> நற்றிணை - 310
> விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
> களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
> உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
> வாளை பிறழும் ஊரற்கு நாளை
> [...]
> நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (பின்னத்தூரார், உவேசா) உரையுடன்,
> http://nganesan.blogspot.com/2012/12/310.html
>
மணக்குடவர் உரை:
பரத்தமை உடையாய்! நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக
நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாதோ என்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும்
கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர்
மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை
மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக
உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்;
அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி
இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)
பர- என்ற வடசொல் பரங்குன்று என்பதில் இருக்கிறது. இப் பெயர்ச்சொல்லில் (மதுரை அருகே உள்ள குன்றம்) உள்ள பரன் = வருணன்.இது, பரன்குன்றில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது என விளக்கியுள்ளேன். https://youtu.be/WyB3h08w0Ycஇப்போது, மருதத்திணைச் செய்யுள்களைப் பார்த்துவருகிறேன். நிறையப் பாடல்களில் மீன் பரத்தைக்கு,- முக்கியமாக, யாழ்வல்லபி, சதிராட்டக்காரிகளாய் இருந்த பாண் சேரிப்பரத்தைக்கு- உவமையாய் வருகிறது.நெய்தல் திணைப்பாடலிலும், திணைமயக்கமாக, மீன் = பரத்தை என்னும் உள்ளுறை உவமை இருக்கிறது.உதாஹரணமாக, நான்கு பாடல்களைக் கொடுத்துள்ளேன். https://groups.google.com/g/vallamai/c/MEvxRVJUAlcநற்றிணை 310-ம், அகநானூறு 186-ம் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய பாடல்கள். சதிர் வல்ல (சேரிப்) பரத்தை மீன்.இந்த மீன் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடுதலால், அதை விரும்பித் தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிறாள்.இதைக் காணும், இல்லிடைப் பரத்தையருக்குப் பொறாமை, சினம், புலம்பல் எழுதல் இயற்கை.இவர்களை இவ்விரண்டு பாட்டிலும், தாமரைப் பூவாக விளங்கும் தலைவி + தாமரைப் பாசிலைகளாகஇற்பரத்தையர் பாடியுள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு பெரிய Household வளமனையின் குவார்ட்டர்ஸில்இருப்பவர்கள். இதனை அரண்மனைகளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும்
(உ-ம்: மத்திய கிழக்கு) காணலாம். தாமரைத் தாவரம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcDj%2B7f%3DhJR3rUmb%3DCcb9SA8q-0xnaKv1exojjj4sfDqw%40mail.gmail.com.
தலைவன் கடல்சார் நிலப்பரப்பைச் சேர்ந்தவன்; என் அன்பு கடலைக்காட்டிலும் பெரிது என்று சொல்பவள் அவனோடு சண்டை போடுவாளா?பாட்டில் சண்டைத் தொனி இருக்கிறதா?பரத்தையிடம் போனால் உடனே மருதமா?ஊடல் இருந்தால் மட்டும் தான் மருதம்.அது இங்கு இல்லை.இங்கே அவள் அடக்க மாட்டாமல் அழுகிறாள்... நெய்தலுக்குரிய உரிப்பொருள்.சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hnYWgNCt4t7ss%2ByOUvY8Wpu8e5u247djE6TxDvBBtKDg%40mail.gmail.com.
மயில்கள் ஆலப், பெருந்தேன் இமிரத்,
தண் மழை தழீஇய மா மலை நாட!
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து
நன் மனை அருங்கடி அயர,
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdZqSc8%3DFTwKEVNCU4yyiOXTrjULeC7pUvQEvm1JcR3Lg%40mail.gmail.com.
புறப்பாடலில் உள்ளுறை இருக்கிறது என்று கூறுவது தப்பு. Himalayan blunder.உள்ளுறை என்பது அகப்பாடல்களில் காணப்படும் அணி.புறப்பாடல்களில் நேரடியாகத் தான் பாடியுள்ளனர்.நீங்கள் சொல்வது போல் புறம்- 249ல் உள்ளுறை இருக்கிறது என நீங்கள் நிறுவ விரும்பினால்... fill up the blanksகதிர்மூக்கு ஆரல் = ........................கீழ்ச்சேறு= ..................ஒளிப்ப= .................கணைக்கோட்டு வாளை = ...................மீநீர்ப் பிறழ= .............எரிப்பூம் பழனம் = .....................நெரித்து= ...............வலைஞர்= .......அரிக்குரல் தடாரியின் யாமை= ..............மிளிர= .............பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வரால்= ..........உறழ்வேல் அன்ன ஒண்கயல் = ................முகக்கும் = ............அகல்நாட்டு அண்ணல் புகாவே,உள்ளுறை இருப்பின் ஒவ்வொரு பெயருக்கும் வினைக்கும் நேரான பொருள் என்ன என்று சொல்ல வேண்டும்.வலிந்து சொல்லக் கூடாது.புறப்பாடல்களில் உள்ளுறை இடம் பெறாது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu45UsEuAGn3SSEB6VQoBBKskkJXPPg%3DP%2Bg2WUweOtvLw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfc%2BGDxcfwvFXR_vHvDTEK58TMbCWEhBUam1ECUaCdiag%40mail.gmail.com.
கோடி புண்ணியம்.புறப்பாடல்களில் உள்ளுறை இல்லை என்பதை ஒத்துக் கொண்டமைக்கு....
பிறிதுமொழிதல் அணியைப் பொருத்திப் பார்ப்பது... நல்ல கற்பனை வளம்.புறப்பாடலில் காட்சியில் நேரடியாக இடம் பெறாதவரைச் சேர்த்து வைத்துப் பொருள் சொல்வது தவறு தான்.இதே புறநானூற்றில் வெளிமானின் ஈமச்சடங்கை இப்பாடலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அது பாசுபதம்.இதே புறநானூற்றில் பேகனின் புறத்தொழுக்கம் எப்படிப் பேசப்படுகிறது?இதே புறநானூற்றில் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மேல் கொண்ட காதல் எப்படிச் சொல்லப்படுகிறது?இடைக்காலத்துச் சிற்றிலக்கியங்களின் மேல் ஈடுபாடு மிகுதியாக இருப்பதால் அந்தக் காலத்தில் பெருவாரியாகப் பயன்பாடு கொள்ளப்பட்ட அணிகள் தொகை இலக்கியத்தில் இருப்பதாகக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள்.புறம் 249 தொகை இலக்கியக் காலத்துப் பன்மைச் சமுதாயத்தைப் புரிந்து கொள்ள நல்ல சான்றாகும். பல்வேறு சமயங்கள் பின்பற்றப்பட்டன. இது சமணம். அவள் அழுது கொண்டே குழி மெழுகுகிறாள். அவள் பக்கலில் யாருமில்லை. தும்பி சொகினனார் அதே தோட்டத்தில் இருப்பதால் இதைப் பார்த்து அழுது கொண்டே பாடிய பாடல் இது.
நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்
***************************************************
தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.
இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம்.
”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி).
"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.
அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.
சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).
தமிழ்நாட்டுக்கு வட இந்தியாவில் இருந்து எழுத்து (பிராமி இலிபி), சமணம், சைவம் வருகை: Śaka Clans, Pallava Royals, Śākya Nāyanār and Bodhidharma http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html
கிண்ணிமங்கலத்தில் கிடைத்துள்ள முகலிங்கம் தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசியா பள்ளிப்படை சிவாலயங்களில் பழமையானது. http://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html புறநானூற்றுப்
பாடல் 249 தும்பி சேரகீரனார் பாடியது. அப்பாடலில் தான் தலைவனை இழந்த தலைவி
குங்குமம்
இழந்து, வரிநீறு ஒன்றையே தரிக்கும் 16-ம் நாள் ஈமச்சீர் பாடப்பட்டுள்ளது
பாசுபத காபாலிகம்
கொங்கில் பரவியதைப் பாடும் பாடல் ஆகும். திரிபுண்டரம் அழகாக, தும்பி சேர
கீரனாரால்
’வரிநீறு’ எனப்படுகிறது. வரி நீறு என்ற பாடமே முனைவர் ம. வே. பசுபதி
(தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) நூலிலும் இருக்கிறது. தும்பி சேர
கீரனார் பாடல், புறநானூறு 249, உரையுடன் படித்தருளுக:
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru249.html#.Xw2ulOdOnIW
ஈரோடு, பச்சோடு (பாப்பினி), பெரியோடு, சித்தோடு, வெள்ளோடு, ... போல
ராசிகணத்தார் பரப்பிய
பாசுபத சைவம் பழனி-திண்டுக்கல் அருகே எரியோடு வந்து, கிண்ணிமங்கலம் சேர்ந்த
வரலாற்றை
விளக்கும் ஆவணமாக, இப்போது கி.பி. 2-ம் நூற்றாண்டின் முகலிங்கம் “எகன் ஆதன்
கோட்டம்”
என்ற எழுத்துடன் கிடைப்பது அருமை. நீறுபூசுதலும், நீறுபூசாமையும் சைவர் -
சமண வெள்ளாளர்களின் வேற்றுமைகளில் முக்கியமானவை. இரு சமயத்தாருக்கும், சங்க
காலத்தில் இருந்தே பஞ்ச திராவிட தேசம் முழுமையும் (குஜராத்தில் இருந்து
தமிழகம் வரையிலும்) கணவனை இழந்த பெண்டிர் வெள்ளைச் சீலை கட்டுதல் பழைய
மரபு. சைவர்களிடையேயும், சமணர்களிடையேயும் இதைக் காணலாம்.
இதனை ஆராயத் தூண்டிய பசுமைக்கவிஞன் பாரதிக்கும், பேரா. கனக அஜிததாஸ் அவர்களுக்கும் என் நன்றி பல. ~NG
சக
சக
குறித்து நின்றன. முந்தைய மடலிலும் ஏழு அகப்பாடல்கள் தந்து
அவற்றில் மீன் என்பது பரத்தையர்க்கு உள்ளுறை எனக் காட்டினேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdSr5SUfdjwr3hqNpOKw%2B4Oh0yrDVsPAx%2Bwd5m8e_1O%2BQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvtaYyann%2B1anGDowf0fGx_1qJ5M7neMWGf-hT7rh2z5Q%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeXR3HhHT35_H7r5O8BkK2ozTkib9v71po--71_FaxcJQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsKXw_uPwhPePxXfN9v56hK1AN5mRwLy9AnM56BW%2BnbHw%40mail.gmail.com.
///வேந்தன் அரசு
"தேரோடும் தெருவில் புதல்வன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வழியாக வந்த பெண் தலைவனின் காமக்கிழத்தி; இக்காலத் தமிழில் ஆசைநாயகி. தன் அன்பிற்கு
உரியவனின் புதல்வனை அடையாளம் கண்டு கொண்ட அவள் அடக்க முடியாத ஆசையுடன் அவனை அள்ளி எடுத்து அணைக்கிறாள். தலைவி ஏற்கனவே தலைவனின் நடவடிக்கை தெரிந்தவள் ஆதலால்; இச்சூழல் அப்பெண்ணை நேரில் பார்க்க ஏதுவாகத் தலைவிக்கு அமைந்தது. தலைவியைப் பார்த்தவுடன் நாணம் கொண்டு தலை கவிழ்ந்த அவளிடம் 'நீயும் இவன் தாயே' என்று சொல்லிச்சூழலைச் சமாளித்தாள் தலைவி. தலைவனோ தன் களவை மறைத்துப் பொய் கூறுவதை நிறுத்தவில்லை. நடந்ததைக் கூறி; நடப்பவற்றை மறைக்க இயலாது என்று அவனுக்கு உணர்த்திய மனைவி அக் காமக்கிழத்தி பற்றி 'அவளும் அருந்ததி போன்ற கற்பினை உடையவள்' என்று சான்று அளிக்கிறாள் (அகம்.- 16). அப்போது தலைவன் முகம் எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பார்த்து ரசிக்கலாம். குடும்பத்திற்குள் உரிமை மனைவியின் நிலைமை பற்றித் தனிப்பட உளவியல் ஆய்வும், பெண்ணிய ஆய்வும் நிகழ்த்தலாம்."
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jbeR4ieYeB%3DjEAuyR-5ANYff0RDz55icNzboraFH9wYQ%40mail.gmail.com.
///ஐங்குறுநூறு, 292, மஞ்ஞைப் பத்து:/// Dr.Ganesan wrote 3days ago.
இந்தப் பாடல் நீங்கள் சொல்வது போல இளையகுடியை வரவேற்கும் மூத்தகுடி தான் ஐயா.அதற்குரிய காரணத்தை உரையாசிரியர் விதந்து சொல்கிறார்.அவளுக்கு மகப்பேறு இல்லை; ஆதலால் குலம் தழைக்க அவன் இன்னொரு திருமணம் செய்வதை அவள் வரவேற்கிறாளாம்.நம் தலைமுறையில் நாம் நேரில் பார்த்த நடைமுறை தானே.அறியாமையின் விளைவு.நான் சொன்ன மற்றொரு பாடலில் ... மனைவிக்குப் புதல்வன் இருப்பவும்; அவன் இன்னொரு பெண்ணை நாட;அவள் அதை ஏற்றுக்கொண்டு பேசுவது..."தேரோடும் தெருவில் புதல்வன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வழியாக வந்த பெண் தலைவனின் காமக்கிழத்தி; இக்காலத் தமிழில் ஆசைநாயகி. தன் அன்பிற்கு
உரியவனின் புதல்வனை அடையாளம் கண்டு கொண்ட அவள் அடக்க முடியாத ஆசையுடன் அவனை அள்ளி எடுத்து அணைக்கிறாள். தலைவி ஏற்கனவே தலைவனின் நடவடிக்கை தெரிந்தவள் ஆதலால்; இச்சூழல் அப்பெண்ணை நேரில் பார்க்க ஏதுவாகத் தலைவிக்கு அமைந்தது. தலைவியைப் பார்த்தவுடன் நாணம் கொண்டு தலை கவிழ்ந்த அவளிடம் 'நீயும் இவன் தாயே' என்று சொல்லிச்சூழலைச் சமாளித்தாள் தலைவி. தலைவனோ தன் களவை மறைத்துப் பொய் கூறுவதை நிறுத்தவில்லை. நடந்ததைக் கூறி; நடப்பவற்றை மறைக்க இயலாது என்று அவனுக்கு உணர்த்திய மனைவி அக் காமக்கிழத்தி பற்றி 'அவளும் அருந்ததி போன்ற கற்பினை உடையவள்' என்று சான்று அளிக்கிறாள் (அகம்.- 16).
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6g92gFyGOFrQuV_Qho8H0YrnJ-u99t7H%2Bvp4BHyTMe02A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcJkohELSNeW6BM%3DycPUWHpmsvLnA%2BCnuBOdwmWRDzmmQ%40mail.gmail.com.