அரசின் முயற்சியை கேலி செய்கிறீர்களே

4 views
Skip to first unread message

Thevan

unread,
Nov 16, 2016, 10:33:01 PM11/16/16
to panbudan, mintamil
Elango Kallanai

"ஒரு விளக்கம் .
அரசின் முயற்சியை கேலி செய்கிறீர்களே என்கிற நண்பர்களுக்காக. அரசு
கறுப்புப் பணத்தை ஒழிக்கத் தானே முயல்கிறது , இது தேச வளர்ச்சிக்கு
நல்லது தானே, உங்களைப் போன்றோர் மக்களுக்குச் சொல்லலாமே" என்பது
நண்பர்களின் வேண்டுகோள்.

அரசிடம் உண்மையும் வாய்மையும் சத்தியமாக இல்லை என்பதாலேயே இந்த அரசின்
மேல் இவ்வளவு ஆத்திரம் வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிக்க ஜனவரி முதல்
ரெய்டுகள் சில நடத்தி நாடகங்களை முடிவுக்குக் கொண்டுவாருவார்கள்.
பின்வாசலில் நடந்து என்ன? ஏற்கனவே ஆண்டுக்கு ஒரு லட்சத்தி பதினாலாயிரம்
கோடி கார்ப்பறேட்டுகளின் வராக் கடனாக எழுதிவைத்துவிட்டார்கள். இப்போது
மேலும் கடன்களை ரத்து தள்ளுபடி என்று வார்த்தை விளையாட்டு செய்கிறார்கள்.
பொதுத்துறை வங்கிகள் சின்ன கடன் வாங்கும் ஆட்களிடம் எல்லா
சொத்துக்களையும் கொண்டுவா என்று சொல்கிறார்கள் . கார்ப்பறேட்டுக்களிடம்
இருக்கும் சொத்துக்களை எப்படி எப்போதும் தவறாகவே மதிப்பிட்டு கடன்
கொடுக்கிறார்கள். இன்று பொதுத்துறை வங்கிகளின் தள்ளாட்டத்திற்கு காரணம்
வரிசையில் தங்கள் சிறுவாடுகளோடு நிற்கும் மக்களா? எத்தனை பெண்களின்
படத்தோடு வங்கியில் பணம் கட்டவில்லை என்று பெயர்களைப் போட்டு
அவமானப்படுத்துகிறீர்கள்? எவ்வளவு விவசாயிகள் தங்களுடைய கடைசி
நம்பிக்கையான நிலம் இழந்த பின்னர் தற்கொலை செய்கிறான்? வங்கிகளின்
மேலாளர்கள் நினைத்தால் இன்று எந்த விதிமுறைகளையும் மீறுவார்கள். அதானி
கடன் பெற்றது ICIC யில் அல்ல. அவர் பொதுத்துறை வங்கிகளிடம் தான்
வாங்குவார். மல்லய்யா ஏமாற்றியது தனியார் வங்கிகளை அல்ல. நமது
சிறுவாடுகளை ஓய்வூதியத்தை வைத்திருக்கும் பொதுத் துறை வங்கிகளிடம் தான்.
அவர்களிடம் வாங்கி எத்தனை வேலை வாய்ப்புக்களை உருவாக்கினார்கள் இந்த
கார்ப்பரேட் மகாராஜாக்கள். ஒவ்வொரு முறையும் வராக் கடன் , ஒவ்வொரு
முறையும் ரியல் எஸ்டேட்டுக்கு முதற்கொண்டு மக்கள் பணத்தில் இருந்து
தூக்கிக் கொடுக்கிறார்கள்.

இப்போது தனியார் வங்கிகள் அடிக்கும் கொள்ளையோ வட்டிப் புள்ளிகளின் மாடலே
தான். வட்டி கட்டி மீளவே முடியாது.
நாட்டில் தேனெடுத்து சம்பாதித்து பொதுத்துறை வங்கியில் சேமிக்கும்
பழங்குடி முதல் சுயுதவிக்குழுவிற்கு நேந்துவிடப்பட்ட கடன்பட்ட
வாழ்க்கைக்கு வாழும் பெண்கள் முதற்கொண்டு எதற்காக இந்த தொழில்
அதிபர்களுக்கு உழைக்க வேண்டும்? இந்த தேசம் யாருக்கு?
இன்று மக்கள் தங்கள் பணத்தை எடுத்து உண்ண வழியில்லை. ஒவ்வொரு திட்டமும்
மக்களின் பொருளாதாரத்தை காற்றில் அடித்துச் செல்லும்
சருகாக்கிவிட்டார்கள். இப்போதும் மக்களின் பணத்தை குறிவைத்துவிட்டு
கறுப்பைக் கண்டு கொள்ளவே இல்லை. நேபால் வழி பணம் போகிறது, பல் வேறு
கமிசன்கள் வணிகமாகிவிட்டது. மக்கள் வங்கிகளில் பணம் போட்டுவிட்டு இன்று
வரை கால்வாசி அன்றாட வேலைகள் கூட நடைபெறவில்லை. இந்த மக்கள் தாங்கள்
வங்கிகளில் செலுத்தும் பணத்தை தங்கள் வாழ்வியலின் தேவைகளுக்குப்
பயன்படுத்த முடியவில்லை. அவர்களிடம் பணம் இருக்கக் கூடாது என்கிற கொடூர
எண்ணம் அரசிடம் தெரிகிறது.

இதைப் பேசும் யச்சூரிக்கு தான் அதிக கவனம் குவிய வேண்டும். முழு
தைரியத்தோடு கேஜ்ரிவால் நிற்கிறார். இவர்களிடம் மடியில் கனமில்லை வழியில்
பயமில்லை. மற்றவர்கள் இதைப் பேசினால் நம்மை ஊழல் முத்திரை
குத்திவிடுவார்களோ தேசத் துரோகி என்பார்களோ என்கிற அச்சத்தில்
நிற்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியின் சீல் முத்திரைகளை கண்டு அஞ்ச வேண்டிய
அவசியம் ஒரு சாமானியனுக்கு என்ன இருக்கப் போகிறது?

ஒரு எளியவனாக நான் படித்த பொருளாதாரத்தை நான் உள்வாங்கிய காரணிகளை
விளக்குகிறேன். இந்த மண்ணில் உள்ள நுண்ணியிரி கூட பிழைத்ததாக வேண்டும்
என்றே நினைக்கிறேன். இதில் தேச பக்தி எங்கிருந்து உங்களுக்கு மட்டும்
தனியாக வருகிறது?

https://www.facebook.com/elango.kallanai/posts/10205315428484845
Reply all
Reply to author
Forward
0 new messages