ஒரு லட்சம் முதலீடு செய்யுங்கள் நீங்களும் திரைப்படத் தயாரிப்பாளர்தான்!

18 views
Skip to first unread message

discovery book palace

unread,
Jul 8, 2014, 11:23:48 AM7/8/14
to பண்புடன்
வணக்கம்.  கடந்த 5- ஆண்டுகளாக டிஸ்கவரி புக் பேலஸை வெற்றிகரமாக நடத்தியதின் தொடர்ச்சியாக  இப்போது  ”டிஸ்கவரி சினிமாஸ்”  என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ”கிரௌடு பண்ட்” என்ற பலர் இணைந்து தயாரிக்கும் “கூட்டுத்தயாரிப்பு” என்ற முறையில் திரைப்படம் தயாரிப்பதற்கான திட்டமிடலை முன்னெடுத்து அது பல கட்டங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.  இதுவரை 35 சதவீத முதலீட்டை ஈட்டி இருந்தாலும்,  இன்னும் வேகமாக பலர் இணைந்து வருகிறனர்.  ஒருவர் குறைந்தது ஒரு லட்சம் என்று ஒரு கோடி முதலீட்டில் அதிகபட்சமாக 100 பேர் இனைந்ததுதான் இந்த திரைப்பட தயாரிப்புக் குழு. முழுக்க முழுக்க வியாபார ரீதியலான வணிகப்படமாக இருந்தாலும் நமக்கென்று இருக்கும் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு வெற்றித் திரைப்படமாக  முத்திரை பதிக்கவுள்ள இம்முயற்சிக்கு நம்பிக்கையும், வியாபார நோக்கமும், திரைப்பட ஆர்வமும் உள்ளவர்கள் அவசியம் முதலீடு செய்யவும். அனைத்து தொடர்புகளுக்கும் 9940446650 ( வேடியப்பன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது discover...@gmail.com  என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பவும். கூடுதல் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். 

--
M.Vediyappan.  9940446650

வினையூக்கி செல்வா

unread,
Jul 8, 2014, 12:51:49 PM7/8/14
to பண்புடன்
வேடியப்பன் சார், 
வாழ்த்துகள். சில ஆண்டுகளுக்கு முன்னர், தொட்டால் தொடரும் 'கேபிள் சங்கர்' சார் கூட இதே போன்றதொரு திட்டத்தை முன் மொழிந்தார். நான் இன்னமும் ஏழை மாணவனாக இருப்பதால், இதில் சேர இயலாது , அதனால் வாழ்த்துகள் மட்டும். ஆனால் பண்புடனில் சிலப்பல ஆர்வலர்கள் இருக்கலாம். 
பண்புடனில், ஆசிப் அண்ணாச்சி ஆசி பெற்றவர்கள், கொஞ்சம் குசும்பாகவும் பதில் தருவதை வழக்கமாக வைத்திருப்பதால்,  ஒரு குறும்புக்கருத்து. கடைசியாக உங்களைப் பற்றி படித்தது இன்னொரு நூறுக்காக... தற்பொழுது மற்றொரு நூறு. நூற்றுக்கு நூறு வாழ்த்துகள். குறும்பிற்கு கோவித்துக் கொள்ளாமல், பண்புடனில் முகப்பில் மீண்டும் வருமுறை வருவதற்காக இந்தப் பதில் என்று எடுத்துக் கொள்ளுங்கள். என் பெயரைப் பார்த்ததும் பலர் இவ்விழைக்கு வருவார்கள். நான் இங்கு பாப்புலர் பாய்.  





--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 1:38:32 PM7/8/14
to பண்புடன்

இன்வஸ்ட்மண்டோட நடிக்கவும் வாய்ப்பு கிடைக்குமுங்களா?

--

ஹாஜா மொஹைதீன்

unread,
Jul 8, 2014, 1:43:41 PM7/8/14
to panb...@googlegroups.com

2014-07-08 20:38 GMT+03:00 Srimoorthy S <s.srim...@gmail.com>:
இன்வஸ்ட்மண்டோட நடிக்கவும் வாய்ப்பு கிடைக்குமுங்களா?

பச்ச
உங்கள நடிக்க வச்சா முனீஸ்காந்தை விட நல்லா இருக்குமய்யா

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 1:46:34 PM7/8/14
to பண்புடன்

முனீஸ்காந்த் யாரு மாமு?

--

செல்வன்

unread,
Jul 8, 2014, 1:47:13 PM7/8/14
to பண்புடன்
1 கோடில படம் எடுக்க முடியுமா? சின்ன பட்ஜெட் படமா?


வினையூக்கி செல்வா

unread,
Jul 8, 2014, 1:47:16 PM7/8/14
to பண்புடன்
எனக்கு சூது கவ்வும் படத்தின் சூட்டிங்க் காட்சி நினைவுக்கு வருகின்றது. ஸ்ரீமூர்த்தி சார் 

ஹாஜா மொஹைதீன்

unread,
Jul 8, 2014, 1:49:47 PM7/8/14
to panb...@googlegroups.com

2014-07-08 20:46 GMT+03:00 Srimoorthy S <s.srim...@gmail.com>:
முனீஸ்காந்த் யாரு மாமு?

 

ஒரே நாளில் வாழ்க்கையையே மாற்றும் வலிமை சினிமாவுக்கு மட்டுந்தான் உண்டு. முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த்


பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் 'முண்டாசுப்பட்டி’ படத்தில், 'முனிஸ்காந்த்’ கேரக்டரில் துவம்சம் செய்திருக்கிறார் ராம்தாஸ். கொங்கு வட்டாரத்துப் பாஷையில், ஒவ்வொரு வசனத்தை யும் காமெடி பன்ச்களாக ராம்தாஸ் விசிறும்போது, தீப்பிடிக்கிறது தியேட்டர்.  

''என் சொந்த ஊரு, திண்டுக்கல் பக்கத்துல இருக்கிற நிலக்கோட்டை. 2002-ல மெட்ராஸுக்கு வந்தேன். லோடு தூக்குறது, தண்ணி கேன் போடுறதுனு பார்ட் டைம் வேலைகள் பார்த்துக்கிட்டே, ஃபுல் டைமா சினிமா வாய்ப்பு தேடிட்டு இருந்தேன். கும்பல்ல நிக்கிறது, கூட்டத்துல கோஷம் போடுறதுனு சின்னதும், ரொம்ப ரொம்பச் சின்னதுமா பல படங்கள்ல தலை, கை, கால் காட்டியிருக்கேன்.

அப்போ 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக 'முண்டாசுப்பட்டி’ குறும்பட ஷூட்டிங் முடிச்சிருந்தார் ராம் சார். அதுல முனிஸ்காந்த் கேரக்டர்ல நடிச்சிருந்தவரால், டப்பிங் பேச சென்னைக்கு வர முடியலை. அந்த கேரக்டருக்கு டப்பிங் பேச என்னை அழைச்சிட்டுப் போயிருந்தார் காளி வெங்கட். போன உடனே, 'இந்த டயலாக்கைப் பேசுங்க’னு ராம் சார் கொடுத்த வசனம்தான், 'தைக்கப்புறம் தமிழ் சினிமாவுலமூணு பேர்தான் டாப்பாமாம். ஒண்ணு ரசினிகாந்து; இன்னொண்ணு கமலஹாசன்; மூணாவதா முனிஸ்காந்து’! அதை, கோயம்புத்தூர் ஸ்லாங்ல நான் பேசினதைக் கேட்டுட்டு விழுந்து விழுந்து சிரிச்சவர், 'இவரே பேசட்டும். நேரா டப்பிங் போயிடலாம்’னு சொல்லிட்டார். அப்படி குறும்படத்துக்கு டப்பிங் பண்ண வாய்ப்புதான், 'முண்டாசுப்பட்டி’ சினிமாவில் என்னை நடிக்கவெச்சது.

சினிமாவுல ஒரு வெற்றி, எப்படி ஒரே நாள்ல வாழ்க்கையை மாத்தும்னு போன வாரம்தான் அனுபவிச்சேன். ஊருக்குள்ள யார் சொல் பேச்சையும் கேட்காம, சினிமா ஆசையில சென்னையில சுத்திட்டு இருந்த பய நான். படத்துலயும் கிட்டத்தட்ட எனக்கு அதே மாதிரி கேரக்டர்தான். 'முண்டாசுப்பட்டி’ ரிலீஸுக்கு முன்னாடி வரை எங்க வீட்ல என்னை மதிக்கவே மாட்டாங்க. ஆனா, படம் ரிலீஸான ரெண்டாவது நாள், ஒரு புது நம்பர்ல இருந்து போன். 'ஹலோ’ சொன்னா, 'அப்பா பேரைக் காப்பாத்திட்டடா... காப்பாத்திட்ட’னு ஒரே அழுகாச்சி. 'யோவ் யாருய்யா பேசுறது?’னு அதட்டிக் கேட்டா, 'நான்தாப்பா... உன் அண்ணன். உன்னை சினிமால பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்குப்பா’னு பொங்கிப் பூரிக்கிறாப்ல. 'டேய் பாவி... மூணு நாளைக்கு முன்னாலதான் உங்கிட்ட 500 ரூபாய் கேட்டேன். கழுவிக் கழுவி ஊத்தினேயடா’னு எனக்குள்ள மைண்ட் வாய்ஸ் ஓடுது. அப்பா இறந்த பிறகு என் அடம், அழும்புகளைச் சகிச்சுக்கிட்டு வளர்த்த அம்மா, 'தம்பி... உன்னை என்னமோ நினைச்சேன்டா. இனி நீ நல்லா இருப்படா. இனி எனக்குக் கவலை இல்லைடா’னு அழுவுது. நமக்கே ஃபீலிங்ஸ் ஆகிடுச்சுனா, பார்த்துக்கங்களேன்!

நடுவுல மணிரத்னம் சாரோட 'கடல்’ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பிரமாதமா நடிச்சு மணி சாரை அசத்திடணும்னு போனேன். ஆனா, ஸ்பாட்ல மணி சாரைப் பார்த்ததும் நடுக்கம் வந்திருச்சு. சீன், வசனம் எல்லாம் மறந்து கை, கால் உதற ஆரம்பிச்சிடுச்சு. ஏகப்பட்ட டேக். அவ்வளவு சாந்தமான மணி சாரே கொஞ்சம் டென்ஷனாகிட்டார். 'ஏன் ஒழுங்கா நடிக்க மாட்டேங்கிற..? நடிக்கத் தெரியும்ல. சிம்பிளா நடி’னு கொஞ்சம் கோபமாவே சொன்னார். பயத்தோடவே ஏதோ ஒப்பேத்தி நடிச்சேன். 'அவர் படத்துல நடிக்க எவ்வளவு பேர் காத்திருக்காங்க. கிடைச்ச வாய்ப்பைச் சொதப்பிட்டேனே... தவிர, அவர் எவ்வளவு சாஃப்ட்டான மனுஷன். அவரையே டென்ஷன் ஆக்கிட்டோமே’னு வருத்தம். ஸாரி மணி சார்!'' என்று ஃபீல் செய்தவரிடம் கல்யாணம் பற்றி கேட்டதும் குஷியாகிவிட்டார்.

''வீட்ல பல மாமாங்கமா பொண்ணு தேடிட்டு இருக்காங்க. பொண்ணு வீட்டுக்காரங்க, 'தம்பி எங்க வேலை பார்க்கிறார்?’னு கேட்டதும், 'சினிமாவுல’னு எங்க வீட்ல சொல்வாங்க. கேட்டுட்டுப் போறவங்கதான், மழைக்குக்கூட எங்க வீடு உள்ள தெருப் பக்கம் ஒதுங்க மாட்டாங்களாம். அப்பல்லாம், 'டேய்... சினிமால இருக்கேன்னு ஏன்டா சொல்றீங்க? வாட்டர் கம்பெனி வெச்சிருக்கார்; லோடு வண்டி ஓட்டுறார் அது இதுனு ஏதாவது சொல்ல வேண்டியதுதானே’ம்பேன். 'அப்படிச் சொன்னா, சம்பளம் எவ்வளவுனு கேட்கிறானுங்க. அதுக்கு என்ன பதில் சொல்றது?’னு கேட்பான் என் அண்ணன். 'அதுவும் ரைட்டுதான்’னு நான் சைலன்ட் ஆகிடுவேன்.

அதே அண்ணன் இப்ப, 'கவலைப்படாதடா... எகிடுதகிடா பவுன் கேட்டு பொண்ணு கட்டுவோம்’னு சொல்றான். 'என் வாழ்க்கையில விளக்கேத்தி வெக்கிற எண்ணமே உனக்குக் கிடையாதா? பவுன்லாம் கேட்டு, வர்ற வரன்களையும் கெடுத்துப்புடாதீங்கடா. ஏழைக் குடும்பமாவே பார்த்து முடிங்க’னு சொல்லியிருக்கேன். காஷ்மீர், சுவிட்சர்லாந்து,  ஆப்பிரிக்கா... எங்க சார் சீஸன் நல்லா இருக்கும்? ஹனிமூனுக்குப் போகணும்!'' ஆவலாகச் சிரிக்கிறார் ராம்தாஸ்.

ஸ் பெ

unread,
Jul 8, 2014, 1:50:54 PM7/8/14
to panbudan
;-)

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 1:58:35 PM7/8/14
to பண்புடன்

நல்லபடியாத்தான் சொல்லியிருக்கீங்களா...

நான் சாம் ஆண்டர்சனுக்கோ இல்ல பவர்ஸ்டார் ரேஞ்சுக்கோதானே கற்ப்னை பண்ணீட்டு இருந்தேன்.

கொஞ்ச வருசம் முன்னாடிவரைக்கும் ஜாக்கிசான் மாதிரி உருண்டு புரண்டு குதிச்சி தாவி அதிரடி சண்டைக் காட்சிகளிலெல்லாம் நடிச்சி அசத்தணும்னு திட்டம் போட்டிருந்தேன். இப்ப இருக்கற நிலைமைக்கு ஒரு தடவை விழுந்தா இன்னொருத்தர் உதவி இல்லாம எந்திரிக்க முடியாது போல இருக்கு.

--

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 2:03:31 PM7/8/14
to பண்புடன்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி சார்ரேசார்,

யூட்யூப்ல தேடியும் எனக்கு அந்த காட்சி நினைவுக்கு வரலையே.

நானும் ஒரு நாள் ஹீரோவாகி உங்க கொட்டத்தையெல்லாம் அடக்கறேனா இல்லையான்னு பாருங்க.

ஏற்கனவே இசைப்புலமை, பாடல் புலமையெல்லாம் வளத்து வெச்சிருக்கேன். ரொம்ப ஸ்பீடா போறேன்னு கொஞ்சம் ப்ரேக் விட்டிருக்கேன். மீண்டும் உசுப்பிடாதீங்க

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 2:04:04 PM7/8/14
to பண்புடன்

உங்களுக்கு நான் நடிக்கிற படத்தில் சான்ஸ் வேணுமா வேணாமா?

வினையூக்கி செல்வா

unread,
Jul 8, 2014, 2:15:01 PM7/8/14
to பண்புடன்
அப்போ நடிக்க சான்ஸ் கொடுத்தால்தான் மூலதனம் போடுவீர்கள். அப்படித்தானே ஸ்ரீமூர்த்தி சார். 

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 2:18:51 PM7/8/14
to பண்புடன்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி சார்ரேசார்,

கண்டிப்பாக, நிச்சயமாக.

அதுவும் ஹீரோவாத்தான் நடிப்பேன். நாலு ஃபைட் போடுவேன், ரெண்டு டூயட், ஒரு குத்துப் பாட்டு, ஒரு சோகப் பாடல், ஃபாரின் சாங் ஒன்னு, ஃபாரின் புலன்விசாரனை ஒன்னு.

இதெல்லாம் இருக்குற மாதிரி ஒரு படத்துல ஹீரோவாக நடிக்கப் போறேன்.

வினையூக்கி செல்வா

unread,
Jul 8, 2014, 2:22:39 PM7/8/14
to பண்புடன்
எப்படி SriMoorthy சார், எல்லா இழைகளையும் ஹைஜாக் செஞ்சுடுறீங்க , காரல் மார்க்ஸ் 'மூலதனத்திற்காக' வந்தால் கூட,  ஓடிடுவார் போல.  (ஸ்டாலின் பெலிக்ஸ் என்னை மன்னிக்க. )

Srimoorthy S

unread,
Jul 8, 2014, 2:41:51 PM7/8/14
to பண்புடன்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,

நானே மொக்கை போட ஆளில்லாம அல்லாடிட்டு கிடைக்கிற இழையிலெல்லாம் தராதரமில்லாம மொக்கை போட்டு வெறியாத்திட்டு இருக்கேன். இதுல அப்ரைசல் வேறயா. டிஸ்கவரி ஓனர் வந்துடப் போறார் ;)

வினையூக்கி செல்வா

unread,
Jul 8, 2014, 5:21:49 PM7/8/14
to பண்புடன்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,

Srimoorthy Sir, இப்படி எல்லாம் அடைமொழி கொடுத்தீங்கன்னா, 'ஆண்ட பரம்பரை' வந்துவிடப் போகின்றார்கள்... 

Srimoorthy S

unread,
Jul 9, 2014, 12:38:12 AM7/9/14
to பண்புடன்

ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க வினையூக்கி செல்வா சார்ரேசார்,

யாரு வந்தா எனக்கென்ன?
பத்து ரூபா கொடுத்து இவருதாங்க இப்படியெல்லாம் பேசச் சொன்னார்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பேன் ;)

Asif Meeran

unread,
Jul 9, 2014, 2:33:28 AM7/9/14
to panb...@googlegroups.com
நூற்றுக்கு நூறு :-)
Bulls eye


இன்னொரு நூறுக்காக... தற்பொழுது மற்றொரு நூறு. நூற்றுக்கு நூறு வாழ்த்துகள்.

எனது வாழ்த்துகளும்!!
மஞ்சூரண்ணல், ஸ்டாலின் ஃபெலிக்ஸ், நந்தாளர், வில்லன், சாபத்தா போன்ற
பண முதலைகள் முதலீடு செய்யக் கூடும்

sadayan sabu

unread,
Jul 9, 2014, 2:42:58 AM7/9/14
to panbudan

நானு ரொம்ப ராசியான ஆளுவே,
ஓய் எங்க பக்கத்திலே ஒரு சொலவடை , விடியாமூஞ்சி வேலைக்குப் போயி வேலை கெடைச்சாலும் கூலி கெடைக்காதென

--

Asif Meeran

unread,
Jul 9, 2014, 2:46:23 AM7/9/14
to panb...@googlegroups.com

நானு ரொம்ப ராசியான ஆளுவே,
ஓய் எங்க பக்கத்திலே ஒரு சொலவடை , விடியாமூஞ்சி வேலைக்குப் போயி வேலை கெடைச்சாலும் கூலி கெடைக்காதென


எங்க் ஊரு பக்கம் இதத்தான் போட்டு வாங்குறதுன்னு சொல்வாங்க :-))

C.M உதயன்

unread,
Jul 9, 2014, 2:50:54 AM7/9/14
to பண்புடன்
ஆசாத் அய்யா, ஜீவ்ஸ் அண்ணன், உமாநாத் அண்ணன், பாலபாரதி தல, சுபைர் இவர்களின் பெயர்கள் இல்லாததால் இந்த இழையில் இருந்து வெளியேறுகிறென்.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

shylaja

unread,
Jul 9, 2014, 2:59:23 AM7/9/14
to பண்புடன்
என் பேரை  சும்மாணாச்சுமாவது  குறிப்பிடாம போனதால் நானும் கோபமா  இருக்கென்  ஆனா உதயனைப்போல   'இந்த இழையில் இருந்து வெளியேறுகிறென்.' என்று 

'சொல்லமாட்டேன் :) பெண்பண்பினர் அல்லவா?:)
அன்புடன்
ஷைலஜா.

நல்ல குணங்களே  நம்மிடை யமரர்  
பதங்களாம். கண்டீர்! பாரிடை மக்களே!
....பாரதி......

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:16:51 AM7/9/14
to panb...@googlegroups.com
இவங்களையெல்லாம் ஏன் சொல்லலைன்னா இவங்களே த்னியாகவே படமெடுக்குமளவுக்கு பெரும் பண முதலைகள் என்பதால்தான்
 
ஆசாத் அய்யா, ஜீவ்ஸ் அண்ணன், உமாநாத் அண்ணன், பாலபாரதி தல, சுபைர் இவர்களின் பெயர்கள் இல்லாததால் இந்த இழையில் இருந்து வெளியேறுகிறென்.

எனவே நீ இந்த இழையை விட்டுப் போக வேண்டாமென்று கேட்டுக் கொள்வேன்னுல்ல்லாம் நெனைக்காதே
க்ரூப்பை விட்டே போனாலும் கண்டுக்க மாட்டேன் :-)

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:17:43 AM7/9/14
to panb...@googlegroups.com
'சொல்லமாட்டேன் :) பெண்பண்பினர் அல்லவா?:)

ஜோக்கர்களின் தேசமான அமெரிக்கா போய் வந்ததுலேருந்து நகைச்சுவை உணர்வு கூடிடுச்சு போல

Ahamed Zubair A

unread,
Jul 9, 2014, 3:19:29 AM7/9/14
to பண்புடன்
பண்புடனின் கொள்கையை விடாமல் பற்றிப்பிடித்திருக்கும் அண்ணாச்சிக்கு ஏன் நாமே ஒரு பண்பாளர் பட்டம் தரக்கூடாது??

#பற்றிப்பிடித்த பண்பாளர் ;))

shylaja

unread,
Jul 9, 2014, 3:22:20 AM7/9/14
to பண்புடன்
OMG பணமுதலைலாம் இல்ல சாமி    
ஆமா  பணத்துக்கும் முதலைக்கும்  என்ன  சம்பந்தம்? அறிவுபூர்வமான கேள் விகளைக் கே ட்பதில் பெண் முன்னிற்கிறாள் என எங்கோ படிச்ச நினைவு:)


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:22:21 AM7/9/14
to panb...@googlegroups.com
பண்புடனின் கொள்கையை விடாமல் பற்றிப்பிடித்திருக்கும் அண்ணாச்சிக்கு ஏன் நாமே ஒரு பண்பாளர் பட்டம் தரக்கூடாது??
#பற்றிப்பிடித்த பண்பாளர் ;))

எலே மூதி!
நமக்கு நாமே திட்டத்துக்கு பண்புடனில் அனுமதி இல்லை
தேவன் ஐயாவுக்கு வேணும்னா இந்த விருதை சிபாரிசு செய்கிறேன்
அவர் கிட்ட உடும்பெல்லாம் பாடம் படிக்கணும் :-)

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:25:50 AM7/9/14
to panb...@googlegroups.com
ஆமா. இன்னைக்கு என்ன சமைக்கலாம் போன்ற ஆக்கபூர்வமான் கேள்விகளில் பெண் முன் நிற்கிறாள்

அல்லது

யாராவது ஆண் அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டால் குறுக்கே பெண் நிற்கிறாள் என்று எப்படி வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளலாம் :-)

shylaja

unread,
Jul 9, 2014, 3:29:47 AM7/9/14
to பண்புடன்
என்ன சமைக்கிறதுன்னா அவ்வளவு 
 மட்டமா தெரியுதா 
 உங்களுக்கு  சமையலும் ஒரு கலை  அதை செய்யவும் அறிவு தேவை  .

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:31:46 AM7/9/14
to panb...@googlegroups.com
 உங்களுக்கு  சமையலும் ஒரு கலை  அதை செய்யவும் அறிவு தேவை  .

ஹோட்டலிலேயெ மூணூ வேளையும் மொக்கும் எனக்குத் தெரியாதா சமையல் ஒரு கலை என்று :-)

shylaja

unread,
Jul 9, 2014, 3:34:29 AM7/9/14
to பண்புடன்
பிரசாத்து இருந்தா  இது வஞ்சகப்புகழ்ச்சி அணி என அழகா இலக்கணம் சொல்லி இருப்பான் :):)


2014-07-09 0:31 GMT-07:00 Asif Meeran <asifme...@gmail.com>:

 உங்களுக்கு  சமையலும் ஒரு கலை  அதை செய்யவும் அறிவு தேவை  .

ஹோட்டலிலேயெ மூணூ வேளையும் மொக்கும் எனக்குத் தெரியாதா சமையல் ஒரு கலை என்று :-)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:35:25 AM7/9/14
to panb...@googlegroups.com
படத்துக்கு முதலீடு கேட்டது ஒரு குத்தமாய்யா?? :-)

மஞ்சூர் ராசா

unread,
Jul 9, 2014, 3:42:52 AM7/9/14
to பண்புடன்
முதலீடு கேட்டது குத்தமில்லே. முதலீடு செய்ய விருப்பமிருந்திருந்தா செய்திருக்கணும். அதெ விட்டுப்போட்டு மத்த பாவப்பட்ட மனுசங்களெ இழுத்து விடுவது சரியா என்பதை யோசிக்கவும் பண்புடன் முதலாளியாரே!


2014-07-09 10:35 GMT+03:00 Asif Meeran <asifme...@gmail.com>:
படத்துக்கு முதலீடு கேட்டது ஒரு குத்தமாய்யா?? :-)


பிரசாத்து இருந்தா  இது வஞ்சகப்புகழ்ச்சி அணி என அழகா இலக்கணம் சொல்லி இருப்பான் :):)

--

Asif Meeran

unread,
Jul 9, 2014, 3:45:01 AM7/9/14
to panb...@googlegroups.com
முதலீடு கேட்டது குத்தமில்லே. முதலீடு செய்ய விருப்பமிருந்திருந்தா செய்திருக்கணும். அதெ விட்டுப்போட்டு மத்த பாவப்பட்ட மனுசங்களெ இழுத்து விடுவது சரியா என்பதை யோசிக்கவும் பண்புடன் முதலாளியாரே!

முதலீட்டுக்கு சாத்தியமுள்ள முதலாளிகள் பட்டியலைத்தானே வெளியிட்டேன் பண்புடன் பண்ணையாரே?!

Ahamed Zubair A

unread,
Jul 9, 2014, 5:46:07 AM7/9/14
to பண்புடன்
பற்றிப்பிடித்த பண்பாளர் தேவன் ஐயாவுக்கு வாழ்த்துகள்...

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 9, 2014, 12:11:16 PM7/9/14
to panb...@googlegroups.com
படம் பேரு நூத்துக்கு நூறா ? அண்ணாச்சி. ?/

On Wednesday, July 9, 2014 3:45:01 PM UTC+8, asifmeeranaj wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages