இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழாசிரியர் கருத்து
திருப்பூர், டிச. 13 – திருப்பூரின் பழம்பெயர் திருப்பையூர் என இருந்திருக்க லாம் என திருப்பூர் செல்லம்மாள் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் வே.சுந்தர கணேசன் கூறியுள் ளார். இது குறித்து அவர் தெரிவித் துள்ளதாவது: திருப்பூரின் பழைய பெயர் குறித்து பல்வேறு கருத்து கள் நிலவுகின்றன. ஆனால் சங்க இலக்கியத்தின் அடிப்படையில் திருப்பூரின் பெயர் திருப்பையூர் என இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாகத் தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன. அவற்றில் 96 வகையான சிற்றி லக்கிய வகைகளே 12ஆம் நூற் றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவற்றுள் ஒன்று குற வஞ்சி வகை இலக்கியமாகும். அத்தகைய இலக்கியம்தான் அலகுமலைக் குறவஞ்சி. இதனை பொங்கலூர் நாட்டின் தலைநக ராக இருந்த கொடுவாய் எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகன் சின்னத்தம்பி நாவலர் இயற்றியுள்ளார். இந் நூலை இயற்றிய காலம் கி.பி. 1753. அதாவது இன்றைக்கு 267 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பழனிசாமி புலவர் என்பவர் 1963 ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் இருந்து அச்சு நூலாக பதிப்பித்தி ருக்கிறார். இந்நூலில் பொங்கலூர் நாட் டில் உள்ள ஊர்களாக, “பொங்கலூர் கொடுவாய்
புத்தரசை உபாயனூர்
பொன்குன்றை செம்மாபுரம் புகழ் பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற் புவிபெரும் பிள்ளை நகரும்…” என்று வருகிறது. மேலும் இங்குள்ள சிவால யங்களைக் குறிக்கும்போது, “தென்பெருந்தலையில் பாண்டிலிங்கேசர் திருப்பையூர் விஸ்நாதம யேசர்..” என்றும் வருகிறது அத்துடன் குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில், “கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும் பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா!” என கணையாழி பெற்றதையும், “செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து திருப்பையூர் வாழ் கொங்க வணிகன் விஸ்வமால் குருசாமி தந்தை வரிசைதான் சிங்கா” என்று குறத்தி கூறுவதாகவும் வருகிறது. பொங்கலூர் நாட்டில் ஊர்த்த லைவர்களைக் குறிப்பிடும் போது, அவர்களில் பெரும்பாலா னோர் வேளாளர்களாகவே உள் ளனர். ஆனால் திருப்பையூரில் மட்டும், வாணிகம் செய்யும் செட் டிமாரே ஊர்த்தலைவராக இருந் துள்ளனர் என்பதாக “திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச் செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்” என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் தற்போது திருப் பூர் என்றழைக்கப்படும் ஊர் 270 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பை யூர் என்று அழைக்கப்பட்டிருக்க லாம், வணிகர்கள் தலைவர்க ளாக இருந்துள்ளனர் என புலவர் வே.சுந்தரகணேசன் கூறுகிறார். இது தொடர்பாக தொல்லி யல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர் களிடம் கேட்டபொழுது, “சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்ப டுகிறது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்ததாகவும் புல வர் சுந்தரகணேசன் கூறியுள் ளார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdcGY9cDM%3DKQVcKUa_aCfUjGq7%3DKqrikpyU0fp7nSst1Q%40mail.gmail.com.
தேமொழி ,கதையையே. .....தப்பு தப்புவரலாறையே மாற்றுகிறார்.நான் டூரில் இருக்கிறேன்.விவரமாக எதுவும் எழத முடியவில்லை.செந்தில் திட்டவட்டமாகத் தமிழ்ப்பெயர் .கூகுள் வரைபடத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கே வேம்பாரிலிருந்து வடக்கே திருச்செந்தூரைச் சுற்றியிருக்கும் கற்குவாலை ஐயனார் கோயில், அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில், ஈத்தாமொழி, இட்டமொழி, குதிரைமொழி. ஆராம்பொழி எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பார்த்தால் அந்தச் செம்மண் பூமியின் இயல்பிற்கும் செந்தூர் என்ற பெயருக்கும் இடையிலான தொடர்பு புரியும்.செம்மண் பூமியில் இறைவன் எழுந்தருளி இருக்குமிடம் செந்தில்12ம் தேதி வந்து பாத்துக்கறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvYKmvXut1DQZmE2H5HSJuRAtSzb-ZRbY4n-827jdNZRQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxd-GAmxck2jL1B4mA93Di3wYCuYD_PQQm4hH97w5AHw%40mail.gmail.com.
தேரிக்காடு செம்மண் பூமி தான்.திருச்செந்தூரைச் சுற்றிலும் தேரிக்காடு இருப்பதும் உண்மை தான்.இவையனைத்தும் பூழிக்காடுகள்.
ஆரான் பூழி > ஆராம்பொழி> ஆராமொழிகாயான் பூழி> காயாம்பொழி> காயாமொழிஈத்தான் பூழி > ஈத்தாம்பொழி மொழி>ஈத்தாமொழிஇட்டன் பூழி > இட்டம்பொழி> இட்டமொழிகுதிரான் பூழி > குதிராம்பொழி> குதிரைமொழிஇப்படியே மாறிவிட்டன.இந்த 'மொழி'க்கு முன்னர் ஒரு மூக்கொலிச் சாயல் இருக்கும். கைபேசியில் அதை எப்படிக் காட்டுவதெனத் தெரியவில்லை.20ம் நூற்றாண்டில் விளக்கம் சொல்லப் புகுந்த பெரியோர் பல அனுமானங்களைச் சொல்லி முயற்சித்துள்ளனர்.இது என்னுடைய சொந்தக் கருத்தே.ஆராம்பொழியை 'ஆரல்வாய்மொழி' என்றெல்லாம் சொல்லிக் கஷ்டப்பட்டு அது நிலைத்தும் உள்ளது.சக
On Thu, 9 Jan 2020 5:12 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
திருச்செந்தூர் , மணப்பாடு, உடன்குடி , ராதாபுரம் பகுதிகளில் உள்ள மணல் திட்டுக்கள் அல்லது மேடுகள் தேரிக்காடு என்று அழைக்கப்படுகின்றனதேறிக்காடு என்ற சொல் புழக்கத்தில் இல்லை.இரா. ஜெயராமன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdVuwPj_VAzNCtpuN6ESDiXbSFWkvj%2BjSCNCgfkEOq7Sw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUfCHGbcV%2BcjE%2BS9hRRugLFKxnMOqiW4s_uYanvXJ5SfKg%40mail.gmail.com.