அன்புள்ள காளைராசன் அவர்களுக்கு
முன்பு ஓர்முறை எழுதிய
நினைவு இருந்தாலும் காண்க
தமிழின் சிறப்பு பற்றி பேசுவது மகிழ்சியே
அ இ உ என்பன சுட்டெ ழுத்து எனபது இயல் நூ ற் பாக்கள் காட்டுவது
அது போல் ஏ எனும் எழுத்துடன் வரும் சொற்கள் உயர்வுப்பொ ருளில் வரும்
ஏணி >>>>>மேலேற
ஏற்றம் >>> தண் ணீ ர் மேலேற
ஏப்பம் >>> வாயுமேலேற
ஏனாதி >>> மே ன்மையான பதவி
ஏமாப்பு >>> உயர்ந்த்தாக நினைத்தல்
ஏமாற்று >>> மிக அதிக மாக
ஏர் >>> (மண்ணினை மே லே கொணரப் பயன்கொள்வது
ஏனம் >>> (மேல்நோக்கிய மருப்பு உடைய காட்டுப்பன்றி )
எ (ஏ)க்காளம் >>>>( தூக்கி ஊதுகொம்பு -இசைக்கருவி)
இன்னும் பல
ஏந்தல் என்பதும் அதே பொருளில்தான் நாகரீகம் மிக்க தமிழ் மக்கள் தமிழை போற்றினர்
விளக் கம்
பள்ளமான பகுதிநோக்கி மழைநீர் வழிந்தோடுவதை தடு க்க பொருந்தும் இடத்தில் தேக்கம்
அமைத்து மேலும் கீழே செல்லும் நிலப்பகுதிக்கு = விளைச்சல் நிலங்களுக்குப பாய நீரினை
ஏந்தி வைத்துக்கொண்டு தன் தாளால் வழங்குவது
இது பெரும்பாலும் இவ்வகை அணைக்கரை நகக்கிள்ளு வடிவத்தில் இருக்கும்
கூகள் வரபடைத்தைப்பருங்கள் உங்கள் நாட்டில் எத்தனை நூறு கண்மாய்கள்
அதுபோல் எங்கள் அருகு செங்கல்பட்டு மாவட்டமும் (காஞ்சி) நூற்று க்கான ஏரிகளுக்கு பேர் போனது
திவாகர நிகண்டு ஏல்வை எனும் ஓர்நீர்நிலை சொல்லையும் காட்டுகின்றது
கழுத்தில் ஒட்டினாற்போல் அணியும் நகை க்கு கண்டிகை (அட்டிகை)எனப்பெயர் அதனையே
அதே நகக் கிள்ளு வடிவ நீர்த் தேக்கமாகும் ஏரிகளுக்கும் கண்டிகை எனவே பெயரிட்டனர்
மிக அதிக பரப்பாக காணும் நீர் நிலை ஒன்றினுக்கு சமுந்தரம் எனவும் பெயர் காணலாம்
வல் என்றால் மேடு மாதர் மார்பினுக்கும் வரும் "வல்லொ த்த கொங்கையாள் "
= பிடிகாம்பும் உடைய சொக்கட்டான் காய்.= அதனின் எதிர்மறையாக அகர முன்ஒட்டுக்
கொடுத்து அவல் = பள்ளம் எனவும் பொருளில் ஏ ரியைக்குறி த்தனர் எனினும் எதிர்மறைக்கு
அகர முன்னொட்டுக் கொடுப்பது வடமொழி வழக்குதான் மேடான அரிசியினை இடித்து
தட்டை ஆக்கினதால் அவலானது
கூ என்றால் கோள வடிவம் கூவிளங்காய் (கூ வடிவ விளா ங்காய்) இதனை வட்டவடி வின
தற்கும் கொண்டு பயன்கொண்ட சொல் கூவல் = 'கூ' வடிவ அவல் = கேணி=கிணறு/
கட்டுமானம் இருந்தால் கிணற்றுக்கடவு தடவு விற்கு போலியானது
தடாகம் என்பது ஓர் நீர் நிலை இ து வே தடம்(தடவு) என்ப தன் திரிபு அல்லது வேறுபாடு
மேலும் தடா என கடைக்குறையாகவும் வ ந்துள்ளது
நீர் தாங் குவது தாங்கல் குளம் குடம் குடா ( வளைகுடா )