முருகா..இந்த நாட்டையும், மக்களையும் நீதான்யா திருத்தணும்

13 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jun 29, 2016, 10:41:12 PM6/29/16
to Neander Selvan
இன்று ஊர் திரும்பிய மனைவி, குழந்தைகளை அழைக்க சிகாகோ விமான நிலையம் சென்றேன்.

அபுதாபியில் இருந்து சிகாகோ வரும் அந்த எதிஹாட் பிளட் 14 மணிநேரம். அபுதாபி நேரம் காலை 3:55 கிளம்பி, 14 மணி நேரத்துக்கு பின் சிகாகோ நேரம் 10 மணிக்கு வரும் பிளைட் அது. பெரும்பாலும் இந்தியர்கள் தான் வருவார்கள். அதிலும் 700 பேர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட பிளைட் அது. அதனால் பிளைட் வந்தவுடன் பேக்கேஜ் கிளைம் ஏரியா முழுக்க ரணகளமாக இருக்கும். அந்த அல்லோலகல்லோலத்துக்கு காரணம் நம் மக்களின் மனோபாவம் தான். டிராவல் லைட் என்ற கான்செப்ட் நமக்கு சுத்தமாக தெரியாது. தலைக்கு இரு பெட்டிகள், பெட்டி ஒன்றுக்கு 23 கிலோ, ஹேண்ட் லக்கேஜ் 7 கிலோ. ஆக மொத்தம் 63 கிலோ ஒரு ஆளுக்கு கொண்டுவரலாம். குடும்பமாக நாலு பேராக வருபவர்கள் ஒரு கால் டன் எடையுள்ள பெட்டிகளை இழுத்துக்கொண்டு வருவதை கண்டால் பாவமாக இருக்கும். அதிலும் பேக்கேஜ் கிளெய்ம் ஏரியாவில் பெண்கள் தனியாக வந்தால் அவர்களால் அந்த பெட்டிகளை எடுப்பதும் ஹாண்டில் செய்வதும் முடியாத காரியம்.

அப்படி அந்த பெட்டியில் என்ன வருகிறது என பார்த்தால் உப்பு பெறாத சமாசாரம்.. ஊறுகாய் , மிளகாய், வத்தல், சுங்கிடி புடவை, சாம்பார், பொடி,, பையன் சின்ன வயசில் சாப்பிட்ட சீடை...இத்தியாதிதான்...எதுவுமே இங்கே கிடைக்காத பொருள் அல்ல. இதுக்கு ஏன் இப்படி மெனகெடுகிறார்கள் என்பது தெரிவதில்லை. இந்தியர்க்ள் கொன்டுவரும் பெட்டிகளை எடைபோட்டால் மிக சரியாக 23 கிலோவுக்கு ஒரே ஒரு கிராம் கூட குறைவாக இருக்காது. அப்படி ஒரு ஐம்பது கிராம் குறைவாக இருந்தால் அதில் ஒரு ஐம்பது கிராம் மிக்சர் பொட்டலத்தை வைத்து திணித்து கணக்கை நேராக்கிவிடுவார்கள்.

அப்புறம் நம் மக்கள் கடைபிடிக்கும் இன்னொர் டெக்னிக் வீல் சேர் டெக்னிக். அதாவது மாமனார், மாமியார், அப்பா, அப்பா ஆகியோர் பிரசவம், பேபி சிட்டிங் ஆகியவற்றுக்கு வருவார்கள். முதல் தரம் தனியாக அதுவும் ஆங்கிலம் தெரியாத பெரியவர்கள் வந்தால் ஏர்போர்ட்டில் டெர்மினல் மாறுவது, விமானத்தை பிடிப்பது எல்லாம் அவர்களுக்கு தெரியாது என்பதால் உடல் ஊனமுற்றோர் என சொல்லி வீல் சேர் வாங்கிவிடுவார்கள். விமானத்தில் நன்றாக நடந்துகொண்டிருந்த பல பெரியவர்கள் விமானம் லேண்ட் ஆனதும் காத்திருக்கும் வீல் சேரில் ஜம் என ஏறி அமர்ந்து கொள்ள, வீல் சேரை தள்ள ஒரு பணியாளர், லக்கெஜ் கார்ட்டை தள்ள ஒரு பணியாளர் என அவர்களை ஒரு படையே சூழ்ந்து அடுத்த டெர்மினலுக்கு அழைத்து செல்லும்.

இன்று வந்த விமானத்தில் இந்த டெக்னிக் மிக அதீதமாக பயன்பட்டது போல தெரிந்தது..விமானநிலையத்தில் இருக்கும் பணியாளர் எண்ணிக்கை குறைவு. அதனால் பலரை டீலில் விட்டுவிட்டார்கள். அவர்கள் பெட்டியை எடுக்க முடியாமல் அருகே இருந்தவர்களிடம் கேட்டு அவர்கள் எடுத்துகொடுத்து அதன்பின் அடுத்த டெர்மினலுக்கு அழைத்துபோக ஆளின்றி நின்றுகொன்டிருந்தார்கள். அவர்களில் சிலருக்கு இணைப்புவிமானத்துக்கு தாமதம் ஆவதால் ஒரே பதற்றம்.

குறிப்பாக ஒரு வயதான பெண்மணி கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தார். அவருக்கு இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் கனெக்சன் பிளைட். சின்சினாட்டி போக டெர்மினல் 5ல் இருந்து டெர்மினல் 1 போகவேண்டும். அவர் ஒரு வீல் சேரில் இருந்தார், வீல் சேரை தள்ள விமான நிலைய பணியாளர் இருந்தார். ஆனால் பெட்டிகளை கொன்டுபோக ஆள் இல்லை. வாக்கிடாக்கியில் பேசி அழைத்தும் ஆள் இல்லை என தெரிந்தது. நேரம் ஆக, ஆக அவருக்கு பதற்றம். அழுகை. ஆங்கிலம் தெரியாது. பணியாளர் இவரை போல எத்தனை பேரை பார்த்திருப்பார் என்பதால் கூலாக "ஆள் இல்லை" என சொல்லிகொண்டிருந்தார்.

மனது கேட்காமல் "சரி நான் பார்த்துகொள்கிறேன். டெர்மினலில் விட்டுவிடுகிறேன்" என சொன்னதும் அந்த பெண்மணி ஜம் என வீல் சேரில் இருந்து குதித்து இறங்கினார். பெட்டிகளை நான் தள்ளிகொன்டு வந்தேன். அவர் என் பின்னால் நடந்துவந்தார். உடல் ஊனமுற்றோர் அப்படி எந்த சிக்கலும் இன்று கைவீசி நடப்பதை கண்டு அந்த சிகாகோ நிலைய பணியாளர் முகத்தில் அப்படி ஒரு  எகத்தாள சிரிப்பு....அவரை அதன்பின் ஏர்போர்ட் ரயில் ஏற்றி டெர்மினல் 1 கொண்டுபோய் சின்சினாட்டி செல்லும் விமானத்தில் செக் இன் செய்து, பெட்டிகளை எடைபோட்டு, போர்டிங் பாஸ் வாங்கிகொடுத்து விமானம் ஏற்றினேன்.  அவருக்கு போர்டிங் பாஸ் வாங்குவது எப்படி, பெட்டிகளுக்கு டாக் போடுவது எப்படி, ஆடோமேடிக் இயந்திரத்தில் டேட்டா இன்புட் செய்வது எப்படி எதுவுமே தெரிவதில்லை. நான் இல்லையெனில் விமான பணியாளர்கள் தான் இதை எல்லாம் செய்திருக்கவேண்டும். ஒரு பாஸஞ்சர் டெர்ம்னினல் மாறி விமானம் ஏற இப்படி சுத்தமாக ஒரு மணிநேரம் ஆகிறது. அதுவரை அவரை வீல் சேரில் தள்ள ஒருவர், பெட்டிகளை தள்ள இன்னொருவர்.

பெட்டிகளை எடைபோடுகையில் கவனித்தேன்....இரு பெட்டிகளும் துளிகூட பிசகாமல் 50 பவுண்டு எடை (23 கிலோ) ஒரு கிராம் கூட, குறைய இல்லை. அதுபோக கையில் கேரி ஆன். 

அதன்பின் பலமுறை நன்றிசொல்லிவிட்டு அவர் விடைபெற்றார்..அதுவரை பிள்ளைகளும், அனிதாவும் டெர்மினலில் காத்திருந்தார்கள். ஒன்றரை மணிநேரம் இதனாலேயே தாமதம் ஆகிவிட்டது. 

உடல் ஊனமுற்றோர்ருக்கு உதவ இருக்கும் ஒரு முரையை இப்படி வடாம், மிளகாய் வத்தலுக்கு அப்யூஸ் செய்தால் அதன்பின் நிஜமாகவே நடக்க முடியாத ஊனமுற்றோர் தான் பாதிப்புக்கு உள்லாவார்கள். அந்த மிளகாய் வத்தல், சாம்பார் பொடி எல்லாம் தான் இங்கேயே கிடைக்குதே? இதுக்கு ஏன் இத்தனை அக்க்ப்போரோ? முடியல....முருகா..இந்த நாட்டையும், மக்களையும் நீதான்யா திருத்தணும்










--

Yogesh J

unread,
Jun 30, 2016, 3:08:02 AM6/30/16
to panb...@googlegroups.com
அருமை செல்வன் சார்.
இரண்டுவாரங்களுக்குமுன்பு மதுரையிலிருந்து மும்பைக்கு விமானத்தில்
செல்லும்போது நானும் இதை கவனித்தேன்.
ஏரும்போது நன்றாக நடந்துவந்தவர்கள் இறங்கும்போது வீல்சேர் தேவையென
ஏர்ஹோஸ்டரிடம் கோரிக்கை வைத்தார்கள்.
அதைவீட கொடுமை நன்றாக நடக்க முடிகிற என்னை மும்பையில் இறங்கியபோது விமான
பணிப்பெண் வீல்சேரில்தான் போகவேண்டுமென வற்புறுத்திவிட்டார்.
கைபிடித்து கூட்டிப்போனால் போதுமென சொல்லியும் கேட்கவில்லை.
இதில் கொடுமை என்னன்னா நல்லா இருந்துகிட்டு பொய்யா நடிச்சு வீல்சேர்
கேக்குரவங்க கிட்ட அந்த பெண் நல்லா நடந்துகிட்டா ஆனா உன்மையாவே
பாதிக்கப்பட்ட என்ன இறங்கும்போது பார்வையில்லாதவங்க தனியா
வரக்கூடாதுன்னு இல்லாத சட்டத்த இருக்கிறதா சொல்லி திட்டி அனுப்புராங்க.
> <http://holyox.blogspot.com>
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
If God is love, and love is blind, and I were blind, would I be God?

with love and regards
yogesh J
postal assistant
india post
tenkasi head office
phone: 7811071227
skype: romio.yogesh
facebook: yogesh yogi

Emotional investments are subject to human desires. Read the person
carefully before investing.

Srimoorthy S

unread,
Jul 2, 2016, 11:57:15 PM7/2/16
to பண்புடன்

இதெல்லாம் எங்க கலாச்சாரம். நாங்க இந்த தடவை திரும்பும்போது எடை வேணும்னு மூனு கிலோ கல்லுப்பு வாங்கிட்டு வந்தோம்.

Reply all
Reply to author
Forward
0 new messages