தமிழ் உச்சரிப்பு (வல்லின எழுத்துகள்)

60 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 13, 2023, 5:36:24 PM3/13/23
to vallamai, housto...@googlegroups.com
தமிழ் உச்சரிப்பு (வல்லின எழுத்துகள்)
----------------------------------------------------

Niranjan Bharati asked a question on the pronunciation of Vallinam
letters. Ravi A., Cleveland explained it very well. Listen to the
question and Ravi's answer in audio files. This has been explained by
Tamil scholars, Dravidian linguists for almost 2 centuries. One of the
best explanations is by a Tamil scholar born in PutukkOTTai in his
book published in 1905 CE. I read it few years ago, and will give.
Many others' remarks have been given in the past years. will
consolidate them as one file later. Thanks, ~NG

PS:
பன்மை விகுதி -கள் சேர்கையில், சில பழைய நூல்களில் ஒற்று க் மிகுந்து
இருப்பினும், வாழ்த்துகள், பாராட்டுகள், எழுத்துகள், கல்வெட்டுகள்,
சிறப்புகள், சிறகுகள், ... என ஒற்று க் மிகாமல் இருப்பது நன்று.
Niranjan_B_qn_Tamil_uccarippu.ogg
ravi_A_tamil_uccarippu.ogg

N. Ganesan

unread,
Mar 14, 2023, 1:50:41 PM3/14/23
to vallamai, housto...@googlegroups.com
மொழியியல் துறைப் பேராசிரியன்மார் பலர், தம் ஆங்கில நூல்களில், தொல்காப்பியரின் ஆற்றல்மிகு வடிவமைப்பாகிய வல்லினங்களுக்கான ஒலிப்புகளை விளக்கியுள்ளனர். தமிழிலே எழுத்துகளின் உச்சரிப்புப் பலுக்கலை விளக்கும் கட்டுரைகள்,  இலக்கண நூல்களின் பகுதிகள் குறைவு. இவ்வகையில், முக்கியமான இரு ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்.

(1) புதுக்கோட்டை ஊரினரான, பண்டிதர் P (புதுக்கோட்டை). S. D. முத்துசாமி பிள்ளை   அவர்கள் எழுதிய “இலக்கணப் பிரயோக விளக்கம்”. 1905-ல் சென்னையில் அச்சிடப்பெற்றது. தமிழ்ப் புலவர் ஜெகராவ் முதலியார், புலவர் முத்துச்சாமி எழுதிய நூலுக்கு எழுதிய பாயிரத்தை இணைக்கிறேன். நூலின் அருமையை இப்பாயிரம் புகழ்கிறது. நூலின் சிறந்த பிரதி, ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் இருக்கும். தேடிப் பிடித்து, வெள்ளுரையாகச் (Plain-text) செய்தல் வேண்டும். பொருளடக்கத்தில், தமிழ் எழுத்து உச்சரிப்பு மீதாக வரும் பகுதிகள் இவை.
இலக்கணப் பிரயோக விளக்கம்
VIII
Contents - சூசிப்பத்திரம்
8. எழுத்திலக்கணம்   68 - 77

Appendix A-E
10. எழுத்திலக்கணத்திற்கு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு 83 - 88

(2) தூத்துக்குடியைச் சார்ந்த திரு. சு. (சுப்பையா) நடராஜன், தனி நூலாகச் செய்தார். என்னிடம் இருக்கிறது. இணையத்தில் காணோம். இன்னும் பிடிஎப் ஆகவில்லை.

பண்டிதர் P (புதுக்கோட்டை). S. D. முத்துசாமி பிள்ளை எழுதிய “இலக்கணப் பிரயோக விளக்கம்”. 1905, சென்னை.
நூல் இங்கே கிடைக்கிறது:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008290_இலக்கணப்_பிரயோக_விளக்கம்.pdf

பாயிரம்
-------------


From Vidvan A. S. Jagarow Mudaliar, Head Tamil Pundit, St. Mary's College, Madras ; author of தேம்பாவணி விருத்தியுரை, இலக்கண சிந்தாமணி &c., &c.

நிலைமண்டில ஆசிரியப்பா.

சந்தனப் பொதிகைச் செந்தமிழ் முனிபால்
பைந்தமி ழியலோ ரைந்தையு மோர்ந்த
ஆறிரு புலவருள் வீறுறு புலமை
யல்காப் புகழ்மைசால் தொல்காப் பியமுனி
தன்பெய ரானிறீஇத் தந்தரு ளிலக்கண
வழிவழி யடைவே வந்தன பலவுஞ்
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைத்
திண்ணிதி னுணர நுண்ணிதிற் றெரித்து
வகுத்துந்  தொகுத்தும் வகைபட விரித்துஞ்
சூத்திர முறையா யாத்தன வதனா
னுச்சிமேற் புலவர்கொ ணச்சினார்க் கினியமு
முளம்பூ ரணம்பெறு மிளம்பூ ரணமு
மானா வரைநிகர் சேனா வரையமு
முதலிய வுரையா னுதலிய பொருடெரீஇ
மொழித்திறத் தாய முட்டறுப் பதுவே
யறிவார்க் கலது சிறியார்க் கரிது
வென்னு நோக்கமே தன்னு ளுந்தலான்
கத்திய வடிவுல கத்திய றோன்றித்
திசையெலாம் பரவத் திசையெனுந் தொகையிற்
பகுத்துய ராங்கிலோ பதப்பெயர்ப் புடனே
பன்னாண் முயன்று பன்னாட் பயனாக
கற்றார் விருப்புற மற்றார் வியப்புற
இலக்க ணப்பிர யோக விளக்கமென்
றொருநூ லெழுதா வெழுத்திற் பொறித்தனன்
சுரிமுகச் சங்கஞ் சொரிதரு நித்திலம்
பொருதிரைக் கரத்தா லிருகரை கொழிக்கும்
பூவிரி வளம்புனற் காவிரி யாறு
மதுப்புனல் விரவிப் புதுப்புனற் செவிலித்
தாயெனப் பைங்கூழ்ச் சேயினை வளர்க்கு
முளமகிழ் சோழ வளநாட் டணியா
மாண்புறுந் தொண்ட மான்புதுக் கோட்டை
யென்னுநல் லூரன் மன்னுநல் லூர
னையந் திரிபற வருங்கலை யுணர்ந்த
தலம்புகழ் முத்துச் சாமிநா வலனே.

--------------

(1)    ”என்னு நோக்கமே தன்னு ளுந்தலான்
          கத்திய வடிவுல கத்திய றோன்றித்”

    என்னும் நோக்கமே தன்னுள் உந்தலான்
    கத்திய வடிவு உலகத்தியல் தோன்றித்

 கத்திய ரூபம் = உரைநடை.  இராமாநுசர் பாடிய சீரங்க கத்தியம் கேட்டருளுக. Śrīraṅga gadyam https://youtu.be/X1WCOG0RjhE
https://en.wikipedia.org/wiki/Sriranga_Gadyam

(2) எழுதா எழுத்து = அச்சு எந்திரம்.

நா. கணேசன்
pAyiram_ilakkaNap_prayoga_viLakkam_1905.jpg

N. Ganesan

unread,
Mar 15, 2023, 4:04:54 PM3/15/23
to vallamai, arumuga...@gmail.com, Dr.Krishnaswamy Nachimuthu, Erode Tamilanban Erode Tamilanban, George Hart, Karthikeya Sivasenapathty, sirpi balasubramaniam

*மானாவரை நிகர் சேனாவரையம்*
-------------------------------------------------

இலக்கணப் பிரயோக விளக்கம் (1905), நூற்பாயிரம் (வித்வான் ஜெகராயர்)

" திண்ணிதின் உணர நுண்ணிதில் தெரித்து
வகுத்தும்  தொகுத்தும் வகைபட விரித்தும்
சூத்திர முறையாய் யாத்தன; அதனான்
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க் கினியமும்
உளம்பூ ரணம்பெறும் இளம்பூ ரணமும்
மானா வரைநிகர் சேனா வரையமும்
முதலிய உரையான் நுதலிய பொருள்தெரீஇ
மொழித்திறத்து ஆய முட்டறுப் பதுவே"

மானாவரை = மானா மலை = immeasurable mountain. அளக்க அரிய மலை. மானாவரை = மான + ஆ (எதிர்மறை இடைநிலை) + வரை. கம்பன் “தமிழ் எனும் அளப்பருஞ் சலதி” என்கிறான். மானுதல் = அளத்தல். மழைமானி, உஷ்ணமானி. மானி = அளவைக் கருவி. மானசாரம் = கட்டிடப் பொறியியல் நூல். சௌரமான வருஷம் = தமிழ் வருஷக் கணக்கிடுதல், சந்திரமானம் = கன்னடம், தெலுங்கு பஞ்சாங்கக் கணக்கு. உத்தர + அயனம் = உத்தராயணம் போல, ப்ர + மானம் = ப்ரமாணம் (பிரமாணம்) ...

(1)           கம்பன் - ஆரணிய காண்டம்:
 மானா உலகம் தனில் மன்றல் பொரும்
 தேன் நாறு நலம் செறி தொங்கலினான்
 மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
 வான் நாடியார் கண் எனும் வாள் உடையான்

மானா உலகம் = அளக்கரிய உலகம் = தேவலோகம். இந்திரலோகம். தேவர் தலைவன் இந்திரனைப் பாடிய பாடல்.
இந்த இந்திரலோகத்தைத் திருவள்ளுவர் குறிப்பிட்டார்: புணர்ச்சி மகிழ்தல் என்பது அதிகாரம்.
    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
இங்கே தாமரைக்கண்ணான் உலகு = இந்திர லோகம் = மானா உலகு. தாமரைக்கண் :: அகலிகை, இந்திரன் கதையால் வந்தது.

(2) புத்தரை வணங்கும் தோத்திரப்பாக்களில்
கம்பன் கூறும் மானாவுலகு *மானாவூர்* எனப் படுகிறது.
https://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=11

 மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
     வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே !
[...]
மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
     மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க

   மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
     வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே !

(2) தண்டியலங்கார மேற்கோள்

மெல்லினத்தான் வருவது
'மானமே நண்ணா மனமென் மனமென்னு
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான்'

   ஆனா (நீங்கா) மினல்மின்னி, முன்முன்னே நண்ணினும்
   மானா மணிமேனி மான்

எத்தனை மின்னல் வகைகள் நீங்காமல் முன்னே முன்னே வரினும், அவைகொண்டு அளக்க இயலாத மணி போன்ற உடல் கொண்ட மானை ஒத்தவள்.

அளப்பரும் சலதி என்பது போல, அளக்க அரிய மலை. மிக உயர்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழும் பொதியில். கன்னியாகுமரி மாவட்டத்தில் மானாமலை என்ற இடம் இருக்கிறது. பொதிகை மலை அருகே தான். மானாவரை = கயிலை (மேரு) எனினும் அமையும். மேரு < மேல்- என்பார் அஸ்கோ பார்போலா.

----------------
அளப்பரும் வரை = மானாவரை ’immeasurable mountain' என்றார் வித்வான் ஜெகராயர் (பாயிரம், இலக்கணப் பிரயோக விளக்கம்).

கம்பன்:
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே

அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்கு இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான்

வில்லி பாரதம்:
படியினது எல்லை பதத்தினது எல்லை
மடியினது எல்லை அவ்வானினது எல்லை
அடியினது எல்லை அளப்பரிது என்றால்
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ

திருமந்திரம்:
அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே

திருப்புகழ்:
https://kaumaram.com/thiru/nnt1152_u.html
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி
அரிப்பிரமர் *அளப்பரிய* பதக் கமலம் அருள்வாயே

திருமந்திரம்:
விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி
அளப்பு இல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்க அறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே

     “அளப்பு இல் பெருமையன்” (திருமூலர்) - இதே போல,
     “மானம் இல் உயர் மணிவண்ணன்” -சீவக சிந்தாமணி
        = அளவை இல்லாத உயர்ச்சி கொண்ட மணிவண்ணன்.
திருத்தக்க தேவர். சங்க காலத்தில் சேரர் தலைநகர் வஞ்சி (பதிற்றுப்பத்து, சிலம்பு, ...).
பின்னர் தாராபுரத்திற்கு மாறியது. பெருவஞ்சி என்னும் நகரம் ஆயிற்று.
கீழடியின் பழைய பெயர் பெருமணலூர். அது போல, பெருவஞ்சி.
தாராபுரத்தில் வாழ்ந்து செய்த காப்பியம் சிந்தாமணி.
(புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம்).

etc., etc.
நா. கணேசன்

மானாவரை, மானாம்பதி, மானாமலை, மானாவூர், மானாவுலகு ... இவற்றில் எல்லாம் மான- என்ற உவம உருபு வழியாகப் பிறக்கும், ஒப்பா/ஒப்பில்லாத என்ற பொருளா? சிந்திப்போம்.

அயில் முகக்கணையும் வில்லும் வாரிக்கொண்டு அலைக்கும் நீரால்
செயிர்தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே - கம்பன்

வெள்ளம் மன்னர் சேனையை மானுகிறது/போன்றது என்கிறான்.
வெள்ளம் - உவமேயம். சேனை உவமை (உபமானம்). வெள்ளத்துக்குச் சேனை உவமையாய் வந்தது.
அதாவது, மான- என்ற அடிச்சொல் ஒப்ப- என்ற உவம உருபு எனில் உவமை இருக்க வேண்டும்.
மானாவரை, மானாம்பதி, மானாமலை, மானாவூர், மானாவுலகு - இப்பெயர்ச் சொற்களில் உவமை இல்லை.

மானாவரை = ஒப்பா மலை, போன்றா மலை ... என்றால், எதற்கு ஒப்பா மலை?
மான - உவம உருபு. உவமை காணோமே. https://www.tamilvu.org/courses/diploma/a021/a0212/html/a021224.htm

நன்னூல்- 366 ஆம் சூத்திரம், உவம உருபுகளைப் பட்டியல்
போட்டுக் காட்டுகிறது. போல, புரைய, ஒப்ப, உறழ, மான,
கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர், நிகர், அன்ன, இன்ன என்னும்
பன்னிரண்டும் இவை போல் வன பிறவும் உவம உருபுகள்
ஆகும் என்று கூறுகிறது.

போலா மலை, புரையா மலை, ஒப்பா மலை, மானா மலை, உறழா மலை, கடுப்பா மலை, இயையா மலை, ஏய்ப்பா மலை, நேரா மலை, நிகரா மலை, அன்னா மலை, ... என்று உவம உருபு + ஆ (negative sign) + பெயர்ச்சொல் (eg., malai) பிரயோகம் ஏதாவது உண்டா? நான் அறிந்தவரை காட்டுகள் இல்லை.

--------------
நுதல், நுதலிய பொருள், நத்தை < நுத்தை, நந்துக்கடல்/நந்திக்கடல் - சொல்லாய்வு:
https://groups.google.com/g/vallamai/c/3Y_nUKfOIpc/m/pt4oN9a8AwAJ

2009-ல் நந்திக்கடல் போர் பேரழிவு. ஈழத் தீவில் இதுவரை தமிழர்கள் உரிமை மீட்கப்படவில்லை.



On Tue, Mar 14, 2023 at 12:50 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
மொழியியல் துறைப் பேராசிரியன்மார் பலர், தம் ஆங்கில நூல்களில், தொல்காப்பியரின் ஆற்றல்மிகு வடிவமைப்பாகிய வல்லினங்களுக்கான ஒலிப்புகளை விளக்கியுள்ளனர். தமிழிலே எழுத்துகளின் உச்சரிப்புப் பலுக்கலை விளக்கும் கட்டுரைகள்,  இலக்கண நூல்களின் பகுதிகள் குறைவு. இவ்வகையில், முக்கியமான இரு ஆசிரியர்களைக் குறிப்பிடலாம்.

(1) புதுக்கோட்டை ஊரினரான, பண்டிதர் P (புதுக்கோட்டை). S. D. முத்துசாமி பிள்ளை   அவர்கள் எழுதிய “இலக்கணப் பிரயோக விளக்கம்”. 1905-ல் சென்னையில் அச்சிடப்பெற்றது. தமிழ்ப் புலவர் ஜெகராவ் முதலியார், புலவர் முத்துச்சாமி எழுதிய நூலுக்கு எழுதிய பாயிரத்தை இணைக்கிறேன். நூலின் அருமையை இப்பாயிரம் புகழ்கிறது. நூலின் சிறந்த பிரதி, ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் இருக்கும். தேடிப் பிடித்து, வெள்ளுரையாகச் (Plain-text) செய்தல் வேண்டும். பொருளடக்கத்தில், தமிழ் எழுத்து உச்சரிப்பு மீதாக வரும் பகுதிகள் இவை.
இலக்கணப் பிரயோக விளக்கம்
VIII
Contents - சூசிப்பத்திரம்
8. எழுத்திலக்கணம்   68 - 77

Appendix A-E
10. எழுத்திலக்கணத்திற்கு இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு, பக். 83 - 88

kanmani tamil

unread,
Mar 15, 2023, 9:07:09 PM3/15/23
to vallamai
மானாமதுரை = ஒரு ஊரின் பெயர். 
வானவன் மதுரை என்பதன் திரிபு (பாண்டியர் சேரருடன் கொண்ட திருமணத் தொடர்பு காரணமாக இங்கு வந்து வாழ்ந்த தேவி தான் செய்த தானத்திற்குப் பிறந்த வீட்டின் நினைவாக இட்ட பெயர்.). 

மானாவாரி நிலம் = வான்மழையை நம்பி இருக்கும் நிலம் 

இவ்விரண்டு சொற்றொடர்களிலும் உவமவுருபு ஏதும் இல்லை. 

சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxxmuBkro3JPeNw3rsbeEkrKYwhMxLU6P%2Bq%2BPdvvf0vw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages