நில்லுயிர் = தாவரம் ( Re: ஓர் ஐயம்)

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 13, 2016, 11:32:54 AM11/13/16
to Santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Kavingar Jawaharlal


2016-11-13 6:02 GMT-08:00 Siva Siva <naya...@gmail.com>:
One can see the list of 12th grade textbooks of TN here.

தாவரவியல்-Botany
விலங்கியல்-Zoology

தாவரத்திற்குத் தமிழில் என்ன சொல் உருவாக்கலாம்?
தாவரவியல் = செடிகொடிமரவியல்?


தாவரம் = நில்லுயிர் (நகராவுயிர்).

தாவரவியல் = நில்லுயிரியல்
தாவரவியலுக்கு நிலைத்திணையியல் என்பதுமுண்டு.

நில்லுயிரியல் சுருக்கமாக, பொருத்தமாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.

-----------------------

தனித்தமிழில் முதலில் நூல்செய்தவரும், இந்தி எதிர்ப்பை முதலில் பதிவுசெய்தவரும்
பக்தி இயக்கத்தின் துறவி ஒருவர். இந்தியாவின் இரு செம்மொழிகளிலும் [1] மேதை. 
தமிழ்க் கடவுள் முருகனின் அடியார். இவையெல்லாம் ஈவேரா நாயக்கர், மறைமலை அடிகள்
என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், நான் குறிப்பிடும் துறவி செய்த தனித்தமிழ்நூலும்,
அதற்கு அவரே இட்ட தனித்தமிழ் உரையும் அருமை. அதன் பிற்சேர்க்கையாக
~3000 வடமொழிச்சொற்களுக்கு தமிழ்ச் சொற்கள் தந்துள்ளார்கள். தனித்தமிழ் நூலும்,
அதனுரையும் இணையத்திலுண்டு. ஆனால், அவர் தொகுத்த தமிழ் அகரமுதலி
இணையத்தில் ஏற்றவேணும். அதில் நில்லுயிர் (=தாவரம்) என்ன கொடுத்துள்ளார்கள் சுவாமிகள்
எனப் பார்க்க வேண்டும்.

இலந்தையின் தனித்தமிழ் காவடிச்சிந்து படித்தபோது சொல்ல நினைத்தேன். இப்போது வாய்ப்பு.
சரி, தமிழின் முதல் தனித்தமிழ்நூல் எது? யார் ஆக்கியோர்? :)

நா. கணேசன்
[1] You can read the politics of Telugu, Kannada being declared as Classical languages by Sonia Gandhi team,
and Prof. George Hart's note on these political announcements:
 

Just curious.
-----------

स्थावर a. [स्था-वरच्] 1 Fixed to one spot, stable, stationary, immoveable, inanimate (opp. जङ्गम); शरी- रिणां स्थावरजङ्गमानां सुखाय तज्जन्मदिनं बभूव Ku.1.23;6.67, 73. -2 Inert, inactive, slow. -3 Regular, established. -रः A mountain; स्थावराणां हिमालयः Bg.1.25. -रम् 1 Any stationary or inanimate object (such as clay, stones, trees &c. which formed the seventh creation of Brahman; cf. Ms.1.41); मान्यः स मे स्थावरजङ्गमानां सर्गस्थितिप्रत्यवहारहेतुः R.2.44; Ku.6.58. -2 A bow- string. -3 Immoveable property, real estate. -4A heir-loom. -5 A large body; (fig.) a gross or mate- rial body (स्थूलशरीर); गमनं निरपेक्षश्च पश्चादनवलोकयन् । ऋजुः प्रणिहितो गच्छंस्त्रसस्थावरवर्जकः Mb.12.9.19. -Comp. -अस्थावरम्, -जङ्गमम् 1 moveable and immoveable propery. -2 animate and inanimate things. -आत्मन् a. of immoveable form; स्थाने त्वां स्थावरात्मानं विष्णुमाहुस्त- थाहि ते Ku.6.67.)



தாவரசங்கமம் tāvara-caṅkamam
, n. < sthāvarajaṅgama. 1. The category of the movable and the immovable; இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள். தாவர சங்கம மென்னுந் தன்மைய (கம்பரா. குக. 1). 2. (Legal.) Movable and immovable property; வீட்டுப் பண்டங்களான அசையும்பொருளும் நிலம் வீடு முதலிய அசையாப் பொருள்களும். 3. Lingam and devotees of Šiva, as the fixed and movable forms of Šiva; சிவபிரானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கமும் அடியார்களும். (W.)

தாவரம் tāvaram
, n. < sthāvara. 1. Cate- gory of immovables, opp. to caṅkamam; நிலைத் திணை. செல்லாஅநின்றவித் தாவர சங்கமத்துள் (திரு வாச. 1, 30). 2. (Leg.) Immovable property, as house; வீடுபோன்ற அசையாப்பொருள். 3. The vegetable kingdom; மரப்பொது. (சூடா.) 4. Basis, foundation; ஆதாரம். 5. Place, habitation; இடம். (சங். அக.) 6. Body, as the abode of the soul; உடல். (சூடா.) 7. (Šaiva.) Lingam; இலிங்கம். சங்கமவடிவிற்குக் கூறிப்போந்த இயல்பில் லாத தாவரவடிவின் (சி. போ. சிற். 12, 3, 2, உரை). 8. Stability, steadiness; உறுதி. (W.)
--------------



2016-11-13 5:21 GMT-05:00 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>:
நல்லறிஞர்தம் ஆய்வு விளக்கங்கட்கு உளங்கலந்த நன்றி. Physics ஐ  இயற்பியல் என்று குறிப்பதில் தவறில்லை  என்றே நானும் கருதுகிறேன்.

2016-11-13 0:28 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, November 12, 2016 at 10:43:34 AM UTC-8, siva siva wrote:
இத்திருமந்திரப் பாட்டில் வரும் "இயற்பு" என்ற சொல்லுக்குத் தருமை  ஆதீன உரையில் காணும் விளக்கம்:

உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே .

பொழிப்புரையில்:
 ........`
சத்தியும், சிவமும்` என்னும் இரு திறத்தால் இயக்காவிடின் உயிர்கள் முழு மூடங்களாயும், உயிரல் பொருள்கள் சூனியமாயும் ஒழிவனவாம்.


குறிப்புரையில்:
...... இயற்பு - `நடத்துதல்` எனப் பிறவினை இது, `நடத்தல்` எனத் தன்வினையாயின், `இயல்பு` என நிற்கும்

`இருள்` என்றது, `சூனியம்` என்றபடி. சூனியம், இங்கு, இருந்தும் இல்லாமை. `இருள், மூடம்` - என்பவற்றை எதிர் நிரல் நிறையாகக் கொள்க.

இதனால், `ஆன்மாவும், கருவிகளும் கூடிய துணையானே அவத்தைகள் நிகழமாட்டா; இறைவனது திருவருள் உடனாய் நின்று நிகழ்விக்கவே நிகழும்` என்பது கூறப்பட்டது.


சிவனே நடத்துவது இயற்பியல் - Physics எனலாம். சிவனை இயற்கை (Nature) எனவும் குறிக்கலாந்தானே.
 

2016-11-12 13:26 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
கழக அகராதி, சென்னைப் பல்கலைக்கழக, கொலோன் தமிழ் லெக்ஸிகன்கள் போன்ற அகராதிகளில் இயற்பு என்ற சொல் காணப்படவில்லை. திருமந்திரம் தவிர வேறெங்காவது இச்சொல் காணப்படுகிறதா?

அனந்த்




--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119





--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 20, 2016, 3:13:01 PM11/20/16
to மின்தமிழ், மின்தமிழ், panb...@googlegroups.com, housto...@googlegroups.com
2016-11-13 9:01 GMT-08:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
Botany - 
>  நிலைத்திணை என்று பாவாணர் பெயர் சூட்டியுள்ளார்

ஆனால், பாவாணர் கொடுத்த பெயர் அசரம் (அ) ஸ்தாவரம் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லின்
தமிழ்ப் பெயராக 2000 ஆண்டாய் இருக்கிறது. உ-ம்: பாலைத் திணை நிலத்தை,
அதில் உள்ள எல்லாவற்றையும் “நடுவு நிலைத்திணை” என்கிறார் தொல்காப்பியர்.

"நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே"                 " தொல். பொ. 9


”எல்லாப் பொருள்களையும் இடம் பெயர்வதும் பெயராமையும் பற்றி இயங்குதிணை நிலைத்திணை என இரண்டாய் வகுத்துக் கூறினர். இவற்றை முறையே சரம் அசரம் என்றும் சங்கமம் ஸ்தாவரம் என்றும் கூறுவர் வடநூலார். இயங்குதிணை உயிருள்ளது மட்டும். நிலைத்திணையில் உயிருள்ளதும் இல்லாததும் அடங்கும். ” பாவாணர்
(இதில் இயங்குதிணை உயிருள்ளது மட்டும் என்கிறார். ஆனால், ஒளி, மின்சாரம், காந்த அலை, கப்பல், விமானம், காற்றாடி பட்டம், ... போன்ற Dynamic things-உம் இயங்குதிணை தான். என் துறை, Space Structural Dynamics = விண்வெளி ஸ்றக்சர்ஸ் இயங்கியல். சராசரம் = “நிலைத்திணை யியங்குதிணை பண்பாதியின்” (இல. கொ. 38;1).

வருணம் - வர்ணம்; எழுத்து.
"மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்"
என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரையில் ‘இங்ஙனம் மெய்க்கண் அகரம் 
கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் 
கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினர், அந்நிலைமை தமக்கே 
புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று 
உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் 
பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப 
முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து  
அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப 
முடிந்தது. `அகரமுதல ' என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய 
எழுத்துக்களெல்லாம் ; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் 
என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் `எழுத்துக்களில் 
அகரமாகின்றேன் யானே' எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க.’ 
என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது அறிக.

எனவே, அசரம் = ஸ்தாவரம் = நிலைத்திணை.
நிலைத்திணையில் (Stationary things) இருகூறுகள் உண்டு: 
(1) உயிருள்ளவை (Carbon, DNA based) (2) உயிரற்றவை.

Botany = நிலைத்திணையுயிரியல். 
சுருக்கமாக, நில்லுயிரியல் = Botany.

ஹிந்தியில் ஜீவ விஞ்ஞானம் = Biology, வனஸ்பதி விஞ்ஞானம் = Botany.
வடக்கே, ஸ்தாபர/ஸ்தாவர விக்யான் என்று Botany-ஐச் சொல்வதில்லை. 

எனவே, நில்லுயிரி = Plants. நில்லுயிரியல் = Botany.
நிலைத்திணையியல் என்றால் Science of Studying Stationary (Motionless) Things"
எனப் பொருள்படும். அது Botany அன்று. எனவே, Botany-கு நிலைத்திணையியல் என்பது
பிழையுடையது. தவிர்க்கப்படவேண்டும். Botany = Science of Plants. நிலைத்திணையில்
கார்பனோ, டிஎன்ஏவோ அணுவுமில்லாத பொருள்கள் ஏராளம். எனவே, நிலைத்திணையியல் = Botany
எனல் பொருந்தாது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 20, 2016, 3:20:45 PM11/20/16
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, panb...@googlegroups.com, kavingar....@gmail.com, pira...@googlegroups.com

2016-11-13 6:02 GMT-08:00 Siva Siva <naya...@gmail.com>:
One can see the list of 12th grade textbooks of TN here.

தாவரவியல்-Botany
விலங்கியல்-Zoology

தாவரத்திற்குத் தமிழில் என்ன சொல் உருவாக்கலாம்?
தாவரவியல் = செடிகொடிமரவியல்?




தாவரம் = நில்லுயிர் (நகராவுயிர்).
Reply all
Reply to author
Forward
0 new messages