பாரத சமுதாயம் வாழ்கவே
----------------------------------------------
DKP:
https://youtu.be/KVwZrk3vbmwSivasri Skandaprasad:
https://youtu.be/-IOpKf5RZoIK. J. Jesudas:
https://youtu.be/lVH5Ca2Gmso> பாரதியார் தன் வாழ்நாளில் பொது மேடையில் பாடிய கடைசி பாட்டு எது? எங்கே எப்போது பாடினார்.
> "பாரத சமுதாயம் வாழ்கவே" சென்னை கடற்கரைக் கூட்டத்தில்.
https://bharathipayilagam.blogspot.com/2015/06/blog-post_17.htmlhttps://yarl.com/forum3/topic/260555-புரட்சியை-வரவேற்ற-புதுயுகக்-கவிஞர்-பாரதியார்-திவரதராசன்/" ‘பாரத சமுதாயம் வாழ்கவே!’ என்று தொடங்கும் பாரதியின் பாடலே அவர் எழுதிய கடைசிப் பாடல் என்று பாரதி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனை உறுதிசெய்வது போல் ‘பாரதி: சில பார்வைகள்’ என்ற நூலில் ஆய்வாளர் தெ.மு.சி.ரகுநாதன் கூறுவதாவது: “பாரதியின் நெருங்கிய தோழரும், தொழிற்சங்கத் தந்தையுமாகத் திகழ்ந்த வி.சக்கரைச் செட்டியார் 1.3.1922 அன்று தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பாரதியின் கடைசித் தோற்றம் கடற்கரையில் நடந்த ஓர் ஒத்துழையாமைக் கூட்டத்திலாகும். அவரைத் தமது பாடல்களிலொன்றைப் பாடும்படி ஜனங்கள் கேட்டபோது அவர் ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் துணிவான கருத்தும் உயர்ந்த மன எழுச்சியும் பொருந்தியதாகும்.”
இந்தப் பாடலில்தான் பாரதி, “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை” என்றார்.
ரஷ்யப் புரட்சியை “யுகப்புரட்சி” என்றார். ‘Revoluation’ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவமாகப்‘புரட்சி’யைத் தருகிறார் பாரதி. செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகக் கொடுங்கோல் ஆட்சிச் செய்த ஜார் மன்னனின் ஆட்சியைப் ‘புரட்டி’ப் போட்டப் பேரெழுச்சி என்பதால் அதற்குப் புரட்சி எனும் புதுமைச் சொல்லிட்டு அழைத்தார் பாரதி. ‘பொதுவுடைமை’, ‘புரட்சி’ ஆகிய இரு சொற்களும் புரட்சிகர இயக்கத்திற்கும், தமிழ்மொழிக்கும் பாரதி வழங்கிய அருங்கொடையாகும். "
பாரத சமுதாயம் வாழ்கவே - பாரதியார் மேடையில் பாடிய கடைசிப் பாடல் ஆகலாம். ஆனால், எழுத்துவடிவில் அச்சான கடைசிப் பாடல்கள் உள்ளன.
In particular, I am interested in songs written after the translation of a poem on Bharata Mata by an American poet from Detroit. I am reading Pe. Thooran's "Paarati Tamil" (Amuta Nilaiyam, 1953) in which this translation is published for the first time in a collection Bharatiar poems. How many songs did Bharati write after the above mentioned translation. will write more details on the American poet, the one who was opposed to Annie Besant.
Thanks
N. Ganesan