Re: வாத்துகள்

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 15, 2016, 12:45:11 AM11/15/16
to மின்தமிழ், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
நன்றி!

ஹம்சம், சக்ரவாகம் - சம்ஸ்கிருதம், பாளி, பிராகிருதம், ஹிந்தி, .... எல்லா மொழிகளிலும் உண்டு.

வாத்து (bAtu, Portuguese) = தாரா (தமிழ்). -ஆ என முடியும். தாரை - நீர்த்தாரையால். இன்னொன்று: உவேசா எழுதியுள்ளதால் அறிந்தேன்.
நீடா = கொக்கு. Darter (பாம்புத்தாரா). நீளமாக, பாம்புபோல் உள்ள தாரா. நீள்- ஆ விகுதி நீடா. நீடாமங்கலம், .....

தமிழின் செக்கர்வாகம் > சக்ரவாகம். முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். கட்டுரை எழுதணும்.

செக்கராக உள்ளதால் பிராமண வாத்து என ஆங்கிலத்தில் பெயர் கொடுத்தனர்.
பறக்கும் போது இறகின் விளிம்பு கறுப்பாகவோ, பச்சையாகவோ இருக்கும்.

இந்திய தேசீயக் கொடிபோல செக்கரவாகம்:

பாண்டிச்சேரியில், குமாரவேல் எடுத்த படம்:

























































கீழே - போட்டோஷாப் 






















நா. கணேசன்

On Monday, November 14, 2016 at 9:27:57 PM UTC-8, தேமொழி wrote:
On Monday, November 14, 2016 at 8:49:25 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, November 14, 2016 at 8:34:53 PM UTC-8, கவிமாமணி wrote:
நேற்றுக் கீழைவானில் வெண்ணிலவின் நெருக்கத்தை இரசித்த அதேவேளையில்  மேலை வானில்  ஒரே வண்ணத்தில் விந்தை செய்துகொண்டிருந்தது அந்தி. அப்படி ஒரு செக்கர் அழகு. செம்பை உருக்கி மெழுகியது போல!

வாகாக இந்தச் செக்கர் நிறத்தில் இருப்பதால் “செக்கரவாகம்” என்று இந்தியாவிலே உள்ள அழகான வாத்துக்குப் பெயர் (வாத்து = போர்ச்சுகீயம்). வடமொழியில் எ, ஒ இல்லை: அகரமாகிவிடும்.
எப்பொழுதும் துணையுடன் இருக்கும் சக்கரவாகம்

சக்கரவாகம் என்பது பாளி மொழிச் சொல் 
(விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரபாணி கூட ஒரு  பாளி மொழிசொல் என்பதையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்)

cakkavako - ruddy goose 


உங்களைக் கவர்ந்த  ஹம்சாவும் ஒரு  பாளி மொழிச் சொல்லே ;-))

Hamso - swan


இனிமேல் இந்த அகராதியையும் உங்கள் ஆய்வுக்கான வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பல அரிய உண்மைகளை அறியும் வாய்ப்பு கிடைக்கலாம்.


..... தேமொழி


 
என்று செக்கரவாகம் செம்மொழி இலக்கியங்களிலே, இந்திய சித்திரங்களிலே ஏராளம் பாடல்கள்.

Image result for brahminy duck

நா. கணேசன்
 

நீலக் கடலில் நிறஜால மாயங்கள்

வாலைக் குமரி வசியத்தை ஒத்திருக்க

தென்னையிளங் கீற்றினிலே தென்றல் அசைவினிலே

மின்னும் ஒளிக்கதிரோன் மேகத் திரைகிழிய

பொன்வண்ணம் மாறிப் புதுவண்ணம் தானடைந்து

தன்வண்ண மாகித் தவழுவதை என்சொல்ல!

என்முன்னே சென்றநிழல் என்னுள் அடங்கிவிட

மின்னும் கதிரோனும் மேற்திசையில் சாய்கின்றான்

சாய்கிறவன் தூரிகைகள் சாதித்த ஓவியத்தை

வாய்த்த வடிவழகின் மாறுதலைகோலக்

கருவுற்ற மேகம் கரைகட்டும் தங்கச்

சரிகை விளிம்பைதங்க வயல்வெளியை

செம்பை உருக்கியதில் செம்பவளம் சேர்த்தரைத்து

அம்பொன் விசும்பினிடை அள்ளித் தெளித்ததுபோல்

செக்கர் வனைந்திட்ட சித்திரத்தைஅந்திமகள்

வெட்கம் கலந்த விழிச்சிரிப்பைமங்கல்

வடிய எழுந்தகரும் மாபூதம் வீழ்ந்து

மடிய உதிக்கின்ற மாமதியைவாழ்வை

விதிக்கின்ற கோளிருக்கும் விந்தையினைஎம்பிக்

குதிக்கின்ற தண்கதிரின் கொள்ளை அறியாமல்

கற்பனையில் விண்மீன்கள் கண்சிமிட்டும் காட்சியதன்

அற்புதத்தைஆண்டவனின் ஆணை தவறாமல்

அண்டங்கள் ஏதோஓர் யாப்பின் அமைதியிலே

சண்டை பிடிக்காமல் தன்னுள் இயங்குகிற

விந்தையினைவானத்தில் மேகம் கவிந்திருக்க

முந்துகிற வானவில்லின் மோனத் தனிவளைவின்

வண்ணத் தொகுதியினைமாறா வடிவழகைக்

கண்ணுற்றால் தெய்வக் கவிதை தெரியாதோ?


வானத்து நீலம் மறையச் செழுஞ்செக்கர் 

மேனி முழுதும் மெழுகிவிட - ஆனவரை

அந்த ஒருவண்ணம் ஆச்சரியம் காட்டுகிற

அந்தி அழகே அழகு!


vaanaththu

Reply all
Reply to author
Forward
0 new messages