பக்ஷி விளக்கம் என்ன?

56 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Nov 27, 2022, 7:04:07 AM11/27/22
to வல்லமை, hiru thoazhamai
பக்ஷி விளக்கம் என்ன?

பக்ஷி என்பது சமசுகிருதத்தில் பறவையை குறிக்கும் சொல். ஆனால் இது தமிழ்ச் சொல்லில் இருந்து திரிக்கப்பட்டது.

பக்கி என்பது தான் பக்ஷி என திரிக்கப்பட்டது. கன்னடத்தில்  ப > ஹ திரிபில் ஹக்கி என்றே இன்றும் பறவை குறிக்கப்படுகிறது. வங்க மொழியில் இன்றும் பக்கி என்றே பறவை குறிக்கப்படுகிறது.

பொங்கு என்றால் உயர்தல், எழும்புதல் என பொருள். பொங்கு > பொக்கு ஆகி பின் ஒகர > அகர திரிபில் பக்கு ஆகி அதில் இருந்து பக்கி என்ற பறவையை குறிக்கும் சொல் உருவானது. பக்கி என்றால் உயரே எழும்பும் உயிரி என்பதே அதன் பொருள்.

பறவை என்ற சொல்லும் பர > பற என்ற உயர்வுக் கருத்தில் இருந்தே உருவானது.

பாவாணர் இருபக்கம் உடையது என்று பக்கிக்கு விளக்கம் தந்துள்ளார். இது உயர்வை குறிப்பதல்ல என்பதை நோக்குக.

image.png

seshadri sridharan

unread,
Nov 30, 2022, 8:07:36 AM11/30/22
to வல்லமை, hiru thoazhamai
  • Sivanandam Soundarapandiyan
    எனக்கே எல்லாம் வேண்டும் என்று பறப்பவனைப் பக்கி என்று ஏளனம் செய்வது வழக்கம்.
    2
  • இராசேந்திரன் அழகப்பன்
    ஆந்தையில் சிறிய ஆந்தை உள்ளது. இரவில் பக்... பக்.. என்று கத்தும். அதற்கு ஊர்களில் "பக்கு கத்துகிறது" என்பார்கள். அந்த சிறிய ஆந்தையை  பக்கு என்றே அழைப்பார்கள்.
    பனை மரத்தில் தொற்றி வாழும் சிறிய பறவைகளை #பக்கி என்று அழைப்பார்கள்.

N. Ganesan

unread,
Nov 30, 2022, 8:11:28 AM11/30/22
to வல்லமை
> பனை மரத்தில் தொற்றி வாழும் சிறிய பறவைகளை #பக்கி என்று அழைப்பார்கள்.

இது வௌவால்/வாவல். வவ்வுதலால் வந்த பெயர்.

வானி யாறு காவிரியை வவ்வும் இடம் வவ்வானி கூடல்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 30, 2022, 6:28:41 PM11/30/22
to vall...@googlegroups.com
On Sun, Nov 27, 2022 at 6:04 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
பக்ஷி விளக்கம் என்ன?

பக்ஷி என்பது சமசுகிருதத்தில் பறவையை குறிக்கும் சொல். ஆனால் இது தமிழ்ச் சொல்லில் இருந்து திரிக்கப்பட்டது.

பக்கி என்பது தான் பக்ஷி என திரிக்கப்பட்டது. கன்னடத்தில்  ப > ஹ திரிபில் ஹக்கி என்றே இன்றும் பறவை குறிக்கப்படுகிறது. வங்க மொழியில் இன்றும் பக்கி என்றே பறவை குறிக்கப்படுகிறது.

வங்க மொழியில் பாக்கி (பாகி) என்பது பக்கி.

பொக்கு/பொங்கு ‘லேசானது’ - பொங்கிலிருந்து பக்ஷி வருவதில்லை. பல பறவைகளின் சிறகுகள் வலிமை வாய்ந்தவை.

பகு- ==> பக்கம் ‘side, wing'. பக்கம் (சிறகு) உடையது பக்கி/பக்‌ஷி. பக்கம் தமிழ்ச்சொல் சங்க இலக்கியத்தில் ஏராளம்.
(1) pagsa- என்ற பாரசீகச் சொல்லும், பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல்லும் இணைந்து பக்‌ஷ, பக்‌ஷி வந்திருக்கலாம். றெக்கை பெரிசா இருந்தால், பக்கி என்போம். உ-ம்: வௌவால் பக்கி எனப்படுகிறது. பக்கித் தட்டான், தட்டாரப் பூச்சி இறக்கையும் பெரிது. ஏரோப்ப்ளேனுக்கு தூக்குவிசை (லிஃப்ட் ஃபோர்ஸ்) உருவாவது அதன் பெரிய பக்கங்களால் தான். கடற்கரைப் பட்டினங்கள் கடற்கரை, துறைமுகம், மீனவர் பகுதி, மற்ற மக்கள் வாழ் பகுதி எனப் இரு பக்கங்கள் இருக்கும். அது பாக்கம்.

(2) அரக்கு-  ரக்‌ஷ, ராக்‌ஷ என்று சிவப்பு (அரத்த) நிறப் பொருளுக்கும், ரக்‌ஷ > lac. அரக்கர் ராக்‌ஷ- ராக்‌ஷசர் என்றும் ஆகிறது.

(3) தய் (தை) என்னும் சொல், தய்க்க/தைக்க > தக்‌ஷ- ‘carpenter' இதுபற்றி முன்பு எழுதியுள்ளேன்.

....

நா. கணேசன்

பொங்கு என்றால் உயர்தல், எழும்புதல் என பொருள். பொங்கு > பொக்கு ஆகி பின் ஒகர > அகர திரிபில் பக்கு ஆகி அதில் இருந்து பக்கி என்ற பறவையை குறிக்கும் சொல் உருவானது. பக்கி என்றால் உயரே எழும்பும் உயிரி என்பதே அதன் பொருள்.

பறவை என்ற சொல்லும் பர > பற என்ற உயர்வுக் கருத்தில் இருந்தே உருவானது.

பாவாணர் இருபக்கம் உடையது என்று பக்கிக்கு விளக்கம் தந்துள்ளார். இது உயர்வை குறிப்பதல்ல என்பதை நோக்குக.

image.png
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPT%3Ds-0wZA4D4ShvzmiRfED6OftfyAh1QTrZN4NF1dO1Og%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Dec 1, 2022, 12:22:09 AM12/1/22
to vall...@googlegroups.com
On Thu, 1 Dec 2022 at 04:58, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

பக்கம் என்பதில் இருந்து பக்கி உருவாகவில்லை. பறவை போல உயர்வு கருத்தில் இருந்து வந்தது. கீழே பொக்கம் வேர் சொல் காண்க. அதனால் தான் பாவாணர் தவறாக உரைத்தார் என்றேன்.

image.png

(2) அரக்கு-  ரக்‌ஷ, ராக்‌ஷ என்று சிவப்பு (அரத்த) நிறப் பொருளுக்கும், ரக்‌ஷ > lac. அரக்கர் ராக்‌ஷ- ராக்‌ஷசர் என்றும் ஆகிறது.

(3) தய் (தை) என்னும் சொல், தய்க்க/தைக்க > தக்‌ஷ- ‘carpenter' இதுபற்றி முன்பு எழுதியுள்ளேன்.

....

நா. கணேசன்

பொங்கு என்றால் உயர்தல், எழும்புதல் என பொருள். பொங்கு > பொக்கு ஆகி பின் ஒகர > அகர திரிபில் பக்கு ஆகி அதில் இருந்து பக்கி என்ற பறவையை குறிக்கும் சொல் உருவானது. பக்கி என்றால் உயரே எழும்பும் உயிரி என்பதே அதன் பொருள்.

பறவை என்ற சொல்லும் பர > பற என்ற உயர்வுக் கருத்தில் இருந்தே உருவானது.

பாவாணர் இருபக்கம் உடையது என்று பக்கிக்கு விளக்கம் தந்துள்ளார். இது உயர்வை குறிப்பதல்ல என்பதை நோக்குக.

image.png
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPT%3Ds-0wZA4D4ShvzmiRfED6OftfyAh1QTrZN4NF1dO1Og%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2022, 6:13:00 AM12/1/22
to vall...@googlegroups.com
On Wed, Nov 30, 2022 at 11:22 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> பக்கம் என்பதில் இருந்து பக்கி உருவாகவில்லை. பறவை போல உயர்வு கருத்தில் இருந்து வந்தது. கீழே பொக்கம் வேர் சொல் காண்க. அதனால் தான் பாவாணர் தவறாக உரைத்தார் என்றேன்.
>
Not really. pakSa 'side, wing', hence pakSin 'bird' are well-known etymologically for 100s of years. That's what is repeated by Pavanar also.
what I suggest is that Dravidian verb, paku- and the verbal noun, pakkam in a rare coincidence with Indo-European pagsa- 'side, wing' produces
pakSa and pakSi with retroflex S (ஷ்), a specialty seen in Indian linguistic area. (1) pakSa (2) rakSa 'lac' (3) takSa are good examples of Dravidian
words in Indo-Aryan languages.

NG

kanmani tamil

unread,
Dec 1, 2022, 7:11:47 AM12/1/22
to vallamai
///pagsa- என்ற பாரசீகச் சொல்லும், பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல்லும் இணைந்து பக்‌ஷ, பக்‌ஷி வந்திருக்கலாம்.///
Dr.Ganesan wrote...

எதற்காக பாரசீகச் சொல்லை இங்கே இணைக்க வேண்டும்? 
பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல் ஒருபுறம் 'பக்ஷி' என்றும்; இன்னொரு புறம் /pagsa/ என்றும் திரிந்து சென்றிருக்கலாம். 

///கடற்கரைப் பட்டினங்கள் கடற்கரை, துறைமுகம், மீனவர் பகுதி, மற்ற மக்கள் வாழ் பகுதி எனப் இரு பக்கங்கள் இருக்கும். அது பாக்கம்.///

புகார் நகரம் இருகூறுபட்டு இருந்தது. 
வேறெந்தப் பட்டினம் இருகூறுபட்டு இருந்தது?

சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2022, 7:33:53 AM12/1/22
to vall...@googlegroups.com
On Thu, Dec 1, 2022 at 6:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///pagsa- என்ற பாரசீகச் சொல்லும், பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல்லும் இணைந்து பக்‌ஷ, பக்‌ஷி வந்திருக்கலாம்.///
Dr.Ganesan wrote...

எதற்காக பாரசீகச் சொல்லை இங்கே இணைக்க வேண்டும்? 
பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல் ஒருபுறம் 'பக்ஷி' என்றும்; இன்னொரு புறம் /pagsa/ என்றும் திரிந்து சென்றிருக்கலாம். 

தெரியவில்லை. pagsa இந்தோ-ஐரோப்பிய பாஷைகளில் மிக ஆழமானது. விரிவான கட்டுரை தருகிறேன்.

///கடற்கரைப் பட்டினங்கள் கடற்கரை, துறைமுகம், மீனவர் பகுதி, மற்ற மக்கள் வாழ் பகுதி எனப் இரு பக்கங்கள் இருக்கும். அது பாக்கம்.///

புகார் நகரம் இருகூறுபட்டு இருந்தது. 
வேறெந்தப் பட்டினம் இருகூறுபட்டு இருந்தது?

சங்க காலக் கணிதவியலைக் காட்டும் பிராமி எண்கள் பற்றிய என் கட்டுரை. இதனை எழுதும்போது,
பத்மஸ்ரீ ஐராவதம் ஐயாவிடம் அவர் கருத்துக்கு மாறுபட்டு இதில் குறிப்பிடும் எண் 804 தான் என
நேரில் விளக்கினேன்.

மருவூர், மருங்கூர் என்பதெல்லாம் கடல் கரையை மருவும் இடமாக இருக்கலாம்.

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்

தாலமி குறிப்பிடும் சாலியூர் (மருங்கூர்ப் பட்டினம்):

காவிரி ஆறு கடலில் புகும் பூம்புகாரைக் காவேரிப் பூம்பட்டினம் என்கிறோம். பட்டினம் என்றால் கடற்கரையில் அமைந்த ஊர். கொங்குநாட்டில் மாளிகையின் புகுமுகம் (Portico) பூமுகம் ஆவதுபோலே, ஆறு கடலில் புகும் பட்டினம் பூம்பட்டினம். வையைப் பூம்பட்டினம் பாண்டிநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் அது ராமேசுவரம் அருகே பெரிய ஊராகவோ, துறைமுகமாகவோ இன்றில்லை. வையை கடலில் புகும் பட்டினத்தின் சங்ககாலப் பெயர் மருங்கூர்ப் பட்டினம். மருங்கை என்றும் அழைத்தனர். தமிழரின் கடலாடு வணிகத்தைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல கிடைக்கும் ஊர் மருங்கூர்ப் பட்டினம். ஆனால், இன்று அழகன்குளம் என்று அழைக்கப்படுகிறது. கடல் சற்றே உள்வாங்கிவிட்டது; நதியும் வறண்டுபோய்க் கடலில் கலப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஏராளமான நீர்வரத்து வையைப் பூம்பட்டினத்தில் (= மருங்கூர்ப் பட்டினம்) இருந்ததென அறிகிறோம். இயற்கையைப் பேணாவிட்டால் இந்தியாவே வறண்ட பூமி ஆகிவிடும் என்பதற்கு மருங்கையின் வரலாறே சாட்சி.

ஏராளமான தொல்லியல் சான்றுகள் அழகன்குளத்தில் கிடைப்பதால், வையை ஆறு கடலில் சங்க காலத்தில் சங்கமித்த இடமாக இவ்வூர்ப்பகுதி இருக்கவேண்டும். மருங்கூர்ப் பட்டினத்துக்கு ரோமானியக் கப்பல்கள் முதல் நூற்றாண்டில் வந்ததைத் தமிழ் ஓவியர் ஒருவர் பானை ஓட்டில் வரைந்துள்ளார் [1]. இதனைச் சங்க இலக்கியமும் பாடுவதைப் பார்ப்போம்.

காவிரிப் பூம்பட்டினம் எவ்வாறு பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அதுபோன்றே இந்த வையைப் பூம்பட்டினமும் ஊணூர், மருங்கூர்ப் பட்டினமென இரு பகுதிகளாக விளங்கின. இந்த மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும், செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை நக்கீரர் பாடியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (அகம் 227). மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ (பக். 95-96) நூலில் மருங்கை என வழங்கப்பெற்ற மருங்கூர்ப் பட்டினம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் அகம் 220-ல் குறிப்பிடுகிறார். “ஆடியற் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கு இருக்கைத் தெண் கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! ” பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நெல்லின் ஊரை வென்றான் என்கிறது மதுரைக்காஞ்சி.

சக

On Thu, 1 Dec 2022, 4:43 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Wed, Nov 30, 2022 at 11:22 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> பக்கம் என்பதில் இருந்து பக்கி உருவாகவில்லை. பறவை போல உயர்வு கருத்தில் இருந்து வந்தது. கீழே பொக்கம் வேர் சொல் காண்க. அதனால் தான் பாவாணர் தவறாக உரைத்தார் என்றேன்.
>
Not really. pakSa 'side, wing', hence pakSin 'bird' are well-known etymologically for 100s of years. That's what is repeated by Pavanar also.
what I suggest is that Dravidian verb, paku- and the verbal noun, pakkam in a rare coincidence with Indo-European pagsa- 'side, wing' produces
pakSa and pakSi with retroflex S (ஷ்), a specialty seen in Indian linguistic area. (1) pakSa (2) rakSa 'lac' (3) takSa are good examples of Dravidian
words in Indo-Aryan languages.

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfEdyiDrtjSE8vDKJ2W-XsR%2Br%3DYVVLgfPpdZ2dabc%3DPCQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 1, 2022, 7:54:41 AM12/1/22
to vallamai
மருங்கூர் குறித்துத் தெளியத் தந்தமைக்கு நன்றி. 
சக 

N. Ganesan

unread,
Dec 1, 2022, 7:56:55 AM12/1/22
to vall...@googlegroups.com
On Thu, Dec 1, 2022 at 6:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மருங்கூர் குறித்துத் தெளியத் தந்தமைக்கு நன்றி. 
சக 

நன்றி. An important part of this essay ancient Tamil mathematics. I don't think anyone has written in details.

NG

N. Ganesan

unread,
Dec 1, 2022, 8:02:20 AM12/1/22
to vall...@googlegroups.com

கடற்கரைத் துறைமுக நகரங்கள் இரு பக்கங்களாக, வாழ்வியலிலும், பொருளாதாரத்திலும் விளங்குகின்றன. உலகெங்கும் பார்க்கலாம். இப்படி Port city, ஏனை நகரம் இருப்பதால், இரு பக்கங்கள் (பக்கி, பக்கிணி போல) எனவே, பாக்கம் என்ற பெயர் வருகிறது.

பக்கிணி pakkiṇi , n. pakṣiṇī. A night with the two days enclosing it; ஓர் இரவும் அதற்கு முன்பின்னுள்ள இருபகல்களும். (சங். அக.)

seshadri sridharan

unread,
Dec 1, 2022, 10:07:51 AM12/1/22
to vall...@googlegroups.com
பக்கியை குறிக்கும் இன்னொரு சொல் புள். புல் > புள் > புலை > புரை > புரம் > புரி. புரம் > பரம்  மேலே, உயர்ந்த என்னும் பொருளுடையது. புரை ஏறுதல் என்றால் உண்ணும் போது சோறு மேலே ஏறி மூக்கின் வழி வெளிப்படுவது. எனவே புள் என்பதும் மேலெழும் பறவையை தான் குறிக்கிறது. பறவை - புள் - பக்கி.  ஒட்டியுள்ள படத்தில் விளக்கம் காண்க.

இரடு என்றால் பிளத்தல். பிளவு கருத்தில் இருந்து தோன்றியதே இறக்கை > wing. இறகு > சிறகு. இருபக்கம் உடையது பக்கி என்றால் இறக்கை என்பதில் பறவை என்ற சொல் இருக்க வேண்டுமே? இல்லையே!! ஏன் இல்லை? எனவே பக்கி என்ற உயர்வு சொல்லிற்கு பக்ஷி  என்ற தவறான சமசுகிருத சொல் விளக்கத்தை பாவாணர் காட்டியது தவறு.

1eacf4f4-8991-4884-ac75-2476128ec4bb.png

Reply all
Reply to author
Forward
0 new messages