அதிபரின் கண்ணீர்

0 views
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 24, 2018, 12:26:29 AM2/24/18
to செல்வன்
இரண்டாம் உலகபோரில் சி சிமா எனும் ஜப்பானிய தீவுக்கு மேல் பறந்த அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள் ஜப்பானியர்கள். அதில் இருந்த ஒன்பது அமெரிக்க விமானிகளை பிடித்தார்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடி விமானத்தில் இருந்த லைப்ஃராட் எனும் சின்ன படகை கட்டிக்கொண்டு கடலில் குதித்து படகு வலித்தார். அவரை துரத்திக்கொண்டு ஜப்பானிய படகுகள் போக, அந்த லைட் வெளிச்சத்தை பார்த்து அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடைசி வினாடியில் ஜப்பானிய படகுகளை சுட்டு வீழ்த்தி அந்த வீரரை காப்பாற்றியது. வாந்தி, மயக்கம், தலைசுற்றல், அதிர்ச்சி என சாகும் நிலையில் இருந்த அந்த படைவீரர் நீர்மூழ்கி கப்பலை கண்டபோது கூட அது ஏதோ உருவெளி தோற்றம், தான் இறந்துவிட்டேன் என தான் நம்பிக்கொண்டிருந்தார். அவரை கப்பலில் ஏற்றி கொண்டுபோய் உயிர்பிழைக்கவைத்தார்கள்.

பிடிபட்ட எட்டுவீரர்கள் என்ன ஆனார்கள்?

அவர்களை கையை கட்டி வாளால் தலையை ஒரே துண்டாக வெட்டி அதன்பின் அவர்கள் ஈரல், தொடைக்கறியை எல்லாம் எடுத்து விதவிதமான சுவையான பதார்த்தங்களாக சமைத்து உண்டார்கள். ஈரலில் சோய் சாசை ஊற்றி உண்பது வயிற்றுவலிக்கு சிறந்த மருந்து என்பது ஜப்பானியர்கள் நம்பிக்கை.

போர் முடிந்து அவர்களை கைது செய்து வீரர்கள் எங்கே என கேட்டபோதுதான் இந்த நரமாமிச சம்பவம் தெரியவந்தது.  அவர்கள் மேல் என்ன பிரிவில் வழக்கு போடுவது என புரியாமல் அமெரிக்கர்கள் குழம்பினார்கள். ஏனெனில் சர்வதேச போர் சட்டத்தின்படி மனித இறைச்சி உண்பதை தண்டிக்கும் பிரிவே கிடையாது. அதன்பின் "இறந்தவர்களின் சடலத்தை அவமதிப்பது" என ஒரு பிரிவு இருப்பது தெரிந்து அதில் வழக்கு போட்டு ஐவருக்கு தண்டனை வாங்கிகொடுத்தார்கள். 30 பேர் தப்பிவிட்டார்கள்.

உயிர்தப்பிய வீரர் என்ன ஆனார் என கேட்கிறீர்களா?

அவர் அதன்பின் அரசியலில் நின்று செனட்டர் ஆகி, துணை ஜனாதிபதி ஆகி, ஜனாதிபதியும் ஆகிவிட்டார். ஆம் அவர்தான் ஜார்ஜ் புஷ் சீனியர்.

ஐம்பது ஆண்டுகள் கழித்து ஜனாதிபதி ஆகி ஜப்பானுக்கு அரசுமுறை சுற்றுபயணமாக வருகையில் மீண்டும் அந்த தீவுக்கு சென்றார். கடற்கரையில் நிற்கையில் அவரது முகத்தில் கண்ணீர் துளிகள்..."அந்த எட்டுபேரையும் நினைக்காதா நாளே இல்லை" என்றார். ஒரு படகில் ஏறி தனியாக மீண்டும் அதே கடலில் படகு ஓட்டினார். அதன்பின் தாயகம் திரும்பிவிட்டார்.






--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages