வணக்கம்,
சமீபத்தில் "Shuttleworth Flash Grant" என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.
Shuttleworth Foundation ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர் 'மார்க் ஷட்டில்வொர்த்' என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் 'கெனானிகல்' நிறுவனம் இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.
சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும் விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. https://shuttleworthfoundation.org
"Shuttleworth Flash Grant" என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம் 5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே - https://shuttleworthfoundation.org/fellows/flash-grants/
Coko Foundation - கோகோ அறக்கட்டளையின் நிறுவனர் ஆதம் ஹைட் (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.
நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின் கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம் ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம். இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.
ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள், ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள் பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை உருவாக்குவோம்.
த. சீனிவாசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAND2796H1ucpf%3DpJ72VENj2KN-8r46aD2O9kJt_biSkS0QphJw%40mail.gmail.com.
மகிழினிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
மென்மேலும் சிறக்கவும், சீர் பெருக்கவும் வேண்டுகின்றேன்
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAND2796H1ucpf%3DpJ72VENj2KN-8r46aD2O9kJt_biSkS0QphJw%40mail.gmail.com.
பல காலமாக நான் இதனைச் சொல்லி வந்திருக்கின்றேன்.
தமிழர்கள் 100 மில்லியன் அமெரிக்க வெள்ளியோ ஒரு பில்லியன்
வெள்ளியோ கொண்ட நிதியம் ஒன்றை நிறுவ வேண்டும். கட்டாயம் இயலும்.
எல்லா வளங்களும் உள்ளன. ஆனால் அறத்துடனும் நல்லொழுக்கத்துடன்
உயர் நோக்குடனும், இயங்கும் மக்கள் மிக மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.
களவாடவும், தில்லுமுல்லு செய்யவுமே பலரும் துடிக்கின்றார்கள்.
அல்லது பழிதூற்றுதல், இடக்குகள் செய்தல் இப்படியான மக்களே
பெருகிய நிலையில் உள்ளனர். கற்றவர்களும் கூட்டுநலன், உயர்நலன்
பேணுவதில்லை. சாதி, மத உணர்வுகளாலும் பேராசை முதலியவற்றாலும்
இழுபடுகின்றனர். பெரிய தொகையான நிதி நிறுவலில் இதுவொரு சிக்கல்.
எனினும் முயலவேண்டுமென்பதே என் எண்ணம். தமிழர்கள் தங்களின்
கூட்டுவலுவை உணரவில்லை, உயர்வாய்ப்புகளை உணரவில்லை.
இவை என் தனிப்பட்ட கருத்துகள்தாம்.
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAG2t_CaZVp641trhnbBXOf1OvGOx%2BvOJA%2Bbs5UxT%3D%3DqknROP0w%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAEBez7cp1Znq1GjNU9OLJ7%2B18Zx83e1fqbKGYvx4cAzFQRS%2B9g%40mail.gmail.com.
மிக்க நன்றி அண்ணா கண்ணன். சிலரிடம் இது பற்றி முன்னர் பேசியிருக்கின்றேன்.
தொடர்ந்து இது பற்றிக் கருதுவோம். கொடையளிக்க முன் வருவதற்கும் மிக்க நன்றி.
அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAG2t_CaDgZt6g8RRfAUkceyi0Q7nTqQ%3D1tja1swNgUShjSTLRw%40mail.gmail.com.
இன்று சான்றோ போட்டிசெல்லி (Sandro Botticelli)
என்பாரின் ஓவியம் 92 மில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு
விற்கப்பட்டுள்ளது. ஓர் ஓவியத்தைக் காக்கவும் கண்டு கணிக்கவும்
82 மில்லியன் வெள்ளி தருவோர் இருக்கின்றார்கள். ஒப்பரிய தமிழ்மொழியைக்
காக்கவும், தமிழ்மக்களின் பண்பாட்டைக் காக்கவும், போற்றி
வளர்க்கவும் ஒரு நூறு மில்லியன் வெள்ளி திரட்டுவார்களா தமிழர்கள்?
பெரும்பணக்காரர்கள் இருக்கின்றார்கள் ஒரு பில்லியன் வெள்ளி தரவல்ல
தமிழர்கள் இருக்கின்றார்கள் (அப்படி கொடுத்தாலும் அவர்களிடம்
30முதல் 50 பில்லியன் வெள்ளி இருக்கும்).
[2017 இல் இலியனாடோ தாவின்சி (Leonardo da Vinci) அவர்களின்
ஓவியம் ஒன்று 450 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது!]
அன்புடன்
செல்வா
நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின் கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம் ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம். இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.
ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள், ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள் பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை உருவாக்குவோம்.
த. சீனிவாசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAND2796H1ucpf%3DpJ72VENj2KN-8r46aD2O9kJt_biSkS0QphJw%40mail.gmail.com.
//தமிழர்களும் இப்படி ஒரு நிதியத்தை நிறுவிப் பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.//
பல காலமாக நான் இதனைச் சொல்லி வந்திருக்கின்றேன்.
தமிழர்கள் 100 மில்லியன் அமெரிக்க வெள்ளியோ ஒரு பில்லியன்
வெள்ளியோ கொண்ட நிதியம் ஒன்றை நிறுவ வேண்டும். கட்டாயம் இயலும்.
எல்லா வளங்களும் உள்ளன. ஆனால் அறத்துடனும் நல்லொழுக்கத்துடன்
உயர் நோக்குடனும், இயங்கும் மக்கள் மிக மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.
களவாடவும், தில்லுமுல்லு செய்யவுமே பலரும் துடிக்கின்றார்கள்.
அல்லது பழிதூற்றுதல், இடக்குகள் செய்தல் இப்படியான மக்களே
பெருகிய நிலையில் உள்ளனர். கற்றவர்களும் கூட்டுநலன், உயர்நலன்
பேணுவதில்லை. சாதி, மத உணர்வுகளாலும் பேராசை முதலியவற்றாலும்
இழுபடுகின்றனர். பெரிய தொகையான நிதி நிறுவலில் இதுவொரு சிக்கல்.
சீனிவாசன் என்றால் சீனிச்சர்க்கரையில் வாசம் செய்யும் எறும்பு.
உழைப்பில் விஞ்சும் எறும்பு போல, தமிழ்ச் சர்க்கரை மலைக்கு உதவும்
நண்பர் த. சீனிவாசன் வாழ்க!
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe0wYPQJF-hQ79v173g7FtPWhf6-bBzobk3MdiSMqSu1g%40mail.gmail.com.
பில், மெலிண்டா கேட்டு அவர்களின் கொடை நிறுவனத்தைப் பற்றிக்
கேள்விப்பட்டிருப்போம். அது இரண்டாவது பெரிய நிறுவனம்
மொத்த வைப்புத்தொகை46.8 பில்லியன் அமெரிக்க வெள்ளி.
ஆனால் வெறும. 5.8 மில்லியன்
மக்களே வாழும் தென்மார்க்கு உலகிலேயே ஆகப்பெரிய
கொடை நிறுவனம் ஒன்றை நிறுவியிருக்கின்றார்கள்.
அதன் மொத்த வைப்புத் தொகை 49.1 பில்லியன் அமெரிக்க வெள்ளி.
மூன்றாவதாக, 17.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள்
மூன்றாவது பெரிய கொடை நிறுவனத்தை நிறுவி
இயக்கி வருகின்றார்கள். இந்தியாவைச் சேர்ந்த அசீம் பிரேமஞ்சி
21 பில்லியன் அமெரிக்க வெள்ளி வைப்புத்தொகை கொண்ட
நிறுவனத்தை நிறுவி இயக்கி வருகின்றார்!
தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடார் என்பவரும் பெரும்
செல்வந்தரே. அவர் பல கல்விநிறுவனங்களைத்
திறம்பட நடத்தி வருகின்றார்.
தமிழர்கள் தமிழ்மொழி நலனுக்காகவும் தமிழர் பண்பாட்டுக்காகவும்
ஒரு பில்லியன் அல்லது 100 மில்லியன் அமெரிக்க வெள்ளியை
வைப்புத்தொகையாகக் கொண்ட ஒரு நிறுவனத்தை நிறுவ
முடியும்.
கீழே உள்ள பெருங்கொடை நிறுவனங்களின் பட்டியலைப்
பாருங்கள்:
https://en.wikipedia.org/wiki/List_of_wealthiest_charitable_foundations
அன்புடன்
செல்வா