வாங்கு-/வாக்கு- தன்வினை/பிறவினை இணைச்சொற்கள் (தேங்கு-/தேக்கு- .... போல)

18 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 25, 2015, 10:08:31 PM2/25/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham, tiruva...@googlegroups.com
வாங்கு-/வாக்கு- தன்வினை/பிறவினை இணைச்சொற்கள் (தேங்கு-/தேக்கு- .... போல)
----------------------------------------------------------------------------------------------------------------------

அரங்கு-/அரக்கு-, அணங்கு-/அணக்கு-, ஏங்கு-/ஏக்கு (ஏக்கம்), நீங்கு-/நீக்கு-, தாங்கு-/தாக்கு-, ... போன்றன தன்வினை/பிறவினை ஜோடிகள். இதேபோல, சங்க இலக்கியத்தில் இருந்து இன்றும் இருக்கிற வாங்கு-/வாக்கு- எனும் தன்வினை/பிறவினை சோடிச்சொல்லைப் பார்ப்போம். வாக்குதல் என்றால் சாய்த்து வளைத்தல் என்பது அடிப்படைப்பொருள். சட்டியை வாக்கினால்
கஞ்சி கீழே தாரையாய் ஊற்றப்படும்/வார்க்கப்படும். வாக்கல் - ஊற்றல்/வார்த்தல் என்பது இரண்டாம்பட்ச விளைவு தான். 
வாக்கு-/வாங்கு- அடிப்படைப்பொருள் சாய்தல், வளைதல். 

வாங்கு-தல்/வாக்கு-தல் = வளைதல்/வளைத்தல்
வாக்குதல் என்னும் இந்த சங்கச்சொல் நாட்டுப்புறத்தில் இருப்பினும்,
நகர்ப்புறங்களில் இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் வாக்கு 
(vocal, voice, vAc 'sarasvati, vAkdevi') என்னும் வடசொல் மிகுதியும் பயன்படுவது ஆகும். 

On Monday, February 23, 2015 at 5:55:51 AM UTC-6, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா! தாங்கள் (நூதலோசு) குறிப்பிட்டிருந்த,
துளங்கு தசும்பு ஆக்கிய பசும்பொதித் தேறல்
என்ற மலைபடுகடாம் அடியில் (463) ஆக்கிய என்பதற்குப் பதில் வாக்கிய என்று இருக்கவேண்டும். வாக்கு என்றால் வார்த்தல்.  சோற்றுப் பானையை அடுப்பிலிருந்து சிறிதளவு சாய்த்து, மேலே நிறைந்து இருக்கும் கஞ்சியை வடித்துவிடல் போன்றது. தெளிவாக இறுத்தல் எனலாம். இதற்குப் பாத்திரத்தின் கழுத்து சற்றுக் குழிவாக இருக்கவேண்டும். அந்த இடத்தில் கவட்டையை வைத்துச் சட்டியை நிலைநிறுத்துவார்கள். கீழிருக்கும் பாத்திரத்தில் கஞ்சி வடிந்து விழும். எனவே அந்தச் சட்டி ஒரு பெரிய செம்பு போல் இருக்கவேண்டும். அல்லது ஒரு சிறிய குடம். தேறலைக் காய்ச்சும்போது (நான் காய்ச்சியதில்லை!!) 'கதக் புதக்'-என்று அது கொதிக்கும். அப்போது அதைத் தாங்கமாட்டாமல் பாத்திரம் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நிமிரும்.  இதுதான் துளங்குதல். இவ்வாறு துளங்குகின்ற தசும்பினின்றும் (தீயை இறக்கிவிட்டு) மேலாக இருக்கும் தேறலை வடித்துவிடுவார்கள். இதுதான் துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். தேறல் என்றால் கள் தெளிவு என்று உங்களுக்குத் தெரியும். (மீண்டும் சொல்கிறேன் - எல்லாம் ஒரு அநுமானம்தான் - பழக்கம் இல்லை!!)
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி என்று பட்டினப்பாலையிலும் (44)வருதல் காண்க..
நன்றி,
ப.பாண்டியராஜா

வாக்குதல் என்றால் சாய்த்து வளைத்தல் என்பது அடிப்படைப்பொருள். சட்டியை வாக்கினால் கஞ்சி கீழே தாரையாய் ஊற்றப்படும்/வார்க்கப்படும். இது இரண்டாம்பட்ச விளைவு தான். வாக்கு-/வாங்கு- அடிப்படைப்பொருள் சாய்தல், வளைதல். வாங்கு-தல்/வாக்கு-தல் = வளைதல்/வளைத்தல்.

இதனை த்ராவிட எட்டிமாலஜிகல் அகராதியில் காணலாம்.

முதலில், தன்வினைச் சொல் “வாங்கு-தல்
5335 Ta. vāṅku (vāṅki-), vēṅku (vēṅki-)
5335 Ta. vāṅku (vāṅki-), vēṅku (vēṅki-) to bend (intr., tr.), sink, subside, move to one side, withdraw; n. bending; vāṅkal bending, curve, inclination; vākku bend, irregularity. Ma. vāṅṅuka to bend, shrink, draw back; vāṅṅikka to withdraw (tr., as an army); vāṅṅal withdrawing. Ko. va·g- (va·gy-) to make (pot) bulge (in throwing it on the wheel); vag- (vagy-) to be slightly bowed down, crouch, be obedient to orders; vak- (vaky-) to bend (intr.), be cowed; vakc- (vakc-) to make to be obedient to orders, bend (tr., iron). To. pa·g- (pa·gy-) to fall, (disease) subsides, (buffalo, coagulant) goes to sacred place (dairy, etc.). Ka. bāgu to bend, bow, incline, stoop; bend (tr.); n. bending, inclining, curve; bāgisu to bend (tr.), cause to bend; bāguvatana, bāguha bending; baṅku to be crooked, bend; baggu, boggu to bend, bow, become submissive; baggisu, boggisu to bend (tr.); boṅkane in a bending or bent way; bokka with a turn, bend, or bow. Koḍ. ba·ŋg- (ba·ŋgi-) to become bent, slope; bagg- (baggi-) to stoop, bend down. Tu. bāguni, bāṅguni to bow, stoop, lean on one side; bāṅgāvuni to cause to bow or stoop, bagguni to bend, bow, stoop, yield, submit; baggāvuni to cause to stoop, make bend; baggele a bending or crouching man. Te. vaṅgu to bend, stoop, bow, become crooked, become low or humbled; vancu, (K. also) vampu to bend, cause to stoop, subdue, humble, overpower; vampu bend, curve, crookedness; bent, curved, crooked; vāncu to bend head, cause to bend; vã̄ka crooked. Kol. vaŋg- (vaŋkt-) to bend (intr.); vaŋgip- (vaŋgipt-), vap- (vapt-) id. (tr.). Nk. vaŋg- id. (intr.). Pa. vaŋg- id. (intr.); vaŋgip- (vaŋgit-) id. (tr.). Ga. (S.3) vaŋka curve. Go. (Mu.) vak-, (Ma.) vaŋg- to bend (intr.); (M.) vangānā to be bent; (Mu.) vakta crooked, zigzag (Voc. 3140); (S.) vaŋkor, (Ko.) vaŋko bent, crooked (Voc. 3144). Konḍa vaŋ- (-it-) to bend, become bent; vak- (-t-) to bend (tr.); vekoṟi crooked. Kuwi (F.) vwāngali to be crooked; vwakhali to bend; (S.) wanginai to be bent, stoop; (Su. Isr.) vaŋg- (-it-) to bend (intr.), be bent; vak- (-h-) to bend (tr.). Kur. beŋknā, beŋka'ānā to turn (tr.) from a straight line, bend, curve; beŋkō, baŋkā crooked, bent, curved. / Cf. Skt. (lex.) Pali Pkt. vaṅka- crooked; bend (of river); Turner, CDIAL, no. 11191. DED(S) 4371.

5336 Ta. vāṅku (vāṅki-)
5336 Ta. vāṅku (vāṅki-) to receive, take, buy, get, obtain, carry away as a flood, draw, drag, pull, take in (as breath), get back, take back, remove, take away; vāṅkal receiving, admitting, borrowing, buying. Ma. vāṅṅuka to take, receive, choose; vāṅṅal purchasing; vāṅṅikka to demand back; vāṅṅippikka to make one take. DED 4372.

வாங்குதல் - இதன் பிறவினைச்சொல் வாக்குதல்: வளைத்துச் சாய்ப்பதால் கஞ்சி ஊற்றப்படுவதைக் குறிப்பதாகிறது.
5334 Ta. vākku (vākki-)
5334 Ta. vākku (vākki-) to pour (tr.); vākkal boiled rice from which conjee has been poured. Ko. va·k- (va·yk-) to pour out slowly (tr.). To. po·x- (po·xy-) to flow down completely; po·k- (po·ky-) to empty out completely; ? po·x blood. Ka. bāgu to pour off water from boiled rice, etc., by inclining the vessel. Koḍ. ba·k- (ba·ki-) to pour off water from cooked rice. Te. vã̄ka, vã̄gu rivulet, streamlet; (K.) vancu to serve from a container, empty. Kol. va·ŋg- (va·ŋkt-) to pour or ladle (liquid). Nk. (Ch.) vāŋ(g)- to pour. Ga. (Oll.) vaŋ(g)- to leak; (S.) vāng- to leak, overflow; (S.3) vāŋ- to flow out like water; vāŋp- (vāŋup-) to make to flow out. Go. (Tr.) wāngānā to trickle, of water, grain, dust, etc.; (Ph.) vāngānā to drip, drop; (A.) vāŋg- to drip, leak; (Mu.) vāŋ- (pot) to leak; (Ma.) vāŋg- to be poured, spilled (Voc. 3218); (Ma. Ko.) vanc- to strain off water from boiled rice (Voc. 3145). Konḍa vāŋ- (-it-) to be poured, flow, drip; vāk- (-t-) to pour (as water). Pe. vāk- (-t-) to pour. Manḍ. vāŋ- to leak; vāk- to pour. Kui vānga (vāngi-) to leak, percolate; n. leak, percolation; vāpka (< vāk-p-; vākt-) to cause to leak, pour out from a small opening, sow in drills; n. sowing in drills. Kuwi (F.) vwāngali, (S.) wānginai to leak; (F.) vwākhali, (S.) wākh'nai to pour; vāŋg- (-it-) (Su.) to flow, be poured, (Isr.) leak; (Su. Isr.) vāk- (-h-) to pour. Malt. bagbagre to be poured out copiously. Cf. 5356 Ta. vār. DED(S, N) 4370.

காண்பது கண். அதுபோல். வாக்கு-தல் குறுகி வக்கல். வளைந்த விளிம்பு. வளவு (quarter), திசை.
5208(a) Ma. vakkal side; vakku brim, edge..Te. vaṅka direction, side, quarter. (b) Ta. vākku side, direction. Te. vã̄ka side, quarter. DEDS 851.

மேலும்,
வங்கு (எலிவங்கு = எலிவளை). வங்கி - வளைந்த நகை.

வணிகம் என்றால் வளைதல். கொடுக்கல் வாங்கலில் வளைந்துகொடுத்தல் நிறைய இருக்கும்.
வில் (”வில்லுன்னா வில்லு, வில்லாட்டிப் போ”), விற்றல்/விற்பனை, வாங்குதல் (=வளைதல்), வணிகம்,
வணியன் (வணிஜ - இருக்குவேதம்) வளை-தல் என்னும் தமிழின் தாதுவேர் இயங்குவது
காணலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 27, 2020, 2:41:53 PM5/27/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Monday, February 23, 2015 at 5:55:51 AM UTC-6, Pandiyaraja wrote to N D Logasundaram
மிக்க நன்றி ஐயா! தாங்கள் (நூதலோசு) குறிப்பிட்டிருந்த,
துளங்கு தசும்பு ஆக்கிய பசும்பொதித் தேறல்
என்ற மலைபடுகடாம் அடியில் (463) ஆக்கிய என்பதற்குப் பதில் வாக்கிய என்று இருக்கவேண்டும். வாக்கு என்றால் வார்த்தல்.  சோற்றுப் பானையை அடுப்பிலிருந்து சிறிதளவு சாய்த்து, மேலே நிறைந்து இருக்கும் கஞ்சியை வடித்துவிடல் போன்றது. தெளிவாக இறுத்தல் எனலாம். இதற்குப் பாத்திரத்தின் கழுத்து சற்றுக் குழிவாக இருக்கவேண்டும். அந்த இடத்தில் கவட்டையை வைத்துச் சட்டியை நிலைநிறுத்துவார்கள். கீழிருக்கும் பாத்திரத்தில் கஞ்சி வடிந்து விழும். எனவே அந்தச் சட்டி ஒரு பெரிய செம்பு போல் இருக்கவேண்டும். அல்லது ஒரு சிறிய குடம். தேறலைக் காய்ச்சும்போது (நான் காய்ச்சியதில்லை!!) 'கதக் புதக்'-என்று அது கொதிக்கும். அப்போது அதைத் தாங்கமாட்டாமல் பாத்திரம் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நிமிரும்.  இதுதான் துளங்குதல். இவ்வாறு துளங்குகின்ற தசும்பினின்றும் (தீயை இறக்கிவிட்டு) மேலாக இருக்கும் தேறலை வடித்துவிடுவார்கள். இதுதான் துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். தேறல் என்றால் கள் தெளிவு என்று உங்களுக்குத் தெரியும். (மீண்டும் சொல்கிறேன் - எல்லாம் ஒரு அநுமானம்தான் - பழக்கம் இல்லை!!)
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி என்று பட்டினப்பாலையிலும் (44)வருதல் காண்க..
நன்றி,
ப.பாண்டியராஜா
---------------------------------------------------------------

On Sun, May 17, 2020 at 1:43 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

' கஞ்சி ' என்ற சொல் பயன்பாடு சங்க இலக்கியத்தில் உண்டு. ஆனால் அது சோறு ஆக்கி வடித்ததையே குறித்தது. 

"சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி 
ஆறு போலப் பரந்தொழுகி" - இங்கே சொல்லப்படும் கஞ்சி;  வடிகஞ்சி ஆகும். 

வடிகஞ்சி என்பதால், இங்கே, வ் என்பதை நீங்கள் உடம்படுமெய் என எடுப்பது சரியெனப் படவில்லை.
வ்- விடாமல் வரிப்பறை, வரிநீறு, வரியணில், வரிக்குதிரை, ... போல வரும்.
ய்- விடாமல் ஆலமரம், யால மரம் என்ற பழம்பெயர் தெரியும்.

சோறு வாக்கிய கொழுங்கஞ்சி. என்பது. வாக்குதல் - வளைத்தல். இதைப்பற்றி விரிவாக பண்டியராஜா ஐயா
எழுதினார். அவ்விழையில் நானும் பங்குபெற்றதாக நினைவு.
வாக்குதல் வினையால் வரும் பெயரை, வரிப்பறையில் எழுதியுள்ளனர். சீவக சிந்தாமணிப் பாட்டு இச் சங்கப்
பாட்டின் பொருளைத் தெளிவுறுத்துகிறது. அப்பாடலும், பொருளும் தனி இழையில் பார்ப்போம்.

மேலும், வரிப்பறை = நெற்பறை என்பது அருமை (நற்றிணை 58). செவ்வரிப்பறை = செ+வரிப்பறை எனப் பிரிப்பதுபோல, சோறு வாக்கிய கொழுங்கஞ்சி. பெருமழைப்புலவர் பொருள் விளங்காப்பாடல் என்று கூறும் ஒரு பாடலுக்கு, இந்த செந்நெற் பறை எனப் பொருள் கொண்டால் பொருள் சிறக்கும். அப்பாட்டில், வட்டமாக இருக்கும் வரிப்பறையின் கண்ணில் எழுதிய “குருவி” பெயருமிருக்கிறது. வடமொழியில், நெல்லம் வயல்களில் இருக்கும் இப்பறவை பெயர் வருதற்கு இச் சங்கப்பாடல் தாதுவேர் காட்டும். வட்டம் என்பதன் பழைய தமிழ்ப்பெயர் இப்பாட்டால் தெரிகிறது. மிருதங்கத்திலும் உண்டு.

பிற பின்,
நா. கணேசன்

அப்போது 2015-ல் என் மடல்,

--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tiruvalluvar...@googlegroups.com.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tiruvalluvar.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
May 29, 2020, 1:42:09 PM5/29/20
to vallamai, mintamil
இது தொடர்பாக ஒரு ஐயம்; 
பேச்சு வழக்கில் எங்கள் பக்கம் சில பிற சமூகத்தவர் திருமணம் முடிந்து புகுந்தவீடு சென்ற பெண்ணைப் பற்றிப் பேசும்போது 'வாக்கப்பட்டுப் போயிருக்கா' என்பார்கள். 
இவ்வளவு நாளும் 'வாழ்க்கைப்பட்டுப் போயிருக்கா' என்பதன் மரூஉ என்று நினைத்தேன்; 
இப்போது 'வாக்குதல்' = வளைத்தல் என்று கொண்டு ; பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு (வளைத்து) அனுப்பப்பட்டவள் எனக் கொள்ளலாம் போல் தெரிகிறது.
சரியா?
சக               

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf1wCtOMx9kauya5w3oWtVjWKu3%3DWAGii5xq4Pt0uHNKA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 29, 2020, 2:19:59 PM5/29/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, May 29, 2020 at 12:42 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இது தொடர்பாக ஒரு ஐயம்; 
பேச்சு வழக்கில் எங்கள் பக்கம் சில பிற சமூகத்தவர் திருமணம் முடிந்து புகுந்தவீடு சென்ற பெண்ணைப் பற்றிப் பேசும்போது 'வாக்கப்பட்டுப் போயிருக்கா' என்பார்கள். 
இவ்வளவு நாளும் 'வாழ்க்கைப்பட்டுப் போயிருக்கா' என்பதன் மரூஉ என்று நினைத்தேன்; 
இப்போது 'வாக்குதல்' = வளைத்தல் என்று கொண்டு ; பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு (வளைத்து) அனுப்பப்பட்டவள் எனக் கொள்ளலாம் போல் தெரிகிறது.
சரியா?
சக               

வா- என்பது இதன் தாதுவேர். இந்தத் தாது பிறப்பிக்கும் சொற்கள் பல. கோ- கோக்கல், கோர்க்கல் என்பது போல. வா- வாக்கல், வார்க்கல். நீரைத் தாரை வார்ப்பது கன்னிகாதானத்தில் ஒரு முக்கியச் சீர். வாரணம் என்றால் யானை என ஒரு பொருள். காரணம்: சேரமன்னன் தன் உம்பல்காட்டு யானைகளை இருகடலுக்கும் அனுப்பி (கீழைக்கடற்கரையில் நறையாறு-பொறையாறு பகுதி, பாண்டிக்கோவை) ஒரு நாளில் ராஜ்ய பட்டாபிஷேகம் ஏற்றான் (பதிற். ).
வாரணம் கஜலக்ஷ்மி சிற்பங்களில் யானைகள் பூர்ணகும்பத்தைத் திருமகள் மீது வார்க்கும். வார்க்கப்பட்டுப் போயிருக்கா என்பதும் வாக்கப்பட்டுப்போயிருக்கா என ஆகியிருக்கலாம்.

வா- வாகு எனவும் வரும். வாகான உடல். சக்கரவாகம் - இமயமலையை அன்னம் (bar-headed geese) போல கடக்கும் ஒரு தாரா. இந்தியாவின் தேசியக்கொடியின் நிறங்கள் இந்த பிராமணி டக்குக்கு *duck* இயற்கையாகவே உண்டு. சக்ரவாகம் என்பது சக்ரவாளம் எனவும் வரும். வாகம் = வாளம் < வளை- சக்கரம் போல் உடல் வளைந்துள்ள தாராப்புள் = சக்ரவாகம்.

சே+ ஆ = சேதா, மூ+ஆ = மூதா, இதேபோல, பே (அணங்கு) + உறு = பேதுறு-. பேதாளம் > வேதாளம். அணங்கைக் கட்டுப்படுத்துவோர் = வைதாளிகர் என்னும் பாணர் வகுப்பினர். பேது- > ப்ரேத (சவம்,  சவம் < சாய்தலான்). இதேபோல, வளைதல் என்பதன் பொருள் கொண்ட வா- தாது தருவது வாது. மரக்கிளை = வாது. (வளைந்திருப்பது).

வா- இதன் தன்வினை வாங்கு-. இதனில் உருவாகும் பெயர் கொண்ட புள்ளைக் கடிதலால், இப்பறவை படம் வரிப்பறையில் எழுதுவர் (அ) அப்புள் கடிதல். வரிப்பறை = நெல்லறுவடைக் காலத்தில் அடிக்கும் பறைக்கருவி. இதனால், ஒரு சங்கப் பாட்டின் பொருள் நன்கு விளங்குகிறது. என்ன பாடல் எனத் தெரிகிறதா? தனி இழையில்
அப்பாடல் பற்றிச் சொல்கிறேன். வா- வாங்கு- என்பதனால் வௌம் பறவைப்பெயர் அதனில் உண்டு.

NG

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctW8O6pFPZU2pw4Ywc58dQKjJQ3%3DuOQ7_pKbg%2Buio2rUQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 30, 2020, 7:19:31 AM5/30/20
to mintamil, vallamai
தேமொழி, 
என் திருமணம் , என் தம்பி, தங்கை, உறவினர்  திருமணங்கள் எல்லாமே சுயமரியாதைத் திருமணம் தாம். 
ஆனால் 1979ல் சிவகாசி வந்து சேர்ந்த நாளிலிருந்து இந்த ஊரில் நான் காணும் அனைத்துத் திருமணங்களும் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுத்துத் தீவலம் செய்யும் திருமணங்கள் தாம். 

ஆண்டாளின் கனவு; அப்படியே இங்கு சிவகாசியில் நடக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும்- தீவலம் செய்யும் திருமணம் தான்.

முதல் மூன்று பாடல்கள் முந்தையநாள் இரவு நடக்கும் மாப்பிள்ளை அழைப்பு. 
நான்காம் பாடலில் காப்பு கட்டுவது முதல் நலங்கு, ஊர்வலம் என நடக்கும் அனைத்தும் வேதமந்திரங்கள் ஒலிக்க; தீவலம் செய்யும் திருமண நிகழ்ச்சிகள். அதில் கைப்பிடித்துக் கொடுக்கும் நிகழ்வைச் செறிவாகச் சொல்வதால் தாரை வார்த்தல் என்ற வருணனை இல்லை (6ம் பாட்டு). 
உள்ளபடி கைப்பிடித்துக் கொடுக்கும் போது மணமகனைப் பெற்றவரது கைகள் தாம் அடியில் இருக்கும். அதற்குமேல் மணமகன் கைகள்;  அக்கைகளில் மணமகளின் கைகளை வைத்து; அவளது கைகளில் ஒரு தேங்காயை வைத்து அவளது பெற்றோர் கைகளின் மேல் நீரை ஊற்றிக் கைபிடித்துக் கொடுப்பர்.    
'ஒரேயடியாகக் கையைக் கழுவிட்டாங்கப்பா' என்று நான் கிண்டல் செய்த காலம் ஒன்று உண்டு. 
இன்னமும் எங்கள் ஊரில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றால் எனக்குத் தாங்கமுடியாத நகைச்சுவைக் காட்சிகள் நிறைய....மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.   

சக 

On Sat, 30 May 2020 12:27 pm தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
என்ன தோன்றுகிறது கண்மணி ??



அவரை,
இரு பெரும் குரவரும், ஒரு பெரு நாளால்,
மண அணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து, அணி இழையார், மேல் இரீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மணம்.

"கோவலன் கண்ணகி திருமணம்"

அவ்வழி,
முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!

"மங்கல வாழ்த்தும் மங்கல அமளியில் ஏற்றுதலும்"

விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்,
‘காதலற் பிரியாமல், கவவுக் கை ஞெகிழாமல்,
தீது அறுக!’ என ஏத்தி, சில் மலர் கொடு தூவி,
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்-’தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா, எப்பாலும்
செரு மிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன்’ எனவே.

-------------------------------------

On Friday, May 29, 2020 at 11:50:32 PM UTC-7, தேமொழி wrote:
முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

திருமணக் கனவை உரைத்தல்
555வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (1)
  
556நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (2)
  
557இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (3)
  
558நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (4)
  
559கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்             (5)
  
560மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்             (6)
  
561வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்             (7)
  
562இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்             (8)
  
563வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (9)
  
564குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்             (10)
  
565ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே             (11)
  



On Friday, May 29, 2020 at 11:43:04 PM UTC-7, தேமொழி wrote:
///வாக்கப்படுதல் என்பது  பாணிக்கிரகம் செய்துகொடுத்தல் என்று பொருள்படுகிறது எனின்; அந்த சமூகத்தில் இத்திருமண முறை இருந்தது என்று ஆகிறது.///

நீர் ஊற்றி தாரை வார்க்கும் முறை தமிழ்க்குடிகள் திருமண முறையா என்பது அடுத்த கட்ட ஆராய்ச்சி  😃

ஐயர் வைத்த திருமணங்களில் உள்ள முறையா? அல்லது பழந்தமிழர் திருமண முறையா?

பின்னர் என்றால் எக்காலத்திலிருந்து வருகிறது?

ராசமாணிக்கனார் Vs. மபொசி போல நாமும் தமிழ்க்குடிகளின் திருமண மரபின் மூலம் அறிய முயலலாம் 





On Friday, May 29, 2020 at 11:24:06 PM UTC-7, kanmanitamilskc wrote:
தேமொழி; 
பெண்  திருமணம் முடிந்து போவதை 'வாக்கப்பட்டுப் போனா' என்று சொல்வது சில சமூகங்களில் உள்ள வழக்கு தான்.
'கிழக்குச்சீமையிலே'  படத்தில் இடம்பெறும் ஒரு பாட்டு....(அது தேவர் சமுதாயம் பற்றிய திரைப்படம்)

"கத்தாளங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி 
வண்டிகட்டிப் போறவளே; வாக்கப்பட்டுப் போறவளே 
வண்டிமாடு எட்டி எட்டி முன்னே போகுதம்மா 
வாக்கப்பட்ட பொண்ணுமனம் பின்னே போகுதம்மா...
....................................................................................................
அண்ணே போய்வரவா அழுது போய்வரவா 
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா 
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டுப் 
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய்வரவா 

சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடம் தானே 
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடம் தானே" 

வாக்கப்படுதல் என்பது  பாணிக்கிரகம் செய்துகொடுத்தல் என்று பொருள்படுகிறது எனின்; அந்த சமூகத்தில் இத்திருமண முறை இருந்தது என்று ஆகிறது. அச்சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இது பற்றிய வன்மைமென்மைகளைச் சொல்ல இயலும்.
சக 
   


On Sat, May 30, 2020 at 12:15 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை அவளுக்கு  "வாழ்வு" கொடுப்பதாகக் கூறும் வழக்கம் சென்ற நூற்றாண்டுவரை உண்டு. 
(இல்லாவிட்டால்  பெண்களுக்கு  வாழ்க்கை என்ற ஒன்று இல்லையா என்பது வேறொரு விவாதம்)
எனவே, நீங்கள் நினைத்த வாழ்க்கைப்  படுதல் என்பதே பொருந்துகிறது கண்மணி, அதாவது என்னளவில்.. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9d8250b8-7475-4b34-aed3-8bae285da0e6%40googlegroups.com.

N. Ganesan

unread,
May 30, 2020, 7:30:06 AM5/30/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கன்னியாதானம் என்னும் கலியாணச் சீர் சுமார் 15-ம் நூற்றாண்டு அளவில், விஜயநகர ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் பரவலாகியது. அதற்கு முன் சிறிய அளவில் சில சமூகங்களில் இருந்திருக்கலாம். திருவிளயாடற்புராணம் போன்றவற்றில் பார்க்கலாம். மேலும், 96 வகைப் பிரபந்தங்கள், ஸ்தலபுராணங்கள் இவற்றிலும் தேடணும். ஜாதி என்னும் அமைப்பை வைத்திருக்க ஒரு முக்கியமான செயல் அத்தை, மாமன் மக்களுக்கிடையே நடக்கும் திருமணம் என்பர். இது மிகப்பழைய முறை. கஞ்சி என்ற தமிழ்ச்சொல் ஆனது உலகம் முழுக்கத் திரவநிலையில் உள்ள உணவுவகைகளுக்கெல்லாம் பெயர் ஆதல் போல, https://en.wikipedia.org/wiki/Congee ,
அமெரிக்க இந்தியர்க்குள்ளும் அக்கா மகள், அத்தைமகன், .. என்றெல்லாம் கட்டும்முறையை திராவிட உறவின்முறை என்று அழைப்பர். இதனால்தான், சங்க இலக்கியங்கள் இக்கால சினிமா போல, எல்லாமே காதல் திருமணங்களா என ஐயுறவைக்கின்றன என்பர். கற்பனை இலக்கியங்கள் வாழ்வின் நடைமுறைக்கு மாறாக அமைதல் உண்டு.

இந்தத் திராவிட உறவின்முறையை வலுவாகக்காட்டுவது தென்னிந்தியாவின் கன்னிகாதானம் என்னும் மணச்சீர். மதுரைக் கோவிலில் பெருந்தெய்வங்கள் மீனாக்ஷியை மஹாவிஷ்ணு சிவபிரானுக்குத் தாரை வார்க்கும் சிற்பம் அழகாக பெரியளவில் உள்ளது. பாளையப்பட்டுகளின் ஆட்சிக்காலத்தில் இத் திருமணச் சடங்கு விரிவாகி இருக்கவேண்டும். கைத்தலம் பற்றுதல் பற்றி ஆண்டாள் பாடுகிறாள், ஆனால், தன் ஐமார் கன்னிகாதானம் செய்வதைப்பற்றி எதுவும் இல்லை. ஐ = தந்தை, அண்ணன்மார்.
கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
- புறம் 279
இதுபோல், தன் ஐ (குன்றக் குறவன், குறிஞ்சித்தலைவன் தந்தை. அண்ணனாகவும் இருக்கலாம்) சாராயம் (டாஸ்மாக்) அடித்து இருக்கிறான் மயக்கத்தில் உள்ள அவனோடு குறுநொடி விளையாடித் தலைவி இருக்கிறாள். நானோ போர்க்களத்தில் தனியாக நிற்கிறேன் என்று மாமன், மச்சினனைப் பற்றிப் புலம்பும் பாடல் நற்றிணை 341-ல் உள்ளது. அதில், இவ்விழையில் விளக்கிய வாங்கு-தல் என்னும் வினையால் பிறக்கும் வங்கா (கொக்கு, நாரை - Egrets, Storks) கடிதற்காகவோ, வரிப்பறையில் எழுதியோ உள்ள பாடல் நற்றிணை 341. வங்கா வரிப்பறை எனத் தொடங்கும் பாடல். விரிவாக, இப்பாடலை விளக்கி எழுதுகிறேன். பலருக்கும் வரிப்பறை கடியும் (அ) எழுதிய வங்கா என்பது பற்றியும், அப்பாட்டின் பொருள் புரிவதற்கும் சிரமப்பட்டுள்ளனர் என்பது 20-ம் நூற்றாண்டு உரைகளால் தெரிகிறது.

பூப்பது: பூக்கல், பூத்தல்; மேய்ப்பது: மேய்க்கல், மேய்த்தல்; .... போல, வாப்பது: வாக்கல், வாத்தல். இதனை வார்த்தல் எனப் பிற்காலத்தில் ஆகியுள்ளது. கம்பன் வாக்கல் என்கிறான். வாத்தல் என்பது பிற்காலத்தில் வார்த்தல் என மாற்றியுள்ளனரா என்பது ஆய்வுக்குரியது. வாக்கல்/வாத்தல் - இதனை, மரக்கிளைக்கு வாது/வாத்து என்ற பெயர்ச்சொற்களில் காண்கிறோம். வாக்கப்படுதல் = வார்க்கப்படுதல். இது பாளையப்பட்டுகளின் வழியாக, சுமார் 15-ம் நூற்றாண்டில் இருந்து கன்னிகாதானத்தைக் குறிக்கும் சொல்லாக ( https://en.wikipedia.org/wiki/Kanyadan )  தமிழில் ஏற்பட்டுள்ளது. பாணிக்கிரகணம் எப்போதும் உண்டு. கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் - ஆண்டாள். ஆனால், மைத்துனன் நின்று தாரை வார்க்கும் சீர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் சிறப்புப்பெறுகிறது - Dravidian Kinship என்பதன் முக்கியத்துவம் காரணமாக. கைத்தலம் பற்றி, நீர் வார்த்தல் என்பதைச் சுருக்கமாகவும் சொல்லியிருக்கலாம். ஏனெனில் முக்கியத்துவம் கண்ணகுக்குத்தான் நாச்சியார் திருமொழியில். ஐமாருக்கு அன்று. ஐமாருடன் விளையாடும் தலைவி பற்றித் தலைவன் பாடுவது நற்றிணை 341-ல். பேரா. எமனோ, டாம் ட்ரவுட்மன் போன்றோர் புத்தர் திராவிட உறவின்முறையில் திருமணம் செய்தாரா என ஆய்ந்து எழுதியுளர்.

பிற பின், - முக்கியமாக, அழகான நற்றிணைப் பாடல். வரிப்பறை பற்றிவரும் பாடல்.
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 30, 2020, 7:50:35 AM5/30/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கோடி கன்னிகாதானம் தாத்தாச்சாரியர் பற்றிய கல்வெட்டுக்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. முதலாம் வேங்கட மஹாராஜா காலம்.


கன்னிகாதானம் என்றால் என்ன?

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி. 'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மமஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..' என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் உணர்த்துகிறது.

N. Ganesan

unread,
May 30, 2020, 8:32:37 AM5/30/20
to மின்தமிழ், vallamai
On Sat, May 30, 2020 at 1:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> தேமொழி;
> பெண்  திருமணம் முடிந்து போவதை 'வாக்கப்பட்டுப் போனா' என்று சொல்வது சில சமூகங்களில் உள்ள வழக்கு தான்.

> 'கிழக்குச்சீமையிலே'  படத்தில் இடம்பெறும் ஒரு பாட்டு....(அது தேவர் சமுதாயம் பற்றிய திரைப்படம்)
>
> "கத்தாளங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
> வண்டிகட்டிப் போறவளே; வாக்கப்பட்டுப் போறவளே
> வண்டிமாடு எட்டி எட்டி முன்னே போகுதம்மா
> வாக்கப்பட்ட பொண்ணுமனம் பின்னே போகுதம்மா...
> ....................................................................................................
> அண்ணே போய்வரவா அழுது போய்வரவா
> மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
> அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டுப்
> புலிவால் மீச கொண்ட புருஷனோட போய்வரவா
>
> சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடம் தானே
> ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடம் தானே"
>
> வாக்கப்படுதல் என்பது  பாணிக்கிரகம் செய்துகொடுத்தல் என்று பொருள்படுகிறது எனின்; அந்த சமூகத்தில் இத்திருமண முறை இருந்தது என்று ஆகிறது. அச்சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இது பற்றிய வன்மைமென்மைகளைச் சொல்ல இயலும்.
> சக
>

வைரமுத்து (பிரமலைக் கள்ளர்), பாரதிராஜா போன்றோரைக் கேட்கலாம்.

கழுதைக்கு வாக்கப்பட்டு கத்தாமல் இருக்க முடியுமா? - பழமொழி.

நா. வானமாமலை, எ.ஏ. நாட்டுப்புறப்பாடல்கள்,
http://www.tamilvu.org/library/lA420/html/lA420f02.htm
ஆண் : அஞ்சு ரூபா தாரேன்
அரக்கு போட்ட சேலை தாரேன்-உன்
ஆத்தாள் அறியாம நீ
வாக்கப்பட்டு வந்திரடி

பெண் : அஞ்சு ரூபா வேண்டாம்
அரக்குபட்டு சேலை வேண்டாம்
தட்டான் அறியாம-நீ
தாலி பண்ணி வந்திரடா

ஆண் : தட்டான் அறியாம
தாலி பண்ணி நானும் வந்தா
அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ
பருப்புச் சோறு பொங்கி வாடி
---------------

நான் வாக்கப்பட்டு போகப்போற ஊரப்பத்திக் கேளு - https://www.youtube.com/watch?v=1qkTVAMcdFQ
வாக்கப்பட்டு = வார்க்கப்பட்டு

NG

N. Ganesan

unread,
May 30, 2020, 9:39:04 AM5/30/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, Erode Tamilanban Erode Tamilanban, mozhia...@googlemail.com, annamalaie
வாக்கப்படுதல்  >> வாழ்க்கைப்படுதல் : A case of Hypercorrection (Forming Centamil form from Spoken Tamil)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கைப்படுதல் என்ற தொடரை, வெகுஜன அச்சும், கல்வியும் ஏற்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியில் காணத் தொடங்குகிறோம். இது, ”வாக்கப்பட்டு வந்தவள்” என்னும் இடைக்காலத் தமிழ்த் தொடருக்கு எது செந்தமிழ் வடிவம் எனச் சில 19-ம் நூற்றாண்டுப் புலவர் யோசித்துச் செய்து உருவாக்கிய புதுத்தொடராகத் தெரிகிறது. அதற்குமுன்னர் ”வாழ்க்கைப்படுதல்” என்ற தொடரே தமிழில் காணோம். மொழியியலில் Hypercorrection என்கிறார்கள்.
In sociolinguistics, hypercorrection is non-standard use of language that results from the over-application of a perceived rule of language-usage prescription. A speaker or writer who produces a hypercorrection generally believes through a misunderstanding of such rules that the form is more "correct", standard, or otherwise preferable, often combined with a desire to appear formal or educated.[1][2]

சங்க இலக்கியத்தை ஆராய்கிறபோது வா- என்னும் வினைச்சொல் தாதுவேர், வாக்கல்,வாத்தல் என்று வரும் எனத் தெளிவாகிறது. பூ- பூக்கல், பூத்தல் போல. கன்னிகாதானம் போன்ற சீர்களால், வாத்தல் என்னும் பழந்தமிழ்ச் சொல்
(சனிக்கிழமை தண்ணி வாத்தல் ...) வார்த்தல் ஆகிவிடுகிறது (பார்க்க: பெப்ரீசியஸ் அகராதி வாக்க = வார்க்க). வாக்கப்பட்டு என்பதிலுள்ள வாக்கு-தல் எனும் பழந்தமிழ் வினைச்சொல், வார்க்கப்பட்டு என்னும் பொருள் உடையது. அச்சு மிகும்
19-ம் நூற்றாண்டுக் கடைசியில் வாக்கப்படுதல் என்னும் தொடரில் உள்ள வாக்கல் எனும் வினையை ஆராயாமல், வாக்கப்படுதல் என்பதனை வாழ்க்கைப்படுதல் என்று ’ஹைப்பர்கரெக்‌ஷன்’ செய்துவிட்டனர்.
அதுப்போன்ற 19-ம் நூற்றாண்டுக் கடைசியில் ஏற்பட்ட பாடல் ஒன்று தருகிறேன். பின்னர், திராவிட கட்சிகளின் எழுத்தாளர் பலரும் இந்த புதிய ஆக்கமான “வாழ்க்கைப்படுதல்” என்று (உ-ம்: அண்ணா) உபயோகிக்க ஆரம்பித்தனர்.

கட்டளைக் கலித்துறை (தனிப்பாடற்றிரட்டு, 2-ம்தொகுதி, 1914).

மாப்பிட்டெனுஞ்சிறு தூப்பிட்டுக்காக மண்ணைச்சுமந்தே
ஆப்பிட்டுக்கொண்டடி  பட்டசொக்கேசருக் காசைப்பட்டுச்
சேப்பிட்டுமையிட்டுப் பூமாலைகந்தந் திமிர்ந்துமஞ்சட்
காப்பிட்டுவாழ்க்கைப் பட்டாள்கூடல்வாழுங் கயற்கண்ணியே!

ஹூஸ்டன் - மதுரை மீனாக்ஷி வாழும் ஊரிலிருந்து,
நா. கணேசன்

kanmani tamil

unread,
May 30, 2020, 1:01:51 PM5/30/20
to vallamai, mintamil
நன்றி; முனைவர் கணேசன் .
தெளிந்தேன் .
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 30, 2020, 1:44:45 PM5/30/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Sat, May 30, 2020 at 12:01 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி; முனைவர் கணேசன் .
தெளிந்தேன் .
சக 

கம்பனிலும், தொல்காப்பியத்திலும் Hypercorrection:

(1) கம்பனில்:
வா- வாக்கல்/வாத்தல். இன்றும் நடைமுறைச் சொற்கள் (ஈழத்திலும், தமிழ்நாட்டிலும்). பிராமணர்கள் வழி ஆர்ய மந்திரங்கள் ஓதிச்
செய்யும் தாரை வார்த்தல் பெருவாரியாக பிற்காலப்பாண்டியரின் இறுதி நூற்றாண்டுகள் எனலாம். பின்னர் விஜயநகரப் பேரரசு.
பவளம் > ப்ரவால, கமுகு > க்ரமுக, தமிழ் > த்ராவிட, ... என்பதுபோல, வாக்கல்/வாத்தல் என்பதில் வாத்தல் > வார்த்தல் என்றாகியுள்ளது எனலாம்.
வார்த்த- என்ற சொல் கி.பி. முதலாயிரத்தில் உண்டா எனப்பார்க்கணும்.

கம்பன்:
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார்.

இதே பாட்டை “வார்த்த” என்பது சரியான பாடம் என கம்பன் கழகப் பதிப்பு போன்றவற்றில் காண்கிறோம்.
மதுவருந்தி ஊடிய மகளிர் முகக்காட்சி

578.பளிக்கு வள்ளத்து வார்த்த
        பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி,
    வெறியன மிழற்றுகின்ற,

வார்த்த - இங்கே, வாத்த என்ற சொல், காலப்போக்கில் வார்த்த என ஏடுகளில் திருந்தியிருக்கும் எனத் தோன்றுகிறது.
வரியணில் மரங்களில் வாதுக்கு வாது தாவும். வாது/வாத்து = மரக்கிளை < வாத்தல் < வா- (வாக்கல்). Cf. பூ- பூக்க-/பூத்த-
தாரை வார்த்தல் என்னும் சீர் இந்த வாத்தல் வார்த்தல் என்றாக முக்கியக் காரணம்.

(2) தொல்காப்பியத்தில்:
(இது பற்றி விரிவாகச் சொல்லலாம்).

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்

றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே.

பரவு- “வழிபடு-தல்” பார்ப்பனர் என்ற சொல் பூசகனுக்கு உருவாகத் தாது.

ஆனால், பாப்பு, பாப்பாத்தி என்ற வழக்கில் வுள்ள சொற்களை
ஏன் தொல்காப்பியர் பார்ப்பு என்கிறார்? இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘ஹைப்பர்கரெக்‌ஷன்’ எனக் கருதுகிறேன்.
பா- என்பது தாதுவேர். பாவை, பாப்பு எனவரும். கண்ணில் இருப்பது பாவை, பாப்பா (< பா-) எனப்படுகிறது.
வண்ணாத்தி மோழியை எடுத்துச் செல்கையில் பல வண்ண நிறங்கள் மோழியில் இருக்கும்.
அது கண் கண்ணாக இருப்பதால், Butterflt-ஐ வண்ணாத்திப்பூச்சி என்கிறோம்.
இதுபோல, முற்காலங்கலில் பெயர்கள் உண்டு: சாணாரமூக்கன் மரத்தில் ஏறும் பாம்பு வகை. தட்டான்
பொற்கொல்லன் செய்யும் தகதக என மின்னும் தகடு போல றெக்கை கொண்ட Draganfly.
ஊசித்தட்டான் Damselfly. ...
எல்லா த்ராவிட மொழிகளைப் பார்த்தாலும் பாப்பு என்றே வண்ணாத்திப்பூச்சிக்குப் பெயர் இருக்கிறது.
இது தொல்காப்பியருக்கு மிக முந்தின காலம். வாத்தல் (வாக்கல்) > வார்த்தல். அதுபோல, பாப்பு என்னும்
மூலத்ராவிட வார்த்தை பார்ப்பு என்று தொல். சூத்திரத்தில் காண்கிறோம். எப்போது பாப்பு > பார்ப்பு ஆனது?
தெரியாது.

NG

N. Ganesan

unread,
May 30, 2020, 2:07:25 PM5/30/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
பா- தாதுவேர்:
பாவை, இதனால் உண்டாவது பார்வை.
Cf. கோவை > கோர்வை.
சீ- தாதுவேர் (சிந்து. ஈந்து/ஈங்கு/ஈக்கு. சீழம் > ஈழம்). கொங்குநாட்டில் சீமாறு என்போம். ஈக்கமாறு. ஈர்க்கமாறு. ஈக்குச்சி = ஈர்க்குச்சி.
...

N. Ganesan

unread,
May 30, 2020, 2:10:05 PM5/30/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
பா- தாதுவேர்:
பாவை, இதனால் உண்டாவது பார்வை.
Cf. கோவை > கோர்வை.
சீ- தாதுவேர் (சிந்து. ஈந்து/ஈங்கு/ஈக்கு. சீழம் > ஈழம்). கொங்குநாட்டில் சீமாறு என்போம். ஈக்கமாறு. ஈர்க்கமாறு. ஈக்குச்சி = ஈர்க்குச்சி.
...

காத்தருள் > கார்த்தருள்

N. Ganesan

unread,
Jun 1, 2020, 8:50:48 AM6/1/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Sat, May 30, 2020 at 12:01 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி; முனைவர் கணேசன் .
தெளிந்தேன் .
சக 

SK> வாக்கப்படுதல் என்பது  பாணிக்கிரகம் செய்துகொடுத்தல் என்று பொருள்படுகிறது எனின்; அந்த சமூகத்தில் இத்திருமண முறை இருந்தது என்று ஆகிறது. அச்சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இது பற்றிய
> வன்மைமென்மைகளைச் சொல்ல இயலும்.
பாணிக்கிரகம் இல்லை. பாணிக்கிரகணம்.  வாரியார் சுவாமிகள் திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சியில் இதை விடாமல் சொல்லி வாழ்த்துவார்கள்.
உறவினர்கள் திருமணங்களில் இரண்டு மூன்று முறை நேரில் கேட்டிருக்கிறேன்:
“சந்திர க்ரஹணம், ஸூர்ய க்ரஹணம் எல்லாம் பிடித்தால் சற்று நேரத்தில் விட்டுவிடும்; பாணி க்ரஹணம் அவ்வாறில்லை. பிடித்தால் விடாது. வாழ்க்கை முழுவதும்
இருக்கிற கிரகணம் இது” என்பார். வாக்கப்படுதல் > வார்க்கப்பட்டு வரும் பெண்ணால் வரும் கிரகணம் வலிமையானது.

இன்னொன்று: கிரகம் (graha, a cognate word with English "to grab") தமிழரின் “கோள்” (< கொள்-தல்) என்னும் சொல்லின் வடமொழிப் பெயர்ப்பு.
Graha, in Sanskrit, is a LOAN translation from Tamil/Dravidian of Indus Valley Civilization. தமிழரின் அசைக்கவியலா ஜோதிஷ நம்பிக்கைகளின்
பால் பட்டது இம் மொழிபெயர்ப்புச் சொல் கிரகம் ‘கோள், planet'. கிரக வடிவில் இருப்பதால், கோளம் - Sphere-கு தமிழ்/ஸம்ஸ்கிருதச் சொல் ஆயது.
உ-ம்: பூகோளம். gOla < கோளம். புல்லி/பல்லி > balli, கஞ்சி > ganji [1], ... போல, கோளம் > gOla என வடமொழிக்கு தமிழ்ச்சொல் பெயர்ந்துள்ளது.

NG
 
அது கண் கண்ணாக இருப்பதால், Butterfly-ஐ வண்ணாத்திப்பூச்சி என்கிறோம்.

N. Ganesan

unread,
Jun 5, 2020, 7:41:29 AM6/5/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Thu, Jun 4, 2020 at 11:59 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
தெலுங்குமொழியில் வங்க/ஒங்க  என்றால் ஓடை, ஆற்றுப்பள்ளம்.

வாங்கு- (= வளைதல்) என்னும் வினையால் வந்த பெயர். வங்கி என்பது தோளில் அணியும் வளைந்த அணி.
வங்கு = எலி வங்கு (எலி வளை). இது ரிக்வேதத்தில், vankhu.
வங்கம் - வளைந்த (U-shaped cross-section) குறுக்குவெட்டுத் தோற்றத்தால் படகுக்கு வந்த பெயர்.
வங்கம் + அளம் வங்காளதேசம்; வளைந்தோடும் நதிகளும், பாலங்கள் இல்லாமையால் படகுகளால் பயணிக்கும் நாடு.
etc.,

இப்போது, வாக்கிய-/வாங்கிய- வினைச்சோடி மறைந்துவருகிறது. Even in PhD (Tamil literature) theses such as
or, in Dinamani pieces,

On Sat, May 30, 2020 at 1:09 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பா- தாதுவேர்:
பாவை, இதனால் உண்டாவது பார்வை.
Cf. கோவை > கோர்வை.
கார்த்தருள் < காத்தருள்
Reply all
Reply to author
Forward
0 new messages