Re: An article in TOI

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 27, 2016, 10:22:46 AM1/27/16
to வல்லமை, mint...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Karanthai Jayakumar, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, Sethupathi Sethukapilan, Dr. Y. Manikandan, Saravanan Palanisamy
கர்நாட்டிக் ட்ரினிட்டி என்று சென்னை ஸங்கீத ஸபாக்கள் கொண்டாடும் தென்னிந்திய இசைக்கு மூலவராக விளங்கும் தமிழிசை மூவர்கள் தண்செய் வண்டல் நிலத்தின் சீகாழியில் வாழ்ந்த நட்டுவனார்கள். காழ் என்றால் கறுப்பு. காழி கறுப்பான வண்டல் களிமண்ணால் தமிழிசைக்கு ஆதிகுரு ஞானசம்பந்தரும், பின்னர் தமிழிசை மூவரும் வாழ்ந்த பதி. அதனருகே தில்லைவிடங்கன். தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளையின் வழியினர் தில்லைவிடங்கன் வ. மெய்கண்டார் த. நா. சேனாபதி கட்டுரையை வெளியிட்டிராவிட்டால் தமிழ்த்தாத்தா பற்றிய அரிய கவிதையை - பாரத திருநாட்டுக்கும், வங்காள தேசத்திற்கும் நாட்டுப்பண் அளித்த மேதையின் போற்றியை - இழந்திருப்போம். 

தட்டெழுதியமைக்கு நன்றி பல.  துழாவிகளில் மக்களுக்குக் கிட்டுமன்றோ? இன்று மதியம் நண்பர் கௌதம் (டெக் ஃபெலோ) பார்ப்பேன் ஒரு மீட்டிங்கில். அவர் வங்காளி. நேரங்கிடைக்கும்போது அவரிடம் படித்துக்காட்டி வங்காளி ஸ்க்ரிப்ப்டில் தர முயல்வேன். பிறகு தேவநாகரி, ஐஎஸ்ஓ 15919 ஆங்கில இலிபிகளில் செய்துவிடலாம். இணையத்தில் இருக்கட்டும், நமக்கு அப்புறமும் இளைஞர்கள் வளர்த்தெடுப்பார்கள். யாராகிலும் பெங்காலி இலிபியில் தருகின்றனரா பார்ப்போம். அவருக்கு நனிநன்றி இப்பொழுதே.

தில்லைவிடங்கன் மெய்கண்டாரின் இளந்தமிழன் இதழில் பாரதிக்கு ஒரே சரமகவி மரபுக்கவிதையில் பாடின சேலம் அர்த்தநாரீச வருமரின் பாடல்
இருக்கிறது. இளந்தமிழன் கட்டுரையை வலைஞர்கள் வெளியிட வேண்டுகோள். மருமம்/மம்மம் இழையில் வர்மா என்னும் த்ராவிடச் சொல்லின் தாதுவை ஆராய்ந்துள்ளேன்:

நா. கணேசன்


On Tuesday, January 26, 2016 at 11:02:07 AM UTC-8, தேமொழி wrote:
 
These mobile phone photos are obviously from Thi. Va. MeykaNDaar's Ilantamizhan reprinted article.



வங்காளி மூலம்

ஆதிஜூகேர்  ஆந்தாரே  தாலபத்ரே  ச்சிலோ 
த்ராவிட  தேசேர்  புராதன  கீர்த்தி, 
ஸேஇ  மஹத்நிதி,  ஹே  தேசிகோத்தம 
தோமார்  த்வாரா நா  கி  பாஹிர்ஹயில்? 
ஸே   காலேர்  அகஸ்த்யேர்  மதஏஸே  தோமார்மாகே
ஸிம்ஹாஸனே  ரேகே  திலே  நாகிதுமிஸ  ஸம்மானே?

ஆர்  பாஞ்ச  மஹா  காவ்யேர்  மாஜ்ஜே 
சிந்தாமணி,  நூபுரகாதா,  மணிமேகலா  இத்யாதி 
ஸம்சோதன  கரே  தாஹார்  பத   ஜூகலே 
ஸமர்ப்பணகரிலே  நா  கிதுமி? 
ஸங்கே  ஸங்கே  ஸங்ககால  ஸாஹித்யகே 
ஜ்யோத்ஸ்னாய்  ஃபுடித  நித்ய  மல்லிகார்மத 
சோபித  கரிலே  நாகிதுமி?  தேமாகரிப்ரணாம்


தமிழாக்கம்
"ஆதி (முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில் இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி - அந்தப் பெருநிதி, பேராசானே உன்னால் அன்றோ வெளிப்பட்டது? அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து  உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்? அம்மட்டோ ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து) அந்த அன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவன் நீ அன்றோ? அவற்றுடன் சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த முல்லை என ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்கு கிறேன்." 
த.நா.சேனாபதி 
(மஞ்சரி முன்னாள் ஆசிரியர்) 


சுப்பிரமணிய பாரதியார் ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இரு மகாகவிகளும் ஐயரவர்கள் அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியது குறிப்பிடத் தக்கது.
 
Reply all
Reply to author
Forward
0 new messages