பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள்

1,173 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 16, 2023, 1:14:58 AM10/16/23
to வல்லமை, hiru thoazhamai
பெண்ணின் ஏழு பருவப் பெயர்கள் 

முதலில் அரிவை, தெரிவை
  ஆகிய பெண் பருவ சொற்கள் பெண்ணின் உடல் அமைப்பை குறிக்க உருவானவை என்பதை உணர்ந்தேன். அதே அடிப்படையில் தான் ஏனைய பருவ சொற்களும் உருவாகியுள்ளன என்பதை ஆய்வு தெரிவிக்கிறது.

பேதை > 5 - 8 அகவை பெண். பே என்ற வேர் சிறுமை, குறுமை கருத்து வேர் ஒலி. எனவே பேதை என்றால் பெண்ணின் சிறு உடல் அமைப்பை குறிக்கும்.
   
பெதும்பை > 8 - 11 அகவைப் பெண். பெ > பொ என திரியும். பெது > பொது > பொத்து என்றால் வீக்கம், பெருமை என பொருள். இதாவது, ஒல்லியான உடல் நிலையில் இருந்து சற்றே சதை பிடிப்பு கொண்ட உடலாக வளர்ந்த நிலை.  

மங்கை > 12 - 13 அகவைப் பெண். முக்கு என்றால் இணையும்மூலை (corner) எனப்பொருள். முக்கு   > மொக்கு > மக்கு > மங்கு > மங்கை - பெதும்பை பருவமும் மடந்தை பருவமும் கூடிஇணைகின்ற  உடல். 

மடந்தை > 14 - 19 அகவை பெண்.  மட்டம் > மடம் > மடந்தை. மட்டம்வெடி என்றால் கிளை கப்பு உண்டாதல் என்கிறது அகராதி. பெண் உடலில் அப்படி ஒரு கிளைப்பு என்பது முலை கூர்ந்து எழும் உடல் அமைப்பே ஆகும். இது 13 அகவையில்  தொடங்கி 18 அகவை வரை நிகழும்.  
  
அரிவை > 20 - 25 அகவைப் பெண்.  அர் என்பது உயர்வு, நெடுமை கருத்து வேர். இந்த நிலையில் ஒரு பெண் தன் அதிக உயரத்தை எய்தி நிற்கிறாள். அந்த வேரைக் கொண்டு அரிவை என்ற சொல் உருவானது. 
 
தெரிவை > 25 - 31 அகவைப் பெண்.  தெருள் என்றால் திரளல். மணமாகி 5 - 6 பிள்ளைகளை பெற்ற பெண்ணின் உடல் ஊதி பருமனாக இருக்கும். எனவே தெரிவை என்பது திரண்ட உடல். 

பேரிளம்பெண் > 32 - 40 அகவைப் பெண்.  இளமை முதிர்ந்த பருவம். பிள்ளைப் பேறும் மாதவிடாயும் தொடரும் பருவம். அதனால் இளமை சேர்க்கப்பட்டது.  

இதில் அரிவை முதல் பேரிளம்பெண் வரை வயதைக்  குறிப்பதில் தடுமாற்றம் உள்ளதாகத் தெரிகிறது.

image.png

seshadri sridharan

unread,
Oct 16, 2023, 10:58:23 AM10/16/23
to வல்லமை
உரையாசிரியர்கள் தவறான வயதை குறித்துள்ளனர். மடந்தை என்பது 17 அகவையில் முடிந்து 18 அகவையில் அரிவை நிலை தொடங்க வேண்டும். ஏனெனில் அதன் பின் வளர்ச்சி இல்லை. தெரிவை நிலை 27 - 28 வயதில் உண்டாகலாம். பேரிளம்பெண் 36 - 44 வரை இருக்கலாம். வேர் ஆய்வின்படி இதுவே பொருந்தும். 

seshadri sridharan

unread,
Oct 17, 2023, 2:16:37 AM10/17/23
to வல்லமை

//மடந்தை > 14 - 19 அகவை பெண்.  மட்டம் > மடம் > மடந்தை. மட்டம்வெடி என்றால் கிளை, கப்பு உண்டாதல் என்கிறது அகராதி. பெண் உடலில் அப்படி ஒரு கிளைப்பு என்பது முலை கூர்ந்து எழும் உடல் அமைப்பே ஆகும். இது 13 அகவையில்  தொடங்கி 18 அகவை வரை நிகழும்.//  

மட்டம் என்றால் சமம். அன்மை என்றால் அல்லாமை. இதாவது, பிள்ளை பருவத்தில் சமமாக இருந்த மார்க்கூடு இனி சமன் இல்லாமல் முலை கூர்ந்து எழும் உடலமைப்பு என்பதுடன் பெண் பாலை குறிக்க ஈற்றில் தை சேர்க்கப்பட்டது என்றும் கொள்ளலாம். மட்ட + அன் + தை = மடந்தை.

பொதுவாக பேதை, மடந்தை, அரிவை, தெரிவை ஆகிய சொற்கள் இதுவரை அறிவோடு ஒட்டி விளக்கப்பட்டு வந்தது இப்போது உடைக்கப்பட்டு விட்டது.  

வேந்தன் அரசு

unread,
Oct 17, 2023, 9:17:35 AM10/17/23
to vall...@googlegroups.com
வள்ளுவர் மங்கை எனும் சொல்லை பயன்படுத்தவில்லை. அகப்பாடல்களிலும் அதுஇல்லை. 

செவ்., 17 அக்., 2023, முற்பகல் 11:46 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

//மடந்தை > 14 - 19 அகவை பெண்.  மட்டம் > மடம் > மடந்தை. மட்டம்வெடி என்றால் கிளை, கப்பு உண்டாதல் என்கிறது அகராதி. பெண் உடலில் அப்படி ஒரு கிளைப்பு என்பது முலை கூர்ந்து எழும் உடல் அமைப்பே ஆகும். இது 13 அகவையில்  தொடங்கி 18 அகவை வரை நிகழும்.//  

மட்டம் என்றால் சமம். அன்மை என்றால் அல்லாமை. இதாவது, பிள்ளை பருவத்தில் சமமாக இருந்த மார்க்கூடு இனி சமன் இல்லாமல் முலை கூர்ந்து எழும் உடலமைப்பு என்பதுடன் பெண் பாலை குறிக்க ஈற்றில் தை சேர்க்கப்பட்டது என்றும் கொள்ளலாம். மட்ட + அன் + தை = மடந்தை.

பொதுவாக பேதை, மடந்தை, அரிவை, தெரிவை ஆகிய சொற்கள் இதுவரை அறிவோடு ஒட்டி விளக்கப்பட்டு வந்தது இப்போது உடைக்கப்பட்டு விட்டது.  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRn%3DQGj81UpeXz6ZJdpCLbYASTgA4umBcuKte1zQG3bLA%40mail.gmail.com.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

seshadri sridharan

unread,
Oct 17, 2023, 10:23:23 AM10/17/23
to வல்லமை
On Tue, 17 Oct 2023, 6:47 p.m. வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:
வள்ளுவர் மங்கை எனும் சொல்லை பயன்படுத்தவில்லை. அகப்பாடல்களிலும் அதுஇல்லை. 

மங்கை என்பது intersecting point
Reply all
Reply to author
Forward
0 new messages