சங்க இலக்கியத்தில் மாமை

275 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Dec 3, 2019, 12:26:54 AM12/3/19
to மின்தமிழ்
அன்புடையீர்,
சங்க இலக்கியத்தில் மாமை என்ற இக் கட்டுரை நான் உருவாக்கிவரும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற இணையதளத்தில்  மாமை என்ற சொல்லுக்கான பகுதியை, மின் தமிழுக்காகச் சற்று மாற்றி எழுதிய கட்டுரை. இக் கட்டுரையில் வரும் ஆம்பல் பற்றிய  செய்திகளுக்கு திருவாளர்கள்.கணேசன், Roy ஆகியோர் கொடுத்துதவிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா.

சங்க இலக்கியத்தில் மாமை

      இந்த மாமை என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

      காதலன் பிரிந்து வெளியூர் சென்றால், பிரிவுத்துயரால் வாடிய காதலியின் மேனியில் பசலை படரும் என்றும், இந்தப் பசலை பீர்க்கம்பூவைப்போல பொன்னிறம் உடையது என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தப் பசலை என்பது பிரிவு ஏக்கத்தால் உடல் மெலிந்து உடலின் நிறம் மாறி, வெளுத்துப் போவதைக் குறிக்கும் என்று இன்றைய உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதனை ஓர் அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.

காடு இறந்தனரே காதலர் மாமை

அரி நுண் பசலை பாஅய் பீரத்து

எழில் மலர் புரைதல் வேண்டும் - அகம் 45/6-8

இதன் பொருள்:

காதலர் வறண்ட நிலத்தைக் கடந்துதான் சென்றிருக்கிறார், எனது மாமையோ

மெல்லிய நுண்ணிய பசலை படர்ந்ததால், பீர்க்கங்கொடியின்

அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது.

எனவே, மாமை என்பது மேனியின் நிறம் என்பது தெளிவாகிறது. பொதுவாக, மாமை என்பதை மாந்தளிர் நிறம் என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் இப்போது மாநிறம் என்கிறோம். இருப்பினும் சில அகராதிகள் இதனைக் கருமை நிறம் (black) என்று குறிப்பிடுகின்றன. எனவே, இந்த மாமை என்பது என்ன நிறம் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலம் தெளிவாகக் காண்பதே இக்  கட்டுரையின் நோக்கம்.

1.

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - மலை 35-37

இதன் பொருள்:

நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்

களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,

வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பெரிய யாழை

இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம். இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி’ என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். எனவேமாமை களங்கனி’ என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.

maamai-1.jpg

2.

வேனில் பாதிரி கூன் மலர் அன்ன

மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை - குறு 147/1,2

இதன் பொருள்:

வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று

மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்

பாதிரியில் மூன்று வகை உண்டு.

அவை 1. பழுப்பு நிறம் (purple) 2. வெள்ளைநிறம் 3. பொன் நிறம்.

இவற்றில் இங்கு புலவர் குறிப்பிடுவது பழுப்பு வகைப் பாதிரியே. அதுவே மாமை நிறத்தை ஒட்டி உள்ளது.

maamai-2.jpg

3.

கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்

நீர் மலி கதழ் பெயல் தலைஇய

ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே - நற் 205/9-11

இதன் பொருள்:

வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது

மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்

அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே

      பொதுவாக, தளிர்கள் இளம் பச்சைநிறத்திலோ, மாநிறத்திலோ தான் இருக்கும். கருமையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே ஈங்கையின் தளிரும் மாநிறத்ததுவே எனக் கொள்லலாம்.

maamai-3.jpg

4.1.

நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்

நார் உரித்து அன்ன மதன் இல் மாமை - நற் 6/1,2

இதன் பொருள்:

நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்

நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,

4.2.

அம்ம வாழி தோழி நம் ஊர்

பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்

நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே

இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35

இதன் பொருள்:

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்

பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்

நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,

இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.

      எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும் இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.

maamai-4.jpg

ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப் பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். சங்கப் புலவர்கள் மிகப்பெரும்பாலும் கற்பனையாக எதையும் சொல்வதில்லை.

maamai-4A.jpg

5.1.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்

தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன

அம் கலுழ் மாமை கிளைஇய

நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:

மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள

தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல

சிறிய பல தேமல்புள்ளிகளையுடைய நம் கிழத்தி

இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில் தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் .வே.சு

5.2.

திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1

இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் .வே.சு

6.

மணி மிடை பொன்னின் மாமை சாய என்

அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:

நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்

அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.

இங்கே, மணி - பொன், மாமை - பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக் கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது.

ஆனால் ஔவை.சு.து. அவர்களின் உரை,

மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என் அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும்

என்று விளக்கமாகக் கூறுகிறது. இதனையே,

இதனை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன.

 ஆனால், மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல், பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம்.

பதித்த மணி பொன்னின் அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.

7.

இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்

பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ - கலி 48/16,17

இதன் பொருள்

பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய

பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) - நச்சினார்க்கினியர் உரை

மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை என்று இங்குக் காண்கிறோம்.

பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும், மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.

பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மஈநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது.

ஆனால், இவ்வுரைக்கு விளக்கம் எழுதிய பெருமழைப்புலவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?

எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம் காணவேண்டும்.

முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.

பொன் உரை மணி அன்ன மாமைஎன்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்தஎன்று நச். உரை காண, புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்என்று பொருள் கொண்டிருக்கிறார்.

செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறதுஎன்று பொருள் கொண்டிருக்கிறார்.

எனவே இங்கு மணி பொன்னில் பொதிந்தது அல்லது மணி பொன்னில் பதிக்கப்பட்டது என்று கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது

அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம்.

அவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.

இப்போது,

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/8

என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள், அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள் என்று பொருள் கொள்கிறார். அத்துடன், மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.

ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே, பெருமழைப்புலவர் மணி - நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் மணி, ஈண்டுச் செம்மணி என்ற விளக்கத்தை இங்குக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

எனவே,

பொன் உரை மணி அன்ன மாமைக்கண் - கலி 48/16,17

என்ற அடிக்கு,

பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.

என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையைப் பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.

8.

எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்ற என் மாமை கவினே - ஐங் 146

இதன் பொருள்

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்

நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு

இன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.

ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது.

எத்தனையோ மலர்கள் இருக்க, இந்தப் புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.

ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.

செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1

என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.

maamai-5.jpg

சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?

இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.

அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு

ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்

இவட்கு அமைந்தனனால் தானே

தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே - ஐங் 103

இதன் பொருள்

அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு

ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்

இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே

இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.

எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்

தனி குருகு உறங்கும் துறைவற்கு

இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 144

இதன் பொருள்

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்

தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,

இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.

பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.

மாந்தளிரை நிறையப்பேர் பார்த்திருக்கமாட்டீர்கள். இதோ, இதுதான் மாமை எனப்படும் மாந்தளிர் நிறம்.

maamai-6.jpg

ப.பாண்டியராஜா

கந்தன் சாமி சத்திவேல்

unread,
Dec 3, 2019, 12:38:02 AM12/3/19
to mint...@googlegroups.com
நெஞ்சுவக்கவைக்கும் ஆய்வு, பயன் கருதா தொண்டு.  நன்றி.

செவ்., 3 டிச., 2019, முற்பகல் 10:57 அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0bda8b76-2b25-456a-ac16-248f86a1a077%40googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 3, 2019, 2:38:55 AM12/3/19
to மின்தமிழ்

இயற்கை எழில் பிழியும்
நுண் மாண் இயைபும்
நுவல் பூங்கருத்தின்
நுடங்கு தளிர் எழுத்தும்
ஓங்கு வெள்ளருவி 
ஒளி மழை தூவிய 
வனப்பும் கொண்ட‌
சங்கத்தமிழ் விரித்து
சொற்கடல் அலையில்
பெருங்கலம் செலுத்திய‌
தங்கள் புலமை கண்டு
வியக்குதும்
போற்றுதும்
பாராட்டுகள்
பலபல ஆயிரம்
உறுகவே!
வாழ்த்துதும்
வாழ்த்துதும்
தாங்கள்
நலம் பல சிறக்கவே!

அன்புடன் ருத்ரா

தேமொழி

unread,
Dec 3, 2019, 3:27:10 AM12/3/19
to மின்தமிழ்
நன்றி ஐயா,  மிகச் சிறப்பான பகிர்வு. 

On Monday, December 2, 2019 at 9:26:54 PM UTC-8, Pandiyaraja wrote:

N. Ganesan

unread,
Dec 10, 2019, 7:12:30 PM12/10/19
to மின்தமிழ், vallamai

1.

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - மலை 35-37

இதன் பொருள்:

நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும்மாமை நிறத்தில்

களாப்பழத்தை ஒத்தசீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,

வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பெரிய யாழை

இந்த உவமையை வைத்துகளங்கனி கருப்பாக இருப்பதால்மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

ஆனால்களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர்பச்சை நிறக் களாக்காய்நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும்அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம்இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்எனவே ’மாமை களங்கனி என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.

maamai-1.jpg

அன்பின் பேரா. பாண்டியராஜா,

மாமைக் களங்கனி என்னும் மலைபடுகடாம் அடியில் மாமை என்பது களாக்கனி போன்ற கருமை எனப் பொருள் எனத் தோன்றுகிறது.
களங்கனி சிவப்பாக இராது.

மா = கருமை.  Blackness; கருமை. மாயிரும் பீலி (சிலப். 2, 53). 

களங்கனியின் நிறம் கருமை என்பதற்குப் புறம் 127 பாருங்கள்:
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் 

மலைபடுகடாத்திலும் கருங்கோட்டியாழ் பேசப்படுகிறது.
கருங்கோடு = ஆமான் (Indian bison, Gaur) அல்லது எருமையின் கொம்பு.
இதில் செய்த யாழ் வர்ணனை,

செங்கோட்டியாழ் = நேரான மரத் தண்டினால் செய்த யாழ்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 10, 2019, 9:04:44 PM12/10/19
to மின்தமிழ், vallamai
களங்கனி - கருமைக்குப் பெயர்போனது. 
நாலடி வெண்பா:

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம்1 அவரவ ராற்றான் ;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.

(பொ-ள்.) வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.

http://www.tamilvu.org/slet/l2800/l2800uri.jsp?song_no=103&book_id=32&head_id=30&sub_id=947  

மா = கருப்பு; மாமை கருமை, அதை ஒட்டிய நிறங்கள். (பின்னத்தூரார் உரை, பழைய உரைகள், ...)

நீல ஆம்பல் = நெய்தல்.  அதை விட்டுவிடலாம். நீலோத்பலம் இது.

ஆம்பல் என்றாலே, முக்கியமாக: செவ்வாம்பல் (அரக்காம்பல்), வெள்ளாம்பல் (முத்தாம்பல்).
பைங்கால் கொக்குக்குக் கூம்பிய வெள்ளாம்பல் உவமை.
ஆம்பல் நாரை உரித்தல் என்பது வெள்ளாம்பல் நாரை (கரும்பச்சை நிறம்) உரித்தல்.
வெள்ளாம்பல் நீராம்பல் என்பர் மலையாளத்தில். மணத்தால் சௌகந்திகம் எனப் பெயர்.

kanmani tamil

unread,
Dec 11, 2019, 12:18:56 AM12/11/19
to vallamai, mintamil
"மாமைக்கவின்" பற்றிக் கல்லூரியில் ஆசிரியர் சொன்ன விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கந்தக பூமிச் சிற்றூர்களில் நகர் நடுவில் பிறந்து வளர்ந்து வாழும் என் போன்றோர் புல் பூண்டைப் பார்க்கக் கூட பள்ளிக்குள் / கல்லூரிக்குள்/ நந்தவனத்திற்குள்  சென்றாக வேண்டும். பயிர்கள் / தாவரங்கள் பற்றிய அறிவு ஆசிரியர் ஊட்டுவது தான்.

முதுகலை பயின்று கொண்டிருந்த போது இன்பச் சுற்றுலாவாக தாண்டிக்குடி எஸ்டேட் அழைத்துச் சென்றனர். மலைக்கு மேலே நாங்கள் காலைச் சிற்றுண்டி உண்ண அமர்ந்த இடத்தில் ஆசிரியர்; "மாமைக்கவின் என்றால் என்ன என்று இங்கு வந்து பாருங்கள்" என்றார். எல்லோரும் அப்படியே போட்டது போட்டபடி விட்டுவிட்டுச் சென்றோம்.
ஒரு மாமரம்- இடுப்பளவு தான் வளர்ந்து இருந்தது. 
அதன் புத்திலைகள்- பிரௌன் கலரில் மிகவும் மெலிதான சிவப்பைக் குழைத்தது போல் இருந்தன. ஆனாலும் "மாமைக்கவின் என்பது வெறும் வண்ணம் அன்று; அந்தத் 'தளிரில் இருந்த பளபளப்பும், வழவழப்பும், மென்மையும் சேர்ந்த ஒளி வீசும் அழகு'- இதைத்தான் மாமைக்கவின் என்று சங்கப்புலவோர் பாடினர்; இக்காலக் கவிஞர் 'மாந்தளிர் மேனி' என்பர்" என விளக்கம் அளித்தார்.
சக           

அம் கலுழ் மாமை </fon

Pandiyaraja Paramasivam

unread,
Dec 11, 2019, 1:23:31 AM12/11/19
to mint...@googlegroups.com
ஐயா!
களங்கனி கருப்பாகத்தான் இருக்கும். அதற்கு விலக்கம் தேவையில்லை. அதன் காய் பச்சையாக இருக்கும். இந்தக் களாக்காய் பழுக்கும்போது பச்சை நிறம் மாறி சிவப்பு நிறம் அடைந்து பின்னர் கருப்பாக ஆகிறது. அதனை ஒதக்காய் அல்லது ஒதப்பழம் என்று சொல்வோம். அதனைத்தான் புலவர் மாமைக் களங்கனி என்று சொல்கிறார்.இதனை என் கட்டுரையிலேயே விளக்கியிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா
பின் குறிப்பு:
புளியப்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!

N. Ganesan

unread,
Dec 11, 2019, 5:28:57 AM12/11/19
to மின்தமிழ், vallamai
On Tue, Dec 10, 2019 at 11:18 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

தளிர் என்று மாமையுடன் வரும் சங்கப்பாடல்களில் மாந்தளிர் என எடுத்தால் பொருள் விளங்கும்
என ச. வே.சு எழுதியுள்ளதைப் ப.பா. குறிப்பிட்டுள்ளார்.  மா- அடிப்படைப் பொருள் க்ருமை.
அதைத்தொடும் நிறங்கள் மாமை. மால் (மாலோன்). பச்சைமால் என்கிறோம் (பச்சை மாமலை போல் மேனி - ஆழ்வார்).
ஆம்பலின் மாமை வெள்ளாம்பல் தண்டின் நிறம். ஆம்பல் என்றாலே வெள்ளாம்பல். அதனால் அதனை
நீர்வளம் மிக்க மலையாளத்தில் நீராம்பல் என்பர். அத் தண்டை உரிப்பதைச் சங்க இலக்கியச் செய்யுள்
கூற்குஇறது. செவ்வாம்பல் மட்டும் ப.பா. குறிப்பிடுகிறார். வெள்ளாம்பலும் பார்க்க வேண்டும்.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 11, 2019, 5:38:05 AM12/11/19
to மின்தமிழ்
> புளியம்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!

ஒதக்காய் பற்றிய நல்ல வர்ணிப்பு:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

Dec 11, 2019, 6:03:24 AM12/11/19
to mintamil, vallamai
இலந்தைப் பழங்களிலும் ஒதப்பழம் தான் ருசி. 
அரிசிக் குருணைக்குப் பண்டமாற்றாக ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒன்றுக்கு ஒன்றரை என்ற கணக்கில் இலந்தைப்பழம் வாங்குவோம். 
சக 

நுண் <span style="line-height:115%;font-family:Latha

N. Ganesan

unread,
Dec 11, 2019, 6:11:14 AM12/11/19
to மின்தமிழ், vallamai
On Wed, Dec 11, 2019 at 5:03 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இலந்தைப் பழங்களிலும் ஒதப்பழம் தான் ருசி. 
அரிசிக் குருணைக்குப் பண்டமாற்றாக ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒன்றுக்கு ஒன்றரை என்ற கணக்கில் இலந்தைப்பழம் வாங்குவோம். 
சக 

ஒதப்பழம், ஒதக்காய். ஒத- இதற்கான செந்தமிழ்ச் சொல் என்ன?

kanmani tamil

unread,
Dec 11, 2019, 6:21:16 AM12/11/19
to vallamai, mintamil
'ஒத-' என்பதற்குரிய செந்தமிழ்ச் சொல் எது என்று இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. 
இனி வரும் காலங்களில் தேடிப் பார்க்கிறேன். 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf8gEAG-RjCXSAPZ67vJiL0Ycu%2BhqAutBcX181pyfg7jQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 11, 2019, 6:27:47 AM12/11/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Wed, Dec 11, 2019 at 12:23 AM Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> wrote:
ஐயா!
களங்கனி கருப்பாகத்தான் இருக்கும். அதற்கு விலக்கம் தேவையில்லை. அதன் காய் பச்சையாக இருக்கும். இந்தக் களாக்காய் பழுக்கும்போது பச்சை நிறம் மாறி சிவப்பு நிறம் அடைந்து பின்னர் கருப்பாக ஆகிறது. அதனை ஒதக்காய் அல்லது ஒதப்பழம் என்று சொல்வோம். அதனைத்தான் புலவர் மாமைக் களங்கனி என்று சொல்கிறார்.இதனை என் கட்டுரையிலேயே விளக்கியிருக்கிறேன்.
ப.பாண்டியராஜா
பின் குறிப்பு:
புளியப்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!

ஐயா,

மாமை என்பது அடிப்படையில் கருமை. அதை ஒட்டிவரும் பசுமை, செம்மை, பொன், நீலம், ... மா- மால். பொன்னிறமான அந்தி வெயில், மயங்கி 
இருளைச் சாரும் நேரம். மாலை. மாயை, மயங்கு (மசக்கை) ... எல்லாம் மா என்னும் வேர்ச்சொல் தான். மா எனத் திருமகளுக்கு
ஒரு பெயர். அவள் கருநிறமாகவும் இருப்பவள் எனப் பொருள் (கொற்றவை ஆதி தெய்வம். அதன் பண்புகள் திருமகள், கலைமகள்
என்பது பண்டை இலக்கியம். கொற்றவையின் நிறம் மா அடைகிறாள்) மாலோலன் என மாலுக்கு ஒரு பெயர். 

களங்கனி என்று சங்க இலக்கியத்தில் 3 இடங்களில் கருங்கோட்டியாழின் நிறத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இவை யாவும்
களாப்பழத்தின் அட்டைக்கரி போன்ற நிறம் ஆகும். சிவப்பான காய் அல்ல களங்கனி. 4 இடங்களையும் (சங்கம்) களங்கனிக்குப்
பாருங்கள். தெரிந்து விடும். 

zither = செங்கோட்டியாழ் ; harp = கருங்கோட்டியாழ். இசைக்கருவிகளில் முக்கிய வேறுபாடு - சங்கப் புலவர் பதிவு செய்துள்ளமை பற்றிப் பார்க்கவும்.
உலகிலேயே, வில் ஒன்றை வைத்து யாழ் நரம்பை மீட்டுவதை இந்தியாவில் தான் செய்தனர் என்பர்.
அக்கலைஞன் சீகாழி ராமு:  https://www.vallamai.com/?p=90679
”இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை. ”
 
------------------

ஆம்பல் என்றாலே நீராம்பல் எனப்படும் வெள்ளாம்பல். அது கரும்பச்சை நிறங்கொண்ட தண்டை உடையது. அதை உரிப்பதைப்
சங்கப் பாடல்களில் காண்கிறோம். பைங்கால் குருகுக்கு உவமை இந்த வெள்ளாம்பல். வெள்ளாம்பலுக்கு நறுமணத்தால் சௌகந்திகம் 
எனப் பெயர் (Cf. சுகந்தி = Lavender)

வெள்ளாம்பலை “சாதா சப்லா” என்றும், செவ்வாம்பலை “லால் சப்லா” என்றும் வங்காளியர் குறிப்ப்டுகின்றனர்.
இந்த சாதாரண ஆம்பல், சங்க இலக்கியத்தில் ஆம்பல் என்று வருகிறபோது பொருளாகக் கொள்ளலாம்.
தளிர் என்பதை மாந் தளிர் எனக் கொள்ளுதல் (சவேசு) போல, பூ என்றால் தாமரை என எடுப்பது போல, ....
தமிழில் இலக்கிய வழக்காய், முத்தாம்பல், அரக்காம்பல் எனப்படுவது. . 
வங்காளதேசம் இரண்டிலும் வெள்ளாம்பல் தேசிய மலர்: https://commenthome.com/water-lily-our-national-flower-bangladesh/
நீலோற்பலம் (நீல ஆம்பல், நெய்தல், உத்பலம், Blue water lily) - இலங்கையின் தேசிய மலர்.

ஆம்பல், அதன் மாமை, கழுநீர் புஷ்பம் (< பூப்பு, புப்ப ப்ராகிருதத்தில்) பற்றிய
தமிழின் முதல் கட்டுரை (1959). (அப்போது கு. சீனிவாசன் தாவரவியல் விரிவுரையாளர்.
வள்ளலார் அன்பர். எனவே பொள்ளாச்சிக்கு வருவார், அருட்செல்வர் நா.. மகாலிங்கம் நடத்திய
விழாக்களில் பங்குபெறுவார். வ.ஐ.சு. சீனிவாசனின் தகுதி கண்டு தமிழ்ப்பல்கலைக்கு
வரச்செய்து பேராசிரியர் ஆக்கினார். சங்க இலக்கியத் தாவரங்கள் கு.சீனியின்
அரிய படைப்பு.)

கு. சீனிவாசன், தமிழில் தாவரம்: ஆம்பல், செங்கழுநீர்,  தமிழ்ப்பொழில், 1959, பக். 79-84

படித்தருள்க. பிற பின்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 11, 2019, 6:37:43 AM12/11/19
to மின்தமிழ், vallamai
On Tue, Dec 10, 2019 at 11:18 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
"மாமைக்கவின்" பற்றிக் கல்லூரியில் ஆசிரியர் சொன்ன விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கந்தக பூமிச் சிற்றூர்களில் நகர் நடுவில் பிறந்து வளர்ந்து வாழும் என் போன்றோர் புல் பூண்டைப் பார்க்கக் கூட பள்ளிக்குள் / கல்லூரிக்குள்/ நந்தவனத்திற்குள்  சென்றாக வேண்டும். பயிர்கள் / தாவரங்கள் பற்றிய அறிவு ஆசிரியர் ஊட்டுவது தான்.

முதுகலை பயின்று கொண்டிருந்த போது இன்பச் சுற்றுலாவாக தாண்டிக்குடி எஸ்டேட் அழைத்துச் சென்றனர். மலைக்கு மேலே நாங்கள் காலைச் சிற்றுண்டி உண்ண அமர்ந்த இடத்தில் ஆசிரியர்; "மாமைக்கவின் என்றால் என்ன என்று இங்கு வந்து பாருங்கள்" என்றார். எல்லோரும் அப்படியே போட்டது போட்டபடி விட்டுவிட்டுச் சென்றோம்.
ஒரு மாமரம்- இடுப்பளவு தான் வளர்ந்து இருந்தது. 
அதன் புத்திலைகள்- பிரௌன் கலரில் மிகவும் மெலிதான சிவப்பைக் குழைத்தது போல் இருந்தன. ஆனாலும் "மாமைக்கவின் என்பது வெறும் வண்ணம் அன்று; அந்தத் 'தளிரில் இருந்த பளபளப்பும், வழவழப்பும், மென்மையும் சேர்ந்த ஒளி வீசும் அழகு'- இதைத்தான் மாமைக்கவின் என்று சங்கப்புலவோர் பாடினர்; இக்காலக் கவிஞர் 'மாந்தளிர் மேனி' என்பர்" என விளக்கம் அளித்தார்.
சக           

மணி
 மிடை பொன்னின் மாமை சாய என்

அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:

நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்

அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.

நீலமணி. தமிழ்ப்பெண்ணின் கருமேனிக்கு உவமை. அவள் உடலில் தோன்றும் 

பசலைக்குப் பொன் உவமை. பொன் (பசலை) தோன்றுவதால்,

மாமை (சாக்கலேச் நிறம்) சாய்கிறது/கெடுகிறது.

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Dec 11, 2019, 6:56:54 AM12/11/19
to மின்தமிழ்
"
களங்கனி என்று சங்க இலக்கியத்தில் 3 இடங்களில் கருங்கோட்டியாழின் நிறத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இவை யாவும்
களாப்பழத்தின் அட்டைக்கரி போன்ற நிறம் ஆகும். சிவப்பான காய் அல்ல களங்கனி. 4 இடங்களையும் (சங்கம்) களங்கனிக்குப்
பாருங்கள். தெரிந்து விடும். "

எத்தனை முறை உங்களுக்கு எடுத்துச்சொல்வது? என் கட்டுரையில் களங்கனி பற்றி வருமிடத்தை நன்றாகப் படித்துப்பாருங்கள். நானென்ன களாக்காயையும்,களாப்பழத்தையும் கண்டிராதவ்னா?  புலவர் குறிப்பிடுவது மாமை களங்கனி, அதாவ்து ஒதப்பழம். என் கட்டுரையில்சொல்லியிருக்கிறேன் - உற்றுப்பாருங்கள் களங்கனி மாமை அல்ல - மாமை களங்கனி - என்று. படம் கூடப் போட்டுக் காட்டியிருக்கிறேனே!

Dec 11, 2019, 7:17:11 AM12/11/19
to மின்தமிழ்
On Wed, Dec 11, 2019 at 5:56 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

வெள்ளைச் சுண்ணாம்பு, சுண்ணாம்பு வெள்ளை - வேறுபாடு என்ன எனச் சொல்லுங்க்ள்.

மாமைக் களங்கனி = கரிய களாப்பழம். இது எப்படி நீங்கள் கொடுக்கும் சிவப்புக் கலர் ஆகும்?
புரியவில்லை.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Dec 11, 2019, 7:24:46 AM12/11/19
to மின்தமிழ்
மாமைக் களங்கனி - மலைபடுகடாம்:
5 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடைய கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தின கோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ்,  (நச்சர்)
 
மாமை என்றால் சிவப்பு என்றால் “மாமைக் களக்காய்” என்று பாடியிருக்கமாட்டாரா?

நா. கணேசன்
 
திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2019, 8:03:30 AM12/11/19
to mintamil
பாடல்வரியைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள் கணேசன் ஐயா.

கதழ்ந்து கிளர் உருவின் என்பது சினத்தால் உண்டாகும் செம்மை நிறம் என்று பொருள்படும்.

எனவே இப்பாடலில் வரும் மாமை என்பது சிவப்பழகைத் தான் குறிக்கும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdO%3DtBZLjcfpXoB%3DvuUnNXCrGmZcCXhW_YKzdE4WZ2WJg%40mail.gmail.com.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்தன்னைப் பேசிடுவீர் நேசமுடன் அமிழ்தென்ன
தங்கமே தானாய் வரும்.!!!

எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Dec 11, 2019, 8:10:58 AM12/11/19
to மின்தமிழ்
On Wed, Dec 11, 2019 at 7:03 AM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:

On Wed, Dec 11, 2019 at 5:54 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Wed, Dec 11, 2019 at 5:56 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
"
களங்கனி என்று சங்க இலக்கியத்தில் 3 இடங்களில் கருங்கோட்டியாழின் நிறத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இவை யாவும்
களாப்பழத்தின் அட்டைக்கரி போன்ற நிறம் ஆகும். சிவப்பான காய் அல்ல களங்கனி. 4 இடங்களையும் (சங்கம்) களங்கனிக்குப்
பாருங்கள். தெரிந்து விடும். "

எத்தனை முறை உங்களுக்கு எடுத்துச்சொல்வது? என் கட்டுரையில் களங்கனி பற்றி வருமிடத்தை நன்றாகப் படித்துப்பாருங்கள். நானென்ன களாக்காயையும்,களாப்பழத்தையும் கண்டிராதவ்னா?  புலவர் குறிப்பிடுவது மாமை களங்கனி, அதாவ்து ஒதப்பழம். என் கட்டுரையில்சொல்லியிருக்கிறேன் - உற்றுப்பாருங்கள் களங்கனி மாமை அல்ல - மாமை களங்கனி - என்று. படம் கூடப் போட்டுக் காட்டியிருக்கிறேனே!
ப.பாண்டியராஜா

வெள்ளைச் சுண்ணாம்பு, சுண்ணாம்பு வெள்ளை - வேறுபாடு என்ன எனச் சொல்லுங்க்ள்.

மாமைக் களங்கனி = கரிய களாப்பழம். இது எப்படி நீங்கள் கொடுக்கும் சிவப்புக் கலர் ஆகும்?
புரியவில்லை.

மாமைக் களங்கனி - மலைபடுகடாம்:
5 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடைய கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தின கோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ்,  (நச்சர்)
 
மாமை என்றால் சிவப்பு என்றால் “மாமைக் களக்காய்” என்று பாடியிருக்கமாட்டாரா?

நா. கணேசன்

பாடல்வரியைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள் கணேசன் ஐயா.

கதழ்ந்து கிளர் உருவின் என்பது சினத்தால் உண்டாகும் செம்மை நிறம் என்று பொருள்படும்.

எனவே இப்பாடலில் வரும் மாமை என்பது சிவப்பழகைத் தான் குறிக்கும்.

இல்லை. கறுப்பு சினத்துக்கு ஆனது (தொல்காப்பியம்). இங்கே கருங்கோட்டியாழ் ஆதலால்,
அதன் நிறத்தைத் தெளிவு படுத்துகிறார் மலைபடுகடாத்தில். மாமைக் களங்கனி = கறுத்த களாப்பழம்
போன்ற கருங்கோட்டியாழ்.  வெள்ளைச் சுண்ணாம்பு = வெளுத்த சுண்ணாம்பு. அதுபோல,
மாமைக் களங்கனி = கறுத்த களாப்பழம்.

NG
 
திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2019, 8:21:14 AM12/11/19
to mintamil
மாமை என்பதற்குக் கருப்புநிறம் பொருந்தவே பொருந்தாது. அகராதியில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாமை என்பது கண்ணிமையையும் குறிக்கும் என்ற எனது கட்டுரையில்கூட மாமை என்பது சிவப்புநிறத்துடன் தான் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. கீழே அந்தக் கட்டுரையின் பகுதி உள்ளது.

மாமையும் செந்நிறமும்:

பொதுவாக, சங்ககாலப் பெண்கள் தமது கணவர் / காதலருடன் கூடி மகிழ்ந்திருக்கும்போது தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைதீட்டியும் ஓவியங்களை வரைந்தும் அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அவற்றில் முதன்மையாகத் தமது கண்ணிமைகளுக்குச் செவ்வண்ணம் பூசி அழகுசெய்ததைக் கூறலாம். இப்படிச் செவ்வண்ணம் பூசி அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளை மாந்தளிருடன் உவமையாக ஒப்பிட்டுக் கூறுவது சங்கப் புலவர்களின் வழக்கமே. இங்கும் அதைப்போன்ற ஒப்பீடானது மாமைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதைக் கீழக்காணும் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய
ஆய்நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற்.205

(பொருள்: மழைத்துளி மிகுதியாகப் பட்ட மாந்தளிர் போல, உன்னைப் பிரிந்த துன்பத்தால் வருந்தி அழுது இவள் விடும் கண்ணீரால் செவ்வண்ணம் பூசிய இவளது கண்ணிமையின் அழகு குன்றும் ..)

சங்கப் பெண்களின் செவ்வண்ணம் பூசிய கண்ணிமைகளை மாந்தளிருடன் மேற்காணும் பாடலில் ஒப்பிட்டுக் கூறிய புலவர்கள், கீழ்க்காணும் பாடல்களில் அதனைச் செப்புப்பேழையுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். 

பிரியின் மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை – நற்.304

(பொருள்: தலைவன் என்னைப் பிரிந்தால், நீலமணியைப் பதித்த செப்புப்பேழையினைப் போலத் தோன்றும் எனது கண்ணிமைகளின் அழகினைக் கண்ணீர் சிதைக்கும்….)

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி.48

(பொருள்: பல நாளும் துன்பத்தால் வருந்தி கண்ணீரால் சிதைக்கப்பட்டதால் இவளது கண்ணிமைகள் நிறம் மாறிவிட்டன. நீலமணியைப் பதித்த செப்புப்பேழையினைப் போலத் தோன்றும் இவளது கண்ணிமைகளில் பொய்யும் உண்டோ?...)

மேற்பாடல்களில் வரும் பொன் என்பது செம்பினைக் குறிக்கும். இப்பாடல்களில், செந்நிறம் பூசப்பட்ட கண்ணிமைகளைச் செப்புப்பேழைக்கும் கருநிறக் கண்மணியை நீலமணிக்கும் உவமையாகக் கூறியுள்ளனர்.

இதுக்கு மேலயும் நீங்க ஒத்துக்கலன்னா நா வரல ஆட்டக்கி. :))
 
Pandiyaraja

unread,
Dec 11, 2019, 8:24:59 AM12/11/19
to மின்தமிழ்
கட்டுரையில்நான் கூறியிருப்பது:

இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம். இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி’ என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். எனவேமாமை களங்கனி’ என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.

இத்துடன் மாமைக் களங்கனியின் படத்தை வேறு போட்டுக் காட்டியிருக்கிறேன்.

இதற்கு மேலும் விளங்கவில்லை என்றால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

மாமைக் களங்கனியை, அதாவ்து சிவப்பு நிற களாக்காயின் ஒதப்பழத்தை நான் மடியில் கட்டிக்கொண்டு தின்றவன்.

ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Dec 11, 2019, 8:28:51 AM12/11/19
to மின்தமிழ்
களாக்காய் பழுக்க ஆரம்பித்து மாமை நிறம் அடைகிறது.
ப.பா

Pandiyaraja

unread,
Dec 11, 2019, 8:30:37 AM12/11/19
to மின்தமிழ்
“இதுக்கு மேலயும் நீங்க ஒத்துக்கலன்னா நா வரல ஆட்டக்கி. :))”

நானும்தான்.
ப.பா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்தன்னைப் பேசிடுவீர் நேசமுடன் அமிழ்தென்ன
தங்கமே தானாய் வரும்.!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 11, 2019, 8:30:52 AM12/11/19
to மின்தமிழ்

On Wednesday, December 11, 2019 at 7:21:14 AM UTC-6, திருத்தம் பொன். சரவணன் wrote:

மாமை என்பதற்குக் கருப்புநிறம் பொருந்தவே பொருந்தாது. அகராதியில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆமாம், ஆமாம் :-) :-)
 
மாமை என்பது கண்ணிமையையும் குறிக்கும் என்ற எனது கட்டுரையில்கூட மாமை என்பது சிவப்புநிறத்துடன் தான் தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. கீழே அந்தக் கட்டுரையின் பகுதி உள்ளது.

மாமை கண்ணிமையா???

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2019, 8:32:34 AM12/11/19
to mintamil
நீங்கள் கூறுவது உண்மைதான் ஐயா.

சிவப்பாக இருக்கும் பல பொருட்கள் முதிர்ந்து கருப்பாக மாறுவதுண்டு. சான்றாக மனிதக் குருதியையே கூறலாம்.

அதுமட்டுமின்றி, செம்மை என்ற சொல்லுக்குக் கருமை என்ற பொருளும் உண்டு என்று ஏற்கெனவே ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருக்கிறேன். அதன் சுட்டி கீழே:

மேலும் இப்பாடலில் வரும் மாமை என்பதனைக் கருப்புநிறம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே கதழ்ந்து கிளர் உருவின் என்ற சொல்லையும் சேர்த்துள்ளார் புலவர்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f89a895b-4824-4c65-aaef-905dee2adfeb%40googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 11, 2019, 8:38:02 AM12/11/19
to mintamil
@ கணேசன் ஐயா

இச் சுட்டியில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Dec 11, 2019, 1:21:01 PM12/11/19
to மின்தமிழ்

http://www.tamilonline.com/media/May2004/9/0b75d83a-f6bf-43e9-a875-3bdc348f3dad.jpg

இவர்தான் மாமை அழகி.

இதுதான் செப்புச்சிலை போன்ற ஒரு அழகிய நிறம்.

பருவ வயதில் தோன்றும் வெண்மையான பசலையை  தெளிவாக  எடுத்துக்காட்டும் நிறம் 

பெரும்பான்மையான நம் நாட்டு மக்களின் நிறம் 

பிற நிற வேறுபாடுகள்  

https://newvoradio.fr/wp-content/uploads/2018/05/Fenty-Beauty.jpg

இன அடிப்படையில் தோலின் நிறம் வேறுபடுவது.

Tan Color  skin tone = மாமை நிறம் = மாநிறம் 

தேமொழி

unread,
Dec 11, 2019, 1:25:20 PM12/11/19
to மின்தமிழ்

வெளிர் முதல் அடர் நிறம் வரை கொண்ட ஒரே வகைப் பழங்கள் 

இதில் இடைப்பட்ட நிறம் மாமை 

N. Ganesan

unread,
Dec 11, 2019, 7:22:24 PM12/11/19
to மின்தமிழ், vallamai
On Tue, Dec 10, 2019 at 11:18 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
"மாமைக்கவின்" பற்றிக் கல்லூரியில் ஆசிரியர் சொன்ன விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கந்தக பூமிச் சிற்றூர்களில் நகர் நடுவில் பிறந்து வளர்ந்து வாழும் என் போன்றோர் புல் பூண்டைப் பார்க்கக் கூட பள்ளிக்குள் / கல்லூரிக்குள்/ நந்தவனத்திற்குள்  சென்றாக வேண்டும். பயிர்கள் / தாவரங்கள் பற்றிய அறிவு ஆசிரியர் ஊட்டுவது தான்.

முதுகலை பயின்று கொண்டிருந்த போது இன்பச் சுற்றுலாவாக தாண்டிக்குடி எஸ்டேட் அழைத்துச் சென்றனர். மலைக்கு மேலே நாங்கள் காலைச் சிற்றுண்டி உண்ண அமர்ந்த இடத்தில் ஆசிரியர்; "மாமைக்கவின் என்றால் என்ன என்று இங்கு வந்து பாருங்கள்" என்றார். எல்லோரும் அப்படியே போட்டது போட்டபடி விட்டுவிட்டுச் சென்றோம்.
ஒரு மாமரம்- இடுப்பளவு தான் வளர்ந்து இருந்தது. 
அதன் புத்திலைகள்- பிரௌன் கலரில் மிகவும் மெலிதான சிவப்பைக் குழைத்தது போல் இருந்தன. ஆனாலும் "மாமைக்கவின் என்பது வெறும் வண்ணம் அன்று; அந்தத் 'தளிரில் இருந்த பளபளப்பும், வழவழப்பும், மென்மையும் சேர்ந்த ஒளி வீசும் அழகு'- இதைத்தான் மாமைக்கவின் என்று சங்கப்புலவோர் பாடினர்; இக்காலக் கவிஞர் 'மாந்தளிர் மேனி' என்பர்" என விளக்கம் அளித்தார்.
சக           

நல்ல விளக்கம்.

பசலை பொன் நிறத்தில் வரிகளை மாமை நிறத்தில் (= சாக்கலேட் மிட்டாய் வர்ணத்தில்)  உள்ள உடலுடன் தோன்றுவதைச்
சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. மாந்தளிரில் பொன்வரி தலைவியின் உடல் தோற்றத்துக்கு உவமை.

image.jpg

mango-leaves.jpg

ப. பா. > ”5.1.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்

தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன

அம் கலுழ் மாமை கிளைஇய

நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:

மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள

தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல

சிறிய பல தேமல்புள்ளிகளையுடைய நம் கிழத்தி

இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும்இது மாந்தளிர் என்று கொள்வதில் தவறில்லைஇதனை மாமரம் என்றே கொள்வர் .வே.சு

5.2.

திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1

இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் .வே.சு

6.

மணி மிடை பொன்னின் மாமை சாய என்

அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:

நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்

அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.”

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 11, 2019, 7:29:52 PM12/11/19
to மின்தமிழ், vallamai
>  இதுதான் செப்புச்சிலை போன்ற ஒரு அழகிய நிறம்

போட்டோவில் உள்ள பெண் வெண்கலச் சிலை போன்றவர்.

செப்புச்சிலை சாக்கலேட் (மாமை < மா-) நிறத்தில் இருக்கும்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 11, 2019, 7:38:10 PM12/11/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

On Wed, Dec 11, 2019 at 12:25 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote

பிற நிற வேறுபாடுகள்  

https://newvoradio.fr/wp-content/uploads/2018/05/Fenty-Beauty.jpg

இன அடிப்படையில் தோலின் நிறம் வேறுபடுவது.

இந்தப் படம் இமோஜி முதன்முதலாக யூனிகோடில் வரும்போது
நிகழ்ந்த உரையாடல்களை நினைவூட்டுகிறது. இப்போது 5 கலர் அனுமதி என நினைவு.

தமிழரின் மாமை நிறம் (= chocolate color) என்பது கடைசி 2 வரிசை. வெளுப்பெல்லாம்
பின்னால் வந்தது. இரண்டும் 2500 ஆண்டுகளாய் கலந்து வருகின்றன.
ஒரே குடும்பத்தில் பார்க்கலாம். இதன் தொடக்கம் சிந்து வெளியின்
கடைசிக் காலம். அதன்பின்னர் பாண்டவர்/பாண்டியர்.
வழுதி, வையை ... பெயர்க்காரணத்தில் பார்ப்போம்.

NG

N. Ganesan

unread,
Dec 11, 2019, 7:43:23 PM12/11/19
to மின்தமிழ், vallamai

தேமொழி

unread,
Dec 11, 2019, 9:42:25 PM12/11/19
to மின்தமிழ்
Skin tone reference chart

-----------------

N. Ganesan

unread,
Dec 11, 2019, 10:14:55 PM12/11/19
to மின்தமிழ், vallamai
தற்காலத்தில் மாமை நிறத்தார் படும் துயர்:

ஆனால், 2000 வருடம் முன்னர் அவ்வாறில்லை. ~NG

வள்ளுவர் கூறும் மாமை:
-----------------------------------------
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

மணக்குடவர் உரை: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை 
இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.   

மா அரிவை = மா(மை) நிறப் பெண்.
துண் பல் தித்தி, மாஅயோயே  (குறுந்தொகை 300) 

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - முத்தொள்ளாயிரம்

Pandiyaraja

unread,
Dec 11, 2019, 10:44:07 PM12/11/19
to மின்தமிழ்
மிகச் சரியாகப் பிடித்துவிட்டீர்கள்,தேமொழி, மிக்க நன்றி. மாந்தளிர் முற்றும்போது கருப்பாக நிறம் மாறும். அதனையே காணேசனார் காட்டியுள்ளார்.ஆனால் இளம் மாந்தளிர் இந்தச் சிவப்பழகியின் நிறத்தில்தான் இருக்கும். இதைத்தான் தமிழ்மக்கள் கொண்டாடியிருந்திருக்கிறார்கள்.
மீண்டும் தேமொழி அம்மைக்கு மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Dec 11, 2019, 10:53:33 PM12/11/19
to மின்தமிழ்
ஒரு காலத்தில் சென்னை போத்தீசில் துணி வாங்குபவர்க்கு ஒரு மரக்கன்று தருவார்கள். அப்படி ஒரு மா மரக்கன்றை எங்கள் வளாகத்தில் யாரோ நட்டுவைத்திருந்தார்கள். அது வளரும்போது, துளிர்விடும் இலைகளின் பல்வேறு நிலைகளை ஆய்ந்து பார்த்திருக்கிறேன். கொழுந்துகள், இளந்தளிர்கள்,முற்றிய தளிர்கள், இலைகள் எனப்பல்வேறு நிறங்களில் உள்ள இலைகளைப்பார்த்திருக்கிறேன். என் மனைவியை அழைத்துச்சென்று, சரியான தளிரினைக் காட்டி, இதுதான் மாமை என்ற மாநிறம் என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். 
ப.பாண்டியராஜா

kanmani tamil

unread,
Dec 11, 2019, 10:58:59 PM12/11/19
to mintamil, vallamai
அழகியல் கொள்கை காலந்தோறும் மாறுபட்டுள்ளது.
அவரவர்க்கு மனதிற்கினிய தோல்வண்ணம் மாமை என்று பொருள்படுகிறது.
பாரதிதாசன் ' மா ' என்றால் கருமை என்பார்.
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Dec 11, 2019, 11:07:14 PM12/11/19
to மின்தமிழ்

மாந்தளிர் மேனி என இளமைக்கும் நிறத்துக்கும் ஒப்புமை கருதி குறிப்பிட்டால்

இதுவும் மாந்தளிரே 

source:

வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் <span style="line-height:15.3333px;fon

N. Ganesan

unread,
Dec 11, 2019, 11:53:01 PM12/11/19
to மின்தமிழ், vallamai
On Wed, Dec 11, 2019 at 9:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அழகியல் கொள்கை காலந்தோறும் மாறுபட்டுள்ளது.
அவரவர்க்கு மனதிற்கினிய தோல்வண்ணம் மாமை என்று பொருள்படுகிறது.
பாரதிதாசன் ' மா ' என்றால் கருமை என்பார்.
சக 

 பொண்ணு  மாநிறத்தில் இருப்பாள். என்றால் கருப்பான நிறம் எனப் பொருள்.
மாந்தளிர் மேனி. இது வெங்கலக் கலரில் தேமொழி போட்டோவில் காட்டும் பெண்ணிறம் அல்ல.

மா- மால், மாய் (மாஅயோய் - மாமை நிறத்தாள்), மாழ்- மாழ்குதல் (கறுத்தல்): மாழை இரும்பு.
மாழை - முதலில் மிகுபயன் கொண்ட இரும்பு, பின்னர் மற்ற உலோகங்கள் (உ-ம்: பொன்).
மா = கருமை என்பது அடிப்படைப் பொருள். கப்பிரத்தியம் பெற்று, சங்கச் சொல் மாகம் = ஆகாயம்.

முதலில் Purple (2-3 நாள்), பின் சாக்கலேட் (மா, மாமை): - மாந்தளிர்:

மா - கருமை. ‘பொண்ணு மா நிறமா இருப்பா’ = பெண் கரிய நிறத்தவள்.
மா குறுகி மய் (மை) என்றும் வரும்.

மா = கருமை. எனவே, மாயோன், மாயோள், மால் (திருமால்).
பிரபஞ்சத்தின் வர்ணம் விஷ்ணுவுக்கு.(மால் என்பது அதனால்).
மா குறுகி மய்(மை), மா- மயங்கு/மசங்கு மசக்கை என்னும் வினைச் சொற்கள்.

சீ (சீமாறு/ஈக்கமாறு) - மரத்தில் வடியும் சீழ் = கள். சீழம் > ஈழம் (சிப்பி> இப்பி, சமணர் > அமணர், ... போல).
மா ‘கருமை/இருள்’ மயக்கம் என்னும் சொல் பிறப்பித்தல் போல
மா ழ் விகுதியும் பெறும். மாழ்குதல் - மயங்குதல் (சீ -ழ் விகுதி ஏற்று சீழ் ‘கள்’ ஆதற்போல்).
"குழறி மாழ்கி" (கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம் 237).
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை  ஆஅது மென்னு மவர் (குறள்)
மா- மாழ்குதல் - இருளடைதல் = கெடுதல், மங்குதல், மாழ்கு - மழுங்குதல். மாழார்ந்து - மாழாந்து எனவும்
இலக்கியங்களில் உண்டு. மனங்கவல்பின்றி மாழாந்தெழுந்து (பொருநர் ஆற்றுப்படை).

மா - மாகம் = ஆகாயம். மாகம் மாகு என்றும் வரும். போ போகுதல். அதுபோல், மா ‘கருமை’ மாகு/மாகம்/மாழ்கு.
நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

த்ராவிடச் சொற்களில் வட இந்தியாவில் ஒன்றும், தென்னிந்தியாவில்
ஒன்றும் பெரும்பான்மையும் புழங்குவதைக் காணலாம். இதற்கு
ஒரு நல்ல உதாரணம்: வட வ்ருக்ஷம் என வடக்கேயும், ஆல மரம் (< யால்- யாலும் விழுது)
தெற்கேயும் Banyan fig என்னும் இந்தியாவின் தேசியமரம் அழைக்கப்படுதல்.
கருமை/நீலம் என்ற பொருள் கொண்ட காயா/காசா ஆ-காசம் என வடக்கே வழங்க,
அதே பொருள் கொண்ட மா ‘கருமை’யில் இருந்து மாகம் (அ) மாகு தெற்கே வழங்குகிறது.
https://groups.google.com/forum/#!msg/houstontamil/MZ17vAeDxHc/j42MWoTcDgAJ 

 மாகம் - தமிழ்ச் சொல். மா என்றால் கருமை, இருட்டு. 
பிரபஞ்சமே கரிய இருள் சூழ்ந்தது. கருங்கடலுடன் எப்பொழுதும் ஒப்பிடப்படுவது.
கடலில் மீன்கள் போல, ஆகாயத்தில் விண்மீன்கள்.
ஆ-காயம் என்பதும் கருநீலத்தால் வந்த பெயரே (தொல்காப்பியம்).
காயா என்ற பூப் பெயருடன் (Ironwood), சீமைக்காயா என்னும் அழகிய
ஜக்கரண்டா மலர் பற்றி எழுதிய மடல்களில் பார்க்கலாம்.

’பொண்ணு மா நிறமா இருப்பா’. என்றால் கறுப்பாக இருக்கிறாள் எனப் பொருள்.
கருமையான பிரபஞ்சவெளிக்கு மாகம் என்று காரணப்பெயர். மா - கருமை.
மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவண்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.

              மாக யானை - கன்னங்கரிய யானை.
விசும்பு - வியன், வியாபகம் என்னும் விரிந்த பரப்பைக் காட்டும்.

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்

யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்

மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்

ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே?

ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்

மாக விசும்பு = கன்னங்கருத்த வானம்.

ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே

ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,

மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,

மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ

கரிய விண்ணை முட்டுகின்ற கொடிகளையுடைய மாடங்கள்.

மாகம் திகழ் கொடி மாடங்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 11, 2019, 11:57:23 PM12/11/19
to மின்தமிழ்

On Wednesday, December 11, 2019 at 10:07:14 PM UTC-6, தேமொழி wrote:

மாந்தளிர் மேனி என இளமைக்கும் நிறத்துக்கும் ஒப்புமை கருதி குறிப்பிட்டால்

இதுவும் மாந்தளிரே 

photoshop? 

தேமொழி

unread,
Dec 12, 2019, 12:00:27 AM12/12/19
to mint...@googlegroups.com

On Wednesday, December 11, 2019 at 8:57:23 PM UTC-8, N. Ganesan wrote:

On Wednesday, December 11, 2019 at 10:07:14 PM UTC-6, தேமொழி wrote:

மாந்தளிர் மேனி என இளமைக்கும் நிறத்துக்கும் ஒப்புமை கருதி குறிப்பிட்டால்

இதுவும் மாந்தளிரே 

photoshop

அப்படி செய்ய வேண்டிய தேவை?

இந்த இளந்தளிர் இருக்கும் ...

அதே பக்கத்தில் முற்றிய தளிரின் படமும் உள்ளது காண்க.  

வணர்ந்து ஏந்து மருப்பின் <span style="line-height:15.3333px;font-family:Latha,sans-ser

தேமொழி

unread,
Dec 12, 2019, 12:03:22 AM12/12/19
to மின்தமிழ்

On Wednesday, December 11, 2019 at 8:53:01 PM UTC-8, N. Ganesan wrote:

On Wed, Dec 11, 2019 at 9:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அழகியல் கொள்கை காலந்தோறும் மாறுபட்டுள்ளது.
அவரவர்க்கு மனதிற்கினிய தோல்வண்ணம் மாமை என்று பொருள்படுகிறது.
பாரதிதாசன் ' மா ' என்றால் கருமை என்பார்.
சக 

 பொண்ணு  மாநிறத்தில் இருப்பாள். என்றால் கருப்பான நிறம் எனப் பொருள்.

Search Results

Web results

மாநிறம், பெயர்ச்சொல். பொதுநிறம் (C. G.); வெள்ளை நிற தோலுக்கும் கருப்பு நிற தோலுக்கும் இடைப்பட்ட நிறம்.

-----

மாநிறம்

Jump to navigationJump to search

பலவித மலர்களாால் தொடுக்கப்பட்டது பொருள் தருக

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாநிறம்பெயர்ச்சொல்.
  1. பொதுநிறம் (C. G.)
  2. வெள்ளை நிற தோலுக்கும் கருப்பு நிற தோலுக்கும் இடைப்பட்ட நிறம்.

பயன்பாடு[தொகு]

  1. எனக்கும் என் தந்தையை போலே மாநிறம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Brown colour, tan colour

தேமொழி

unread,
Dec 12, 2019, 12:16:20 AM12/12/19
to மின்தமிழ்

சிறப்பு நேர்காணல்: மாநிறம் பெண்களுக்கென பிரத்தியேகமானதா?

ஆடை வடிவமைப்பாளர் - ஆயுஷ் கெஜ்ரிவால்

பெரும்பான்மையான மக்கள் மாநிறமாக இருக்கும் இந்தியாவில்தான் அதிகபட்சமாக ஃபேர்னஸ் க்ரீம்கள் மற்றும் ஆடை உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது. அந்த விளம்பரங்களில் வரும் வெள்ளையான பெண்களின் நிறத்துக்கேற்ப, நம் நாட்டில் ஆடையில் இருந்து செருப்பு வரைக்கும் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது. அதுவே ஸ்டைல் அழகு என்று கூறியும் வருகின்றனர். ‘கறுப்பா இருந்தாலும் களையா இருக்கமா’ என்று கூறும் நாக்குகள் ‘நீ அழகானவள்’ என்று கூற முன்வருவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை பொய்யாக்குகிறார் U.K.வில் வாழும் இந்திய வம்சாவளி ஆடை வடிவமைப்பாளர் ஆயுஷ் கெஜ்ரிவால்.

இவரது படைப்புகளில் மாநிறம் மற்றும் கருமையாக இருக்கும் பெண்களே மாடலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியப் பெண்களுக்கென பிரத்தியேகமாக இந்திய கலாசாரம் மற்றும் பாலிவுட் பாணியை ஒன்றாகச் சேர்த்து பல புதுமையான ஆடைகளை பல வண்ணத்தில் வடிவமைத்து உலகின் அனைத்து பெண்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரது படைப்புகளில் பெனாரில் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய கோரா பட்டுப்புடவை மற்றும் ராஜ்ஜிகாந்த் திருமண ஆடை (Collection) தொகுப்பு மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிசைனர்கள் பலர் Western Outfit-இல் தங்கள் கைவண்ணத்தைக் காட்ட நீங்கள் ஏன் புடவையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

என்னுடைய சின்ன வயதில் என் அம்மா, பாட்டி இருவரும் விழா காலங்களில் புடவை உடுத்துவார்கள். அப்போதிலிருந்தே எனக்கு பெண்கள் ஆடைகளிலே புடவை மீது ஒரு தனி அபிப்பிராயம் இருந்தது. என் அம்மா, பாட்டி புடவைகள் பல வண்ணங்களில் பல வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். அது இப்போது குறைந்து வருவதை பார்க்கிறோம். அதை சரி செய்யும் நோக்கில் தற்போதைய ட்ரெண்டுக்களுக்கு ஏற்ப பல வண்ணங்களில் பல வேலைப்பாடுகளுடன் அனைத்து நிற பெண்களுக்கும் ஏற்றார்போல் ஆடை வடிவமைத்து வருகிறேன்.

ஆடை வடிவமைப்பாளர் பார்வையில், புடவை பற்றி உங்கள் கருத்து என்ன?

மற்ற எல்லா ஆடைகளிலும் நாம் தேர்ந்தேடுத்த துணியை (Material) பொறுத்து நமக்குத் தேவையான டிசைன்களில் வடிவமைத்து கொள்ளலாம். ஆனால், புடவை அப்படி கிடையாது. புடவை என்பது வெறும் நூல்களால் ஆன ஆடை மட்டும் கிடையாது. அது ஒரு கலைஞனுக்குக் கொடுக்கப்பட்ட ஓவியக்கூடம். அதில் நான் பல வண்ணங்கள்கொண்டு என் சுயக்கதையைச் சித்திரமாக்குகிறேன்.

கறுத்த / மாநிறம் உள்ள பெண்களை மாடலாகத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

உலகில் 30 சதவிகிதம் இருக்கும் மெலிந்த வெள்ளை நிற மனிதர்கள் எந்த உடை அணிந்தாலும் அழகாகவே காணப்படுவார்கள். மற்ற 70 சதவிகிதம் மாநிறம், கறுத்த நிற மக்கள், அவர்கள் நிறத்துக்கும் உடல் வாகுக்கும் ஏற்றார் போல உடை வடிவமைப்பதே என்னை போன்ற வடிவமைப்பாளரின் கடமை. மாநிறமாக இருக்கும் பலர் விளம்பரங்களைப் பார்த்து தங்களுக்குச் சற்றும் சரிவராத ஆடைகளை வாங்கி அணிகின்றனர். அந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்தெறியும் நோக்கில்தான் நான் மிக கறுத்த மற்றும் மாநிறப் பெண்களை மாடலாகப் பயன்படுத்துகிறேன்.

மேலும், இவர் தன் ஆடை வடிவமைப்பு மூலம் சமுதாயத்தில் உள்ள பல ஸ்டீரியோ டைப்பை உடைத்தெறித்தது மட்டுமில்லாமல் தற்போது அதன் வரிசையில் ஒன்றை செய்து All Over Indiaவின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி உள்ளார். கடந்த வாரம் ஆயுஷ் உடை வடிவமைத்த ஒரு பெண்ணின் புகைப்படம் இந்தியாவின் Talk of the Town ஆகப் பேசப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் அந்த பெண் புடவை உடுத்தி பொட்டு வைத்து அதனுடன் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹய்ஜப்பு (Hijab) அணிந்திருந்தார். இந்தியா முழுவதும் பரவிய இந்தப் புகைப்படம் பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டது, அதை பற்றி ஆயுஷிடம் கேட்டதற்கு..

“நாம் அணியும் உடை, அதை நாம் கையாளும் விதம் (ஸ்டைல்) மற்றவர்களுக்கு நாம் எப்படிபட்டவர்கள் என்பதை முதலில் தெரியப்படுத்தும் கருவி. அது மற்ற எல்லாவற்றையும்விட கனத்த குரல் கொண்டதாகவும் அதுவே மாற்றத்துக்கான ஒரு நம்பமுடியாத வலுவான சக்தியாக இருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

நான் ஸ்டைலிஷ் மனிதனாக இருக்கிறேன் என்று கூறுவதைவிட, அதை போன்று எண்ணம்கொண்டு வாழ்ந்து காட்டுவதே உண்மையான ஸ்டைலுக்கான அழகு. அதையேதான் நானும் செய்தேன்.

எப்படி குள்ளமானவர்களுக்கே என்று High Heels கண்டுப்பிடிக்கப்பட்டதோ, வளர்ந்தவர்களுக்கு என பிரத்தியேக ஆடை, பருமன் ஆனவர்களுக்கு ஏற்ற ஆடை என பல மாற்றங்கள் கொண்டுவந்த அதே ஆடை வடிவமைப்பு துறையில், தற்போது நான் மதம், சாதி அற்ற வலுவான இந்திய சமுதாயத்தை உருவாக்க ஒர் மாற்றத்தை கொண்டுவர முயல்கிறேன். எல்லா கலாசாரத்திலும் அழகு உணர்தல் மிக நேர்த்தியாக கையாளப்படுகிறது. இதை நன்கு உணர்ந்ததனால்தான் இரு காலசாரத்தையும் ஒன்றுசேர்த்து Fusion ஸ்டைலிங்கை செய்தேன். மேலும், ஓர் கலைஞனை ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதே உங்கள் சட்டம் என்றால், நான் உங்கள் விதிகளை பின்பற்ற மறுக்கிறேன். நான் இந்த சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. நான், நானாகவே ('ME') இருக்க விரும்புகிறேன். இது என் உடல். என்னுடைய தோல். என் உலகம். இதுவே என் பாணி. இதை நீங்கள் விரும்புகிறீர்களானால், மாற்றத்துக்காக தயாராகுங்கள்” என மிக யதார்த்தமாக தன் மேல் வைக்கப்படும் அவதூறுக்கும் குற்றத்துக்கும் மிக நேர்த்தியாகப் பதில் கொடுத்தார் ஆயுஷ் கெஜ்ரிவால்.

சாதி, மதம் அற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்று நாம் ஆண்டாண்டு காலமாக வாய் வாக்கில் சொல்லிக்கொண்டு இருந்தவற்றை எல்லாம், முழு செயல் வடிவத்தில் செய்து காட்டியுள்ளார் ஆயுஷ். சமுதாய மாற்றத்துக்காக ஆடையையே கருவியாகப் பயன்படுத்தி அவர் மேற்கொள்ளும் முயற்சியில் பாதிகூட தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஒருவர்கூட முயற்சி செய்து பார்த்தது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவரைப் போன்று செயலில் ஈட்டுபட முடியவில்லை என்றாலும் அவர் மேற்கொள்ளும் முயற்சிக்காவது கைகொடுக்க முன்வருவதில் தவறில்லை இல்லையா?

இந்த நாட்டின் பெரும்பான்மையான கருமை மற்றும் மாநிறம் வாய்ந்த அழகிகளும் பெருமையுடன் நடமாடும் நாள்கள் வெகுதொலைவில் இனி இல்லை.

தொகுப்பு: ஆ.ஐஸ்வர்யா லட்சுமி

படங்கள்: கூகுள் இமேஜ்

Pandiyaraja

unread,
Dec 12, 2019, 1:19:12 AM12/12/19
to மின்தமிழ்
"பொண்ணு  மாநிறத்தில் இருப்பாள். என்றால் கருப்பான நிறம் எனப் பொருள்."
இல்லை, இல்லை,இல்லவே இல்லை. எங்கள் மதுரைப்பக்கம் கருப்பான பெண்ணைப்பார்த்து பெண் மாநிறம் என்றால் ஒன்று சிரிப்பார்கள் அல்லது அடிக்கவருவார்கள்.
ப.பாண்டியராஜா
1.
பொண்ணு நல்ல சிவப்பா?
”,இல்ல, கொஞ்சம் மாநிறம்”
2.
”பொண்ணு கருப்போ?”
“யார் சொன்னது? நல்ல மாநிறம்”

இதுதான் மதுரை வழக்கு. கோயம்புத்தூர்க்காரர்களுக்கு மட்டும் மாமரம் கருப்புநிறத்தில் தளிர் விடும் போலும்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 12, 2019, 6:07:20 AM12/12/19
to மின்தமிழ்
On Thu, Dec 12, 2019 at 12:19 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

மாநிறம் என்றால்கருப்பைச் சார்ந்த நிறம். சாக்கலேட் நிறம், ஐயா.
மா- இதில் இருந்து தோன்றும் மால், மாய்-, மாழ்- : இச் சொற்களின் வண்ணம் என்ன என்று பாருங்கள்.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 12, 2019, 6:16:43 AM12/12/19
to மின்தமிழ், vallamai

On Thu, Dec 12, 2019 at 12:19 AM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
"பொண்ணு  மாநிறத்தில் இருப்பாள். என்றால் கருப்பான நிறம் எனப் பொருள்."
இல்லை, இல்லை,இல்லவே இல்லை. எங்கள் மதுரைப்பக்கம் கருப்பான பெண்ணைப்பார்த்து பெண் மாநிறம் என்றால் ஒன்று சிரிப்பார்கள் அல்லது அடிக்கவருவார்கள்.
ப.பாண்டியராஜா
1.
பொண்ணு நல்ல சிவப்பா?
”,இல்ல, கொஞ்சம் மாநிறம்”
2.
”பொண்ணு கருப்போ?”
“யார் சொன்னது? நல்ல மாநிறம்”

இதுதான் மதுரை வழக்கு. கோயம்புத்தூர்க்காரர்களுக்கு மட்டும் மாமரம் கருப்புநிறத்தில் தளிர் விடும் போலும்.
ப.பாண்டியராஜா

மா (மாமை) கருப்பு என்பது மதுரைக்காரய்ங்களுக்கும் உகப்பே :-)
பழைய சான்று தருகிறேன். சரிதானா எனச் சொல்லுங்கள்.

மதுரைப் பாரத்துவாசி (பாரத்வாஜ) நச்சினார்க்கினியர் 700 ஆண்டு முன் எழுதியுள்ளார்:

மாமைக் களங்கனி - மலைபடுகடாம்:

5 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடைய கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தின கோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ், 

மாநிறம் என்றால் கருப்பைச் சார்ந்த நிறம். சாக்கலேட் நிறம், ஐயா.
மா- இதில் இருந்து தோன்றும் மால், மாய்-, மாழ்- : இச் சொற்களின் வண்ணம் என்ன என்று பாருங்கள்.

நா. கணேசன்
 .

N. Ganesan

unread,
Dec 12, 2019, 7:48:37 AM12/12/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Wed, Dec 11, 2019 at 11:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

சிறப்பு நேர்காணல்: மாநிறம் பெண்களுக்கென பிரத்தியேகமானதா?

..

அழகான மாமை/மா நிறங்கொண்ட பெண். மற்றவற்றில் கலப்பு உண்டு. மா/மாமை = சாக்கலேட் நிறம்.

மதுரைக்காரய்ங்க மாமை என்பதற்குப் பொருள் சொல்லியிருக்காய்ங்க. அதைக் கேட்போம்:
மதுரைப் பாரத்துவாசி (பாரத்வாஜ) நச்சினார்க்கினியர் 700 ஆண்டு முன் எழுதியுள்ளார்:

மாமைக் களங்கனி - மலைபடுகடாம்:

5 - 7. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர்மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்துஏந்து மருப்பின் வள் 4 உயிர் 5பேர்யாழ் - நுண்ணிய அரத்தாலே அராவின நுண்ணிய நீர்மையினையுடைய கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்தனவாய்க் கடுகித் தோன்றுகின்ற நிறத்தையுடைய வளைந்தேந்தின கோட்டினையுமுடைய பெரிய ஓசையினையுடைய பேரியாழ், 

ஒரிஜினல் மாமைக் கவின் அழகியைக் காட்டியமைக்கு நன்றி.

நா. கணேசன்

Pandiyaraja Paramasivam

unread,
Dec 12, 2019, 7:57:54 AM12/12/19
to mint...@googlegroups.com
நான் இத்தனை சொல்லியும்,
நீங்கள் சொல்லுவதையே சொல்லிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் எனக்குச் சொல்லுவத்தையே திரும்பத்திரும்பச் சொல்லிப் பழக்கமில்லை.
நான் விடுபடுகிறேன்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 12, 2019, 8:01:13 AM12/12/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

மாமைக் கவின் - குறுந்தொகை
உவேசா:

வலைப்பதிவுகளில் விளக்கங்கள்,

N. Ganesan

unread,
Dec 12, 2019, 8:31:57 AM12/12/19
to மின்தமிழ், vallamai
On Wed, Dec 11, 2019 at 9:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அழகியல் கொள்கை காலந்தோறும் மாறுபட்டுள்ளது.
அவரவர்க்கு மனதிற்கினிய தோல்வண்ணம் மாமை என்று பொருள்படுகிறது.
பாரதிதாசன் ' மா ' என்றால் கருமை என்பார்.
சக 

மா என்பதன் பழைய பொருள் கருமை என்பது ஐயத்துக்கிடமில்லாதது.
மால், மாய்-, மாழ்(கு) எல்லாம் மா- என்னும் தாதுவில் உதிப்பது.

நச்சர், பாரதிதாச போலவே பாவாணர் கூற்றுங் காண்க:
”   மய - மயங்கு - மசங்கு.

     மய = மயல் - மால். மயல் - மையல் = காதல் மயக்கம்.

     மால் = மயக்கம், கருமை, கரிய மேகம், கரிய விண்டு (விஷ்ணு).

     மால் - மழை. மால் - மாரி = கரியாள், காளி, மழை.

     மால் - மாலம் = மயக்கம், ஏமாற்றம்.

     மால் - மாலை = மயக்கம், பலபொருள் கலந்த வரிசை, மயங்கும்
     வேளை. மாலை-மாலா (வ.).

     மால்-மா-மை. மாமை = கருமை. மாயோன் = கரியன், விண்டு.
     ஒ.நோ: E. malbino = கரியன்.

     மை = கருப்பு, மேகம், வெள்ளாடு(காராடு), கரிய பசை அல்லது
     குழம்பு, பசைப்பொருள்.

     மை - மசி - மசகு = வண்டி மை."

தெரிவு,

நா. கணேசன்

Pandiyaraja

unread,
Dec 12, 2019, 9:10:17 AM12/12/19
to மின்தமிழ்
”மா என்பதன் பழைய பொருள் கருமை என்பது ஐயத்துக்கிடமில்லாதது.” 

மா என்றால் கருப்பு இல்லை என்று யார் சொன்னது. ஆனால் அதுவும் ஒரு பொருள். மா என்ற சொல்லுக்கு எத்தனை பொருள் உண்டு என்று பாருங்கள்.
மாமை என்ற சொல்லில் உள்ள மா என்பது மா மரத்தை, அதன் தளிரின் நிறைத்திக் குறிக்கும் என்பதே என் கட்டுரையின் நோக்கம். 
இதைப் படித்துப் பாருங்கள். 

    மா - 1. (பெ.அ) 1. பெரிய, large, extensive
                   2. கரிய, dark
                   3. அழகிய, beautiful
                   4. சிறந்த, fine, cexcellent 
        - 2. (பெ) 1. மாமரம், mango tree
                 2. நில அளவை - நூறு குழி, a land measure equal toone third of an acre
                 3. குதிரை, horse
                 4. விலங்கு, animal, beast
                 5. இலக்குமி, திருமகள், Lakshmi
                 6. அரிசி, கிழங்கு போன்றவற்றின் மாவு, பொடி, flour, powder
                 7. மாமை நிறம், மாந்தளிர் போன்ற நிறம், colour as that of a tender mango leaf
                 8. மான், deer
                 9. வண்டு, bee
1.1
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க - திரு 91
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை - திரு 232
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
1.2
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை - திரு 7
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்ட கரிய மேகங்கள்,

மா முக முசு கலை பனிப்ப - திரு 303
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க
1.3
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை - திரு 203
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையை
1.4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர் - அகம் 206/7,8
மாரிக் காலத்து ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிரினை ஒத்த
அழகிய மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணியினையும் உடைய மகளிரது
(ந.மு.வே.நாட்டார் உரை)
2.1
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து - திரு 60
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்
2.2
மா_மாவின் வயின்_வயின் நெல் - பொரு 180
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின்
2.3
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ - சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து
2.4
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் - பெரும் 497
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்
2.5
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை - முல் 2
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

மா மறுத்த மலர் மார்பின் - புறம் 7/5
திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கேதுவாகிய பரந்த மார்பினையும்
2.6
மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை - மலை 126-128
(முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
2.7
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே - நற் 244/10,11
அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
வலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு 

நறும் தண்ணியளே நன் மா மேனி - குறு 168/4
மணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி
2.8
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி - கலி 57/2
மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,
2.9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் - அகம் 21/1,2
இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்

இதற்கு மேல் விளக்க எனக்குப் பொறுமை இல்லை, நேரமும் இல்லை. இதுவே இங்கு நான் எழுதும் இறுதியும் முடிவுமான பதில்.
ப.பாண்டியராஜா

S Roy

unread,
Dec 12, 2019, 10:39:27 AM12/12/19
to மின்தமிழ்
//'ஒத-' என்பதற்குரிய செந்தமிழ்ச் சொல் எது என்று இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. 
இனி வரும் காலங்களில் தேடிப் பார்க்கிறேன். 
சக //

A simplistic view from me :)

உதைப்பழமா இருக்குமோ? மரத்தை உதைத்தால் விழும் பழம் :)  Half ripe fruit.

Best,
Sujata

On Wednesday, 11 December 2019 03:21:16 UTC-8, kanmanitamilskc wrote:
'ஒத-' என்பதற்குரிய செந்தமிழ்ச் சொல் எது என்று இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. 
இனி வரும் காலங்களில் தேடிப் பார்க்கிறேன். 
சக 

On Wed, 11 Dec 2019 4:41 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

On Wed, Dec 11, 2019 at 5:03 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இலந்தைப் பழங்களிலும் ஒதப்பழம் தான் ருசி. 
அரிசிக் குருணைக்குப் பண்டமாற்றாக ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒன்றுக்கு ஒன்றரை என்ற கணக்கில் இலந்தைப்பழம் வாங்குவோம். 
சக 

ஒதப்பழம், ஒதக்காய். ஒத- இதற்கான செந்தமிழ்ச் சொல் என்ன?
 
On Wed, 11 Dec 2019 4:08 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
> புளியம்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!

ஒதக்காய் பற்றிய நல்ல வர்ணிப்பு:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf8gEAG-RjCXSAPZ67vJiL0Ycu%2BhqAutBcX181pyfg7jQ%40mail.gmail.com.

Pandiyaraja Paramasivam

unread,
Dec 12, 2019, 10:43:22 AM12/12/19
to mint...@googlegroups.com
உதைத்தால் முதலில் கனிந்த பழங்கள்தான் உதிரும். ஓங்கி உதைத்தால் வேண்டுமானால் ஒதப்பழம் உதிரலாம். ஆனால் தாங்கள் பழம்கொடுக்கக்கூடிய புளியமரத்தைப் பார்த்ததில்லையா? அதனை உதைத்தால் முழங்கால்தான் சுளுக்கிக்கொள்ளும்.
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e50b3ff9-605c-4521-b99a-0b7dbff3ba6d%40googlegroups.com.

S Roy

unread,
Dec 12, 2019, 11:08:07 AM12/12/19
to மின்தமிழ்
//, மாமை என்பதை மாந்தளிர் நிறம் என்று உரையாசிரியர்கள்//

The tender leaves of the original (NOT hybrid) mango trees is brown.

மாந்தளிர்

Best,
Sujata

On Monday, 2 December 2019 21:26:54 UTC-8, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
சங்க இலக்கியத்தில் மாமை என்ற இக் கட்டுரை நான் உருவாக்கிவரும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற இணையதளத்தில்  மாமை என்ற சொல்லுக்கான பகுதியை, மின் தமிழுக்காகச் சற்று மாற்றி எழுதிய கட்டுரை. இக் கட்டுரையில் வரும் ஆம்பல் பற்றிய  செய்திகளுக்கு திருவாளர்கள்.கணேசன், Roy ஆகியோர் கொடுத்துதவிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா.

சங்க இலக்கியத்தில் மாமை

      இந்த மாமை என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

      காதலன் பிரிந்து வெளியூர் சென்றால், பிரிவுத்துயரால் வாடிய காதலியின் மேனியில் பசலை படரும் என்றும், இந்தப் பசலை பீர்க்கம்பூவைப்போல பொன்னிறம் உடையது என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தப் பசலை என்பது பிரிவு ஏக்கத்தால் உடல் மெலிந்து உடலின் நிறம் மாறி, வெளுத்துப் போவதைக் குறிக்கும் என்று இன்றைய உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதனை ஓர் அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.

காடு இறந்தனரே காதலர் மாமை

அரி நுண் பசலை பாஅய் பீரத்து

எழில் மலர் புரைதல் வேண்டும் - அகம் 45/6-8

இதன் பொருள்:

காதலர் வறண்ட நிலத்தைக் கடந்துதான் சென்றிருக்கிறார், எனது மாமையோ

மெல்லிய நுண்ணிய பசலை படர்ந்ததால், பீர்க்கங்கொடியின்

அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது.

எனவே, மாமை என்பது மேனியின் நிறம் என்பது தெளிவாகிறது. பொதுவாக, மாமை என்பதை மாந்தளிர் நிறம் என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் இப்போது மாநிறம் என்கிறோம். இருப்பினும் சில அகராதிகள் இதனைக் கருமை நிறம் (black) என்று குறிப்பிடுகின்றன. எனவே, இந்த மாமை என்பது என்ன நிறம் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலம் தெளிவாகக் காண்பதே இக்  கட்டுரையின் நோக்கம்.

1.

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - மலை 35-37

இதன் பொருள்:

நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்

களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,

வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பெரிய யாழை

இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம். இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி’ என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். எனவேமாமை களங்கனி’ என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.

இதன் பொருள்:

நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்

நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,

4.2.

அம்ம வாழி தோழி நம் ஊர்

பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்

நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே

இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35

இதன் பொருள்:

தோழியே கேட்பாயாக! நம் ஊரின்

பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்

நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,

இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.

      எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும் இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.

maamai-4.jpg

ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப் பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். சங்கப் புலவர்கள் மிகப்பெரும்பாலும் கற்பனையாக எதையும் சொல்வதில்லை.

maamai-4A.jpg

5.1.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்

தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன

அம் கலுழ் மாமை கிளைஇய

நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:

மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள

தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல

சிறிய பல தேமல்புள்ளிகளையுடைய நம் கிழத்தி

இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில் தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் .வே.சு

5.2.

திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1

இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் .வே.சு

6.

மணி மிடை பொன்னின் மாமை சாய என்

அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:

நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்

அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.

இங்கே, மணி - பொன், மாமை - பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக் கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது.

ஆனால் ஔவை.சு.து. அவர்களின் உரை,

மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என் அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும்

என்று விளக்கமாகக் கூறுகிறது. இதனையே,

இதனை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன.

 ஆனால், மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல், பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம்.

பதித்த மணி பொன்னின் அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.

7.

இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்

பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ - கலி 48/16,17

இதன் பொருள்

பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய

பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) - நச்சினார்க்கினியர் உரை

மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை என்று இங்குக் காண்கிறோம்.

பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும், மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.

பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மஈநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது.

ஆனால், இவ்வுரைக்கு விளக்கம் எழுதிய பெருமழைப்புலவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?

எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம் காணவேண்டும்.

முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.

பொன் உரை மணி அன்ன மாமைஎன்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்தஎன்று நச். உரை காண, புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்என்று பொருள் கொண்டிருக்கிறார்.

செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறதுஎன்று பொருள் கொண்டிருக்கிறார்.

எனவே இங்கு மணி பொன்னில் பொதிந்தது அல்லது மணி பொன்னில் பதிக்கப்பட்டது என்று கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது

அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம்.

அவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.

இப்போது,

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/8

என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள், அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள் என்று பொருள் கொள்கிறார். அத்துடன், மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.

ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே, பெருமழைப்புலவர் மணி - நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் மணி, ஈண்டுச் செம்மணி என்ற விளக்கத்தை இங்குக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

எனவே,

பொன் உரை மணி அன்ன மாமைக்கண் - கலி 48/16,17

என்ற அடிக்கு,

பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.

என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையைப் பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.

8.

எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்

நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்ற என் மாமை கவினே - ஐங் 146

இதன் பொருள்

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்

நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு

இன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.

ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது.

எத்தனையோ மலர்கள் இருக்க, இந்தப் புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.

ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.

செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1

என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.

maamai-5.jpg

சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?

இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.

அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு

ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்

இவட்கு அமைந்தனனால் தானே

தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே - ஐங் 103

இதன் பொருள்

அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு

ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்

இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே

இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.

எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்

தனி குருகு உறங்கும் துறைவற்கு

இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 144

இதன் பொருள்

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்

தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,

இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.

பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.

மாந்தளிரை நிறையப்பேர் பார்த்திருக்கமாட்டீர்கள். இதோ, இதுதான் மாமை எனப்படும் மாந்தளிர் நிறம்.

maamai-6.jpg

S Roy

unread,
Dec 12, 2019, 11:16:26 AM12/12/19
to மின்தமிழ்
ஹா ஹா நீங்கள் சொல்வது சரிதான். புளியமரத்தை உலுக்கித்தானே ஒதப்பழத்தை எடுக்கிறோம். ஓதப்பழம் என்பது புளியம்பழத்திற்கு மாத்திரம் உள்ள பெயரா அல்லது எந்த ஒரு கனியா கனிக்கும் உள்ள பெயரா ?

Best,
Sujat
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 12, 2019, 11:28:18 AM12/12/19
to mintamil, vallamai
நாங்கள் சிறுவயதில் இலந்தைப் பழத்திலும் ஒதப்பழம் பார்த்துப் பொறுக்குவோம்.
அதுவும் பிரௌன் கலரில் தான் இருக்கும்.
சக     

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3f1d4d20-c0b7-4931-ae20-c45190f4a649%40googlegroups.com.

S Roy

unread,
Dec 12, 2019, 12:15:49 PM12/12/19
to மின்தமிழ்

அகநானூறு 319, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறிக்,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங்கவரும் பாழ் படு நனந்தலை,  5
அணங்கென உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச்
சுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள், இவள் வயின்  10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழைத்
தளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
“செல்வேம்” என்னும் நும் எதிர்,  15
“ஒழிவேம்” என்னும் ஒண்மையோ இலளே.

Best,
Sujata

Pandiyaraja

unread,
Dec 12, 2019, 12:18:35 PM12/12/19
to மின்தமிழ்
சங்க இலக்கியத்தில் உது என்ற ஒரு சொல் உண்டு. ’அது’வுக்கும், ’இது’வுக்கும் இடைப்பட்டதுதான் உது. எனவே, காய்க்கும், கனிக்கும் இடைப்பட்டது உதுக்காய்/உதுப்பழம். இதுதான் ஒதக்காய்/ஒதப்பழம் ஆகிவிட்டதோ?
எனது ஆசிரிய அனுபவத்தில் brain storm session - களில் இதுபோன்ற பதில்களும் வரும். சிரித்து மழுப்பிவிடுவேன்.
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 13, 2019, 4:11:47 AM12/13/19
to மின்தமிழ்
On Mon, Dec 2, 2019 at 11:26 PM Pandiyaraja <pipi...@gmail.com> wrote:
அன்புடையீர்,
சங்க இலக்கியத்தில் மாமை என்ற இக் கட்டுரை நான் உருவாக்கிவரும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற இணையதளத்தில்  மாமை என்ற சொல்லுக்கான பகுதியை, மின் தமிழுக்காகச் சற்று மாற்றி எழுதிய கட்டுரை. இக் கட்டுரையில் வரும் ஆம்பல் பற்றிய  செய்திகளுக்கு திருவாளர்கள்.கணேசன், Roy ஆகியோர் கொடுத்துதவிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா.

maamai-6.jpg

மாமை என்பதன் அடிப்ப்டை நிறமான கருமை, அதன் அருகே வருவதான, பிங்க், சாக்கலேட், கருநீலம், கரும்பச்சை காணோம்.
இது ஒட்டு மாஞ்செடி. புதிதாக வந்தது. பொன் வண்ணமாக உள்ளது. இது மாமைக் களங்கனி நிறமான கருப்பாக இல்லை.

மா நிறம், மாந்தளிர் நிறம் என்பதன் நிறம்: dark brown like chocolate.

---------------------------

வேதத்தின் உதும்பரம் என்ற சொல் உதக்காய்/பழம் போன்றவற்றில் இருப்பதும்,
உத- > அத- (அதம், அத்தி, அதா, ..) ஆவதும் ஆராய முடிந்தது. ஒதப்பழம் என்ற
பேச்சுத்தமிழ்ச் சொல்லைக் குறிப்பிட்டமைக்கு நன்றி. ஊதா என்று கருஞ்சிவப்பு
வண்ணப்பெயரும் உத-/உதும்பர கனிகளின் பெயரால் அமைந்துள்ளது.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0bda8b76-2b25-456a-ac16-248f86a1a077%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages