அறியும் குழு பயணமானது. ஆனால் அவர் குழுவினை சந்திக்க மறுத்துவிட்டார். அவர் சார்பில் பேசிய உதவி கலெக்டர் திருமதி ரோகிணி ராமதாஸ் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்ட அறிக்கைதான் இறுதி அறிக்கை என்றும் அது தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறிவிட்டார். எனவே, மாவட்ட ஆட்சியரின் 9-6-2012 செய்திக் குறிப்பையே அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு உண்மை அறியும் குழு தள்ளப்பட்டது.
 
காற்றின் தன்மை
 
9-6-2012 அன்று நக்கநேரி கிராமத்தை அவசரகாலப் பயிற்சிக்குத் தேர்வு செய்ததற்கான காரணமாக அதன் திசை அணு உலையில் இருந்து நக்கநேரி நோக்கி அதாவது தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி வீசியதாக அரசின் பத்திரிகை செய்தி கூறியது. உண்மையில் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் காலமான இன்றைய காலகட்டத்தில் இந்தக் காற்று தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி வீச வாய்ப்பில்லை என்பதை உண்மை அறியும் குழு அறிந்திருந்தது. அப்பகுதியில் உள்ள காற்றாலை தொடர்பான ஆய்வு மையங்களில் தனிப்பட்ட ரீதியில் விசாரித்தபோது, 9-6-2012 அன்று காலையில் காற்றானது அணு உலையில் இருந்து நக்கநேரியை நோக்கி வீசவில்லை என்றும், அது வடகிழக்கு – தென்மேற்கு திசையில் இருந்ததாகவும், அதாவது அணு உலையில் இருந்து 8 கிலோமீட்டர் அப்பால் உள்ள அணு உலை ஊழியர்கள் வசிக்கும் அணு விஜய் நகரை நோக்கி வீசியதாகவும் தெரிய வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், அணு விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற கூடங்குளம் அணு உலைத் தலைவரின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவானது தனது கட்டுப்பாட்டு அறையை இங்குதான் கொண்டிருந்தது என்பதுதான்!
 
உண்மை அறியும் குழுவின் முடிவுகள்

1. 9-6-2012 அன்று நக்கநேரி கிராமத்தில் அணு உலை விபத்து தொடர்பான அவசர கால பயிற்சியை மாவட்ட நிர்வாகம், அணுசக்தி வல்லுனர்களோடு சேர்ந்து நடத்தியது என்பது அப்பட்டமான பொய்யாகும். அதுபோன்ற எந்தவொரு ஒத்திகையும் அந்த கிராமத்தில் நடத்தப்படவில்லை.
 
2. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஒரு பயிற்சியை மக்களுக்கு வழங்க அக்கறையற்று இருப்பதையும், அதற்காகத் தன்னை அறிவியல் பூர்வமாகத் தயார்படுத்திக் கொள்ளத் தாயாராயில்லை என்பதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது. சர்வதேச அணு சக்திக் கழகம், மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்காற்று முகமை ஆகிய நிரறுவனங்களின் செயல்திட்டங்களின் அடிப்படையில் பயிற்சிகளை அளிக்க மாவட்ட நிர்வாகவமும், அணுசக்தி நிர்வாகமும் தயாராயில்லை என்பதையும் நக்கநேரி நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது.
 
3. அணு உலையைச் சுற்றி உள்ள 16 கிலோமீட்டர் பகுதி என்ற அவசர காலப் பாதுகாப்புப் பகுதியில் வாழும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு அணு விபத்து நடக்கும் காலத்தில் உரிய சிகிச்சைகள் வழங்குவதற்குத் தரத்தையும், தகுதியையும் கொண்ட மருத்துவமனைகளும், முறையான மருத்துவக் கட்டமைப்புகளும் இல்லை.
 
4. இந்த 2 லட்சம் மக்களுக்கு விபத்துக் காலத்தின்போது கதிரியக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவசியமாகும் தங்குமிடங்களும் இன்றுவரையும் முன்மொழியப்படவில்லை. 
 
5. மேலும், சில கிராமங்களில் விபத்தின்போது வெளியேற மிக அவசியமாக இருக்கும் சாலைக் கட்டமைப்புகள் இல்லை. குறிப்பாக, அணு உலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவசுப்பிரமணியபுரத்தில் இருந்து அனுமன் நதியைக் கடந்துசெல்ல அவசியமாகும் பாலம் இல்லாமல் உள்ளது.
 
6. கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் நக்கநேரியை அவசரகாலப் பயிற்சிக்குத் தேர்வு செய்தது அறிவியல் செயல்பாட்டுக்கு எதிரானதாக உள்ளது. எனவே, கூடங்குளம் அணு உலையில் நடக்கும் விபத்துகளின்போது பாதுகாப்பு தொடர்பாக முக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டிய இந்த ஆய்வு மையத்தின் நம்பகத் தன்மை இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.
 
7. அணு உலையைச் சுற்றி அமைந்துள்ள ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அவசரகாலத்தின்போது அணு உலையில் இருந்து வெளியேறும் கதிரியக்க மாசினை தரையை நோக்கித் தள்ளிவிடும் தன்மையைக் கொண்டுள்ளன. இதன் காரணம் இந்த காலகட்டத்தில் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அணுசக்தித்துறையோ, அணுசக்தி ஒழுங்காற்று மையமோ கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
 
8. மாவட்ட நிர்வாகமும், அணுசக்தி நிர்வாகவமும், அணுசக்தி ஒழுங்காற்று மையமும் கூட்டாகச் சேர்ந்துகொண்டு நடக்காத ஒரு அவசரகாலப் பயிற்சியினை நடந்ததாகவும், அது சர்வதேசத் தரம் வாய்ந்ததாகவும், சட்ட ரீதியில் அமைந்ததாகவும் கூறிவருவதென்பது அப்பட்டமான பொய்யை மக்கள் முன் பரப்பும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. இது சட்டவிரோதமானது. மேலும் நம் நாட்டின் அரசியல் சட்ட விதிகளையும், அதன் மதிப்பீடுகளையும் இழிவுபடுத்தும் செயலாகவும் உள்ளது.
பரிந்துரைகள்:
 
1. 9-6-2012 அன்று நக்கநேரி கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் அணுவிபத்து அவசரகாலப் பயிற்சி செல்லத்தக்கதல்ல என்று அணுசக்தி ஒழுங்காற்று மையம் அறிவிக்க வேண்டும்.
 
2. இந்த நிகழ்வுக்குக் காரணமான மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அணுசக்தித் துறை அதிகாரிகள் ஆகியோரின் இந்தச் செயலானது பொய்யுரைத்தல் என்ற நிலையையும் தாண்டி அனைத்து மக்களின் உயிரோடு விளையாடும் செயலாக இருப்பதாகவே இந்தக் குழு கருதுகிறது. இந்த நிகழ்வினை மேற்பார்வை செய்ய வந்திருந்த அணுசக்தி ஒழுங்காற்று மையத்தின் அதிகாரிகள் பொய்யுரைதுள்ள அதிகாரிகளை இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். 
 
3. இந்த நிகழ்வு குறித்து உயர்மட்ட நீதி விசாரணை ஒன்றுக்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
 
4. அணு உலையைச் சுற்றியுள்ள 16 கிலோமீட்டர் அவசரகால அபாயப் பகுதியில் தரமான, தகுதிவாய்ந்த அனைத்து வசதியையும் கொண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும்.
 
5. அணு உலையைச் சுற்றியுள்ள 30 மற்றும் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளும் விபத்தின்போது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை சர்வதேச ஆய்வுகள் உணர்த்துகின்றன. அமெரிக்காவில் இந்தப் பகுதிகளிலும் பிரத்யேக கவனம் செலுத்தப்படவேண்டும் என்பது சட்ட ரீதியான ஒன்றாக உள்ளது. எனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், தூத்துகுடி மாவட்டத்தின் பெரும்பகுதியும், கேரள மாநிலத்தின் தென்பகுதியும் பாதிக்கப்படும் என்பதால் இந்தப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.
 
6. விபத்து காலத்தின்போது மக்களைக் காப்பாற்றுவதற்காக அதிகாரிகள் தயாரித்துள்ள “அவசரகாலத் திட்டமிடல் கையேட்டின” மக்கள் முன் வெளிப்படையாக முன் வைத்திடல் வேண்டும். 
 
7. அணு உலையைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அணுவிபத்தின்போது வெளியாகும் கதிரியக்கத் துகள்களை மக்களின் மீது சுழற்றி விடும் கருவிகளாக இருக்கும். எனவே, விபத்தின்போது காற்றாலைகளின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்படல் அவசியம் என்பதை இந்தக் குழு அரசிடம் முன்வைக்கிறது. 
 
8. விபத்தின்போது நடக்கும் அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் அதிகாரிகளை மையப்படுத்தியதாகவே உள்ளது. ஆனால் அது மக்கள், அவர்தம் பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பிற மக்கள் ஊழியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளையே பல்வேறு நாடுகளின் அரசுகள் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளன. 
 
9. தற்காப்பு நடவடிக்கைகளும், பயிற்சிகளும் 16 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அணு உலை இயங்குவதற்கு முன்பாக நடத்தப்படல் வேண்டும்.
 
10. மேற்கூறிய அனைத்துப் பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்பே கூடங்குளம் முதலாம் அணு உலைக்கான எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்காற்று மையம் வழங்க வேண்டும்.
...............................................................................

உண்மை அறியும் குழு
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Jul 23, 2012, 5:23:55 AM7/23/12
to panb...@googlegroups.com
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாததால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நெல்லை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நெல்லை ஆட்சியர் அரசின் நிலையை வில்லாகி மனு செய்து இருந்தார் . இந்த விவரங்கள் போதவில்லை என்று சொல்லி நீதி பதி அவர்கள் நெல்லை ஆட்சியரை நேரில் ஆக உத்தரவு இட்டு இருந்தார். நெல்லை ஆட்சியரும் நேற்று நேரில் நீதிமன்றம் வந்தார் . கூடங்குளம் பற்றிய பாதுகாப்பு தகவல்களை விளக்கு விளக்கு என்று விளக்கினார். கேட்டுக் கொண்ட நீதிபதி அவரை நோக்கி மிக முக்கியமான அந்த கேள்வியை வினவினார். '"அணுக்கழிவுகளை எப்படி கையாளப் போகிறீர்கள்? ". திகைத்துப் போன ஆட்சியர் " நாங்கள் அணுக்கழிவுகளை ( தன் கைகளை மேலொன்றும் கீழொன்றுமாக அகட்டி ஒரு நாலடி உயரத்துக்கு காண்பித்து ) இத்தனை பெரிய ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு வைப்போம் . பின்பு அந்த டப்பாவை எட்டு வருடங்களுக்கு பாதுகாப்போம் " என்றார். இப்போது நீதிபதி திகைத்துப் போனார். நெற்றி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து போன அவர் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து விட்டு எழுந்துப் போய் விட்டார். ஆட்சியரின் இந்த பதில் கேட்ட அணுவுலை எதிர்ப்பாளர்கள் சிரிப்பதா ? அழுவதா ? என தெரியாமல் வெளியில் வந்தனர்.

பூமிக்குள்ளே 400 அடி ஆழத்தில் 48000 வருடங்களுக்கு புதைத்து, பாதுகாக்க வேண்டிய ஒரு விஷயத்தை எவர் சில்வர் டப்பாவில் போட்டு எட்டு வருடங்களுக்கு பாதுகாப்பேன் என்கிறாரே ஆட்சியர் , அது என்ன சுக்கா ? மிளகா ? திப்பிலியா ? என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.

ஸ் பெ

unread,
Jul 26, 2012, 4:03:44 AM7/26/12
to panb...@googlegroups.com
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடங்குளம் எதிருக்கும் மக்களை கைது செய்ய வேண்டி தொடரப்பட்ட வழக்கில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சொன்னதும், அடப்பாவமே ! என்று தலையில் கை வைத்துக் கொண்ட நீதிபதி, தமிழக அரசு வழக்கறிஞர், போராடுபவர்களால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை என்று சொன்னதும் அப்படியா ! என ஆச்சர்யப்பட்டு, போராடும் கூட்டத்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு கொடுக்க இயலாது என்று சொல்லி, அத்தகைய நடவடிக்கைகளை புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரியே முடிவு செய்து கொள்ளட்டும் என்று வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.
. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாளுக்குள் அணு உலையை இயக்கி விடுவோம் என்று பேட்டி கொடுத்திருப்பதனால், நமது மக்கள் வழக்கறிஞர், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உடனே குறுக்கிட்டார். இதைக் கேட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், அவர் சாதாரணமாகத்தான் சொன்னார், அவர் சொன்னால் அணுவுலை இயங்கி விடப் போகிறதா என்ன ? என்று சப்பைக் கட்டு கட்டியதும், இருந்தும் விடாமல் நமது மக்கள் வழக்கறிஞர் குறுக்கிட்டு நாராயணசாமி மேல் அவமதிப்பை மிகவும் வலியுறுத்துவதை தெரிந்ததும், மக்களை கைது செய்யும் நடவடிக்கை மீதான வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவுக்கு எதிர்தரப்பு நாராயணசாமியின் வழக்கறிஞர் ஒப்புக் கொண்டார் .

ஸ் பெ

unread,
Aug 7, 2012, 2:18:46 AM8/7/12
to panb...@googlegroups.com
S.p. Udayakumar
தமிழினத்தின் நூறாண்டுகள் காத்திட
எம் மக்களின் ஓராண்டுப் போராட்டம்!

நாள்: ஆகஸ்ட் 16, 2012, வியாழக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயத் திடல்

கூடங்குளம் அணு உலைகளைப் பற்றிய எந்தத் தகவல்களையும் பொது மக்களுக்குத் தராது,
நீதிமன்ற ஆணைக்குப் பிறகும், திட்டம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை மக்கள் மத்தியில் வெளியிடாது,
மக்கள் கருத்துக்களை, அச்சங்களை, உணர்வுகளை எந்த விதத்திலும் கேட்காது,
அணுஉலை விபத்து இழப்பீடு பற்றிய ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை மக்களிடம் காண்பிக்காது,
அபாயகரமான திரவக் கழிவுகளை நம் கடலில் விட்டு, நம் மீன் உணவை நச்சாக்கி,
நாற்பத்தெட்டாயிரம் ஆண்டுகள் நம்மைத் துன்புறுத்தும் திடக் கழிவுகளை நம் மண்ணில் புதைத்து வைக்க சதி செய்து,
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும்போதே, நீதிமன்றத்தை அவமதித்து திட்டம் துவங்குவதற்கு நாள் குறித்துக்கொண்டு,
முதலிரண்டு அணு உலைகளே வேண்டாம் என்று சொல்லும்போது, மூன்றும், நான்கும் விரைவில் வரும் என்றெல்லாம் பொய்யும் புரட்டும் பேசி மக்களை அவமதித்து,
தமிழ் மக்கள் உரிமைகளை, உணர்வுகளை முற்றிலும் புறந்தள்ளி, நம்மவர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாது, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்சு நாட்டு கம்பெனிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் கவனமாய் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் மக்கள் விரோத மத்திய அரசை எதிர்த்து,
இந்த தமிழர் விரோத அரசுக்குத் துணைபோகும் தமிழக அரசை கண்டித்து....

கடலோர மக்களும், கரையோர மக்களும், உள்ளூர் மக்களும் சாதி மதங்களைக் கடந்து, ஒன்றாய் திரண்டு, ஒரு தாய் பிள்ளைகளாய், ஓராண்டு காலம் நடத்துகிற உண்மைப் போராட்டத்தின் முதலாண்டு நிறைவுப் போராட்டம்!

தலைவர்கள் வைகோ, சீமான், ஜவாஹிருல்லா, வேல்முருகன், மகேந்திரன், கொளத்தூர் மணி, அதியமான் உட்பட பல அரசியல், சமூகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலைகளை உடனடியாக மூடிட உற்சாகமாய் திரண்டு வாரீர்!

இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போராடுவோம்!
எங்கள் தலைமுறைகளைக் கொன்று எங்கோ இருப்பவனுக்கு ஊழியம் செய்திட ஒருநாளும் அனுமதியோம்!!
எங்களைப் புறந்தள்ளி இங்கே ஆட்சி அதிகாரம் செய்திட இனிமேல் விடமாட்டோம்!!!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Aug 9, 2012, 3:42:56 AM8/9/12
to panb...@googlegroups.com



''கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷ்யா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்.''

- மத்திய அமைச்சர் நாராயணசாமி

Snabak Vinod (SV)

unread,
Aug 9, 2012, 3:47:02 AM8/9/12
to panb...@googlegroups.com


2012/8/9 ஸ் பெ <stalinf...@gmail.com>



''கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷ்யா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்.''

- மத்திய அமைச்சர் நாராயணசாமி

 
ஹாஹாஹா....
நல்லா பேசுங்க... வழக்கம் போல, பத்து நாளில் முடிவு தெரியும் என்பார் போல...

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 9:55:58 AM8/14/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
இவர்களுக்கு எண்ணத் தேவை வந்தது? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? ஏன் இந்த அரசியல் போராட்டம்? அனைத்துப் பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தியான இவர்கள், கல்வி, நல்ல வேலையில் இருக்கும் இவர்கள் ஏன் தெருவில் இறங்கி தமிழர்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்? விழிப்புணர்வை ஏற்படுத்தத் துடிக்க வேண்டும்?
 
மாதம் ஒருமுறையோ வருடம் இரண்டுமுறையோ அநாதை/முதியோர் ஆசிரமம் சென்றால் தங்களின் சமுதாய அக்கறை முடிந்துவிட்டது என்றும் நினைக்கும் நண்பர்கள் மத்தியில், சில பேர் ஒருபடி மேலே போய் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தில் ஒருநாள் பங்குபெற்று அரசியல் என்றாலே ஊழல்வாதிகள் என்று அரசியல்வாதிகள் மட்டும் குறைசொல்லி தனது அரசியல் கடமை முடிந்துவிட்டது எனத் தப்பித்துப் போகும் நண்பர்கள் மத்தியில் இவர்கள் ஏன் தொடர்ந்து போராட வேண்டும்??
 
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் சில நண்பர்களால் ஈழத் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரால் வெகுண்டெழுந்து தங்களின் குரலை ஓங்கி அரசின் காதில் ஒலிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு, தொடர்ந்து அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் தமிழினம் மீட்க்கப்பட ஏதாவது செய்தாக வேண்டும் என்று தொடங்கப்பட்ட அமைப்பு "Save Tamils" இயக்கம்.
 
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சிங்களப் பேரினவாத அரசிற்கு இன அழிப்பிற்கான தண்டனைக்கிடைக்கவும், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்காகவும், மானுட எதிரி அணு உலைத் திணிப்பு பிரச்சனைக்காகவும், காவிரி பாலாறு நதிநீர் பிரச்சனைக்காகவும், மழைநீரை சேர்த்து மாசைச் சுத்தப்படுத்தி நன்னீராக்கும் ஆற்றின் தோலை உறிக்கும் மண் திருட்டு, திடத் திரவக் கழிவுகளால் மேலும் மேலும் மாசுபடும் ஆறுகள் பிரச்சனைகளுக்காகவும், விவசாயம் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும், தமிழர் உரிமை மீட்பிற்க்காகவும் என தமிழர் நலன்களுக்காக தொடர்ந்து அரசியல் வழியில் போராடிவருகிறது இந்த அமைப்பு... கிடைக்கும் நாட்களில் எல்லாம் பலக் கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள், கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்...
 
கடந்த ஆகஸ்டு ஆறாம் நாள் அணுசக்தி எதிர்ப்பு தினமும் கூடங்குளம் அணுஉலையினால் வரும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வும் சென்னையில் பல இடங்களில் நிகழ்ந்தது. அதனைப் பற்றிய பதிவு இங்கே பகிர்ந்துள்ளேன். இளைஞர்கள் பலர் இதில் இணைந்து நமது சமூகத்திற்காக உழைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள், அது மேலும் உற்சாகமூட்டம். நன்றி.
 
 

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்



இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.



சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.






ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.






அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.





ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.


மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.








புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.








முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.
















Posted by Save Tamils Movement

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 10:46:31 AM8/14/12
to பண்புடன்
வினோத்,
முல்லைப் பெரியாறு பிரச்சனையைத் தவிர, மற்ற விசயத்த சேர்த்துக்கொங்க. முல்லைப்பெரியாறு அரசியலாக்கப்பட்டது. அது அரசியலாக்கப் படாமலே தமிழகத்துக்கு சாதகமாத்தான் இருக்குது எல்லா காரணிகளும்.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 11:01:18 AM8/14/12
to panb...@googlegroups.com
முல்லைப்பெரியாறு புதிய அணை தேவையில்லை என்றுத் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்த பின்னும் கேரளா அரசு அவ்வப்போது அதற்கு எதிராக செயல்படுவதும் மத்திய அரசு மவுனம் சாதிப்பதும் தெரிந்த கதை.
 
இதை போராட்டம் மூலம் கருத்தியல் மூலம் அரசின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கவில்லை என்றாலும் அதிலும் தோல்விதான் மிஞ்சும். நல்லவேளையாக தேனீ மாவட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து அரசியல் போராட்டத்தில் குதித்ததால் அப்படி ஒரு நிலை மத்திய அரசு வரவிடாது என நம்பலாம்.
 
மற்றபடி, மேலும் சில முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டேன், தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதை எதிர்த்தும், மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லியும், ஈழத் தமிழர் முகாம்களில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தோழம இயத்தினருடன் இணைந்து அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் பண்ணியுள்ளார்கள்.

2012/8/14 Ramesh Murugan <rames...@gmail.com>

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 11:08:18 AM8/14/12
to panb...@googlegroups.com
தேனிமாவட்ட மக்கள் போராடவிட்ட்டாலும், அரசியல் கட்சிகள் போராடவிட்டாலும் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தீர்ப்பு நமக்கு சாதகமாவே வரும். அரசு அதற்கென தனி அமைப்பை ஏற்படுத்தி நீதிதுறையின் மூலமாக கவனித்து வருகின்றது. சில தொண்டு நிருவன அமைப்புகளும் சட்ட சிக்கல்களை களைவதற்கு உதவுகின்றது. தமிழக - கேரள அரசியல்வாதிகள்தான் தேவையில்லாமல் பதற்றத்தை உருவாக்கி மக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

தமிழக மீனவர் பிரச்சனைனை தேவையான அளவுக்கு பேசியாச்சி.

3பேர் துக்குத்தண்டனை பிரச்சனையில், 3 பேருக்கும் கொலையில் எந்த சம்மந்தமும் இல்லை என்றால் கொலையிலிருந்து தாராளமாக விடுவிக்கலாம்.

Srimoorthy.S

unread,
Aug 14, 2012, 11:52:22 AM8/14/12
to panb...@googlegroups.com

தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?

கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 12:29:47 PM8/14/12
to panb...@googlegroups.com


2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?

 கடல் எல்லையைத் தாண்டி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலன்னு சொன்னா, அதைக் கேட்டு மீனவர்களே சிரிப்பாங்க. நம்ம எல்லைல மீன் இல்ல. எல்லையைத் தாண்டி போறவங்களுக்கு நல்லாவே  தெரியும். திரும்பி வந்தால் மீனு இல்லனா உயிருன்னு. இது நம்ம அரசு, அரசியல்வாதிகள், புரட்சிக்காரர்கள் எல்லாருக்கும் தெரியும்.

இதுக்கு இருக்கிறது 2 வழிதான். ஒன்று இலங்கை அரசுடன் சுமூகமாக பேசி மீன் பிடிக்க அனுமதி வாங்குவது. அதற்கு இப்போ சாத்தியமே இல்லை. தனி ஈழம் கோரிக்கை இந்தியாவுல இருக்கும் வரை இலங்கை அதற்கு அனுமதிக்காது.

2வது வழி மாற்று தொழில் கற்றுக் கொடுப்பது. அதற்கு அரசு தயாராக இருந்தாலும் மீனவர்கள் தயாரா இல்லை.

கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?


பொதுமக்களை கொலை செய்தவர்களையும் இந்திய நாட்டின் ஆட்சியாளரை கொலை செய்தவர்களையும் இந்தியா ஒரே தராசில் வைக்காது. பெரும்பாலான நாடுகளிலும் அப்படித்தான். இதற்கும் இன உணர்வு இல்லையான்னு யாராவது லாலா லாலா பாடாமல் இருந்தால் சரி.

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 12:52:46 PM8/14/12
to panb...@googlegroups.com


2012/8/14 Ramesh Murugan <rames...@gmail.com>



2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?

 கடல் எல்லையைத் தாண்டி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலன்னு சொன்னா, அதைக் கேட்டு மீனவர்களே சிரிப்பாங்க. நம்ம எல்லைல மீன் இல்ல. எல்லையைத் தாண்டி போறவங்களுக்கு நல்லாவே  தெரியும். திரும்பி வந்தால் மீனு இல்லனா உயிருன்னு. இது நம்ம அரசு, அரசியல்வாதிகள், புரட்சிக்காரர்கள் எல்லாருக்கும் தெரியும்.
 
 
 
கடல் எல்லை கட்சத்தீவை தாரை வார்த்தபின்புதானே மாறியது...?
எத்தொனையோ ஆண்டுகள் மீன்பிடித்த கடலின் எல்லையைச் சுருக்கியது மீனவர்களிடம் கேட்ட பின்பா? ஏன் மீனவர்களுக்கு எதிராக அப்படிச் செய்தது இந்திய ஜனநாயக அரசு? இதைக் கேட்டால் கோபம் வருகிறது என்ன செய்ய.... சும்மா சாக்லேட் மட்டும் சாப்பிட்டு சுதந்திரத் தினம் அன்று மட்டும் கொண்டாடிவிட்டு கிளம்பு ராசா....
 

இதுக்கு இருக்கிறது 2 வழிதான். ஒன்று இலங்கை அரசுடன் சுமூகமாக பேசி மீன் பிடிக்க அனுமதி வாங்குவது. அதற்கு இப்போ சாத்தியமே இல்லை. தனி ஈழம் கோரிக்கை இந்தியாவுல இருக்கும் வரை இலங்கை அதற்கு அனுமதிக்காது.
 
 
 
:))
 

2வது வழி மாற்று தொழில் கற்றுக் கொடுப்பது. அதற்கு அரசு தயாராக இருந்தாலும் மீனவர்கள் தயாரா இல்லை.
 
 
 
:)))

கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?


பொதுமக்களை கொலை செய்தவர்களையும் இந்திய நாட்டின் ஆட்சியாளரை கொலை செய்தவர்களையும் இந்தியா ஒரே தராசில் வைக்காது. பெரும்பாலான நாடுகளிலும் அப்படித்தான். இதற்கும் இன உணர்வு இல்லையான்னு யாராவது லாலா லாலா பாடாமல் இருந்தால் சரி.
 
இராஜீவ் கொலை வழக்குகள் பற்றி கொஞ்சம் படித்தவர்கள் இதை இப்படி அணுக மாட்டார்கள்... இதற்கும் இனத்திற்கும் சம்பந்தம் இல்லை... இன எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு எடுத்தால் வேன்றுமென்றால் சம்பந்தம் இருக்கலாம்.

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 1:05:10 PM8/14/12
to panb...@googlegroups.com

2012/8/14 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>


 
கடல் எல்லை கட்சத்தீவை தாரை வார்த்தபின்புதானே மாறியது...?
எத்தொனையோ ஆண்டுகள் மீன்பிடித்த கடலின் எல்லையைச் சுருக்கியது மீனவர்களிடம் கேட்ட பின்பா? ஏன் மீனவர்களுக்கு எதிராக அப்படிச் செய்தது இந்திய ஜனநாயக அரசு? இதைக் கேட்டால் கோபம் வருகிறது என்ன செய்ய.... சும்மா சாக்லேட் மட்டும் சாப்பிட்டு சுதந்திரத் தினம் அன்று மட்டும் கொண்டாடிவிட்டு கிளம்பு ராசா....
 

கச்சத்தீவை இலங்கைக்கு வார்த்து கொடுத்ததில் எனக்கும் உடன்பாடு இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என நீதிமன்றத்தை முறைப்படி அனுகியது 2002ல்தான். அதுவரை தமிழின தலைவர்கள் என்ன பண்ணிக்கிட்ட்டு இருந்தாங்கன்னு வினோத்தான் சொல்லனும்.

மேலும் 1974-76ல் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தபடி கச்சத்தீன் அருகில் மீன் பிடிக்கவோ, வலைகளை உலர்த்தவோ எந்த தடையும் இல்லை. 1983ல் இலங்கையில் ஏற்பட்ட்ட கலவ்வரத்தின்பின்னே, இலங்கை விதியை மீறியது. விடுதலை புலிகள் அமைப்பு வந்தபின் முற்றாக அனுமதியை மறுத்தது.


இராஜீவ் கொலை வழக்குகள் பற்றி கொஞ்சம் படித்தவர்கள் இதை இப்படி அணுக மாட்டார்கள்... இதற்கும் இனத்திற்கும் சம்பந்தம் இல்லை... இன எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு எடுத்தால் வேன்றுமென்றால் சம்பந்தம் இருக்கலாம்.


:))

3 பேர்களுக்கும் கொலையில் சம்மந்தமே இல்லைனா நீதிமன்றம் மூலம் விடுதலை வாங்கி கொடுக்கலாம். இன ஆதரவு, எதிர்ப்பு அரசியல் எது எதென்ன பட்டியலிட்டால் நலம் :))

Srimoorthy.S

unread,
Aug 14, 2012, 1:26:57 PM8/14/12
to panb...@googlegroups.com

தேவையான அளவுக்கு நாங்களும் பேசியாச்சு. கச்சத்தீவு யாருது, தாரை வார்க்கப்படும்போது என்னென்ன கன்டிஷன், மீனவர்களுக்கான வரைமுறை என்ன, நாடுகடந்துவருபவர்களை எப்படி நடத்தவேண்டும் எல்லாம் எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்.
அதுக்கப்புறமும் நம்ம ஆளுங்கதான் தப்புன்னு சொல்றது வருத்தமா இருக்கு. நம்ம நாட்டு மக்களை காப்பாத்த நாமதான் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேவைப்பட்டால் மீறியாவது முயற்சிக்கணும். நமக்குள்ளயே காலை வாரிக்கிட்டா அரசியல்வாதிகளை மட்டும் இல்லை. இந்தியத் தமிழர்கள் எல்லாருமே கோமாளிகள் என கூமுட்டையன்கள் சொல்லுவாணுங்க.

உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கெல்லாம் கருணை இருக்கும். மூவர் இவங்களுக்கு இருக்காது.

சும்மாவா சொன்னார் ஸ்ரீமூர்த்தி.
நாட்டுல பஞ்சுமிட்டாய் விக்கிறவன், கோணூசி விக்கிறவன், டீக்கடை வெச்சிருக்கறவன், தேங்காய் பொறுக்கறவன், வீட்டுக்குள்ள காத்து வரலைன்னு தெருவுல லுங்கியோட தூங்கறவன் இவங்கல்லாம்தான் நாட்டுக்கு கேடு. ஆயிரக் கோடிக்கணக்குல டேக்ஸ் பெண்டிங் வெச்சி அடுத்த பட்ஜெட்ல வாராவட்டி, வாராக்கடன் லிஸ்ட்டுல கேன்ஸல் பண்ண முயற்சிக்கும் கேடிகள் நாட்டின் தூண்கள்.

தன்நாட்டு குடிமகன் ஒருத்தனுக்கு பிரச்சினைன்னா வரிஞ்சி கட்டிகிட்டு இறங்கற மனசாட்சியற்ற அமெரிக்கா மேலயே இப்பல்லாம் நாட்டம் அதிகமாயிட்டு இருக்கு.
அடுத்த கள்ளத்தோணி எப்போன்னு யாராவது கேட்டுச் சொன்னீங்கன்னா நலம்.

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 1:34:37 PM8/14/12
to panb...@googlegroups.com
கிளாஸ் பச்ச...

2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 1:36:28 PM8/14/12
to panb...@googlegroups.com
ஸ்ரீமூர்த்தி,
நீங்களோ நானோ பேசி ஒன்னுமே ஆகப்போவதில்லை. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட்டபோதே எதிர்த்திருக்கனும். மத்திய அரசு கண்டுக்கலைனா நீதிமன்றத்தை அனுகியிருக்கனும். இரண்டையுமே செய்யல தமிழக அரசியல்வாதிகள். இப்பவாது நீதிமன்றத்துக்கு போனாங்களேன்னு சந்தோசப்படனும்.

இலங்கையில் இனக்கலவரம் வந்தபோது சலசலப்பு வந்தாலும் சில சமரசங்களுடன் நம் மீனவர்கள் இலங்கை கடலோரத்தில் மீன் பிடித்தே வந்தார்கள். விடுதலைப் புலிகள் தலையெடுத்ததும், ஆயுதக் கடத்தல், மாபியா, இன்னபிர இத்தியாதிகளை காரணமா வச்சி இலங்கை தன் கடல் பாதுகாப்பை தீவிரப்படுத்தியது. (இதை மறுக்குறவங்க விடுதலை புலிகளுக்கு ஆயுதம், மருந்து உட்பட அணைத்து பொருட்களும் எங்கிருந்து போச்சின்னு விளக்கினால் நலம். மேலும் தகவல்களுக்கு மாயவலை படிக்கவும்)

இதை தமிழர் என்பதால் நீங்களோ நானோ ஏற்றுக் கொண்டாலும், இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவும் அவர்களின் பாதுகாப்பு விசய்த்தில் தலையிடாது. நம்ம மீனவர்களும் இலங்கை கடலுக்கு செல்லாம இருக்க மாட்டாங்க.

2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Ramesh Murugan

unread,
Aug 14, 2012, 1:41:13 PM8/14/12
to panb...@googlegroups.com
ஸ்ரீமூர்த்தி,
நான் நம்ம நாட்டு தலைவரை கொன்னுட்டேன்னா என்னை நீதிமன்றம் அனுகும் விதத்திற்கும் மற்ற நாட்டு தலைவரை கொன்னுட்டேன்ன்னா அப்போ என்னை அனுகும் விதமும் வேற மாதிரி இருக்கும்.

ராஜீவ் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட்டவங்களில் ஒருவரைத் தவிர மற்ற இருவரும் இலங்கை தமிழர்கள். மூவரும் சம்மந்தப்பட்டிருப்பதால் இரண்டு கோர்ட்டுகளில் விசாரித்து, பின் குடியரசு தலைவராலும் கருணை மனு ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றது. இப்பவும் விசாரணை நடைபெறுகின்றது. அவர்களுக்கு ஆதரவான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்தால் தண்டனையிலிருந்து நிட்சயம் தப்பிக்கலாம்.

மேலும் இந்திய தேசியத்தில்தான் குற்றவாளிகளுக்கு இவ்வளவு கால அவகாசம் கிடைக்கும்.

2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>

//உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கெல்லாம் கருணை இருக்கும். மூவர் இவங்களுக்கு இருக்காது.//


Prakash Sugumaran

unread,
Aug 14, 2012, 2:27:31 PM8/14/12
to panb...@googlegroups.com
''கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷ்யா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்''//
அப்போ நிச்சயம் அது நடக்கும். அப்போ யார் செட்டில்மென்ட் குடுக்குறதுன்னு புது பஞ்சாயத்து நடக்குதாக்கும். விபத்து நடக்காதுன்னு பேசுனதெல்லாம் சும்மா வெள்ளாட்டுக்கு :) இந்திய வெளியுறவு, அணு கொள்கைபடி உசுருன்றதெல்லாம் திருவிழா வேண்டுதலுக்கு தொலைக்குற....... மாதிரி :)))

2012/8/14 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

ஜெஹபர் அலி

unread,
Aug 15, 2012, 4:18:24 AM8/15/12
to panb...@googlegroups.com
ரமேஷு நான் சொன்னேன்ப்பா..ஆனால் யாரும் கேட்கலை..தூக்கி குடுத்துட்டாங்க

2012/8/14 Ramesh Murugan <rames...@gmail.com>

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட்டபோதே எதிர்த்திருக்கனும்.



--
ALQURAN:TITLE:AL-BAQARA:CHAP:2 VERS:28 ENG&TAMIL TRANS.
( 28 ) How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned.
( 28 ) நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

Ramesh Murugan

unread,
Aug 15, 2012, 4:48:27 AM8/15/12
to panb...@googlegroups.com
:))

2012/8/15 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>

ரமேஷு நான் சொன்னேன்ப்பா..ஆனால் யாரும் கேட்கலை..தூக்கி குடுத்துட்டாங்க


ஸ் பெ

unread,
Aug 15, 2012, 6:21:10 AM8/15/12
to panb...@googlegroups.com

Asif Meeran AJ

unread,
Aug 15, 2012, 9:00:40 AM8/15/12
to panb...@googlegroups.com
சும்மாவா சொன்னார் ஸ்ரீமூர்த்தி.

யாருங்க அந்த மகான்??
ங்கொய்யால சந்தடி சாக்குல...

Srimoorthy.S

unread,
Aug 15, 2012, 9:46:46 AM8/15/12
to panb...@googlegroups.com

எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான் ஆசிப் ஐயா.

நாமளே நம்மளை மதிக்கலைன்னா வேற யாருதான் மதிப்பாங்க சொல்லுங்க ஐயா.

--

ப்ரியன்

unread,
Aug 16, 2012, 9:07:37 AM8/16/12
to panb...@googlegroups.com
கூடங்குளம் : மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு நீதிமன்றம் கண்டனம்!
Posted Date : 11:48 (16/08/2012)Last updated : 15:07 (16/08/2012)

சென்னை: கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று  கண்டனம் தெரிவித்தது. 

கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்  போது, தடையில்லாச் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு  மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்   நீதிமன்றம், அணு உலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது, கூடங்குளம்   அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தது ஏன்? என்று கண்டனம்  தெரிவித்தது. 

மேலும் அணு உலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,கூடங்குளத்தில்  மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் தேதியை மத்திய அமைச்சர் நாராயண சாமி  அறிவித்ததற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பு வெளியாகும் முன்பே மத்திய  அமைச்சருக்கு என்ன அவசரம்? மத்திய அமைச்சர் உச்ச நீதிமன்றத்தைத்தான் மதிப்பாரா?  உயர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டாரா? என்று நாராயணசாமிக்கு சரமாரியாக  கேள்விகளை எழுப்பினர்.

அதுமட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது  கூடங்குளம் அணு உலையை இயக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா  சான்றிதழ் வழங்கியது எவ்வாறு என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்  கூறினர்.

வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, கூடங்குளம் தொடர்பாக மத்திய அமைச்சர்  நாராயணசாமி அடிக்கடி தனது கருத்துகளை ஊடகங்களில் கூறுவதற்கு நீதிபதிகள்  கண்டனம் தெரிவித்தனர். 

மத்திய அரசு தரப்பில் இருந்து இந்த வழக்கில் யாரும் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்  காட்டிய நீதிபதிகள், 2 மாத காலமாக கூடங்குளம் பிரச்னையை விசாரித்து வருவதற்கு  என்ன மரியாதை உள்ளது? இப்படியே போனால், இந்த வழக்கினை சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெஞ்ச்சுக்கு மாற்றிவிடுவோம் என்றும் எச்சரித்தனர்.

மேலும் அணு உலையை இயக்குவது குறித்து தேதியை அறிவித்தது குறித்து மத்திய,  மாநில அரசுகள் வரும் 21 ம் தேதிக்குள் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Snabak Vinod (SV)

unread,
Aug 17, 2012, 4:18:11 AM8/17/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
அணு உலை எதிர்ப்பு ‍ ஓராண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை...
 

இடிந்தகரை - பற்ற வைத்த நெருப்பும் கடந்து வந்த பாதையும்

அ.மு.செய்யது வியாழன், 16 ஆகஸ்ட் 2012 11:02

'ஒன்று கூடுவார்கள்! கோஷமிடுவார்கள்! பின் கலைந்து சென்று விடுவார்கள்' என்று எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா? செய்தார்கள். அந்நிய‌ சக்திகளிடமிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் விஷத்தைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை. ஆகவே பரப்புங்கள்! கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள். எளிய மக்களை கடித்துக் குதற‌ இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.

koodankulam_sava_oorvalam_641

ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள்! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள். கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்கள் முழுதும் ஒரு மக்கள் சமூகமே "போராட்டக்காரர்களாக" சுருக்கப்பட்டது. பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், 'அந்த உதயகுமார அடிங்கடா!' என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்துப் போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய‌ கட்டாயமிருந்தது அவர்களிடம். எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 வருடங்களுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டாலும் முழு புரிதலோடு ஒரு மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த வருடம் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற‌ ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம், வழக்குகள், சிறை வாசம், தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பணம் கொடுத்ததாக விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே? பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ? எண்ணிறந்த குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் போலிப் பரப்புகளும் இப்போது என்ன ஆனது?  அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.

koodankulam_sava_oorvalam_642

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது புளுத்து நாறுகிறது என்ற பதில் மட்டுமே.

மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள் குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை. மக்களின் அச்சமும் தீர்க்கப்படவில்லை. மேலும் அம்மக்களை சமனப்படுத்த‌ பல கோடி லஞ்சத்திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம், பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை. அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். இது தான் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்த லட்சண‌ம்.

அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட‌ ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை. ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.

koodankulam_sava_oorvalam_640

அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும் செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்குப் பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தித் தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும் படி பழக்கப்பட்டிருக்கிறார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.

போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில‌ அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய‌ போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய‌ மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அநீதமான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களின் போராட்டங்களை கவனத்தோடு கற்று வருகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.

ஸ் பெ

unread,
Aug 20, 2012, 1:20:22 PM8/20/12
to panb...@googlegroups.com
இடிந்தகரைக்கு சென்று வந்த பிறகு கூடங்குளம் இயங்க இன்னும் ஆறுமாத காலமாவது ஆகும் என குழுமத்தில் எழுதியது ஞாபகம் வருகிறது..
இப்போ திறந்திடுவோம், அப்போ திறந்திடுவோம் என போக்கு காட்டியவர்கள் இப்போது குடியரசு தினத்திற்கு முன் திறக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்களாம்..
என்னமோ
போங்கப்பா............  ;))
------------------------------------------------------------------------------------------------



கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

யுரேனியம் அனுமதிக்கு எதிர்ப்பு

ணு உலைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை எட்டிய நிலையில், இடிந்தகரை மக்கள் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்தி இருக்கிறது காவல் துறை. 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் நடந்துவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 16-ம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்டியது. ஓரு பக்கம் போராட்டம் நடந்துவந்தபோதிலும், அணு உலையை விரைவில் திறப்பதற்கான பணிகளில் இந்திய அணு சக்திக் கழகம் தீவிரம் காட்டியதால், கூடங்குளம் முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்டது. இதனால் அணு மின் நிலைய அதிகாரிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இந்த விவகாரம் போராடுபவர்களை டென்ஷன் ஆக்கவே, கூடங்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே, அணு உலையில் இருந்து மூன்று கி.மீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், புதிய சூழலைக் கவனத்தில்கொண்டு அதனை 7 கி.மீ. தூரமாக அதிகரித்து உத்தரவிட்டார், மாவட்ட கலெக்டர் செல்வராஜ். அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க, கூடுதலாக 12 கம்பெனி போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோரிடம் பேசினோம். ''நாலைந்து மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர், 'இரண்டு வாரத்தில் அணு உலை செயல்படும்’னு சொன்னார். அதற்கான வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தும் அப்படி ஒரு தவறான தகவலைச் சொன்னார்.  மத்திய அமைச்சர் நாராயணசாமி எந்த இடத்தில் மைக் கிடைச்சாலும், '15 நாட்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும்’னு சொல்லிவருகிறார். இப்போது அணு உலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதில் இறுதித் தீர்ப்பு வர இருக்கும் சூழலில், யுரேனியம் நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது ஜனநாயக விரோதம். இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.

ஜனநாயகத்தில் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால் எங்கள் சுதந்திரம் முழுமையை அடையவில்லை என்பதாகவே உணர்கிறோம். அதனால் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்தோம். எங்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுவதால் பாடை கட்டி எதிர்ப்பைப் பதிவு செஞ்சிருக்கோம். அணு உலையை அகற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்கள் காட்டமாக.

இடிந்தகரையில் ஆகஸ்ட் 15-ம் தேதி கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ஜனநாயகத்தைப் பாடை யாகக் கட்டி, ஒப்பாரிவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் எரித்தனர். வீடுகளில் கறுப்புக் கொடியை ஏற்றி இருந்தனர். இந்தப் போராட்​டம் பற்றிக் கேள்விப்பட்ட போலீஸார் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

கூடங்குளம் நிலைய இயக்குநர் சுந்தரிடம் பேசினோம். ''அணு உலையில் இன்னும் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சில கட்டுப்பாடுகளை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் விதித்து இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றிய பின்னரே எரிபொருளை நிரப்பலாம் என்று தெரிவித்து இருப்பதால், அதற்கான வேலைகளைச் செய்துவருகிறோம். ஆணைய அதிகாரிகள் திருப்தி ஏற்பட்ட பின்னரே யுரேனியத்தை நிரப்ப ஒப்புதல் கொடுப்பார்கள்.  

அணு உலையில் மின் உற்பத்தியின்போது ஒரு செயின் ரியாக்ஷன் நடக்கும். அது தடையின்றி நடக்க ஏதுவாக இருக்கிறதா என்பதை எல்லாம் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கவனமாகக் கண்காணிப்பார்கள். எரிபொருள் மூலமாக ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் சக்தி அணு உலைக்கு இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்த பிறகே மின் உற்பத்திக்கு அனுமதி கிடைக்கும். அதனால் குடியரசு தினத்துக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என நம்புகிறோம்.

மின் உற்பத்தியைத் தொடங்கும்போதே முழு அளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்துவிட முடியாது. சிறிய அளவில் தொடங்கி, ஒவ்வொரு கட்டமாக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே, அதிகரிக்க முடியும்'' என்று விளக்கினார்.

அணு உலையில் யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்து இருப்பதால், கூடங்குளம் அடுத்த கட்டத்துக்கு நாள் நெருங்கிவிட்டது என்றே தெரிகிறது.

- ஆண்டனிராஜ்,





--

ப்ரியன்

unread,
Aug 21, 2012, 7:11:27 AM8/21/12
to panb...@googlegroups.com

Madras Atomic Power Station to restart after shutdown

Indo-Asian News Service | Updated: August 20, 2012 15:29 IST





Chennai: Two reactors of the Nuclear Power Corporation Ltd's (NPCIL) Madras Atomic Power Station (MAPS) that shut down after a power supply breaker tripped leading to a power cut early on Sunday would restart generation around Aug 23, said a senior official here on Monday.

"Around 1.15 am on Sunday, a breaker in 230 KV switchyard tripped resulting in power supply failure. The reactor's automatic shutdown process was triggered. Both reactors shut down their operations. Both units would come back to operation by Aug 22 or Aug 23," K Ramamurthy, station director, MAPS, told IANS.

According to him, four standby diesel generators got into operation immediately when the main power supply failed.

"There was no sudden surge in power generation or supply that resulted in the breaker to fail," Ramamurthy said.

He said that the breaker that failed is one of the old ones, all of which MAPS is replacing.

"We have 11 such breakers and have replaced six units. Each component costs about Rs.20 lakh," Ramamurthy said.

"The moment the power failure happened the turbines tripped. We came to know of the incident immediately as the sirens sounded out," Ramamurthy said.

Located in Kalpakkam around 70 km from here, MAPS has two reactors of 220 MW each, but they have been functioning below their rated capacity owing to paucity of fuel.

"The fuel supply situation is improving. The first unit was generating 180 MW and the second around 160 MW. By the end of this year we expect the power generation to touch full capacity at both the units," Ramamurthy said.

The shutting down of the two reactors did not affect the fast breeder test reactor (FBTR) and the mini reactor Kamini located at Indira Gandhi Centre for Atomic Research (IGCAR).

A breeder reactor is one that breeds more material for a nuclear fission reaction than it consumes. Power supply to IGCAR comes from MAPS.

"The FBTR was shut down on Friday as per our plans. So it was not operational when the MAPS units shutdown. Even if the test reactor was functioning it would have shut down automatically," G Srinivasan, director, reactor operation and maintenance group at IGCAR, told IANS.

According to him, the mini reactor was not in operation when the incident happened.

"The Kamini reactor is operated only when needed," he said.

The MAPS shutdown also did not affect the construction of the 500 MW prototype fast breeder reactor (PFBR) by Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd. (Bhavini) at Kalpakkam.

"We have two sources for power, one from MAPS and the other from the grid. As the MAPS units shut down at night we were not affected. Now we are getting the grid power and work is on at the site," Prabhat Kumar, chairman and managing director at Bhavini told IANS.

ஸ் பெ

unread,
Aug 21, 2012, 2:03:31 PM8/21/12
to panb...@googlegroups.com

கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கு மன்னிப்பு கேட்டது மத்திய அரசு

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது, விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தற்காக இன்று கோர்ட்டில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

கூடங்குளம் அணுமின்நிலைய வழக்கு இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜோதிமணி, தேவராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன்பராசரன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டோம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது கூடங்குளம் விரைவில் செயல்பட துவங்கும் என மத்திய அமைச்சர் கூறியது தவறு. இதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். வேண்டும் என்றே திட்டமிட்டு ஐகோர்ட்டை அவமதிக்கவில்லை. இதில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என்றார்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சிறப்பு வக்கீல் இன்பதுரை ஆஜராகி, மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர். இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

VJagadeesh

unread,
Aug 22, 2012, 1:15:34 AM8/22/12
to panb...@googlegroups.com
அடடே ஒரு ஜனநாயகநாட்டில்தான் இதெல்லாம் சாத்தியப்படும்...
வாழ்க ஜனநாயகம்...

2012/8/21 ஸ் பெ <stalinf...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
Aug 22, 2012, 10:21:39 AM8/22/12
to panb...@googlegroups.com
அமைச்சர் வேலையப் பாக்காம ஜனநாயகத்தையும் மக்களையும் மதிக்காம பொய் சொல்லிட்டு இருக்காரு... நீதி மன்றம் கடிந்துகொண்டதும் அரசு அவரை எதுவும் சொல்லாமல் ஒரு வருத்தம் மட்டும் தெரிவித்தால் அது தான் ஜனநாயகம், நாடு ஜனநாயக நாடு... 
 
அருமை வில்லா... இன்னும் அதிகமா எதிர் பாக்கிறேன் :))

2012/8/22 VJagadeesh <vom...@gmail.com>

ஸ் பெ

unread,
Aug 24, 2012, 3:55:22 AM8/24/12
to panb...@googlegroups.com
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், அணுசக்தி விதிமுறைகள் குறித்த பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையி...
ல், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாரியத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த விதிகளை மாற்றி அமைப்பதற்கான அதிகாரம் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ள சி.ஏ.ஜி., பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டும் தண்டனைகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரமும் வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள சி.ஏ.ஜி., தற்போதுள்ள விதிகளின்படி, விபத்துக்குக் காரணமாகும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Snabak Vinod (SV)

unread,
Sep 4, 2012, 2:30:34 PM9/4/12
to panb...@googlegroups.com
 
Tirunelveli செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 04, 11:22 AM IST
 
 
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு
 நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
ராதாபுரம், செப்.4-

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 386-வது நாளாக நீடிக்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அணு உலைகளால் மக்களுக்கு ஆபத்து வரும் என்று கூறி ஒரு ஆண்டுக்கும் மேலாக கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இது போன்றதொரு போராட்டம் நடந்தது இல்லை.

கூடங்குளம் பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்தவும், யுரேனியம் எரிபொருள் நிரப்பவும் சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப் போவதாக கூறியிருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பைக் காட்டிலும் மக்கள் தீர்ப்புதான் முக்கியமானது. கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று இப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதைப்பற்றி பரிசீலிக்காமல், விஞ்ஞானப்பூர்வ தகவல் தராமல், அணு உலை பாதுகாப்பானது.என்பதை மட்டும் திரும்ப திரும்ப கூறி, கூடங்குளம் திட்டத்தை திணிக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அணுமின் நிலையங்களால் ஏற்படும் தீங்கினை புரிந்து கொண்டு, புதிய அணு உலைகளை நிறுவுவதை நிறுத்தி விட்டார்கள். இயங்கி வரும் அணு உலைகளை மூடி வருகிறார்கள்.

எனவே இந்த போராட்டத்துக்கு நல்லதொரு விடிவு கிடைக்கும். என்னை எப்போது அழைத்தாலும் மீண்டும் வந்து போராட்டத்தில் பங்கேற்க தயாராக உள்ளேன் என்றார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் வியனரசு மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Snabak Vinod (SV)

unread,
Sep 4, 2012, 2:33:36 PM9/4/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், இளவேனில், Save_Tamils

Give up KKNPP: Ramadoss

Staff Reporter

 
If the Central and the State governments are for the welfare of the people, they, like the developed nations that are closing down the nuclear power programmes in a phased manner, should have chosen to give up the Kudankulam Nuclear Power Project, Pattali Makkal Katchi founder S. Ramadoss has said.

Unique protest

Addressing the anti-KKNPP protestors at Idinthakarai on Monday evening, Dr. Ramadoss said the nation had never witnessed such an “intense but peaceful agitation” in any part of the country in the past.

Like the developed nations that were gradually closing down the nuclear power programmes, Indian Government should also have scrapped the KKNPP and the Tamil Nadu Government should have pressed this demand if they were really concerned about people’s welfare.

Since the protesters were so intelligent and had understood very well the demerits of nuclear energy, they were fighting against it for the past several months.

“Valiant soldiers”

“The recent judgement by Madras High Court (on granting permission for fuel loading) has not dashed the hopes of these protesters, who have planned to go for an appeal in the Supreme Court and hence they are valiant soldiers,” he lauded.

PMK leader G.K. Mani accompanied Dr. Ramadoss.

asokan sivavadivelu

unread,
Sep 5, 2012, 1:27:19 AM9/5/12
to panb...@googlegroups.com
அன்புமணி அனுமதியளித்த மருத்துவக் கல்லூரி இழுத்து மூடப்பட்டுவிட்டதா? அது கூடங்குளத்தைவிட ஆபத்தானது.
உள்ளே தள்ள வேண்டிய மருத்துவர் அன்பு மணியை வெளியே விட்டிருக்கிறார்கள். வெளியே இருக்க் வேண்டியமருத்துவர் வினாயக் சென்னை உள்ளே தள்ளினார்கள்.

--

Jaisankar Jaganathan

unread,
Sep 5, 2012, 1:29:18 AM9/5/12
to panb...@googlegroups.com
அசோகன் நீங்க ஒரு பொது நல வழக்கு தொடரலாமே இதுக்கு

asokan sivavadivelu

unread,
Sep 5, 2012, 4:37:33 AM9/5/12
to panb...@googlegroups.com
இந்தியா திரும்பியவுடன் அனைத்தும் செய்யப்படும். ஊடகங்கள் பெரிய தலைகள் என்று விளம்பரம் செய்யும் அத்தனை தலைகளும் சாதாரணத் தலைகள் என்று நிரூபிக்கப் போகிறன்.

2012/9/5 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
அசோகன் நீங்க ஒரு பொது நல வழக்கு தொடரலாமே இதுக்கு

Jaisankar Jaganathan

unread,
Sep 5, 2012, 5:06:49 AM9/5/12
to panb...@googlegroups.com
எல்லா தலையும் சாதாரண தலைதான் வெட்டிப்பாத்தா தெரியும்

Snabak Vinod (SV)

unread,
Sep 5, 2012, 2:22:27 PM9/5/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், இளவேனில், Save_Tamils
ஒரு வழக்கு... ஒரு வரலாறு! - கீழவெண்மணி முதல் கூடங்குளம் வரை!      

செவ்வாய்க்கிழமை, 04 செப்டம்பர் 2012 10:47

 

aara-13கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடத்துக்கும் மேல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்!
வெறும் கோஷங்கள், எதிர்ப்புக் கூச்சல்கள் மட்டுமல்ல...!
அணுமின் நிலையம் அமைத்தால் நாட்டுக்கும் என்னென்ன தீங்குகள் நேரிடும் என்பதை அறிவியல் பூர்வமாகவும், இதற்கு முன் உலகில் நடந்த அணு விபத்துகளை முன் வைத்தும் மிகப் பெரும் அறிவோடு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இடிந்தகரை மக்கள்!
ஆனால்... மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இதுவரை போராட்டக் காரர்களின் ஒரு கேள்விக்குக் கூட ஆதாரபூர்வமாக உறுதியான உண்மையான பதிலை அளிக்கவில்லை!
மாறாக... இந்தியா முழுவதும் இருக்கும் மின்வெட்டை சாக்காக வைத்து, மின்சார உற்பத்திக்கு அணுமின் நிலையம் வேண்டும் என்று சொல்லிவருகிறார்கள்.
மேலும் அரசு அமைத்த குழுவோடு பேச்சுவார்த்தைக்கு சென்ற போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டனர். இடிந்தகரையைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அங்குள்ள சிறுகுழந்தை பால் குடிக்கக் கூட முடியாமல் சித்ரவதைக் கொடுமைகளை அரங்கேற்றியது இந்திய-தமிழக போலீஸ்!

இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பல எழுத்து பூர்வ அனுமதிகள் நிலுவையில் இருக்கும் நிலையில்... கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டது இந்திய அணுசக்தி ஆணையம்.

aara-11இதை போராட்டக்காரர்கள் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட...  ‘அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம்?’ என்ற ரீதியில் மத்திய அரசையும் அணுசக்தி ஆணையத்தையும் கேள்வி மேல் கேட்டது நீதிமன்றம்!‘
ஆனால்... அடுத்த சில நாட்களுக்குள் அதே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு நாட்டு நலனில் அக்கறைகொண்டவர்களும், அணுசக்தி எதிர்பாளர்களும், கூடங்குளம் போராட்டக் காரர்களும் திகைத்துப் போய்விட்டனர்.
அப்படி என்னதான் சொன்னது சென்னை உயர்நீதிமன்றம்?
நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைசாமி ஆகியோர் தங்கள் தீர்ப்பில்...
‘‘கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு பலர் இடம் வழங்கியபோது அதை எதிர்த்து யாரும் கோர்ட்டில் வழக்கு தொடரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுமின் நிலையத்திற்கு அனுமதி அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டபோதும் அதை எதிர்த்து யாரும் வழக்குத் தொடரவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. மேலும் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் அணு கழிவுகள் குறித்து மத்திய அரசு தெரிவித்த வாதத்தை இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. அணுக்கழிவுகள் அகற்றப்படுவது குறித்து மத்திய அரசின் கருத்தை மக்கள் அறியும் வகையில் வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அதையும் இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. இந்த காரணங்களை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய தடையில்லா சான்றிதழை தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் நிபுணர்குழுவின் பரிந்துரையை செயல்படுத்தாமல் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு தடைவிதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்கிறோம். அணுமின் நிலைய உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை. அதுபோல அணுமின் நிலைய செயல்பாட்டுக்கும் எந்த தடையும் இல்லை.
aara-12முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூடங்குளம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். அவற்றை நிறைவேற்ற வேண்டும்’’ என்பதுதான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!
அதாவது... ஆபத்து என்றால் பாதிக்கப்படுபவர்கள் ஏன் முன்னாலேயே வழக்கு தொடரவில்லை? தாமதமாக வழக்குத் தொடர்ந்தது தவறு என்ற ரீதியில் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களை அப்படியே பிரதிபலித்துள்ளனர் நீதிபதிகள்!
ஒரு மாநிலத்தின் வருங்கால சந்ததிகளின் நலன் பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இது!
ஏனோ... இந்தத் தீர்ப்பைப் படித்தவுடன் வரலாற்றின் பக்கங்களில் படிந்திருக்கும் 1973 ஏப்ரல் 6ம் தேதி மனக் கண்முன் வந்துபோகிறது!
ஆம்... அன்றும் இதே சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது!
அது எதற்காக என்றால்?
1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசுநாதர் பிறந்த நாள் விழா. உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்துக்கு மட்டும் மிகப் பெரும் எழவாக முடிந்தது.
aara-14அன்று தஞ்சை மாவட்டம் நிலப் பிரபுக்களின் கொடுங்கோல் பிடியில் இருந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களை ஒன்று திரட்டி விவசாயிகளின் கூலி உயர்வுக்காக போராடியது. அதன்படி அன்றைய காலகட்டத்தில் வழங்கப்படும் கூலியை விட அரை லிட்டர் நெல் அதிகம் கூலியாகக் கேட்டு தொழிலாளர்கள் போராடினார்கள்.
இன்றைய நாகை மாவட்டம் கீழவேளூர் அருகே இருக்கும் கீழவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை இந்த காரணத்துக்காக மிராசுதார்கள் அன்று கிறிஸ்துமஸ் அன்று மாலை பிடித்துச் சென்றார்கள். கட்டிவைத்து அடித்தார்கள்!
இதைக் கேட்டு வெகுண்ட தொழிலாளர்கள் கூட்டமாகப் போய் கட்டி வைக்கப்பட்டிருந்த தங்கள் தோழர்களை அவிழ்த்துக் காப்பாற்றி ஊர்வந்து சேர்ந்தனர்.
எப்படியும் மிராசுதார்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரியும். ஆனால் இப்படி என்று தெரியாது!
ஆம் .  அன்று இரவு கீழவெண்மணி கிராமத்துக்குள் மிராசுதார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் ஆட்கள் துப்பாக்கிகளோடு  நுழைந்தார்கள். ஆண் தோழர்களுக்கும அவர்களுக்கும் இடையே கடும் சண்டை நீடித்தது. இதில் காயம்பட்ட தோழர்கள் சிதறி ஓட.. எஞ்சியவர்களை அந்த ஊரின் ஓரத்தில் இருந்த ராமையா என்ற தொழிலாளரின் குடிசைக்குள் அடைத்தார்கள் மிராசுதார்களின் ஆட்கள்.
N.T._VANAMAMALAIமொத்தம் 44 பேர். அதில் முதியவர்களும் உண்டு... சிசுக்களும் உண்டு. மாதாம்பாள் என்ற தாயின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது பச்சிளம் குழந்தை. அந்தக் குழந்தையையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தினார்கள். அந்த ராமையாவின் குடிசைக்குள் 44 உயிர்கள் கருகி கரிக்கட்டைகளாகி எலும்புக் கூடுகளாகிப் போயினர்.
இந்த கொடுமை உலகையே அதிரவைத்தது. அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.
நாகப்பட்டினம் செஷன்ஸ் கோர்ட்டில் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட மிராசுதார்கள் குற்றவாளிகள் என்று நீதிபதி குப்பண்ணன் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மிராசுதார்கள் தரப்பு அப்பீல் செய்தது!
எரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக மூத்த  வழக்கறிஞர் என்.டி.வானமாலை வாதாடினார்.
அதன் மீதான தீர்ப்பைதான் 1973 ஏப்ரல் 6&ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி வீராச்சாமி வாசித்தார்.
“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட்ட பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்’‘ என்ற நீதிபதி மேலும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
venmani_kodumai_copy_copy‘‘இவ்வளவு அதிக சொத்து வைத்திருக்கும், கார் வைத்திருக்கும் கோபாலகிருஷ்ண நாயுடு போன்றவர்கள் குற்றம் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே அவர்கள் குற்றம் செய்திருக்க மாட்டார்கள்’’ என்பதுதான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு.
இந்த சம்பவம் பற்றி சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து ராமையாவின் குடிசை என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்.
அதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், நாகை மாவட்ட அன்றைய மருத்துவத் துறை அதிகாரிகள்,
குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை எப்படியெல்லாம் பாதுகாத்தோம் என்று குற்ற உணர்வு தாங்கமுடியாமல் பல வருட மனப் புழுக்கத்தைக் கொட்டியிருந்தார்கள்.
ஆக... நீதிமன்றத் தீர்ப்பே பின்னாளில் கேள்விக் குறியானது!
இப்போது கூடங்குளம் தீர்ப்பைப் பற்றிக் கேட்கிறபோது...
ஏனோ கீழவெண்மணி தீர்ப்பு ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது!

 

Snabak Vinod (SV)

unread,
Sep 6, 2012, 2:26:45 PM9/6/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்
06 Sep 2012 04:41:21 PM IST

இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலைகளே இல்லை: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

சென்னை, செப். 6: இந்தியாவுக்கு யுரேணியம் தர முன்வந்துள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலைகூட இல்லை என்பதை தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என கூடங்குளத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தெரிவித்தனர்.
கூடங்குளத்தில் அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் கூடங்குளத்திலிருந்து பெண்களும், பள்ளி சிறுவர் சிறுமிகள் 20 பேரும் சென்னை வந்துள்ளனர்.

முன்னதாக அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:
கூடங்குளம் மக்களின் அச்சம் தீறும் வரை அணு உலைகளில் யுரேணியம் நிரப்பக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இன்னும் எங்களின் அச்சம் தீறவில்லை. ஆனால், அணு உலைகளில் யுரேணியம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அணுக் கழிவுகளும், வெப்ப நீரும் கடலில் விடப்படும்போது, கடல்வாழ் உயிரனங்கள் செத்துப்போகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் கதிர் வீச்சு அபாயமும் உள்ளது.
எனவே, அணு உலைகளில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் பள்ளி மாணவ மாணவிகள் விக்னேஷ், ஹசினா, லைசிஸ்கா, ஜோசுவா, விஜின் ஆகியோர் கூறியது:
இந்தியாவுக்கு யுரேணியம் தர ஒப்புக்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணு உலை கூட இல்லை. அந்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அணு உலைகளில் பயன்படுத்துவதற்காக யுரேணியம் தர முன்வந்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
அணு மின் உற்பத்திக்கு எதிராக எங்களுடைய பெற்றோர் 400 நாள்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் போராட்டங்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனால், பள்ளிக்குச் செல்லும் எங்களால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. மின்சாரம் தயாரிக்க ஏராளமான வழிகள் இருக்கும்போது, மக்களின் உடல் நலனை பாதிக்கும் அணு மின் உற்பத்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடுவதற்காகத்தான் இப்போது சென்னை வந்துள்ளோம். மேலும், கூடங்குளத்தில் வசிக்கும் எங்களை கதிர் வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்ற ஆதரவு அளிக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரு மகள்கள் மற்றும் ரஷ்யா, ஆஸ்திரேலியா குடிமக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றனர்.

Dinamani

Snabak Vinod (SV)

unread,
Sep 6, 2012, 2:28:14 PM9/6/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்
எங்கள் எதிர்காலத்தை காத்திடுங்கள். முதல்வருக்கு 'கூடங்குளம் குழந்தைகள்' கடிதம்...

சென்னை வந்துள்ள இடிந்தகரை குழந்தைகள் பின்னாலேயே காவல் துறையும் பயணிக்கிறது. அவர்களை தீவிரவாதிகளை கண்காணிப்பது போல் கண்காணிக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் மீதுகூட இரக்கம் காட்டாத அரசு! http://www.youtube.com/watch?v=1Hzl6bDWbdE&feature=youtu.be

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:57:20 AM9/9/12
to panbudan
Koodankulam Update

March starts towards Koodankulam Nuclear Power Plant as per Puthiyathalaimurai TV 

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:57:31 AM9/9/12
to panbudan
கூடங்குளம் முற்றுகையில் பெண்களை முன்னால் அனுப்பி விட்டு ஆண்கள் கோழை போல பின்னால் வருகிறார்கள் என்கிறார் கோபண்ணா கலைஞர் செய்தியில். இதன்மூலம் இந்தப் போராட்டத்தில் பெண்களின் அறிவுபூர்வமான பங்கேற்பை கொச்சைப்படுத்துகிறார். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அணு உலை குறித்து எதுவும் தெரியாது என்று கருதும் கோபண்ணாவைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்தப் பெண்களிடமும் குழந்தைகளிடமும் பேசிப் பார்த்திருக்கிறாரா அவர்? அவர்கள் எவ்வளவு தூரம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிற சிறிய அறிவுகூட இல்லாமல் பேசுகிறார்

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:57:50 AM9/9/12
to panbudan
கூடங்குளம் போராட்டக்குழு சுற்றுவட்டார கிராமங்களில் யாராவது போராட்டத்தின்போது உயிர்துறகக் நேர்ந்தால் 5 லட்சம் பணம் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்ததாக ஒரு பொய்யான செய்தியை மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி பரப்புகிறது. இப்படியான பொய் பிரசாரஙக்ள் மூலம் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். வன்முறையின்றி இத்தனை நாட்களாக போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப்படுத்தும் இந்த முயற்சியை என்ன பெயரிட்டு அழைப்பது?

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:58:09 AM9/9/12
to panbudan
Joseph John Sunder
11.20am : Around 30000 people started marching, one the way many people expected to join the way. Udayakumar, Pushparayan, MAIPA and Milton leading the march, followed by children, women, then followed up people. Another prayer expected in St. Xavier’s church in west, then head towards KNPP.

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:58:36 AM9/9/12
to panbudan
11.40am: March reaching few feets away from KNPP east side wall, huge crowd follows Udayakumar, people very well received the idea of the location, very hot weather, sea breeze give little comfort, we will have one leg always sea, our mother.

asokan sivavadivelu

unread,
Sep 9, 2012, 2:59:50 AM9/9/12
to panb...@googlegroups.com


அவர் பேசுவதெல்லாம் வேறுமாதிரிப் பெண்களுடன்

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 2:59:32 AM9/9/12
to panbudan

சற்று முன் ....
காவல்துறையை ஒரு புறம் கண்காணிக்க மறு புறம் கடற்கரை வழியாக அணு உலை போராளிகள் கூடங்களம் அணு மின் நிலையத்தை நெருங்கி விட்டனர் . 300 அடி தூரத்தில் அணு மின் நிலையம் 

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 3:01:13 AM9/9/12
to panb...@googlegroups.com
Joseph John Sunder
12.15pm: KNPP east compound wall: Marched stopped, people are just 100feet way from police, people wait for SPU’s command. People are asked to sit in seashore. People still joining. Weather make it hard, hope Govt , political and religious leaders respond soon.

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 3:26:44 AM9/9/12
to panb...@googlegroups.com

Francis Xavier Vasan
12.30pm.Same stand-off.No movement.Partic ipants say that since they have taken seashore root, they are safeand it is a wise decision. The police underestimated our people and now in tricky position. 

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 5:09:40 AM9/9/12
to panb...@googlegroups.com

Francis Xavier Vasan
2.15pm: People are sitting at the seashore.Weathe r is tolerable since our people are close to sea.Water is transported through boats and given to the needy.Water also brought bythe people who stay close by..Food is under preparationand may reach the people any time through sea.Collector gone back afterthe discussion.The demand isnot to load the uranium in a haste.Police are in their position but moving around. 

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 5:30:04 AM9/9/12
to panb...@googlegroups.com

This is from Shabbir Ahmed, a correspondent with Headlines Today, on Twitter: Admist protest #Idinthikarai villagers provide drinking water to #policemen & striking force personnel. 

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 5:31:58 AM9/9/12
to panb...@googlegroups.com
Inline images 1

--
393230_366469470097815_1897314803_n.jpg

ஸ் பெ

unread,
Sep 9, 2012, 5:32:45 AM9/9/12
to panb...@googlegroups.com
d_n.jpg

தமிழ்ப் பயணி

unread,
Sep 9, 2012, 8:43:42 PM9/9/12
to panb...@googlegroups.com
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்

அணுஉலை அருகே..! :

அணுஉலைக்கு பின்புறம் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கடற்கரையில் போராட்டக்காரர்கள் நெருங்கினர். கடற்கரையில் பெண் போலீசார் உள்ளிட்ட அனைத்து படையினரும் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு வந்த போராட்டக்காரர்களில் முதலில் பிரமுகர்கள், பின்னர் வெள்ளைக் கொடிகளுடன் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என நடந்துவருவோம் என கூறியபடி நடந்துவந்தனர். இதனால் போலீசாரும் ஒருவர் கையில் கூட லத்தியோ, துப்பாக்கியோ இல்லாமல் பாதுகாப்பு கவசத்தை மட்டுமே போலீசார் கொண்டு சன்றனர். இருதரப்பினருமே சொன்னபடி நடந்துகொண்டதால் வன்முறைக்கு வழியில்லாமல் போனது. இருப்பினும் கடற்கரையில் அணுஉலைக்கு எதிரான கோஷங்கள் தொடர்ந்தன.

2012/9/9 ஸ் பெ <stalinf...@gmail.com>
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 4:20:29 AM9/10/12
to panb...@googlegroups.com
கூடங்குளம் காவல் துறையின் தடியடி சம்பவத்தை கண்டித்து...

குமரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்..
தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம்,
சென்னையில் சாலை மறியல் போராட்டம்,
தில்லியில் சாலை மறியல் போராட்டம்,

நடைபெற்று கொண்டு இருக்கிறது...

Jaisankar Jaganathan

unread,
Sep 10, 2012, 4:21:11 AM9/10/12
to panb...@googlegroups.com
எல்லா சாலையும் மறியல் பண்ணினா பயணிகள் எப்படி போவது?

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 4:21:59 AM9/10/12
to panb...@googlegroups.com
To oppress support to koodankulam people Chennai police arrested Thozhar Thirumurugan Gandhi in Nanthanam.
 
சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் திருமுருகனை காவல்துறை கைது செய்து வைத்திருக்கிறது. அவருடன் இன்னும் இரண்டு தோழர்களையும் சேர்த்து கைது செய்திருக்கிறது போலீஸ்.

இரா.ச.இமலாதித்தன்

unread,
Sep 10, 2012, 4:23:08 AM9/10/12
to panb...@googlegroups.com
திருமுருகன் யாரு?






இரா.ச.இமலாதித்தன்

tamilvaasal.blogspot.in



2012/9/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

--

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 4:23:32 AM9/10/12
to panb...@googlegroups.com
Lathicharge by Police on Koodankulam Protestors is to be condemned. People have democratic rights to stage protests. It was a peaceful protest, police and State has intimidated by Lathicharge.

I strongly condemn the Police and State for their undemocratic oppression on the People of Idinthakarai and the koodankulam protestors.
 
 
 
gunturu seshendra sarma, a noted telugu poet states " people can face the guns of the dictators but dictators can not face their questions"

if anybody raises his voice against corruption, exploitation,social evils and lends his voice to the voiceless, he will be immediately detained under several sections of indian penal code. but where as the looters of public money and natural resources and hooligans,smugglers are enjoying the protection of the state. law breakers are getting legal and police protection. this is to go.

Jaisankar Jaganathan

unread,
Sep 10, 2012, 4:26:51 AM9/10/12
to panb...@googlegroups.com
வள்ளியோட புருஷன்

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 4:27:59 AM9/10/12
to panb...@googlegroups.com
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்.

2012/9/10 இரா.ச.இமலாதித்தன் <emalat...@gmail.com>

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Sep 10, 2012, 5:07:39 AM9/10/12
to panb...@googlegroups.com

கொடுமையா இருக்கு டிவியில் பார்க்கும்போது. சின்ன சின்ன பசங்க எல்லாம் கல்லையும் மண்ணையும் தூக்கி அடிக்கிறாங்க :-(

ப்ரியன்

unread,
Sep 10, 2012, 5:20:40 AM9/10/12
to panb...@googlegroups.com
கூடங்குளத்தில் கலவரம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; பல படுகாயம்
Posted Date : 11:25 (10/09/2012)Last updated : 12:48 (10/09/2012)

ராதாபுரம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணு மின்நிலையம் அருகே 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது  போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியும் விரட்டியடித்தனர். .இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் வெடித்தது 
 
கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே கடற்கரையில் போராட்டக்காரர்கள்  நடத்தும் முற்றுகை போராட்டம் 2-வது நாளாக இன்று தொடர்ந்த நிலையில், முற்றுகையை கைவிடுமாறு எஸ்.பி. விஜயேந்திர பிதரி கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையை கைவிட மறுப்பு தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் போராட்டக்குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின் பகுதியில், அணுமின் நிலைய சுற்றுச்சுவருக்கு அருகில் இறங்கி நின்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றிருந்த இடிந்தகரையை சேர்ந்த டென்சிலின் (வயது45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து சென்றனர்.

இதனை பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பி போலீஸ் தடுப்பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போதுதான்  அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டத் தொடங்கினர்..மேலும் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அணு உலைக்கு எதிராக நடைபெற்று வந்த  போராட்டங்களில் இதுவரை மோதல் எதுவும் நடைபெற்றதில்லை.அமைதியாகவே  நடைபெற்றது. 

ஆனால் இன்று கலவரம் வெடித்துள்ளது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் முதலில்  தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு, அவர்கள் மீது காவல்துறையினர்  தடியடி நடத்தியுள்ளனர்.

போலீசாரின் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.போராட்டத்தில் ஈடுபட்ட  மீனவர்கள்  பலர் படகில் ஏறி கடலுக்குள் புகுந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் இந்த மோதலில் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக காவ்ல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போலீசார் தாக்குதல்  குறித்த தகவல் பரவியதால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட சுற்றுவட்டார  கிராமங்களில் கடும் பதட்டம் நிலவுகிறது.கிராமங்களை சுற்றி அதிரடிப்படை  வீரர்கள், காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதனிடையே காவல்துறை தாக்குதல் குறித்து இடிந்தகரை மக்கள் தேவாயல மணியை  அடித்து மக்களை திரட்டி வருகின்றனர். 

உதயகுமார் படகில் தப்பினார்

இந்நிலையில் போலீசாரின் தாக்குதலை தொடர்ந்து,  போராட்ட்க்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், மை.பா. ஜேசுராஜ் உள்ளிட்ட போராட்டக்குழு தலைவர்கள் கடலுக்குள்  தயாராக நின்றிருந்த படகில் ஏறி தப்பிச் சென்றதாக தகவல்கள், இதனால் காவல்துறையினரால் போராட்டக்குழு தலைவர்களை கைது செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு

இந்நிலையில், இந்த கலவரத்தை தொடர்ந்து அணு மின் நிலையத்தை சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள்னர்.


முன்னதாக கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள்  நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம்  அனுமதி அளித்ததை தொடர்ந்து, முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள்  நிரப்புவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.
 
இது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் அப்பகுதியை சுற்றியுள்ள  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து அணுசக்திக்கு எதிரான  மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் இருந்து பேரணியாகசென்று கூடங்குளம் அணுமின்  நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். 

தடையை மீறி இந்த போராட்டம் 9-ம் தேதி (நேற்று) நடத்தப்படும் என போராட்டக்குழு  அறிவித்தது.
 
இதனைத்தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, பெருமணல்,  கூத்தங்குளி, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளில் அதிரடிப்படை, அதிவிரைவுப்படை,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியபோலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.7000  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
தடையை மீறி பேரணியாக வருபவர்களை தடுத்துநிறுத்தி கைது செய்வதற்காக  போராட்டக்காரர்கள் வரமுடிவு செய்திருந்த வைராவி கிணறு மற்றும் தாமஸ் மண்டபம்  பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் கலவர தடுப்பு வாகனங்களுடன் தயாராக  நின்றனர். ஆனால் போராட்டக்காரர்களோ, முதலில் திட்டமிட்டபடி சாலை வழியாக  வராமல், இடிந்தகரை கடற்கரை வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி  பேரணியாக சென்றனர்.
 
இதனை போலீசார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதனைத் தொடர்ந்து வைராவிகிணறு  மற்றும் தாமஸ் மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்  உடனடியாக கூடங்குளம் அணுமின்நிலையத்தின் கிழக்கு கண்காணிப்பு கோபுரம் இருக்கும்  பகுதிக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து சேர்ந்தனர்.
 
அவர்கள் வந்த அதே நேரத்தில் போராட்டக்கார்கள் ஆயிரக்கணக்கானோர்  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமையில் திரண்டுவந்தனர்.  அவர்களை தொடர்ந்து முன்னேறவிடாமல் போலீசார் தடுத்துநிறுத்தினர்.  இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அணுமின்நிலையத்திலிருந்து 500 மீட்டர்  தொலைவே உள்ள கடற்கரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.ஏராளமான  பெண்கள், குழந்தைகளுடன் வந்திருந்தனர் இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன்  தென்மண்டல போலீஸ் ஐ.ஜி ராஜேஷ்தாஸ், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ்,  போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகளை அழைத்தனர்.
 
ஆனால் அவர்கள் தனியாக வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டனர்.  எதுவானாலும் அனைவரின் முன்னிலையில் பேசுங்கள் என்று கூறிவிட்டனர்.  இதனைத்தொடர்ந்து எஸ்.பி. ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்  போராட்டகாரர்கள் அணுமின்நிலையத்தை மூடும் வரை தங்களது போராட்டத்தை  கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து போராட்டம் நடந்த கடற்கரை பகுதிக்கு தொடர்ந்து ஏராளமானோர்  வந்து கொண்டே இருந்தனர். உதயகுமார் தலைமையில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  இரவு கடற்கரையிலேயே தங்கினர்.அவர்களுக்கு இடிந்தகரையில் இருந்து உணவு  தயாரித்து போராட்டம் நடந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டது.
 
போராட்டக்காரர்கள் முன்னேறிச்செல்லாத வகையில் போலீசாரும் அவர்களுக்கு முன்பு  அமர்ந்தபடி இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சுமார் 2 ஆயிரம் போலீசார்  கடற்கரையில் தங்கி விடியவிடிய தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 5:37:37 AM9/10/12
to panb...@googlegroups.com
போலீஸ்காரன் அடித்தால் இனிமையாக இருக்குமோ? :((

2012/9/10 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 5:38:36 AM9/10/12
to panb...@googlegroups.com
தமிழன் வீதிக்கு வராத வரை....எல்லாம் நடக்கும்!!! மிகக் கொடிய இருட்டடிப்பு வேலையும் அங்கு நடக்கிறது..செய்திகள் உடனுக்குடன் பரவாதவாறு தடுத்து இருக்கிறார்கள்... மானங்கெட்ட மனிதர்களாய் நாம் இருக்கிறோமோ?...

வன்முறையற்ற போராட்டத்தை வன்முறை சாயம் பூச இவன் தேசம் நடத்துகிறான்... கேட்டால் “காந்தி” தேசமாம்... இவள் “அன்னையாம்” ...வாயில் வருகிறது!!! அமைதியாய் இருக்கும் வரை அடக்குமுறை இருந்தே தீரும்போல்!!!
 
இடிந்தகரை : தொடரும் காவல் துறையின் வன்முறை . வீடு வீடாக சென்று தாக்குதல் . எங்கெல்லாம் இளைஞர்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் தாக்குதல் . ஏழை மீனவர்களின் படகுகளை அடித்து தாக்குதல் . அவர்களின் சாதனங்களை சேதப் படுத்தியது. பெண்கள் அலறும் சத்தம் எங்கும் கேட்கிறது. போராளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது காவல்துறை.

காவல் துறை மக்களிடம் சொல்கிறது "இந்த ஊருக்குள் இருந்தால் ஆபத்து என்று தானே சொல்கிறீர்கள்? இந்த ஊரை விட்டு ஓடிப் போய் விடுங்கள் " என்று சொல்லி அடிக்கிறது .
ஈழத்தில் நடந்ததை போல் இங்கு இந்த அரசு நடத்துகிறது. தமிழன் மீண்டும் தன் சொந்த நாட்டில் அகதியாக்கப் பட்டான் .

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 5:40:51 AM9/10/12
to panb...@googlegroups.com
 
Idinthakarai update: Sahaya Initha, councilor got severely injured. shelson got injured in throat. He Along with antony admitted to idinthakarai hospital. Kennedy
Had his hand broken.
Several Children got fainted due to the tear gas. Children who took shelter in the school was surrounded by the police.
Fifty people stranded in a single house fearing police. police threw the water cans near the church and urinated in the place.

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 5:54:31 AM9/10/12
to panb...@googlegroups.com
 
After the protesters were sandwiched between the police force of one side and the ocean on the other side, several of them started to throw sand as they were left with nothing to fight back with.

2012/9/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
போலீஸ்காரன் அடித்தால் இனிமையாக இருக்குமோ? :((

Snabak Vinod (SV)

unread,
Sep 10, 2012, 6:17:14 AM9/10/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, இளவேனில், தமிழ் சிறகுகள்

இந்திய‌ அணு உலைக‌ள் வெடித்தால்...

ப.நற்றமிழன் திங்கள், 10 செப்டம்பர் 2012 10:27  
இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...
அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.
அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1)
ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.
சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..
கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.
புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.
மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌ ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள். 1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)
இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும்.
இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.
இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌ய‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.
அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.
இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.
.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).
த‌ர‌வுக‌ள்:

இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன‌ ஆகும், இந்த‌ பேர‌ழிவின் போது யார் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து, எவ்வ‌ள‌வு வ‌ழ‌ங்குவ‌து என்ப‌து தொட‌ர்பான ஒரு ச‌ட்ட‌த்தை பாராளும‌ன்ற‌த்தில் கொண்டுவ‌ர‌ உள்ள‌து. அதாங்க‌ "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010". இந்த‌ ச‌ட்ட‌த்திலுள்ள‌ சாத‌க‌, பாத‌க‌ங்க‌ளை ப‌ற்றி பார்ப்போம்...

அணு உலை ஆத‌ரவு நண்பர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி -‌ ஏங்க‌ ம‌கிழுந்து(Car), பேருந்து, தொட‌ருந்து(Train) கூட‌ தான் அடிக்க‌டி விப‌த்திற்குள்ளாகுது அதுக்காக‌ நாம‌ அதில‌ போகாம‌ இருக்கோமா ? ஏங்க‌ அணு உலை விப‌த்து ந‌ட‌ந்துருன்னு ப‌ய‌ப்ப‌டுறீங்க‌ன்னு, அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌திலை அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌த்தின் முத‌ல் வ‌ரியிலேயே சொல்லியிருக்காங்க‌

இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.

அ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவர்களுக்கும்
ஆ) இந்தியாவின் கடல் எல்லைகளுக்குள்ளே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குள்ளே இருப்பவர்களுக்கும்.
இ)இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்பவர்களுக்கும்
ஈ) இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும்
உ)இந்தியாவின் சட்ட எல்லைக்குள் செயற்கை தீவில் இருப்பவர்களுக்கும், செயற்கை தீவவை உருவாக்கிவருபவர்களுக்கும்..(பிரிவு-1) 

ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது ம‌ட்டுமின்றி அணு உலை விப‌த்து அடுத்து வ‌ரும் த‌லைமுறைக‌ளையும் பாதிக்க‌க்கூடிய‌து. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விப‌த்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து ந‌ட‌ந்து ப‌ல‌ ப‌த்தாண்டுக‌ள் ஆன‌பின்ன‌ரும் அணு உலையிலிருந்து வெளியேறும் க‌திர்வீச்சு ப‌ன்ம‌ட‌ங்காக‌வே உள்ள‌து. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் இன்றும் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் க‌திர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டே வ‌ருகின்றார்கள்(1). செர்னோபில் விப‌த்து ந‌ட‌ந்த‌து 1986 ஏப்ரலில் என்ப‌தை நினைவில் கொள்க‌.

சில‌ விள‌க்க‌ங்களை இந்த‌ இட‌த்தில் சொல்வ‌து ச‌ரியாக‌ இருக்கும்..

கூடங்குளம் அணு உலையை உதாரணமாகக்கொண்டு சில விளக்கங்கள் உங்களுக்காக-
அணு உலை நிர்வாகி (Operator) - NPCIL (Nuclear power corporation india ltd)
அணு உலை வழங்குநர்(Suplier) -இர‌சியா.
அப்துல்க‌லாம் முத‌ல் நார‌ய‌ண‌சாமி வ‌ரை சொல்லி வ‌ரும் இந்தியாவில்  கட்டப்படுகின்ற‌ அணு உலைக‌ள் எல்லாம் 100 விழுக்காடு பாதுகாப்பான‌து, சுனாமி, பூக‌ம்ப‌ம் போன்ற‌ இய‌ற்கை பேர‌ழிவுக‌ளை தாங்கும் ச‌க்தி கொண்ட‌து என்று சொல்லிவரும் வேளையில், "அணு உலை விப‌த்து காப்பீடு ச‌ட்ட‌ம் 2010" இதற்கு நேர் மாறாக சொல்கின்றது.
அ) இயற்கை பேரழிவினால்(T-Sunami, நிலநடுக்கம்...) அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
ஆ) ஆயுத மோதலினாலோ, உள் நாட்டு போரினாலோ, பயங்கரவாதத்தினாலோ அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
இ) அணு உலை விபத்தினால், அருகில் கட்டப்பட்டுவரும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலை நிர்வாகம் பொறுப்பல்ல. (பிரிவு 5)
அதாவ‌து அணு உலை விப‌த்து ந‌ட‌ந்தால் யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ம‌றைமுக‌மாக‌ சொல்லுகின்றார்க‌ள். இந்த சரத்துகள் எல்லாம் இந்திய அணுசக்தி ஆணையத்தை காப்பாற்ற மட்டும் சேர்க்கப்பட்டவைய‌ல்ல, அடுத்து இந்தியாவில் அணு உலைகளை நிர்வகிக்க வருகின்ற‌ ரிலையன்ஸ், டாடா, அதை கட்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் பெரிதும் மனதில் வைத்தே இந்த‌ ச‌ட்ட‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ஒரு ம‌க்க‌ள் விரோதச் ச‌ட்ட‌மாகும்.

புகுசிமா அணு உலை விப‌த்திற்கு ஆழிப்பேர‌லை(T-Sunami) தான் காரண‌ம் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் ச‌ப்பான் அர‌சு நிய‌மித்த‌ உண்மை அறியும் குழு சொன்ன‌து புகுசிமா அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் ம‌னித‌ த‌வ‌றே என. இதுவே இந்தியாவாக‌ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் கணிப்பிற்கே விட்டுவிடுகின்றேன். மேலும் அணு உலை விப‌த்து என்ப‌து மிக‌ மோச‌மான‌ பேர‌ழிவை ஏற்ப‌டுத்த‌க்கூடிய‌து. இது போன்ற‌ விப‌த்திற்கு கார‌ண‌ங்க‌ளாக‌ நில‌ந‌டுக்க‌ம் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மிக‌ எளிதாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் சொல்லிவிட்டு தங்க‌ள் பொறுப்பிலிருந்து ந‌க‌ர்ந்துவிடவே வாய்ப்புக‌ள் அதிக‌ம்.
சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌ செய்தியில் ப‌யங்கர‌‌வாதிக‌ள் சில‌ர் கல்பாக்கம் அணு உலையை த‌க‌ர்க்க‌ திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ கூறினார்க‌ள். இதையெல்லாம் முன்ன‌ரே உண‌ர்ந்து தானே என்ன‌வோ 2010லேயே ப‌யங்கர‌‌வாதிக‌ள் அணு உலையை தாக்கினால் அந்த‌ விப‌த்திற்கு யாரும் பொறுப்ப‌ல்ல‌ என்று ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ள‌து ம‌த்திய‌ அர‌சு.

மேலும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் ப‌டி அணு உலை விப‌த்து சிறிதா, பெரிதா என்று கூற‌ வேண்டிய‌து இந்திய‌ அணுச‌க்தி ஆணைய‌ம். 1947லிருந்து இதுவரை அவ‌ர்க‌ளுடைய‌

 ந‌ட‌வ‌டிக்கையை பார்ப்போமேயானால் இதுவரை எந்த‌ அணு உலையிலும் சிறிய‌ அள‌வில் கூட‌ விப‌த்து ந‌ட‌ந்த‌தாக‌க்கூட‌ அவ‌ர்க‌ள் இதுவரை முதலில் ஒப்புக்கொண்டதேயில்லை, பல போராட்டங்களுக்கு பின்னர் தான் , அவையெல்லாம் மிகச்சிறிய விபத்துகள், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று ஆரூடம் கூறுவார்கள். ஆனால் இதே கால‌க‌ட்ட‌த்தில் இந்திய‌ அணு உலைக‌ளில் ந‌ட‌ந்த‌ விப‌த்துக‌ளின் ப‌ட்டிய‌ல் இதோ....
"1984ல் இயங்கத்தொடங்கிய கல்பாக்கம் அடுத்த சில வருடங்களுக்குள் 200 முறை பல்வேறு சிக்கல்களினால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1986 மார்ச்: கதிரியக்கம் உள்ள கனநீர் 15 டன் அளவுக்கு கசிந்து கொட்டியது. இதில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு ரிப்பேர் செய்தார்கள். கொட்டியதில் ஏழு டன் நீரைத்தான் திரும்பத் திரட்ட முடிந்தது. கசிந்ததே அவ்வளவுதான் என்று பொய் சொன்னார்கள்.

1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற‌ கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.

இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க‌ வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த‌ பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)

 

இந்திய‌ அணு சக்‌தி ஆணைய‌ம் விப‌த்து என்று அறிவித்த‌ பிற‌கு ம‌த்திய‌ அர‌சு ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும், அந்த‌ விசாரணைக் குழுவே இழ‌ப்பீடு தொட‌ர்பாக தீர்ப்பு எடுக்கும், இந்த‌ தீர்ப்பின் மேல் க‌ருத்து சொல்ல‌வோ, அந்த‌ தீர்ப்பை மாற்ற‌வோ இந்தியாவில் எந்த‌ நீதிம‌ன்ற‌த்திற்கும் அதிகார‌ம் இல்லை. ஐந்திலிருந்து ப‌த்தாண்டுக‌ள் செய‌ல்ப‌டும் இந்த‌ விசாரணைக் குழு க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌த்திய‌ அர‌சிட‌ம் முறையிட‌ வேண்டும். இந்தியாவில் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு அபூர்வ‌மாக‌ கிடைக்கும் ஒரு சில‌ தீர்ப்புகள் நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌மாக‌ கிடைக்கின்ற‌ன‌, ஆனால் அந்த‌ வாய்ப்பும் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் ம‌றுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இது மிக‌ப்பெரிய‌ அநீதியாகும். இந்தியாவின் தற்போதைய‌ அணு உலை சந்தையின் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். ம‌த்திய‌ அர‌சு அமைக்கும் விசாரணைக் குழுவும், ம‌த்திய‌ அர‌சும் ச‌ரியான‌ முறையில் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குமா? என்பதை பார்க்கும் முன்னர் போபாலில் நடந்த பேரழிவிற்கு இந்த‌ அர‌சு எப்ப‌டி வினையாற்றிய‌து என்ப‌தை ச‌ற்றே பார்ப்போம்.

1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்ப‌ட்ட‌ விபத்திற்கு அவ‌ர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த‌ கொஞ்ச‌ ப‌ண‌த்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வ‌ங்கியில் தான் வைத்துள்ளார்க‌ள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை.  அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த‌ ஆலை க‌ழிவுக‌ளை அர‌சு இன்னும் அக‌ற்றக்கூட‌ இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாத‌த்திற்குள் அந்த‌ க‌ழிவுக‌ளை அக‌ற்ற‌ வேண்டும் என்று உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் த‌ன‌து தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ள‌து. இது போன்ற‌ ப‌ல‌ தீர்ப்புகள் இதற்கு முன்னர் வ‌ந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த‌ தீர்ப்பை உட‌னே செவிம‌டுத்து ஆலைக‌ழிவுக‌ளை உட‌னே அக‌ற்ற‌ப்போவதும் இல்லை. ஒரு பேர‌ழிவு ஏற்ப‌டும் பொழுது இந்திய‌ அர‌சு எப்ப‌டி செய‌ல்ப‌டும் என்ப‌த‌ற்கு போபால் நிக‌ழ்வு ஒரு சாட்சியாகும். இந்த‌ ச‌ட்ட‌த்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய‌ ஒரே பிரிவு 17, அதாவ‌து அணு உலை விப‌த்திற்கு கார‌ண‌ம் அணு உலையை க‌ட்டிய‌வ‌ர்க‌ள், அந்த‌ பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ள் என்று தெரிந்தால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து இழ‌ப்பீட்டை அணு உலையை நிர்வ‌கிக்கும் அமைப்பு வாங்க‌ முடியும். கூட‌ங்குள‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 1,2 அணு உலைக‌ளுக்கு இந்த‌ பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் க‌ட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைக‌ளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும்  இந்த‌ பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான‌ அணு உலைக‌ளை க‌ட்டும் இர‌சியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் இந்தியாவை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை அணு உலையை ஆத‌ரிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌வேண்டும்.    

இது ம‌ட்டுமின்றி அதிக‌ப‌ட்ச‌ இழ‌ப்பீடாக‌ அர‌சு நிர்ண‌ய‌த்திருப்ப‌து 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விப‌த்தினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளை ச‌ரிசெய்ய‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 72 ஆயிர‌ம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அர‌சு சொல்கின்ற‌து.(5) அது போன்ற‌ ஒரு விப‌த்து இந்தியாவில் ந‌ட‌ந்தால் 1500 கோடி ரூபாயை ம‌ட்டுமே இர‌சியாவோ, அமெரிக்காவோ, அல்ல‌து ரிலைய‌ண்சோ, டாட்டாக்க‌ளோ கொடுப்பார்க‌ள் மீத‌முள்ள‌ 70ஆயிர‌ம் கோடி ரூபாய்க‌ளும் ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் இருந்தே எடுக்கப்படும்.  அதாவ‌து இர‌சியாவும், ம‌ற்ற‌ நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் கூறுவ‌து என்ன‌வென்றால் அணு உலை க‌ட்டுவ‌த‌ன் மூல‌ம் உருவாகும் இலாப‌ம் முழு‌க்க‌ அவ‌ர்க‌ளுக்கு, அத‌னால் விப‌த்து ஏற்ப‌ட்டு யாரேனும் பாதிக்க‌ப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.

இலாப‌ம் முத‌லாளிக்கு, பாதிப்பும், ந‌ட்டமும்  ம‌க்க‌ளுக்கு என்று முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை வ‌டிவ‌மைத்துள்ளது, இந்திய‌ அரசு.

இந்த‌ ம‌க்க‌ள் விரோத‌ ச‌ட்ட‌த்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ன‌நாய‌க‌ உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவோம்.

.......
ந‌ன்றி: ஞானி (இந்தியாவில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ அணு உலை விப‌த்துக‌ள் தொட‌ர்பான‌ ப‌குதி ஞானியின் "ஏன் இந்த உலை வெறி" என்ற க‌ட்டுரையிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அக்கட்டுரைக்கான‌ இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்).

த‌ர‌வுக‌ள்:

Asif Meeran AJ

unread,
Sep 10, 2012, 8:08:55 AM9/10/12
to panb...@googlegroups.com
கூடன்குளம் தொடர்பாக ஏசியாநெட் வானொலியில் இன்று நேயர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இத்தகு போராட்டங்கள் நடப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு அணு உலை மிக அவசியமென்றும், அப்துல் கலாமே சொல்லி விட்டதால் பாதுகாப்பு பற்றி பிரச்னை இல்லையென்றும், தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாமல் போக அணு உலை அவசியமென்றும், பணம் வாங்கிக் கொண்டு மக்களைப் போராட வைக்கிறார்கள் என்றும் அவரவர்கள் பேசிக் கொண்டிருக்க நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு நான் பேசினேன்

தமிழக அரசியல் கட்சிகள் இம்மக்களுக்கு ஆதரவில்லை என்பதையும், அணு உலை செயல்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு முழுமையாக மின்சாரம் கிடைத்து தமிழக் மின்வெட்டு தீர்வது கடினமென்பதையும், பணம் கொடுத்து வரவ்ழைக்கப்படுவதாகச் சொல்வதற்கான ஆதாரத்தை எவரும் இதுவரை சொல்லாததையும், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் அணு உலைக்கு ஆதரவளிப்பதையும் சொன்னேன்

இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அந்தப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே என்று ஒருவர் குறை சொன்னார். அதற்கு பதிலளிக்கும்போது தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால்தான் மீனவர்கள் போராடுகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மீனவனாகப் பிறந்து விட்டால் ராமேஸ்வரத்திலும் சரி, கூடன் குளத்திலும் சரி அவன் உயிருக்கும் வாழ்வாதரத்திற்கும் உத்தரவாதமில்லை என்றேன்

அணு உலை சிக்கலானதா இல்லையா என்ற கேள்விகளுக்குள் நுழைய நான் முற்பட மாட்டேன்.ஆனால், அவர்களின் ஆதங்கத்தை செவி கொடுத்து கேட்க அரசுகள் தவறி விட்டன. 15000 கோடி முடக்கப்பட்ட நிலையில் இத்திட்டத்தை கைவிடுவது அரசுக்கு நட்டமென்பவர்கள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் நிலக்கரி ஊழலிலுமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பைப்பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமென்றேன்

இது ஜனநாயக நாடு என்பதால் நிச்சயம் இந்த அணு உலையை மக்கள் எதிர்ப்பையும் மீறி அரசு செயல்படுத்தவே செய்யும். அணு உலை இயங்கக் கூடும். ஆனாலும், தங்கள் வாழ்வுரிமைக்காக அரசு அதிகார வர்க்கத்தை எதிர்த்துத் துணிச்சலாக நிற்கும் அந்த மக்களைப் பாராட்டுகிறேன் அந்தப் போராட்டத்தை தங்களது சுயநலனுக்காக எதிர்ப்பவர்கள் பட்டியலில் நான் இருக்கவும் மாட்டேன். I salute the people of koodankulam for their courage என்று முடித்தேன்

மலையாளம், தமிழ் ஆங்கிலம் என்று கலந்து பேசினேன். நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியை வழங்கிஅய் நண்பர் பிஜுவும் நிலைய இயக்குனர் ரமேஷ் பய்யனூரும் மிகச் சிறப்பாக போராட்டம் குறித்துப் பேசியதாகச் சொன்னார்கள். ஏதோ.. என் மக்களுக்காக என்னால் முடிந்தது

Omprakash

unread,
Sep 10, 2012, 8:12:47 AM9/10/12
to panb...@googlegroups.com
உண்மையில் மிக சிறப்பாகத்தான் பேசி இருக்கிங்க...

2012/9/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
சாத்திர மின்றேற் சாதியில்லை,
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்

Arumbanavan A

unread,
Sep 10, 2012, 8:19:51 AM9/10/12
to panb...@googlegroups.com
அண்ணாச்சி இத நான் தான் எழுதி குடுத்தேன்னு யாருகிட்டயும் சொல்லாம இருந்தீங்க பாருங்க அது தான் இங்க சூப்பர். 
 
 
எனக்கு இந்த பப்ளிசிட்டி பிடிக்காது..



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

தமிழ்ப் பயணி

unread,
Sep 10, 2012, 8:26:32 AM9/10/12
to panb...@googlegroups.com
நல்லா ​கோர்​வையாக, சிறப்பாக ​பேசியுள்ளீர்கள்.

2012/9/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>
கூடன்குளம் தொடர்பாக ஏசியாநெட் வானொலியில் இன்று நேயர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Asokan Sivavadivelu

unread,
Sep 10, 2012, 8:37:31 AM9/10/12
to panb...@googlegroups.com


மிகவும் அருமையாகப் பேசியுள்ளீர்கள். இது ஜன நாயக நாடு இல்லை என்பதால் ஜனங்களின் குரல் கேட்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசர்கள் இதை நிறைவேற்றியே தீருவார்கள் என்று பேசியிருந்தால் இன்ணும் சிறப்பாக இருந்திருக்கும். நமது விவாதங்களை சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
இருப்பினும் தாங்கள் பேசியதற்கு பாராட்டுகளும் நன்ரியும்.

அச்சு !!!

unread,
Sep 10, 2012, 8:39:25 AM9/10/12
to panb...@googlegroups.com
2012/9/10 Asokan Sivavadivelu <sivaa...@gmail.com>

மிகவும் அருமையாகப் பேசியுள்ளீர்கள். இது ஜன நாயக நாடு இல்லை என்பதால் ஜனங்களின் குரல் கேட்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசர்கள் இதை நிறைவேற்றியே தீருவார்கள் என்று பேசியிருந்தால் இன்ணும் சிறப்பாக இருந்திருக்கும். நமது விவாதங்களை சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
இருப்பினும் தாங்கள் பேசியதற்கு பாராட்டுகளும் நன்ரியும்.


இந்த மடலில், உலக ஆட்சியை விட்டுவிட்டீர்கள்.




--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


Asokan Sivavadivelu

unread,
Sep 10, 2012, 8:44:07 AM9/10/12
to panb...@googlegroups.com


உலக ஆட்சியில் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசாங்க ரவுடிகளின்(போலிஸ்) அராஜகமும் இருக்காது.

senshe senshe

unread,
Sep 10, 2012, 8:45:59 AM9/10/12
to panb...@googlegroups.com
த.மீ. தான் பேரை மாத்திக்கிட்டு வந்து கருத்து போடுறாரோ?

2012/9/10 Asokan Sivavadivelu <sivaa...@gmail.com>

அச்சு !!!

unread,
Sep 10, 2012, 8:47:38 AM9/10/12
to panb...@googlegroups.com
2012/9/10 Asokan Sivavadivelu <sivaa...@gmail.com>

உலக ஆட்சியில் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசாங்க ரவுடிகளின்(போலிஸ்) அராஜகமும் இருக்காது.

ஐ லைக் திஸ் ஸ்பிரிட் அசோகன் ஐயா.  உலகு ஆட்சியின் கொள்கைகளை அனைத்து மடல்களிலும் தேவைக்கேற்ப பகிர்ந்து நம் கொள்கைகளை மக்களுக்கு விரைவில் சென்றடைய வழிவகுப்போம் தலைவரே. அதை நாம் முதலில் பண்புடனிலிருந்து ஆரம்பிப்போம்.


ப்ரியன்

unread,
Sep 10, 2012, 8:58:03 AM9/10/12
to panb...@googlegroups.com

Kudankulam: 1 fisherman dies in police firing 


:(
It is loading more messages.
0 new messages