முரல் ‘needlefish, aalaapanai', முரவு வாய், முரம்பு

198 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 2, 2022, 8:56:17 PM11/2/22
to Santhavasantham

முரல் ‘needlefish, aalaapanai', முரவு வாய், முரம்பு
-----------------------------------------------------------------

தமிழர்கள் உணவு தயாரிப்பதிலும், விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள்.
வேளிர் வருகையால், ஆற்றோர விவசாயம் மிக மேம்பட்டது.
வேளாண்மை என்றாலே விருந்து உபசாரம், உபகாரம் என்ற பொருள் உண்டு.
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81).

முர்- என்னும் தாதுவில் இருந்து உண்டாகும் ‘முரல்’ என்னும் மீனைப் பற்றியும்.
முரலுதல் என்று ஏன் ஆரோகணம், அவரோகணம் கொண்ட சங்கீத ஆலாபனைக்குத்
ஏற்ற, இறக்கத்தால் பெயர் கொடுத்தனர் என ஆராய்வோம். முரலீ என்ற சொல்
வேய்ங்குழல் ஊதும் கிருஷ்ணனுக்குப் பெயர் ஆனது. முரலி/முரளி-க்ருஷ்ணன்.
பாலமுரளிகிருஷ்ணா அற்புதமான பாடகர். அவரது சீடர் அனந்தை பிரின்ஸ்
ராமவர்மா இணையத்தில் பல வகுப்புகளை நடத்தி கர்நாடக இசை சொல்லித்தருகிறார்.

செம்பரல் முரம்பு (முரண்பு) பருக்கைக் கற்கள் மேலும், கீழும் செல்வதாக
உள்ள நிலம். முரணை நகர் நளவெண்பாப் பாடின புகழேந்தியின் புரவலன்
சந்திரன்சுவர்க்கியின் தலைநகர். இந்த வளமான தலைநகர் எங்கே இருந்தது எனவும் பார்ப்போம்.
கோட்டை மதில்களைப் பார்த்தால் ‘முரவு வாய் ஞாயில்’ என்பதன் பொருள்
புரிந்துவிடும். நீடில்ஃபிஷ் என்ற மீனின் பெயர் முரல் எனல் ஏன் எனவும் அறியமுடியும்.
ஆலாபநத்துக்கு தூய தமிழில் முரலுதல் என்பது பெயர்.
முரவு வாய் குழிசி முரியடுப்பு என, வாடூன் வாட்டுகிற முரியடுப்பு வருணனை
அற்புதமாக இருக்கிறது.

உணவு தயாரிக்கும் அடுப்புவகைகள் பற்றி முன்னர் பேசினோம்.
வாடூன் என்னும் புலா உணவை இருவகையாகப் பிரிக்கலாம்:
(1) kabob: https://en.wikipedia.org/wiki/Kebab
(2) jerkey: https://en.wikipedia.org/wiki/Jerky  உப்புக்கண்டம் என்கிறோமே அதன் ஆங்கிலம் ஜெர்க்கி.

முரியடுப்பு = skewer oven.
முரி is a technical word for skewer, wooden stick:
https://en.wikipedia.org/wiki/Skewer
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
https://en.wikipedia.org/wiki/Skewer#/media/File:Wooden_skewers.jpg

முரியடுப்பில் வாடூன் அடுதலை (சமைத்தல்) வர்ணிப்பதுபோல, வேறெந்த அடுப்பையும் சங்கப் புலவர்கள் வர்ணிப்பதில்லை. கபாப் உணவு காட்டுவாசிகளில் இருந்து, மன்னர் வாழும் அரண்மனைகளின் அட்டில் வரை பிரபலமான உணவாக விருந்தோருக்கு அளித்து விருந்தோம்பி உபசரிக்கும் உணவாக இருந்ததே காரணம்.  வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்). இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றன.
முரியடுப்பில் அடுகிற வாடூன் (= Kabab cooked in the skewer-oven) :: பெரும்பாணாற்றுப்படையில் வருணனை:
https://groups.google.com/g/vallamai/c/cACN4vhFXaY

தொல்லியலில் கிடைக்கும் செய்திகளோடு ஒப்பிட்டால், கபாப் என்னும் ஊன்வகையை “வாடூன்” என வினைத்தொகையாகச் சங்கப் புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.
(1) சற்று ஈரப்பதம் இருக்கும் வாடூன் = கபாப் https://en.wikipedia.org/wiki/Kebab ;  சாதமும், கபாபும் பக்கம் பக்கம் வைத்து உண்பர். (2) ஈரப்பதம் முற்றிலும் நீக்கிய வாடூன் = ஜெர்க்கி https://en.wikipedia.org/wiki/Jerky   ;  ஜெர்க்கியை, வட்டார மொழிகளில் உப்புக்கண்டம், கருவாடு, கொடிக்கறி, கொடியிறைச்சி (நாஞ்சில் நாடு) வழங்குகின்றனர். உப்புக்கண்டத்தை, சோறு ஆக்குகையில் சட்டிக்குள்ளே போட்டு ஒன்றாகச் சமைப்பது வழக்கம்.

முரவு வாய் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு மேலும், கீழுமாக உள்ள கரடுமுரடான குழியுடைய முரியடுப்பிலே (= in the skewer-oven) ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்ணெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).

இப்படிச் செய்த கபாபை, Tajin pot-ல் = புழுக்கல் பானையில் சமைத்த புல்லரிசிச் சோற்றுடன்
வைத்துத் தருகின்றனர் எயிற்றியர். புழுக்கல் பானை (Tajin pot, and its conical lids
in Sivakalai, Adichanallur, Kodumanal, ...
see my writing in this thread).

கபாப் (வாடூன்), பக்கத்தில் புழுக்கல்: எப்படி இருக்கும்? Note: வாடூன், புழுக்கல் இரண்டும்
தனித்தனியாய்ச் சமைத்தனர். வாடூன் முரியடுப்பில், புழுக்கல் அதற்கான பானையில்.
வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:
https://mahatmarice.com/recipes/garlic-lemon-chicken-kebabs-and-green-rice/
https://honestandtasty.com/stovetop-beef-kabob-and-persian-rice-chelow-kabob-deegi/
https://www.shanazrafiq.com/2017/08/kabab-koobeideh-with-saffron-rice-persian-seekh-kebab.html

பெரும்பாணாற்றுப்படையில் வரும் வாடூன் உடன், புழுக்கல் சோறு
எயிற்றினர் விருந்தினருக்குப் பரிமாறினர்.
image.png

https://groups.google.com/g/santhavasantham/c/oYZ85k8tqvw/m/EhbE7MQGBAAJ

விருந்து உண்ண வருக! - கோலம் ஆய்வேட்டில் (கொலோன் பல்கலை, பேரா. உல்ரிக் நிக்லாஸ் பதிப்பாசிரியர்).
---------------------------------------------------------------------------------------------------------------
Cheran Rudramurthy, Toronto wrote:
> சீர், தளை, சொற்பிரிப்புப் பிறழாமல் மிக அழகாக எல்லோரும்
> துய்க்கும்படி வெண்பா எழுதலாம். இதோ ஒரு நல்ல எடுத்துக்காட்டு:

தோடம் பழச்சுளைபோல் தொங்கும் நிலவொளியில்
ஆட வருவாயென் றாற்றோரம் ஓடத்தில்
நான்காத் திருந்தேன். நடுச்சாமம் ஆமட்டும்
ஏன்காக்க வைத்தாய் எனை?

> என்னிடமும். ஆனால் எல்லாவற்றுக்கும் எழில், சொற்செட்டு, நறுக்கு வாய்க்காது.

NG> ஆம். ஒரு 10,000 நல்ல வெண்பாக்கள் தேறும். 1900-க்கு முன் 1 லட்சம் வெண்பா
இருக்கும். (கலிவெண்பா பிரபந்தங்களைக் கணக்கில் எடுக்காமல்).

காய்ச்சுச் சாராயம் கடை விஸ்கி காசுக்கேன்?
தீய்ச்ச கறிச் சோற்றுத் தீயலுடன் - ஆய்ச்சியின்ர
செவ்விளநீர்த் தென்னையிலே சின்னையன் சீவிற கள்
இவ்வளவும் போதும் எனக்கு!

இதைக் கண்டு பிடியுங்கோ அன்பு NG! சேரன்

விருந்துண்ண வருக. இதன் முதல் வெர்ஷன் இங்கே. அப்போதைய ஓசிஆர். பல எழுத்துப்பிழைகள். அச்சான கட்டுரை எங்கோ உள்ளது. தேடிப் போடணும். இலங்கைக்காரர்கள் நடத்திவந்த தளம். 2009-ன் (ஈழப் போரின் முடிவு) பின் முடக்கப்பட்டது. அச்சான வெர்ஷன் எங்கோ கிடக்கிறது. பிடிக்கணும்.
https://tamilnation.org/culture/cuisine/ganesan.htm
பிடித்த வெண்பா. இங்கும், https://groups.google.com/g/houstontamil/c/fPFAQiPpuZ0
இக் கட்டுரை பயன்பட்டுள்ள இடம்: https://anbuoviya.blogspot.com/2016/01/blog-post_11.html

முர்- என்ற தாதுவேரால் உற்பத்தி ஆகும்
முரல் மீன், முரலல், முரவு (முரவுவாய் ஞாயில்/புற்று/குழிசி), முரம்பு போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 3, 2022, 4:36:13 PM11/3/22
to housto...@googlegroups.com, vallamai
பல்வேறு வகையான அடுப்புகளும், அவற்றின் சிறப்புப் பெயர்களும் பார்த்தோம். கொங்குநாட்டில், கொடியடுப்பில் நேரடியாக விறகு இல்லாத பகுதி ஓவடுப்பு எனப்படுகிறது. ஓய்வு > ஓவு. ஓவு+அடுப்பு = ஓவடுப்பு. அதாவது, நேரடியாகத் தீமூட்டுதல் இல்லாத ஓய்ந்த/ஒழிந்த அடுப்புப் பகுதி. “ஓவு ஒழிச்சல் இல்லாமெ பாடுபடறான்” என்கிறோம்.

120332746_764419850771367_1263075625564990504_n.jpg

ஓவு

கொங்கு வட்டார வழக்குல ஓவுனா மண்ணுல செஞ்ச கொடி அடுப்பு (கோட்டடுப்பு) இரண்டு பாகம் இருக்கும். பெரிய அடுப்புக்கு பக்கத்துல தீ படுமாறு இணைஞ்சுருக்கிற பக்கத்து அடுப்பை ஓவுனு சொல்லுவாங்க.

‘பெரிய அடுப்புல சாப்பாடு சட்டி வெச்சு ஓவுல கொழம்பு குண்டாவ வெச்சிரு’ என்பது கொங்கு பகுதி பேச்சு வழக்கு..

பதிவு: வெங்கடேஷ் சோமசுந்தரம்

#ஓவு
#மண்_அடுப்பு
#கொடி_அடுப்பு
#கோட்டடுப்பு
#மரபும்_வரலாறும்
https://www.facebook.com/photo?fbid=4479213698817251&set=gm.328484731744895&idorvanity=235776064349096

N. Ganesan

unread,
Nov 3, 2022, 7:20:16 PM11/3/22
to Santhavasantham

கோட்டையில் நுங்கு, கோட்டை அடுப்பு. முரியடுப்பு (பெரும்பாண்.)
-------------------------------------------------------------------------------------------------------------------

பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் இந்தியாவின் மிகப்பழைய ஊன்சமைக்கும் ஒரு வகை அடுப்பை
விரிவாக வரையறை தந்து வருணித்துள்ளார்:
        முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி

        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு மேலும், கீழுமாகக் கரடுமுரடாக உள்ளது. இது கறையான் புற்று, கோட்டை மதில் போன்றவற்றில் உள்ள முரவுவாய் போல இருக்கும். அந்த முரவுவாய்க்குள்ளே குழிசி - பாத்திரமாகத் தோண்டிய குழி. இக் குழியுடைய முரியடுப்பிலே (= in the skewer-oven) ஏற்றி,

தாளிதம், தண்ணீர், எண்ணெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
வாடூன் = வாட்டிய ஊன்; வினைத்தொகை. இப்படிச் செய்த கபாபை, Tajin pot-ல் = புழுக்கல் பானையில் சமைத்த
புல்லரிசிச் சோற்றுடன் வைத்துத் தருகின்றனர் எயிற்றியர். புழுக்கல் பானை (Tajin pot, and its conical lids
in Sivakalai, Adichanallur, Kodumanal, ...)

---------------

முதலில், கோட்டையடுப்பு அல்லது காடியடுப்பு என்பது பற்றிப் பார்ப்போம். இப்போதைய இளைஞரைக்
கேட்டால் கோட்டையடுப்பு பார்த்ததில்லை என்கின்றனர்.

முதலில் கோட்டை என்றால் என்ன எனப் பாருங்கள்: https://youtu.be/jyAPhMv4Wjc
பனை ஓலையில் கோட்டை செய்து, அதில் நுங்கை நுங்கெடுத்துச் சேர்த்துக் கோடை மாதங்களில்
தருவர். இப்பொழுது பனைமரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. கோட்டையில் நுங்கு தருவாரோ,
விற்பாரோ அருகிவிட்டனர். கொங்குநாட்டு வெள்ளாளரில் பனையன் என்ற கூட்டத்தாரே உண்டு.
வேளாண்மையின் கடவுள் பலராமன் (வெள்ளைச்சாமி. வெள்ளை என்பது சங்க நூல்கள்).
கள் கலயத்துடன் பனையடியில் நிற்பவன் பலராமன். கண்ணபிரானின் அண்ணன் வெள்ளை.
வெள்ளை என்று பனங்கள்ளுக்கு ஒரு பெயர். எங்கள் தோட்டத்தில், 1950கள் கடைசியில் ஆயுதபூஜை.
அதில் களத்தருகே இருக்கும் பனைமரங்கள் இன்று வெட்டப்பட்டுவிட்டன:
https://tinyurl.com/ZK-ayudhapuja the photo is in,
http://nganesan.blogspot.com/2021/01/veerammalin-kaalai-by-kuparaa-1936.html
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
http://mymintamil.blogspot.com/2020/09/blog-post_23.html ஆ. சிவம்.

கொட்டு-தல் என்னும் வினைச்சொல் தருவது கோட்டை. நுங்கு சேர்க்கும் கோட்டை பார்த்தோம்.
பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி அன்று ஈந்த *களைக்கொட்டும்* - சேரமான்
வாராயோ என்று அழைத்த வாய்மையும் இம் மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர் - ஔவை

களைக்கொட்டு = களைக்கொத்து எனவும் வரும்.
Spontaneous Loss of Cerebral consonants என்பார் தாமஸ் பர்ரோ.
கடவு கதவு ஆதலும், கடம்பு கதம்ப என வடமொழி செய்வதும் இத்தன்மைய.

கோட்டை அடுப்பு (அ) காடி அடுப்பு என்பது குழியினால் செய்யும் அடுப்பு.
இதன் சின்ன வெர்ஷன் தான் பெரும்பாணாற்றுப்படை கூறும்
“முரவுவாய்க் குழிசி முரியடுப்பு”. இங்கே, முரி = skewer, made of wood or metal.
அதனை விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

கோட்டை அடுப்பு - 20-ம் நூற்றாண்டு ஆசிரியர்கள் வாக்கில்
------------------------------------------------------------------------------------

கோட்டையடுப்பு kōṭṭai-y-aṭuppu Oven-trench, fireplace in the form of a ditch; காடியடுப்பு Colloq.  
(அதிக அளவில் சமைப்பதற்காகத் தரையில் நீண்ட பள்ளமாகக் கட்டப்பட்ட) பெரிய அடுப்பு
காடியடுப்பு A fireplace in the form of a long ditch used for cooking on a large scale; (காடி - மாட்டுத் தீவனக் குழிசி).

(1) https://ta.wikisource.org/wiki/பக்கம்:கோயில்_மணி.pdf/81

(2) "நடமாடும் சிவனும், அன்னம் போடும் சிவனும் "
http://karaimodumalaigalmathangi.blogspot.com/2014/03/blog-post_3069.html
எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாதுன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து மூட்டை, இருபது மூட்டை வடிச்சு அதை அப்படியே நீள நீளப் பாய்லே பரத்திக்கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கிற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடு கிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை ஈரப்பச்சரிசியை, ஆமாம் பச்சையா இருக்கிற அரிசியாவேதான் பரத்திக் கொட்டிட்டு,அதுக்கு மேலே கெட்டிக் கோணியாப் போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடி வரையில் அதை ஓரளவு இறுக்கமாச் சொருகி மூடிப்பிடுவாராம். காமணியோ அரைமணியோ கழிச்சுக் கோணியை எடுத்தா அத்தனை அரிசியும் புஷ்பமா சாதமாயிருக்குமாம். அதாவது சாதம் வடிக்கிற கார்யத்தில் பதி மிஞ்சும்படி இப்படி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார். - காஞ்சிப் பெரியவர் https://www.kamakoti.org/tamil/3dk197.htm

(3) நா. பா. https://ta.wikisource.org/wiki/பக்கம்:சுலபா.pdf/215
அந்த நாளில் பழைய கிராமாந்தரத்துக் கல்யாணங்களுக்குக் கிணற்றடியில் கொல்லைப் பக்கம் நீளமாகக் குழி தோண்டிக் கோட்டை அடுப்பு என்று டன் டன்னுக விறகுக் கட்டையைப் போட்டு எரித்துச் சமையல் பண்ணுவார்களே அது போல், கோட்டையடுப்பும் விறகு போட்டு எரிக்கும் முறையும்தான் பழைய பார்கவியில் இருந்தன. அதனல் சமையலறை புகை மயமாகக் கரிபடிந்து இருண்டிருக்கும்.

(4) https://www.facebook.com/Radhekrisnhna/photos/a.362307554352043/862127321036728/?type=3
“ஒரு மாதம் முன்பே அப்பளம் வடாம், ஊறுகாய் கள் பக்ஷணங்கள் பண்ண மாமிகள் தயாராகி விடுவார்கள். மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு, செக்கிலிருந்து நல்லெண்ணெய், கடலெண் ணெய் தேங்காயெண்ணை எல்லாம் வந்து விடும். கல்லுரல்கள் அம்மிக்கல், கல் இயந்திரம் விடாமல் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கும். ஊர் சமையல்கார கோஷ்டி கீத்து தட்டி கட்டி ஒரு பக்கமாக கோட்டையடுப்பு மூட்டிவிடும். மரங்கள் வெட்டி காய்ந்த விறகுகள் அம்பாரமாக அடுக்கி வைத்திருக்கும். மாடுகள் அநேகம் என்பதால் பாலுக்கு தயிருக்கு, வெண்ணைக்கு நெய்க்கு பஞ்சமே இல்லை. ”

பழைய நினைவுகள். நங்கநல்லூர் J K SIVAN

ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம் என்று வாழ்ந்த கிராமங்கள். கல்யாணத்துக்கு மண்டபங்கள் சத்திரங்கள் கிடையாது. தேவைபடவில்லை. அவரவர் வீட்டிலேயே தெருவை அடைத்து பெரிய கொட்டகை பந்தல் போடுவார்கள். எதிரும் புதிருமாக வீடுகள் சம்பந்திகளுக்கு உறவினர்களுக்கு ஒதுக்கப்படும். யார் வீட்டில் யார் வேண்டுமானாலும் தங்குவார்கள்.மூன்று நாளைக்கு மேல் கல்யாணங்கள் ஆறு நாள் வரை கூட நடக்கும்.

வாசலில் ஜலத்தை தெளித்து எல்லா வீட்டு வாசலிலும் பெரிய மாக்கோலம் போட்டு, காவி பார்ட ரோடு BORDER கண்ணைப் பறிக்கும். ஊர் உறவு எல்லாம் ஒன்று கூடி மூன்று வேளையும் சாப்பாடு.

ஒரு மாதம் முன்பே அப்பளம் வடாம், ஊறுகாய் கள் பக்ஷணங்கள் பண்ண மாமிகள் தயாராகி விடுவார்கள். மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு, செக்கிலிருந்து நல்லெண்ணெய், கடலெண்ணெய் தேங்காயெண்ணை எல்லாம் வந்து விடும். கல்லுரல்கள் அம்மிக்கல், கல் இயந்திரம் விடாமல் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கும். ஊர் சமையல்கார கோஷ்டி கீத்து தட்டி கட்டி ஒரு பக்கமாக கோட்டையடுப்பு மூட்டிவிடும். மரங்கள் வெட்டி காய்ந்த விறகுகள் அம்பாரமாக அடுக்கி வைத்திருக்கும். மாடுகள் அநேகம் என்பதால் பாலுக்கு தயிருக்கு, வெண்ணைக்கு நெய்க்கு பஞ்சமே இல்லை.

பட்டணத்திலிருந்து பத்து ஆறு வேஷ்டிகள், சேலம் குண்டஞ்சி, உத்தரீயங்கள் , நிறைய சேர்ந்துவிடும். பதினெட்டு முழ புடவைகள் வாங்கி வைத்திருப்பார்கள். ஆறு முழம் கட்டுபவர்களுக்கு ஒரு சில கட்டுகள் ரெடியாக இருக்கும்.

பிள்ளை வீட்டு அத்தைகள், சித்திகள், மாமிகள் மாப்பிள்ளைகள், எல்லாரும் VIP க்கள். அதிகாரம் தூள் பறக்கும். பளபளவென்று தேய்த்த பித்தளை டவராக்களில் வீட்டிலேயே காப்பிக்கொட்டை வறுத்து அரைத்த பில்டர் காப்பி கூஜாக்கள் நிறைய ஜமக்காளங்களில் மும்முரமாக சீட்டாடும் கோஷ்டிகளுக்கு அனுப்பப்படும். தட்டு தட்டாக கொழுந்து வெற்றிலைகள் கொட்டைப்பாக்குகள், பாக்குவெட்டிகள், சுண்ணாம்பு டப்பிகள் கண்ணில் எங்கும் படும். பன்னீர் புகையிலை சந்தன நறுமணம் மூக்கைத் துளைக்கும்.

வில் வண்டி, ரெட்டை மாட்டுவண்டி, குதிரை வண்டிகள் ரயிலடி சென்று திரும்பும் வேலை யில் பிசியாக இருக்கும். யார் வருகிறார் கள் போகிறார்கள் என்பதே கணக்கு கிடையாது. இப்போது மாதிரி வருபவர்கள் கணக்கு போடுவதில்லை . எல்லோர் கையிலும் பனை ஓலை விசிறி இருக்கும். பன்னீர் சொம்புகள் எல்லோர் மீதும் பன்னீர் தெளிக்கும். இது வாண்டுகளின் வேலை. அண்டை அசல் வீட்டுக்கார்களின் உழைப்பு அதிகமாக இருக்கும். அவரவர் வீட்டு கல்யாணம் போல் எடுத்து நடத்துவார்கள். அவ்வளவு ஒற்றுமை. இப்போது அடுத்த சுவருக்கு பின்னால் இருப்பவர்களை நமக்கு தெரிவதில்லையே.

அப்போது சினிமா சங்கீதம் முதற்கொண்டு எல்லாமே கர்நாடக சங்கீதம் தான். நாயனக்காரர் கோஷ்டி எந்த ஊரிலிருந்து வரவேண்டும் என்று முன்னேற்பாடு செய்து அபூர்வ ராகங்கள் ஆலாபனைகள் இரவு பகலாக காற்றில் மிதக்கும். விடியற்காலையில் இரவில் எல்லாம் தாளம் தப்பாத தவில் ஓசை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.

கல்யாணத்துக்கு முதல் நாள் பிள்ளை வீட்டார் யாத்ரா தானம் பண்ணி முடிக்க குடும்ப வாத்தியார்கள் கோஷ்டி உத்தரவுகள் பிறப்பிக்கும். அவர்கள் அவ்வப்போது கேட்கும் சாமான்களை எடுத்துத் தர ஒரு குழு தயாராக இருக்கும்.

பிள்ளைவீட்டுக் காரர்கள் வந்து இறங்கியாச்சு என்ற வுடன் வாத்ய கோஷ்டியுடன் வரவேற்று மாலை போட்டு மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதம் ஆரம்பிக்கும். காலையில் பிள்ளை வீட்டு விரதம், அப்புறம் பெண் வீட்டில் விரதம் நடக்கும்.

சாயந்திரம் நிச்சயதார்த்தத்திற்கு நல்ல கூட்டம். அக்ராஹாரத்தில் ஒரு கோடியில் பெருமாள், இன்னொரு கோடியில் பிள்ளையார், சிவன் கோவில், அம்மன் உண்டு. கோவில் பிரசாதங்கள் அர்ச்சகர்கள் , தர்மகர்த்தாக்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் . இன்னார் புத்ரன்
பௌத்ரன், தெளஹித்ரன் என்றெல்லாம் பிள்ளை, பெண்கள் ப்ரவரம் வாசித்து கல்யாண பத்திரிகை உரக்க வாசிப்பார்கள். மேள தாளங்கள் முழங்கும். மைக், ஒலிபெருக்கி கிடையாது. கோவிலிலிருந்து சாரட் வண்டியில், அல்லது காஸ் லைட் நடுவில் திறந்த மோட்டார் காரில் புஷ்பங்கள் அலங்காரத்தோடு , அல்லது நடந்தோ மாப்பிளை ஜானவாச ஊர்வலம். எல்லா உறவினர்களும் பின்னால் நடந்து வருவார்கள். குழந்தைகளுக்கு ஏக கொண்டாட்டம். நாதஸ்வர தவில் வித்துவான்கள் பின்னாலேயே சுற்றுவார்கள். கேஸ் லைட் ஒளிவீசும் .

அக்ரஹார வீதிகளில் ஊர்வலம் மெதுவாக சென்று முடிந்த பின் கல்யாண வீட்டு வாசலுக்கு வந்தபின் வரவேற்பு. சங்கீத கச்சேரிகள் நாட்யம் நிகழ்ச்சிகள் உண்டு. அது முடிந்தபின் சாப்பாட்டு கடை.

வரிசையாக பந்திப்பாய் விரித்து வாழை இலைகள் போடப்படும். கமகமவென்று மணத்தோடு தட்டு தட்டாக உணவு பரிமாறி எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். யானையடி அப்பளம் என்று இலைமுழுதும் பெரிதாக ஒரு விசேஷ அப்பளம் எல்லா இலையிலும் விழும்.

விச்ராந்தியாக சாப்பாடு முடிந்தபின் சில திண்ணைகளில் சீட்டு கச்சேரி, பெண் வீட்டுக்காரர்கள் அடுத்து நடக்க வேண்டிய நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். முகூர்த்த தேங்காய் பைகளை துணிப்பைகளில் போடும் வேலை ரொம்ப கடினம். ஏன் சரியாக உபசரிக்கவில்லை என்று கோபத்தோடு சில பிள்ளை வீட்டுக்கார மாமா மாமிகளை பெண் வீட்டுக்கார மாமா மாமிகள் காலில் விழக குறையாக சமாளிப்பது வழக்கமான ஒரு நாடகம்.

இன்னும் யோசிக்கிறேன்.

இவை போல் இன்னும் பல.
-----------------

கோட்டையடுப்பின் ஒரு சிறிய வகுப்புத் தான் கடியலூர் உருத்திரன் கண்ணனார் வர்ணிக்கும் “முரவுவாய்க் குழிசி முரியடுப்பு”.  நீர்ப்பத சேர்த்தாமல் “வாராது” அடுகிற வாடூன் செய்யும் அடுப்பிது.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 3, 2022, 11:39:53 PM11/3/22
to vallamai
நன்றி, புதுச் செய்திகள் பல. 
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf7KYVhvBBFW1e7w1C1HKdLgJwj_Prm87Qki%3DfqrcX_2g%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 4, 2022, 4:37:55 AM11/4/22
to vall...@googlegroups.com
On Thu, Nov 3, 2022 at 10:39 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி, புதுச் செய்திகள் பல. 
சக

இன்னும் பல சொல்லணும்.

N. Ganesan

unread,
Nov 4, 2022, 5:42:45 AM11/4/22
to Santhavasantham, பழமைபேசி
Dr. S. Anand > ஓவு கூலி . வேலையே   செய்யாமல் ஊதியம் பெறுவது.

இணையத்தில் யாரும் எழுதாத வட்டாரச் சொல். டவுன்களில் ஓசி சம்பளம் என்பதற்கிணையான பழஞ்சொல்.

Dr. S. Anand wrote: <<<
கரும்பு ஆலைகளில் பாகு காய்ச்சுவதற்கு பயன்படும் அடுப்பு தீவாக்குளி . இதில் கொப்பரை வைத்துப் பாகு காய்ச்சி பதமான பின் வெல்லக்கட்டியாக்குவார். இந்த பெரிய அடுப்பினை செங்கல் மண் கலந்து கட்டுவார்கள். கொப்பரை அடுப்பிற்கு சிறிது தூரத்தில் பாத்திரம் வைத்து சமையல் செய்யத் தக்கவாறு சிறிய ஓட்டை வைத்து தீவாக்குளி அமைப்பர். இந்த அடுப்பினை ஓவடுப்பு என்பர். கரும்பு ஆலைகளில் குடும்பமாக உழைப்பதால் தனியாக சமைக்க ஒரு அடுப்பும் நேரமும் தேவைப்பட்டால் ஒரு உழைப்பில் கூடுதலாக மற்றோர் பயனை நுகர்தல். என்று எடுத்துக் கொள்ளலாம்.
>>>

70-களில் தோட்டத்தில் பார்த்துள்ளேன். தீ-வார-குழி > தீவார்குளி > தீவாக்குளி என நினைக்கிறேன்.

N. Ganesan

unread,
Nov 5, 2022, 7:32:35 PM11/5/22
to Santhavasantham
முரியடுப்பு (skewer-oven) பற்றிய பெரும்பாணாற்றுப்படை வருணனை:

பெரும்பாண் ஆற்றுப்படையில் வாடூன் சமைக்கும் அடுப்பாகிய முரியடுப்பை அருமையாக விளக்கியுள்ளார் கடியலூர் ருத்திரன் கண்ணனார். அவ் வரிகளை இங்கே சற்று ஆராய்வோம். பாரத உபகண்டத்தின் மிகப் பழைய சமையல் முறைகளில் வாடூன் அடுதல் ஒன்றாகும்.

        முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

முர்- என்னும் தாதுவேர் தரும் சொல் முரவு. மேடும் பள்ளமுமாக, (அ) மேலும் கீழுமாக உள்ள விளிம்பு உள்ள குழிசி உள்ள முரியடுப்பில் மான் தசை சமையல் ஆகிறது.

(1) “முது மரத்து உறையும் முரவுவாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்” (அகம் 260)

வயது முதிர்ந்த மரத்தில் இருக்கும், கரடுமுரடாக முழங்கும் வாயினையுடைய பேராந்தை
வேகமாகக் குழறியவாறு ஒலியெழுப்பும் பேய்கள் நடமாடும் நள்ளிரவில்.

இங்கே முதுபுள் - பேராந்தை. Indian horned rock-owl. அதன் முரவுவாய் எழுப்பும் ஒலியானது முரடாக நெடுந்தொலைவு கேட்கும்.

(2) “ மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி”  (அகம் 72).

மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
காய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி.

Look at the outline of the edge of anthills. muravuvaay-p-puRRu will be clear.
https://www.agefotostock.com/age/en/details-photo/ant-hill-in-gir-forest-at-gujarat-india/DPA-IAN-185838
இதே விவரிப்பு கோட்டை மதில்களுக்கும் வரும்.
முரவுவாய்ப் புற்று:
dpa-ian-185838.jpg

(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)

ஞாயில் ñāyil   n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).  
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள், முசலம், ... போன்றன வீசி எறிவர்.
https://www.shutterstock.com/image-photo/lahori-gate-bastion-turret-red-fort-1576918528
https://www.dreamstime.com/royalty-free-stock-images-naldurg-fort-nine-port-bastion-bastions-historical-osmanabad-india-image36196279
https://www.alamy.com/stock-photo-bastion-gate-of-golconda-fort-golkonda-fort-hyderabad-andhra-pradesh-43164863.html

naldurg-fort-nine-port-bastion-bastions-historical-osmanabad-india-36196279.jpg
புற்றின் ஸ்கைலைன் போலவும், முரியடுப்பின் (skewer-oven) முரிகளை (skewer) வைத்து, அவற்றின் மேல் வாடூன் ’kabab' சுடும் கற்களின் விளிம்பு போலவும்
முரவுவாய் ஞாயில் கோட்டைகளில் அமைந்துள்ளன.

(4) முரியடுப்பு. மிக எளிய முறையில், சிறுகுழி தோண்டி, அதன் வாய்விளிம்பில் கற்களைப் பதுக்கி அமைக்கும் skewer-oven,
முரிகளைப் பயன்படுத்தி வாடூன் தசைசுட்டுச் சமைக்க உதவுவது. உலக முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாய், வேடுவர் உணவு சமைக்கப் பயன்படுத்திய பழைய முறை இது.
        முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி

        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

முரி (= skewer) https://en.wikipedia.org/wiki/Skewer
முரி is a technical word for skewer, wooden stick:
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
image.png

முரவுவாய் என்பது கற்களை விளிம்பில் அடுக்குவதால் ஏற்படுவது. விறகு கீழே எரிய, முரிகளில் (skewers) ஊன்துண்டங்களைக் கோர்த்து வாட்டிச்
சமைப்பது வாடூன். இதற்கு எந்த நீர்ப்பதமும் தேவையில்லை. எனவேதான், “வாராது அட்ட வாடூன்” என்கிறார் சங்கச் சான்றோர் ஆகிய புலவர்.
முரியடுப்பு அமைக்கும் எளிய முறை:
Taiwan-Kiln-Cooking-Hole.jpg
குழிசி: இது குழிஇ (= குழித்து) என்னும் வினைச்சொல்லில் இருந்து தோன்றும். அளைஇ, சொரீஇ, குழீஇ (குழுமி), இரீஇ, கடைஇ, சினைஇ, கடைஇ,  குலைஇ, குவைஇ, கொளீஇ, செரீஇ, தடைஇ, தரீஇ, தலைஇ, தழீஇ, துழைஇ,  தொலைஇ, நிலைஇ, நிறீஇ, நினைஇ .... போல, குழிஇ என்னும் பள்ளம் குழித்தல் என்னும் வினை குழிசி என்றாகியுள்ளது. குழிசில்/குழிசி என்பன பெயர்ச் சொற்கள்: வண்டில்/வண்டி, அழிஞ்சில்/அழிஞ்சி, நெருஞ்சில்/நெருஞ்சி, புட்டில்/புட்டி ..., போல. மாகறல் கார்த்திகேயனார், மொழிநூல்).  குழிஇ ஒப்பிட தைஇ/தைஇய “=தைத்து/தய்ச்சு” என்ற வினைச்சொல்லுடன் ஒப்பிடலாம். இது தச்சு என்ற பெயர் ஆகிறது. தச்சன் என்று பல இடங்களில் சங்க இலக்கியம் கூறும். தய்க்க (தைக்க) > தக்‌ஷ என சிந்து சமவெளியில் திராவிடச் சொல் உருமாறிற்று.) அதுபோல், குழிஇ- என்னும் வினை தருவது குழிசி.

வண்டியின் ஆரக் கால்களை இணைக்கும் கும்பம் அச்சில் இருக்கிறது. இதனையும் குழிசி என்பர், ஆரக்காலைக் குழித்த குழியில் பொருத்துவர்.
பிரம்மன், "வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது”

முரியடுப்பில் முரிகளைக் குழிசி விளிம்பில் பொருத்துமாப்போல.

மேலும் கீழுமாக விளிம்புள்ள கற்பதுக்கைகள் குழிசியில் வைத்துச்  செய்யும் முரியடுப்பு என்பதை “முரவுவாய்க் குழிசி முரியடுப்பு” என்கிறது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. இதில் எந்த நீர்மமும் வாராது அடுகிற வாடூன் தயார் செய்கின்றனர் எயிற்றியர்.  கூடவே, புல்லரிசியைப் புழுக்கிய புழுக்கலுடன் விருந்து படைத்தனர். ஔவை தனிப்பாடற்போல, மோரும் இருந்திருக்கும்.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Nov 5, 2022, 8:55:16 PM11/5/22
to வல்லமை
On Sun, 6 Nov, 2022, 05:02 N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

dpa-ian-185838.jpg

(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)

ஞாயில் ñāyil   n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).  
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள், 

முரவுவாய் குழிசி என்பது கற்களை விளிம்பில் 

வாய்க்கு பண்பாக முரவு ஆள பட்டுள்ளது.

வய் பிளவு கருத்து வேர். வயிறு, வாய், வயல், வாய்க்கால் பள்ளமாக இருப்பதை நோக்குக. வய் > பய் - பிளந்த வாயுள்ள துணிப்பை.  வாய் எப்படி இருக்கும் என்றால் வளைந்து வட்டமாக இருக்கும் குழிவாய் இருக்கும் என்பதே பொருள். 

kanmani tamil

unread,
Nov 5, 2022, 11:03:38 PM11/5/22
to vallamai

On Sun, 6 Nov, 2022, 05:02 N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

dpa-ian-185838.jpg

Sorry Dr.Ganesan; I disagree.
I don't wish to argue with you in this string. Let me explain after my project is over. 
Sk

(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)

ஞாயில் ñāyil   n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).  
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள், 

முரவுவாய் குழிசி என்பது கற்களை விளிம்பில் 

வாய்க்கு பண்பாக முரவு ஆள பட்டுள்ளது.

வய் பிளவு கருத்து வேர். வயிறு, வாய், வயல், வாய்க்கால் பள்ளமாக இருப்பதை நோக்குக. வய் > பய் - பிளந்த வாயுள்ள துணிப்பை.  வாய் எப்படி இருக்கும் என்றால் வளைந்து வட்டமாக இருக்கும் குழிவாய் இருக்கும் என்பதே பொருள். 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 5, 2022, 11:51:49 PM11/5/22
to vallamai, housto...@googlegroups.com
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)
நேராகத் தீயில் வாட்டாமல், நெய், மசாலா, நீர் முதலியன வார்த்துச் செய்யும்
பொரியல், பிரட்டல், குழம்பு இவற்றின் பெயர் ”சூடு”. 
கடல் இறா, குழல் மீன், ஆரல், முயல், ஆமான் இவற்றின் சூட்டிறைச்சி
சட்டிகளில் சமைத்துள்ளனர்,

நேராகத் தீயில் வாட்டிச் செய்வது வாடூன். அதாவது கபாப்.
முரியடுப்பில், முரி (skewer) குச்சியில் கோத்துச் செய்வது இது.
இது வாராது அட்ட வாடூன் என்கிறார் புலவர். அதாவது,
நெய், மசாலா, தண்ணீர் எல்லாம் வார்த்துச் செய்யச் சட்டியை
முரியடுப்பில் (skewer-oven)  பயன்படுத்துவதில்லை.

N. Ganesan

unread,
Nov 6, 2022, 12:10:48 AM11/6/22
to vallamai, housto...@googlegroups.com
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)

உப்புக்கண்டம்: https://www.youtube.com/watch?v=ihT3Ol0RcZE
சட்டியில் உப்புக்கண்டத்தாலோ, புத்திறைச்சியாலோ, குழம்பு வைக்கலாம்.

சங்க நூல்கள் ‘சூடு’ என்கின்றன. இவற்றை நெய், கறிப்பொடி தாளித்து,
நீர் வார்த்து சட்டியில் அடுதல் வேண்டும், எனவே,சட்டியில் வார்த்து அட்ட சூடு.

N. Ganesan

unread,
Nov 6, 2022, 12:25:34 AM11/6/22
to vallamai, housto...@googlegroups.com

நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)

உப்புக்கண்டம்: https://www.youtube.com/watch?v=ihT3Ol0RcZE

உப்புக்கண்டம் = sun-dried meat. உலரூன் என நல்ல தமிழில் சொல்லலாம். உலர்-தல் :: to dry.

N. Ganesan

unread,
Nov 6, 2022, 12:32:11 AM11/6/22
to vall...@googlegroups.com
On Sat, Nov 5, 2022 at 7:55 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
வய் பிளவு கருத்து வேர். வயிறு, வாய், வயல், வாய்க்கால் பள்ளமாக இருப்பதை நோக்குக. வய் > பய் - பிளந்த வாயுள்ள துணிப்பை.  வாய் எப்படி இருக்கும் என்றால் வளைந்து வட்டமாக இருக்கும் குழிவாய் இருக்கும் என்பதே பொருள். 

ப தான் வ ஆகும். பகு > வகு. etc., பை என்பது பையப்பைய - மெல்ல என்ற சொல். பாம்பின் படம் பை. பைந்நாகப் பாய் விஷ்ணு படுத்திருப்பது. பயிர் மெல்ல வளர்வது. பைர் - பயிர் - பச்சை என்ற நிறப்பெயர் தோற்றம். பையாக இருப்பது: பய்- > வயிறு. பை > வை ‘நெல்’, வைத்தூறு. ...

இதெல்லாம் வேறு இழையில் பேசலாம்.

N. Ganesan

unread,
Nov 6, 2022, 1:07:37 AM11/6/22
to vallamai, housto...@googlegroups.com
இன்னொரு குறிப்பு: வீட்டு முற்றத்தில் பார்வை வலையில் வீழ்ந்துபட்ட பறவையை fresh-ஆக கபாப் (வாடூன்) முரியடுப்பில் (skewer-oven) செய்கிறாள். ரெண்டு மூணு மாசத்துக்கு முன் உலர்ந்துபோன உப்புக்கண்டத்தைச் செய்ததாகவோ, அதை மீண்டும் சமைப்பதாகவோ குறிப்பே இல்லை. 

உப்புத் தண்ணீரில் அரிசியைப் புழுக்கிப் புழுக்கல் செய்கிறாள். இரண்டும் அதாவது - kabab with steamed rice -
விருந்து படைக்கிறாள். 

N. Ganesan

unread,
Nov 6, 2022, 8:42:50 AM11/6/22
to இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan), Santhavasantham
On Sat, Nov 5, 2022 at 10:33 AM இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com> wrote:
மிக அரிய, சுவையான சொற்கள்! நன்றி ஐயா!!

PerumbANARRuppaDai tells very nicely about the culinary habits of Hunter-Gatherers. The text talks very elaborately about the wild rice collection by the women of the hunter tribe. About the eroded feet of the viLavam tree in the front yard, and a deer tied to it. The wild rice is cooked separately using the slightly salty water available in the well of the house. And, muriyaDuppu 'skewer-oven' is used to cook the kabab without water in a pot (vArAtu aTTa vADuun). muri = Tamil word for skewer. NaccinArkkiniyar tells clearly that the kabab is NOT mixed with wild rice while cooking. He says that both are cooked separately, and served separately.

India and worldwide, Hunter-Gatherers use shallow pits as skewer-ovens. Indus Valley civilization (IVC) where ancient Dravidian was the language of the elites has developed the simple muriyaDuppu of the hunters into a fine kind. I've explained that development by the Indus valley farmers before (one can see the beautiful muriyaDuppu developed 4000+ years ago):
https://groups.google.com/g/santhavasantham/c/lHFqTYT32Fw/m/J-374FKCAQAJ

For the recent few centuries, Saivaites wrote commentaries. Because they were largely not familiar with skewer-oven, called muriyaDuppu, in Sangam times and the vaaDuun (kabab) cooking in muriyaDuppu, the commentaries are not clear about the Sangam poetry lines in that section. ஆரத உணவு எனச் சமணர்கள் சொல் இன்றும் ஈழத் தீவில் வழக்கத்தில் உள்ளது. ஆரத - அருகத (அர்ஹத்/அருகந்தன்) சமயத்தார் உணவு. வள்ளுவர் வலியுறுத்தும் இந்த ஆரத உணவைச் சைவர் ஏற்றனர். எனவே சைவம் என்றால் இன்று இருபொருள் (1) ஹிந்து சமயத்தில் பெரும்பிரிவாகிய சைவ சமயஞ் சார்ந்தவர் (2) சைவ உணவினர்; புலாலுணவு தவிர்ப்பவர்.

தமிழ் இணையப் பல்கலை:
https://www.tamilvu.org/library/l1100/html/l1140ind.htm
எயிற்றியர் அளிக்கும் உணவு

பார்வை யாத்த பறை தாள் விளவின் 95
நீழல் முன்றில், நில உரல் பெய்து,
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100
'வாடாத் தும்பை வயவர் பெருமகன்,
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால்,
செவ் வரை நாடன், சென்னியம்' எனினே
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ, நும்
பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்.

https://www.tamilvu.org/library/l1100/html/l1140ind.htm
”முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் ”
இதில் எங்கெங்கே காற்புள்ளி அமைந்துள்ளது எனப் பார்த்தீர்களனால்,
நச்சினார்க்கினியர் வழியாகச் செய்தமை விளங்கும்.

வாடூன் எனப்படும் தனியாக முரியடுப்பில் செய்வது.
நெய், மசாலா, தண்ணீர் எல்லாம் வார்த்துச் செய்யச் சட்டியை
முரியடுப்பில் (skewer-oven)  பயன்படுத்துவதில்லை.
எனவே, “வாராது அட்ட வாடூன்” - பெரும்.
சட்டியில் புல்லரிசியை (wild-rice) சோறு தனியாகச் சமைத்துள்ளனர்.
இதற்கான தஜின் பானைகள் ஏராளமாகத் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.
பின்னர், எயிற்றி பசியுடன் வந்த பாணர் குடும்பங்களுக்கு
சோறும், அதன் மேல் வாடூன் என்னும் கபாபும் இட்டு உணவுவிருந்து
அளித்துள்ளாள். அவ்வுணவின் மாதிரி இங்கே காட்டினேன்
https://groups.google.com/g/santhavasantham/c/lHFqTYT32Fw/m/J-374FKCAQAJ

வாடூன் (கபாப்), சோறு (அன்னம்) தனித்தனியாக இருந்தமையை
அழகாக, நச்சினார்க்கினியர், விளக்கியுள்ளார்.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh0lJIy.TVA_BOK_0004320/page/n175/mode/2up?view=theater

"104. தெய்வம் மடையின் தேக்கிலை குவைஇ - தெய்வங்களுக்குச் சேர இட்டுவைத்த பலிபோலே *புழுக்கலையும்*, *வாடூனையும்*  (105) தேக்கிலையிலே குவிக்கையினாலே.

104-5. [நும் பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்:] பதம் நும் பைதீர் கடும்பொடு மிகப் பெறுகுவிர் - அவ்வுணவை நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத்தோடே மிகப் பெறுகுவிர்;”

--------------------

*நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு* (புறம்)

உப்புக்கண்டம்: https://www.youtube.com/watch?v=ihT3Ol0RcZE
உப்புக்கண்டம் = sun-dried meat. உலரூன் என நல்ல தமிழில் சொல்லலாம். உலர்-தல் :: to dry.

சட்டியில் உப்புக்கண்டத்தாலோ, புத்திறைச்சியாலோ, குழம்பு வைக்கலாம்.
https://www.youtube.com/watch?v=aKqeLBJyNkc

சங்க நூல்கள் ‘சூடு’ என்கின்றன. இவற்றை நெய், கறிப்பொடி தாளித்து,
நீர் வார்த்து சட்டியில் அடுதல் வேண்டும், எனவே,சட்டியில் வார்த்து அட்ட சூடு.

இன்னொரு குறிப்பு: வீட்டு முற்றத்தில் பார்வை வலையில் வீழ்ந்துபட்ட மானை, முயலை, பறவையை fresh-ஆக கபாப் (வாடூன்) முரியடுப்பில் (skewer-oven) செய்கிறாள். ரெண்டு மூணு மாசத்துக்கு முன் உலர்ந்துபோன உப்புக்கண்டத்தைப் (கொடிக்கறியை) பயன்படுத்தியதாகவோ, அதை மீண்டும் சமைப்பதாகவோ குறிப்பே இல்லை. கொடிக்கறி என்றால் அதன் வருணனை இரு வரிகளாவது இருந்திருக்கும். மேலும் அரிசி, கொடிக்கறி இரண்டும் கலக்கி நீர் வார்த்துச் சமைத்தாள் என்றும் பாடியிருப்பார். பெரும்பாணாற்றுப்படை ஒரு விஸ்தாரக் கவி, நாலுகவிகளில் ஒன்று. இதில் உப்புக்கண்டம், அரிசியுடன் கலக்கிச் சட்டியில் தாளித்து, நீர்சேர்த்துக் குழம்பு அட்டிருப்பதாகச் சொல்லவில்லை சங்கச் சான்றோர் ருத்ரன் கண்ணன்.

உப்புத் தண்ணீரில் அரிசியைப் புழுக்கிப் புழுக்கல் செய்கிறாள். இரண்டும் அதாவது - kabab with steamed rice -
விருந்து படைக்கிறாள்.

முருகனை அருணகிரியார் நாலுகவிப்பெருமாள் என்கிறார். தொன்று நிகழ்ந்தது அனைத்தும் காட்டிடும் நம் தமிழ்த்தாய் வாழ்க!
NG

N. Ganesan

unread,
Nov 6, 2022, 10:16:13 AM11/6/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Sat, Nov 5, 2022 at 10:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
Sorry Dr.Ganesan; I disagree.
I don't wish to argue with you in this string. Let me explain after my project is over. 
Sk

Thanks for considering. Please start a new thread.
I disagree that there is a pot, and they put jerkey (uppukkaNDam)
& rice in a pot and pour water and cook together in the pot: rice, water, jerkey.

what is in PerumbaaN. is the description of a skewer-owen,
cooking kabab. And, separately wild rice is made. The
hunter folks serve the steamed rice on top of which the kabab is placed.

"vaaraatu aTTa vaaDuun, puzukkal". This is an ummai-t-tokai:
kabab and steamed rice = vaaDuunum, puzukkalum.

NG

சக்திவேலு கந்தசாமி

unread,
Nov 6, 2022, 4:24:17 PM11/6/22
to vall...@googlegroups.com
'Smokeless Chullah" - புகையில்லா அடுப்பு .   விறகு அடுப்பிலிருந்து வெளிவரும் புகை நச்சுக்காற்று பற்றிய பாதிப்பு ஆராயப்பட்டது.  வெப்பச் சக்தி வீணாகமல் தடுக்க அறிவியல் அறிஞர் ஆய்ந்து புதிய அடுப்பின் வடிவமைப்பை உருவாக்கினர்.  இதனால் விறகும், அடுப்படியில் வேலை செய்வோரின் நலம் பாதுகாக்கப்பட்டது.  இதனால் பெருமளவு மரங்கள் வெட்டப்படாமல் தப்பின.  ..

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 7, 2022, 6:51:39 AM11/7/22
to Santhavasantham, sivasub...@sivasubramanian.in
இளம் பனையோலையில் கோட்டை கட்டுவது பற்றிச் சொன்னேன். கொட்டு- வினை கோட்டை ‘குழி’ என்ற சொல் தருமாறு மீதான விளக்கம். சாலை ஓரம் கோட்டையில் நுங்கு வெட்டி வழிப்போக்கருக்கு விற்பனை. கோட்டை என்றால் என்ன எனப் பாருங்கள்: https://youtu.be/jyAPhMv4Wjc

nuGgu_kOTTai.jpg

N. Ganesan

unread,
Nov 7, 2022, 8:06:23 AM11/7/22
to Santhavasantham
சங்கச் சான்றோர்கள் வாடூன் என்னும், தீயில் ஊன் வாட்டலை வினைத்தொகையால் அழைத்தனர். முரி = skewer, முரியடுப்பு = skewer-oven. வசதிபடைத்த வேட்டுவர் தலைவன். இல்லம் பெரிது. முற்றத்தில் நீண்டுயர்ந்த விளா மரங்கள். பார்வை விலங்குகள், பறவைகள் இருக்கும். தேடிவரும் மான், முயல், காடை, கவுதாரி எல்லாம் பிடித்து ரெடியாக இருக்கும் தலைவன் வளமனை. பெரும்பாணாற்றுப் படையில் புலவர்பிரான் ருத்ரன் கண்ணன் வருணனை வாசித்தருளுக. வேடுவச்சி வள்ளி முருகனை மணந்தாள் அல்லவா? [1] அதுபோல, என வைத்துக்கொள்ளலாம். வந்த வறிய பாணர் குழுமத்துக்கு விருந்து படைக்க உத்தரவாகிறது. காட்டுப் புல்லரிசி ஸ்டீம் செய்து, அதன் மேல் வாடூன் (கபாப்) அடுக்கிப் பரிமாறுகின்றனர். புல்லரிசிச் சோறு தயாரிக்க தஜின் பானைகள். தமிழ்நாடெங்கும் மெகாலித்திக் இடங்களில் கிடைக்கும் பானைகள். புழுக்கலுக்கு மிக உதவுவது.

சங்கப் புலவர் கூறும் வாடூன் வாட்டல் என்ற பெயரில் இன்றும் தமிழர்கள் புழங்கி வருகின்றனர்:
(1) கட விரா வாட்டல் < *கடல் வரால் வாடூன்* செய்முறை: https://youtu.be/L8AtYADPKXs
(2) நாக்கு மீன் வாட்டல் < நாக்கு *மீன் வாடூன்* செய்முறை: https://youtu.be/PmgwAaTszc0

அவ்வைப் பாட்டி கூறும் வழுதணங்காய் வாட்டல், குழைந்தை ரசித்துண்கிறது:
வழுதுணங்காய் வாட்டல் (புள்வேளூர் பூதன் அளித்த எளிய உணவு ஔவைக்கு)
https://youtu.be/ExajutO2Nek

நா. கணேசன்

[1] துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இலக்கியக் களஞ்சியம். இன்றைய மயிலம், பேரூர் தமிழ்க் கல்லூரிகள் வீரசைவ மடங்களால் கட்ட அடிக்கோள் நாட்டியவர்களில் சைவ மகாகவி அவர். நகைச்சுவையுடன் பல பாடல்கள் பாடியுள்ளார். பெரும்பாணாற்றுப்படையில் வரும் எயினன் போல, வள்ளிக் குறத்தியின் தகப்பன் போன்றவன், அரசன் ஒருவன் பெண்கேட்டு வந்தபோது சொல்லியது:

பெற்றபிள்ளை கொடுப்பரோ!
------------------------------------------------

விற்றதார் கலை பாதியோடு
          வனத்திலே அழவிட்டதார்
   வெஞ்சிறை புக விட்டதார்
           துகில் உரியவிட்டு விழித்ததார்
உற்றதாரமும் வேண்டும் என்றினி
            மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
   உமியடா! மணமென்ற வாய்கிழித்து
           ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
           வெங்கை மாநகர் வேடர்யாம்
   விமலரானவர் எமையடுத்து இனிது
            எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
           பெண் வளர்ப்பினில் ஈந்தனம்
   பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
           பேய் பிடித்திடு தூதரே!!                            - (திருவெங்கைக் கலம்பகம்: 101)

உரை: https://inithal.blogspot.com/2013/11/blog-post_3.html

kanmani tamil

unread,
Nov 7, 2022, 8:48:12 AM11/7/22
to vallamai
கலித்தொகை "வேனீர் உண்ட குடை" எனப் பேசுகிறது. 

நீங்கள் 'கோட்டை' என்கிறீர்கள். 

நினைவு தெரிந்த நாள் முதல் இதில் தான் பயினி (பதனீர்) குடிக்கிறோம். அதனால் இதன் பேர் 'பயினிப்பட்டை'. இதில் பயினி குடித்தால் கிடைக்கும் சுவையும் மணமும் தனி. 

மொத்தமாக நொங்கு வாங்கினால் இதில் குடலையாகக் கட்டிக் கொடுப்பது இன்றும் வழக்கம் தான். Stylish ஆக இருக்க நினைக்கும் இளசுகளுக்கு இது பிடிக்காது. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 7, 2022, 8:56:30 AM11/7/22
to வல்லமை
On Monday, November 7, 2022 at 7:48:12 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
கலித்தொகை "வேனீர் உண்ட குடை" எனப் பேசுகிறது. 

நீங்கள் 'கோட்டை' என்கிறீர்கள். 

மக்கள் கோட்டையில் விற்கும் நுங்கு:
இளம் பனையோலையில் கோட்டை கட்டுவது பற்றிச் சொன்னேன். கொட்டு- வினை கோட்டை ‘குழி’ என்ற சொல் தருமாறு மீதான விளக்கம். சாலை ஓரம் கோட்டையில் நுங்கு வெட்டி வழிப்போக்கருக்கு விற்பனை. கோட்டை என்றால் என்ன எனப் பாருங்கள்: https://youtu.be/jyAPhMv4Wjc 

N. Ganesan

unread,
Nov 7, 2022, 12:32:01 PM11/7/22
to vall...@googlegroups.com
On Mon, Nov 7, 2022 at 7:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> கலித்தொகை "வேனீர் உண்ட குடை" எனப் பேசுகிறது.
>
> நீங்கள் 'கோட்டை' என்கிறீர்கள்.
>
> நினைவு தெரிந்த நாள் முதல் இதில் தான் பயினி (பதனீர்) குடிக்கிறோம். அதனால் இதன் பேர் 'பயினிப்பட்டை'. இதில் பயினி குடித்தால் கிடைக்கும் சுவையும் மணமும் தனி.
>
> மொத்தமாக நொங்கு வாங்கினால் இதில் குடலையாகக் கட்டிக் கொடுப்பது இன்றும் வழக்கம் தான். Stylish ஆக இருக்க நினைக்கும் இளசுகளுக்கு இது பிடிக்காது.
>
> சக

குடை, குடலை, கோட்டை - மூன்றுமே வெவ்வேறான பொருள்கள் (containers).

(1) கோட்டை: கோட்டையடுப்பு - long trench for large oven to cook food for weddings, festivals. அதுபோல, நீளமான குழியமைத்து நுங்குக்குச் செய்வது கோட்டை. https://youtu.be/jyAPhMv4Wjc

(2) குடலை: இது தென்னை, பலை ஓலைகளைப் பின்னிச் செய்வது. பூக் குடலை போன்றன. குடலை நீர், கள், மோர் போன்றவை வைப்பதற்கு அல்ல.
https://www.youtube.com/watch?v=AotiFZQB-io கரூரில் எறிபத்தர், பூக்குடலை விழா.
https://karurboomi.blogspot.com/2015/10/2_20.html
http://rajiyinkanavugal.blogspot.com/2017/06/blog-post_23.html
(3) வேணீர் உண்ட குடை: இது டம்ளர் போன்றது. தாழையோலை (வின்சுலோ), தேக்கிலை, யா மரத்திலை (சாலம், Shorea trees, ஆச்சா, ...) ... இலைகளைச் சுருட்டி நீர் குடிக்கும் குவளை ஆக்கிப் பயன்படுத்துவது. கோட்டையை விட அளவில் சிறியது குடை. பல வகையான இலை, ஓலைகளில் நீர் ஒழுகாமல் செய்வது.

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர்

தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள்
மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட  குடைக்கு (குடுவைக்கு) ஒப்பானவர்கள்

இங்கே, குடை = குடுவை, குவளை.
குடை செய்வது:
img_20200113_144049-small.jpg
இலைக் குடை எனப்படும். தாழை ஓலையில் இதுபோல் செய்வது ஓலைக் குடை. ...
NG

N. Ganesan

unread,
Nov 7, 2022, 1:10:17 PM11/7/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
> > நினைவு தெரிந்த நாள் முதல் இதில் தான் பயினி (பதனீர்) குடிக்கிறோம். அதனால் இதன் பேர் 'பயினிப்பட்டை'.
> இதில் பயினி குடித்தால் கிடைக்கும் சுவையும் மணமும் தனி

உசிரு >> உயிர்; ஸ்மஸ்ரூ >> மசிரு >> மயிர் (மயிர் நீப்ப வாழாக் கவரிமா); முசுமுசு >> முசலு >> முயல் ... போல
பதநீர் > பதனி > பசனி >> பயினி

N. Ganesan

unread,
Nov 7, 2022, 1:18:01 PM11/7/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
பனையோலைக் கோட்டையைக்  குடையுடன் ஒப்பிட்டு
“இரும்பனங்குடை” என்கிறது புறம்.
  “வெள்ளமலை இரும்பனங்குடை மிசையும்’

அரிசிச் சோற்றை இப்போதைய பிளேட் மாதிரி
கோட்டையைப் பயன்படுத்தி உண்டனர். highly bio-degradable plate.
"irumpanangkuDai" almost looks the definition/description of kOTTai.

N. Ganesan

unread,
Nov 7, 2022, 3:21:19 PM11/7/22
to வல்லமை
On Sunday, November 6, 2022 at 3:24:17 PM UTC-6 vlrsa...@gmail.com wrote:
'Smokeless Chullah" - புகையில்லா அடுப்பு .   விறகு அடுப்பிலிருந்து வெளிவரும் புகை நச்சுக்காற்று பற்றிய பாதிப்பு ஆராயப்பட்டது.  வெப்பச் சக்தி வீணாகமல் தடுக்க அறிவியல் அறிஞர் ஆய்ந்து புதிய அடுப்பின் வடிவமைப்பை உருவாக்கினர்.  இதனால் விறகும், அடுப்படியில் வேலை செய்வோரின் நலம் பாதுகாக்கப்பட்டது.  இதனால் பெருமளவு மரங்கள் வெட்டப்படாமல் தப்பின.  ..

நன்றி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 8, 2022, 6:43:55 AM11/8/22
to Santhavasantham, இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan), மு இளங்கோவன், sivasub...@sivasubramanian.in
Names of three Containers - மூன்று கொள்கலன்களின் தமிழ்ப்பெயர்கள்
------------------------------
------------------------------------------------------------
-------------------------

குடை, குடலை, கோட்டை - மூன்றுமே வெவ்வேறான பொருள்கள் (containers). பெயர்க் காரணம் ஆராய்வோம்.

(1) கோட்டை: கோட்டையடுப்பு - long trench for large oven to cook food for weddings, festivals. அதுபோல, நீளமான குழியமைத்து நுங்குக்குச் செய்வது கோட்டை. கோட்டையில் நுங்கு:  https://youtu.be/jyAPhMv4Wjc

தமிழிலே பனை பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழருக்குத் தொடர்புடைய தாவரம்.  வேளாண்கடவுள் பலராமன் சின்னம் பனை. வேளிர் அதியர் பனம்பூ மாலை அணிவர். கள்ளுக்குடை கையில் வைத்திருப்பவன் வெள்ளை. வெள்ளைச்சாமி = பலராமன் என்ற பெயரே பனங்கள்ளு தருவது தான். 'கருப்பும் வெள்ளையும் கலந்தடிச்சா, கலெக்டர் வந்தா என்னனு கேக்கலாம்’ (கொங்குப்பழமொழி. வெள்ளை = கள்ளு https://youtu.be/E9t_9DW39e0 ; கருப்பு = சாராயம்). பொதியில், பழனி போன்ற பிரதேசங்களை ஆண்ட வேளிர் ஆய் குடியினர் சுரபுன்னை மாலை அணிவர். புன்னை நெய்தல் மரம். பாலை மரத்தை வேறுபடுத்த சுரபுன்னை என்று பெயர் தந்தனர். பழனி, பொதியில் போன்ற குறிஞ்சித்திணை மரம்: சுரபுன்னை. அதியர் என்னும் வேளிர்களில் இருந்து உருவான சேரர்கள் பனம்பூ மாலை அணிவர். வஞ்சி மாநகர் சேரப் பேரரசர்கள் வேளிரில் இருந்து உருவானோர் என்பதனைக் காட்ட சேரர் நாணயங்களில் 2300 ஆண்டு முன்னரே கலப்பை பொறித்து வெளியிட்டுள்ளனர். இம்மரத்தோடு தொடர்புடைய தென்னை திசைக்குப் பெயர் ஆனது. தெலுவு/தென்னை தெளிவு ஆக உள்ள பதநீர். (Cf, தெல்லு/செல்லு >> செல்லரித்தது). சீந்து/ஈந்து சிந்து நதிக்கும், நாகரிகத்திற்கும் பெயர் அளித்துள்ளது. தென்திசை தென்னையால் பெயர் பெறுமாப்போல, வட திசை வட விருக்‌ஷம் என்னும் யால்/ஆல மரத்தால் பெயர்பெற்றது. வேதத்தில் வடமீன், வடமரம் பற்றிய தொடர்புகள் வடக்கு என்ற பெயரை விளக்குகின்றன. வடமீன், வட மரத்து விழுதுகளை நாலாமூலையிலும் கட்டியிருப்பதால் நாலு/நான்கு என்ற எண்ணுப்பெயர் தந்துள்ளனர்: பக். 6, https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5/mode/2up?view=theater

பட்டி நோன்பு (மாட்டுப் பொங்கல்) முடிந்த பின்னர், பொங்கற் பானைகளில் வைத்த சோறு, கோட்டைச் சோறு என பண்ணையாள்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். கோட்டையைப் பட்டைச் சோறு என்று தென் மாவட்டங்களில் தற்போது அழைக்கின்றனர். ஓலைப் பட்டை, வாழைப் பட்டையைப் பார்த்து வைத்த பெயர்.

கொட்டு- என்னும் வினைச்சொல் குழித்தல் என்ற பொருளது. களைக்கொட்டு, ... இதில் இருந்து கோட்டை, கோட்டையடுப்பு போன்ற சொற்கள் பிறந்தன. கோட்டை என்னும் ஒற்றைத் தனிச்சொல்லை விரிவாக விளக்குவது போல் சங்க இலக்கியம் பேசுவதும் உண்டு. கோட்டை என்னும் தனிச்சொல் description/definition தரும் விளக்கங்கள். ஊன் பொதி பசுங்குடை. ஏன் பசுங்குடை? கோட்டையைச் செய்ய இளமையான பனையோலைதான் பயன்படும். ஓலைப்பட்டையில் சாதம். அதனை ‘ஊன்பொதி பசுங்குடை’ என்று உவமையாக்கினார். எனவே, பெயர் தெரியாப் புலவருக்கு ‘ஊன்பொதி பசுங்குடையார்’ என்றே பெயர் அமைந்துவிட்டது. இதேபோல, ’வெள் அமலை இரும்பனங்குடை’ என்றும் கோட்டையை வருணித்தல் உண்டு. அதாவது, பனையோலையின் இருங்குடை = பெரிய குடை. (1) கொண்டலாத்தி =  புல்புல்,  Pycnonotus haemorhous, (2) பெருங்கொண்டலாத்தி =   Hoopoe, Upupa epops என்று பறவைகளுக்குப் பெயர் அமைதற்போல (1) குடை (drinking cup, tumbler) (2) பெருங்குடை (கோட்டை, இப்போது தென்மாவட்டங்களில் ஓலைப்பட்டை).

பெருமாள்முருகன், கொங்கு வட்டாரச் சொல்லகராதி:
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ3lZYy/page/77/mode/2up?view=theater
konku.jpg

(2) குடலை: இது தென்னை, பலை ஓலைகளைப் பின்னிச் செய்வது. பூக் குடலை போன்றன. குடலை நீர், கள், மோர் போன்ற நீர்மம் வைப்பதற்கு அல்ல.
குடர்/குடல் வயிற்றில் பின்னிக் கிடக்கும். குடல் போலப் தென்னை, பனை, ஈங்கு ஓலைகளைப் பின்னிச் செய்வதால் குடலை என்னும் பெயர்.

பனங் குடலை:
eripathanayanar 021.jpg

தென்னங் குடலை: https://youtu.be/zjAp8Udok3Y   செய்முறை.

(3) குடை (drinking cup): இது டம்ளர் போன்றது. தாழையோலை (வின்சுலோ), தேக்கிலை, யா மரத்திலை (சாலம், Shorea trees, ஆச்சா, ...) தாமரை, ஆம்பல் ... இலைகளைச் சுருட்டி நீர் குடிக்கும் குவளை ஆக்கிப் பயன்படுத்துவது. கோட்டையை விட அளவில் மிகச் சிறியது குடை. பல வகையான இலை, ஓலைகளில் நீர் ஒழுகாமல் செய்வது.

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலித்தொகை.

 தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள் மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட  குடைக்கு (drinking cup) ஒப்பானவர்கள். அமெரிக்காவை throw away culture என்பார்கள். ஞெகிழிக்கு மாற்றாக, இந்தப் பழைய குடிகலன் ஆகிய குடை மீண்டும் வந்துகொண்டுள்ளது. highly biodegradable plant based tumblers, cups, eating plates.

img_20200113_144049-small.jpg
இலைக் குடை எனப்படும். தாழை ஓலையில் இதுபோல் செய்வது ஓலைக் குடை. ...
தாமரை, ஆம்பல் போன்ற நீர்த் தாவர இலைகள் பெரிய பரப்பளவு கொண்டவை.
இவற்றிலும் குடை ‘drinking cup' செய்வதுண்டு. ஆம்பல் இலையால்
ஆன குடை பற்றிப் புறநானூறு பேசுகிறது. அரியல் = அரியல் = அரிசிக் கள், sake.
கள்ளைக் குடிக்கும் டம்ளருக்குப் பழந்தமிழில் குடை எனப் பெயர்.
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி - நற் 253/7
தாகம் தணிக்கும் வேள் நீர் அருந்துவதும் இந்தக் குடை என்னும் drinking cup (tumbler).
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் - கலித்தொகை.

அரியல் sake, நறுமணம் கொண்டது. எனவே நறா/நறவு என்ற பெயர். சூடாக்கிக்
குடையில் வைத்து அருந்துவர். எனவே, அடுநறா என்கிறது குறள்.
உழக்குடிகள் ஆம்பல் இலைகொண்டு செய்த குடையில் அரியல் ‘sake, தோப்பி’ குடித்தனர்.

பொய்கை நாரை – storks from the lakes, போர்வில் சேக்கும் – rest on haystacks, நெய்தல் அம் கழனி – beautiful fields with neythal flowers, நெல் அரி தொழுவர் – laborers who reap paddy, கூம்புவிடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல் – closed/pointed buds of white waterlilies have loosened their delicate ties and blossomed, அகல் அடை அரியல் மாந்தி – drink alcohol on its wide leaves, தெண் கடல் – clear ocean, படுதிரை – roaring waves, pounding waves, இன் சீர்ப் பாணி – with sweet rhythm, தூங்கும் – swaying, மென்புல – wet land, வைப்பின் – with towns, நன்னாட்டுப் பொருந – O lord of the fine country, 

குட்- என்னும் தாதுவேர் தருவது. (1) குடி, (2) குடை ஆகும்
குடி ‘to drink, also, drink like spirits, etc.,' tasmac குடி.
குடை = drinking cup, tumbler. made of plant materials, i.e., leaves from pandanus, sal tree, teak tree, water lily, lotus, ... etc.,
எது போல் எனில்:
(1) வல்- ‘இழுத்தல்’ இந்தத் தாதுவேர் தரும் இரு சொற்கள்:

வல்- ==> வலி-த்தல். (தசை) வலிப்பு = வலி.
வலை - மீன் வலை. வலையர்.  ...

(2) புல்- ‘meat, blood, stench, pollution, menstrual blood' etc., ‘இழுத்தல்’ இந்தத் தாதுவேர் தரும் இரு சொற்கள்:

புல்- புலி. சோழர் சின்னம், புலி = meat eating carnivore.
தமிழர் வாழ்க்கையில் 5000 ஆண்டுத் தொடர்பு புலிக்கு உண்டு. விரிவாக, ஆராய்க:

தமிழ்க் கொங்கு: கொற்றவையின் புலி - சிந்துவெளியிலும், சிலப்பதிகாரத்திலும் 

Gharial god and Tiger goddess in the Indus valley,

Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007

https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

புலை- ‘புலவு, புலா’ Pilaf < புலாவு என்னும் புலாச்சோறு. சிந்துவெளியில் இருந்து பாரசீகம் சென்ற தமிழ்/த்ராவிடச் சொல்.
‘கொலையும் புலையும் தவிர்’ - வள்ளுவர், ஔவைப் பாட்டி, வள்ளலார், வாரியார் ....
  
பிற பின்!
NG

kanmani tamil

unread,
Nov 8, 2022, 6:56:41 AM11/8/22
to vallamai
///ஆய் குடியினர் சுரபுன்னை மாலை அணிவர்./// Dr.Ganesan wrote...

சான்றாதாரம்?
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 8, 2022, 6:58:50 AM11/8/22
to vallamai
///அதியர் என்னும் வேளிர்களில் இருந்து உருவான சேரர்கள் பனம்பூ மாலை அணிவர்./// Dr.Ganesan wrote...

அதியன் பனம்பூ மாலை அணிந்து இருந்தான். அவன் வேளாளன் இல்லை; வேந்தன். 
சக 

kanmani tamil

unread,
Nov 8, 2022, 7:00:38 AM11/8/22
to vallamai
///வஞ்சி மாநகர் சேரப் பேரரசர்கள் வேளிரில் இருந்து உருவானோர்/// Dr.Ganesan wrote...

ஆதாரம்???
சக 

N. Ganesan

unread,
Nov 8, 2022, 7:09:11 AM11/8/22
to வல்லமை
On Tuesday, November 8, 2022 at 5:58:50 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
///அதியர் என்னும் வேளிர்களில் இருந்து உருவான சேரர்கள் பனம்பூ மாலை அணிவர்./// Dr.Ganesan wrote...

அதியன் பனம்பூ மாலை அணிந்து இருந்தான். அவன் வேளாளன் இல்லை; வேந்தன். 

அதியர்கள் வேளிர்கள். வேளிர்கள் குலமாலை அணிதல் இல்லை என எழுதியுள்ளீர்.

வேளிர்கள் குலச்சின்ன மாலை அணிதல் உண்டு.

N. Ganesan

unread,
Nov 8, 2022, 7:10:53 AM11/8/22
to வல்லமை
On Tuesday, November 8, 2022 at 6:00:38 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
///வஞ்சி மாநகர் சேரப் பேரரசர்கள் வேளிரில் இருந்து உருவானோர்/// Dr.Ganesan wrote...

ஆதாரம்???
சக

கொடுத்துள்ளேன்.

வேளிர் குடிகளில் இன்றும் குலச்சின்னங்கள் இருக்கின்றன.

kanmani tamil

unread,
Nov 8, 2022, 8:40:10 AM11/8/22
to vallamai
ஆய்மரபினர் சுரபுன்னை மாலை அணிந்ததற்கு ஆதாரம்?

தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். 

முன்பு இருங்கோவேள் அடையாள மாலை அணிந்ததாகச் சொன்னீர்கள். 

எடுத்துக்காட்டவில்லை. 

சக 

N. Ganesan

unread,
Nov 8, 2022, 9:11:09 AM11/8/22
to vall...@googlegroups.com
On Tue, Nov 8, 2022 at 7:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆய்மரபினர் சுரபுன்னை மாலை அணிந்ததற்கு ஆதாரம்?

தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். 

முன்பு இருங்கோவேள் அடையாள மாலை அணிந்ததாகச் சொன்னீர்கள். 

when? can u send my old mail? thx.

N. Ganesan

unread,
Nov 8, 2022, 7:33:12 PM11/8/22
to வல்லமை
On Tuesday, November 8, 2022 at 8:11:09 AM UTC-6 N. Ganesan wrote:
On Tue, Nov 8, 2022 at 7:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆய்மரபினர் சுரபுன்னை மாலை அணிந்ததற்கு ஆதாரம்?

தெரிந்து கொள்ளக் கேட்கிறேன். 

முன்பு இருங்கோவேள் அடையாள மாலை அணிந்ததாகச் சொன்னீர்கள். 

Not really.

N. Ganesan

unread,
Nov 9, 2022, 3:48:32 PM11/9/22
to

இந்தியாவில் 5000 ஆண்டுகளாகக் கோழியைச் சமைத்து உண்கின்றனர். உலகிலேயே கோழிக்கறி முதலில் செய்தது சிந்துவெளியில் தான். கோழியை முரியடுப்பு ஏற்றிச் சமைத்த வாடூன் (கபாப்) படம் ஒன்றுடன், கோழிச் சாப்பாடு இந்தியாவில் என்பது பற்றி வீர சங்வி எழுதிய கட்டுரை சுவையானது:

On Sat, Nov 5, 2022 at 6:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
முரியடுப்பு (skewer-oven) பற்றிய பெரும்பாணாற்றுப்படை வருணனை:

பெரும்பாண் ஆற்றுப்படையில் வாடூன் சமைக்கும் அடுப்பாகிய முரியடுப்பை அருமையாக விளக்கியுள்ளார் கடியலூர் ருத்திரன் கண்ணனார். அவ் வரிகளை இங்கே சற்று ஆராய்வோம். பாரத உபகண்டத்தின் மிகப் பழைய சமையல் முறைகளில் வாடூன் அடுதல் ஒன்றாகும்.

        முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

முர்- என்னும் தாதுவேர் தரும் சொல் முரவு. மேடும் பள்ளமுமாக, (அ) மேலும் கீழுமாக உள்ள விளிம்பு உள்ள குழிசி உள்ள முரியடுப்பில் மான் தசை சமையல் ஆகிறது.

(1) “முது மரத்து உறையும் முரவுவாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்” (அகம் 260)

வயது முதிர்ந்த மரத்தில் இருக்கும், கரடுமுரடாக முழங்கும் வாயினையுடைய பேராந்தை
வேகமாகக் குழறியவாறு ஒலியெழுப்பும் பேய்கள் நடமாடும் நள்ளிரவில்.

இங்கே முதுபுள் - பேராந்தை. Indian horned rock-owl. அதன் முரவுவாய் எழுப்பும் ஒலியானது முரடாக நெடுந்தொலைவு கேட்கும்.

(2) “ மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி”  (அகம் 72).

மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
காய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி.

Look at the outline of the edge of anthills. muravuvaay-p-puRRu will be clear.
https://www.agefotostock.com/age/en/details-photo/ant-hill-in-gir-forest-at-gujarat-india/DPA-IAN-185838
இதே விவரிப்பு கோட்டை மதில்களுக்கும் வரும்.
முரவுவாய்ப் புற்று:
dpa-ian-185838.jpg

(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)

ஞாயில் ñāyil   n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).  
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள், முசலம், ... போன்றன வீசி எறிவர்.
https://www.shutterstock.com/image-photo/lahori-gate-bastion-turret-red-fort-1576918528
https://www.dreamstime.com/royalty-free-stock-images-naldurg-fort-nine-port-bastion-bastions-historical-osmanabad-india-image36196279
https://www.alamy.com/stock-photo-bastion-gate-of-golconda-fort-golkonda-fort-hyderabad-andhra-pradesh-43164863.html

naldurg-fort-nine-port-bastion-bastions-historical-osmanabad-india-36196279.jpg
புற்றின் ஸ்கைலைன் போலவும், முரியடுப்பின் (skewer-oven) முரிகளை (skewer) வைத்து, அவற்றின் மேல் வாடூன் ’kabab' சுடும் கற்களின் விளிம்பு போலவும்
முரவுவாய் ஞாயில் கோட்டைகளில் அமைந்துள்ளன.

(4) முரியடுப்பு. மிக எளிய முறையில், சிறுகுழி தோண்டி, அதன் வாய்விளிம்பில் கற்களைப் பதுக்கி அமைக்கும் skewer-oven,
முரிகளைப் பயன்படுத்தி வாடூன் தசைசுட்டுச் சமைக்க உதவுவது. உலக முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாய், வேடுவர் உணவு சமைக்கப் பயன்படுத்திய பழைய முறை இது.

        முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100

முரி (= skewer) https://en.wikipedia.org/wiki/Skewer
முரி is a technical word for skewer, wooden stick:
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
image.png

முரவுவாய் என்பது கற்களை விளிம்பில் அடுக்குவதால் ஏற்படுவது. விறகு கீழே எரிய, முரிகளில் (skewers) ஊன்துண்டங்களைக் கோர்த்து வாட்டிச்
சமைப்பது வாடூன். இதற்கு எந்த நீர்ப்பதமும் தேவையில்லை. எனவேதான், “வாராது அட்ட வாடூன்” என்கிறார் சங்கச் சான்றோர் ஆகிய புலவர்.
முரியடுப்பு அமைக்கும் எளிய முறை:
Taiwan-Kiln-Cooking-Hole.jpg
குழிசி: இது குழிஇ (= குழித்து) என்னும் வினைச்சொல்லில் இருந்து தோன்றும். அளைஇ, சொரீஇ, குழீஇ (குழுமி), இரீஇ, கடைஇ, சினைஇ, கடைஇ,  குலைஇ, குவைஇ, கொளீஇ, செரீஇ, தடைஇ, தரீஇ, தலைஇ, தழீஇ, துழைஇ,  தொலைஇ, நிலைஇ, நிறீஇ, நினைஇ .... போல, குழிஇ என்னும் பள்ளம் குழித்தல் என்னும் வினை குழிசி என்றாகியுள்ளது. குழிசில்/குழிசி என்பன பெயர்ச் சொற்கள்: வண்டில்/வண்டி, அழிஞ்சில்/அழிஞ்சி, நெருஞ்சில்/நெருஞ்சி, புட்டில்/புட்டி ..., போல. மாகறல் கார்த்திகேயனார், மொழிநூல்).  குழிஇ ஒப்பிட தைஇ/தைஇய “=தைத்து/தய்ச்சு” என்ற வினைச்சொல்லுடன் ஒப்பிடலாம். இது தச்சு என்ற பெயர் ஆகிறது. தச்சன் என்று பல இடங்களில் சங்க இலக்கியம் கூறும். தய்க்க (தைக்க) > தக்‌ஷ என சிந்து சமவெளியில் திராவிடச் சொல் உருமாறிற்று.) அதுபோல், குழிஇ- என்னும் வினை தருவது குழிசி.

வண்டியின் ஆரக் கால்களை இணைக்கும் கும்பம் அச்சில் இருக்கிறது. இதனையும் குழிசி என்பர், ஆரக்காலைக் குழித்த குழியில் பொருத்துவர்.
பிரம்மன், "வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது”

முரியடுப்பில் முரிகளைக் குழிசி விளிம்பில் பொருத்துமாப்போல.

மேலும் கீழுமாக விளிம்புள்ள கற்பதுக்கைகள் குழிசியில் வைத்துச்  செய்யும் முரியடுப்பு என்பதை “முரவுவாய்க் குழிசி முரியடுப்பு” என்கிறது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. இதில் எந்த நீர்மமும் வாராது அடுகிற வாடூன் தயார் செய்கின்றனர் எயிற்றியர்.  கூடவே, புல்லரிசியைப் புழுக்கிய புழுக்கலுடன் விருந்து படைத்தனர். ஔவை தனிப்பாடற்போல, மோரும் இருந்திருக்கும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 26, 2022, 4:10:00 PM11/26/22
to Santhavasantham
WhatsApp Image 2022-11-26 at 3.02.30 PM.jpeg

> இன்றைய தினமணி இதழ் 8-ஆம் பக்கத்தில் என்னுடைய கட்டுரை வெளிவந்துள்ளது.
திரு. கரும்பாயிரம்,

கட்டுரை நன்று.
(1) முதல்சொல்லாக நெல்லறிவோர் என்றுள்ளது. இது நெல்லரிவோர் என்று இருக்கவேண்டும்.
நெல் அரிவோர் அரிவாளால் அரிதல்.

(2) திருமலை முருகன் பள்ளு: ”கோட்டைங்கரனை முனம்வைத்தே”.
விநாயகனை நெல் அறுவடைக்கு முன் வணங்குதலைக் குறிப்பிடும் பாடல்.
ஒரு கோடு (=கொம்பு) அணிந்தவர் கணபதி. அதனைல் கோட்டு ஐங்கரனை முனம் வைத்தே.
சாணியில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபாடு செய்தல்.

(3) கொட்டு- எனும் வினைச்சொல்லில் பிறப்பது கோட்டை.
நுங்கைக் குடிக்கப் பனையோலையில் செய்யும் கோட்டை,
https://groups.google.com/g/santhavasantham/c/dDUdx01Mszs/m/4a8s2EpsAwAJ
https://groups.google.com/g/santhavasantham/c/dDUdx01Mszs/m/2dyRY7M-BAAJ

Reply all
Reply to author
Forward
0 new messages