உணங்கல் ‘salted, dried fish'

70 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 25, 2023, 4:21:47 AM10/25/23
to Santhavasantham
உணங்கல் ‘salted, dried fish'
 ------------------------------
 
 உணங்கல் - கருவாட்டின் பெயராகச் சங்க நூல்களில் பயில்கிறது. உணங்கல் தானியங்கள், இறைச்சி, மீன் இவற்றை வெயிலில் காய வைப்பதற்கு வருவதனால், “மீன் உணங்கல்” எனக் கருவாட்டுப் பெயர் சொல்லப்படுகிறது.
 
 உணங்கல்
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - நற் 331/4
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - அகம் 20/2
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் - அகம் 80/6

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு - குறு 320/1,2

கருக்குதல் -  karukku-
v. tr. Caus. of கருகு-.
1. To burn, scorch, tan, darken by heat;
கருகச்செய்தல்.
2. To toast, fry, parch, boil;
காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84).
3. To burn up, consume;
எரித்தல். அவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33).

கருக்கு- இந்த வினைச்சொல்லின் தொழிற்பெயராய் “கருனை” அமைந்துள்ளது. தீயினால் கருக்குதல் என்பதைத் தெளிவுபடுத்த, “வறைக் கருனை”, வறுக்கும் பொரிக்கறி எனச் சங்க நூல்களில் வரும். இது, உணங்கல் தானியங்கள், இறைச்சி, மீன் இவற்றை வெயிலில்
 காய வைப்பதற்கு வருவதனால், “மீன் உணங்கல்” எனக் கருவாட்டுப் பெயர் சொல்லப்படுவது போல.  “வறைக் கருணை” = அசைவ உணவு.
 
 இன்னொரு “கருனை” சங்க இலக்கியத்தில் உண்டு. கருனைக் கிழங்கு நடுவில் பெரிய கண் கொண்டதாகும். அது கரிய நிறம் உடையது. எனவே, புலியின் கருங்கண்/பசுங்கண் போல, என்பர். கருங்கண்/புலிக்கண்/பசுங்கண் கருனை என வர்ணித்துள்ளனர். இது சைவ உணவு. பாகர் என்பது இன்றைய குழம்பு, ‘தீம்புளிப் பாகர்’. கருங்கண்/புலிக்கண்/பசுங்கண் கருனைக் கிழங்கின் பொரியலைப் “புலிக்கண் வெப்பர்” என ஔவையார் புகழ்ந்துள்ளார். கருங்கண் கருனை பற்றிச் சீவக சிந்தாமணியில் அழகான பாடல் உண்டு.
 
 நா. கணேசன்

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 25, 2023, 2:34:48 PM10/25/23
to santhav...@googlegroups.com
On Wed, Oct 25, 2023 at 8:14 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
உணங்குணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை   என்கிறது பட்டினப்பாலை


ஆம். உணங்குதல் களத்தில், கடற்கரையில், (அ) வாசலில் பரப்பி வெயிலில் காய விடுதல்.
தானியக் கூலம் அவ்வாறு களத்துமேட்டில் உணங்கும்போது கோழிகள் எடுத்துண்ணும். இதனைப் பட்டினப்பாலை  கூறுகிறது.

நெய்தல் மகளிர், மணலில், (அ) தம் இல்ல முன்றிலில் உணங்கும் மீனுணங்கலைப் பறவையினங்களில் இருந்து காப்பர்.
இது தினைப்புனம் காத்த வள்ளி போன்ற ஒரு செயல்.

மீனுணங்கல் என்பது இன்று மக்கள் வழக்கில் கருவாடு. 

கருக்குவதால் வருவது கருனை. “வறைக் கருனை” என சங்க இலக்கியம்
கூறும். இன்னொன்று: கருங்கண் (புலிக்கண்) உள்ள கருனைக்கிழங்கு.

நிமிரல் என்றால் தண்ணியில் ஊறிக் கிடக்கும் பழைய சோறு அன்று. சங்கம், சிந்தாமணி, பெயராய்வு தெளிவாகக் காட்டுகின்றன.
உணங்குதலால் பெறும் பெயர். அணக்குவது அணங்கு. உணக்குவது உணங்கு. -அல் விகுதி ஏற்று உணங்கல் என்று 2000+ ஆண்டு முன் அழைத்தனர்.

மீனுணங்கல் என்ற கருவாடு  செய்யும்போது கருக்குதல் இல்லை. எனவே, கருனை எனச் சங்க காலத்தில் மீனுணங்கலுக்குப் பெயர் இல்லை.
இதனை விளக்க எழுதினேன்.
-
 காய வைப்பதற்கு வருவதனால், “மீன் உணங்கல்” எனக் கருவாட்டுப் பெயர் சொல்லப்படுவது போல.  “வறைக் கருனை” = அசைவ உணவு.

N. Ganesan

unread,
Oct 26, 2023, 1:28:43 AM10/26/23
to santhav...@googlegroups.com
மீனுணங்கல் - ‘salted, dried fish' சுமார் 1500 ஆண்டுகள் தமிழில் புழங்கிய சொல். 16, 17-ம் நூற்றாண்டில் தான் கருவாடு (கறுத்து வாடுதல்) என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில அழகிய இலக்கிய ஆட்சியைப் பார்ப்போம்.

எப்பொழுதுமே கருனை (< (1) கருக்குவது (2)  கருனைக் கிழங்கு)  என்ற வார்த்தையை, உணங்கல் ஆகிய salted, dried fish-க்குத் தமிழர் பயன்படுத்தியதில்லை என்பது தெளிவு. உணங்கல் வேறு, கருனை வேறு எனச் சங்க நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.


 உணங்கல்
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - நற் 331/4
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - அகம் 20/2
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் - அகம் 80/6

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு - குறு 320/1,2

 சிலப்பதிகாரம்: கானல்வரி

கழற்று எதிர்மறை
நிணம் கொள் புலால் *உணங்கல்* நின்று, புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி,  மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல்,  அடையேன் மன்னே.                                            9

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில், மலர் கை ஏந்தி,
விலை *மீன் உணங்கல்* பொருட்டாக வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண் கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவேனேல், அடையேன் மன்னே.                                            10

*புலவு மீன் வெள் உணங்கல்* புள் ஓப்பி, கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர் - அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே!                        13

 https://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=900&subid=900021

   கள்வாய் நீலங் கையி னேந்திப்
   புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
   புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
   வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.
      (உணங்கல் - மீன் வற்றல்.  சிலம்பின் உரை)

மணிமேகலை:
http://tamilconcordance.in/MANI-1B.html#20-40
நரைமையின் திரை தோல் தகை இன்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்        45
*இறவின் உணங்கல்* போன்று வேறாயின
கழுநீர் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்ப பிறழ்ந்து போயின        50
இலவு இதழ் செ வாய் காணாயோ நீ
புலவு புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய *உணங்கல்* போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்        55

கைந்நிலை #54
என்னையர் தந்த *இறவு உணங்கல்* யாம் கடிந்து
புன்னையம் கானல் இருந்தேமா பொய்த்து எம்மை
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு

ஐந்திணை ஐம்பது #47
பெரும் கடல் உள் கலங்க நுண் வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு *மீன்*
*உணங்கல்* புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு

 "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.

ஐந்திணை எழுபது #66
நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் *மீன் உணங்கல்* கவரும் துறைவனை
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி
வண்ணம் தா என்கம் தொடுத்து

கல்லாடம் #67
   ஊடல் நீட வாடி உரைத்தல்
நிரை வளை ஈட்டமும் தரளக் குப்பையும்
அன்னக் குழுவும் குருகு அணி இனமும்
கரும் கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும்
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும்
அலவன் கவைக் கால் அன்ன வெள் அலகும் 5
வாலுகம் பரப்பி வலை வலிது ஒற்றினர்க்கு
ஈது என அறியாது ஒன்றி வெள்ளிடையாம்
மாது உடைக் கழிக்கரைச் சேரி ஓர் பாங்கர்ப்
*புள்ளொடு பிணங்கும் புள் கவராது*
*வெள் இறவு உணங்கல் காவலாக* 10
உலகு உயிர் கவரும் கொடு நிலைக் கூற்றம்

பெரியபுராணம்:

*உணங்கல் மீன்* கவர் உறு நசை குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல்
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும்

https://www.tamilvu.org/slet/l41C7/l41C7aru.jsp?n=3998

தெரிவு:
NG

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2023, 3:35:06 AM10/26/23
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com
கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் 

வியா., 26 அக்., 2023, முற்பகல் 10:58 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcC%2BSrT0dBxNfydZJiAbbyDUV%2B_xTkvr%3DSv4duHLsvYHQ%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Oct 26, 2023, 3:57:00 AM10/26/23
to vallamai
கருனை = பொரிக்கறி / கூட்டு 

மீன் உணங்கல் சோற்றுக்குக் கூட்டாகும் போது அது பசுங்கட் கருனை.
அதைச் சுட்டு உண்டதால் சூடு. 
சக 

N. Ganesan

unread,
Oct 26, 2023, 8:03:18 AM10/26/23
to vall...@googlegroups.com
On Thu, Oct 26, 2023 at 2:35 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் 

N. Ganesan

unread,
Oct 26, 2023, 9:16:53 AM10/26/23
to வல்லமை
On Thursday, October 26, 2023 at 2:57:00 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
கருனை = பொரிக்கறி / கூட்டு 

மீன் உணங்கல் சோற்றுக்குக் கூட்டாகும் போது அது பசுங்கட் கருனை.
அதைச் சுட்டு உண்டதால் சூடு. 
சக 


கருங்கட் கருனை = கருனைக் கிழங்கு. மீனுணங்கல் அன்று.

N. Ganesan

unread,
Oct 29, 2023, 8:45:42 PM10/29/23
to Santhavasantham, George Hart, Dr. Y. Manikandan, stalingun...@gmail.com
On Thu, Oct 26, 2023 at 11:41 PM Shanmuga ananth <ananth....@gmail.com> wrote:
ஐயா,
'உணங்கல்' மற்றும் 'உப்புக் கண்டம்' வேறு வேறா அல்லது ஒன்றா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
அன்புடன்
சண்முகானந்தம்

ஆம், கவிஞரே. பல இடங்களில் உப்புக்கண்டம் என்று உணங்கலை அழைக்கின்றனர். இறந்த எதுவும் கருத்துவிடும், வாடும்: கருவாடு - இச்சொல் மிகப் பிற்காலத்தது. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கக் காலத்தில் பரவியிருக்கிறது. ஆனால், சங்க இலக்கியத்திலும் பின்னரும், உப்புக்கண்டம் மீனுணங்கல், உணங்கல் என்பது வழக்கமாக இருந்துள்ளது. பெரியபுராணத்தில் பார்க்கலாம். இளங்கோ அடிகள் கடற்கரையில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக,  கானல்வரியைப் பாடுகையில் மீனுணங்கல், உணங்கல் என்றுதான் “salted, dried fish" பற்றிப் பாடியுள்ளார். இலக்கியச் சான்றுகள், சுமார் 15 நூற்றாண்டுகளுக்குப் பார்த்தோம்:
https://groups.google.com/g/santhavasantham/c/hKmHEZBztds/m/11856OKkAAAJ

-----------------------------------
இன்னொரு பழைய சொல் கருனை. இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. (அ) கருக்குவதால், அதாவது பொரிப்பதால், கருனை. பொரியல் என இன்று வழங்குகிறோமே, அது தான் கருனை ( = பொரிக்கறி) (ஆ) நிறம்பற்றி வரும் பெயர் கருனை (கிழங்கு). மீனுணங்கலுக்கு என்றும் கருனை என்ற பொருள் இல்லை எனத் தமிழ் நூல்களில் இருந்து தெளிவாய்த் தெரிகின்றது. சங்க நூல்களில் கருனை என்ற சொல்லை ஆராய்ந்துள்ளோம். சங்கம் மருவிய காலத்தில் இருந்து மூன்று மைல்கற்கள் காணலாம்.

(1) உருவம், அதன் பெரும்பூவின் அமைப்பு, நிறம் இவற்றால் கருனைக் கிழங்கின் காரணப்பெயர் அமைந்துள்ளது. எனவே சங்கச் சான்றோர்கள் கருனைக் கிழங்கை வர்ணிக்கும்போது, புலிக்கண் என்று அழைப்பர். கருங்கண் கருனை, பசுங்கண் கருனை, புலிக்கண் வெப்பர் என்றெல்லாம் இந்தக் கருனைக் கிழங்குப் பொரிக்கறியை விளக்கியுள்ளனர். இது பலகாலம் தொடர்ந்துள்ளது எனச் சீவக சிந்தாமணிப் பாடல் தெரிவிக்கிறது. கொங்குச் சமணர் வடமொழிகளைப் பயின்று, பல்வகை விருத்தங்கள் செய்து உருவாக்கிய காப்பியம். தேவர் என்பதால் அரச குலத்தவர் என்பது வெளிச்சம். இந்த மணநூலில் மூழ்கிக் கிடந்தான் சோழச் சக்கரவர்த்தி, இரண்டாம் குலோத்துங்கன். அவனை மாற்ற, முதன்மந்திரி சேக்கிழார் மக்கள் காப்பியமாக, பெரிய புராணம் பாடினார் என்பது வரலாறு. விருத்தத்தின் முதல் அடி முழுவதுமே, கருனைக் கிழங்குத் தாவர வர்ணனை ”புலிக்கண்” தான். 

(a) நிமிரல் சுடுசோறு, (b) கருனைக்கிழங்குப் பொரியல் (= பொரிக்கறி), (c) நிமிரலில் பிசைபடும் குழம்பு (= ஊட்டுறு கறி), இந்தச் சிந்தாமணிப் பாடல் தான் இந்திய இலக்கியங்களிலே கறி = sauce (குழம்பு) என்பதற்கு உரிய சான்று. ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்ற சொல் இது: https://en.wikipedia.org/wiki/Curry (d) மாம்பழம், (e) தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:

            "கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை, முல்லை
            மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு,
            ஊட்டுறு கறி,கொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
            வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி

கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------

சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/

இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

வனமுல்லைப் பூப் போலவும், கொக்கின் நகம் போலவும் உள்ள நீண்ட அரிசிச் சோறு என்கிறது சீவக சிந்தாமணி:

கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே.

   (இ - ள்.) மோட்டு இளமுல்லை முகையின் மொய்கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - உயர்ந்த இளமை பொருந்திய முல்லையரும்பைப் போலத் திரட்சி கொண்ட, கொக்கின் நகம் போன்ற நீண்ட வெண்சோறும்;

வாசமதி போன்ற நெல்வகை சங்க காலத்தில் பயிரிட்டனர் எனத் தெரிகிறது. நீண்ட வெண்சோற்றுக்குக் கொக்குகிரும், காட்டு முல்லையும் ( Jasminum  angustifolium ) உவமை.
 kATTu-mullai.jpg

(2) இனி, கருனை = பொரிக்கறி என்றுதான் 17-ம் நூற்றாண்டுவரை தமிழர் கொண்டாடினர் என இலக்கியச் சான்றுகள் காண்போம். கருனை = கருனைக் கிழங்கு, பொரிக்கறி இவ்விரண்டு பொருள் தவிரப் பழைய  நூல்களில் வேறெந்தப் பொருளும் இல்லை என்பது உறுதியாகிறது.
" முல்லை மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல"
முல்லை மோட்டிள முகையின் மொய். இதனைக் காண,

தமிழிலே இரண்டு சமண சமய நீதி நூல்களைப் பெருமையாய்ச் சொல்வர். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடி, குறள் போன்றவை வேளாண் வேதம். கம்பன் பத்து இடங்களில் மாத்திரம் வெண்ணெய்நல்லூர்ச் சடையனைப் புகழ்வதுபோல், நாலடியாரைத் தொகுத்த சமண முனிவோர் நூலின் நடுநாயகமாக, அதற்குக் காரணமான புரந்தோன் குடியைப் போற்றுவதாய் ஒரு வெண்பா அமைத்துள்ளனர். மகாபாரதத்தில் நடுநாயகமாக பகவத் கீதை உள்ளது. நாலடியார் செய்யுள் உழைப்பின் மேன்மையைப் பாராட்டுகிறது. ஏங்கல்ஸ், மார்க்ஸ் எல்லாம் பிறப்பதற்கு 1000 முன்பே உழைப்பாளிகளின் பெருமையும், சுகஜீவனம் செய்து உழைக்காமல் இருக்கும் செல்வர்களையும் வேறுபடுத்தும் அரிய செய்யுள் இது.

   பெருமுத் தரையர் பெரிதுவந்து  ஈயுங்
   கருனைச்சோறு ஆர்வர் கயவர்; - கருனையைப்
   பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
   நீரும் அமிழ்தாய் விடும்.
   
பெருமுத்தரையர் என்னும் அரசர்கள் அரண்மனைகளிலே பலவிதமாகச் சமைத்த பல்வேறு பொரிக்கறிகளை மாந்தி தண்டச்சோறு என்னும்படி, எந்த உழைப்பும் இல்லாமல் இருந்தால் அவர்கள் மக்கள் வரிப்பணத்தைத் திருடி உண்ணும் கயவர்கள் ஆவார்கள். அரண்மனைகளிலே கிடைக்கும் பொரிக்கறிகளின் (கருனை) பெயர் கூடத் தெரியாத உழக்குடிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள். நீர் = நீராகாரம் என்னும் பழைய சாதம். அப் பழஞ்சோறு, கஞ்சி தான் விலையுயர்ந்த அரண்மனை விருந்துகளை விட உயர்ந்த தேவலோக அமிர்தம் ஆகும்.  

https://tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=32&auth_pub_id=36&pno=169 (75% of the time, Tamil Virtual University site web pages do not work).
200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.

(பொ-ள்.) பெருமுத்தரையர் பெரிது உவந்து ஈயும் கருனைச் சோறு ஆர்வர் கயவர் - முயற்சியில்லாத கீழ் மக்கள், பெருமுத்தரையர் என்பார் மிக மகிழ்ந்து அளிக்குங் கறிகளோடு கூடிய உணவை உண்டு வாழ்நாட் கழிப்பர்; கருனையைப் பேரும் அறியார் நனிவிரும்பும் - கறிகளைப் பேர்தானும் அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற, தாளாண்மை நீரும் - தம் முயற்சியுடைமையாற் கிடைத்த நீருணவும், அமிழ்தாய் விடும் - அவர்க்குத் தேவருணவாக மாறி மெய்யின்பந் தருதல் உறுதி.

(க-து.) தன்முயற்சியால் உண்டானது நீருணவேயாயினும், அஃது அமிழ்த ஆற்றல் உடையதாய் நலம் பயக்கும்.

(வி-ம்.) பெருமுத்தரைய ரென்போர், இச் சிறப்புப் பெயருடன் இச்செய்யுளியற்றிய ஆசிரியர் காலத்தில் ஈகையும் செல்வமும் வாய்ந்து புகழுற்று விளங்கிய ஒருசார் உயர் குடும்பத்தினராவர். "நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவாதார்" என்று இந்நூலில் மேலும் இவரது மாட்சி கூறப்படுகின்றது. பிறர் தரும் சோறு ஆர்வார் கயவர் என்றபடி. இடைவிடாத முயற்சியினால் நல்ல உணவும் உண்பதற்கு நேரம் வாயாதவ ரென்றும் கருமமே கண்ணாயினார் உயர் உணவிற் கருத்திருத்தா ரென்றும் உணர்த்துதற்குக் ‘கருனையைப் பேரும் அறியார்' என்று முயற்சியாளரைக் குறித்தார். அவர் நனி விரும்பும் தாளாண்மை நீரும் என்க. உம்மை : இழிவு சிறப்பு. நீரென்றது புல்லரிசிச் சோற்றில் ஊறிய நீர். விடும் : துணிவுப் பெருளுணர்த்திற்று.

அடுத்த சான்று - கருனை = பொரிக்கறி  - காட்டுதும்:
(3) திருவிளையாடற் புராணம் (17-ம் நூற்றாண்டு).

    முரவை போகிய முருவில்வான் மூரல்பால் வறையல்
    கருனை தீம்பய றடுதுவை பலவகைக் கறிகள்
    விரவு தேம்படு பாறயி ரிழுதுதேன் வெள்ளம்
    வரைவி லாதன மிடாவொடு வாரிவாய் மடுத்தான்.

     (இ - ள்.) முரவை போகிய - வரி நீங்கிய, முரிவு இல் வால் மூரல் -
முரிதலில்லாத வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தையும், பால் வறையல் -
பால் பெய்து அட்டதுவட்டலும், கருனை - பொரிக் கறியும், தீம்பயறு
அடுதுவை பலவகைக் கறிகள் - இனிய பயற்றொடு கலந்து சமைத்த
புளியங்கறியும் ஆகிய பலவகைக் கறிகளையும், விரவு தேம்படு பால் தயிர்
இழுது தேன் வெள்ளம் - பொருந்திய இனிமை பெற்ற பாலும் தயிரும்
நெய்யும் தேனுமாகிய இவற்றின் பெருக்கினையும், வரைவு இலாதன - (மற்றும்)
அளவில்லாத பண்டங்களையும், மிடாவொடு வாரி வாய் மடுத்தான் -
மிடாக்களோடு வாரி வாரி உண்டான் எ - று.

     முரவை - தவிடு நீங்குமுன் அரிசியிலிருக்கும் சிவந்த வரி

"முரவை போகிய முரியா வரிசி"

என்னும் பொருநராற்றுப்படையடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள்
காண்க; அதிலுள்ள
"பால்வறைக் கருனை" என்பதற்கு அவர் "பாலைப்
பொரித்ததனோடே கூட்டிய பொரிக்கறிகள்" என்பர். துவை - இக்காலத்துத்
துவையலென வழங்கும். (14)

A brief note from N. Ganesan:
திருவிளையாடற் புராணத்தில், பரஞ்சோதி முனிவர் பொருநர் ஆற்றுப்படையைப் பின்பற்றுகிறார். அதனாலும், பால், தயிர், நெய் எனப் பின்னர் வருவதனாலும்,  “பால் வறையல் கருனை” என்று  அச்சிட்டுள்ளது   “பரல் வறையல் கருனை”  என்றிருந்தால் சிறக்கும். ஏடு வாசித்தலில் நேர்ந்த பேதம். புராண உரையாசிரியர்  நச்சினார்க்கினியரைப் பார்க்கச் சொல்லியுள்ளார். நச்சரும், பரல் வறைக் கருனை என்பது பற்றியே பேசுகிறார். தமிழ்ச் சொல் பரல், இங்கே காய்கறித் துண்டங்கள். வறையல் இப்போது நாம் சொல்லும் வறுவல். கருனை = கருக்கும்(வறுக்கும்) பொரிக்கறி. பரல் ஆங்கிலத்தில் Pearl என்பதன் மூலம் என்பர் மொழியியலர்:

”115 - 6. பரல் வறை கருனை 3காடியின் மிதப்ப அயின்ற காலை - பரலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக்கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம்பும்படி விழுங்கினகாலத்தே,;

இனி, காடியைப் புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலையென்றுமுரைப்பர்.” (நச்.)

”3 காடி கழுத்தென்பதை, "காடியிழந்து கவந்தமதாய்" (கந்த. சூரபன்மன்வதை. 136) என்பதனானுமுணர்க.” உவேசா.

NG


On Thu, 26 Oct, 2023, 11:31 am Ramamoorthy Ramachandran, <rawmu...@gmail.com> wrote:
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும் செலநின் றீமோ!
என்ற சங்கப்பாடல் படித்திருக்கிறேன்! - புலவர் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcC%2BSrT0dBxNfydZJiAbbyDUV%2B_xTkvr%3DSv4duHLsvYHQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB%3D0VtWk6NUO%2BBsxEOWUeXNHipEdTs0xUppxtZOOE9zQMNH9gw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BJCRY%3DiFkTcY_USv_sG-rGFVR-BNAM0iJjxAB0hoEtp9fFVjA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages