Re: இருங்கடல் என்றால் என்ன

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 11, 2016, 9:38:07 AM9/11/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
இருங்கடல்:
சங்கநூல்களில் உதாரணத்திற்கு, கலித்தொகையை எடுத்துக்கொள்வோம். இருங்கடல் இரண்டுமுறை வருகிறது
இரண்டிலும், இருங்கடல் = கரியகடல் என்றுதான் நச்சர் உரைசெய்துள்ளார்.

1813இருங்கங்குல்391
1814இருங்கடல் - கரியகடல்508832
1815இருங்கழி - கரியகழி77380795
1816இருங்கழி - பெரிய கழி761
1817இருங்கழி நெய்தல்925



1820இருங்குயில் - கரியவாகிய குயில்கள்182187197,555
1821இருங்கூந்தல்36
1822இருங்கூந்தல்- கரிதாகிய மயிர்9
1823இருங்கூந்தல் - கரிய கூந்தல்255301324,363460552,59776
1824இருங்கூந்தல்- பெரிய கூந்தல்817
1825இருங்கூந்தால்720


மதுரைக்காஞ்சியிலும் அவ்வாறே.
407-423: இருங்கடல் வான்கோடு ... மறுக
இருங்கடல் வான்கோடு புரைய - கரிய கடலில் வெள்ளிய சங்கைப் போல.

இருங்கடல் - கரிய கடல். 

கரியகடல் (இருங்கடல்) - வெண்மையான முத்துகள்
   “என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
     முன்ன(ம்) நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
     மன்னு காவிரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
     பன்னியாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே”

இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
(புறநானூறு, பின்னர் பெருங்கதையிலும்).

உரை: இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம் - கரிய கடல் 
சூழ்ந்த இப் பெரிய இடத்தையுடைய நிலவுலகத்தை; 

பரிபாடல்: பரிமேலழகர் சொல்கிறார்,
பாய் - பரந்த. இருங்கடல் - கரிய கடல், பெரிய 
கடலுமாம். பார் - பாறைக்கல்; கடலினூடுள்ள பாறைக்கல். சேயுயர்:
மிக உயர்ந்த. பிணிமுகம் என்பது முருகப்பெருமானுடைய ஊர்தியாகிய 
யானையினது பெயர்.

--------------

திணைமாலை நூற்றைம்பது. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0056.html
இருங்கால் வயவேங்கை, இருங்கடலுள் முத்தன்ன, இருங்கழித் தண்சேர்ப்ப, இருங்கொண்மூ, 
இருங்கடல் மாந்தியகார், இருங்கோட்டு மென்கரும்பு, இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமை
- இவையாவும், இருங்- = கருமை.

சொல்லார் மணிக்கடலிற் றோமில் வயிரமணி - கரிய கடலில் தோன்றும் வெண்மையான வயிரம்.

இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்; - அப்பர்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான் - ஆழ்வார்
கறுத்த கார்க்கடல் வண்ணன் - மால்/கண்ணன்.

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும் 
      இரு கரை உலகு இரைத்து ஆடக் 
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் 
      கண்டம் என்னும் கடிநகரே (பெரியாழ்வார்)
இமவந்தம் - வெள்ளைப் பனிமலை; இருங்கடல் = மணிக்கடல். See the contrast.

இருங்கடல் - கரியகடல் முதன்மைப்பொருள். பெரிய கடலுமாம்.
இதனை, மணிக்கடல், மணிநீர், திமிர உததி, கருங்கடல், ... என வரும் பாடல்கள் காட்டும்
உலகமுழுதும், Wine dark sea (Homer), Black sea (poems) பார்க்கலாம்.
மணிநீர் = காலாபானி (ஹிந்தியில்). அந்தமான் தீவுக்கே காலாபானி என்ற பெயர் உண்டு!

திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்

திமிர உததி = இருண்ட கடல் போன்றதும்,
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே.
திமிர சலநிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே

திமிர் - இருள் போன்ற கருமை. வேளாண் தொழில் தமிழ் வடசொல்லாயிற்று. (Cf. திமில்).

நா. கணேசன்

சங்ககாலத் தமிழர் மணிநீரில், அதாவது இருங்கடலில் (கரிய கடலில்) வெகுவாகப் பயணித்தவர்கள்.
17-19 நூற்றாண்டுகளில் இப்பெருமை பிரிடீஷாருக்கு ஆனது. 

கடலாடும் மக்களுக்கு காளபாணி/மணிநீர்/இருங்கடல் பரிச்சயமான ஒன்று.
பிரிடிஷ் கவிஞன் தன்மக்கள் இருங்கடல் ஆடிய திறம் பற்றிய கவிதைநூல்: https://books.google.com/books?id=yTtcAAAAcAAJ&

The Bugle of the Black Sea; Or, the British in the East. [Poems.] By Melanter

Front Cover
R. Hardwicke, 1855 - 163 pages
 



 
On Saturday, September 10, 2016 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:
இருந்தமிழ் - பெருமை மிக்க தமிழ்   -  http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=119&pno=795
இருந்தமிழே உன்னால் இருந்தேன் - தமிழ்விடு தூது 
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோன் - திருத்தொண்டர் திருவந்தாதி

தமிழ் கருப்பு இல்லை, சிவப்பு தான் :) செந்தமிழ்.

நா. கணேசன் 

இருங்கடல் என்றால் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?



இருமை என்றால் இருபொருள். ஒன்று - பெரியது. 
ஆனால், 
இங்கே இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில்.
காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’ என்னும் தமிழ்ச்சொல்லின் மொழியாக்கம். மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடைய தரண். -தேவர் குறள்


ஒரு நாட்டுக்கு அரண் எனப்படுவது நானிலத்தையும் சொல்கிறார் வள்ளுவர். மணிநீர் = கடல், எனவே நெய்தல்.
மண் = வளமண், எனவே மருதம். மலை = குறிஞ்சி, அடர்காடு = முல்லை. இவை பெரிதாக இருந்தால் அரண் என்கிறார்.
 
மணி = கரிய அரதனம். இருங்கடல் நடுவே (=கருங்கடல் நடுவே) ஒரு புதிய தீவைக் கற்பனையால் சிருஷ்டித்து
மணிபல்லவம் எனப் பெயர் சூட்டுகிறார் சாத்தனார். பல்லவம் = மொக்கு. புதிதாய் முளைத்த மன்னர்கள் பல்லவர்கள் - மூவேந்தருக்கு அப்புறம்.
மணிமேகலை = மணிநீர் ஆடுவோரைக் காக்கும் கடற்றேவதை. நானூறு யோசனை அளவுடைய நாகநாடு - கற்பனை நாடு. அது 30 யோசனை
தொலைவில் மணிபல்லவம் (ஒரு கற்பனையூர்). யோஜனை = 9.06 மைல் (அ) 18 மைல். தெற்கே, தமிழகத்திலும், இலங்கையிலும் யோஜனை = 18 மைல் தான் (have given ref.s)

இருமை - பெருமை, இன்- என்னும் சொல்லொடு தொடர்புடையது.

இருமை - கருமை. இது சிரு- “black' என்னும் வேர். செணில்/சணில் > அணில், சாயிரம் > ஆயிரம், ... போல சிரு- > இரு- (இருங்கடல் = கரிய கடல். Cf. மணிநீர்).
திசைப் பெயர்களைப் பார்த்தாலும் இது விளங்கும். தெல்- = தண்ணீர். தண்ணீர் உள்ள கடலின் திசை தெற்கு. வடக்கே இமையமலை. வட- வளை வரை,
வடதிசையில் விண்மீன் = வடமீன். Pole star: பண்டை உலகில் வடமீனின் முக்கியத்துவம்: http://sino-platonic.org/complete/spp192_vol1.pdf
In and Outside the Square: The Sky and the Power of Belief in Ancient China and the World, c. 4500 BC – AD 200 Volume I: The Ancient Eurasian World and the Celestial Pivot. http://sino-platonic.org/complete/spp192_vol1.pdf

வடமீன், வடக்கு திசைக்கு அடையாளமாக விழுதுவடம் கொண்ட மரத்தைத் தெரிவு செய்தனர். அதனால் தான் சிவபிரான் இமையத்தில்
வடவ்ருக்ஷத்தின் கீழே. சமணத்தில் சிவனின் “alter ego" ஆக விளங்கும் ஆதிநாதர்/ரிஷபநாதரும் வட ஆல மரத்தடியிலே. 

கடல் தீவுகள் தெற்கே. அதற்கெல்லாம் ஒரு ஸிம்பல் : தென்னை மரம். தெல்- ‘நீர்’ (தெல்-/தேல்- தேன் ‘fluid') தெலுங்கில் தேம-, வடமொழியில்
தைம்ய போன்ற சொற்கள் தெ-/தே- ‘water, fluid' concept எனலாம். நீர்க்குடத்தில் வைத்துக் குழந்தை பெறுபவள்: தல்லி/தள்ளை. 
தில்லிக்கு ராஜான்னாலும் தல்லிக்குப் பிள்ளை - பழமொழி.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 13, 2016, 11:40:43 PM9/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
On Sunday, September 11, 2016 at 6:37:57 AM UTC-7, N. Ganesan wrote:
இருங்கடல்:
சங்கநூல்களில் உதாரணத்திற்கு, கலித்தொகையை எடுத்துக்கொள்வோம். இருங்கடல் இரண்டுமுறை வருகிறது
இரண்டிலும், இருங்கடல் = கரியகடல் என்றுதான் நச்சர் உரைசெய்துள்ளார்.


தமிழர் கடலாடுந்திறன் குறைந்த 20-ஆம் நூற்றாண்டு உரைகளில் இருங்கடல் = பெருங்கடல் என்று சொல்லியிருக்கும்
இடங்களை மீள்பார்வை பார்க்கவேண்டும். பல இடங்களில் இருங்கடல் = கருங்கடல் என்று பொருந்தும்.
இலங்கைத் தீவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீந்தியும் படகும் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஒரு பாலம் கட்டவும் முடியும்.
நீந்திவருவாரும் உண்டு. அழகன்குளம் தொல்லாய்வு செய்த இரா. நாகசாமி இரவுக்கு தமிழ்நாடு வந்துதங்கி
காலையில் இலங்கை செல்லும் வழக்கம் இருப்பதைக் குறிப்பிட்டார். பலபொருள்கள் இங்குமங்கும் படகில் வரும்போகும்.
குமரியாறு என்று இப்பகுதியை இலக்கியம் சொல்வதுமுண்டு.

கம்பன் இதனை அறிந்தவன். அவன் பாட்டில் இருங்கடல் = கரிய கடல் என்பது இப்பாடலுக்குப் பொருந்தும்.
பெரியகடல் சேது அணையில் இல்லை.

.

அருங் கடகம் அம் கையில் அகற்றி, அயர்வோடும்
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா,
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து
இருங் கடல் கடந்து, கரை ஏறினன்-இராமன்.
http://www.tamilvu.org/slet/l3761/l3761ine.jsp?x=6757&
Reply all
Reply to author
Forward
0 new messages