பாடல் சொல்லும் செய்தி

78 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Dec 22, 2025, 8:37:35 PM12/22/25
to vallamai
தொகை இலக்கியப் பாடல்களில் சமூக வரலாற்றுச் செய்திகள் பல நாம் உய்த்து உணரும் வகையில் பொருந்தி இருக்கும். 

பாடலின் கவித்துவமும் கட்டமைப்பும் அழகியல் சார்ந்த கூறுகளாய் நம் மனதைக் கவர்ந்து இழுக்க; அதில் பொதிந்து இருக்கும் சமூகச் செய்தி ஒவ்வொன்றையும் அடையாளம் காணும் முயற்சியாக இது அமைகிறது. 

அகநானூறு: 340
நித்திலக் கோவை
நெய்தல் - தோழி கூற்று 
பகற்குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.

"பல்நாள் எவ்வம் தீரப் பகல் வந்து
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 
செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அன்னஇவள்
நல்எழில் இளநலம் தொலைய ஒல்லென
கழியே ஓதம் மல்கின்று; வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின்திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டுஇமிர் நறுஞ்சாந்து அணிகுவம் திண்திமில்
எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்
கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்புஉடன்
கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத்தூங்கும்
தெண்கடற் பரப்பின்எம் உறைவுஇன் ஊர்க்கே" -நக்கீரர்.

இது பாடல் - இதன் பொருளாவது...

பல நாள் பகலில் வந்து; புன்னை மரப் பொதும்பின் நிழலில் இருந்து; உன் துன்பத்தைப் போக்கிக் கொண்டு; மாலை வந்ததும் தலைவியைப் பிரிய மனமின்றி மையலோடு நோக்கி; வலவன் திறம்பட ஓட்டும் தேரில் ஏறிச்செல்லும் விருப்பத்தை விட்டுவிடு. 

சொல்லித் தீராத புகழையும் பொன் அணிகளையும் உடைய திரையன் ஆளும் பூக்கள் நிறைந்த கானல் சார்ந்த பவத்திரி எனும் ஊர் போன்று அழகும் இளமையும் பொருந்திய இவள் உன் நலனை எண்ணி வாடுகிறாள். 

ஏனெனில் நீ செல்லும் வழியில் உள்ள கழியில் அலை மிகுதியாக உள்ளது; உயிரைக் கொல்லும் பாம்புகளும் பெரிய மீன்களும் உள்ளன. ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய 
பொழுதும் இருட்டுகிறது.
உன் துன்பம் தீர இன்று இங்கு எம் ஊரிலேயே தங்கிச் சென்றால் என்ன?! (உன்னைத் தடுப்பார் யாரும் இல்லை; எல்லோரும் மீன் பிடிக்கச் சென்று விட்டனர்.)

மீன் விற்று வாங்கி வந்த நெல்லரிசி உணவில் 
தயிர் கலந்து உன் குதிரைக்கும் உண்ணத் தருவோம்.

வடவர் தந்த சந்தனக் கல்லில்
குடவர் தந்த சந்தனத்தை அரைத்து உனக்குப் பூசி விடுவோம்.

பாடலில் இடப்பின்புலமாகக் கடற்கரைப் பரதவர் சேரி அமைகிறது. காலப் பின்புலமாக மாலைப் பொழுதும் இனி இருட்டி விடும் என்ற செய்தி அமைகிறது. இரண்டு பின்புலங்களும் முதல் பொருள் ஆகின்றன. 

திண்திமில், தாழைமரம், புன்னை மரத்து நிழல், கிழிந்த பயனற்ற வலை, சுறா வேட்டை ஆடும் பரதவர், அவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தும் கூர்உளி, கழியின் ஓதம், பச்சை மீனுக்குப் பண்டமாற்றாக நெல்லைப் பெறுதல் அனைத்தும் கருப்பொருட்கள் ஆகிப் பின்புலங்களை விளக்குகின்றன.

'வாழ்வதற்கு இனிமையான எங்கள் ஊரில்... திண்மையான திமிலில் ஏறி மாலையில் தொழிலுக்குக் கடல்மேற் செல்லும் பரதவர் தம் வலையில் மாட்டிய கோட்டுச் சுறாவை வேட்டையாடக்; கயிற்றில் கட்டிய கூர்உளியை வீசித் தாக்க; உயிருக்குப் போராடிய சுறாவின் வேகத்தில் வலை கிழிந்து விட; அக்கிழிந்த வலை இனி பரதவர்க்குப் பயன்படாத நிலையில்; முற்றத்துத் தாழை மரத்தில் தொங்கிக் கொண்டு; கடல்காற்றில் ஆடுகிறது.'

காற்றில் ஆடும் கிழிந்த வலை இறைச்சிப் பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. கிழிந்த வலை பரதவர் மீன்பிடிக்கப் பயன்படாது. 
பூக்கேழ் புலம்பன்... (புலத்தை உடையவன் புலம்பன்) 
நிலவுடைமையாளனாய்... (மென்புலம் எனப்படும் நன்செயை உடையவன் ஆதலால் 'பூக்கேழ்' எனும் அடைமொழி) வேளாண்மை செய்யும் தலைவனுக்கும் பரதவர் குலத்தைச் சேர்ந்த தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டமையைக் கிழிந்த வலை என்ற தொடரின் உள்ளுறை உணர்த்துகிறது. 

'நீ கிளம்பிச் சென்று விட்டால் தலைவி உனக்கு வழியில் காத்திருக்கும் ஆபத்துகளை எண்ணித் தாங்க மாட்டாமல் அழுவாள். ஆபத்து பாம்பாகவும் வரலாம்; உயிரை வாங்கும் மீனாகவும் வரலாம். அதனால் இன்று இரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக' என்ற அவளது பேச்சு உரிப்பொருளைத் தெளிவுறுத்துகிறது. 

'எங்கள் ஊரில் தங்கினால் உன் குதிரைக்குக் கூட நாங்கள் நெல்லரிசி மாவுடன் தயிர் கலந்து உண்ணக் கொடுப்போம்' எனும் போது; குறிப்பாகப் பெறும் கருத்தாவது- உன்னை உபசரிப்பதில் எந்த மரியாதைக் குறைவும் நேராது என்பதாக அமைந்து உள்ளது. உயர்ந்த உணவாகக் கருதப்படும் நெல்லரிசி உணவை... நீ வேளாண்மை செய்யும் நெல்லை நாங்கள் பண்டமாற்றாகப் பெறுவதன் மூலம் உன் குதிரைக்கும் கொடுப்போம். 

கிழிந்த வலை பரதவர் தொழிலுக்குப் பயன்படாதது போல்; பூக்கேழ் புலம்பனோடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்து விட்டதால் இனி எந்தப் பரதவனின் வாழ்க்கைக்கும் அவள் பயன்பட மாட்டாள். 

தலைவியை மணந்து கொள் என்று தோழி கேட்கவில்லை. மாறாகப் பணிவிடை செய்கிறோம் என்கிறாள். உன் மார்பில் சந்தனம் பூசுவோம்' என்ற தோழியின் கூற்று முத்தாய்ப்பாக அமைந்து சமூகச் நிலையைக் கோடிட்டுக் காட்டுகிறது.

வேளாளன் பரதவப் பெண்ணை மணந்து கொள்வதில் என்ன சிக்கல்?!
இங்கே தான் சமூகப் பிரிவினை அன்றே காலூன்றி விட்டது என்று தெளிவாகிறது. 

ஒரு காதல் பரத்தை எப்படி உருவாகிறாள் எனப் பாடல் காட்டுகிறது. 

சக 


 




kanmani tamil

unread,
Dec 24, 2025, 7:23:07 AM12/24/25
to vallamai
அகநானூறு- 35
பாடியவர் – அம்மூவனார்
பாலைத் திணை; துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.

"ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள்
வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந்
தார்வ நெஞ்சமொ டாய்நல னளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்
கறியாத் தேஎத் தாற்றிய துணையே."

தன் மகளைப் பிரிந்த தாயின் புலம்பல்... காதலனுடன் சென்றவளைத் தாய் வாழ்த்துகிறாள். 

'பெற்றெடுத்துப் பேணி வளர்த்த என்னையும் நினைக்கவில்லை. 
வானளாவிய மதில்சுவர் கொண்ட எம் மாளிகையில் உள்ள (கூட்டுக் குடும்பத்துச்) சுற்றத்தார் எல்லாரும் புலம்புகின்றனர் (அவர்களையும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை.). 

ஒற்றை மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்புடன் கூடிய கூர்மையான நீண்ட வேலைக் கையில் வைத்துக் கொண்டு  வெட்சிப் போர் புரிந்து ஆனிரைகளைக் கவர்ந்து வரும் மழவரின் சிறு கூட்டம்... தரிசு நிலங்களில் வழிப் போக்கரை வில்லால் வீழ்த்து உண்ணும் வாழ்க்கை கொண்டவராகக்;  கரந்தைப் போர் புரிந்து அவ் ஆநிரைகளை மீட்டுச் செல்லும் மறவர் கூட்டத்தார்... 

வீரமரணம் அடைந்து தெய்வமானோர்க்கு ஈமக்கடன் நிகழ்த்திய இடத்து நடுகல்லுக்கு  மயிற்பீலியைச் சூட்டித் தோப்பிக் கள்ளைப் படைத்து; துடியை முழக்கிச்;  செம்மறிப் பலி கொடுத்து; வழிபாடு நிகழ்த்துவர். 

இப்படிப்பட்ட அச்சுறுத்தும்  மயக்கம் தரும் பாதையும் புலால் நாற்றமும் கொண்டு வழிச் செல்வோர்க்குத் துன்பத்தைக் கொடுக்கும் காட்டு வழியில்... 
இடையூறுகளுக்கு இடையில் என் மகள்... 

அரண்மனையில் முரசு முழங்கும் கோவலூரின் 
மன்னன் காரி. பெரிய தேரை உடையவன். அக் கோவலூர்க்கு அருகில் ஓடுவது பெண்ணை ஆறு (தென்பெண்ணை). அங்குள்ள துறை ‘கொடுங்கால் முன்றுறை’. அந்தத் துறையிலிருக்கும் ஆற்றுமணல் படிவு போல் அழகிய அடர்ந்த கருங்கூந்தலை உடையவள்... தன்னைப் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவள் ஆக்கித்; தான் விரும்பிய அவன் துணையுடன் துணிந்து சென்று விட்டாள். 

அவன் அவளிடம் மிகுந்த அன்பு பாராட்டி; ஆர்வம் குன்றாமல் மீண்டும் மீண்டும் விருப்போடு அவளை அணைத்துத் துயலச் செய்ய வேண்டும். தன் பெண்மை நலமெலாம் தந்து அவள் உறங்குவாளாக.'  
‐-----------------------------------------------------
பெற்று வளர்த்த பாசம் அவள் மனநிறைவோடு வாழ வேண்டும் என ஆசைப்படுகிறது; வாழ்த்துகிறாள். 
தன் மகள் 'பிறளாயினாள்' என்ற தொடரே இங்கு சமூகச் செய்தியைத் தருகிறது. பிற சமூகத்தைச் சேர்ந்த ஆடவனைத் தன் வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொண்டாள். பண்டைத் தமிழகத்திலும் சமூகப் பிரிவினை திருமண உறவில் இடம் பெற்றமைக்கு உரிய சான்று இது. 

மழவர்/ மறவர் இருவரும் வேறு வேறு சமூகப் பிரிவினர். 
இருவரும் வழிப்பறி செய்தனர். இருவரும் ஆநிரை கவர்ந்தனர்.
இருவரும் அரசரிடம் போர் வீரராய்ப் பணி செய்தனர். 
ஆனால் ஆநிரை மீட்கும் பெருமைக்கு உரியவராக மறவர் மட்டுமே பெருமை பெறுகின்றனர்; பேசப் படுகின்றனர். 

உடற்கூறு அடிப்படையிலும் இருவரும் மாறுபட்டவர் எனத் தொகைப்பாடல்கள் காட்டுகின்றன. 

சக 

kanmani tamil

unread,
Dec 25, 2025, 5:13:01 AM12/25/25
to vallamai
புறநானூறு- 192
திணை: பொதுவியல் 
துறை -பொருண்மொழிக் காஞ்சி
இயற்றியவர்: கணியன் பூங்குன்றனார் 

"யாதும் ஊரே; யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
சாதலும் புதுவது அன்றே  வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

'எந்த ஊராயினும் அது அயலூரன்று; நமது ஊரே ! 
மக்கள் அனைவரும் நமது உறவினர்களே; வேண்டாதவர் அல்லர்.
நம் வாழ்வில் எதிர்கொள்ளும் 
தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   
துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்தலும் அதே மாதிரி தான்.  
மனிதன் மடிந்து போவது 
என்றும் நிகழ்வது தான்; அதில் 
புதுமை ஏதும் இல்லை! 
யாம் பூவுலகில் வாழ்தல் இனிமையானது என மகிழ்வதும் இல்லை;   
வெறுப்பால் வாழ்க்கை இனியதன்று எனக் குறை கூறுவதும் இல்லை.  
மின்னலுடன் வானில் இருந்து குளிர்ந்த மழை பெய்து, அந்த நீர் பெருக்கெடுத்து ஓடிக்  
கல்லுடன் மோதி ஒலியெழுப்பி அத்துடன் நில்லாது; செழிப்பையும் வளத்தையும் கொடுத்து வலிமை மிக்க பெரிய ஆறாக ஓகிறது! 
அந்த நீர் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லும் தெப்பத்தைப் போன்று; நம் வாழ்க்கையும் ஊழ் முறைப்படி அமையும் என்பதை முன்னாள் திறம்பட வாழ்ந்தோரைச் சான்றாகக் காட்டித் தெளிவாக அறிகிறோம். 
ஆதலால் மாட்சிமைப்பட்ட பெரியோர் என்று யாரையும் நாம்  வியப்பதும் இல்லை; சிறியோர் என்று யாரையும் 
இகழ்வதும் இல்லை!' 

---‐------------------------------------------------------
மனிதநேயம், உலகளாவிய பொது நோக்கு, இன்பத்தையும் துன்பத்தையும் இயல்பாக ஏற்றல், விதியின் வலிமை, சாவும் வாழ்வும் இயற்கை என்ற சமநிலை, உலகாயத நிகழ்வுகளில் விருப்பு வெறுப்பின்மை என விழுமியங்களின் தொகுப்பாகக் காணப்படும் இப் பாடலில் முத்தாய்ப்பாக அமைவது;
"பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்ற கருத்து தான். 

என்ன சொல்ல வருகிறார் பூங்குன்றனார்?!

'பெரியோர் என யாரையும் வியந்து பார்ப்பதும் இல்லை; அதைக் காட்டிலும் சிறியோர் என யாரையும் இழிவாகப் பார்ப்பதும் இல்லை' என்ற அறிவிப்பில் பொதிந்து இருக்கும் மதிப்பீடு என்ன? எதற்காக இந்த வாக்குமூலம்?
யாருக்காக இந்த அறிக்கையை வெளியிடுகிறார்?

அவர் வாழ்ந்த காலச் சூழலைக் கருத்தில் கொண்டு நம் கேள்விக்கு விடை தேட முயலலாம்.

ஜைன பௌத்தம் ஆகிய சமணம், வைதீகமாகிய சைவ வைணவம் என நான்கு சமயங்களும் மக்களிடையே பரவி இருந்த காலகட்டம். 
நால்வருணம் தமிழகத்திற்குள் நுழைந்து காலை ஊன்றப் போராடிய காலகட்டம் 
இன்றைய போக்குவரத்து வசதிகளும் தங்குமிட வசதிகளும் இல்லாத காலகட்டம். 
போவோர் வருவோர் அனைவர்க்கும் வயிற்றுப் பசி தீர்ப்பதே இல்லறத்தின் பயன் எனும் கொள்கை நிலவிய சமூகம். 
விருந்து வரா நாளே வீணாள் என நினைக்கும் சமுதாய வாழ்க்கை. 
வேளாண்மைச் சமுதாயத்தின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில்... 

அவரது வீட்டிலும் வழிப்போக்கரை விருந்தாக ஏற்று உண்ண வைத்திருப்பார். உண்டவர் அவர் வீட்டுத் திண்ணையில் ஆயாசம் தீர அமர்ந்திருப்பர். உள்ளே சிலர் உண்டு கொண்டு இருக்கத் திண்ணையில் அடுத்த பந்திக்குச் சிலர் காத்திருப்பர். வீட்டுப் பெரிய மனிதர் பூங்குன்றனார் அவர்களோடு அளவளாவிக் கொண்டு இருந்திருப்பார். 
முன்பின் அறிமுகம் இல்லா அக்கூட்டத்தில் வழிச் செல்லும் திணைமாந்தர் ஒருபுறம்...
மூன்றாம் வருணத்தவராகி  உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்ட வணிகர் கூட்டம் ஒருபுறம்...
நான்காம் வருணத்தவராகி வேளாண்மையில் ஈடுபட்டு இருப்பினும்; குடும்பத் தேவைக்காக உறவினர் இல்லம் நோக்கிச் செல்லும் வேளாண் தொழிலாளர் ஒருபுறம்...
(வருணத்தாருள் பார்ப்பாரும் அறிவரும் இன்னொரு பார்ப்பார் வீட்டில் மட்டும் தான் உணவு உண்பர் என்பதற்கு இலக்கியச் சான்று உண்டு. பூங்குன்றனார் வீட்டு முற்றத்தில் அவர்கள் உண்ணக் காத்திருக்க மாட்டார். வேந்தன் தனது சேனை சுற்றத்துடன் வந்து போவானே அன்றித் தனியாக உண்ண வர மாட்டான்.).
இப்படிப் பலதரப்பட்ட மக்கள் குழுமி இருந்த திண்ணையில் திணைமாந்தருள் ஒருவராகிய அவர் 'மனிதருக்குள் உயர்வு தாழ்வு காணும் கொள்கை தன்னிடம் இல்லை' என்பதை அறிவுறுத்தி இருப்பார் எனல் தகும் அல்லவா?!

சோதிடம் அவர் பார்த்த தொழில் என்பது அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் கணியன் என்ற முன்னொட்டு உணர்த்தும் செய்தி.
எனவே தான் இன்பம் / துன்பம்; மகிழ்ச்சி / துக்கம்; நன்மை / தீமை எதற்கும் பிறரைக் காரணம் ஆக்க இயலாது. அது அது விதிப்படி தான் நடக்கிறது... நடக்கும் என்கிறார். 

தன் வீட்டு விருந்தில் உயர்வு தாழ்வு இல்லை எனத் திணைமாந்தர், வணிகர், வேளாளர் அனைவரிடமும் கொள்கை விளக்கம் அளிக்கிறார் பூங்குன்றனார். 

சக 

kanmani tamil

unread,
Dec 26, 2025, 8:05:50 PM12/26/25
to vallamai
புறநானூறு - 335
திணை: வாகை; 
துறை: மூதில் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

"அடல்அருந் துப்பின்...
...குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் 
இல்லை
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு 
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன்என்று
இந்நான்கு அல்லது குடியும் 
இல்லை
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு 
எறிந்து வீழ்ந்தென
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."

'குரவு???, தளவு???, குருந்து (புன எலுமிச்சை), முல்லை  என்னும் நான்கு பூக்களைத் தவிர;  வாழ்வியலில் குறியீடாகும்  பூக்கள் வேறு இல்லை.

கருந்தாள் வரகு, இருங்கதிர்த் தினை,  சிறுகதிர்க் கொள், பொறிகிளர் அவரை என்னும் நான்கு அல்லாது அன்றாடம்  உணவாகும் வேறு பொருள் இல்லை.

துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு இனக் குடிகள் அல்லாது வேறு குடிகள் இல்லை.

போர்க்களம் சென்று பகைவரோடு நேருக்கு நேர் நின்று மோதித் தந்தங்களை உடைய களிற்றை வீழ்த்தி; வீரமரணம் அடைந்தவனுக்கு நடப்பட்ட கல்லை மட்டுமே வழிபட்டோம். அந் நடுகல் வழிபாடு தவிர நெல்லைத் தூவி வழிபடும் பிற வழிபாடு ஏதும் எம்மிடையே இல்லை.' 

----------------------------------------------------------

மூதில் முல்லை என்னும் துறைப் பெயரில் உள்ள 'மூதில்' மூத்த குடிகளைப் பற்றிய பாடல் என்ற செய்தியைத் தாங்கி உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்துச் சூழல் எப்படியெல்லாம் மாறியது என்று தொகுக்கிறார் மாங்குடிகிழார். அதனால் தான் நான்கு பூக்கள், நான்கு பயிர்கள், நான்கு குடியினர், நான்கு உணவுகள் எனத் தொகுத்து உரைக்கிறார் புலவர்  எனத் தோன்றுகிறது. 

வரகு, தினை, கொள், அவரை என்ற நான்குவகைப் பயிர் செழித்த திணைமாந்தரின் புன்செய் வேளாண்மையோடு; நெல்லைப் பயிர்செய்யும் நடைமுறை வருணத்தார் வரவிற்குப் பின்னர் தோன்றியது என்கிறார். நெல்லைப் பயிர் செய்து உண்ணத் தலைப்பட்டதால் தான் வருணத்தார் வருகைக்கு முன்; 
'கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரை' என்ற நான்கு அல்லது வேறு உணவு இல்லை என்கிறார்.

வீரமரணம் அடைந்தோரின் நடுகல்லை வழிபட்ட மூத்த குடியினரின் பண்பாட்டுடன் நெல்லைத் தூவிக் கடவுளை வழிபடும் முறையும் இணைந்தது என்கிறார். 

ஔவை சு.துரைசாமிப்பிள்ளை 'முல்லை நிலத்துச் சிற்றூரில் வாழும் மக்களது வாழ்க்கைக் கூறுகள்' பற்றிய பாடல் எனக் கூறுவதில் பொருள் தெளிவும் பொருத்தமும் இல்லை. ஏனெனில்;
'துடியன் பாணன்பொருநன் கடம்பன் என்று 
இந்நான்கு அல்லது குடியும் இல்லை'
என்ற புலவரின் பட்டியலில் உள்ள துடியரும் பாணரும் பொருநரும் கடம்பரும் முல்லை நிலத்தில் மட்டுமே வாழ்ந்தவர் இல்லை.
அவ்வளவு ஏன்?!
வாகைத்திணையின் பிற துறைகளுள் இடம்பெறும் அரசமுல்லை முல்லை நிலம் தொடர்பானது அன்று. அரசன் முல்லை நிலத்தில் மட்டும் இருப்பவன் இல்லை. 
அதுபோல் தான் பார்ப்பன முல்லைக்கும் முல்லை நிலத்துக்கும் தொடர்பு கிடையாது. வாகைத் திணையுள் அரசமுல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை முதலிய துறைகள் முறையே அரசனின் இயல்பையும்; பார்ப்பானின் இயல்பையும்; கணியனின் இயல்பையும் பாடுவது போல்; மூதில்முல்லை மூத்த குடிகளாகிய தமிழ்மண்ணின் பூர்வ குடிகளின் இயல்பைப் பாடுவதாக அமைந்து உள்ளது. 

நால்வருணத்தார் வருகைக்குப் பின்னர் தமிழகத்து மக்களிடையே நிகழ்ந்த வாழ்க்கைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகளில் வெட்சி முதல் வாகை ஈறாகப் பல அடையாளப் பூக்களின் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. அதனால் தான்;
'அடலருந் துப்பின்……. 
குரவே தளவே குருந்தே முல்லை என்று 
இந்நான்கு அல்லது பூவும் இல்லை' என்கிறார். 

சக 

kanmani tamil

unread,
Dec 29, 2025, 12:27:56 AM12/29/25
to vallamai
புறநானூறு:399
திணை: பாடாண் 
துறை: பரிசில் விடை
பாடியவர்: ஐயூர் முடவனார் 

"அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற்று அரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை                                 
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத் தன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
அழிகளிற் படுநர் களியட வைகின்                                    
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்                     
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்                                        
இசையிற் கொண்டான் நசையமுது உண்கென
மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்துக்                                           
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்                                        
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென இழிதரும் அருவி
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே"

'முழங்கும் நீரையும் தோட்டங்களையும் உடைய காவிரி பாயும் நாட்டுக்கு உரியவனாகிய, அழியாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றேன். அவனது நாட்டில் சமைப்பவள் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுத்த அரிசியைப் புளித்த நீரான் கொதிக்கும் வெண்மையான உலையில் பெய்து ஆக்கிய சோற்றுக்கு; நிழல் செய்யும் உயர்ந்த கிளையில் முற்றிய மாங்கனிகளைப் பிசைந்து அம் மணத்துடன் கூடிய இனிய புளிச்சுவை கூட்டிச் செய்த பெரிய கரிய வரால் மீனின் குழம்போடு;  கொம்புகளையுடைய சுறாமீன் துண்டுகளின் இறைச்சியும் வயலில் விளைந்த வள்ளைக் கீரையும் சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும் பார்ப்பதற்கு ஊழ்த்து அவிழ்ந்த பாதிரி மொட்டுகளை உதிர்த்தாற் போன்ற வடிவம் கொண்ட ???உடன் கூட்ட வேண்டியவற்றைக் கூட்டி... (பாடல் சிதைந்து உள்ளது)

விடியலில் வைக்கோலைப் போராகக் குவிக்கும் உழவர் தாம் உண்ட கள்ளின் களிப்பு நீங்காத நிலையில்; முரிபடாத அரிசிச் சோறு முழுகும் படி நீர் ஊற்றிய மென்மையான பழஞ்சோற்றை உண்பர். 

என் கிணைமகள் நெடிய மூங்கிற் கழித் தூண்டிலால் பிடித்த மீனைப் பண்டமாற்றிக் கிடைத்த பொருளால் சமைத்த  உணவுடன் பாகல் புளிங்கூழைக் கூட்டிக் காலம் தவறி உண்டு மனம் சோர்ந்து ஒருபுறம் இருந்தேன். 

நீ அறவோர்களின் தலைவனாகிய அறவோன் போன்றும்; மறவர்களின் தலைவன் ஆகிய மறவன் போன்றும்; மள்ளர்களின் தலைவன் ஆகிய மள்ளன் போன்றும் கருதத் தக்க தொல்குடியினரின் தலைவன் ஆவாய்.

உதவி வேண்டிப் பிறரிடம் செல்லவும் மாட்டேன்; அவரது முகத்தைக் கூட நோக்கவும் மாட்டேன். 

மிக்க புகழை உடைய சோழன் அளிக்கும் விருந்தை உண்ண விரும்பிச்; செலவைத் தொடங்கி; வலிய கோலை ஊன்றுகோலாக்கிக்; கட்டுக்  குலைந்த கிணையை இறுகக்கட்டி, அதற்குப் பொருத்தமான புதிய போர்வையைப் போர்த்தி; அளவிலா மாலை போன்ற நீண்ட வார்களை ஒலித்து இயக்கிக், கடவுளை வழிபட வேண்டிய நேரத்தில் காலம் கருதி உண்ணாமலே கிளம்பி வந்துள்ளேன். கனத்த தேர் போன்ற வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால்; தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய காளை ஒன்று தான் நான் விரும்பி வந்தது எனக் கூறுவதற்கு முன்பே வானில் பூத்த விண்மீன்கள் போல் அழகிய நிறமுள்ள பல ஆனிரைகளை ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற காளைகளுடன்  ஓசையோடு ஒழுகும் அருவிகளையும் வானளாவ உயர்ந்த உச்சியையும் உடைய தோன்றிமலைக்குத் தலைவனாகிய தாமன் எனும் கோன் அளித்தான்.'
----------------------------------------------------------
அவன் இடையர் தலைவனாக... முல்லை நிலத்துத் தலைமை சான்ற மாந்தனாக இருந்ததால் தான் அவ்வாறு கொடுக்க முடிந்தது.

புறப்பாட்டின் இறுதி அடி அவனைத் ‘தோன்றிக்கோ’ என அழைக்கிறது. புநானூற்றைத் தொகுத்தோர் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்று இயற்பெயரோடு விரித்துச் சுட்டுகின்றனர். ‘கோன்’ என்னும் பின்னொட்டு ‘-ஆர்’ விகுதி சேர்ந்து ‘கோனார்’ ஆகி இன்றும் இடையர் குலத்தவரைக் குறிப்பதுண்டு. 

உ.வே.சாமிநாதையரின் 1923ம் ஆண்டு பதிப்பில் இடம்பெறும் குறிப்பு உழுவித்த வேளாளர் என்னும் வேளிர் பட்டியலைத் தருகிறது. அப்பட்டியலில் தாமானுக்கு அவர் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேந்தனும் வேளிரும் அல்லாத தாமான் முல்லைத்திணை மாந்தர் தலைவன் ஆகிறான். 

தமிழகத்து இடப்பெயர்கள் ஆங்காங்கு பெரிதும் காணப்படும் தாவரங்களை அடியொட்டி அமைவதுண்டு. சான்றாக:
புளியங்குடி - புளியமரங்கள் நிறைந்த பகுதி (தென்காசி மாவட்டம்)
வெற்றிலையூரணி - வெற்றிலைக்கொடி மிகுந்த ஊருணி (விருதுநகர் மாவட்டம்)
ஆலங்குடி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (தஞ்சாவூர் மாவட்டம் )
ஆலமரத்துப்பட்டி- ஆலமரத்தால் பெற்ற பெயர் (விருதுநகர் மாவட்டம்)
இருக்கங்குடி- எருக்கம் புதர்கள் மிகுந்த ஊர்  (விருதுநகர் மாவட்டம்)
கவிரமலை- முள்முருங்கை மரம் நிறைந்த மலை (பொதிகையில்)
பனை விளை- பனைமரங்கள் நிறைந்த ஊர் (நாகர் கோயில் வட்டம்)
வாகைக்குளம்- வாகை மரங்களால் பெற்ற பெயர் (தூத்துக்குடி மாவட்டம்) 
இவை போன்று தோன்றிமரங்கள் மிகுந்த காட்டுப் பகுதியின் தலைவன் தோன்றிக்கோன் ஆனான். 

தாமான் தோன்றிக் கோன் கோடைமலைத் தொடரில் அமைந்து உள்ள  பேரேரியை  (இன்றைய பேரிஜாம் லேக்) ஒட்டிய தோன்றிக் காட்டைச் சேர்ந்தவன். 
தாமான் பேரேரி < பேரிஜாம் லேக்
‘பேரிஜாம்’ என்ற பெயர் ‘தாமான் பேரேரி’ என்பதன் திரிபு ஆகும். ‘பேரேரி > பேரி’ என்னும் மாற்றத்திற்குரிய சான்றாதாரங்கள் மிகுதியாக உள. ‘பேரி’ என்னும் பின்னொட்டைக் கொண்ட  இடப்பெயர்கள் பல.

திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியும், ராஜசிங்கப்பேரியும். 
தென்காசி பாவூர்ச்சத்திரம் அருகில் குறும்பலாப்பேரி 
ஈஞ்சார், அழகாபுரிக்கு அருகில்  கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் அணைக்குத் தெற்கே நச்சடைப்பேரி 

என அனைத்து இடப்பெயர்களையும் ஏரிகளோடு தொடர்புடையனவாகவே கூகுள் வரைபடம் காட்டுகிறது. ‘பேரேரி’ என்னும் சொற்றொடர் பொதுமக்கள் வாய்மொழியில் முயற்சிச்சுருக்கம் காரணமாக 'பெரிய + ஏரி = பேரேரி > பேரி'  என மருவுதல் இயற்கை. தமிழகத்துப் பேரேரிகளின் பெயர்களில் எல்லாம் ‘பேரி’  பின்னொட்டாக  அமைய; ‘பேரிஜாம் லேக்’ என்ற தொடரில் ‘பேரி’ முன்னொட்டாக அமைந்த காரணம் அந்நியராகிய ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட மொழியியல் மாற்றமாகும். ஆங்கிலேயர் கோடை காலத்தில் விரும்பி உறைந்த இடத்தில் ஆங்கில வழக்கு மிகுவது இயற்கையே. வெரே லெவிங் என்ற மதுரை மாவட்ட ஆட்சியாளரின் விருப்பத்திற்குரிய மலைவாசஸ்தலம் ஆகையால் அவர் வாழ்ந்து; பல நற்பணிகளைச் செய்து; மக்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று இருந்ததைக் கொடைக்கானல் வரலாறு கூறுகிறது The Hindu-Madras Miscellany History and Culture- 07.Oct.201- “Levinge Still Remembered” Levinge still remembered - The Hindu). ஆட்சியாளர் போக்கில் மக்களும் ‘லேக்’ என்று அழைக்க; ‘பேரி’ பொருளற்ற முன்னொட்டாக இடம் மாறியுள்ளது.

‘பேரிஜாம்’ என்ற பெயரில் ‘தாமான்’ என்ற பெயரை அடையாளம் காணத் துணை செய்வது; தென்கன்னட மாவட்டத்தில் பண்டு வானவாறு என்ற பெயரில் கடலோடு கலந்து தற்போது ஹோனவார் என மருவி வழங்கும் (சேரவாற்றின் திரிந்த வடிவமாகிய) ஷீராவதியின் போக்கில் வந்து வீழும் ஜோக் அருவி (Jog falls). துளு நாட்டில் அமைந்துள்ள இவ்வருவிப்பகுதி சங்க இலக்கியத்தில்;

'தோகைக்காவின் துளுநாடன்ன' (அகம்.15) 

என்று குறிக்கப்படுகிறது. 'தோகைக்கா > தோக்கா >ஜோக்' என்ற மாற்றம்; ஆங்கிலேய ஆட்சியரின் உச்சரிப்பு இயலாமையால் நிகழ்ந்துள்ளதெனத் தெரிகிறது. இதற்கு ஆங்கிலேயரது மொழிவழக்கின் தன்மையே காரணம் ஆகும். ஆகார ஈறு கெட்டு மொழி முதல் ‘த்>>>ஜ்’ ஆகியுள்ளது. மேற்சுட்டிய மாற்றத்தோடு ஒத்த தன்மை உடையதாக; தாமான் >>> ஜாம் எனும் மாற்றமும் அமைகிறது. ‘ஆன்’ ஈறு கெட்டு மொழிமுதல் ‘த்>>> ஜ்’ ஆகியுள்ளது. இவ்வாறு  ‘பேரிஜாம் ஏரி’ என்ற பெயரில் நாம் தாமான் பேரேரியை மீட்டுருவாக்கம் செய்ய இயல்கிறது. தாமானின் காட்டிற்கு நீராதாரமாக அமைந்த ஏரியாகையால் தாமானின் பெயரால் வழங்கியுள்ளது. தாமானின் தோன்றிக்காடு அருவி வழிந்தோடும் மலை சார்ந்து இருந்தது. அது தோன்றி மரங்கள் நிறைந்தது.

“இழுமென இழிதரும் அருவி / வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே” (மேற்.)

என்கிறார் புலவர். அருவி வழிந்தோடும் வானளவு உயர்ந்த மலையின் சாரலில் இருந்த தோன்றிக்  காட்டின் தலைவன் என்று பொருள் கிடைக்கிறது.

இவ் ஏரி நீரே பண்டு மலையினின்று கிழக்கில் வழிந்தோடி இருக்க வேண்டும். கொடைக்கானல் காட்டிலாகாவின் அனுமதி பெற்ற பின்னரே இவ் ஏரிப்பகுதிக்குச் செல்ல இயலும்.  

தாமனின் தோன்றிக்காட்டை இவ்ஏரியின் சுற்று வட்டாரத்தில் காணமுடிகிறது. கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்றுச் செய்த கள ஆய்வும், கிடைக்கும் நிழற்படங்களும் பேரிஜாம் ஏரிப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. தோன்றி மரம் சிவந்த பூக்களைத் தாங்கி நிற்கும் பருவத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். பூக்கள் உதிர்ந்த பின்னர் மீண்டும் பசுமையான இலைகள் துளிர்க்கும். இதன் தாவரவியல் பெயர் Scarlet sterculia என்பதாகும். பேரிஜாம் ஏரியைச் சுற்றி இருக்கும் உந்துத்தடத்தில் காணக்கிடக்கும் உதிர்ந்த சிவந்த தோன்றிப் பூக்களைக் காட்டுகிறது. https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i74146865-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html

(IJTLLS- தாமான் தோன்றிக்கோன் - முல்லைத்திணை மாந்தர் தலைவன்- 15.7.2020-  International Journal of Tamil Language and Literary Studies – DOAJ- https://doaj.org/article/5f15 2aebc27c4c1da8626b5f9d238adc).

ஐயூர் முடவனார் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் ஆகும். இவ்வூருக்குச் செவ்விலக்கியக் காலத்துத் தொன்மையான ஊர்களான தங்கால் (இன்றைய திருத்தங்கல்), மல்லிபுத்தூர் (மல்லி கிழான் காரியாதியின் ஊர்) ஆகிய இரு  ஊர்களிலிருந்தும் சென்று சேரக்கூடிய பாதைகள் உள்ளன. பேரையூரிலிருந்து செல்லும் தடங்களில் ஒன்று பாண்டியனின் மதுரைக்கு இட்டுச் செல்கிறது; மற்றொன்று பெரியகுளம் என்னும் ஊருக்கு வந்து சேர்கிறது. பெரியகுளம் பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கிலுள்ள தாழ்வரையை அடுத்து உள்ளது (பார்க்க- வரைபடம்- 2).  URL Link. பெரியகுளத்திலிருந்து உறையூர் செல்லவும் பண்டு தொட்டு வழங்கிய தடமும் உள்ளது.
ஐயூர் முடவனார் பேரையூரைச் சேர்ந்த பொருநர். கிணைப்பறை கொட்டுபவர்; கால் ஊனமுற்றவர். 'வன்கோல் மண்ணி'; அதாவது வலிமையான ஊன்றுகோலின் துணையுடன் அவர் தாமனைப் பார்க்கச் செல்கிறார்.  மாட்டு வண்டியில் ஏறிக் கிள்ளி வளவனை நாடிச் சென்ற போது; அவ் வண்டி ஒரு பள்ளத்தில் பதிந்து பகடு வலியிழந்து விட; இவரது போக்கு தடைப்பட்டது.
(தொடரும்)

kanmani tamil

unread,
Dec 29, 2025, 8:55:35 PM12/29/25
to vallamai

கிணைமகள் குளத்து மீனைப் பிடித்து விற்றுப் பாகற்புளிங்கூழ் சமைத்தாள் என்னும் நிகழ்ச்சி இப் புவியியலுக்குப் பொருந்தும். அத்துடன் அருகில் ‘பேரியூர்’ என்ற பெயரில் இன்றும் வழங்கும் சிற்றூர் தாமான் பேரேரியுடன் இவ்வூரைத் தொடர்புறுத்துகிறது. பேரேரி > 'பேரி'யால் நீர்வளம் பெற்ற ஊர் பேரியூர் ஆயிற்று எனலாம்.


தாம் கண்ட ஏடுகளில் ஐயூர் என்பது; திருச்சிக்குக் கிழக்கே உள்ள சிற்றையூர் என்றும், உறையூர் என்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உவே.சாமிநாதையர் சுட்டிக்காட்டியுள்ளார் (புறநானூறு- உ.வே.சாமிநாதையர்- ப.ஆ.- 1923- 2ம் பதிப்பு- கமெர்சியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது- பாடினோர் வரலாறு- ப.23). ஐயூர் முடவனாரின் சொந்த ஊர் உறையூர் எனில் அவர் தன் வாழ்வின் முற்பகுதியில் பாண்டியனைத் தேடி வந்தமைக்குத் தகுந்த காரணமில்லை. அது மட்டுமின்றி; அவரது வல்லாண் முல்லைத் துறையில்  அமைந்த பாடலில் தன் சொந்த வாழ்விடத்து நிகழ்ச்சியைப் பாடுவது போலவே பாடியுள்ளார் (புறம்.314). முல்லைத்திணை சார்ந்த; அதாவது காடு சார்ந்த ஊரில் நிகழ்ந்த போரையே விவரிக்கிறார். அதுவே அவரது சொந்த ஊராகக் கருத இடமுள்ளது. வெற்றி பெற்ற  வீரன் பற்றிப் பாடும் போது;

“புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்” (மேற்.) 

என்பதால் அவர் புன்செய்க் காடு சார்ந்த ஊரினர் என்று தெளிவாகிறது. எனவே காவிரி பாயும் உறையூரைச் சேர்ந்தவர் என்னும் கருத்து வலுவற்றது.


ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியின் சிற்றையூர் என்ற கருத்தை ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையும் எடுத்துக் கூறியுள்ளார் (மேற். ப.468). இக்கருத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் சிற்றையூர் உறையூருக்குத் தெற்கே மிக அருகில் இருப்பது. அகண்ட காவிரிக்கு அருகில்  இருந்த ஊர் புன்செய்க் காடாக இருக்க வாய்ப்பில்லை.


தாமான் தோன்றி மலையின் தலைவன் எனும் கருத்தை உ.வே.சாமிநாதையர் குறித்துச் செல்கிறார் (மேற். பாடப்பட்டோர் வரலாறு- ப.71). இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை  என்பதற்கு குறிப்பிட்ட பாடலிலேயே அகச்சான்று உள்ளது. ஐயூர் முடவனார் கிணைப்பறையைத் திருத்திக் கொண்டு தாமனைக் காணச் சென்ற போது கோலூன்றிச் சென்றதாகவே பாடியுள்ளார். முடவனாகிய அவர் தாமானைக் காண;

“மீப்படர்ந்து இறந்து வன்கோன் மண்ணி” (பா.399) 

மலையில் 7000அடி உயரத்திற்கு ஏறிச் சென்றார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. பெரியகுளத்திலிருந்து பேரியூர்  நடைப்பயண தூரத்தில் இருப்பதாகவே கூகுள் வரைபடமும் காட்டுகிறது. எனவே தாமானின் வாழ்விடம் தாமான் பேரேரி மூலம் நீராதாரம் பெற்ற மலைப்புறத்துத் தோன்றிக்காடு என்று துணியலாம்.


ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தாமான் திண்டுக்கல்லுக்கு 15கல் மேற்கில் உள்ள தாண்டிக்குடியின் தலைவன் என்கிறார் (மேற்.468). இக்கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. ஏனெனில் தாண்டிக்குடி என்ற பெயர் தான்றிமரம் (Terminalia bellerica) என்ற தாவர வகையின் அடிப்படையில் அமைந்த பெயராகும் (தமிழ் விக்கிப்பீடியா- தான்றி- https://ta.wikipedia.org/s/72v). தாண்டிக்குடியில் தொல்லியலார் ஆய்வும்; அங்கிருக்கும் தான்றிமர வளமும் குறித்த  அறிக்கை வெளிவந்து உள்ளது (தமிழி- “வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை”- 02.மே.2015- தமிழி: வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...). தோன்றி மரம் வேறு; தான்றி மரம் வேறு என்பதில்  ஐயமில்லை. ஆதலால் தாமான் தோன்றிக்கோன் தாண்டிக்குடியின் தலைவனாக இருக்க இயலாது.

 

கரூர்க்கு அருகில் உள்ள தாந்தோன்றி மலையைத் தாமானுடன் தொடர்பு படுத்தி ஔவை சு.துரைசாமிப் பிள்ளை பேசுகிறார் (மேற்.); 

தமிழ் விக்கிப்பீடியாவும் அதே கருத்தைச் சொல்கிறது  தோன்றி (மலை) - தமிழ் விக்கிப்பீடியா. இக்கருத்தையும் பாடலின் அகச்சான்று கொண்டே மறுக்க இயல்கிறது. வறுமையில் பசித்துன்பத்திற்கு ஆளான ஐயூர் முடவனார் வளமான விருந்துணவிற்கு ஆசைப்பட்டதை அவரது பாடல் காட்டுகிறது. மாங்காயின் புளிச்சுவை சேர்த்து வைத்த வரால்மீன் குழம்பும், சுறாமீன் துண்டங்களின் பொரியலும், வள்ளைக்கீரைக் கூட்டும், பாகல் கறியும் சேர்ந்த மேன்மை பொருந்தியது என்கிறார். ஆற்று மீனாகிய வரால் மீனின் குழம்பும் கடல்மீனாகிய சுறாப்பொரியலும் ஒருங்கே கிடைக்கும் இடம் புகார்ப் பட்டினமே. ஆற்று வளமும் கடல் வளமும் ஒருசேரப் பல்கிப் பெருகிய புகார் பற்றிப் பட்டினப்பாலையும் (அடி.63-66; 176-177), சிலப்பதிகாரமும் (கானல் வரி- பா.5-9; கடலாடு காதை- அடி.142, 166) விரிவாகப் பேசுகின்றன. ஐயூர் முடவனார் கிழக்குக் கரையில் இருக்கும் புகார் நகருக்குச் செல்ல மேற்கு நோக்கித் தாந்தோன்றி மலை செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே  அறிவாராய்ச்சிக்குப் பொருந்துவதாக அமையும். தாந்தோணி மலை என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் அப்பகுதியில் தோன்றிக் காடு இருந்தமைக்கும் ஆதாரமில்லை.

தாமான் தோன்றிக்கோன் முல்லைநிலத்து இடையர்  தலைவன் ஆவான். தாமானின் தோன்றிக்காடு மலை சார்ந்து இருந்தது; தோன்றி மரங்கள் நிறைந்தது. அக்காடு கொடைக்கானல் மலையிலுள்ள கொடைக்கானல் நகராட்சியின் தெற்கில் காணப்படும் பேரிஜாம் ஏரியைச் சுற்றியும், அதையடுத்த  தாழ்வரையிலும்  இருந்தது. அவனைப் பாடிய ஐயூர் முடவனார் மதுரை மாவட்டத்துப் பேரையூரைச் சேர்ந்தவர் ஆவார்.


இனி சமூகச் செய்திக்கு வருவோம்:

தாமான் தோன்றிக்கோனைப் புகழும் போது அவனை 'அறவர் அறவ; மள்ளர் மள்ள; மறவர் மறவ; தொல்லோர் மருக' எனக் கூறக் காரணம்... அன்றே தமிழ்ச் சமூகம் ஒரு பன்மைச் சமூகமாக இருந்தமையே. மண்ணின் மைந்தர் ஆகிய திணைமாந்தரோடு...

வந்தேறிய அறவர் ஆகிய சமணர் ஜைனத்தையும் பௌத்தத்தையும் பின்பற்றுவோராய்; மூன்றாம் வருணத்தார் ஆகிய வணிகராகவும் நெல் வேளாண்மையில் ஈடுபட்ட நான்காம் வருணத்தைச் சேர்ந்த வேளாளராகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் நிலவுடைமையாளர்கள் குறுநில மன்னராய் ஆண்டனர். பல குழுக்களாக வாழ்ந்த மறவர் வயிற்றுத் தீத் தணிய வழிப்பறியிலும் ஆநிரை கவர்வதிலும் ஈடுபட்டு இருந்தாலும்; ஆநிரை மீட்டுத் தரும் பெருமைக்கு உரிய வீரராய் வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் பணி ஆற்றிய வீரர் ஆவர் (அவர்கள் திணைமாந்தர் ஆகிய மழவரினின்றும் வேறுபட்டவர் என இதே இழையில் முன்னர் கண்டோம்.). மள்ளர் நன்செயில் வேளாண்மைக்குத் துணை நின்று; தமக்கெனத் தனி நாட்டார் வழக்காறுகளோடு வாழ்ந்தனர். இத்தகு பல்வேறு சமூகத்தவர்க்கும் தாமான் தோன்றிக்கோன் தலைவன் ஆகும் தகுதி பெற்றவன் என்று போற்றுகிறார். அந்த அளவிற்கு அவன் எல்லாப் பெருமையும் உடையவன் என்பது கருத்து.

(முற்றும்) சக

Raju Rajendran

unread,
Dec 29, 2025, 11:39:20 PM12/29/25
to vall...@googlegroups.com
<கழியே ஓதம் மல்கின்று>
ஓதம்= Tide

செவ்., 23 டிச., 2025, 7:07 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvkKEpgRNbv1S3TEjfC_-Cqn%2BbJbm8fEXNQfW%3D7WYOpig%40mail.gmail.com.


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Jan 8, 2026, 6:21:11 PMJan 8
to vallamai
புறநானூறு - 391
திணை: பாடாண் திணை
துறை: கடைநிலை
தலைவன்: பொறையாற்றுக்  கிழான் 
பாடியவர்: கல்லாடனார் 

"தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி                         
அரியல் ஆர்கையர் உண்டுஇனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்………             
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்               
துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு
இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய
வேலி ஆயிரம் விளைகநின் வயலே"
  
'வேங்கட மலையெல்லை ஆகிய வடபகுதியில் குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும்.    எருதுகளின் பயன்பாட்டால் நெல்லானது திருமாலை ஒத்த குன்றின் உச்சியைத் தொடும் அளவு உயர்ந்து விளைந்து குவிந்திருக்கும். 
அப் பெருவளத்தை வாழ்த்தித்; திரண்ட ஊன்தடியைத் துண்டுகளாக்கிக் கள்ளோடு உண்டு என்னுடைய பெரிய சுற்றம் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தது.  
ஆனால் அவ் வேங்கட நாடு வறுமையுற; என் சுற்றத்தார்  பழங்குடிகள் அழுந்து பட்டிருந்த (விட்டு நீங்காமல் வாழ்ந்த) இவ் அகன்ற பழமை வாய்ந்த ஊரில் வந்து தங்கினர். 
ஊராரோடு அளவளாவ... (பாடல் சிதைந்து உள்ளது) 

என்னைப் பற்றி அறிந்து கொண்ட ஊர்மக்கள்;
'இவன் முன்பும் பொருள் நாடி இங்கு வந்துள்ளான்; பொருள் இல்லாதவன்; பொருநன்; ஆதலால் இரங்கத் தக்கவன்.’  என உன்னை நன்கு அறிந்த ஊரார் என்னைப் புரிந்து கொண்டு உரைக்க; நான் உன்னைக் காண வந்தேன் பெரும! 
கரிய நீர் மிகுந்த பெரிய கழியில் மீன்களைக் குடைந்து தேடி உண்ணும், செறிந்த சிறகுகளையுடைய புதா (ஒரு வகை நாரை) எனும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னை மரங்களும்  செல்வச் செழிப்பும் உடைய இல்லத்தில்; உன்மீது காதல் கொண்டு உன்னால் விரும்பப்பட்ட உன் மனைவியுடன் நீ இனிதாக உறங்குக. 
வளம் பெருகுவதற்கு ஏற்பத் தகுந்த காலத்தில் தக்க அளவில் மழை பொழிந்து உன் நாட்டில் ஒர் வேலி அளவு நிலத்தில் நாற்பத்தெட்டாயிரம் படி நெல் விளைவதாக.' 

----------------------------------------------------------
1 வேலி = 6.74 ஏக்கர்
1 கலம் = 12 மரக்கால் 
1 மரக்கால் =  4 படி).

குறிப்பிடத் தக்க இரண்டு சமூக வரலாற்றுச் செய்திகள் இப் பாடலில் உள்ளன. 

1. கல்லாடனார் பொறையாற்றுக் கிழானைப் பார்க்கச் சென்ற பொறையாற்றுக் கரையில் இருந்த ஊர் தமிழகத்துப் பூர்வ குடிகள் வாழ்ந்த ஊர்; அதாவது காலம் காலமாக வேறெங்கும் குடி பெயராமல் அதே ஊரில் வாழ்பவர். 'தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர்' என்ற தொடர் தாங்கி நிற்கும் பொருள் இதுவாகும். இந்த வாழ்விடம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வேறு இடம் தேடிச் செல்லும் பண்பு இல்லாத முதுகுடியினர் ஆகிய தொல்குடியினர் வாழும் அகலிடம் உடைய ஊர். 
தமிழகத்துப் பூர்வகுடிகள் யார் என்பதை இதே இழையில் முன்னர்க் கண்டோம் (புறம்.335). பாணர், துடியர், பறையர், கடம்பர் என மாங்குடிகிழார் வகைப்படுத்திப் பேசினார். அவ்வாறு விதந்து பேசக் காரணம்... அன்றைய தமிழகத்தில் வந்தேறிகளாகப் பலர் வாழ்ந்தனர் (நான்கு வருணத்தாருள் அடங்குவோர் ஆகிய வேளாளர் என்ற வேளிர், வணிகர் என்ற வைசியர், வைதீகர் என்ற பார்ப்பனர்& வேந்தர்) என்பது சொல்லாமல் விளங்கும் குறிப்புப் பொருள் ஆகும். 

2. கல்லாடனார் பற்றி அறிந்த ஊர்மக்கள்; அவர் ஏற்கெனவே முன்னரும் பொறையாற்றுக் கிழானை நாடி வந்திருப்பினும்; வறுமையில் வாடும் இரங்கத் தக்க பொருநன் என அவரைக் குறித்துப் பேசி; மீண்டும் பரிசில் பெறத் தகுதி வாய்ந்தவன் என்பதற்கு; அவன் சார்ந்த சமூகத்தை வெளிப்படையாகக் கூறித் தம் தலைவனிடம் செல்ல விடுத்தமை... பண்டைத் தமிழகத்தில் சமூகப் பிரிவினை இருந்ததைக் காட்டுகிறது. பொருநர் என்போர் கிணைப்பறை கொட்டுவோர். திணைமாந்தர் இடையே சாதிப் பாகுபாடு அழுத்தமாக நிலவியமைக்கு இப்பாடல் சான்றாகிறது. 

சக 



kanmani tamil

unread,
Jan 9, 2026, 11:36:46 PMJan 9
to vallamai
புறநானூறு- 32

திணை: பாடாண்
துறை: இயன்மொழி
சோழன் நலங்கிள்ளியைக் 
கோவூர் கிழார் பாடியது.

"கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே"

நாம் தொன்று தொட்டு இம் மண்ணில் வாழ்பவர் ஆதலால்; அந்த உரிமையை எண்ணிப் பார்த்து;... 
நம் சுற்றத்தினர் சமைக்கும் கலங்கள் நிறைந்து வழியும்படி; நெடிய கொடியில் பூக்காத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரைத் தரும் திறன் உடையவன் சோழன் நலங்கிள்ளி ஆவான். 
அது மட்டும் அன்று. 
வண்ணக் கலவை பூசி வணங்கும் முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியும் உடைய விறலியர்க்குப் பூவிலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தரக் கூடிய தகுதி உடையவன் ஆவான். 
இரந்து பெறும் பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். 
தொழில் நுட்ப அறிவுடன் செயல் திறன் மிக்க குயவர் குலச் சிறுவர் மட்பாண்டம் செய்யும் சக்கரத்தில் வைத்த பெரிய பச்சைமண் உருண்டை அவரது கருத்துக்கு ஏற்ப வடிவம் பெறுவது போல்; சோழன் நலங்கிள்ளியின் ஆணைக்கு ஏற்ப இந் நீர்வளம் மிகு‌ந்த நாட்டின் உடைமை அமைந்து விளங்கும்.
--------------------‐-------------------------------------
சேரன் தலைநகர் வஞ்சியையும் பாண்டியன் தலைநகர் மதுரையையும் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறுவதால்; இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் அவ் இரு தலைநகர்களின் வேந்தர்களும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் அடங்கியவர் என அறிகிறோம்.

சமூகச் செய்திகள்:

'தொன்னிலக் கிழமை சுட்டின்' என்ற தொடர் ஆழமான பொருள் உடையதாகத் தோன்றுகிறது. மாங்குடி கிழாரின் புறம்.335ம் பாடல் இங்கு பொருத்திப் பார்க்கக் கூடியது.
கிழமை = உரிமை / உடைமை 
'தொன்'மை எனும் அடைமொழி 'நிலக்கிழமை' எனும் சொற்றொடர்க்கு உரியது. நிலவுடைமையாளர் எனும் தகுதி தமிழகத்துப் பூர்வ குடியினர்க்கு இருந்து; பின்னர் மாறிய வரலாறே இங்கு வெளிப்படையாகப் பேசப்பட்டு உள்ளது. அதாவது பாணர், பொருநர், துடியர்,  கடம்பர் ஆகியோரது உரிமையாக இம் மண் இருந்தமையை நினைத்துப் பார்த்தால்; சேரன் தலைநகரையும் பாண்டியன் தலைநகரையும் சோழன் நமக்குப் பரிசிலாகத் தருவான் (நாமும் மண்ணில் வேளாண்மை செய்யலாம்.  நமது உணவுப் பாத்திரங்கள் நிரம்பி வழியும். நாம் பசியாறி வளமாக வாழலாம் என்பது கருத்து.).

சக 

kanmani tamil

unread,
Jan 11, 2026, 8:12:40 PMJan 11
to vallamai
புறநானூறு- 154
கொண்கானக் கிழானை மோசிகீரனார் பாடியது
திணை: பாடாண் 
துறை: பரிசில் துறை.

"திரைபொரு முந்நீர்க் 
கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை  நீக்கும்
சில்நீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழையராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்                 
யானும் பெற்றது ஊதியம் பேறுயாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி 
வந்தனனே
ஈஎன இரத்தலோ அரிதே நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்  
தூவிரி கடுப்பத் துவன்றி 
மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்  எனக்கு எளிதே"

'சிறந்த போராளியாகப் பெரும் படைகளை எதிர்த்து நின்று பகைவரின் தாக்குதலுக்குப் புறமுதுகு காட்டாத ஆண்மைச் சிறப்பு உடைய கொண்கானக் கிழானே! அலை வீசுகின்ற கடலின் கரை அருகே இருக்கும் போதும்; தாகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க; அருகில் தாமறிந்த பிறரது துணையை நாடிச் சிறிதளவு குடிநீரை மக்கள் வேண்டுவர். 
அதுபோல அரசர் அருகில் இருந்தாலும் புலவோர் வள்ளன்மை உடையோரையே நாடுவர். நானும் அப்படித்தான் உன்னை வேண்டி நிற்கிறேன்.
'ஈ' என்று இருந்து நிற்பது மிகவும் அரிதான செயல் ஆகும். நீ எனக்குக் 
கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும்; அப் பொருளின் அளவும் பெறுமதியும் பற்றி நான் ஏதும் கருத்து உரைப்பவன் அல்லன். 
மிக உயர்ந்த மலையில் இருந்து பலவிடங்களில் வெள்ளைத் துணி போல் தோன்றும் அருவி வழிந்து ஒழுகும் உன் கொண்கானத்தைப் புகழ்ந்து பாடுவது எனக்கு எளிதான செயல் ஆகும்.'

----------------------------------------------------------

சமூகச் செய்திகள்:
கொண்கானக் கிழான் திணைமாந்தருள் உழவர் தலைவன்- தமிழ் மண்ணின் பூர்வ குடியினன் ஆவான். புன்செய் வேளாண்மை அவனது பாரம்பரியம் ஆகும். அவன் வாழ்ந்த பகுதி கொள் விளையும் கானம் ஆகையால் கொண்கானம் என அழைக்கப்பட்டது. மிகுதியாகக் கொள் விளைவதால் பெயர் பெற்ற காட்டுப் பகுதி. கொள் ஒரு புன்செய்ப் பயிர். அது விளைய மிகுந்த நீர் தேவை இல்லை. பேரருவி ஏதும் இன்றிக் கொண்கானத்து மலையில் இருந்து வழியும் நீரே அவ் வேளாண்மைக்குப் போதுமானது. 

குறுநில மன்னரோடு ஒப்ப வைத்து எண்ணத் தக்க புகழ் பெற்ற திணை மாந்தருள் கொண்கானக் கிழானும் ஒருவன் ஆகிறான். தன் அரசனுக்காகப் பல போர்களில் பங்கேற்று வெற்றி தேடித் தந்தவன். அவன் வாழ்ந்த கொண்கானத்தை ஒட்டி இருப்பது நவிரமலை. அம் மலையின் அரசர் நன்னன் மரபினர். நன்னன் தனது தோட்டத்து மாமரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த மாங்காயைத் தின்ற கோசர் குலப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்துப் 'பெண்கொலை புரிந்தவன்' எனத் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவன்.  எப்படிக் கடலுக்குள் அளப்பரிய செல்வம் பொதிந்து உள்ளதோ அது போல் நன்னனின் செல்வம் அளப்பரிது. ஆனாலும் அவனிடத்துச் செல்லவோ; இரந்து நிற்கவோ விரும்பாத மோசி கீரனார் கொண்கானக் கிழானிடம் 'நீ எதைக் கொடுத்தாலும்; எவ்வளவு கொடுத்தாலும்; கொடுக்காமலே விட்டாலும்; உன் கொண்கானத்தை நான் பாடுவேன்; அது எனக்கு எளிது' என்கிறார். 
"நின் கொண்பெருங் கானம்" என்ற  தொடரில் உள்ள 'நின்' அழுத்தமாக இங்கு சமூக வரலாற்றைத் தெள்ளென விளக்கி நிற்கிறது. உழவர் தலைவன் ஆகிய கிழானின் மண்ணுரிமையை உரக்கச் சொல்லும் சொல் 'நின்' ஆகும். உனது காட்டை ஒட்டிய மலையின் அரசன் உன்னைப் போல் மண்ணின் மைந்தன் அல்லன் என்று கோடி காட்டிப் பாடுகிறார் மோசிகீரனார். 

புறப்பாடலிலும் படிமம் அமையப் பாடிய 'சொல் வல்லர்' மோசி கீரனார். இப்பாடலில் கடலும் அதன் செல்வமும்;  நன்னன், அவனது செல்வம் என நம் மனதில் பதிகிறது. 

சக 
 

kanmani tamil

unread,
Jan 16, 2026, 7:58:07 PMJan 16
to vallamai
நற்றிணை-60

"மலை கண்டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண்புலர்விடியல்
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் 
பெருஞ்சோறு  
கவர்படு கையை கழும மாந்தி
நீர்உறு செறுவின் நாறுமுடி 
அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளை கூட்டும் அணியுமார்அவையே"

பாடியவர் : தூங்கலோரியார் (தொங்கும் பரட்டை முடியைக் கொண்டவர் என்பது பொருள்)

து.வி.: தலைவன் சிறைப்புறமாக நிற்பதறிந்த தோழி, அவனுக்குத் தலைவியின் இற்செறிப்பை உணர்த்தக் கருதி உழவர்க்கு அறிவுறுத்துவது போல் குறிப்பாகச் சொல்கிறாள்.

'எருமைச் செல்வம் உடைய உழவனே! இரவு முழுவதும் நாற்று நடும் முனைப்போடு சரியான தூக்கம் இல்லாமல்; விடியுமுன்னர்...
கை விரல்களைக்  கவர்த்த நிலையில் விரித்துத் தீட்டாத நெல்லரிசிச் சோற்றை நீராகாரம் வழியும்படியாக அரித்து அள்ளிக்; கருங்கண்கள் உடைய பருத்த வரால் மீன் துண்டுகள் போட்ட மீனாணத்தை மிளிர்வையாக ஊற்றி வயிறார உண்ட பின்னர்... 
மனைவியரோடு கிளம்பி; நெல் சேமிப்புக் கூடுகள் பல மலை முகடுகள் போல் காட்சி அளிக்கும் பணியிடம் சேர்ந்து; நீர் நிறைந்த நாற்றங்காலில் நாற்றுமுடியினை அழுந்த ஊன்றும் நடவு வேலையைத் தொடங்கி விட்டாய். வரப்பில் பூத்துக்கிடக்கும் மணம் பொருந்திய கோரை ஆகிய சாய், நெய்தல் முதலியவற்றை அழித்து விடாதே; அவை எம் இல்லத்தில் இருக்கும் தலைவிக்குக் கைவளையாகவும்; கருத்த நீண்ட கூந்தலில் சூடவும்; தழையாடை புனைந்து அணிந்து கொள்ளவும் உதவும்.'

உழவன் வாழ்க்கையை நன்கு துய்க்கிறான். தனது பெண்டிர் சமைத்த புகர்வை அரிசிப் பொம்மலும் வரால் மீன் மிளிர்வையும் அவனது வயிற்றுப் பசியை ஆற்றுவதும்; அவன் நாற்று முடியை அழுந்த நடவு செய்கிறான் எனும் செயலின் புனைவும் (இறைச்சி)  அவனது இல்லறச் சிறப்பைக் காட்டும் நிகழ்வுகள் ஆகின்றன.

உழவனைத் தான் 'எருமை உழவ' என்று அழைக்கிறாள் எனினும்; அது தலைவனை  'இன்னும் இப்படித் தலைவியை மணந்து கொள்ளாமல் மந்தமாக இருக்கிறாயே?! மந்தமான எருமையைச் செல்வமாக உடைய உழவனைப் பார்; அவன் உலகாயத இன்பத்தை எப்படித் துய்க்கிறான்' என அங்கதக்  குறிப்பு தோன்றும் பொருளோடு சொல்வதாக அமைகிறது. எனவே 'விரைவில் மணந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடு; இற்செறிக்கப்பட்ட அவளால் உன்னை வந்து சந்திக்க இயலாது' என்பதைப் புரிய வைக்கிறாள். 
---------------------‐------------------------------------
சமூகச் செய்திகள்:
1) முந்தைய நாள் பொங்கி வடித்துப் பின் நீரில் ஊறிப் பொருமிப் பெருத்த சோறே பொம்மல் ஆகும். வரால் மீன் குழம்பைச் சொட்டாணமாக்கிக் கொண்டு உண்ணும் முறை ஈராயிரம் ஆண்டுக் காலப் பாரம்பரியம் மிக்கது என்பது இப்பாடலில் இடம் பெறும் சமூகச் செய்தி. 


பொம்மலும் மிளிர்வையும் (சொட்டாணம்)

2) உழவனைத் தூங்கலோரியார் 'எருமை உழவ' என விதந்து அழைக்கும் முறை தமிழகத்துப் பன்மைச் சமுதாயத்தின் வேறுபட்ட பிரிவினைகளைக் காட்டுவதாக அமைந்து உள்ளது. அரசாட்சி செய்த வேந்தரும் குறுநில மன்னரும் (வேளாளர்) ஆநிரையைச் செல்வமாகக் கொண்டவராகவே பாடல் பெற்றுள்ளனர். வேதியராகிய பார்ப்பாரும் பசுவைச் செல்வமாகப் பெற்று வளர்ப்பவராகத் தான் சித்தரிக்கப் பெற்றுள்ளனர். திணைமாந்தராகிய ஆயருள் 'நல்லினத்து ஆயர்' எனும் பசு மேய்ப்போர் உயர்ந்தவராகவும் 'புல்லினத்து ஆயர்' எனும் ஆடுகளை மேய்ப்போர் அவரைக் காட்டிலும் தாழ்ந்தவராகவும் பேசப் பெற்றுள்ளனர் (முல்லைக்கலி). இவர்கட்கு இடையே 'கோட்டினத்து ஆயர்' எனும் எருமை மேய்ப்போரும் ஒரு தனிப் பிரிவினர் ஆகக் காட்டப்படுகின்றனர். இப்பிரிவினை பொருளாதாரம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது எனினும்; உழவன் எருமைச் செல்வம் காரணமாக; வேந்தர் முதல் வேளாளர் வரையிலான நால்வருணத்தாரிடம் இருந்து மாறுபட்டுத் திணைமாந்தருள் அடங்கியவன் எனத் தெரிகிறது.

சக 

kanmani tamil

unread,
Feb 28, 2026, 10:08:25 PM (11 days ago) Feb 28
to vallamai
"இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரில் செம்மலும் உடைத்தே" (நற்றிணை-45)

பொருள்:
தலைவனே! நீ விரும்பும் இவள் கானற்சோலையிடத்துப் பொருந்திய அழகிய சிறு குடியைச் சேர்ந்தவள். நீலநிறப் பெருங்கடல் கலங்குமாறு; அதன் உட்புகுந்து சென்று மீன்களைப் பிடித்துவரும் பரதவர் மகள் ஆவாள். நீயோ நெடிய கொடி அசைந்தாடும் நியம மூதூரில் வேகம் மிகுந்த செலவினைக் கொண்ட தேரை உடைய செல்வந்தனது அன்பிற்குரிய மகன் ஆவாய். யாம் நிணம் மிகுந்த சுறாமீனை அறுத்துப் பெற்ற தசைகளைப் பதப்படுத்திக்; காய வைக்குங்கால் அவற்றைக் கவர வரும் புள்ளினங்களை ஓட்டுபவராக உள்ளேம். இது எமக்கு நலம் பயக்கக் கூடிய உறவு ஆகுமா? யாம் புலவு நாற்றத்தை உடையேம்; அதனால் சற்றுத் தள்ளி நின்றே பேசுக. பெருநீரான கடல் விளை பொருட்களை ஆதாரமாகக் கொண்டு வாழும் எமது எளிய வாழ்க்கை முறை நும்மோடு பொருந்தக் கூடியது அன்று. மேலும் எங்கள் பரதவர் குலத்துள் யாம் மணக்கத் தகுந்த தலைமைத் தன்மை உடையோரும் உளர்.

குறிப்பாக உணர்த்துவன:
கடல் கலங்க உள்புக்கு மீன் வேட்டை ஆடும் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர் யாம் ஆதலின்; அவரது கண்ணில் பட்டால் உனக்குப் பெரிதும் ஏதம் ஆகும். உன்னைச் சும்மா விட மாட்டார்கள்; உண்டு / இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆதலின் 'அகன்று போய் விடு' என்கிறாள்.

மீன்களைக் கருவாடாக்க அவற்றைக் காய வைக்கிறோம்; கொத்த வரும் பறவைகளை விரட்டுகிறோம்.  எம்மை நெருங்கின் உன்னையும் அப்படியே விரட்டுவோம் என்பது சொல்லாமல் சொல்லும் கடிந்துரை ஆகும்.

'புலவு நாறுதும்' என்றது; மீன் நாற்றம் வீசும் தம் நிலையோடு 
அவனுடைய செல்வச் செழிப்பு மிகுந்த நறுஞ்சாந்து அணிந்த மார்பை ஒப்பிடுவது என உய்த்து உணர முடிகிறது. 

இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி, 'தான் இவ் வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமை கூறி அவன் குறிப்பினை மாற்றுதல்' எனக் கூறி இச் செய்யுளைக் காட்டித், 'தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி, அன்பின்மை ஒருதலையாக உடையவள் அல்லள்' எனவும் நச்சினார்கினியர் கூறுவர்  (தொல். பொருள். 144. உரை). தலைவியின் காதல் மனமும் தலைவன் இரந்து நிற்கும் ஆழமான ஆவலும் 
தோழிக்கும் தெரிகிறது; புரிகிறது. தலைவன் மேல் வெறுப்பு இன்றியும்; தெரியாதவள் போலவும்; புரியாதவள் போலவும்; 
அவர் இருவர்க்கும் பொருந்தாமை கூறுகிறாள். 

கருத்து வேறுபாடுகள்:
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை எழுதிப் பதிப்பித்த தொகுப்பின் கொளு இப் பாடலைத் தோழி கூற்று என்கிறது. ஆனால் தலைவி கூற்று என்று கொள்வதற்குத் தகுதி வாய்ந்த பாடலாக உள்ளது. 

'அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள்' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ.22 உரை). அதாவது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை... ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படையாகக் கூறி; அவற்றை மீறிய அன்பின் ஆதாரத்தில் அவரது மனம் கட்டுண்டு இருப்பதை முற்றப் புரிந்து கொண்டதால் அவனை இகழ்வது போல் விரட்டினாலும் அச் சொற்களின் அடிநாதமான பொருள் மாறுபட்டது ஆகும். 

தலைவனது பெருமை காரணமாக, அவன் தனக்குப் பொருந்திய தலைவனாக மாட்டான் எனத் தலைவி அவனது விருப்பத்தை மறுத்து, அவனைப் போக்குதற்கண் கூறுவதாக இச்செய்யுளை இளம்பூரணர் காட்டுவர் (தொல். பொருள். சூ.109 உரை), அவ்விடத்து, இது தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டது.

கருவாட்டைக் காய வைக்கும் உச்சிப் பொழுதில்; கடல் சார்ந்த மொட்டை வெயிலின் தாங்கவொண்ணா வேனல் இடும்பையில்; தன்னைக் காலம் தாழ்த்திக் காண வந்த செல்வந்தனான வணிகன் மகனைத் 'தள்ளிப் போடா; பக்கத்தில் வராதே; கவிச்சி நாறும்; எனக்கு என் பரதவர் சமூகத்திலேயே நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்' என்று சினங்கொண்டு கூவும் காதலியின் கூற்று என்பதே எனக்கு உடன்பாடான கருத்து ஆகும். நடைமுறையில் இது போன்ற சூழல்களைத் திரையிசையிலும் கேட்க இயல்கிறது. https://share.google/Ou4T9ItbIDri3KzJS

சமூகச் செய்திகள்:
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் என்பது வணிகர்க்கு உரிய ஊர். இந்நாளில் 'நெகமம்' என்று வழங்குவது என்று சிலர் கருதுவர்... 
இதே தொடர் நற்றிணையில் மட்டும் இன்றி அகம்.83இலும் இடம் பெறுகிறது. அங்கு அது வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளிய திருப்பதிக்கு உரியது ஆகிறது. கடற்கரை அருகே இருந்த ஊரில் வழிபாட்டிற்கு உரிய நியமம் இருந்ததால்; பெருமை கருதி நியம மூதூர் எனப் பெயர் பெற்றதை அறிகிறோம். ‘கோயில் மாநகர்’ என இன்று வழங்கும் நகர்களுக்கு முன்னோடியாக 'நியம மூதூர்' என்ற சொற்றொடர் அன்று அமைந்தது.

'எம்மனோரின் செம்மலும் உடைத்தே' என்றது;
 எம்மனோர் = எம் சமூகத்தவர் = பரதவர்; 
எப்போது ஒரு காதல் பந்தத்தில் / திருமண பந்தப் பேச்சில் இருவேறு சமூகம் சார்ந்த செய்தி இடம் பெற்று மறுக்கப் படுகிறதோ; அது காதலர்க்கு இடையே ஆன பொய்க் கோபம் எனினும்; அப்போது அங்கே ஜாதிப் பிரிவினை இருந்தமை உறுதி ஆகிறது. 

சக 
 

kanmani tamil

unread,
Mar 2, 2026, 8:35:02 AM (9 days ago) Mar 2
to vallamai
பதிற்றுப்பத்து13- பூத்தநெய்தல் 

    தொறுத்தவய லாரல்பிறழ்நவும்
    ஏறுபொருதசெறு வுழாது வித்துநவும்
    கரும்பின்பாத்திப் பூத்தநெய்தல்
    இருங்க ணெருமையி னிரைதடுக்குநவும்
    கலிகெழுதுணங்கை யாடியமருங்கின் 
    வளைதலைமூதா வாம்பலார்நவும்
    ஒலிதெங்கி னிமிழ்மருதிற்
    புனல்வாயிற் பூம்பொய்கைப்
    பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
    நாடுகவினழிய நாமந்தோற்றிக் 
    கூற்றடூஉநின்ற யாக்கைபோல
    நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
    விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
    திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
    கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க 
    வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
    தாதெருமறுத்த கலியழிமன்றத்து
    உள்ளமழிய வூக்குநர் மிடறபுத்(து)
    உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே
    காடே கடவுண் மேன புறவே 
    ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
    ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக்
    கூலம்பகர்நர் குடிபுறந் தராஅக்
    குடிபுறந் தருநர் பார மோம்பி
    அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடா(து)
    மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
    நோயொடு பசியிகந் தொரீஇப்
    பூத்தன்றுபெரும நீகாத்தநாடே.

பொருள்:
முந்தைய வளமிகுந்த நிலை: 
நானில வளமும் பொருந்திய மேற்கரை நாட்டில் காடழிந்து நாடாகிய முறைகள்:
மகளிர் துணங்கையாடுவதற்கு ஏற்ற அகன்ற வெளி இருந்தது. அவர்கள் ஆடும் போது கீழே விழுந்த ஆம்பல் மலர்களைப் பசுக்கள் மேய்ந்தன. புல்லும் தழையும் நிறைந்து ஆனிரைகட்கு மேய்கொல்லையாக இருந்தவை நெல் விளையும் நன்செய்களாயின. வரப்புகளில் மிகுதியாக நெய்தல் பூக்கள் வளர்ந்திருந்தன. அவை கரும்பு
விளையும் நன்செய் ஆகும்படி எருமைகள் மேய்ந்தன. ஏறுகள் தம்முள் போரிட்டதால் நிலம் பதப்பட்டு உழவேண்டிய தேவை இன்றியே உழவர் விதைக்கும் வயல் ஆனது. இத்தகு வளமிகுந்த நாடு புள்ளினம் கூடி ஒலிக்கும் மருதமரங்களும் கால்வாய்களை உடைய பூம்பொய்கைகளும் உடைமையால்  புகழ்பெற்றுப் புலவரால் பாடப் பெற்றன.  

பிந்தைய அழிவுநிலை:
அவ் வயல்வெளிகளையும் வேளாண்மைக்காக உழைத்தோரின் ஊர்களையும்  சேர வேந்தன் இமயவரம்பன் அழித்தான். நாடுகள் தம் அழகு கெடுமாறு; அங்கு வாழ்ந்த உயிர்கட்கு அச்சத்தைத் தோற்றுவித்து; வெகுண்டு தானையுடன் தங்கி முற்றுகை இட்டான். கூற்றுவனால் அடப்படும் யாக்கை புல்லெனத் தோன்றிப் பொலிவழிவது போலப் பேரூர்கள் தம் நீர்மை அழிந்தன.  விரிந்த பூவை உடைய கரும்பு விளையும் கழனிகள் புல்லென்று தோன்ற; முறுக்கியது போலும் காயை உடைய விடத்தேரை மரங்களுடன்; கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து ஓங்கிய. கவைத்த தலைமயிரினை உடைய பேய்மகள் கழுதினை ஊர்ந்து திரிய; பரந்த நெருஞ்சிமுள் மிகுந்தது. நீறுபட்ட போர்க் களத்தின் புழுதிபடிந்தது; பொலிவு இழந்தது. மக்களும் மாவும் செய்யும் ஆரவாரம் இல்லை. ஊர் மன்றத்தின்கண்;
செல்லக் கருதுவோர் மனவெழுச்சி அச்சத்தால் அழிந்தது. மீறிச் செல்வோரின் உடல் நடுங்கும் அளவு அவை பாழிடங்கள் ஆயின.

இமயவரம்பன் ஆட்சி நிலை:
பெருமானே; இப்போது காடுகள் முனிவர் விரும்பி வாழும் இடமாயின. முல்லைக் கொல்லைகள் ஒள்ளிய இழையணிந்த மகளிரொடு மள்ளர்கள் உறைவிடம் ஆயின. காடும் புறவும் அல்லாத பெருவழியானது அவற்றைப் போலச் செல்வோர் இனிது செல்லும் இயல்பிற்றானது. இவை மட்டும் இன்றி நிலத்தே விளையும் எண்வகைக் கூலங்களையும் விற்போரைப் பேணிக் காக்கிறாய். குடி மக்களைப் பாதுகாக்ககும் காணியாளர் சுற்றத்தைச் சிறப்புற ஓம்பிக் காக்கிறாய். செவ்வாய் சென்றவிடத்து வெள்ளி செல்லாமையால்; வேண்டும் புலங்களில் வேண்டுங்காலத்து மழை பொழிகிறது. நீ ஓம்பும் நாடு நோயும் பசியும் நீங்கிப் பல்வளமும் நிரம்பி உள்ளது. 

சமூகச் செய்திகள்:
இமயவரம்பனின் மேற்கரை நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் வளங்கள் ஒருங்கு பொருந்திய பெருமை இங்கு பேசப்படுகிறது. நெல் வேளாண்மை செய்தோர்க்கு ஆனிரைகள் புல் மேயும் கொல்லைகள் கூட ஆரல்மீன் பிறழ்ந்து உலாவும் நீர் நிரம்பிய வயல்களாயின. பன்றிகள் தம்முடைய மருப்புகளாற் கிண்டிப் புழுதியாக்கிய புலம் கூட ஏரான் உழுதலை வேண்டாது காலாற் குழப்பி விதை விதைக்கும் வயல்களாயின. கரும்பு நிற்கும் பாத்திகளிற் பூத்த நெய்தல் பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டத்திற்குத் தீவனம் ஆனதுடன் மேய்ச்சல் வேண்டிப் பிறவிடம் செல்லாவாறு தடுத்ததால் வயல்களாயின. ஆற்றின் சங்கமத் துறை அருகில் தென்னந்தோப்பு செழித்து இருந்தது. 

சேரனுக்குப் பணியாத வேளாளர் அவனது பகைவர் ஆயினமையால் அவரும் அவரது நாடும் ஊரும் அழிவு எய்தின. செல்வம் பொருந்திய ஊர்கள் தீக்கிரை ஆக்கப்பட்டன. நெருஞ்சி முட்கள் மிகுந்து; கரிய உடைமரமும், முறுக்கிய தோற்றத்துடன் நச்சுத்தன்மை பொருந்திய நெற்றுக்களுடைய மரங்களும் உடையதாய்க்; கண்டோர் அஞ்சும்படி; வாழ்வதற்கு அரிய நிலையை அடைந்தன. சேரவேந்தன் தன் ஆணைச்சக்கரம் செலுத்திய தேயத்தை எவ்வாறு விரிவுபடுத்தினான் என இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது. 

பாடல் சுட்டும் 'கூலம்பகர்நர்' பாரம்பரியமாகப் புன்செய் வேளாண்மை செய்த திணைமாந்தர் ஆவர். தம் விளைபொருட்களை அவர் தாமே சந்தைப் படுத்திய நிலையைத் தொகைப் பாடல்கள் பல காட்டுகின்றன. 

 'குடிபுறந் தருநர்' குறுநில மன்னராய் நெல் வேளாண்மை மூலம் உழுவித்த வேளாளர் ஆவர். தமக்காக உழுத திணைமாந்தராகிய உழவரையும் களப் பணியாளர் ஆகிய களமரையும் (வேளாளர்கள் பணியாளர்) குடிமக்களாகக் கொண்டு ஆண்டு வந்தவர். 

பாடலில் இடம் பெறும் துணங்கை ஆடும் மகளிர் 
திணைமாந்தர் ஆவர். இளைய மகளிர் இடையில் ஆம்பல் தழை உடுத்து, கண்ணியும் மாலையுமாக அவ்வாம்பலே தொடுத்து அணிந்து விளையாட்டு அயர்வர். அவர் துணங்கையாடி விளையாடும் இடம் ஆம்பல் மிடைந்து கிடந்தது. அவ்விடத்து வளைந்த தலையையுடைய முதிய ஆக்கள் உதிர்ந்த ஆம்பலை மேய்ந்தன. அவர் திணைமாந்தர் என்பதற்கு உரிய அடையாளமாக ஆம்பலால் தைத்த உடையும், ஆம்பல் கண்ணியும் ஆம்பல் மாலையும் அமைகின்றன. இயற்கைப் பொருட்களே திணைமாந்தரின் ஆடையும் அணிகலன்களும் ஆயின.

மொத்தத்தில் வேந்தர் தொடக்க காலத்தில் ஆட்சியைப் பிடித்து விரிவாக்கிய போது; 'தடி எடுத்த தண்டல்கார'ராகவே செயல் பட்டமை அறிகிறோம். தம் அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு பெருவழிகளை உருவாக்கி நற்பெயர் பெற்றமை தெரிகிறது. 

சக 

 

kanmani tamil

unread,
Mar 3, 2026, 11:05:20 AM (8 days ago) Mar 3
to vallamai
சோழன் கரிகாலன் எவ்வாறு தன் நாட்டை விரிவாக்கினான் எனப் பட்டினப்பாலை பேசுகிறது (அடி.240- 270).

"வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி
மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி   
கராஅம் கலித்த கண்அகன் பொய்கை
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீரற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்;     
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி  
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் 
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ   
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டி
பெருநல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய் தெருவில்    
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த  
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்து
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்   
அழுகுரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் 
கணம்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ 
பிணம்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்
கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி   
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில்
ஒண்சுவர் நல்இல் உயர்திணை இருந்து  
பைங்கிளி மிழற்றும் பால்ஆர் செழுநகர் 
தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇ
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட 
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து    
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்   
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய    
பெரும் பாழ் செய்தும் அமையான்"

பொருள்:
முன்னதாக வெள்ளை மலர்களை உடைய கரும்புடன் சிவப்பு நெல் வளர்ந்து இருந்த வேளாண்மை நிலைகுலைந்தது. பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களுடன் நெய்தல் மலர்களும் கலந்து; முதலைகள்  இருந்த பெரிய பொய்கைகளில் இப்போது பருத்த தண்டையுடைய அறுகம் புல்லுடன் கோரைப்புல்லும் அடர்ந்தது. வயலும் குளமும் கலங்கி நீர் வறண்டது.  அங்கு வரியுடைய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்களுடன் பெண் மான்கள் துள்ளி விளையாடின.

மன்னர் பகைவரை வென்று பிடித்து வந்த பெண்கள் நீர் உண்ணும் துறையில் மூழ்கி எழுந்து; தம் அன்றாடக் கடமைகளைச் செய்த நிலையும் மாற்றம் பெற்றது. பலரும் சென்று தொழும்படி அவர்கள் முந்தைய நாள் அந்தியில் கொளுத்திய அணையாத விளக்கு ஒளி வீச; மலர்களால் அலங்கரித்து மெழுகிப்;  புதியோரையும் ஈர்க்கும் வழிபடுகடவுள் தன்மை  பொருந்திய கம்பம் ( / லிங்கம்) நின்ற மன்றங்களில் பருத்த நிலையை உடைய உயரமான தூண்கள் இருக்க; அவை சாயும்படி உரசிப் பெரிய களிற்று யானைகளுடன் பெண் யானைகள் கூடித் தங்கின. 

தெருக்களில் திறமிகு கூத்தரின் முழவொலியோடு  முறுக்கிய நரம்பைக் கட்டிய  யாழின் இனிய இசையும் கூடி ஒலிக்க;  அரிய விலை உடைய நறுமண மலர்களைத் தூவி வழிபடும் பெருவிழாக்கள் இல்லாது போயின.
அச்சம் நிறைந்த  மன்றத்தில், சிறிய மலர்களை உடைய நெருஞ்சிச் செடிகளுடன் அறுகம்புல் பரவி வளர்ந்தது.  கொடிய வாயை உடைய நரிகள் நடுங்கும்படி ஊளையிட்டன. அழுகுரலை உடைய கூகையுடன் சேர்ந்து கோட்டானும் கூப்பிட்டது. கூட்டமாக இருந்த கூளிகளுடன் கூந்தலைத் தொங்கவிட்டு ஆடிப் பிணந்தின்னும் வாழ்க்கைநிலை உடைய பெண்(பேய்)களும் ஒருங்கு சேர்ந்து இருந்தனர். 

உருண்ட தூண்களையுடைய மாடங்கள் அமைந்த நெடிய வாசல் வழியாக நுழைந்து விருந்தினர்  நெருங்கி அமர்ந்து உண்டு; இடையறவு இன்றி மிகுந்த சோற்றைச் சமைக்கும் அடுக்களையும் ஒள்ளிய சுவரும் உடைய வளமான இல்லங்களின் உயர்ந்த திண்ணையில் பச்சைக் கிளிகள் பேசிக் கொண்டு இருந்த நிலை முற்றிலும் மாறியது. ஆநிரை மிகுதியால் பால்வளம் நிறைந்த ஊர்கள் தம் இயல்பான தன்மையில் இருந்து பிறழ்ந்தன. தோல் செருப்பைக் காலில் அணிந்து; துடி முழங்கத் திரண்டு வந்த வளைந்த வில்லையுடைய எயினர் கொள்ளை இட்டு உண்டதால்; உணவு இல்லாத நெற்கூடுகளின் உள்ளே வளைந்த வாயை உடைய கூகைகள் குடியேறின. அவை நண்பகலிலும் குழறின. அரிய காவலை உடைய ஊர்களின் அழகு அழிந்தது. 

இத்தகைய அழிவுகளைச் செய்த பின்னும் சோழனின் அதிகார வெறி அடங்கவில்லை.

 சமூகச் செய்திகள்:

தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்தில் அதிகாரத்தை நிலைநாட்டும் போக்கு வேந்தரிடம் மேலோங்கி இருந்தது. சோழன் தன்னிடம் அடிபணிய வைக்க நினைத்த குறுநில மன்னரின் வயல்களையும், கரும்புத் தோட்டத்தையும் அழித்தான்.  அவன் வெற்றி பெற்ற பின் முதலைகள் இருந்த ஆழமான நீர்நிலைகளில் குவளையும் நெய்தலும் மிகுதியாகப் பூத்துக் குலுங்கிய நிலை மாறி; வயலும் நீர்நிலையும் வேறுபாடு கூற இயலாதபடி; அறுகும் கோரையும் அடர்ந்து வளர; அங்கு மான் கூட்டம் துள்ளி விளையாடியது.
 
அதாவது நாடெல்லாம் காடானது. 

தன்னைப் பணிய வேண்டும் என்பதற்காகக் குறுநில மன்னரது உழைப்பின் பயனைப் பாழ் படுத்தினான். நேற்றைய பதிவில் சேரன் செய்ததாகக் கண்ட அதே செயலைச் சோழனும் செய்தான். வேந்தரது யானைப்படை அவர் விரும்பிய வெற்றியைப் பெற உதவியது. பயந்த குறுநில மன்னர் பணிந்தனர் / வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் துன்புற்ற விபரங்கள் பட்டினப் பாலையிலும்  விரிவாக உள்ளன. பீதியால் ஊர்மன்றத்தில் நுழையும் துணிவு பொதுமக்கட்கு இல்லை. வழிபாட்டிற்குக் கூட அவர்கள் நெஞ்சில் திடம் இல்லை. அச்சமும் அமைதியும் மட்டுமே ஊர் முழுவதையும் ஆட்கொண்டது. 

பிணம் தின்னும் பாசுபத சமயத்தார் மட்டுமே அப் போர்க்களத்துச் சூழலில் உணவைத் தேடித் திரிந்தனர். 

'பேய்மகள்'
தொகைப் பாடல்கள் தோன்றிய காலத்துத் தமிழகத்தில் காலத்தால் முற்பட்ட சைவசமயத்தின் ஒரு வகையான பாசுபதம் மக்களில் ஒரு சாராரிடம் செல்வாக்குப் பெற்று இருந்தது. பாசுபத சைவத்தில் கைம்பெண் ஆனவள் தெய்வத் தன்மை பொருந்தியவள் என்ற பொருளில் பேய்மகள் எனப்பட்டாள். அப்பெண் மகப்பேறு இல்லாதவளாக இருப்பின் சமூகத்தில் மதிப்பின்றிப் புறக்கணிக்கப் பட்டுப் பிணம் தின்னும் நிலைக்குத் தள்ளப் பட்டாள். பேய்மகளோடு இணைத்தே பேசப்படும் கூளிக்கூட்டம் பாசுபதம் சார்ந்த ஆண்வர்க்கத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் உள்ளது. 

'பேய்மகள்' என்ற சொற்றொடரின் பொருள் அறியப் பின்வரும் ஆய்வுக் கட்டுரையைக் காண்க: 


அத்துடன் மகப்பேறு பெற்ற முதுபெண்டிர்க்கும் பேய்ப் பெண்டிர்க்கும் இடையில் நிலவிய வேற்றுமையைப் பின்வரும் ஆய்வுக் கட்டுரையில் காணலாம். 


'கொண்டி மகளிர்'
பகைவரை வென்ற பின்னர் குறுநில மன்னர் அங்கிருந்து தம் நாட்டிற்குக் கொண்டு வந்த மேல்வருணத்தைச் சேர்ந்த பெண்கள் தம் உயர்நிலையில் இருந்து சற்றும் கீழே இறங்காமல்; குடிநீர் நிலைகளில் விடியுமுன்னர் நீராடினர். தம்மைக் கொண்டு வந்த மன்னரின் நாட்டு மக்களது வழிபாட்டிற்காகத் தரையை மெழுகி; விளக்கேற்றி; மலர்தூவிப் பணி செய்தனர். வேந்தர் வென்ற பின்னர் இவர்களது நிலையும் தேய்ந்தது. 

எயினர் செயல்: 
'எரிகிற வீட்டில் எடுத்த மட்டும் லாபம்' என்ற சொலவடை ஈராயிரம் ஆண்டுக் கால நடைமுறையை ஒட்டியே தோன்றி உள்ளது. வேந்தர் எரி ஊட்டிய ஊர்களைத் திணைமாந்தராகிய எயினர் கொள்ளை அடித்தனர். தொடர்ந்து நரிகளும் கோட்டான்களும் காட்டு யானைகளும் மான்களும் பாழூர்களை ஆக்கிரமித்தன. 

குறுநில மன்னர் மாளிகை - போருக்கு முன்னும் பின்னும் முரண்பட்ட நிலை அடைந்தது. இடையறாது விருந்து சமைத்த  அட்டிற்சாலைகளும் உண்டு ஓய்வெடுத்த திண்ணைகளும் வெறிச்சோடின. குதிர்களில் கூகை குடியேறியது. செல்லக் கிளிகளைக் காணவில்லை. பால்வளம் பறி போனது. 

சக 

1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 4, 2026, 11:04:31 AM (7 days ago) Mar 4
to vallamai
பாண்டியன் நெடுஞ்செழியன் வேளாளரின் வயலை அழித்துத் தன் அதிகாரத்தை நிறுவியமையை மதுரைக்காஞ்சியும் பெருமையாகப் பேசுகிறது. 

"உறுசெறுநர் புலம்புக்கு அவர்
கடிகாவின் நிலைதொலைச்சி
இழிபுஅறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய எரிமேய   
நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப   
அவை இருந்த பெரும் பொதியில்
கவைஅடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்புஆட
அணங்கு வழங்கும் அகல்ஆங்கண்
நிலத்துஆற்றும் குழூஉப்புதவின்   
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ
கொழும்பதிய குடிதேம்பிச்
செழுங்கேளிர் நிழல்சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக்கூகை குராலொடு முரல  
கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கை
களிறுமாய் செருந்தியொடு கண்புஅமன்று ஊர்தர
நல்ஏர் நடந்த நசைசால் விளைவயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழிதவக் கெட்டு   
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்" (அ.152–176)

பொருள்
பாண்டியன் நீண்ட காலமாகத் தன் தலைமையை ஏற்க முரண்பட்டவர்களின் நிலங்களில் புகுந்து போர் செய்தான். அவரது காவல் பொருந்திய சோலைகளை அழித்தான். நிலைத்த நீர் வளம் மிகுந்த மருதநிலப் பரப்பு முழுவதையும் சிவந்த நெருப்புக்கு இரையாக்கினான். நாடு தன் நிலை அழிந்து காடு ஆனது.  ஆவினம் தங்கிய இடங்களில் காட்டு விலங்குகள் தங்கின. ஊர்கள் பாழ்நிலங்கள் ஆயின. ஒளி வீசும் வளையல்கள் அணிந்த மடப்பம் பொருந்திய பெண்கள் துணங்கைக் கூத்தையும் அழகிய தாளத்தோடு கூடிய குரவைக் கூத்தையும் மறந்தனர். சபை கூடிய அம்பலத்தில் பிளவுபட்ட  காலடிகளுடன் கடுநோக்கு உடைய பேய்மகளிர் உலவி ஆடினர். கடவுள் தன்மை பொருந்தியதாகத் தாம் வாழ்ந்த அகன்ற மாளிகையின்  நிலைகதவிற்குப் பின் நின்று தம் கணவனையும் சுற்றமான ஆண்களையும் இழந்த துன்பம் மிகுந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மிகுந்த வருத்தத்துடன் நிலைகுலைந்த அவ் ஊர்களை விட்டுத் தம் சுற்றத்தோடும் குடிகளோடும் வெளியேறி; வேறு இடங்களில் வாழ்ந்த தம்  உறவினரிடம் சென்று சேர்ந்தனர். பெருமாளிகைகளின் குதிர்கள் தீயில் கருகி விடக் குடுமி உடைய கூகைச் சேவல் பெடையுடன் குடி புகுந்து ஒலி எழுப்பியது. செங்கழுநீர் மலர்ந்து இருந்த அகன்ற பொய்கைகளில் யானைகள் மறையும்படி வாட்கோரையும் சம்பங்கோரையும் நெருங்கி வளர்ந்தன. மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தரக் கூடிய விளைச்சல் தரும் வயல்களில் நன்கு ஏரோட்டி உழுத நிலை மாறி; மயிர்க்கட்டுடைய பெண் பன்றியுடன் ஆண் பன்றிகள் ஓடித் திரிந்தன. உன்னிடம் அடங்கி வாழாததால் பகைவர்களின் நாடுகள் மிகவே கெட்டன.  

சமுகச் செய்திகள் 
சேரனும் சோழனும் நாடு பிடிக்கச் செய்த அதே செயல்களைத் தான் பாண்டியனும் செய்தான். மூவேந்தரும் அவரவர் ஆட்சிப் பரப்பை விரிக்கச் செய்த போர்கள் அரசியல் நிகழ்வுகளே. அந்த அரசியலால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்களே இங்கு பேசுபொருள் ஆகக் கூடியன. 

வேளிர் என்று தொகைப் பாடல்கள் சுட்டும் குறுநில மன்னர் ஆகிய வேளாளரின் நாடுகள் காடாயின. குன்றாத நீர்வளம் குலைந்தது. உழுவித்தோர் ஆகிய அவரைச் சார்ந்து உழுதோர் ஆகிய உழவரின் (திணைமாந்தர்) வாழ்வும் பாதிக்கப்பட்டது. வளத்தை அழிப்பது பணியச் செய்யும் உத்தியாகப் பயன்படுவதை இன்றும் காண்கிறோம். மூவேந்தரும் அவ்வுத்தியைப் பயன்படுத்தியே குறுநில மன்னரைப் பணிய வைத்தனர். 

'அரந்தைப் பெண்டிர்'
தம் குடும்பத்து ஆண்களை இழந்த பெண்கள் வீட்டிற்கு வெளியே தலைநீட்டவும் தயங்கினர். பாதுகாப்பை இழந்த நிலையில் அங்கிருந்து அகன்று சுற்றத்தோடும் உற்றாரோடும் தம் உறவினரின் வாழ்விடத்தைச் சென்று சேர்ந்தனர். 
சக 

1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 5, 2026, 11:45:03 AM (6 days ago) Mar 5
to vallamai
புறநானூறு-337 
"ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
கவிகை மண்ஆள் செல்வர் ஆயினும்
வாள்வலத்து ஒழியப் பாடிச் 
சென்றாஅர்
வரல்தோறு அகம் மலர
ஈதல்ஆனா இலங்குதொடித் 
தடக்கைப்  
பாரி பறம்பின் பனிச் சுனை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில்ஆர் நறும்புகை ஐதுசென் றடங்கிய   
கபில நெடுநகர்க் கமழும் 
நாற்றமொடு
மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
அற்றன்று ஆகலின் தெற்றெனப் போற்றி
காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் 
அன்றி
வருதல் ஆனார் வேந்தர் தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு 
தலையர்
மற்று இவர் மறனும் இற்றால்தெற்றென
யார் ஆகுவர்கொல் தாமே 
நேரிழை
உருத்தபல சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை 
ஞெமுக்குவோரே" கபிலர் 

பொருள்:
வாளைக் கையில் ஏந்தாமல் பாரியிடம் பாடிக் கொண்டு சென்றால்; செல்லும் போதெல்லாம் மனம் குளிர்ந்து தொடி அணிந்த தன் கையால் வாரி வாரி வழங்குவான். அவனது பறம்பு மலையில் பனிநீர்ச் சுனை உண்டு. அதை யாரும் எளிதில் பார்க்க இயலாது. அதுபோலப் பாடலின் தலைவியும் பார்ப்பதற்கு அரியவள்.
மனைக்குள் அவள் பெண்மை நிறைந்த (பூப்பு எய்திய) பொலிவோடு திகழ்ந்தாள். இடையில் கட்டிய ஆடை ஆடுவது போலக் கூந்தல் அசைய அவள் நடந்தாள். அந்தக் கூந்தலில் அவள் ஊட்டிய அகில் புகை அடங்கி; அட்டிற் புகையால் கறுத்துத் தோன்றும் பெரிய மாளிகை முழுவதும் மெலிதாக மணக்கும். ஒளிரும் முகம் கொண்ட அவள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தாள். இனி அப்படி இருக்க முடியாது. 

சோழநாட்டு வேந்தன் ஆரவாரம் மிக்கவன். கவிந்த கையால் சைகை காட்டி மண்ணை ஆளும் செல்வம் மிக்கவன். வாளால் வெற்றிகள் பல கண்டவன். அவன் போருக்கு எழுதலை இனித் தவிர்க்க முடியாது. 
அவனது யானைகள் காடெல்லாம் நிற்கின்றன. அவற்றிற்கு நெல்லஞ் சோற்றுக் கவளம் ஊட்டப்படுகிறது. 

அவளது தந்தையும் சகோதரரும் அச்சம் தரும் முகத் தோற்றத்தோடு போரில் ஈடுபட்ட தம் வேலை இன்னும் குருதிக் கறையோடு  வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது மறப் பண்பு இப்படி இருக்க; அவளோ அணிகலன் பூண்டு; சுணங்கின் வண்ணங்களோடு காளையின் இரண்டு கொம்புகள் போல இள வனப்புடன் திகழும் முலையினள். அவற்றை உரிமை கொண்டாடி அணைக்கப் போகிறவர் யாரோ? தெரியவில்லையே!

சமூகச் செய்திகள் 
சோழவேந்தன் குறுநில மன்னனின் பெண்ணைத் தனக்கு உரியவளாக்க மகட்கொடை நேர்கிறான். அதாவது பெண் கேட்கிறான். பெண்ணின் தந்தையும் சுற்றமும் சினத்தோடு தம் பெண்ணைத் தர மறுத்தாலும்; வேந்தன் தன் விருப்பத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை ஆதலால்; இரு தரப்பினரும் போர் செய்ய முனைகின்றனர். 

வேந்தர்  தம் அதிகாரத்தை நிலைநாட்டக் கையாண்ட உத்திகளுள் ஒன்று குறுநில மன்னன் பெண்ணைத் தர விரும்பாவிடினும் அடாவடியாக வற்புறுத்துவது. அதைத் தொடர்ந்து போர் செய்வது 'மகட்பாற்காஞ்சி' எனப்படும். போரினால் மன்னனின் நாடு அழிந்து தீக்கிரை ஆகும் போது அது சமூகத்தை பாதித்தது.

எந்த ஒரு மகட்பாற் காஞ்சிப் பாடலும் பெண்ணின் அடையாளத்தை; இன்னாரது மகள் என்று வெளிப்படையாகச் சொல்வது இல்லை. ஆனால் அந்த உண்மை குறிப்பாக உய்த்து உணர இயல்வதாக இருக்கும். ஆனாலும் திட்டவட்டமாகச் சொல்ல வழி இருக்காது. இது பண்டைத் தமிழகத்து விழுமியம் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. 

இந்தப் பாடல் பாரியின் பறம்பில் இருக்கும் சுனை காண்பதற்கு அரிதானது போல் குறிப்பிட்ட பெண்ணும் காண்பதற்கு அரிதானவள் என்கிறது. இதைப் பாரியின் நண்பர் கபிலர் பாடி இருப்பதால் பாடலின் தலைவி பாரியின் மகளோ எனும் ஐயம் எழுகிறது. முடிபாகச் சொல்ல வழி இல்லை. 

அன்றைய தமிழ்ச் சமூகத்தின் 
கொள்கை 'திருமணம் செய்து கொடுக்க மறுக்கப்படும் ஒரு பெண்ணை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதைத் தவிர்த்தமை' என்பதை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் மூலம் அறிகிறோம். பெண் கேட்டவரை எந்த மகட்பாற் காஞ்சிப் பாடலும் மறைக்கவில்லை.

குறுநில மன்னனிடம் தான் பெண் கேட்டான் என்பது 'கபில நெடுநகர்' என்ற தொடராலும் பாரி தொடர்பான உவமையாலும் தெரிகிறது. நெடுநகர் = பெரிய மாளிகை. 
கபில நிறம் ஆகிய கறுமை நெல் வேளாண்மை செய்த குறுநில மன்னர் அன்றாடம் விருந்து சமைக்கும் அட்டிற்சாலையை அடையாளம் காட்டுகிறது. புகை மிகுதியாக மண்டிக் கறுத்த பெரிய மாளிகை. 

தொடர்ந்து வேந்தனின் யானைப்படைக்கு நெல்லுச் சோற்று உருண்டைகள் உணவாயின என்பதும் முற்றுகை தொடரும் மன்னன் நாட்டில் நெல் வேளாண்மை நிகழ்ந்ததை அறியச் செய்கிறது. 

சக




1768578470689.jpg

kanmani tamil

unread,
Mar 6, 2026, 11:38:16 AM (5 days ago) Mar 6
to vallamai
 புறநானூறு-355

"மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே; மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி..." (ஆசிரியர் பெயர் இல்லை.)   

பொருள்: 
'மதிலில் ஞாயில்கள் (கொத்தளங்கள்) இல்லை. கிடங்கில் நீர் இல்லை ஆதலால் கன்றுகள் மேய்கின்றன. ஊரின் நிலை இதுதான். இவள் தந்தையும் பெண்ணின் மேல் கொண்ட பாச மிகுதியால் வேந்தனுக்கு மணம் செய்து கொடுக்கத் மனமின்றித் தவிக்கிறான். குடும்பத்தில் இருந்த இவளது தமையன்மாரும் பிற பங்காளிகளும் அவ்வண்ணமே தயங்குகின்றனர். கண்ணுக்கினிய ஆத்திமாலையையும் விரைந்து ஓடும் குதிரைகளையும்டைய கிள்ளி …'

சமூகச் செய்திகள்:
மதிலில் ஞாயில்கள் எனும் கொத்தளங்கள் இல்லை என்ற குறிப்பு அது குறுநில மன்னரின் மாளிகை எனத் தெளிவுறுத்துகிறது. வேளிர் 'ஓரெயில்' என்று அழைக்கப்பட்ட மதில் சுவர் மட்டுமே சூழ்ந்த மாளிகையில் தான் வாழ்ந்து கொண்டு ஆண்டனர். அது 'ஓரரண்' என்றும் பெயர் பெற்றது. 

நீர் மேலாண்மையில் சிறந்தவராகக் கருதப்படும் வேளாளருள் ஒருவன் ஆன அவனது கிடங்கில் நீர் இல்லை என்ற உண்மை மழை பொய்த்து விளைச்சல் இல்லாத துன்பநிலையைக் காட்டுகிறது. ஆனாலும் வேந்தனிடம் பெற்ற மகளை மணம் செய்து கொடுக்கச் சம்மதப்படாத மனதுடன் அக் கூட்டுக் குடும்பத்துப் பங்காளிகளும் தந்தையும் ஒருங்கு பாசத்தால் மயங்குகின்றனர். 

கடுமான் கிள்ளி எனச் சோழனின் பெயரை வெளிப்படையாகப் பேசும்
இப் பாடல் ஒரு சிதைந்த பாடலாக உள்ளது.

பெண்ணைத் தன் உரிமை ஆக்கினால் குறுநில மன்னர் தனக்கு அடங்கி விடுவர் என்ற எதிர்பார்ப்பே வேந்தரின் இத்தகைய போக்கின் காரணமாக அமைந்தது.

விளைவு: போரும் ஊரை எரித்தலும் ஆகும்

சக

kanmani tamil

unread,
Mar 7, 2026, 4:02:49 AM (4 days ago) Mar 7
to vallamai
புறநானூறு-338
"ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறுவின் 
நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின்
படுவண்டு ஆர்க்கும் பல்மலர்க்காவின்
நெடுவேள் ஆதன் போந்தை 
அன்ன
பெருஞ்சீர் அருங் கொண்டியளே கருஞ்சினை   
வேம்பும் ஆரும் போந்தையும் 
மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் 
அல்லன் வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி 
நாப்பண் ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் 
தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே"

பொருள்:
நெடுவேள் ஆதன் எனும் அரசனின் போந்தை என்னும் ஊர் ஏர் பூட்டி உழும் வயல், நீர் பாய்ந்து செழிக்கும் சேற்று நிலம், நெல் கொட்டிக் கிடக்கும் வீடுகள், வாங்குவோர் தந்த பொன் மலிந்த தெருக்கள், வண்டுகள் மொய்க்கும் பல வகைப் பூக்கள் மண்டிய காடுகள் ஆகியவற்றைக் கொண்டது. 
அவ்வூர் போன்ற அழகும் இளமை வளமும் பொருந்திய இவள் ஓரெயிலோடு  வளமிகுந்த தோட்டங்களும், வயல்களும் சூழ்ந்திருக்கும் நிலப்பகுதியின் நடுவில் கடலில் மிதக்கும் கப்பல் போன்று தோற்றம் அளிக்கும் மாளிகையை உடைய குறுநில மன்னனின் ஒப்பற்ற மகள் ஆவாள்.
அவளைக் கொண்டியாகப் பிடித்துக்கொண்டு செல்வது அவ்வளவு எளிதன்று. 
வேம்பு மாலை அணிந்த பாண்டியன், ஆத்தி மாலை ஆணிந்த சோழன், பனம்பூ மாலை அணிந்த சேரன் ஆகிய கொற்ற வேந்தர் மூவரும் இவளைப் பெண் கேட்டு; வெற்றிக்கு உரிய வில்லேந்திப் போரிட வந்தாலும்; தன் தகுதியை ஏற்க மறுப்போர்க்கு இவளது தந்தை மணம் செய்து கொடுக்க மாட்டான்.

சமூகச் செய்திகள்:

'கொண்டியள்'
போரிட்டு வென்றவன் தோற்றவனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்டிரைப் பிடித்துக் கொண்டு செல்வது அரசவழக்கம். அவர்கள் கொண்டி மகளிர் எனப்படுவர். இப் பெண்டிர் அவ் அரசரது மனைவியராகவும் இருக்கலாம் / மகள்களாகவும் இருக்கலாம் /  உறவுப் பெண்களாகவும் இருக்கலாம் / பிற உரிமை மகளிராகவும் இருக்கலாம். அதனால் இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்பு இருந்தது. கொண்டி மகளிர் பற்றி இதே இழையில் மார்ச் 3ம் தேதி இட்ட பதிவில் பார்த்தோம். 

'உணங்கு கலன் ஆழியின் 
தோன்றும்' மன்னனின் மாளிகை என்ற உவமை குறுநில மன்னனின் மாளிகை எப்படி இருக்கும் என்ற காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது. அதாவது உயர்ந்த மதில் / ஓரெயில் / ஓரரண் என அழைக்கத் தகுந்த சுற்றுச் சுவருடன் (compound wall) கூடிய மாளிகை . குறுநில மன்னர் கோட்டை கட்டி ஆளவில்லை. கோட்டை வேந்தருக்கு உரிய அடையாளம் ஆகும். அதனால் கொத்தளம் / காவற்காடு மன்னரிடம் கிடையாது. வீரராகப் பணி ஆற்றும் மன்னரின் சேவகர் தெருக்களில் தான் பகைவரை எதிர்கொண்டனர். எனவே தான் 'முரவுவாய்...ஓரெயில்' எனப் பாடப்பட்டது. 

தமிழகத்து விழுமியம்:
நெடுவேள் ஆதனின் போந்தை போன்ற இளமை நலம் சான்ற தலைவி என்பதால் அவள் அம் மன்னன் மகளோ என்ற ஐயம் தோன்றினாலும் பாடலின் இறுதி அடிகள் அக் கருத்தை உறுதியாகச் சொல்ல இடம் கொடுக்கவில்லை.

பெண் கேட்பவர் வருணாசிரமத்தில் மேல்நிலையில் இருக்கும் வேந்தர். பெண் கொடுக்க மறுப்பவர் வருணாசிரமத்தில் கீழ்நிலையில் இருந்த வேளாளர் ஆகிய குறுநில மன்னர். அதனால் தான் வேந்தருக்கு 'நான் கேட்டு நீ பெண் கொடுக்க மாட்டாயா?' என்ற சினம் மூண்டது; மன்னன் 'தன் தகவு அணங்கார்க்குப் பெண் தர மறுத்ததால் போர் மூண்டது; விளைவு- விளைச்சலும் வளமும் தீக்கிரை ஆயின.
"மாணா மாட்சிய மாண்டன பலவே" பதிற்றுப்பத்து-19
என இமயவரம்பனைக் குமட்டூர் கண்ணனார் பாடியது போல... மாண்டன = அழிந்தன. 

சக 

Raju Rajendran

unread,
Mar 7, 2026, 10:24:44 PM (4 days ago) Mar 7
to vall...@googlegroups.com
nanRu

சனி, 7 மார்., 2026, 2:32 PM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
Mar 8, 2026, 11:36:23 AM (3 days ago) Mar 8
to vallamai
புறநானூறு-339

"வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;           
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தற் பூக்குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவில் ததைந்த .. .. .. .. .. . . .. கலத்தின்                                            
வளர  வேண்டும் அவளே; என்றும்
ஆரமர் உழப்பதும் அமரியள் ஆகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே" (பாடிய புலவர் பெயர் இல்லை)

பொருள்:
பரந்த நிலப்பரப்பில் சென்ற மேய்ந்த பல ஆனிரைகளும் பெரிய காளையும் தம் வயிற்றை நிரப்பிக் கொண்டு மடலுடன் ஓங்கிய பனைமரத்தின் நிழலில் வசதியாகப் படுத்துக்கொண்டு அசை போடும் போது; மேய்க்கும் கோவலர் முல்லைப் பூக்களைப் பறிப்பர்.
பூப் பறிக்கும்போது அங்கு எதிர்ப்படும் முயலைத் தம் குறுங்கோலால் விரட்டுவர். அந்த முயல் தாவிச் சென்று அருகில் இருக்கும் நீர்நிலையில் வாளை மீனோடு சேர்ந்து புரண்டு துள்ளும்.
கடலில் விளையாடிய மகளிர் அடுத்துக் குளத்து நீரில் பாய்ந்து பிசுபிசுப்பைப் போக்கிக் கொண்டு; கழிகளில் உள்ள நெய்தல் பூக்களைக் கிள்ளி எடுக்க; இப்படி அங்கும் இங்கும் ஓடி ஆடும் போது அவர்கள் அணிந்த பசுந்தழை ஆடையும் ஆட............. 
அணிகலனாகப் பூண்டு  அவள் வளர வேண்டும்.
போரை விளைவித்து வருத்துபவள் ஆகி விடக் கூடாது.  முறம் போன்ற காதை உடைய யானையைக் கொண்டு போருக்கு அழைக்கும் வேந்தர் நெஞ்சில் ஒளிந்து கொண்டு இருக்கிறாளே!

சமூகச் செய்திகள்:
அக்காலத்தில் ஒரு மகள் சிறுமியாகத் துறுதுறுவெனக் கடலிலும் குளத்திலும் ஓடி ஆடி விளையாடும் பருவத்திலேயே அவளது சுற்றத்தார் மனதில் பதட்டம் தோன்றி இருக்கிறது. ஏனென்றால் வளர வளர இவளது ஆட்டமும் ஓட்டமும் காணும் வேந்தர் மனதில் ஆசையும் சேர்ந்து வளரும். வேந்தன் பெண் கேட்கத் தயங்க மாட்டான். அவனுடைய உயர்வு மனப்பான்மை (superiority complex) வற்புறுத்திப் பெண்ணை வலிந்து கொள்ளத் துடிக்கும். பெற்றோரும் சுற்றத்தாரும் மறுத்தால் உடன் தன் யானைப் படையைக் கொண்டு வந்து அழிப்பான் என்ற எதிர்பார்ப்பும் புரிதலும் அச்சத்தைக் கொடுத்தது. 

இப்பாடலில் இடம் பெறும் மகள் அவளது தழை ஆடை அணியும் முறையால் திணைமாந்தரின் மகள் எனத் துணியலாம். 
கடற்கரை சார்ந்த வாழ்க்கைச் சித்தரிப்பு அவளைப் பரதவர் குலப் பெண்ணாகக் காட்டுகிறது. 

வேந்தர் குறுநில மன்னரிடம் மட்டுமல்ல; பரதவர் தலைவனிடமும் பெண் கேட்டுத் தொந்தரவு செய்தமையை இப்பாடல் தெரிவிக்கிறது.

சக 

Reply all
Reply to author
Forward
0 new messages