தர்பூசணிப் பொரியல்

16 views
Skip to first unread message

PazamaiPesi

unread,
Jun 27, 2015, 11:07:39 PM6/27/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
நறுக்கிய தர்பூசணி ஓடு

குடைமிளகாய்

வெங்காயம், பூண்டு, இஞ்சி

தக்காளி

பாலாடைக்களிம்பு (cheese)

தயிர்

எடுத்துக் கொண்ட நேரம்: 25 மணித் துளிகள்


செய்முறை:


தர்பூசணி வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.


குடமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான் பல்லாரி வெங்காயம் நறுக்கினேன். நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி என்பதை விட எங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லையென்பதே உண்மை.


பூண்டு, இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லாமே தேவையான அளவுதான். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.


சீசு என்ப்படுகிற சுண்டக்காச்சி வடித்தெடுத்த கொழுப்பு கொஞ்சம். தயிர் ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


தக்காளிச்சீவல், ஒரு பழம் நான் எடுத்துக் கொண்டது.


கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றுக. பின்னர் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்க. சடச்சடவென்றால் காய்ந்து விட்டதெனப் பொருள். என்னைப் போன்ற மங்குனிப்பாண்டியர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்.


பிற்பாடு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும்.


தற்போது சீசு/கொழுப்புச் சீவல் அல்லது முட்டையை உடைத்து இடவும். பின்னர் அந்த கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டுக.


கிண்டியபின், கடையில் வாங்கின தூள் எல்லாம் தூ எனத் தூக்கி வீசிவிடவும். வீட்டில் செய்தது என்றால் மட்டும் பாவிக்கலாம். தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். மிளகாய்த் தூள் இல்லாவிடில் குறுமிளகுத்தூளாவது சிறிது இடுக. பின்னர், கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும்.


தற்போது தர்பூசணிப் பொரியல் தயார்.  libido boost, இன்பயியல்பூக்கி எனப்படுகிற கனிமங்கள் பூசணியோட்டில் மிகுந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Prostate, முன்னிற்சுரப்பி செய்ற்படுவதற்கான கனிமங்கள் மிகுந்திருப்பதாகவும், வைட்டமின் ஏ, சி என்பன இருப்பதாலும், கூடச் சேர்த்திருக்கிற இதர உள்ளீடான வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றனவற்றிலும் இவை கணிசமான அளவு இருப்பதாலும் இப்பொரியலானது தனித்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Reference: http://www.healthline.com/…/food-n…/watermelon-rind-benefits


இன்னும் நிறைய இருக்கு. உருசியாவும் இருக்கு. வாங்க, உண்ணலாம்!!


-பழமைபேசி.










துரை.ந.உ

unread,
Jun 28, 2015, 3:30:38 AM6/28/15
to muththamiz digest subscribers, மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
இவரு...அவருக்கெதிரா களமிறங்குனாப்ல இருக்குதே ....

--
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

பழமைபேசி

unread,
Jun 28, 2015, 3:39:02 AM6/28/15
to vall...@googlegroups.com, tamizh...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com, mutht...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil_...@googlegroups.com, pira...@googlegroups.com
இஃகிஃகி... நாம வீட்ல ஆள் இல்லாதப்பதானுங்க ஊர்சு.... அவர் கூடப் போட்டி போடவே இயலாது!!

PazamaiPesi

unread,
Jun 28, 2015, 9:03:53 AM6/28/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai


தர்பூசணிப் பொரியல் தின்னு நல்ல தூக்கம்; செரிமானம். ஆமா, காலைக்கடன்கள் எல்லாம் நல்லபடியா ஆச்சு பாருங்க. இஃகிஃகி.

நானே கடைக்குப் போயி, நானே $4.99 கொடுத்து, நானே வாங்கி வந்து, நானே வெட்டி, நானே பதனப்படுத்தி வெச்சுதுல இருந்த பழச்சோறுல ஒரு கால்வாசி தின்னுட்டேன். செம உருசியா இருந்திச்சி. அந்தக் கால்வாசி ஓட்டுலதான் நேற்றுப் பொரியல் ஆச்சுது.

இனி மிச்சம் இருக்கிற ஓட்டுல, தர்பூசணிக்குழம்பு, தர்பூசணிச்சட்னி, தர்பூசணி அல்வா, தர்பூசணி சூப், தர்பூசணிப்பச்சடி, தர்பூசணித்தொகையல், தர்பூசணி ஊறுகாய்னு நாலும் செய்யலாம். ஆனா, படத்துல இருக்காமாரி இன்னைக்கு சூப் செய்யலாம்னு இருக்கேன்.

எல்லாம் இருக்கீ... செம்மங்கி, அதாங்க கேரட்டு... அது மட்டும் இல்ல. கடைக்கிப் போயி வாங்கிட்டு வரணும். செரி, வாங்கிட்டு வந்து சூப் போட்டுக் குடிச்சிட்டு சொல்றேன். செரியா??

தர்பூசுத் திளைப்பில்,
பழமைபேசி.


PazamaiPesi

unread,
Jun 28, 2015, 11:38:43 AM6/28/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
தர்பூசணி சூப்










மக்கழே,

தர்பூசணி சூப் குடித்துப் பயன் பெறுவது எப்படி? இப்பிடீ.... இஃகிஃகி!!

செய்முறை:

முதலில் அடுப்பில் கொள்கலனை வைக்கவும். அடுப்பில் வைக்காமல் தலையிலா வைப்பார்கள் எனக் கேட்பவர்கள் சற்று ஒதுங்கிப் போகவும்.

சூடானதும் இரு தேக்கரண்டி எண்ணெய், அதற்காக கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றை ஊற்றாமல் சமையலுக்கான எண்ணெய் இரு தேக்கரண்டி ஊற்றவும்.

எண்ணெய் மிதமாய்ச் சூடானது ஓமம் இட வேண்டும். வீட்டில் ஓமம் இருக்கிறதா? எங்கிருக்கிறது என்பன தெரியவில்லை. இராமாயி வீட்டில் இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் அவளது தங்கை இலட்சுமாயி கையைப் பிடித்திழுப்பது நம் பண்பாடு. எனவே எதிரில் இருந்த சீரகத்தில் ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டேன். அவள் சடசடவெனப் பொரிந்தாள். கோபம் போலிருக்கிறது. உடனே ஒரு பெருங்கிண்ணத்தில் நிரம்பியிருந்த நீரைக் கொள்கலனுக்குள் ஊற்றி கொதிக்குமளவுக்கு விட்டேன்.

முதலில் செம்பங்கி(கேரட்) இடுவதாய் நினைத்திருந்தேன். கடைக்குச் சென்று வர சோம்பலேறிவிட்டது. வெளியூரில் இருக்கும் சரசுவை விட உள்ளூரில் இருக்கும் மீனாள் மேல் என்பது பழமொழி. அதைப் போலவே, வீட்டிலிருக்கும் லிமா பீன்சு எனப்படுகிற பெரியவரைக்கும் தயமின், புரதம் போன்ற பண்புகள் இருப்பதால் அதைப் பாவிப்பதென முடிவு செய்து, அதில் ஒரு கைப்பிடி அளவு சுடுநீரில் இடப்பட்டது.

பெரியவரையின் பச்சைவாசம் சுடுநீரிலிருந்து நீங்கிய பின், தயாரக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஓட்டு நறுக்குகள் கொதிநீரில் இடப்பட்டது. பொதுவாக தர்பூசணியோட்டின் பச்சையத்தடிமனை நீக்கிய பின் நீரில் இடுவது வழக்கம். இன்பயியல்பூக்கிக் கனிமங்கள் பெருமளவு அப்பச்சையத்திலிருக்கிறபடியால் நாம் அதை நீக்கவில்லையென்பதறிக. கருக்முருக் இல்லாமல் சுவைக்க விரும்புவோர், தோல் நீக்கிவிடுவது உசிதம்.

நன்றாக வெந்து விட்டதென்பதறிந்த பின், வீட்டில் மசிக்கப்பட்ட கொத்துமல்லித் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள் அல்லது குறுமிளகுத் தூள் இரு சிறு தேக்கரண்டி, தேவையான அளவு உப்பிட்டுக் கிண்டிவிட வேண்டும். தேவையான அளவு சீசு எனப்படுகிற கொழுப்பினை இட்டுக் கலக்கவும்.

நல்ல ஐங்காயமணம் நாசிகளை வந்தடையும் தருணத்தில், அடுப்பை அணைத்து விடுக. இருக்கும் சூட்டில் சிறிது நேரம் இருக்கட்டும். இப்போது, சிட்ருலின் கனிமம் பொதிந்த சூப் தயார். கிண்ணத்தில் வடித்து, மேலாக சில புதினா இலைகளை இட்டு உங்கள் விருந்தினருக்குப் பரிமாறுக. சிட்ருலின் கனிமம் செம்மையான தோல், இரத்தநாள மேம்பாடு, தசைநார்களின் நல்லியல்புத்தன்மை மேம்படுதல் போன்றவற்றுக்கு பெரிதும் உதவி புரியக்கூடியது.

மீண்டும், மற்றுமொரு தர்பூசணிப் படையலுடன் சந்திப்போம்!!

தர்பூசுத் திளைப்பில்,
பழமைபேசி.



PazamaiPesi

unread,
Jun 28, 2015, 5:53:19 PM6/28/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai








                                                                 தர்பூசணி அல்வா



கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நாம் $4.99 கொடுத்து ஒரு தர்பூசணிப்பழம் வாங்கி வந்ததை உலகுக்கு அறிவித்திருந்தோமல்லவா? அதன்பொருட்டு, அப்பழமானது நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே! அதன் அடுத்த கட்டமாக நாம் பார்க்க இருப்பது, ஆண்மை அல்வா, அதாங்க தர்பூசணி அல்வா.

செய்முறை

தர்பூசணிப்பழத்தின் அந்த உருசியான செஞ்சோற்றினை நான் தின்றுவிட்டேன் என்பதையும் உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லத் தேவையில்லையென்றே கருதுகிறேன். ஆமாம். தற்போது, படத்தில் காட்டியபடி அந்த தடிமனான வெளியோட்டின் பச்சைத்தோலைத் தனியாகவும் வெண்சோற்றைத் தனியாகவும் பிரித்தெடுத்துத் தனித்தனியான தட்டங்களில் இடவும்.

பிரித்தெடுத்த பச்சைத்தோலைக் கொண்டு, தர்பூசணிச் சட்டினி செய்யவிருக்கிறோம். இப்போது அந்த வெள்ளைச்சோற்றைக் கொண்டு, தர்பூசணி அல்வா எப்படி செய்வதென்பதைக் காண்போம்.

பிரித்தெடுத்த வெள்ளைச்சோற்றினைச் சிறு சிறு கட்டிகளாக நறுக்கி வைத்துக் கொண்டபின், தேவையான அளவு இஞ்சி,பூண்டு, மிளகாய் ஆகியவற்றை எடுத்து உரலில் இட்டு நன்றாக இடித்து இபூமி களிம்பினை உண்டு செய்க. இபூமி என்றால், இஞ்சி-பூண்டு-மிளகாய்.
மற்றொரு தட்டில் தேவையான அளவு சுக்குத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் உரித்தெடுத்த சக்கையான வெள்ளைச்சக்கரை உடலுக்குக் கேடு என்பதால், வெளுக்கப்படாத கரும்புச்சக்கரை தேவையான அளவு அடுத்து வைத்துக் கொள்க.

இப்போது ஒரு பத்து இணுக்கு அருகம்புல்லைப் பிடுங்கி வந்து கழிவிய பின்னர், அம்மி அல்லது உரலில் இட்டுச் சாறாக்கி வைத்துக் கொள்ளவும். அமெரிக்காவில் அருகம்புல்லுக்கு நேனு எக்கடா போத்தானு? மீரே செப்பண்டீ... பாபு செப்பண்டி பாபு. ஆகவே, சும்மா ஒரு சடங்குக்காக புதினாவை அரைத்து வைத்துக் கொண்டேன்.

ஒரு கொள்கலனை எடுத்து தேவையான அளவு நீரூற்றி கொதிக்க வையுங்கள். கொதியானவுடன் முதலில் தர்பூசணியின் நறுக்கிய வெள்ளைச்சோற்று வில்லைகளை கொதிநீரில் இடுக. ஒரு பதினைந்து மணித்துளிகள் கழிந்தபின்,, இபூமி களிம்பினை கொதியில் விட்டுக் கிண்டுக. இதிலிருந்து பத்து மணித்துளிகள் கழிந்தான பின் சுசீமிஉ தூள்களையும் கொதிநீரில் விட்டு அவ்வப்போது கிண்டிக்கொண்டே இரும். எதையாவது கிண்டிக் கொண்டிருப்பதுதானே நம் வேலை.

கொதிநீரில் மொத்தமும் கரைந்து ஒரு குழம்பு போன்ற தோற்றம் வரும்; சற்றுப் பொறுமையாக இருந்து திடத்தோற்றம் வரும் போது அடுப்பை அணைத்து விடுக. அந்த அருகம்புல்ச்சாற்றினையும் உள்ளே ஊற்றிக் கிண்டுக. கிண்டிய பின்னர் சற்று ஆறவிட்டு, ஆண் பெண் எனப் பேதமின்றி அனைவருக்கும் பரிமாறி விருந்தினர்களை ஆற்றுப்படுத்த தர்பூசணி அல்வா தயார்.

தர்பூசணியின் வெளியோட்டில் இருக்கும் கனிமங்கள் ஆண்களின் முன்னிற்சுரப்பி மேம்பாட்டுக்கு உகந்தது எனக் கடந்த இடுகைகளில் கண்டோம். அப்படியானால் பெண்டிருக்கு யாதொரு பலனுமில்லையாயென மொட்டை வினா வினவப்படாது என்பதற்காக:

Great form of hydration – especially after exercise or a sauna session.

During menstrual time, when you feel bloated, it’s an amazing diuretic.

Great for those with acne or breakouts on the skin.

Valuable form of liquid – especially if you live in a dry climate like, Arizona.

Helps to lower blood pressure.

Useful to regulate kidney function.

Hydrates our bodies better than water because of its’ natural minerals.

Improves eye health. -

ஊரில் சும்மா வீணாய்ப் போகும் வெளியோட்டினை எடுத்து, யாராவது ”ஆண்மை அல்வா” விற்றால் தெரியப்படுத்துங்கள். காப்பீடு பெறுவோம். அப்படி வரும் தொகையில் உங்களுக்கும் பங்குண்டு என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். பிரித்தெடுத்து வைத்திருக்கும் பச்சைத்தோலுக்கான தர்பூசணிச் சட்னியுடன் மீண்டும் சந்திப்போமெனக் கூறி விடுபெறுவது,

தர்பூசு திளைப்பில்,
பழமைபேசி.

(இவங்கிட்ட ஒரு தர்பூசுப் பழம் சிக்கிட்டு எப்பிடிச் சீக்கியடிக்கிது பாருன்னு ஆரோ மொனகறாங்ளாட்ருக்குதூ?! இஃகி, இன்னுஞ்செரிபாதிப் பழம் அப்படியே இருக்குதுங் சாமியோவ்... நாவகத்துல வெச்சிகிடுங்க!! அக்காங்!!)

பழமைபேசி

unread,
Jun 28, 2015, 7:18:56 PM6/28/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com, mutht...@googlegroups.com, tamil_...@googlegroups.com, minT...@googlegroups.com, tamizh...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com
இதுக்குப் பேரு, தர்பூசணிச் சட்னியாமுங்க. ஆகவே மாத்திப் படிச்சுகுங்க. இஃகி!!

PazamaiPesi

unread,
Jun 28, 2015, 10:14:16 PM6/28/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai

வணக்கம் பெரியோரே! $4.99க்கு வாங்கி வந்த இந்த குமட்டிப்பழத்தில் இன்னும் பாதிப்பழம் இருக்கிறது. இதை வைத்து இன்னும் என்னென்னவோ செய்யலாம். ஆனாலும் நாளைக்கு “குமட்டிப்பழ சாம்பார்தான்”


  • தர்பூசணி - இரண்டு கப்(தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் இடையில் இருக்கும் பச்சை மற்றும் வெள்ளை பகுதி மட்டும்)
  • துவரம்பருப்பு - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • சாம்பார் பொடி - இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • பூண்டு - நான்கு பல்
  • கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
  • உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • தர்பூசணியின் சிவப்பு நிறப்பகுதியை எடுத்து விட்டு மீதம் உள்ள வெள்ளை பச்சை பகுதியை மட்டும் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை கழுவி, அதனுடன் பூண்டு, சீரகம், தர்பூசணி துண்டுகள், மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிக் கொளவும்.
  • தக்காளி வதங்கியவுடன் சாம்பார் பொடியை போட்டு கிளறிவிட்டு, மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதி வந்தவுடன் உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கிளறவும். குழம்பு கொதித்தவுடன் கறிவேப்பிலையை தூவி இறக்கி விடவும்.

படம் நாளைக்கு ‘டக்கராப்’ போட்ருவோம்.

Tulsi Gopal

unread,
Jun 28, 2015, 10:19:10 PM6/28/15
to Groups
இங்கே பாருங்க, நம்ம பாரதிமணி ஐயா  என் பதிவொன்றில் போட்ட பின்னூட்ட ரெஸிபி உங்களுக்காக.  இன்னும்  தர்பூசனி ஓடு   பாக்கி இருக்குல்லே?

பாரதி மணி said...

துளசீம்மா! ’அந்த’ மாங்காய்(???) பச்சடியில் 2 ஸ்பூன் Aamchur கலந்துவிட்டால், எந்த எலியாலும் கண்டுபிடிக்கமுடியாது!

தெரியாதவர்களுக்கு....இதோ ஒரு ரெசிப்பி: 
ஸம்மரில் வாட்டர் மெலன் வாங்கி ஜ்யூஸி சிவப்பு பகுதியை தின்றுவிட்டு, மீதியைக் குப்பையில் போடுகிறோம். அதிலிருந்து பரங்கிக்காய் கூட்டை விட என்னும் அதிக ருசியான கூட்டு செய்யலாம்.

பீலரால் வெளி பச்சைப்பகுதியை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பாதி வெந்து எடுத்த இருபிடி கடலைப்பருப்புடன் துண்டுகளை கருவேப்பிலை, உப்பு மஞ்.பொடியுடன் வேகவைக்கவும். வேகும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். கால்மூடித்தேங்காய், டீஸ்பூன் ஜீரகம், 2 காய்ந்தமிளகாய் இவற்றை நன்றாக அரைத்து, அதன் தலையில் கொட்டிவிடவும். தாளிக்க ,கடுகு, உளு. பருப்பு, கறிவேப்பிலையுடன், Dessicated Coconut Powder-ம் வறுத்துப்போடலாம். எலி…என்ன…பெருச்சாளியாலும் கண்டுபிடிக்கமுடியாது!

பாரதி மணி


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
துளசி

துரை.ந.உ

unread,
Jun 28, 2015, 11:22:30 PM6/28/15
to tamilmantram, மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
பபே அண்ணாச்சீஈஈஈஈ..... பலாப்பழம் மட்டும் வாங்கீறாதீங்கோ...வாங்கீறாதீங்கோ 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

பழமைபேசி

unread,
Jun 29, 2015, 8:11:55 AM6/29/15
to mutht...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, tamizh...@googlegroups.com
இஃகிஃகி

PazamaiPesi

unread,
Jun 29, 2015, 10:55:10 AM6/29/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
இதுக்கும் செயல்முறை, விளக்கம்னு குடுத்திட்டு இருக்க முடியாது! Sorry!!



Jaisankar Jaganathan

unread,
Jun 29, 2015, 10:59:31 AM6/29/15
to panb...@googlegroups.com
பழமை பேசி

இது கோழி ரத்த ஜூஸ் தானே. இருங்க ஆர் எஸ் எஸ் கிட்ட சொல்லுறேன்

2015-06-29 20:25 GMT+05:30 PazamaiPesi <pazam...@gmail.com>:
இதுக்கும் செயல்முறை, விளக்கம்னு குடுத்திட்டு இருக்க முடியாது! Sorry!!



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

PazamaiPesi

unread,
Jun 29, 2015, 1:41:38 PM6/29/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
துரை அண்ணாச்சி வந்து என்ன சொல்வாரோன்னுதா இருக்கு.... இருந்தாலும், சொல்றதைச் சொல்லீர்லாம்... எதுக்கு பொல்லாப்பு? என்ன நாஞ்சொல்றது??

குமட்டிப்பழச் சாம்பார்






செய்முறை விளக்கம் இங்க:http://www.arusuvai.com/tamil/node/4853


வெகுமுக்கியமான எச்சரிக்கை: இன்னும் பழம் மிச்சம் இருக்கு.


Watermelons were analyzed by GC-MS to determine the citrulline content among varieties, types, flesh colors, and tissues. Citrulline content ranged from 3.9 to 28.5 mg/g dry weight (dwt) and was similar between seeded and seedless types (16.6 and 20.3 mg/g dwt, respectively). (http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16007998)


இஃகிஃகி http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21195829




-பழமைபேசி.


பழமைபேசி

unread,
Jun 29, 2015, 1:45:02 PM6/29/15
to panb...@googlegroups.com
அருமைங்க டீச்சர்... செய்திடுவோம்.

பழமைபேசி

unread,
Jun 29, 2015, 1:45:23 PM6/29/15
to panb...@googlegroups.com
ஆகா!!

பழமைபேசி

unread,
Jun 29, 2015, 8:51:25 PM6/29/15
to mutht...@googlegroups.com, tamil_...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, minT...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
:-))

On Monday, June 29, 2015 at 2:33:33 PM UTC-4, வெற்றிச்செல்வி wrote:
வெங்கட்பட்...ஐயே மிஞ்சிடுவாரு போல இருக்கே!....


படங்கள் மிக அருமை.. 'சுவை... சுவைத்துப்பார்த்த பின் தான் சொல்லணும்:)

--
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
நட்போடு விஜிசுதன்

"நாமார்க்கும் குடியல்லோம்"
 நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com
http://groups.google.com/group/muththamiz
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே ...

 

 

Silence is the only thing that can't be misquoted!


துரை.ந.உ

unread,
Jun 30, 2015, 1:20:30 AM6/30/15
to வல்லமை, muththamiz digest subscribers, tamil_ulagam, pira...@googlegroups.com, பண்புடன், Groups, tamilmantram, தமிழமுதம்
2015-06-30 6:21 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:
:-))

On Monday, June 29, 2015 at 2:33:33 PM UTC-4, வெற்றிச்செல்வி wrote:
வெங்கட்பட்...ஐயே மிஞ்சிடுவாரு போல இருக்கே!....


படங்கள் மிக அருமை.. 'சுவை... சுவைத்துப்பார்த்த பின் தான் சொல்லணும்:)

2015-06-29 13:41 GMT-04:00 PazamaiPesi <pazam...@gmail.com>:
துரை அண்ணாச்சி வந்து என்ன சொல்வாரோன்னுதா இருக்கு.... இருந்தாலும், சொல்றதைச் சொல்லீர்லாம்... எதுக்கு பொல்லாப்பு? என்ன நாஞ்சொல்றது??

 
​தலைப்பைப் பாத்தவுடனே தலையச் சுத்தீருச்சு .... கு/கொமட்டிக்காய் ....ஒருகாலத்துல ​
 
​..கொள்ளைல மானாவர்ரியா வெளைஞ்சு கிடக்கும் ...அக்கால கையெறிபந்து...கால்ப்பந்து ​எல்லாம் இதுதான்...
(அதை எடுத்தாலே ...பின்னால ஒரு பெரிசு...”எலேஏஏஏய்....அது வெசம்ல்லே”-ன்னு கத்திக்கிட்டே வெரட்டி வரும்) 




குமட்டிப்பழச் சாம்பார்






செய்முறை விளக்கம் இங்க:http://www.arusuvai.com/tamil/node/4853


 ​லிங்குல போனா மேட்டர் வேற :)​


வெகுமுக்கியமான எச்சரிக்கை: இன்னும் பழம் மிச்சம் இருக்கு.


​/////
(தோலுக்கும் சிவப்பு பகுதிக்கும் இடையில் இருக்கும் பச்சை மற்றும் வெள்ளை பகுதி மட்டும்)
 
​/////​
மிச்சம்
​அந்த பச்சைக்கலரு ​
தோல் மட்டுந்தான்  .... அதை வச்சி என்னா செஞ்சீங்கன்னு தெரிய இன்னும் ஆவல் :)))​
 

PazamaiPesi

unread,
Jun 30, 2015, 8:53:30 AM6/30/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
மன்னிச்சுடுங்க மக்கழே... நான் வாங்கிட்டு வந்த அந்த ஒற்றைத் தர்பூசணியில இன்னும் 20%தான் மிச்சம் இருக்கு. ஆகவே, நீங்களே உங்க காசுல ஒன்னு வாங்கி இதை மாதிரிப் பூட்டிகிடுங்க. நாளைக்கு ஜூலை-1, ஞாவகம் இருக்கல்ல??



PazamaiPesi

unread,
Jun 30, 2015, 11:03:43 AM6/30/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai


”எனக்கு நீரிழிவு நோய் இருக்கு. தர்பூசணிப்பழம் வாங்கி என்ன செய்ய?”

”அப்படியொன்னும் அதில சர்க்கரை இல்லை. செரி... பழுத்த செஞ்சோறு உண்ண விருப்பமில்லை. அதை என்னியமாரி ஆருக்காவது குடுத்துருங்க. குடுத்த பின்னாடி, மிச்சமிருக்கிறதுல மோர் அல்லது தயிரோட கொஞ்சமா உப்பும் சேர்த்து ஒரு லோட்டா அடிச்சுடுங்க”

செல்வன்

unread,
Jun 30, 2015, 11:50:26 AM6/30/15
to vallamai, மின்தமிழ், tamizh...@googlegroups.com, பண்புடன்
ஒரு தர்பூசணிப்பழத்தை வெச்சு இத்தனை ஆட்டம் காட்டறீங்க...உங்க கிட்ட பலாப்பழம் மாட்டினா என்ன செய்வீங்கன்னு யோசிச்சா திகிலா இருக்கு :-)

PazamaiPesi

unread,
Jun 30, 2015, 12:51:26 PM6/30/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai

அவையோரே, சபையோரே!! உங்களுக்கோர் நற்செய்தி!!


ஆமாம். நானே போய், நானே $4.99 கொடுத்து வாங்கி வந்த அந்த ஒற்றை தர்பூசணிப் பழம் தீர்ந்து விட்டது இந்த தர்பூசணிக் கூட்டோடு!! கூட்டு உருசியோ உருசி!! இஃகிஃகி... குதூகலித்து, கெக்கலித்துக் கொண்டாடுங்கள். ஆனால் தர்பூசணிப் பயன்பாட்டை மறந்து விடாதீர்.




தர்பூசு திளைப்பில்,
அந்தியூரன் பழமைபேசி.


கூட்டு செய்முறை:  இதையொத்து செய்யப்பட்டது: http://www.arusuvai.com/tamil/node/30731


Supports kidneys:

Being a natural diuretic, watermelon helps to increase the flow of urine without straining the kidneys. It contains potassium which helps in clearing the accumulated salt deposits of limestone from the kidneys and also works to reduce the concentration of uric acid in the blood, thereby reducing the risk of forming kidney stones. Watermelon also enables the liver to process ammonia (waste from protein digestion), thus easing the strain on kidneys while getting rid of excess fluids.


Natural Viagra:

Watermelon is often referred to as the natural Viagra as it contains arginine. Arginine boosts nitric acid. This acid relaxes the blood vessels, thus treating and preventing erectile dysfunctions. Watermelon is also a rich source of amino acid – citrulline – which works in further expanding the blood vessels.


Source: http://www.stylecraze.com/articles/benefits-of-watermelon-for-skin-hair-and-health/


செய்முறைப் படங்கள்

பழமைபேசி

unread,
Jun 30, 2015, 1:40:09 PM6/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, minT...@googlegroups.com
:-(( வருத்தமா இருக்குங்க அண்ணாச்சி... தீர்ந்து போச்சி.... ஆனா இன்னும் தர்பூசணி அல்வா, தர்பூசணித் தொகையல், தர்பூசணிப் பாயாசம், தர்பூசணி இரசம் எல்லாம் செய்யலாம்ன்ட்டு இருந்தேன்...

PazamaiPesi

unread,
Jun 30, 2015, 2:10:06 PM6/30/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
இருந்தது ஒகட்டே ஒகட்டி. அதையும் தின்னு தீர்த்தாச்சி. விடிஞ்செந்திரிச்சா ஜூலை ஒன்னாந்தேதி தலைக்கவசக்கட்டுப்பாடு நடைமுறை. அதுனால, நீங்களே ஒன்னை வாங்கி வெட்டிப் பூட்டிகிடுங்க. Sorry, I can't help!! மன்னிச்சுருங்க!!



PazamaiPesi

unread,
Jul 10, 2015, 3:53:44 PM7/10/15
to மின்தமிழ், முத்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, பண்புடன், தமிழ் பிரவாகம், vallamai
முன்கூட்டியே கட்டியஞ்சொன்ன அண்ணாச்சிக்கு நன்றி!!

1. 1946ஆம் ஆண்டு, மே 13ஆம் நாள், மகாத்மா காந்தி, தனக்காகத் தன்னுடன் வேலைபார்த்த மீராபாய்(Mirabehn)க்கு ஒரு மடல் எழுதுறார். அதுல சொல்றாரு, நான் மாங்கொட்டைகள் தின்கிறேன். பிடித்திருக்கிறது. நீயும் தின்றுபார் அப்படிங்கிறாரு.

2. மாங்கொட்டைப்பருப்புக் குழம்பு வைத்துச் சாப்பிட , வயிற்றுக்கிருமிகள் நீங்கி வயிற்றுப் புண்கள் ஆறும்.

3. மாங்கொட்டைப் பருப்பு இரசஞ்(தாடிமீபுட்பாதி நசியம்) செய்து குடிக்க, இரத்தபித்தங்கள் நீங்கி  நீரிழிவு நோயும் அகலும்.

இவை இப்படியெல்லாம் இருக்கும் நாம் $0.79 கொடுத்து மூன்று மாங்காய்கள் வாங்கி வந்தோம். அவற்றுள் ஒன்றினைப் பொரியல் செய்து, மாங்கொட்டைப் பருப்பையும் எண்ணெயில் வறுத்தெடுத்துப் பொரியலுடன் கலந்து இன்று நண்பகல் உணவாக உட்கொண்டோம். படங்கள் கீழே வருமாறு. 







Reply all
Reply to author
Forward
0 new messages