தமிழார்வலர்களே, தமிழாராய்ச்சியாளரே, தமிழ்ப்புரவலரே, இன்ன பிறரே ...

90 views
Skip to first unread message

rajam

unread,
Feb 16, 2021, 1:44:39 AM2/16/21
to vallamai, mintamil, tamilmantram, 'Kandy Palanisamy' via தமிழ் இலக்கியம்
எல்லாருக்கும் வணக்கம்.

ஓர் அயலகத் தமிழாய்வாளருக்கு மடல் எழுதவேண்டிய சூழல், கட்டாயமில்லை, ஆனால் அவருக்கு விளக்கம் தர என் ஆவல். கருத்துகள் என் மனதில் கருக்கொண்டிருக்கின்றன. இடையில் நம் தமிழரைக் கேட்போமே என்று கேட்கிறேன்.

கீழ்க்காணும் தொகைச்சொற்களுக்கிடையே ஏதாவது ஒப்புமை காணுகிறீர்களா? ஆம் என்றால் … என்ன ஒப்புமை என்று துல்லியமாக, தெளிவாக, சுருக்கமாகச் சொல்லவும்.

1. வேளாப் பார்ப்பான் (அகநானூறு)
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)
3. எழாஅப் பாணன் (அகநானூறு)
4. பறாஅக் குருகு (கலித்தொகை)
5. சூடா நறவு (பரிபாடல்)
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)
8. பத்தி கோணாத கோணம் (காளமேகப் புலவர் பாடல)

நன்றி,
ராஜம்

[பின் குறிப்பு: இந்த வகைச் சொற்களின் அமைப்பைப் பற்றி ஏற்கனவே நெடுநாள் முன்பு இங்கே உள்ளூர்க்குழுவில் என் கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன். அதெல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல; புல்லுக்காவது பொசிந்திருக்குமா என்று தெரியவில்லை. தில்லைக்குமரன் மறுமொழி சொல்லலாம்!]

rajam

unread,
Feb 16, 2021, 2:06:06 AM2/16/21
to tamil...@googlegroups.com, vallamai, mintamil, 'Kandy Palanisamy' via தமிழ் இலக்கியம்
ஓ, இன்னுமொரு நல்ல எடுத்துக்காட்டைச் சொல்ல மறந்துவிட்டேன். 

அது: நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)

தேடுக, தேடிச் சொற்கட்டமைப்பை ஆராய்ந்து சொல்லுக!

வாழ்த்துடன்,
(மூத்த தமிழாசிரியை) ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/C99B8144-DDF6-48D1-925F-145D7AD96539%40earthlink.net.

kanmani tamil

unread,
Feb 16, 2021, 4:20:25 AM2/16/21
to vallamai
1.வேளாப் பார்ப்பான் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
3. எழாஅப் பாணன் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
4. பறாஅக் குருகு (கலித்தொகை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
5. சூடா நறவு (பரிபாடல்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)= இதில்் தொகையே இல்லையே. 
8. பத்தி கோணாத கோணம் = இதில் தொகை எங்கே இருக்கிறது?.
நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது அம்மா. 
சக 

On Tue, 16 Feb 2021, 12:44 pm தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
Similar to saying she is Doctor Rajam but but she is not a medical practitioner. 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0e2f5fb1-7eba-4019-9dd3-5fe18062dc75n%40googlegroups.com.

kanmani tamil

unread,
Feb 16, 2021, 4:26:25 AM2/16/21
to vallamai
நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
Sorry.இது இடப்பெயர் இல்லை. 
சக 

N. Ganesan

unread,
Feb 16, 2021, 8:05:49 PM2/16/21
to வல்லமை
On Tuesday, February 16, 2021 at 3:20:25 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
1.வேளாப் பார்ப்பான் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
3. எழாஅப் பாணன் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
4. பறாஅக் குருகு (கலித்தொகை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
5. சூடா நறவு (பரிபாடல்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)= இதில்் தொகையே இல்லையே. 
8. பத்தி கோணாத கோணம் = இதில் தொகை எங்கே இருக்கிறது?.
நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது அம்மா. 
சக 

செய்யாப் பாவை

பாடாத கந்தருவம், பத்தி கோணாத கோணம் - அந்தகக்கவி சேலத்தின் தாகந்தீர்த்த செழியனுக்கு அனுப்பின பாடல்.

நா. கணேசன்

rajam

unread,
Feb 18, 2021, 12:34:56 AM2/18/21
to tamil_i...@googlegroups.com, tamil...@googlegroups.com, vallamai, mintamil
அன்புள்ள விஜயா, வணக்கம். நெடுநாட்களுக்குப் பிறகு மடல் கண்டு மகிழ்ச்சி.

இல்லை, இவை போன்ற தொகைச் சொற்களை (compounds) ஆகுபெயர் எனக் கொள்ள முடியாது. அன்மொழித்தொகை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம் 

On Feb 17, 2021, at 1:23 PM, 'vijayalakshmy rangarajan' via தமிழ் இலக்கியம் <tamil_i...@googlegroups.com> wrote:

அன்பான திருமதி ராஜம் அவர்களுக்கு,
ஆம். ஒப்புமை உண்டு. சொற்றொடர்கள் அனைத்திலும் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத்தொடர்ந்து  பெயர்ச்சொல் ஒன்று வருகின்றது. 'ஓடாக்குதிரை 'என்ற தொடரில் குதிரை என்ற பெயர்ச்சொல் குதிரையினைக் குறிக்காது குதிரைமலையினைக்குறிப்பதனால் இத்தகைய எதிர்மறைப்பெயரெச்சம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வழக்கினை ஆகுபெயராகவும் கொள்ளலாம்.
தாங்கள் விழலுக்கு நீர் இறைத்தபோது நான் இங்கில்லாதபடியினால் அப்பொழுது தாங்கள் எடுத்துரைத்த இலக்கணக்குறிப்பினை யான் அறியேன். மேலே நான் எழுதிய விடை சரியா என அறிய விழைகிறேன்.
அன்புடன்
அரங்கராசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் இலக்கியம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ilakkiy...@googlegroups.com.

To view this discussion on the web visit

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் இலக்கியம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ilakkiy...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamil_ilakkiyam/13188300.2213792.1613597017120%40mail.yahoo.com.

N. Ganesan

unread,
Feb 18, 2021, 9:00:08 AM2/18/21
to vallamai
On Tuesday, February 16, 2021 at 3:20:25 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
1.வேளாப் பார்ப்பான் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
3. எழாஅப் பாணன் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
4. பறாஅக் குருகு (கலித்தொகை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
5. சூடா நறவு (பரிபாடல்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)= இதில்் தொகையே இல்லையே. 
8. பத்தி கோணாத கோணம் = இதில் தொகை எங்கே இருக்கிறது?.
நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது அம்மா. 
சக 

செய்யாப் பாவை

பாடாத கந்தருவம், பத்தி கோணாத கோணம் - அந்தகக்கவி சேலத்தின் தாகந்தீர்த்த செழியனுக்கு அனுப்பின பாடல்.

"ஊராக் குதிரை” என்று சங்க இலக்கியத்தில் உண்டு (புறம், ...) https://en.wikipedia.org/wiki/Kudremukh . ர. விஜயலட்சுமி (IITS) ஓடாக் குதிரை என்பது இதுவாக இருக்கலாம். இது சங்க காலத்தில் கொங்குநாட்டின் வடபுலம். அதியமான் மன்னர்கள். இங்கே, ஒரு கொல்லிமலையில் கொற்றி/கொல்லி தெய்வத்தை வணங்கினர். இன்னமும் உண்டு. அதியர்கள் சேரர் குடியினர். அவர்களின் குலபர்வதம் கொல்லிமலை. சேரர் தலைநகர் வஞ்சி, கொல்லி அருகே (தொல்லியல், சங்க நூல்கள்). வஞ்சி (கரூரை) வாடா வஞ்சி என்பது மரபு. வள்ளுவன் என்னும் தமிழ் மன்னர்கள் பாலைக்காட்டுக் கணவாய், நாஞ்சிநாடு இரண்டிலும் ஆண்டதுபோல, சேரர் குடியினர் ஊராக்குதிரை, கொல்லிமலை இரண்டு இடங்களிலும் ஆண்டுள்ளனர். இதுபோல் இன்னொன்று: திருவள்ளுவர் கூறும் ‘படாஅப் பறை’. படாஅப் பறை என்பது நெய்தற் பறை. நெய்தல் தெய்வம் வருணனுக்கு அடிப்பது. மிகப் பழைய இத்தெய்வத்தின் வரலாறு, இந்தியாவின் வானியல் சாஸ்திரம், அவ் வானியல் வரலாறு பற்றி எழுதியுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

புனைவிலக்கியம் =Fiction, செய்யாப்பாவை, ஊராக்குதிரை, வாடாவஞ்சி, .... போல Non-fiction என்பதை புனையாப் புனைவு/எழுத்து/இலக்கியம் என மொழிபெயர்க்கலாம்.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/QBs8Z5kKWq8/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/d25066a0-766b-40cc-a7e4-6f0b8d1dbbd9n%40googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2021, 8:50:22 PM2/18/21
to vallamai
கேளா ஒலி. (அல்ற்றா சோனிக் சவுண்ட்)

வியா., 18 பிப்., 2021, பிற்பகல் 7:30 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUetrMFqfB9zu-9hiXCGv%2Bm2jhC1YiuG%3D2oq5T3dzvBaPQ%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Feb 18, 2021, 9:16:43 PM2/18/21
to வல்லமை
On Thursday, February 18, 2021 at 7:50:22 PM UTC-6 வேந்தன் அரசு wrote:
கேளா ஒலி. (அல்ற்றா சோனிக் சவுண்ட்)

nice

rajam

unread,
Feb 19, 2021, 1:30:11 AM2/19/21
to tamil...@googlegroups.com, tamil_i...@googlegroups.com, vallamai, mintamil
அன்புள்ள வேல்முருகன், வணக்கம்.

/// இவையெல்லாம் இயல்பிலிருந்து திரிந்த/விலகிய பொருட்களைக்குறித்த   தொடர்கள்/தொகைகளாக எனக்குப்படுகின்றன. ///

சிறப்பான பார்வை! மிக்க நன்றி.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம் 

On Feb 17, 2021, at 11:08 PM, Velmurugan Subramanian <hen...@gmail.com> wrote:

அன்புள்ள அம்மா,

என் முயற்சி!
இவையெல்லாம் இயல்பிலிருந்து திரிந்த/விலகிய பொருட்களைக்குறித்த   தொடர்கள்/தொகைகளாக எனக்குப்படுகின்றன.  (தொகை, தொடர் என இரண்டிலும் காட்டுகள் உள்ளன என்று நம்புகிறேன்]      

மேலும்,
இணையத்தில் தேடிப்பார்த்தேன்!   கவிஞர்கள் இதுபோன்ற பொருட்களை வேண்டுவதாகப்பாடி   தாம் மெய்யாக விரும்பும் பொருளை  நேரடியாகச்சொல்லாமலேபெறுவார்களாம்.  
நன்றி

புத., 17 பிப்., 2021, பிற்பகல் 9:34 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Feb 21, 2021, 1:53:18 AM2/21/21
to tamilmantram, velmurugan Subramanian, 'Kandy Palanisamy' via தமிழ் இலக்கியம், vallamai, mintamil
அன்பு நண்பர்களுக்கு,  வணக்கம். 

நான் கேட்டது:

/// ஓர் அயலகத் தமிழாய்வாளருக்கு மடல் எழுதவேண்டிய சூழல், கட்டாயமில்லை, ஆனால் அவருக்கு விளக்கம் தர என் ஆவல். கருத்துகள் என் மனதில் கருக்கொண்டிருக்கின்றன. இடையில் நம் தமிழரைக் கேட்போமே என்று கேட்கிறேன்

கீழ்க்காணும் தொகைச்சொற்களுக்கிடையே ஏதாவது ஒப்புமை காணுகிறீர்களா? ஆம் என்றால்என்ன ஒப்புமை என்று துல்லியமாக, தெளிவாக, சுருக்கமாகச் சொல்லவும்

1. வேளாப் பார்ப்பான் (அகநானூறு
2. பொராஅப் பொருநன் (புறநானூறு
3. எழாஅப் பாணன் (அகநானூறு
4. பறாஅக் குருகு (கலித்தொகை
5. சூடா நறவு (பரிபாடல்
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்
8. பத்தி கோணாத கோணம் (காளமேகப் புலவர் பாடல

நன்றி
ராஜம் 

[பின் குறிப்பு: இந்த வகைச் சொற்களின் அமைப்பைப் பற்றி ஏற்கனவே நெடுநாள் முன்பு இங்கே உள்ளூர்க்குழுவில் என் கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன். ]  /// 

++++++++++ 

அண்மையில் இணையத்தில் … 

1. தேமொழி சொன்னது:

/// Similar to saying she is Doctor Rajam but but she is not a medical practitioner. ///

2. வேல் முருகன் சொன்னது:

/// இவையெல்லாம் இயல்பிலிருந்து திரிந்த/விலகிய பொருட்களைக்குறித்த   தொடர்கள்/தொகைகளாக எனக்குப்படுகின்றன.  (தொகை, தொடர் என இரண்டிலும் காட்டுகள் உள்ளன என்று நம்புகிறேன்]  /// 

3. முனைவர் பாண்டியராஜா சொன்னது:

/// இக் கூற்றுகளின் கட்டமைப்பு பற்றி சொல்லத் தெரியவில்லை. ஆனால் தாங்கள் கொடுத்த்து போலவே இன்னும் சில தொடர்களைச் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79

பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் - கலி 147/37

பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ - புறம் 32/2

ஊரா குதிரை கிழவ - புறம் 168/14

வாடா தாமரை சூட்டுவன் நினக்கே - புறம் 319/15  ///

4. முனைவர் கண்மணி சொன்னது:

///
1.வேளாப் பார்ப்பான் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
2. பொராஅப் பொருநன் (புறநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
3. எழாஅப் பாணன் (அகநானூறு)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
4. பறாஅக் குருகு (கலித்தொகை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
5. சூடா நறவு (பரிபாடல்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
6. நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
7. பாடாத கந்தருவம் (காளமேகப் புலவர் பாடல்)= இதில்் தொகையே இல்லையே
8. பத்தி கோணாத கோணம் = இதில் தொகை எங்கே இருக்கிறது?.

நீரல் ஈரம் / நீரல் ஈரத்து (நற்றிணை)= ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

நோக்கல் நோக்கம் (தொல்காப்பியம்)= பெயரடையால் விளக்கம் பெறும் இடப்பெயர் 
Sorry.இது இடப்பெயர் இல்லை.  
/// 

5. முனைவர் கணேசன் சொன்னது: 

/// செய்யாப் பாவை

பாடாத கந்தருவம், பத்தி கோணாத கோணம் - அந்தகக்கவி சேலத்தின் தாகந்தீர்த்த செழியனுக்கு அனுப்பின பாடல் 

"ஊராக் குதிரைஎன்று சங்க இலக்கியத்தில் உண்டு (புறம், ...) https://en.wikipedia.org/wiki/Kudremukh . . விஜயலட்சுமி (IITS) ஓடாக் குதிரை என்பது இதுவாக இருக்கலாம் 

புனைவிலக்கியம் =Fiction, செய்யாப்பாவை, ஊராக்குதிரை, வாடாவஞ்சி, .... போல Non-fiction என்பதை புனையாப் புனைவு/எழுத்து/இலக்கியம் என மொழிபெயர்க்கலாம்  /// 

6. வேந்தன் அரசு சொன்னது:

/// கேளா ஒலி. (அல்ற்றா சோனிக் சவுண்ட்)  /// 

நான் சொல்வது: மேற்காணும் எல்லாமே மிக அருமையான தரவுகள் / எடுத்துக்காட்டுகள். எல்லாருக்கும் மிக்க நன்றி. 

++++++++++ 

/[இடைப்பிறவரல்}

இங்கே உள்ளூர்க்குழுமத்தில் ஒருவர் இவ்வகைச் சொற்களின் கட்டமைப்புப் பற்றி என்னைச் சாடியிருக்கிறார். அவர் ஆகுபெயர் என்றார், நான் இல்லை என்றேன். மேலும் சொல்லி தன் பகுப்பு முறையின் வழியே தான் நிற்பதாகவும் நான் என் பகுப்புமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும்நான் தமிழிலக்கணத்தைத் தவறாகக் கற்பிக்கக்கூடாது என்றும் கண்டித்துவிட்டார்!!!  ;-) ;-) ;-)

ஒரு தொகையையோ தொடரையோ பிரித்து அங்கே உள்ள ஒரு சொல்லைப் பிரித்தெடுத்து ... அவர் செய்த இலக்கண ஆய்வு என்னை மிரட்டுகிறது!!! :-) 

அய்யோ! அய்யோ! பள்ளிப்பருவத்திலிருந்து எனக்கு இலக்கணம் கற்பித்த தமிழாசிரியர்களே, எல்லாரும் எங்கே போனீர்கள்?

[இடைப்பிறவரல்] /

++++++++++ 

இந்த வகைத் தொகைச்சொற்களைப் (compound words) பற்றிக் கேட்ட அயலவருக்கு மறுமொழி எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அதை முடித்து அவருக்கு அனுப்பியபின் இங்கே தமிழ்க்குழுமங்களில் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி,
ராஜம்
On Feb 17, 2021, at 11:08 PM, Velmurugan Subramanian <hen...@gmail.com> wrote:

அன்புள்ள அம்மா,

என் முயற்சி!
இவையெல்லாம் இயல்பிலிருந்து திரிந்த/விலகிய பொருட்களைக்குறித்த   தொடர்கள்/தொகைகளாக எனக்குப்படுகின்றன.  (தொகை, தொடர் என இரண்டிலும் காட்டுகள் உள்ளன என்று நம்புகிறேன்]      

மேலும்,
இணையத்தில் தேடிப்பார்த்தேன்!   கவிஞர்கள் இதுபோன்ற பொருட்களை வேண்டுவதாகப்பாடி   தாம் மெய்யாக விரும்பும் பொருளை  நேரடியாகச்சொல்லாமலேபெறுவார்களாம்.  
நன்றி

புத., 17 பிப்., 2021, பிற்பகல் 9:34 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
அன்புள்ள விஜயா, வணக்கம். நெடுநாட்களுக்குப் பிறகு மடல் கண்டு மகிழ்ச்சி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Dev Raj

unread,
Feb 27, 2021, 2:27:34 PM2/27/21
to வல்லமை
பூவா வேங்கை, பாயா வேங்கை

தேவ்

N. Ganesan

unread,
Mar 2, 2021, 1:21:08 PM3/2/21
to vallamai
On Sat, Feb 27, 2021 at 1:27 PM Dev Raj <karthav...@gmail.com> wrote:
பூவா வேங்கை, பாயா வேங்கை

தேவ்

நீண்ட வருஷங்களுக்குப் பின், தேவ் வருகை.

மதறாஸ் லெக்ஸிகானில் இந்த உதாரணம் அலங்கார ஶாஸ்த்திரத்தில் உள்ளது என ஆளப்பெற்றுள்ளது.
வெளிப்படை veḷippaṭai , n. < வெளிப்படு¹-. (Rhet.) A figure of speech in which the
meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word,
as pāyā- vēṅkai; பல்பொருள் குறிக்குஞ் சொல்லை ஒரு பொருட்கு நியமிக்கும்பொருட்டு
ஏற்றதோர் அடை கொடுத்துக் கூறும் அணிவகை. (புறநா. 17, உரை.)

நா. கணேசன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages