கோபே பீஃப்

4 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 11, 2018, 11:57:31 AM4/11/18
to செல்வன்
கோபே பீஃப் எனும் ஜப்பானிய இறைச்சி உண்டு.

வோத்கா என்றால் ரஷ்யா, பாஸ்மதி என்றால் இந்தியா என்பதுபோல கோபே என்றால் ஜப்பான் மட்டும்தான். வேறு நாடுகளில் தயாரிக்க முடியாது.

அப்படி என்ன சிறப்பு இந்த இறைச்சிக்கு?

தேர்ந்தெடுக்கபட்ட ஜப்பானிய கரும்பசுக்கள், காளைகள் மட்டுமே கோபேக்கு தகுதி பெறும். இதன் செலக்சன் ப்ராசஸ் மிக கடினம். சுமாராக 10,000 பசுக்கள் தான் தற்போது கோபே தகுதியுடன் உள்ளன. 

அதன்பின் அந்த மாட்டுக்கு அடுத்த 3 ஆண்டுகள் ராஜ உபசாரம் தான். சாப்பிட ஆப்பிள், ஆலிவ் பழங்கள், தொழுவத்தில் பீத்தோவனின் இசையை ஒலிக்கவிடுவார்கள். இது அதன் தசையை மிருதுவாக்குமாம். அதற்கு ஜப்பானிய ஸேக் எனும் ஒயினை தேய்த்து தினமும் மஸாஜ் செய்வார்கள்.

இத்தனைக்கும் பின் மூன்றாவது ஆண்டில் மாட்டை வெட்டியவுடன் அதன் தசை மிக கவனமாக ஆராயப்படும். தசையும், கொழுப்பும் சரியான விதத்தில் மார்பிளிங் ஆகாவிட்டால் இறைச்சி நிராகரிக்கபடும்.

இப்படி தேர்ந்தெடுக்கும் கோபே இறைச்சி பல வருடங்களாக ஜப்பானின் மிக உயர்தர உணவகங்களில் மட்டும் விற்பனை ஆகிவந்தது. இப்போதுதான் கொஞ்சமாக ஏற்றுமதி செய்கிறார்கள். மொத்த அமெரிக்காவிலும் 12 உணவகங்கள் மட்டுமே இதை விற்பனை செய்கின்றன.

இதை எப்படி சமைப்பது?

இது மிக மிருதுவான இறைச்சி என்பதால் அதிகமாக இதை சமைக்கவே கூடாது. பலவித சமையல் முறைகள் உள்ளன. ஆனால் அனைத்திலும் பெரும்பாலும் இறைச்சியை அதிகமாக மசாலா, சூடு இல்லாமல் இயற்கையாக உண்ணக்கொடுப்பார்கள்.

நான் பார்த்த விடியோவில் சின்ன ஸ்லைஸாக வெட்டி வாணலியில் இருபுறமும் ஒரே நிமிடம் வைத்து எடுத்துகொடுத்தார்கள். இது ரேர் வகை இறைச்சி. அதாவது கிட்டத்தட்ட பச்சையாக உண்ணும் வகை.

வாயில் வைத்தால் வெண்ணெய் பதத்தில் தானே உருகிவிடும் என கேள்வி :-)

விலை எல்லாம் கேட்கவேண்டாம். கிட்டத்த்ட்டா ஐம்பதாயிரம் ரூபாய் கிலோவுக்கு.

நமக்கு இல்ல, வேண்டாம்..முடியாது, சீ..சீ இந்த பழம் புளிக்கும் :-)










--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages