இலக்கியம் காட்டும் திருப்பூர்

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 8, 2020, 3:05:37 AM1/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Ganesan V, Santhavasantham
திருப்பூரில் வாழும் புலவர் சுந்தரகணேசனார் அண்மையில் பொள்ளாச்சியில் எனதில்லம்
வந்திருந்தார். கருந்தும்பிப் புலவர் மகன் க. பழனிச்சாமிப்புலவர் (’கொங்குச்செல்வி என்ற
அரிய நூல் எழுதியவர் - கண்ணகி மீதானது) எழுதிய அலகுமலைக் குறவஞ்சியில்
திருப்பூர் என்பது திருப்பையூர் என இருப்பதைக் குறிப்பிட்டார். எனது இளமைக் காலத்திலே
க. பழனிச்சாமிப்புலவர் கையெழுத்திட்டு அளித்த ஓதாளர் குறவஞ்சி என்னும் அலகுமலைக்
குறவஞ்சியை ஊரில் இருந்து எடுத்துவந்துள்ளேன், ஆனால் ஆழ்ந்து படிக்கவில்லை
எனக் குறிப்பிட்டேன். பரம்பரையான கவிராயர்கள் கருந்தும்பிப் புலவர் குடும்பம்.
சங்கரண்டாம்பாளையம் வேணாடர் அரண்மனை வித்துவான்கள். 

திருப்பூரின் பழையபெயர் திருப்பையூர் என அலகுமலைக் குறவஞ்சியில் இருப்பது
பற்றி விரிவாக ஆராயும் புலவருக்கு வாழ்த்துகள் உரியவாகுக. இன்னும் ஓலைச்சுவடியில்
உள்ள சமுதாய ஆவணங்கள் (உ-ம்: புலவர் செ. இராசு தொகுத்தவை, தமிழ்ப் பல்கலை வெளியீடு),
கல்வெட்டுகள் (துரை. சுந்தரம் அவர்கள் உதவக்கூடும்), திருப்பையூர் உண்டா எனப்
பார்த்தல் அவசியம். பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களின்
சுவடித் தொகுப்பில் இருந்து ஐநூற்றாஞ் செட்டிகள் ஒரு திருமணப் பரிசிலாக
வெளியிட்ட ‘பசும்பை எழுபது’ என்னிடம் உண்டு. அதைத் தேடி எடுத்து திருப்பூர்ப்
புலவருக்கு அனுப்பவேணும்.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

'திருப்பையூர்'

திருப்பூர், ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது; பருத்தி உள்ளிட்ட வணிகம் தழைத்தோங்கிய இடமாக இருந்தது என்பது, பலருக்கும் தெரிந்த விஷயம். அதேசமயம், திருப்பூர், பண்டைய ஆட்சிக்காலங்களில், எத்தகைய நிலையில் இருந்தது என்பதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கிறது.திருப்பூர், வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய செயலாளர், புலவர் சுந்தரகணேசன், பகிர்ந்துகொண்ட தகவல்கள்...சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரால், தமிழகம் ஆளப்பட்ட தருணத்தில், கொங்கு மண்டலம் 24 நாடுகளாக, பிரிக்கப்பட்டிருந்ததாக, கொங்கு மண்டலச் சதகம் மூலம் அறிய முடிகிறது.தமிழில், 12ம் நூற்றாண்டிற்கு பின், ஆளுமை பெற்ற, சிற்றிலக்கியத்தில் ஒன்றே, குறவஞ்சி. அத்தகைய குறவஞ்சியில் ஒன்றுதான் அலகுமலைக்குறவஞ்சி.இதை, பொங்கலுார் நாட்டின் தலைநகரான, கொடுவாய் எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகனான சின்னதம்பி நாவலர் இயற்றியுள்ளார். அவர் இந்நுாலை இயற்றிய காலத்தைக் குறிப்பிடும்போது கலியுக சகாப்தம் 4854-ல் ( கி.பி 1753 ) அரங்கேற்றியதாக குறிப்பிடுவதால், 267 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிய முடிகிறது.பொங்கலுார் நாட்டில் ஓர் ஊராக இருந்த அலகுமலையில் இருந்து அருள்பாலித்து வருகின்ற தமிழ்க் கடவுளான முருகனுக்கு அலகுமலையாண்டவர் என்று பெயர். அதுபோன்றே அலகுமலைக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் பொங்கலுார் நாட்டையாண்ட வேளாளரில் கொடுவாயில் வாழ்ந்த ஓதாளர் குலத்தைச் சேர்ந்த பெரிய பெருமாள். இந்த நுால் ஓதாளரைச் சிறப்பித்துக் கூறுவதால் ஓதாளர் குறவஞ்சி என்றும் கூறப்படுகிறது. இதனை ஓலைச்சுவடியில் இருந்து 1963ம் ஆண்டு அச்சு நுாலாக்கியவர் பழனிச்சாமி புலவர்.அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் என்பது, அக்காலத்தில் திருப்பையூர் என்று சுட்டப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. திருப்பையூர் ஒரு சங்ககால ஊராக இருக்குமோ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகிறது. 

இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழாசிரியர் கருத்து

திருப்பூர், டிச. 13 – திருப்பூரின் பழம்பெயர் திருப்பையூர் என இருந்திருக்க லாம் என திருப்பூர் செல்லம்மாள் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் வே.சுந்தர கணேசன் கூறியுள் ளார். இது குறித்து அவர் தெரிவித் துள்ளதாவது: திருப்பூரின் பழைய பெயர் குறித்து பல்வேறு கருத்து கள் நிலவுகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் அடிப்படையில் திருப்பூரின் பெயர் திருப்பையூர் என இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன. அவற்றில் 96 வகையான சிற்றி லக்கிய வகைகளே 12ஆம் நூற் றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவற்றுள் ஒன்று குற வஞ்சி வகை இலக்கியமாகும். அத்தகைய இலக்கியம்தான் அலகுமலைக் குறவஞ்சி. இதனை பொங்கலூர் நாட்டின் தலைநக ராக இருந்த கொடுவாய் எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகன் சின்னத்தம்பி நாவலர் இயற்றியுள்ளார். இந் நூலை இயற்றிய காலம் கி.பி. 1753. அதாவது இன்றைக்கு 267 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பழனிசாமி புலவர் என்பவர் 1963 ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் இருந்து அச்சு நூலாக பதிப்பித்தி ருக்கிறார். இந்நூலில் பொங்கலூர் நாட் டில் உள்ள ஊர்களாக, “பொங்கலூர் கொடுவாய் 

புத்தரசை உபாயனூர்

பொன்குன்றை செம்மாபுரம் புகழ் பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற் புவிபெரும் பிள்ளை நகரும்…”  என்று வருகிறது. மேலும் இங்குள்ள சிவால யங்களைக் குறிக்கும்போது, “தென்பெருந்தலையில் பாண்டிலிங்கேசர் திருப்பையூர் விஸ்நாதம யேசர்..” என்றும் வருகிறது அத்துடன் குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில், “கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும் பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா!”  என கணையாழி பெற்றதையும், “செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து திருப்பையூர் வாழ் கொங்க வணிகன் விஸ்வமால் குருசாமி தந்தை வரிசைதான் சிங்கா” என்று குறத்தி கூறுவதாகவும் வருகிறது. பொங்கலூர் நாட்டில் ஊர்த்த லைவர்களைக் குறிப்பிடும் போது, அவர்களில் பெரும்பாலா னோர் வேளாளர்களாகவே உள் ளனர். ஆனால் திருப்பையூரில் மட்டும், வாணிகம் செய்யும் செட் டிமாரே ஊர்த்தலைவராக இருந் துள்ளனர் என்பதாக “திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச் செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்” என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் தற்போது திருப் பூர் என்றழைக்கப்படும் ஊர் 270 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பை யூர் என்று அழைக்கப்பட்டிருக்க லாம், வணிகர்கள் தலைவர்க ளாக இருந்துள்ளனர் என புலவர் வே.சுந்தரகணேசன் கூறுகிறார். இது தொடர்பாக தொல்லி யல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர் களிடம் கேட்டபொழுது, “சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்ப டுகிறது. அது குறித்து தொடர்ந்து  ஆய்வுகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்ததாகவும் புல வர் சுந்தரகணேசன் கூறியுள் ளார்.
 

 

N. Ganesan

unread,
Jan 8, 2020, 3:38:25 AM1/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Ganesan V, Santhavasantham
அன்பின் புலவர் சுந்தர கணேசன்,

அரிய செய்திகள் கொண்ட தினமணிக் கட்டுரை வாசித்தேன்.

பேரா. ச. கண்மணி கணேசன் (ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி) செந்தில் என்ற பெயர் பற்றி வினவியிருந்தார்.
அலைவாய் என்பது அவ்வூரின் தமிழ்ப்பெயர் சங்க இலக்கியங்களில் என்றும், செந்தில் என்பது
அவ்வூர் தலபுராணத்தை ஒட்டி அமைந்த வடமொழிப் பெயர் எனும் தெரியலாகிறது. சென்னைப் பல்கலப் பேரகராதிக்
குறிப்புக் காண்க.

செந்தில்: தலப்பெயர் ஆய்வு:
---------------------------------------------------
செந்தில் ஆண்டவர் உற்சவராக ஊர்வலம் வரும்போது “ஜெயந்திநாதர்’ என்ற பெயர்கொண்டவர்.
சூர சம்மாரம் அத் தலத்தில் நிகழ்ந்தது. மறுகரையில், கந்தபுராணம் படித்து சூர சம்மார திருவிழா பெருமையுடன்
நடக்கிறது.. கண்ணதாசன் பாடல், டிஎம் எஸ், சீகாழி பாட, https://www.youtube.com/watch?v=7U7VhBX21t0
~50 ஆண்டு முன்னர் சூர ஸம்ஹாரம், செந்தில் பதியில். திருவாவடுதுறை ஆதீனகருத்தர் ...

ə https://en.wikipedia.org/wiki/Schwa  - ஆங்கிலத்தில் ’ஷ்வா’  எனப்படும் எழுத்தாக, பல பழைய சொற்களில்
தமிழ் மொழியில் இயங்கியிருக்கிறது. ரங்கநாதன் ரெங்கநாதன் ஆகிவிடுவது இந்த  ə   (Schwa) ஒலிப்பால் தான்.
சயசய என்றும், செயசெய என்றும் தேவாரப் பாடல்களில் உண்டு. 
அனுஜன் > அனியன் (=தம்பி) என்றும், ஜ்யேஷ்டன் > சேட்டன் (=அண்ணன்) என்றும் தமிழில் இருந்து
வேறுபடுத்திக் காட்ட மலையாளம் வடசொற்களைப் பயன்படுத்துகிறது அல்லவா?
இலக்குமிக்கு மூத்தாளை ஜ்யேஷ்டா > சேட்டை என்னும் தமிழ்ச்சொல்லால் காண்கிறோம்.
ஜயகுமார், ஜயலலிதா, ஜயந்தி ... ஜெயகுமார், ஜெயலலிதா, ஜெயந்தி, .... ஆகிறது.
சூரனை செயங்கொண்ட இடம் செந்தில். ஜெயந்தி > ஜெய்ந்தி (இவ்வாறு உச்சரித்து) > செந்தி(ல்) ஆகியுள்ளது.
-இல் விகுதிகொண்ட ஊர்கள் அனேகம். அதுபோல், செந்தில் < ஜெய்ந்தி(ல்).

திருப்பையூர் > திருப்பயூர் > திருப்பூர் : இடப்பெயர் மாற்றம்

ஜ்யேஷ்ட- என்பதில் ய் அழிபடுதல் போலவே, திருப்பயூரில் ய் மறைந்து திருப்பூர்
என வந்துள்ளது எனக் கருதுகிறேன். tiru-pay-uur >> tiru-py-uur >> tirupuur.
திரு-பையூர் > திருப்பய்யூர் > திருப்பயூர் > திருப்பூர் . 
இது (1) செந்தில் என்ற இடப்பெயரில் ய் கெடுவதுபோலவும் (செந்தில் < ஜெய்ந்தி(ல்) ),
(2) ஜ்யேஷ்ட > சேட்ட- என்று ஆதற்போலவும் எனக் கொள்க.

மொழியியல் பேரா. கமலேசுவரனிடம் (கோவை) இம்மடலை அனுப்பிக்
கருத்துக் கேட்டருளுக. நான் செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து,
பா. ரா. சுப்பிரமணியன், ... இவர்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி,

நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan  

இலக்கியம் காட்டும் திருப்பூர்
By புலவர் வே. சுந்தர கணேசன்   |   Published on : 30th December 2019 Dinamani

கொங்கு நாடு
                       தமிழ்நாடானது சேர , சோழ , பாண்டிய என மூவேந்தர்களால் ஆளப்பட்டு இருந்தாலும் , கொங்கு நாடு தனி நாடாகவே இருந்து வந்துள்ளதை காண முடிகிறது.


சங்க இலக்கியங்களில் ,
               கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே – புறநானூறு 373
               கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை - புறநானூறு 160
              ஆகெழு கொங்கர்  -பதிற்றுப்பத்து 22  
என்றும் ,

   சமய இலக்கியமான பெரியபுராணத்தில் .,
                 சோலையணி திருப்பாண்டிக் சொடுமுடி
                 யணைத்தனர் கொங்கில் –ஏயர்கோன் 85
என்று கொங்குநாடு தனிநாடாகவே சுட்டப்பட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது.

கொங்கு நாட்டுப் பிரிவுகள் ;
                  கொங்கு நாட்டின் எல்லையாகக் கொங்கு மண்டலச் சதகம்
        வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு ,
                  குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று
                  கிடக்கும் களித்தண்டலை மேவு காவிரிசூழ்                          
                  நாட்டுக்குளித் தண்டலையளவு  கொங்கு
என்று கூறுகிறது. இத்தகைய கொங்கு மண்டலம் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது .அவ்வாறான 24 நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் பொங்கலுார் நாட்டில் இருந்த ஒரு ஊர் தான் திருப்பூர் .

அலகுமலைக் குறவஞ்சி;
                தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன , அவற்றில் 96 வகையான சிற்றிலக்கிய வகைகளே 12 ம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவ்வாறான சிற்றிலக்கியத்தில் ஒன்றே குறவஞ்சி எனப்படுவது. அத்தகைய குறவஞ்சியில் ஒன்றுதான் அலகுமலைக்குறவஞ்சி .இதனை பொங்கலுார் நாட்டின் தலைநகரான, கொடுவாய்  எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகனான சின்னதம்பி நாவலர் இயற்றியுள்ளார். அவர் இந் நுாலை இயற்றிய காலத்தைக் குறிப்பிடும்போது கலியுக சகாப்தம் 4854-ல்    ( கி.பி 1753 )  அரங்கேற்றியதாக குறிப்பிடுவதால் இன்றைய ஆண்டிற்கு ( கி.பி 2019 ) 267 ஆண்டுகளுக்கு முன்னர் என்று தெரிய வருகிறது .

அலகுமலைக் குறவஞ்சி ;
   பொங்கலுார் நாட்டில் ஓர் ஊராக உள்ள அழகுமலையில் இருந்து அருள்பாலித்து வருகின்ற தமிழ்க் கடவுளான முருகனுக்கு அலகுமலையாண்டவர் என்று பெயர். அதுபோன்றே அழகுமலைக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்   பொங்கலுார் நாட்டையாண்ட வேளாளரில் கொடுவாயில் வாழ்ந்த ஓதாளர் குலத்தைச் சேர்ந்த  பெரிய பெருமாள் .இந்த நூல் ஓதாளரைச் சிறப்பித்துக் கூறுவதால் ஓதாளர் குறவஞ்சி என்றும் கூறப்படுகிறது. இதனை ஓலைச்சுவடியில் இருந்து 1963 ஆம் ஆண்டு அச்சு நுாலாக்கியவர் பழனிச்சாமி புலவர் ஆவார்.

அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் ;
    அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் என்று தற்போது குறிப்பிடப்படும் நகரம் அக்காலத்தில் திருப்பையூர் என்று சுட்டப்பட்டிருக்கிறது. அதனை கீழ்க்காணும் வரிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1   பொங்கலுார் நாட்டில் உள்ள ஊர்களாக குறிப்பிடப்படுபவற்றில்
     பொங்கலுர் கொடுவாய் புத்தரசை உபாயனூர்

     பொன்குன்றை செம்மாபுரம்
     புகழ்பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற்
     புவிபெரும் பிள்ளை நகரும்
     …  என்றும்

2   பொங்கலூர் நாட்டின் கண் உள்ள சிவாலயங்களைக் குறிக்கும் போது          
தென்பெருந்தையில் பாண்டிலிங்கேசர்
திருப்பையூர் விஸ்வநாதமயேசர்
என்றும்

3   அலகுமலையாண்டவர் கீழ்க்காணும் ஊர்களுக்கு எல்லாம் பவனி செல்கின்றார். அவ்வாறு செல்லும் ஊர்களாக ,
               பொங்கலுர் கொடுவாய் புத்தரசை யுபாயனூர்
                      தங்குன் றாபுரம் தழைத்தசெம் மாபுரம்
               பெருந்தை திருப்பையூர் பெரும்பிள்ளை நகரம்
…  என்றும்

4   குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில்

              கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி
               பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும்
                பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா.
    என்று கணையாழி பெற்றதையும் ,

                 செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து
                 திருப்பையூர் வாழ் கொங்கவணிகன் விஸ்வமால்
                 குருசாமி தந்த வரிசைதான் சிங்கா.
என்று பொன்னாலான மார்பு கச்சையைப் பெற்றதைப் பற்றியும் குறத்தி கூறுவதாகக் கூறுகிறார்.

5   பொங்கலூர் நாட்டு ஊர்த்தலைவர்களைக் குறிப்பிடும் பொழுது , அவர்களில் பெரும்பாலோனோர் வேளாளர்களாகவே உள்ளனர். ஆனால் திருப்பூரான திருப்பையூரில் மட்டும். வாணிகம் செய்யும் செட்டிமாரே ஊர்த்தலைவராக இருந்துள்ளனர் என்பதை ,

                   திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச்
                    செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்
என்று குறிப்பிடுகிறார்.

இதன் வாயிலாக திருப்பூர் என்று தற்காலத்தில் சுட்டப்பெறும் ஊரானது   270 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பையூர் என்று சுட்டப்பட்டு  , வணிகர்கள் அதிகம் வசித்த ஊராக விளங்கி அவ்வணிகனையே ஊர் தலைவனாகவும் கொண்ட ஒரு ஊராக விளங்கி வந்துள்ளதை இந்த அலகுமலைக் குறவஞ்சி மூலம் அறியமுடிகிறது.

     இது குறித்து தொல்லியல் அறிஞர் திரு..ர பூங்குன்றன் அவர்களிடம் கேட்ட பொழுது சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்படுகிறது .அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எனவே திருப்பூரான திருப்பையூர் ஒரு சங்ககால ஊராக இருக்குமோ ? என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகிறது .

kanmani tamil

unread,
Jan 8, 2020, 6:56:11 AM1/8/20
to vallamai, mintamil
தேமொழி ,
கதையையே. .....தப்பு தப்பு 
வரலாறையே மாற்றுகிறார். 
நான் டூரில் இருக்கிறேன். 
விவரமாக எதுவும் எழத முடியவில்லை. 

செந்தில் திட்டவட்டமாகத் தமிழ்ப்பெயர் .
கூகுள் வரைபடத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கே வேம்பாரிலிருந்து வடக்கே திருச்செந்தூரைச் சுற்றியிருக்கும் கற்குவாலை ஐயனார் கோயில்,  அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில், ஈத்தாமொழி, இட்டமொழி, குதிரைமொழி.  ஆராம்பொழி எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பார்த்தால் அந்தச் செம்மண் பூமியின் இயல்பிற்கும் செந்தூர் என்ற பெயருக்கும் இடை‌யிலான தொடர்பு புரியும். 

செம்மண் பூமியில் இறைவன் எழுந்தருளி இருக்குமிடம்  செந்தில் 

12ம் தேதி வந்து பாத்துக்கறேன் 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdcGY9cDM%3DKQVcKUa_aCfUjGq7%3DKqrikpyU0fp7nSst1Q%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 8, 2020, 6:42:32 PM1/8/20
to மின்தமிழ், vallamai
On Wed, Jan 8, 2020 at 5:56 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தேமொழி ,
கதையையே. .....தப்பு தப்பு 
வரலாறையே மாற்றுகிறார். 
நான் டூரில் இருக்கிறேன். 
விவரமாக எதுவும் எழத முடியவில்லை. 

செந்தில் திட்டவட்டமாகத் தமிழ்ப்பெயர் .
கூகுள் வரைபடத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கே வேம்பாரிலிருந்து வடக்கே திருச்செந்தூரைச் சுற்றியிருக்கும் கற்குவாலை ஐயனார் கோயில்,  அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில், ஈத்தாமொழி, இட்டமொழி, குதிரைமொழி.  ஆராம்பொழி எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பார்த்தால் அந்தச் செம்மண் பூமியின் இயல்பிற்கும் செந்தூர் என்ற பெயருக்கும் இடை‌யிலான தொடர்பு புரியும். 

செம்மண் பூமியில் இறைவன் எழுந்தருளி இருக்குமிடம்  செந்தில் 

12ம் தேதி வந்து பாத்துக்கறேன் 

தேரிக்காடு என்பது இந்த செம்மண் பூமியா?
அங்கே செந்தில் என்று இல்லாமல், கடற்கரையில் ஏன் இப்பெயர்?
சூரனை சம்ஹாரம் செய்வது என்ற புராணம் இந்த செம்மண்ணால்
இங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvYKmvXut1DQZmE2H5HSJuRAtSzb-ZRbY4n-827jdNZRQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jan 8, 2020, 7:16:14 PM1/8/20
to vallamai
தேரிக்காடு செம்மண் பூமி தான். 
திருச்செந்தூரைச் சுற்றிலும் தேரிக்காடு இருப்பதும் உண்மை தான்.
இவையனைத்தும் பூழிக்காடுகள். 
ஆரான் பூழி > ஆராம்பொழி> ஆராமொழி 
காயான் பூழி> காயாம்பொழி> காயாமொழி 
ஈத்தான் பூழி > ஈத்தாம்பொழி மொழி>ஈத்தாமொழி
இட்டன் பூழி > இட்டம்பொழி> இட்டமொழி 
குதிரான் பூழி > குதிராம்பொழி> குதிரைமொழி
இப்படியே மாறிவிட்டன.
இந்த 'மொழி'க்கு முன்னர் ஒரு மூக்கொலிச் சாயல் இருக்கும். கைபேசியில் அதை எப்படிக் காட்டுவதெனத் தெரியவில்லை. 

20ம் நூற்றாண்டில் விளக்கம் சொல்லப் புகுந்த பெரியோர் பல அனுமானங்களைச் சொல்லி முயற்சித்துள்ளனர்.
இது என்னுடைய சொந்தக் கருத்தே.

ஆராம்பொழியை 'ஆரல்வாய்மொழி' என்றெல்லாம்  சொல்லிக் கஷ்டப்பட்டு அது நிலைத்தும் உள்ளது. 
சக 

N. Ganesan

unread,
Jan 10, 2020, 7:35:41 AM1/10/20
to மின்தமிழ், vallamai

On Wednesday, January 8, 2020 at 6:16:14 PM UTC-6, kanmani tamil wrote:
தேரிக்காடு செம்மண் பூமி தான். 
திருச்செந்தூரைச் சுற்றிலும் தேரிக்காடு இருப்பதும் உண்மை தான்.
இவையனைத்தும் பூழிக்காடுகள். 

நன்றி. பூழி :: பூழ்தி :: புழுதி.
பூழி நிறத்தில் உள்ள பறவை பூணி என்போம்.
பூணித்துறை - இப் பறவைகளால் ஏற்படும் இடப்பெயர். 
திருப்பூணித்துறா - கேரளாவில் சில கோவில்கள்..

--------

தேரிக்காடா? தேறிக்காடா?
பாறு - பருந்து பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதுபோல் இதுவும் என நினைக்கிறேன்.
தெறு-தல் - சிவந்த தணல் “red hot iron".
தழலில் சிவக்கும் இரும்பு போல, தேறிக்காடு >> தேரிக்காடு எனலாமா?

நா. கணேசன்


 
ஆரான் பூழி > ஆராம்பொழி> ஆராமொழி 
காயான் பூழி> காயாம்பொழி> காயாமொழி 
ஈத்தான் பூழி > ஈத்தாம்பொழி மொழி>ஈத்தாமொழி
இட்டன் பூழி > இட்டம்பொழி> இட்டமொழி 
குதிரான் பூழி > குதிராம்பொழி> குதிரைமொழி
இப்படியே மாறிவிட்டன.
இந்த 'மொழி'க்கு முன்னர் ஒரு மூக்கொலிச் சாயல் இருக்கும். கைபேசியில் அதை எப்படிக் காட்டுவதெனத் தெரியவில்லை. 

20ம் நூற்றாண்டில் விளக்கம் சொல்லப் புகுந்த பெரியோர் பல அனுமானங்களைச் சொல்லி முயற்சித்துள்ளனர்.
இது என்னுடைய சொந்தக் கருத்தே.

ஆராம்பொழியை 'ஆரல்வாய்மொழி' என்றெல்லாம்  சொல்லிக் கஷ்டப்பட்டு அது நிலைத்தும் உள்ளது. 
சக 

On Thu, 9 Jan 2020 5:12 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Jan 11, 2020, 9:02:53 AM1/11/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Ganesan V, dorai sundaram, Theodore Baskaran, K R A Narasiah, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, sirpi balasubramaniam


On Sat, Jan 11, 2020 at 4:59 AM Jayaraman <ram...@gmail.com> wrote:
திருச்செந்தூர் , மணப்பாடு, உடன்குடி , ராதாபுரம் பகுதிகளில் உள்ள மணல் திட்டுக்கள் அல்லது மேடுகள் தேரிக்காடு என்று அழைக்கப்படுகின்றன 
தேறிக்காடு என்ற சொல் புழக்கத்தில் இல்லை.
இரா. ஜெயராமன் 

நன்றி, பேரா. ஜெயராமன். 
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்  - குறள்.

இக்குறள் நினைவுக்கு வந்ததால், தெறு-தல் என்னும் வினைச்சொல் தரும்
பெயராக, *தேறிக்காடு > தேரிக்காடு தோன்றுகிறது. 

முருகனின் பழமையானகோயில்களில் ஒன்று,
சாளுக்கியர்கள் எடுத்த குமாரசுவாமி கோவில்.
இங்கே மலை இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
எனவே அன்றில் (கிரௌஞ்சம்) பறவை மலையாக நின்றதை
முருகன் பிளந்தான் என்பது தலபுராணம்.
இந்த ஊருக்கு சண்டூர் எனப் பெயர். சண்டையூர் > சண்டூர் ஆகியுள்ளது.
திருப்பையூர் > திருப்பூர் என புலவர் சுந்தர கணேசன் சொல்வது போலே. 
சண்டூரில் பல ஆண்டுகள், இந்தியாவின் முதல் இயற்கையியலார்
மா. கிருஷ்ணன் (அ. மாதவையா அவர்களின் மகன்) வாழ்ந்தார்.
மாஜிஸ்ட்ரேட் ஆக என ஞாபகம். பல கட்டுரைகள் முன்பு
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வரும்.

அதுபோல, செம்மண் சூழ்ந்த பகுதியை,
சூர சம்மாரம் நிகழ்ந்த கடற்கரைத் தலம்
எனத் தேர்ந்தெடுத்து தலபுராணம் எழுதியுள்ளனர்.

---------
  உங்கள் பாட்டனார், ஸ்ரீ மிளகாய்ச் சுவாமிகள் சரிதம் பார்த்தேன். நன்றி.  
அடுத்த மடலில் நூல் விவரம். அனைவரும் படிக்கலாம்.

நா. கணேசன்
பி.கு.:சங்க இலக்கியம் தோன்றும் முன்னர் உள்ள
“மழுவாள் நெடியோன்” (Anthropomorphic Axe) சிற்பங்களும்,
சிந்து சமவெளி - தமிழ் நாடு தொடர்புகளும்.
Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu  
படித்துப் பார்க்கவும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 11, 2020, 12:35:25 PM1/11/20
to mintamil, vallamai
/// தேரிக்காடு என்பது இந்த செம்மண் பூமியா?
திருச்செந்தூரைச் சுற்றிலும் தேரிக்காடுகள் உள்ளன.
அங்கே செந்தில் என்று இல்லாமல், கடற்கரையில் ஏன் இப்பெயர்?
இந்தப் பெயராய்வு நோக்கத்துடன் தானே கேள்வி எழுப்பினேன் .
சூரனை சம்ஹாரம் செய்வது என்ற புராணம் இந்த செம்மண்ணால்
இங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.
இருக்கலாம்.
நா. கணேசன்/// wrote 2days ago 
சக 

kanmani tamil

unread,
Jan 11, 2020, 12:43:35 PM1/11/20
to mintamil, vallamai
பூழி :: பூழ்தி :: புழுதி.
பொருத்தமான சொற்பிறப்பு மாற்றமாகத் தான்  தெரிகிறது 
பூழி நிறத்தில் உள்ள பறவை பூணி என்போம்.
பூணித்துறை - இப் பறவைகளால் ஏற்படும் இடப்பெயர். 
திருப்பூணித்துறா - கேரளாவில் சில கோவில்கள்..
அப்படியா! இது "திருப்பொருநைத்துறை "  என்பதன் மாற்று வடிவம் என்று நினைத்தேன் .
தேரிக்காடா? தேறிக்காடா?
இப்படி ஒரு மாற்றம் பற்றி இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை .
பாறு - பருந்து பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதுபோல் இதுவும் என நினைக்கிறேன்.
தெறு-தல் - சிவந்த தணல் “red hot iron".
தழலில் சிவக்கும் இரும்பு போல, தேறிக்காடு >> தேரிக்காடு எனலாமா?
தவறு இல்லை என்று கருதுகிறேன் . ஏனெனில் அவை முழுதும் பாலைக்காடுகள் தாம் 
நா. கணேசன்/// wrote 1day ago 
சக 


Reply all
Reply to author
Forward
0 new messages