செம்மொழி நிதி ஒதுக்கீடு சர்ச்சை

16 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 21, 2025, 11:49:03 PM (11 days ago) Nov 21
to வல்லமை, hiru thoazhamai
செம்மொழி நிதி ஒதுக்கீடு சர்ச்சை

அரசியலாளர் பேச்சு எப்போதும் அறிவு கெட்ட பேச்சு தான். மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு தான். இதில் உள்ள நடைமுறை தடை என்ன என்பது ஒருபோதும் சிந்திக்கப்படுவதில்லை.

செம்மொழி தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் தான் தனது ஆண்டு செலவு திட்டம் இவ்வளவு என்று சொல்லி பண்பாட்டு அமைச்சகத்திடம் அதை கேட்டுப் பெறவேண்டும். கேட்டதே 100 கோடி தான் ஒதுக்கீடு 80 கோடி என்றால் அதற்கு மத்திய அரசையோ அல்லது இன்னொரு செம்மொழி அமைப்பையோ குறை கூற தகுதி கிடையாது. தமிழுக்கு மட்டும் 125 கோடி ஆனால் சமஸ்கிருதத்திற்கு 2,000 கோடி ஏன் என்று கேட்க முடியாது. சமசுகிருத ஆய்வு அமைப்பு பல்வேறு செயற் திட்டங்களை திரட்டி அதற்கான செலவு திட்டத்தையும் வாங்கி பண்பாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கையை முன் வைக்கிறது. அந்த செலவுத் திட்டம் 2500 கோடி என்றிருந்தால் 2000 கோடி ஒதுக்கப்படுகிறது. 

இப்படித் தான் தமிழுக்கும் செயல்பட வேண்டும். தமிழுக்கு அப்படி ஒரு ஒதுக்கீடு வேண்டும் என்றால் அதன் இயக்குனர், நிர்வாக குழு, நிதிக் குழு ஆகியன எவ்வெவ் வகையில் செயல்படலாம் என்று உலகம் முழுவதும் அறிஞரிடம் இருந்து கருத்துரையை திரட்டி அதை தமிழ் அறிஞர் மட்டத்தில் பரப்பி அவர்களிடம் இருந்து இட வாடகை, ஊழியர் சம்பளம், நூல், கணினி செலவு உள்ளிட்ட பல செலவுத் திட்டத்தை கோரிப் பெற வேண்டும். இப்படி பலரிடம் இருந்து பெற்ற செலவுத் திட்டத்தை எல்லாம் கூட்டி தனது இந்த ஆண்டின் மொத்த செலவு இத்தனை கோடி, காட்டாக 500 கோடி என்று பண்பாட்டு அமைச்சகத்திடம் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தால் அதை பரிசீலனை செய்து நிதி ஒதுக்கும். கேட்ட நிதியே குறைவு என்றால் ஒதுக்கீடும் குறைவாகத் தானே இருக்கும்!!! அதிக நிதி பெற அதிக செயற் திட்டத்தை (project) உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனம் மத்திய பண்பாட்டு அமைச்சகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் கோரிய நிதி என்ன? பெற்ற நிதி என்ன என்று அறிக்கை வெளியிட்டாலே இந்த காட்டுக் கூச்சலின் உண்மை தெரிந்துவிடும். அதை விடுத்து அடுத்த மொழிக்கு இத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கீடா என்று புலம்புவது நியாயமல்ல. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு முதல் நிதி பெற்ற போது தனக்கு என்று சொந்த கட்டடம் வேண்டும் என்ற செலவுத் திட்டமே இல்லாமல் தரமணியில் கலைஞர் அரசு ஒதுக்கிய இடத்தில் இயங்கியது. பின்பு வந்த  அதிமுக ஆட்சியில் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தை தரமணியில் இருந்து விரட்டிய போது தான் தனக்கு என்று சொந்த கட்டடம் வேண்டும் என்று அந்த மத்திய நிறுவனத்திற்கு புரிந்தது. இப்போது வசதியான சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. இந்த தவறு செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தினுடையது தானே? அப்படித் தான் குறைவான ஆண்டு நிதி ஒதுக்கீடும் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தினுடையதே.

Raju Rajendran

unread,
Nov 22, 2025, 8:02:29 AM (11 days ago) Nov 22
to vall...@googlegroups.com
சம்ஸ்கிருதத்துக்கு எந்த மா நிலம் கோரிக்கை வைத்தது?

<செம்மொழி தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் தான்>

சனி, 22 நவ., 2025, 10:19 AM அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQSbEFg8W1N1WGdmhMcpAOK4xG_fzXnwNgeyhjtWEwvyA%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

seshadri sridharan

unread,
Nov 22, 2025, 6:56:02 PM (10 days ago) Nov 22
to வல்லமை
On Sat, 22 Nov, 2025, 6:32 pm Raju Rajendran, <raju.ra...@gmail.com> wrote:
சம்ஸ்கிருதத்துக்கு எந்த மா நிலம் கோரிக்கை வைத்தது?
<செம்மொழி தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் தான்>


எல்லா செம்மொழி நிறுவனமும் மத்திய அமைப்பு தான் மாநில அமைப்பு அல்ல. அந்தந்த செம்மொழி அமைப்புகள் தாம் கோரிக்கை வைக்க வேண்டும். இதில் மாநிலத்திற்கு தொடர்பு இல்லை



seshadri sridharan

unread,
Nov 22, 2025, 9:44:42 PM (10 days ago) Nov 22
to வல்லமை, hiru thoazhamai
செம்மொழி நிறுவனம் ஒரு மத்திய அரசு நிறுவனம். மாநில அரசு நிறுவனம் அல்ல.

நான் நேரடியாக தொடர்பு கொண்ட ஒரு செம்மொழி நிகழ்வு. பேரா இரா மதிவாணன் மகளார் செம்மொழி நிறுவனத்தில் பணி புரிந்தார். அவரது ஏற்பாட்டின்படி சிந்து எழுத்து, தமிழி எழுத்து, வட்டெழுத்து, சோழர் கால எழுத்துகளை கற்பிக்க 10 நாள் திட்டம் உருவானது. இதற்கு பல்கலைக் கழக மாணவரிடம் இருந்து இசைவு வரவேற்கப்பட்டது. 30 மாணவர்கள் சேந்தனார். இவர்கள் வர, போக செலவு ஏற்பு, தங்கல் செலவு ஏற்பு, 10 நாள் சாப்பாடு செலவு ஏற்பு, இறுதி நாள் ஒரு இடம் சென்று அங்கே நடுகல் கல்வெட்டை நேரடியாக காண்பது. இது போக கற்றுத்தரும் ஆசிரியருக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு 1,500 ரூபாய் சம்பளம். முதல் நாள் சிந்து எழுத்து கற்றுத்தர எனக்கு பிற்பகல் இரண்டு காலப் பிரிவு ஒதுக்கப்பட்டது. அந்த 3 மணி நேர காலத்திற்கு நான் 3,000 சம்பளம் பெற்றேன்.  அது போக எனது போக்குவரத்து செலவாக 1,500 ரூபாய் தரப்பட்டது. இப்படியாக இந்த திட்ட செலவு 50 லட்சம் இருக்கலாம். பயின்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப்படி செம்மொழி தெலுங்கில் கன்னடத்தில் கற்றுக்கொடுக்க முடியும். அதை தாண்டி அம்மொழிகளில் ஆய்வு ஏதுதும் இல்லை. இத்தனைக்கும் அவை உயிருள்ள மக்கள் பேச்சு மொழி. ஆனால் மக்கள் பேச்சு வழக்கற்ற சமசுகிருதத்தில் 3 லட்சம் நூல்கள் ஆண்டுக்கு 300 ஆய்வாளர்கள். இவர்களது ஆய்வு சமசுகிருத்திற்கு மட்டும் அல்ல அதை சார்ந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு வட இந்திய மொழிகளுக்கு பயன் அளிக்கிறது. எனவே செத்த மொழி, உயிர்ப்பு மொழி என்பது ஒரு பித்தலாட்டம். இங்கே உண்மையில் சமசுகிருதம் தான் உயிர்த்த மொழி மற்றவை செத்த மொழிக்கு ஒப்பானவை. அவை செம்மொழியே அல்லன. எது செத்தா மொழி என்பதற்கு இந்த புரிதல் தேவை.

வெறுமனே 10 பெயர்களில் விருதுகளை ஏற்படுத்தி ஆண்டுக்கு 10 பேருக்கு அந்த விருதுகளுடன் 5 லட்சம் கொடுத்தால் செம்மொழி வளர்ந்ததாகுமா? இது தவறு. அதே நேரம் அந்த செம்மொழிக்கு பல ஆண்டுகள் உழைத்த அறிஞருக்கு ஒரு முறை ஊக்கத்தொகை தருவதில் தப்பில்லை.

Reply all
Reply to author
Forward
0 new messages