கண்டரமாணிக்கம் பிரஹசரணம்.

424 views
Skip to first unread message

Karuannam Annam

unread,
Sep 4, 2012, 2:24:00 AM9/4/12
to Hari Krishnan, mintamil, thamiz...@googlegroups.com
அன்பிற்கினிய திரு ஹரிகி, நண்பர்களுக்கு வணக்கம். நலம் நாடுகிறேன். 

கண்டரமாணிக்கம் பிரஹசரணம் என்ற தங்கள் குறிப்பால் ஆர்வம் ஏற்பட்டு தங்களிடமும் நண்பர்களிடமும் மேலும் அறிய எழுதியுள்ளேன். 
எங்களூர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கண்டரமாணிக்கம். கண்டுகொண்ட மாணிக்க நாடு என்று நாட்டார் வழக்கியலில் அறியப்படுகிறது. ஊர் நடுவில் மாணிக்க நாச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது.
ஊர் கண்டரமாணிக்கம் என்றதும் பலரும் பிரஹசரணம் பற்றி என்னைக் கேட்டுள்ளார்கள்! பெரிய அக்ரஹாரம் இருந்து இன்று குடிபெயர்ந்துவிட்டார்கள். எங்கள் வீடு அக்ரஹாரத்தில்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார்கள். கோடிஆத்து இராமாயி ஆச்சி வீடு! பஞ்சாங்கம்,அத்தியயனப்பட்டர், குருக்கள், சுயம்பாகம், ஜோசியர்கள், ஆசிரியர்கள் என்று பல வீடுகள் இருந்தன. தெலுங்கு பேசுபவர்கள் பாதி. மிகச் சில சமயங்கள் தவிர யாரும் வேற்றுமை பாராட்டியதில்லை. நவராத்திரி கொலுவும், அவர்கள் வரலக்ஷ்மி நோன்பு போன்ற பண்டிகைப் பலகாரங்கள் பரிமாற்றமும் அன்பான பேச்சும் நண்பர்களுடன் விளையாட்டும் என்றும் இனிய நினைவுகள். இன்று வெளியூர் குருக்கள் வரவு தவிர வேறு இல்லை. 
கண்டரமாணிக்கம் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் வேறு ஊர் உள்ளதா? அல்லது வேறு குறியீடா? வடமா, பிரஹசரணம் என்பவை பற்றி சிறு விளக்கமும் இயன்றால் தரவும். 
மேலும் தகவல் இருந்தால் அளிக்கவும்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

Geetha Sambasivam

unread,
Sep 4, 2012, 2:28:32 AM9/4/12
to thamiz...@googlegroups.com, Hari Krishnan, mintamil
பிரஹசரணம், கண்டரமாணிக்கம் பிரஹசரணம், மழநாடு பிரஹசரணம் என இரண்டு விதம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் கண்டரமாணிக்கம் , கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் புதுக்குடி என்னும் ஊருக்கருகே உள்ள சின்ன கிராமம். ஆனால் திருச்சி அருகே உள்ளதும் கண்டரமாணிக்கம் பிரஹசரணம் எனச் சொல்கின்றனர்.  எந்த ஊர் பிரஹசரணம் என்பது குறித்து என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை.

2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Raja sankar

unread,
Sep 4, 2012, 2:37:32 AM9/4/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
அன்பின் ஹரிகி,

பிரஹசரணம் அதுவும் மழநாட்டு பிராஹசரணம் என்று படித்தவுடன் சரணம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் படித்த சேரர்கோட்டை நாவலில் காந்தளூர்ச்சாலையில் இருக்கும் பிரிவுகளுக்கு சரணம் என்ற பெயர் உண்டு என படித்தேன். இந்த சரணம் தான் அந்த சரணமா?

சரணம் என்பது நமஹ என்பதன் தமிழ் என்று கொண்டால் இந்த பெயர் எதைக்குறிக்கிறது?

ராஜசங்கர்
(Rajasankar)

2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>

Hari Krishnan

unread,
Sep 4, 2012, 3:05:18 AM9/4/12
to Raja sankar, mint...@googlegroups.com


2012/9/4 Raja sankar <errajasa...@gmail.com>

அன்பின் ஹரிகி,

பிரஹசரணம் அதுவும் மழநாட்டு பிராஹசரணம் என்று படித்தவுடன் சரணம் என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் படித்த சேரர்கோட்டை நாவலில் காந்தளூர்ச்சாலையில் இருக்கும் பிரிவுகளுக்கு சரணம் என்ற பெயர் உண்டு என படித்தேன். இந்த சரணம் தான் அந்த சரணமா?

சரணம் என்பது நமஹ என்பதன் தமிழ் என்று கொண்டால் இந்த பெயர் எதைக்குறிக்கிறது?

எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத விஷயங்கள்.  இருந்தாலும் தெரிந்த அளவுக்குச் சொல்கிறேன்.  பாரதி, கண்டரமாணிக்கம் பிரஹசரண வகுப்பைச் சேர்ந்தவர் என்பது நான் படித்த நூற்றுக்கணக்கான பாரதி வாழ்க்கை வரலாற்றப் புத்தகங்களில் ஏதோ ஒன்றில் சொல்லப்பட்டிருந்தது.  நூலின் பெயர், ஆசிரியர் பெயர் என்று எதுவும் நினைவில் இல்லை.  மழநாட்டு பிரஹசரணம் எனக்கு அறிமுகமான ஒன்றுதான்.  என் தந்தையின் (ஆகவே என்னுடைய) பிரிவும் அதுதான்.  மழநாடு என்பது ஆங்கிலத்தில் Malanad என்றெழுதப்படுவதால், மலைநாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளவும்படுகிறது.  சேதுபதி அருணாசலம் புகைப்படக் குறிப்பில் மலைநாடு என்று குறிப்பிட்டிருந்ததைத் திருத்தியபோதுதான் இந்தக் குழப்பத்தைப் பற்றி அறிந்துகொண்டேன்.  கர்நாடகாவின் மேற்குமலைத் தொடர் பகுதியில் அமைந்திருக்கும் Malanadதான் பெரியபுராணத்தில் ஆனாயநாயனார் புராணத்தில்

மாடு விரைப் பொலி சோலையின் வான் மதி வந்து ஏறச் 
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற 
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற 
நீடு வளத்தது மேன்மழநாடு என்னும் நீர் நாடு 

என்று குறிப்பிடப்படும் இடமாக இருக்குமோ என்ற ஐயம் எனக்குண்டு.  தொடர்ச்சியாக இடம்பெயர்ந்துகொண்டே இருப்பவர்களுக்கு மிஞ்சி நிற்பது, ஊரின் பெயர் அடையாளம் மட்டும்தானே!

பிரஹசரணத்தைப் பற்றி.  ப்ருஹத்சரணம் என்பதே பிரஹசரணமாகத் திரிந்தது.  வடக்கிலிருந்து இட்டுவரப்பட்டவர்கள் வடமர்கள்; ஆயிரத்தெண்மரே அஷ்ட ஸஹஸ்ரம்; ப்ருஹத் (ப்ருஹதீஸ்வரர், ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே..... எல்லாவற்றிலும் இடம்பெறும் ப்ருஹத்=பெரிய என்று பொருள்படுகிறது.  இதற்குமேல் எனக்கு அர்த்தம் தெரியாது.  தேவ் சொல்லுவார்.)

வடமன், வாத்திமா, பிருஹசரணம், அஷ்டஸஹஸ்ரம், மூவாயிரவர்..... எல்லாமே வெவ்வேறு குழுக்களைக் குறிக்கும் பெயர்கள்.  பெயர்க்காரணம்கூட தெரியாத அளவுக்கு நினைவிலிருந்து மங்கிப் போய்விட்ட பழங்காலக் குழுக்கள். 

பிருஹசரணத்தில் இரண்டு பிரிவுகள்.  ஒன்று மழநாடு.  இன்னொன்று கண்டரமாணிக்கம்.  பாரதி கண்டரமாணிக்க பிரஹசரணப் பிரிவு என்பது ஒரு தகவல் என்ற அளவில் மட்டுமே எனக்குத் தெரியும்.  இப்போது, திரு வினைதீர்த்தான் அவர்கள் காட்டியிருப்பதைப் பார்க்கும்போதுதான், அது ஒரு ஊருடைய பெயர் என்பது புரிகிறது.  அவர் சொல்வதுபோல், அது சிவகங்கையைச் சேர்ந்த கண்டரமாணிக்கமாக இருக்கும் வாய்ப்பே அதிகம் என்று தோன்றுகிறது.  பாரதி எட்டயபுரத்துக்காரன்.  திருநெல்வேலி.  ஆனால், அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல ஆங்காங்கே சிதறுண்டுபோய்க் கிடக்கும் இந்தக் குழுக்களின் வேர்கள் எங்கே என்று தேடித்தான் கண்டடைய வேண்டும்--அதாவது, என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில்.  இந்தத் துறையில் வித்தகர்களுக்கு இது எளிதான செயலாக இருக்கும்.

சரணம் என்பது நமஹ என்பதன் தமிழ் என்று நீங்கள் சொல்வதற்கு என்ன பொருள் என்று விளங்கவில்லை.  சரணமும் சரி, நமஹவும் சரி, ஒரே மொழியைச் சேர்ந்த சொற்கள்.  சரணத்துக்கே charana, sarana என்று இரண்டு உச்சரிப்புகள் உண்டு.  எல்லாம் தேவாதி தேவருக்கான பங்கு.  அவருக்கே விட்டுவிடுகிறேன்.

இப்போது கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்று வேலை நெருக்கடி.  (அது இறுகிக் கொண்டே போகும்; திடீரென்று தளரும்.  அதன் போக்கு,என் கையில் இல்லை.)  மற்றவற்றை நிதானமாகப் பேசலாம்.  அதுவரையில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொள்கிறேன்.



--
அன்புடன்,
ஹரிகி.

sharadha subramanian

unread,
Sep 4, 2012, 3:13:58 AM9/4/12
to mint...@googlegroups.com
ப்ரும்மாவை சரணைந்தவர்கள் ப்ரஹச்ரணம் என்று கூறக்கேட்டு இருக்கிறேன்மேலும் கேலிக்காக் ப்ரஹச்சரணம் பெப்பெப்பே என்ற வழ்க்கும் பேசுவார்கள் அஷ்டசாஸ்த்திரம் அக்கிலி பிக்கிலி என்றும் கேலிபேச்சு உண்டு வடமனுக்கு வாய்வெச்சஇடம் எல்லாம் உற்வு என்றும் சொல்வார்கள்.

--- On Tue, 4/9/12, Hari Krishnan <hari.har...@gmail.com>
wrote:

2012/9/4 Raja sankar <errajasa...@gmail.com>

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Sep 4, 2012, 3:15:08 AM9/4/12
to mint...@googlegroups.com


2012/9/4 sharadha subramanian <shara...@yahoo.co.in>

ப்ரும்மாவை சரணைந்தவர்கள் ப்ரஹச்ரணம் என்று கூறக்கேட்டு இருக்கிறேன்

பிரம்மா வேறு; ப்ரம்மம் வேறு அல்லவா?

Hari Krishnan

unread,
Sep 4, 2012, 4:21:16 AM9/4/12
to Raja sankar, mint...@googlegroups.com


2012/9/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

ஆயிரத்தெண்மரே அஷ்ட ஸஹஸ்ரம்

எண்ணாயிரவர்.  தவறிவிட்டது.  மன்னிக்கவும்.

கி.காளைராசன்

unread,
Sep 4, 2012, 6:04:08 AM9/4/12
to mint...@googlegroups.com, Hari Krishnan, thamiz...@googlegroups.com
வணக்கம்.

2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>
எங்களூர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கண்டரமாணிக்கம். கண்டுகொண்ட மாணிக்க நாடு என்று நாட்டார் வழக்கியலில் அறியப்படுகிறது. ஊர் நடுவில் மாணிக்க நாச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது.
இரண்டு வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன்.

கண்ட+அர+மாணிக்கம்

கண்ட = கழுத்து
அர = அரவு, பாம்பு
மாணிக்கம் = மாணிக்கக்கல்
என்று பொருள் கொண்டிருந்தேன்.

அன்பன்
கி.காளைராசன்

N D Logasundaram

unread,
Sep 4, 2012, 11:30:55 AM9/4/12
to mint...@googlegroups.com, adi...@shaivam.org, M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan
அன்பு மிகு காளைராஜன் அவர்களுக்கு
 
தாங்கள் கண்டரமாணிக்கம் எனும் ஊரைக் குறிக்கப்  பார்த்தேன்  
 
அதனால் இந்த வேண்டுகோள்
சொந்த நலனுக்கல்ல பொதுவாக கோயில் முதலியவற்றில் அன்புடையவர்
 யாவருக்கும் பயன் படக் கூடியது தான்>>>>>>>>>>>  உதவவும்  
 
தங்கள் திருப்பூவணம் மூவர் தேவாரப் பாடல் பெற்றது போலே
மாணிக்கவாசகர்  இயற்றிய திருவாசகத்தில் குறிக்கும் புனிதத் தலமே
 
தொன்மம் வழி அவ்வகைத் தலங்கள் போற்றுதலுக் குறியவையே
என்பதனை நன்கறிவீர்கள்
 
திரு வாதவூர் , உத்தரகசமங்கை முதலிய தேவாரம் குறிக்காத தை
மணிவாகர்  குறித்துள்ளார். அவ்வகையில் கண்டர மாணிக்கம் மிக மிக
அருகு மேற்காக காரைக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள    (1 கி மீ
பட்டமங்கலம் ஓர் திருவாச கத்தலம் ஆகும்   அதனை தொன்மை வாய்ந்தது  
எனும் சிறப்பினைக் காட்டி பெயரும் புகழும் பெறும்படி செய்வதில் தவறொன்றும்
இல்லை அல்லவா அச் சிந்தனையில் பலத்   தலங்களை   ஆய்ந்து  இதுவரை  
இனம் கண்டிராத கோயில்களை தேடுவதை ஓர் சிறு முயற்சியாக கொண்டுள்ளேன்
 
அதனால் தாங்கள் நினைத்தால் அந்த கண்டர மாணிக்கம் அடுத்த பட்டமங்கலம்
எனும் தலத்தில் உள்ள கோயிலின் அப்பன் அம்மை பெயர் அங்கு கல்வெட்டுகள்
உள்ளாவா  புகைப் படம் முன்பே இது பற்றி அறிந்துள்ளனரா எனும் தகவல்கள்
தந்துதமுடியுமாஎன கேட்டுக் கொள்கிறேன் 
 
 ஏன் தாங்களே இத்தனை செய்தும்  வெளி யி டலாம் 
 யார் வழியாகச் செய்யப் பட்டாலும்  செயல்  ஒன்றுதானே.
 
                            பட்ட மங்கை யில் பாங்காய் இருந்து  
                           அட்டமா சித்தி அருளிய அதுவும்
 
எட்டுவகை பேறுகளையும் அருளுகின்ற இடமாக குறிப்பது இந்த திருவாசக வரிகள்
மதுரை திருவிளையாடல் புராணத்தில் வரும் 64  விளையாடல்களில் ஒன்று அட்டமாசித்தி
தொடர்புடையது என நினைவு. அதற்கும் இக் கோயிலுக்கும் தொடர்பு முன்பே உள்ளதா
எனவும் அறிய ஆவல்
 
கூகால் எர்த் வரைபடத்தில் நான் தேடும் கோயில்களை இனம் காணும் வகை யில்
பார்த்த  படத்தினையும் வைத்துள்ளேன் காண்க .
 
பாருங்கள் இதனில் வடக்கு வீதி யில் ( டாஸ்மார்க் பார் கடை முதற்கொண்டு )
மக்களுக்கு தேவையான பல இடங்களின் குறிப்புகள் உள்ளன
 
ஆரம்ப சுகாதார நிலையம், (கோயில் தேர்நிலை அருகு வடகிழக்கு மூலை)
நூல்நிலையம், (சன்னதி அருகு பிள்ளையார்கோயில் எதிரில்)
அரசினர் ஆரம்ப நிலைப் பள்ளி (சன்னதி அருகு பிள்ளையார்கோயில் பக்கத்தில் )
VAO அலுவலகம்  (சன்னதி அருகு பிள்ளையார்கோயில்அருகே)
பேருந்து நிற்குமிடம் (வடக்கு வீதி)
அருண் ஐஸ்க்ரீம் கடை  (வடக்கு வீதி)
மேற்கு வீதியில் (கோயில் நேர் பின்பக்கமாக) SPKR மருத்துவ மனை ,
       + தபால் நிலையம் நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமண மாளிகை
தென் புற வீதியில் வார (சந்தை ??)கடைத் தெரு 
வெளியனுர் சாலை
திருப்பத்தூர் சாலை
கருங்குளம் சாலை
பள்ளிவாசல்
 
ஆனால்
கோயில் என்ன கோயில் ??
 ஈஸ்வரன் பெயர் என்ன ??
 என இதுவரை யாரும் எழுத வில்லை பாருங்கள்
 
கூகாள் நிறுவனத்தினர்
ஊர்மக்கள் அவரவர் தாங்களாகவே எழுதிக் கொள்ளவே   விட்டுள்ளனர்
உலகத்திலுள்ள ஒவ்வொரு ஊரைப் பற்றி விவரங்கள் ஒருவரால் ஆகுமோ ???   
 
ஆகவே தெரிந்தவர்   யாரவது தான் எழுத வேண்டும்
 
வேறொரு குறையும் உள்ளது பொதுவாக காண்கின்றேன்
 ஒருசிலரைத்த் தவிர சிற்றூர் ஊர்மக்ககளில் பலர்
 (1 )ஊர்கோயில் இறைவன் யார் அவர்  பெயர் அறியாதும் உள்ளனர்
 (2 )அறிந்த சிலரும் கணினி பற்றித் தெரியாது
(3 )அது அறிந்தவர் நூல்வழி கோயிலின்  பழமை சிறப்பறியார்
 
 வேறு
 
ஓர்முறை மதுரை வடமேற்கு   சோழவந்தான் முன்பு  வைகை மேல் கரையில்
கொடிமங்கை என்னும் ஓர் திருவாசகத்   தலம்  உள்ளது அதனைப் பற்றி 
அவ்வூர் மக்களே தொன்மைச் சிறப்பறிந்து  போற்றிப் புகழ் படச் செய்வது
கூடும் எனக் காட்டி இருந்தேன் குயில்பத்து குறிக்கும் தலம் ("கோல உருவில்" )
(இப்போதுள்ள கொடி மங்கலம் ராஜராஜன் கல்வேட்டுடை சிறு கோயில்
 கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சங்ககால புலவரில்  ஒருவர்
 = வாதுள ஆகமம் வல்லவர் இவ்வூரினர் )
 
தங்களால் ஆன முயற்சிகள் செய்யலாமே
 
நூ த லோக சுந்தரமுதலி  
மயிலை
 
பி கு
நான் கொடிமங்கலதைக் குறித்ததன் காரணம் கொடிமங்கை திருவாசகத் தலம்
என்பதால் மட்டும் அல்ல. 42  ஆண்டுகளுக்கு முன்பே 1970 ல் இதனைக் காட்டி
 ஓர் கட்டுரை எழுதியதைக் கண்டு அவ்வூர் மணியம் ஒருவர் நேரடியாக வந்து
என்னைச் சந்தித்து (1971) கல்வெட்டுகளில்  அவருக்கு வேண்டிய வேறு நிலம்
பற்றிய விவரம் மட்டும் கல்வெட்டுகளில் உள்ளதா எனக் கேட்டுச் சென்றார்
ஆனால் திருவாசகக் கோயில் என்பதை   மறந்து போனார். இதுநாள் வரை
 அவ்வூரினர் யாரும் முயற்சி  யாதும் காட்டவில்லை
பாருங்கள் என்னே  நம் மக்கள் ? ! ? !  ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? ! ? !
 
 
 
 
 
 


 
2012/9/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Sep 4, 2012, 12:01:51 PM9/4/12
to mint...@googlegroups.com
//வடமா, பிரஹசரணம் என்பவை பற்றி சிறு விளக்கமும் இயன்றால் தரவும்.
மேலும் தகவல் இருந்தால் அளிக்கவும்//

ஜாதி என்பது பிரிவைக் குறிப்பதன்று பிறப்பைக் குறிப்பது.

தமிழகத்தில் ஜாதி என்பது குமுகத்தை ஒரு முக்கோண வடிவில் அமைத்து
குமுகத்தின் சமூக பொருளாதார ஆளுமை சமய செயலாக்கங்களை கட்டுக்குள் வைக்க
உருவாக்கப்பட்ட அமைப்பு

மற்ற மனிதக் குமுக வாழ்க்கை அமைப்புகளில் அரசாளுமை குமுகத்தின் பண்பு
நலனை வடிமைத்ததுதற்கு மாறாகத் தமிழகத்தில் குமுகம் அரசாளுமையின் பண்பு
நலன்களைத் திர்மானித்தது

புத்தருக்குப்பின் பின்னடைவுற்ற குமுகத்தில் குழும வாழ்வின்
தொடக்கநிலையில் உள்ள கிராமங்களில் எஞ்சியிருந்த புத்த பிக்குகள் அடித்து
விரத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்த கல்வி மருத்துவப் பணிகளைத் தொடர விடாமல்
தடுக்கப்பட்டனர். அவர்களின் இடத்தைப் பிடித்து ஒரு குழு குமுகத்தின்
அவர்களே உயர்ந்தவர்கள் என்ற தகுதியை உருவாக்கிக்கொண்டு தங்களுக்குச்
சரிசமமான நிலையில் இருப்பவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு
தனிக்குழுவாக குமுகத்தில் இயங்க ஆரம்பித்தனர். கல்வியில் சிறந்த புத்த
பிக்குகளை புத்தமதத்தைவிட்டு வெளியேறித் தங்களுடன் இணைத்துக்கொள்ள
வற்புறுத்தி அவர்களையும் இணைத்துக்கொண்டு குமுகத்தில் அறிவும் ஆற்றலும்
தங்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தக்கவைத்து அதுவே தங்களைக் குமுகத்தின்
மற்ற குழுக்களிடம் இருந்து தனித்துக்காட்டும் என்ற யுக்தியை உணர்ந்து
செயல் படுத்தினர்

பெளத்த விகாரங்கள் தங்களை மாற்றிக்கொண்டு அந்தணர் மறை வளம் பற்றி அறிந்து
அந்தணர்களாக மாறப் பலருக்கு வாய்ப்புக் கொடுத்து பல புத்தப் பள்ளிகளை
அந்தணர் மரபுவழி அறியும் புதிய பள்ளிகளாக மாற்றி விரைவாகப் பல அறிவார்ந்த
குழுக்களை குமுகத்தில் உருவாக்கி அவ்வாறு உருவான புதிய குழுக்களை
அந்தணர்கள் என்று அழைத்தனர். மானுடவியல் அடிப்படையில் தமிழகத்தில்
உருவான அந்தனர்கள் தமிழ்க் குமுகத்தின் அறிவுத் திறம் வாய்ந்தவர்களை
ஒன்றாக இணைத்து உருவாக்கிக்கொண்ட ஒரு தனிக்குழு. அவ்வாறு தமிழகத்தில்
வாழ்ந்த பெளத்தர் மற்ற அறிஞர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் என்று கூறலாம்.

12-ஆம் நூற்றாண்டுவரை இடைவிடாமல் வடபுலத்தில் நடந்த பெளத்தத்திலிருந்து
இந்தியமயமாக்கல் பணி வடக்கில் பெஷாவரிலிருந்து பாடலிபுத்திரம் வரை பல
அந்தணர் குழுக்களை உருவாக்கி அவர்களைப் பஞ்சகவுட பிராமாணர்கள் என்ற
பெயரால் குமுகம் ஏற்றுக்கொண்டது. இவர்களில் இருந்து முற்றும் வேறுபட்டு
தென் புலத்தில் வாழ்ந்தவர்கள் பஞ்ச திராவிட பிராமணார்கள். இந்த
பஞ்சதிராவிட பிராமணர்களுடன் இணையாமல் பஞ்சகவுட பிராமணர்களின் வாழ்வு
நெறியைப் பின்பற்றியவர்கள் கேரளாவில் வாழ்ந்தனர். அவர்கள்
பஞ்சதிராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படாமல் நம்பி என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர். அவர்கள் முன்குடுமி உடையவர்களாகவும் கேரளாவில் உள்ள
மற்ற பிரிவினருடனும் திருனமண உறவுகொண்டு வாழ்ந்தனர். அவர்களின் இந்தப்
பலபிரிவில் திருமணம் செய்யும் காரணத்தால் அவர்களைப் பஞ்ச திராவிட
பிராமணர்கள் தங்களுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவில்லை

இந்த வரையற்ற தொடர் குழுமாற்றத்தால் 7-ஆம் நூற்றாண்டில் வேதகால
அந்தணர்கள் என்றழைக்கப்பட்டவர்களைத் தவிர ஏராளமானவர்கள் தங்களை அந்தணர்
என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்

கொங்கன் பகுதியில் வாழ்ந்த சரஸ்வத பிரானணர்கள் வணிகப் பிரிவில் இருந்து
அந்தணர்களாக மாற்றம் பெற்றவர்கள். இவர்கள் மற்ற அந்தணர் குழுக்களைவிட
உயர்ந்தவர்கள் என்று 200 ஆண்டுகளாக்ப் போரிட்டவர்கள் ஆனால் கேரளாவில்
உள்ள கோவில்களுக்குள் அவர்கள் நுழைய அரசானை தடை செய்தது. (கேரளக்
கோவில்களில் கீழ்ச்சாதியனரும் கோவிலில் நுழைய அனுமதியிருந்த காலம்)
அதுபோன்றே கோவாவில் உருவான பீஹார் சரஸ்வத கெளட பிராமணார்கள் கேரளக்
கோவில்களில் நுழைவது தடை செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டுவரை பல
பிராமணக்குழுக்களுக்குக் கேரளவில் அந்தணர்களுக்குள்ள உயர்ந்த நிலை
மறுக்கப்பட்டே வந்தது

தமிழகத்தில் பஞ்சதிராவிட அந்தணர்களும் கேரளாவில் பஞ்சகெளட பிராமணர்களும்
வாழ்ந்தனர். கொங்கனி கோவா போன்ற இடங்களில் வணிகர்களும் உழவர்களும்
கைத்தொழில் செய்பவர்களும் தங்களை அந்தணர்களாக உயர்த்திக்கொண்டனர்.
தமிழகத்தில் கல்வியிற் சிறந்த அந்தணர்களைத் தவிர சமஸ்கிரியம் கற்ற
அறிவுசால் பறையர்களும் வாழ்ந்தனர். இவர்கள் தங்களைப் பிராமணர்கள் என்று
அழைக்க முற்பட இவர்களின் குமுக நிலை அடிப்படையில் நடுப்பகல் பறையர்கள்
என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டுணவரை இவர்கள் நன்னிலம்
பகுதியில் குழுவாக வாழ்ந்ததாகவும் 1861 மக்கள்தொகைக் கண்க்கெடுப்பில்
அவர்கள் ராமாயணத்தைப் படைத்த வால்மீகி வழி வந்தவர்கள் என்ற பொருளில்
தங்களை வால்மீகி பிராமணர்கள் என்ற பெயரில் குறிப்பிடப்படுள்ளனர்

பஞ்ச திராவிட பிராமணார்களும் பஞ்சகெளட பிராமணர்களும் மற்ற பிராமணார்களும்
தமிழகத்தில் அவர்கள் வாழும் இட அடிப்படையில் தங்கள் குழுவுக்கென
அடையாளப்படுத்த பல பெயர்காளைப் பயன்படுத்தினர்

சைவப்பிரிவைச் சார்ந்த ஸ்மார்த்த பிராமணர் தங்களுடைய இறைவழிபாட்டு முறை
வாழ்க்கை நெறி அடிப்படையில் பிரச்சரணம் சோளியர் தீக்ஸிதர்
என்றழைத்துக்கொண்டாலும் அவர்களுடைய உட்பிரிவுகள் பெரும்பாலும் அவர்கள்
வாழ்ந்த இடத்தின் அடிப்படையிலேயே பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது

தீக்ஸிதர்கள் கேரளவில் வாழ்ந்த திய்யர்கள் நாயர்களை ஒத்து இருந்ததாகவும்
வடக்கிலிருந்து மதமாற்றம் வழியாக வந்த பிராமணர்களான வடமாப் பிரிவினர்
மற்ற ஸ்மார்த்தர்களைவிட உயர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.

பிரச்சரணத்தின் ஒன்பது உட்பிரிவுகள் கண்டரமாணிக்கம் மிளகனூர் மாங்குடி
புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள். தமிழ்நாட்டில்
வாழ்ந்த பிராமணர்கள் தங்களின் பிரிவு தோன்றிய இடங்களை அடையாளப்படுத்தியே
தங்கள் பிரிவுகளை அமைத்துக் கொண்டனர். ஸ்மார்த்தர்களில் மிகவும்
உயர்ந்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் வடமா பிரிவினர்
தமிழகத்தின் வடபகுதியில் இருந்தும் சோழ தேசத்திலிருந்தும் உருவான பிரிவு
என்ற அடிப்படையில் வடமா என்ற பெயர் உருவானது பிரசரனம் மத்தியமன்
அஸ்டசஹஸ்ரம் கனியாளர் என்ற பிரிவுகளும் அவர்கள் உருவான இடத்தின்
அடிப்படையில் பெயர்பெற்றது

ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள் தமிழ்க்
குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக வண்ணார்)
அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர். வைணவப் பிரிவும் வடகலை
என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது

இப்பிரிவுகளில் உயர்வு தாழ்வு என்பது ஒருவருக்கொருவர் தங்களை
மற்றவர்களிடமிருந்து உயர்த்திக்கொள்ள கண்டிபிடித்த வாதங்கள் அடிப்படையில்
அமைந்தது. கோத்ரம் என்பது ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவில் திருமண
உறவை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தது. பெண் தன்னைவிட உயர்ந்த பிரிவில்
திருமணம் செய்துகொள்ளவும் அதற்காகவே ஆணுக்கு வரதட்சனை கொடுக்கவேண்டும்
என்றும் பொதுவாக மேல் பிரிவினர் கீழ்ப்பிரிவினருடன் திருமண உறவு வைத்துக்
கொள்வதில்லை என்று மானுடவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
நாகராசன்

2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>:

N D Logasundaram

unread,
Sep 4, 2012, 12:03:08 PM9/4/12
to mint...@googlegroups.com
 மறந்தேன் இப்போது காண்க
 
நூ த லோ சு
மயிலை
kodimangkalam .jpg
kodimangkalam.jpg
pattamangkalm.jpg

DEV RAJ

unread,
Sep 4, 2012, 12:16:55 PM9/4/12
to mint...@googlegroups.com
On Tuesday, 4 September 2012 21:00:58 UTC+5:30, selvi...@gmail.com wrote:

>>>> எட்டுவகை பேறுகளையும் அருளுகின்ற இடமாக குறிப்பது இந்த திருவாசக வரிகள்
மதுரை திருவிளையாடல் புராணத்தில் வரும் 64  விளையாடல்களில் ஒன்று அட்டமாசித்தி
தொடர்புடையது என நினைவு. அதற்கும் இக் கோயிலுக்கும் தொடர்பு முன்பே உள்ளதா
எனவும் அறிய ஆவல் <<<<


ஐயா,

நீங்கள் சொல்வது சரியே; இணையத்தில்
இவ்வாலயம்  குறித்துச் சற்றுத் தெரிந்துகொள்ள
முடிகிறது.


               பட்டமங்கை


கொத்தி லங்கு கொன்றை வேய்ந்த கூட லாதி மாடநீள்
பத்தி யம்பொன் மறுக ணைந்து வளைப கர்ந்த பரிசுமுன்
வைத்தி யம்பி னாமி யக்க மாதர் வேண்ட வட்டமா
சித்தி தந்த திறமி னித்தெ ரிந்த வாறு செப்புவாம்.


கொடியனார்க ளறுவரும்
நெடியவானி மிர்ந்துகார்
படியும்பட்ட மங்கையால்
அடியிற்பாறை யாயினார்.


http://www.tamilvu.org/slet/l41d0/l41d0pd1.jsp?bookid=68&part=II&link=234




33ம் திருவிளையாடல் நடைபெற்ற தலம் -

http://temple.dinamalar.com/New.php?id=642





தேவ்

கி.காளைராசன்

unread,
Sep 4, 2012, 12:35:52 PM9/4/12
to mint...@googlegroups.com, adi...@shaivam.org, M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan
வணக்கம் ஐயா,
இந்த இழையின் தலைப்பிலிருந்து மாறக்கூடாது என்பதால்,

பட்டமங்களம் என்ற தலைப்பில் தனியிழை ஒன்றில் இது குறித்து எழுதுகிறேன் ஐயா,

அன்பன்
கி.காளைராசன்

2012/9/4 N D Logasundaram <selvi...@gmail.com>



--
அன்பன்
கி.காளைராசன்

N D Logasundaram

unread,
Sep 4, 2012, 2:07:06 PM9/4/12
to mint...@googlegroups.com
அப்புள்ள மின் தமிழினருக்கு
 
பிரகத் சரணம் எனும் சொல்லுக்கு நீண்ட (கை )கால்களை உடைய
பிறப்புடைய   கோத்திரத்தினர்   என்பார் மறைமலை அடிகள் (நினைவு)
அவ்வரிகளைப் படித்த பிறகு என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் என்
நண்பர் சுவாமி நாதன் என்பார் ப்ரஹத் சரணம் தான்  திருவையாறு அடுத்த
காட்டுப்பள்ளி சேர்ந்த குடும்பம் அவர்நல்ல உயரமான வர் கைகளும் நீண்டு
இருக்கும் .
 
*நீண்ட கரத்தார்* என்பார்   மணிவாசகர் அதாவது தன்னை ஆட்கொண்ட
பிராமணன் உருவில் வந்த இறைவனை. இதற்கு விளக்கம் கூற வந்தோர்
ஒருவர் தன் கைகளை தொங்கவிடும்போது விரல்களின் நுனி முழங்கால்
மூட்டிற்கும் கீழே செல்லும் நீண்ட கைகளை உடைய வர்கத்தினர் என்பார்கள்
இவ்வாறு கைகள் நீண்டுள்ளோர் உயரமாக இருப்பதால் வேகமாக நடக்க
முடியும்.
ஒலிம்பிக் போட்டிகளிலும் வேகம் ஓடும் தடகளப் போட்டிகளில் வெல்வோர்
கூடைப்பந்து சிறப்பாக ஆடுவோர் கைகால்கள் நீண்டோர்  ஆவது அறிவோம்
 
நூ த  லோ சு
மயிலை

 
2012/9/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Karuannam Annam

unread,
Sep 4, 2012, 2:33:05 PM9/4/12
to mint...@googlegroups.com, adi...@shaivam.org, M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan
வணக்கம் ஐயா. தனி இழையில் தெரிந்த தகவல் அளித்துள்ளேன்.

Karuannam Annam

unread,
Sep 4, 2012, 3:03:46 PM9/4/12
to mint...@googlegroups.com, Hari Krishnan, Kalairajan Krishnan, Geetha Sambasivam
தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் மதிப்பிற்குரிய நண்பர்கள் திரு ஹரிகி, கீதாம்மா அனவருக்கும் நன்றி.
அன்புடன்
சொ.வி.

2012/9/4 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Karuannam Annam

unread,
Sep 4, 2012, 3:04:17 PM9/4/12
to mint...@googlegroups.com
பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி பேராசிரியர் ஐயா. 
அதற்கான தரவுகளையும் கொடுத்துதவுங்கள்.

2012/9/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


புத்தருக்குப்பின் பின்னடைவுற்ற குமுகத்தில் குழும வாழ்வின்
தொடக்கநிலையில் உள்ள கிராமங்களில் எஞ்சியிருந்த புத்த பிக்குகள் அடித்து விரத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்த கல்வி மருத்துவப் பணிகளைத் தொடர விடாமல் தடுக்கப்பட்டனர்.  அவர்களின் இடத்தைப் பிடித்து ஒரு குழு குமுகத்தின் அவர்களே உயர்ந்தவர்கள் என்ற தகுதியை உருவாக்கிக்கொண்டு தங்களுக்குச்சரிசமமான நிலையில் இருப்பவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு ஒரு தனிக்குழுவாக குமுகத்தில் இயங்க ஆரம்பித்தனர்.  
மற்ற குழுக்களிடம் இருந்து தனித்துக்காட்டும் என்ற யுக்தியை உணர்ந்து

செயல் படுத்தினர்

பெளத்த விகாரங்கள் தங்களை மாற்றிக்கொண்டு அந்தணர் மறை வளம் பற்றி அறிந்து அந்தணர்களாக மாறப் பலருக்கு வாய்ப்புக் கொடுத்து பல புத்தப் பள்ளிகளை அந்தணர் மரபுவழி அறியும் புதிய பள்ளிகளாக மாற்றி 
வாழ்ந்த பெளத்தர் மற்ற அறிஞர்களைத் தமிழ்ப் பிராமணர்கள் என்று கூறலாம்.


சைவப்பிரிவைச் சார்ந்த ஸ்மார்த்த பிராமணர் தங்களுடைய இறைவழிபாட்டு முறை
வாழ்க்கை நெறி அடிப்படையில் பிரச்சரணம் சோளியர் தீக்ஸிதர்

பிரச்சரணத்தின் ஒன்பது உட்பிரிவுகள் கண்டரமாணிக்கம் மிளகனூர் மாங்குடி புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்கள். 

ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள் தமிழ்க்குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக வண்ணார்)அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர்.  வைணவப் பிரிவும் வடகலை என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
 
இராமானுஜர் வைணவப்பிரிவைத் தொடங்கினாரா?

 கோத்ரம் என்பது ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவில் திருமண
உறவை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்தது.
 
 பிரஹச்சரணம் என்பது கோத்திரமா அல்லது வேறா?

Nagarajan Vadivel

unread,
Sep 4, 2012, 3:23:14 PM9/4/12
to mint...@googlegroups.com

N. Kannan

unread,
Sep 4, 2012, 4:26:56 PM9/4/12
to mint...@googlegroups.com
2012/9/4 Karuannam Annam <karu...@gmail.com>:

>> ராமானுஜாச்சாரியார் வைணவப் பிரிவைத் தொடங்கியபோது ஸ்மார்த்தர்கள்
>> தமிழ்க்குமுகத்தில் உள்ள சிலபிரிவுகளை ஒதுக்கியவுடன் (குறிப்பாக
>> வண்ணார்)அவர்கள் அனைவரும் வைணவப் பிரிவில் இணந்தனர். வைணவப் பிரிவும் வடகலை
>> என்றும் தென்கலை என்றும் நிலப்பிரிவின் அடிப்படையில் பெயரிடப்பட்டது
>
>
> இராமானுஜர் வைணவப்பிரிவைத் தொடங்கினாரா?
>>

பேரா சொல்லும் பிரிவு என்பது ஶ்ரீஷைணவ நெறி (தரிசனம்)

நீங்கள் கேட்பது உட்பிரிவுகள். உடையவர் காலத்தில் ஒன்றேதான் இருந்தது.
வடகலை எனும் பிரிவு ஸ்தாபிதப்பட்டது மிகப்பின்னால்.
அகோபிலமடத்திலிருக்கும் பெருமாளே தென்கலைத்திருமண்தான் இட்டு இருக்கிறார்
என்பதே உண்மை (உ.வே.வேங்கடகிருஷ்ணன் தனிப்படச் சொன்னது). இப்பிரிவுகள்
அதிவேகமாக மறைந்துவருகின்றன. கொடுக்கல், வாங்கல் அதிகரித்துள்ளது.
ஏனெனில் இப்பிரிவுகள் அல்ப காரணங்களுக்காக ருசி பேதத்தில் உருவானவை.
உடையவர் இராமானுஜதாசர்கள்தான் அனைவரும்.

நா.கண்ணன்

Karuannam Annam

unread,
Sep 5, 2012, 1:24:10 AM9/5/12
to mint...@googlegroups.com, Hari Krishnan, selv...@gmail.com
2012/9/4 N D Logasundaram <selvi...@gmail.com>
அப்புள்ள மின் தமிழினருக்கு
 
பிரகத் சரணம் எனும் சொல்லுக்கு நீண்ட (கை )கால்களை உடைய
பிறப்புடைய கோத்திரத்தினர் என்பார் மறைமலை அடிகள் (நினைவு)
காட்டுப்பள்ளி சேர்ந்த குடும்பம் அவர்நல்ல உயரமான வர் கைகளும் நீண்டுஇருக்கும் .
 
*நீண்ட கரத்தார்* என்பார் மணிவாசகர் 

 நண்பர் திரு ஹரிகி இப்பிரிவுகள் இனக்குழுக்கள் எனக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் இயல்பான கூறுகள் இருந்திருக்கலாம். இன்று குழுக்கள் மறைந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளதும் நோக்கத்தக்கது.

Karuannam Annam

unread,
Sep 5, 2012, 1:29:46 AM9/5/12
to mint...@googlegroups.com
  

2012/9/5 krishnan <tvskr...@gmail.com>

(pernThalaivar} uyar thiru.Ku.Kamaraj, hands is also long size type.

ஒரு குழுவின் பொதுத்தன்மையைக் குறித்துக் கூறும்போது அந்தப் பொதுத்தனமை உள்ளவரெல்லாம் அக்குழுவைச் சேர்ந்தவர் எனக் கொள்ளவேண்டியதில்லை என்று கருதுகிறேன்.

Hari Krishnan

unread,
Sep 5, 2012, 3:20:20 AM9/5/12
to Karuannam Annam, mint...@googlegroups.com, selv...@gmail.com


2012/9/5 Karuannam Annam <karu...@gmail.com>

நண்பர் திரு ஹரிகி இப்பிரிவுகள் இனக்குழுக்கள் எனக் குறிப்பிடுகிறார்.

I have used the term rather loosely.  இனக்குழுவா இல்லையா என்பதை இந்தத் துறையை அறிந்தவர்கள்தாம் சொல்லவேண்டும்.  எனக்கு இதில் பயிற்சி போதாது.  இல்லை என்றும் சொல்லலாம்.

Nagarajan Vadivel

unread,
Sep 5, 2012, 4:22:29 AM9/5/12
to mint...@googlegroups.com
இங்கே பொதுத்தன்மை என்பது உடல் தோற்ற அலகின் அடிப்பதையில் அமைந்ததன்று.
நம்பிகள் என்ற அந்தனர்கள் முதன் முதலில் வடமேற்கிலிருந்து கேரளா வந்தனர்
என்றும் அதற்குப்பின் ஸ்மார்த்தர்கள் தமிழகத்துக்கு இந்தியாவின்
கிழக்குப் பகுதியிலிருந்து (வங்காளம்) வந்ததாகவும் பஞ்ச திராவிட
பிராமணர்கள் என்ற பொதுப் பெயரில் ஸ்மார்த்தர்கள் அழைக்கப்பட்டாலும்
நம்பிகள் போன்றும் வடபுல அந்தணர்கள் போன்றும் இல்லாமல் கடும்
கட்டுப்பாடுடன் தங்கள் வாழ்க்கை மரபியல் அறைவழிபாடு ஆகமக் கல்வியிற்
சிரந்தவர்களாக விளங்கினார்கள். அதில் உள்ள யுஅர்வு ச்றப்பு என்ற
வேறுபாட்டின் அடிப்படையில் பிரச்சரணம் சோளியர் தீக்சிதர் என்று அழைத்துக்
கொண்டனர்

ஸ்மார்த்தர்களில் தமிழகத்தின் வடபகுதியில் இருந்தும் சோழ
தேசத்திலிருந்தும் உருவான பிரிவு வடமா பிரிவு. மிகவும் உயர்ந்தவர்கள்
என்று தங்களை அழைத்துக்கொண்டனர்

பிரச்சரணத்தின் உட்பிரிவுகள் ஒன்பது. அவர்கள் கண்டரமாணிக்கம் மிளகனூர்
மாங்குடி புத்தூர் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் முதலில் வாழ்ந்தவர்கள்.

நாகராசன்

2012/9/5 Karuannam Annam <karu...@gmail.com>:

DEV RAJ

unread,
Sep 5, 2012, 4:43:37 AM9/5/12
to mint...@googlegroups.com
இழை வரலாற்றுப் பார்வையின்
அடிப்படை கொண்டது எனில் வரவேற்கலாம்.

கண்ணன் பிறந்த யாதவ இனமாயினும்,
கண்ணபிரானைப் பாடிய தூரன் பிறந்த
கவுண்டர் இனமாகட்டும்  அவற்றில் இனக்குழுக்களின்
இருப்பு தொன்மை மிக்க நாடான இந்தியாவில்
தவிர்க்க முடியாதது ; யாதவரில்
வ்ருஷ்ணி, அந்தகர், ஆபீரர், ஸாத்வதர்,
போஜர் எனும் பிரிவுகள்; அதற்கு முன்னரே ஹேஹய
இனம் தெற்கு நோக்கி நகர்ந்து பிரிந்து
போயிற்று. தூரன் என்பதே ஒரு
இனக்குழுவின் பெயர் என்பர் -

http://www.youtube.com/watch?v=BfePKl8_vaw



தேவ்

Raja sankar

unread,
Sep 5, 2012, 5:18:14 AM9/5/12
to mint...@googlegroups.com
தேவ்

தூரன் என்பது ஒரு உட்பிரிவின் பெயர். அதை ஒரு உட்குழு என்றும் கொள்ளலாம். பல உட்குழுக்கள் அடங்கியது ஒரு குழு. அப்படி பல குழுக்கள் அடங்கியது ஒரு சாதி.

இந்த உட்குழுவிற்குள்ளும் பல பிரிவுகள் உண்டு. கிளை, காணி, கரை என்றெல்லாம் பிரிவுகள் உண்டு. அதற்குள் கிராம பிரிவுகள். கிராமத்திற்குள் வளவு/வளுவு பிரிவுகள்.

சாதி என்பதே ஒரு நிர்வாகத்திற்கு ஒரு அமைப்பிற்காக செயல்படுத்தப்பட்ட ஒன்று என்பது அதிலுள்ள பிரிவுகளை பார்த்தாலே புரியும்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/9/5 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 5, 2012, 5:24:41 AM9/5/12
to mint...@googlegroups.com
அரசு தரும் சலுகை பெற  ரூ 500/ கொடுத்தால்
சான்றிதழ் பெறலாம்  என்கிறார் நெல்லை கண்ணன்
[6:50 லிருந்து] -

http://www.youtube.com/watch?v=llNdRm355N8


தேவ்

Nagarajan Vadivel

unread,
Sep 5, 2012, 6:09:41 AM9/5/12
to mint...@googlegroups.com
தேவ் அவர்கள் கூறுவதுபோல் வரலாற்றுப் பார்வையில் உற்று நோக்குவது அவசியம்

தமிழக வரலாற்றில் பல கால கட்டங்களில் நால்வகைக்குழுவாக (அந்தணர், வேளிர்,
நாகர் பறையர்) இருந்த தமிழர் திணை அடிப்படையில் அமைந்த தொழில் முறையில்
அவர்கள் மேலும் பெருகி குடிகளாக மாறினர்.

ஏழாம் நூற்றாண்டு அளவில் ஸ்ரீவிஜயன் தூதர்கள் இலங்கைக்குப் பாண்டிய
இளவரசியைப் பெண்பார்க்க வந்தபோது வேளிர்களில் 49 உட்பிரிவிகளும் மற்ற
குடிகளின் உட்பிரிவுகளும் அனுப்பிய பிரதிநிதிகள் இலங்கை செனற்தாகவும்
குறிப்புள்ளது

இதுவே தமிழ்க் குமுக அமைப்பு
முதன்மைக் குழுக்கள்
தொழில் அமைப்பில் குடிகள்
குடிகளுக்குள் உட்பிரிவுகள்
என்று வாழ்ந்தனர் என்பது தெளிவு

பிற்காலச் சோழர் காலத்தில் ஆகம வழிபாடு அறிமுகப்படுத கட்டத்தில் பொது
வழிபாட்டுக்காகக் கட்டப்பட்ட பெருங்கோவில்களில் வடபுல நால்வகை வருணம்
என்ற அடிப்படையில் கோவிலின் உள்ளே எந்தக்குழு எங்கே நின்று வணங்கவேண்டும்
என்ற பிரிவும்

அதன் பின்னர் தமிழ்க் குமுகம் மூன்று பெரும் பிரிவாகி மஹாஜனங்கள்
(பிராமணர்கள்) இடங்கை வலங்கை என்று பகுக்கப்பட்டு விரிவான ஜாதிமுறை
நிறுவப்பட்டது

ஆழ்ந்த தீவிர ஆய்வு மட்டுமே குழப்பங்கள் தெளிவுபெற வழிவகுக்கும்

நாகராசன்
2012/9/5 DEV RAJ <rde...@gmail.com>:

N. Kannan

unread,
Sep 5, 2012, 6:12:35 AM9/5/12
to mint...@googlegroups.com
அந்த அழகிய பாடலுக்கு நன்றி. சுதா எவ்வளவு இளமையாக...!

மாண்ட் நம்ம ஏ.ஆர்.ரகுமானுக்கும் பிடிக்குமென்று உன்னி கிருஷ்ணன்
சொல்கிறார். இந்த ராகத்தில் அவரும் நிறையப் பாடல்கள்
இசைத்திருக்கிறாராம்!

க.>

2012/9/5 DEV RAJ <rde...@gmail.com>:
> http://www.youtube.com/watch?v=BfePKl8_vaw
>

DEV RAJ

unread,
Sep 5, 2012, 8:33:25 AM9/5/12
to mint...@googlegroups.com

                                             *தூரன்*
 

தூர‌ன் கூட்ட‌ம் என்ற‌ ஒரு குல‌ப்பிரிவு கொங்கு வெள்ளாள‌க் க‌வுண்ட‌ர்க‌ளில் உண்டு.
(தூரன் கூட்டம்,கூறை கூட்டம்,பயிரன் கூட்டம், ஓதாளன் கூட்டம்,சீர்க்காரன் கூட்டம்,
முழுக்காதன் கூட்டம் etc.,)  த‌ற்ச‌ம‌ய‌ம் தூர‌ன் குணா என்னும் பெய‌ரில் ந‌ண்ப‌ர் ஒருவர்
சிற்றித‌ழ்க‌ளில் க‌விதை எழுதி வ‌ருகிறார்.


http://www.jeyamohan.in/?p=737


தூரன் குலம்

தூர் என்பது நெல்பயிர் திரண்டிருப்பது . கிணறு, ஏரியில் நிறைந்த சேற்றை அகற்றுவதற்கும் தூர் எடுத்தல் என்கிறோம்.
உழவுத்தொழிலை உழைப்பால் மிகுதிப்படுத்தி அதிக நெல் விளைச்சல் புரிந்தோர் தூரன் கூட்டத்தினர்.
தூரை குலம் தூரன் குலம் ஆனது. தூரன் குலத்தினர் மொடக்குறிச்சி கரியகாளியம்மனையும்,
வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமியையும், மேழிப்பள்ளி அண்ணன்மாரையும், குமரமங்கலம் அங்காளம்மனையும்
தெய்வங்களாக வைத்துள்ளனர். குமாரமங்கலம், பாலை, மேழிப்பள்ளி, நன்செய் இடையாறு, வெங்கம்பூர்,
தோட்டணி, பழமங்கலம், வீரகனூர், நல்லூர் கல்யாணி, காங்கேயம், பொன்முடி, தாழம்பாடி, அய்யம்பாளையம்,
கூணவேலம்பட்டி, சீராப்பள்ளி, பச்சாபாளையம், நெருப்பூர், இச்சிப்பட்டி, ஆகிய ஊர்கள் தூரன் கூட்டத்தாரின் காணியூர்களாகும்.


http://konguthirumanam.blogspot.in/2011/10/blog-post_8330.html

N. Ganesan

unread,
Sep 5, 2012, 9:14:34 AM9/5/12
to மின்தமிழ்

தூரன் குலத்தார்களுக்கு துவரை குலப்பயிர்.
துவரைக்குறிச்சி, துவரைமங்கலம், ... போன்றா ஊர்களை
நிறுவியவர்கள். குமாரமங்கலம் Dr. ப. சுப்பராயன் தூரன்.
அயர்லாந்து சென்று படித்தவர். விமான விபத்தில் இறந்த்
மோகன் குமாரமங்கலத்தின் தந்தை.

அகத்தியர் தலைமையில் துவராபுரியிலிருந்து வந்த
வேளிரில் ஒருகுடியினர் தூர கோத்திரத்தவர் என்று
பெ. தூரன் போன்றோர் சொல்லியுள்ளனர். கர்நாடகாவிலும்
துவரை என்ற ஊர்களும் உள்ளன.

நா. கணேசன்

https://groups.google.com/forum/#!msg/mintamil/5t2JumQm42A/3b-PxpL6xY0J
காளியணப் புலவர் குமரமங்கலத்தார் மீது
பாடிய பாடல்கள் சுவையூறுவன. அவற்றுள் இரண்டு.

பானையிலே சோறுதின்பான் சட்டியிலே கறிநுகர்வான் பங்கியுண்பான்
ஆனெய் தின்பான் பூனெய் தின்பான் பலகாரமாப் பண்ணி அரிந்தேயுண்பான்
தானமது கட்கஞ்சா வவனிகொள்வான் பரம்பரையாய்ச் சைவனென்பான்
மேன்மைபுகழ் குமரமங்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்தானே (1)

(இருபொருள் உள்ள பாடல் இது, பூநெய் = தேன். பங்கி (bhangi - வடசொல் =
போதைப்பொருள் ஒன்று,
பங்குதல் எனினும் அமையும். அவனி = அபினி, உலகு எனினும் அமையும்.)

தேவடியார் தமைக்காணிற் சாமிபுத்தி எனவணங்கித் தெண்டஞ்செய்வான்
ஆவலுட வர்களிட காற்கழுவிக் குடிப்பா னடியின்மீதே
தூவலர்கொண் டருச்சிப்பான வர்களெச்சிறனை நுகர்வான் தூரகோத்திரன்
மேவுபுகழ்க் குமரமக்கைப் பரமசிவன் செங்கோட்டு வேலன்றானே (2).

N. Ganesan

unread,
Sep 5, 2012, 9:02:37 AM9/5/12
to மின்தமிழ்
On Sep 3, 11:24 pm, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
> அன்பிற்கினிய திரு ஹரிகி, நண்பர்களுக்கு வணக்கம். நலம் நாடுகிறேன்.
>
> கண்டரமாணிக்கம் பிரஹசரணம் என்ற தங்கள் குறிப்பால் ஆர்வம் ஏற்பட்டு தங்களிடமும்
> நண்பர்களிடமும் மேலும் அறிய எழுதியுள்ளேன்.
> எங்களூர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள கண்டரமாணிக்கம்.
> கண்டுகொண்ட மாணிக்க நாடு என்று நாட்டார் வழக்கியலில் அறியப்படுகிறது. ஊர்
> நடுவில் மாணிக்க நாச்சி அம்மன் என்ற அம்மன் கோவில் சக்தி வாய்ந்ததாக
> விளங்குகிறது.
> ஊர் கண்டரமாணிக்கம் என்றதும் பலரும் பிரஹசரணம் பற்றி என்னைக் கேட்டுள்ளார்கள்!
> பெரிய அக்ரஹாரம் இருந்து இன்று குடிபெயர்ந்துவிட்டார்கள். எங்கள் வீடு
> அக்ரஹாரத்தில்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார்கள்.
> கோடிஆத்து இராமாயி ஆச்சி வீடு! பஞ்சாங்கம்,அத்தியயனப்பட்டர், குருக்கள்,
> சுயம்பாகம், ஜோசியர்கள், ஆசிரியர்கள் என்று பல வீடுகள் இருந்தன. தெலுங்கு
> பேசுபவர்கள் பாதி. மிகச் சில சமயங்கள் தவிர யாரும் வேற்றுமை பாராட்டியதில்லை.
> நவராத்திரி கொலுவும், அவர்கள் வரலக்ஷ்மி நோன்பு போன்ற பண்டிகைப் பலகாரங்கள்
> பரிமாற்றமும் அன்பான பேச்சும் நண்பர்களுடன் விளையாட்டும் என்றும் இனிய
> நினைவுகள். இன்று வெளியூர் குருக்கள் வரவு தவிர வேறு இல்லை.
> கண்டரமாணிக்கம் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் வேறு ஊர் உள்ளதா? அல்லது வேறு
> குறியீடா? வடமா, பிரஹசரணம் என்பவை பற்றி சிறு விளக்கமும் இயன்றால் தரவும்.
> மேலும் தகவல் இருந்தால் அளிக்கவும்.
> அன்புடன்

> சொ.வினைதீர்த்தான்.

பிரகச் சரணம் - பெரிய பயணம் (பெருஞ்செலவு) என்பது பொருள் என்று
படித்துள்ளேன். வடக்கே இருந்து முதலில் கூட்டமாகப் பயணித்தவர் என்ற
பொருளில். சங்க காலத்தில் முதலில் தமிழ்நாட்டை வந்தடைந்த பிராமணர்கள்,
இதன் பின் வந்தவர்கள் வடமர்கள் என்பார்கள். பரிதிமாற் கலைஞரின்
உறவினர் டாக்டர் ந. சுப்பிரமணியன் வரலாற்றுப் பேராசிரியர்.
95 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. உடுமலைப்பேட்டயில் பல்லாண்டுகள்
பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்,
The brahmin in the Tamil country முக்கியமான புஸ்தகம். பார்க்கவும்.
பாரதியார், சி. வி. ராமன், ... - ப்ரகச்சரணம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 5, 2012, 10:35:50 PM9/5/12
to மின்தமிழ்
கண்டரமாணிக்கம் - பழைய ஊராகத் தெரிகிறது.
கண்டன், கண்டி என்று தமிழ்ப்பெயர்கள்.
கண்டி - எருமைப்போத்து. வென்ற கொற்றவைக்கும்
கண்டியம்மன் என்ற பெயர். கண்டிமுத்து என்று
பலருக்கும் கொங்குநாட்டில் பேருண்டு, 2 மாதம் முன்னர்தான்
பழனி அருகே உள்ள கீரனூரின் கண்டியம்மன் கும்பாபிடேகம்
என் உறவினர்கள் நடத்தினார்கள் (9-ஜூலை-2012).
நீல-கண்டன், நீல-காண்டி இப்பெயர்களை விளக்கி
ஐராவதம் அழகான கட்டுரை வரைந்துள்ளார்கள்.
கண்டர்மாணிக்கம் என்னும் ஊர் கண்டரமாணிக்கம்
என வழங்குகிறது எனக் கருதுகிறேன். கண்டி எனப்படும்
ஆமாவின் தலை புத்தரின் சின்னமாகக் காட்டப்படும்.
சோழமன்னர்களுக்கு கண்டன் என்ற பட்டம் உள்ளது,
கண்டருடைய மாணிக்கம் - கண்டரமாணிக்கம்,
கல்வெட்டுக்களைப் பார்க்கணும்.

காசியில் மிக முக்கியமான வழிபாடு பைரவருக்குண்டு.
வைரவன் சிவபிரான் மகன் என்பது புராணம். அதனால்
அவருக்கு ஆண்டபிள்ளை, வடுகபிள்ளை என்று தமிழ்க்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. காளாமுக, காபாலிக
வைரவ வழிபாடுகள் தொடர்புள்ளவை. அண்மையில்
வெளிவந்த புஸ்தகம் இவற்றை விளக்குகின்றன:
http://indologica.blogg.de/2006/09/17/nagaswamy-art-and-religion-of-the-bhairavas/

தமிழ்நாட்டில் நிறைய பைரவர்கள் இருந்தாலும்
மகாபைரவர் எனப்படும் காசிபைரவர் வழிபாடு
கண்டரமாணிக்கத்திலேதான் (பெரிச்சியூர்):
http://bairavarvazhibaadu.blogspot.com/2011/03/150.html
கொங்கில் பிரசித்திபெற்ற பைரவர்கள் பழனி, கரூர், அவினாசி
எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டரமாணிக்கத்தில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற
பைரவர் சன்னிதி பிரசித்தமாக விளங்குகிறது. பிரகச்சரணம்

அந்தணர்கள் 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் இவற்றைத்
தோற்றுவித்திருக்கலாம். பாரதியாரின் தந்தை எட்டயபுரத்துக்கு
வேலைக்காக வந்தவர். அவரது ஊர் சீவலப்பேரி (ஆதாரம்:
சக்திதாசன் சுப்பிரமணியன், மகாகவி பாரதியார்.)
வைரவ வழிபாடு கர்நாடகாவிலிருந்து கொங்கின்
வழியாக கண்டரமாணிக்கம் போன்ற ஊர்களுக்குத்
தெற்கில் அடைந்துள்ளது.

ஆண்டபிள்ளை நாயனார் (பைரவமூர்த்தி) திருக்கோயில், கண்டரமாணிக்கம்
http://bairavarvazhibaadu.blogspot.com/2011/03/blog-post_07.html
http://vijayastreasure.blogspot.com/2011/02/blog-post_1730.html

இதேபோல, கொங்கின் குரக்குத்தளியிலும் பைரவர் வழிபாடு
சிறப்பாக இருந்துள்ளதைக் கல்வெட்டு ஆவணப்படுத்தியுளது.
வடுகபிள்ளை நாயனார் (பைரவமூர்த்தி) - குரக்குத்தளி (சர்க்கார்
பெரியபாளையம்).
புலவர் செ. இராசு ஐயா அனுப்பியதை முன்னரே அளித்துள்ளேன்.
பைரவர் வடுகபிள்ளை நாயனார்க்கு ஊரின் மடவிளாகத்துக்கு தெற்குத்
தெருவில் வசிக்கும் உபயதாரர் வைத்த சந்தியாதீபத்தைப் பெற்றுக்
கொண்டு அதற்கு அத்தாட்சியாக கோயில் சிவாச்சாரியார் எழுதிக்
கொடுத்த முக்கியமான கல்வெட்டு இது.

-----------------------------
சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு
        (ARE 306 of 1908)

1) ஸ்வஸ்திஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 3வது வீரசோழ
       வளநாட்டு முகுந்தனூருடையார் குரக்குத்தளி ஆளுடையார்

2) கோயில் வடுகப்பிள்ளையார்க்கு இந்நாயனார் திருமடை
     விளாகத்தில் தெற்கில் தெருவிலிருக்கும் தோயா
     வஸ்திரச் செட்டி

3) களில் பாவைநல்லூர் உடையான் வேதநாயகன்
    செட்டியாழ்வானான சேரமான் தோழனேன் வைத்த
    சந்தியா தீபவிளக்கு

4) ஒன்றுக்கு ஒடுக்கின அச்சு ஒன்றுங் கொண்டேன்
     இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் வாச்சிய
    கோத்திர அப்பன் வீரராசேந்திர

5) சோழச் சக்கரவர்த்தியேன் இது குடங்கொடு கோயில்
     புகுவார் சந்திராதித்தவரை செலுத்துவதாக இது
    பன்மாஹேஸ்வரர் ரக்ஷை உ

-----------


நா. கணேசன்

Karuannam Annam

unread,
Sep 6, 2012, 2:07:04 PM9/6/12
to mint...@googlegroups.com, naa.g...@gmail.com, thamiz...@googlegroups.com
பயனுள்ள வயிரவர் பற்றிய தொடர்புச் சுட்டிகளுக்கு நன்றி திரு கணேசன்.
 
கண்டரமாணிக்கம் சி்வகங்கைச்சீமையில் மறவர் நாடுகளுள் ஒன்று. கண்டுகொண்டமாணிக்க நாடு என்று அழைக்கப்படுகிறது. நாட்டுக் கணக்கர் என்பவர் நாட்டார் கோவில் மரியாதையில் ஒவ்வொரு ஊர் நாட்டாராகப் பெயரையும் பிறகு நாட்டுக் குடிகள் பெயரையும் ஏடு பார்த்துப் படித்துக் கூப்பிட்டுப் பிறகு பூசாரி கோவில் மரியாதை செய்வதைப் பார்த்திருக்கிறேன். 
ஊரின் தெய்வம் மாணிக்க நாச்சியம்மன் ஆகும். மூலத்தானக்கோவில் ஊரின் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ளது. நாட்டார் கோவில் அது.
எழுந்தருளப் பண்ணுகிற மாணிக்கநாச்சி திருஉருவம் ஊரின் நடுவே கற்கோவிலில் அமைந்துள்ளது. இது நகரத்தார்கோவில். தேரும் சித்திரையில் திருவிழாவும் என்று சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெறும். நாட்டாருக்கு முதல் மரியாதை. நாடும் நகரமும் ஒற்றுமையாக வாழும் ஊர். 
மேலும் நகரத்தார் ஊர்களில் பழமையானது. மற்ற நகரத்தார் ஊர்கள் காடுவெட்டிப்போட்டுப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக்கொண்டதால் ஒழுங்கான நேரானவீதிகள் அமைந்தவையாக இருக்கும். ஆயின் கண்டரமாணிக்கத்தில் வீதிகள் அவ்வளவு நேரானவையல்ல. சிறு கி்ளை வீதிகள் அதிகம். 
 
அந்தணர்களைப் பொறுத்து இது சதுர்வேதமங்கலமோ, இங்கு இறையிலி நிலங்களோ இல்லை. அனைவரும் தொழில் பொருட்டு வாழ்ந்தவர்கள். இன்று அனைவரும் இடம் பெயர்ந்துவிட்டார்கள். குருக்களும் வெளியில் இருந்து வந்து செல்கிறார். இங்கிருந்து குடி பெயர்ந்த அந்தணர் எவரும் எனக்குத் தெரிந்து தன் பெயரோடு பிற ஊர் அந்தணர் போல கண்டரமாணிக்கம் ஊர்ப் பெயரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
2012/9/6 N. Ganesan <naa.g...@gmail.com>


நா. கணேசன்

Raja sankar

unread,
Sep 7, 2012, 2:11:10 AM9/7/12
to mint...@googlegroups.com
அன்பின் வினைதீர்த்தான் ஐயா,

இவைற்றையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி தருவீர்களாயின் நம்மின் மரபுவிக்கியில் சேர்த்து வைக்கலாம். பலருக்கு உபயோகப்படும்.

இதே போல் உங்களுக்கு தெரிந்த ஊர்களைப்பற்றியும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். லோ த சு அவர்கள், உதயன் அவர்கள் சொல்வது போல் கூகுள் மேப்பில் குறித்து வைக்கலாம். தலப்பயணம், கோவில் பயணம் போவோறுக்கு உதவியாக அமையும்.

ராஜசங்கர்
(Rajasankar)


2012/9/6 Karuannam Annam <karu...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 7, 2012, 2:57:50 AM9/7/12
to மின்தமிழ்
On Sep 6, 11:07 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>>>> இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற
பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். <<<

இல்லை ஐயா.

ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் இரு
ஊர்களும் ப்ருஹச்சரணப் பிரிவில் உள்ளன.
திருவண்ணாமலை, சத்திய மங்கலம், மாங்குடி, மழநாடு,
பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை
ஊர்ப்பெயர்களில் அமைந்த பிரிவுகள். ராஜகம்பீரம்,
கண்டரமாணிக்கம் இரண்டும் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்தவையே. மொகலாயர் படையெடுப்பின்போது
பெரும்பாலானோர் அங்கிருந்து அகன்றனர். பாண்டியர்
குடியும் சிதறுண்டது.


க்ருஷ்ணா, கோதாவரி பிரந்தியங்களைச் சேர்ந்தோர்
பெரும்பான்மையான தேசஸ்த பிராமணர்கள்.
கணித மேதை பாஸ்கரரும், பவபூதியும், ஸமர்த்த ராமதாஸரும்
இப்பிரிவில் தோன்றியவர். பிற்காலத்தில் புலப்பெயர்வு.
ஊர்ப்பெயரை ஒட்டிய பிரிவுகள் அவர்களிடமும் உண்டு.
புணேகர்,செம்பூர்கர் என்பன போன்ற பிரிவுகளை
அவர்களிடம் பார்க்கலாம். மராட்டிய மன்னர்கள்
தஞ்சையை ஆண்ட காலத்தில் இங்கு வாழ்ந்தவர்
தஞ்சோர்கர். இதைக் குடிப்பெயராகக் கொண்டோர்
இன்றும் உள்ளனர்.

charaNam - கால்; s'araNam - புகல், அடைக்கலம்.
முன்பு ராஜா சங்கர் கேட்டிருந்தார்.

கணேசர் ஐயா கொடுத்த ‘பெருஞ்செலவு’ சரியான
விளக்கம்


தேவ்

> 2012/9/6 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > கண்டரமாணிக்கம் - பழைய ஊராகத் தெரிகிறது.
> > கண்டன், கண்டி என்று தமிழ்ப்பெயர்கள்.
> > கண்டி - எருமைப்போத்து. வென்ற கொற்றவைக்கும்
> > கண்டியம்மன் என்ற பெயர். கண்டிமுத்து என்று
> > பலருக்கும் கொங்குநாட்டில் பேருண்டு, 2 மாதம் முன்னர்தான்
> > பழனி அருகே உள்ள கீரனூரின் கண்டியம்மன் கும்பாபிடேகம்
> > என் உறவினர்கள் நடத்தினார்கள் (9-ஜூலை-2012).
> > நீல-கண்டன், நீல-காண்டி இப்பெயர்களை விளக்கி
> > ஐராவதம் அழகான கட்டுரை வரைந்துள்ளார்கள்.
> > கண்டர்மாணிக்கம் என்னும் ஊர் கண்டரமாணிக்கம்
> > என வழங்குகிறது எனக் கருதுகிறேன். கண்டி எனப்படும்
> > ஆமாவின் தலை புத்தரின் சின்னமாகக் காட்டப்படும்.
> > சோழமன்னர்களுக்கு கண்டன் என்ற பட்டம் உள்ளது,
> > கண்டருடைய மாணிக்கம் - கண்டரமாணிக்கம்,
> > கல்வெட்டுக்களைப் பார்க்கணும்.
>
> > காசியில் மிக முக்கியமான வழிபாடு பைரவருக்குண்டு.
> > வைரவன் சிவபிரான் மகன் என்பது புராணம். அதனால்
> > அவருக்கு ஆண்டபிள்ளை, வடுகபிள்ளை என்று தமிழ்க்
> > கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. காளாமுக, காபாலிக
> > வைரவ வழிபாடுகள் தொடர்புள்ளவை. அண்மையில்
> > வெளிவந்த புஸ்தகம் இவற்றை விளக்குகின்றன:
>

> >http://indologica.blogg.de/2006/09/17/nagaswamy-art-and-religion-of-t...

> ...
>
> read more »

Raja sankar

unread,
Sep 7, 2012, 10:56:03 AM9/7/12
to mint...@googlegroups.com
தேவ்

இதை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

இந்த ஊர் பெயர் போடுவது இப்போதும் வடக்கே கிராமத்து பெயரை குலப்பெயராக சொல்லிக்கொள்வது போலவா? ஜாட்களில் கிராமங்கள் உட்பிரிவின் படியே அமையும். கொங்கிலும் கிராமங்கள் குலங்களின் படி அமைத்துக்கொள்வார்கள். ஊரை பெயரை முன்பு போடும் பழக்கம் இன்றும் உள்ளது.

குலப்பெயர் அதாவது surname எழுதும் போது தெற்கிலும் வடக்கிலும் இருக்கும் பிரிவு பற்றி ஒரு கட்டுரை படித்தேன். நாஞ்சில் நாடன் என நினைக்கிறேன். மலையாளத்தில் எப்படி வீட்டுப்பெயரை முன்னே போட்டு அவருடைய பெயரை எழுதுவார்கள் என எழுதியிருந்தார். அது போலவா இது?

பார்சிகளில் ”வாலா” என்று பெயர் வைப்பது போலவும் அகர்வால், தேஷ்முக், தேஷ்பாண்டே என்று சூடிக்கொள்வது போலவும் இருக்கலாமா?

ராஜசங்கர்
(Rajasankar)



2012/9/7 DEV RAJ <rde...@gmail.com>

Karuannam Annam

unread,
Sep 7, 2012, 1:38:38 PM9/7/12
to mint...@googlegroups.com
 இந்த இழையின் எனது தொடக்கக் கடிதத்தை நமது குழும உறுப்பினர் அனுப்பி எனது கண்டரமாணிக்க நண்பர் நல்லாசிரியர் லேட் திரு சுகவனம் அவர்களது தமையானார் மாணிக்க அண்ணன் என்ற திரு சங்கரன் அவர்கள் தொடர்பு கொண்டார்.
நமது உறுப்பினருக்கு அவர் எழுதிய கீழ்க்கண்ட கடித்தையும் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் கழித்து அவரது தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் பாட்டியார் கையில் அவர்கள் பிள்ளைகளுடன் வரிசையில் வாங்கி உண்ட அமுதமனைய கல்சட்டி சாதத்தின் சுவையும் நி்னைவுவில் இனித்தது.
 மிந்தமிழின் வீச்சும் தெரிந்தது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 
அன்புள்ள கோபால மாமா அவர்களுக்கு,
                               நலம். தங்கள் மெயிலில் குறிப்பிட்டுள்ள கண்டரமாணிக்கம் , சிவகங்கை
மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது அல்ல. கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது.  இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.
                                                                                              அன்புடன்,
                                                                                             சங்கரன் , மதுரை
 

Karuannam Annam

unread,
Sep 7, 2012, 1:52:14 PM9/7/12
to mint...@googlegroups.com


2012/9/7 DEV RAJ <rde...@gmail.com>

On Sep 6, 11:07 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>>>> இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற
பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். <<<

இல்லை ஐயா.

ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் இரு
ஊர்களும் ப்ருஹச்சரணப் பிரிவில் உள்ளன.
திருவண்ணாமலை, சத்திய மங்கலம், மாங்குடி, மழநாடு,
பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை
ஊர்ப்பெயர்களில் அமைந்த பிரிவுகள். ராஜகம்பீரம்,
கண்டரமாணிக்கம் இரண்டும் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்தவையே.
மிக்க நன்றி திரு தேவ். எனது நண்பரின் அண்ணா பெரியவர் மாணிக்க அண்ணன் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஊர் என அபிப்ராயப்படு்கிறார். சரியானதை அறிய ஆவணங்கள் கிடைத்தால் தெளிவாகும். 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 நண்பரின் கடிதம்:

Karuannam Annam

unread,
Sep 7, 2012, 2:09:43 PM9/7/12
to mint...@googlegroups.com


2012/9/7 Raja sankar <errajasa...@gmail.com>

அன்பின் வினைதீர்த்தான் ஐயா,

இவைற்றையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி தருவீர்களாயின் நம்மின் மரபுவிக்கியில் சேர்த்து வைக்கலாம். பலருக்கு உபயோகப்படும். 
நன்றி திரு ராஜசங்கர். மிந்தமிழின் வீச்சை உணர்ந்துள்ளேன்.
தட்டச்சு பயிற்சியின்மையும் சோம்பலும் எனது குறை. நண்பர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஊக்கம் எழுகிறது. அவரவர் தொழிலுடன் அயராது செயலாற்றுகிறீர்கள்!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Subashini Tremmel

unread,
Sep 7, 2012, 2:12:44 PM9/7/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/9/7 Raja sankar <errajasa...@gmail.com>

அன்பின் வினைதீர்த்தான் ஐயா,

இவைற்றையெல்லாம் ஒரு கட்டுரையாக்கி தருவீர்களாயின் நம்மின் மரபுவிக்கியில் சேர்த்து வைக்கலாம். பலருக்கு உபயோகப்படும். 

அருமையான் இழை. நிறைய தகவல்கள். இது கட்டுரையாகத் தொகுத்து நமது சேகரித்து வைத்தால் வாசிப்போருக்கு உதவியாக அமையும்.

சுபா
 
 

இதே போல் உங்களுக்கு தெரிந்த ஊர்களைப்பற்றியும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். லோ த சு அவர்கள், உதயன் அவர்கள் சொல்வது போல் கூகுள் மேப்பில் குறித்து வைக்கலாம். தலப்பயணம், கோவில் பயணம் போவோறுக்கு உதவியாக அமையும்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/9/6 Karuannam Annam <karu...@gmail.com>
மேலும் நகரத்தார் ஊர்களில் பழமையானது. மற்ற நகரத்தார் ஊர்கள் காடுவெட்டிப்போட்டுப் போட்டுக் கடிய நிலந்திருத்தி வீடுகட்டிக்கொண்டதால் ஒழுங்கான நேரானவீதிகள் அமைந்தவையாக இருக்கும். ஆயின் கண்டரமாணிக்கத்தில் வீதிகள் அவ்வளவு நேரானவையல்ல. சிறு கி்ளை வீதிகள் அதிகம். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Sep 7, 2012, 2:19:58 PM9/7/12
to mint...@googlegroups.com
2012/9/7 Karuannam Annam <karu...@gmail.com>:

>> பழமார்நேரி, ராஜகம்பீரம், கண்டரமாணிக்கம் என்பவை

> நலம். தங்கள் மெயிலில் குறிப்பிட்டுள்ள கண்டரமாணிக்கம் , சிவகங்கை


> மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது அல்ல.

எங்க மறவர் நாடு ராஜகம்பீரத்தில் ஐயர்மாரே கிடையாது. ஆயினும் ஒரு
தொல்லியலாளருடன் போன போது சதுர்வேதிகள் நிரம்பிய பகுதி அது, செப்பேடுகள்
நிரப்பச் செப்புகின்றன என்று சொன்னார். எனவே தமிழகத்தில் வேறு
ராஜகம்பீரம் உள்ளதா என அறிய ஆவல்.

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Sep 7, 2012, 2:21:51 PM9/7/12
to மின்தமிழ்
ஆம், ராஜா சங்கர்

ஊர்ப்பெயர்களைச் சேர்த்துக்கொள்வது
அடையாளத்துக்கு. இந்தியா முழுவதும்
காணப்படும் பழக்கம். ஊர்ப்பெயர் Surnames
ஆவதும் உண்டு.

சில வைணவர் ஒன்றுக்கு மேற்பட்ட
ஊர்ப்பெயர்களைக்கூடப் பெயருக்கு
முன்னால் இணைத்துக் கொள்வதுண்டு.
சில வைணவ இனக்குழுக்கள் -
எலி, தட்டை, சேட்லூர், மாடபூசி.

கேரளத்தில் மன, இல்லம் எனும்
பெயர்களில் குடும்ப அடையாளங்கள்.
ஆந்திர மனவாடுக்கள் ' இண்டி பேர்லு’
என்று பெயருக்கு முன்னால் இணைத்துக் கொள்வர்.
நம் ரீச் சந்திரசேகரின் ‘மரபூர்’என்பதுகூட
அதைப்போன்றது என நினைக்கிறேன்.
இண்டி பேர்லு - கோடா, ரேலங்கி, கடியாரம், குப்பிலி.
அரச குடும்பத்தினர் உறங்குமுன் கொசுவலை கட்டுவோர்
‘ஈகலா’ எனும் பட்டம் பெற்றனர்; பால் விற்றோருக்கு
’பாலகுண்டா’.

வேளாளரில் ‘கார்காத்த வேளாளர்’ எனும் உள்ளினப்பிரிவு
உயர்ந்தது எனும் கருத்தியல் ஒன்று இருந்தது.

[ யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்; இலக்கியத்தை ஒட்டிய
சுவையான பேச்சு இது ]

உக்கிர பாண்டியன் பொதியமலைச் சாரலில் வேட்டையாடச் சென்றபோது
மேகங்கள் பாண்டிய நாட்டில் மழை பொழியாமல் வானில் திரியக் கண்டு,
சினங்கொண்டு அவற்றைச் சிறையிலடைத்து விட்டான். இதனை அறிந்த
இந்திரன் பாண்டியனோடு பொருதுவதற்கு வந்து ஆற்றாதவனாகி திரும்பச் சென்று
”பாண்டிய நாட்டில் மாதமொரு முறை மழை பொழியச் செய்கிறேன்.
மேகங்களை விடுவித்து விடவும்” என்று பாண்டியனுக்கு ஓலை வரைந்தான்.
அதைக் கண்ட பாண்டியன், ’இந்திரனின் ஒப்புதலுக்குக்கு யார் பிணை ?’
என வினவ, வேளாளர் ஒருவர் பிணையாக இருந்து மேகங்களை விடுவித்ததாக
இவ்வழகிய திருவிளையாடற் புராணச் செய்யுள் கூறுகிறது -

இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு
பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும்
நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான்
மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும்.

[நிம்ப மாலிகை - வேப்பம்பூ மாலை]

கார்காத்த வேளாளர் அவர் வழியினர் என்று கூறுவர்.

மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பு - என்ன
அழகான தமிழ் ! முனைவர் கண்ணன் முன்பு ஒருமுறை
கேட்டதையே எனக்கும் இப்போது கேட்கத் தோன்றுகிறது -

தமிழனின் அழகுணர்ச்சி எங்கே மறைந்து போயிற்று ?
தொன்மைக்குச் சண்டையிட்டே அழகுணர்வைத்
தொலைத்தானோ ?


தேவ்

DEV RAJ

unread,
Sep 7, 2012, 2:32:34 PM9/7/12
to மின்தமிழ்
On Sep 7, 11:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>> எனவே தமிழகத்தில் வேறு ராஜகம்பீரம் உள்ளதா என அறிய ஆவல்.<<

வேறெங்கும் கிடையாது, ஐயா


தேவ்

On Sep 7, 11:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/9/7 Karuannam Annam <karuan...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Sep 7, 2012, 9:31:01 PM9/7/12
to mint...@googlegroups.com
கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது.  இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.//

இதுவே நான் கேள்விப் பட்டதும்.  நான் எரவாஞ்சேரி செல்லும் வழியில் என எழுதியுள்ளேன்.  எங்கள் பூர்வீக ஊரான கருவிலி செல்லும் வழியில் புதுக்குடிக்கு முன்னால் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் உள்ளது.  எனக்குத்தெரிந்து இங்கே தான் பிரஹசரணம் அதிகம்.

2012/9/7 Karuannam Annam <karu...@gmail.com>

மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது அல்ல. கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது.  இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.
                                                                                              அன்புடன்,
                                                                                             சங்கரன் , மதுரை
 

--

Geetha Sambasivam

unread,
Sep 7, 2012, 9:33:30 PM9/7/12
to mint...@googlegroups.com, Karuannam Annam
இந்த இழையில் தொகுக்க வேண்டியவற்றைத் தனிமடலில் குறிப்பிடுங்கள்.  தொகுத்து நேரம் கிடைக்கையில் மரபு விக்கியில் இணைக்கிறேன்.  எந்தத் தலைப்பு என்பதை சுபாவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

2012/9/7 Karuannam Annam <karu...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Sep 7, 2012, 9:35:20 PM9/7/12
to mint...@googlegroups.com
எனது நண்பரின் அண்ணா பெரியவர் மாணிக்க அண்ணன் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஊர் என அபிப்ராயப்படு்கிறார். சரியானதை அறிய ஆவணங்கள் கிடைத்தால் தெளிவாகும். //

அந்த ஊர்க்காரர்களில் சிலர் எங்கள் நண்பர்கள், உறவினர்கள், சம்பந்தம் செய்தவர்கள்.  அவர்கள் கூறியும் கேட்டிருக்கிறேன்.  ஆனால் ஆதாரங்கள் எனத் தேடிப் பார்த்துச் சொல்வார்களா தெரியவில்லை. பார்க்கலாம்.  நினைவில் கொள்கிறேன்.

2012/9/7 Karuannam Annam <karu...@gmail.com>


2012/9/7 DEV RAJ <rde...@gmail.com>
On Sep 6, 11:07 am, Karuannam Annam <karuan...@gmail.com> wrote:
>>>> இக்காரணங்களால் கண்டரமாணிக்கம் பிரஹச்சரணம் என்ற
பிரிவு வேறு ஊரைக்குறிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். <<<

இல்லை ஐயா.
கண்டரமாணிக்கம் பிரஹச்சர்ணம் என்பது
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் உள்ள கிராமம் கண்டிரமாணிக்கம் [ நன்னிலம்
அருகே] உள்ளது.  இங்குதான் பிரஹச்சர்ண பிரிவு ஸ்மார்த்த பிராமணர்கள் அதிகம் உண்டு.
                                                                                              அன்புடன்,
                                                                                             சங்கரன் , மதுரை

--
Reply all
Reply to author
Forward
0 new messages