எழுத்து - காரியவாகுபெயர் (நன்னூல், குறள் - தீர்த்தங்கரர் வாழ்த்தில்; தொல். எழுத்து அதிகாரம் என்னும் பெயரில்)

111 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 18, 2023, 9:38:09 PM4/18/23
to Santhavasantham

எழுத்து - காரியவாகுபெயர் (நன்னூல், குறள் - தீர்த்தங்கரர் வாழ்த்தில்; தொல். எழுத்து அதிகாரம் என்னும் பெயரில்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------

KMS > 'பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
> நான்முகன் தொழுதுநன் கியம்புவன் எழுத்தே'
> என்பதில், எழுத்து எவ்வாறு காரியவாகு பெயர் ஆயிற்று என்பதில் எனக்கு முழுத்தெளிவு கிடைக்கவில்லை, ஐயா.

ஆதியில் எழுதுதல் என்பது வரைதல். இன்றும் கன்னடம் எழுத மென்கலன்: வரைக (baraha) .  
https://en.wikipedia.org/wiki/Baraha  An early writer for Kannada.
https://web.archive.org/web/20040920085424/http://www.hindu.com/mp/2004/06/09/stories/2004060901060100.htm ’வரைக’ மென்கலன் உருவாக்கியவர்.
"எழுதுங்கால் கோல் காணா” என்னும் குறளில் இப் பழைய பொருள்தான் காண்கிறோம். சித்திரம் எழுதுதல். மடல் ஊரும்போது, ஒரு கொடியில் காதலியின் உருவை எழுதிப் பிடிப்பான். சித்திரம் எழுதியது தான் சிந்துவெளி குறியீடுகள். அப்போது உயிர், மெய் என்னும் மொழியின் அடிப்படையான ஒலியன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. (சிந்து எழுத்தைப் படிக்கிறேன் என்று கூறும் தமிழர்கள் இக்கருத்தைச் சிந்திக்கவேண்டும்.)

நன்னூல் எழுத்ததிகாரம் ஒலியன்களைப் பற்றிப் பேசுகிறது. மாத்திரை, வளி ... https://tamiltutor.com/எழுத்துகளின்-பிறப்பு/
எனவே, எழுத்ததிகாரக் கடவுள் வாழ்த்தில் கருவி ஒலி (மொழியில் உயிர், மெய் என்ற பகுப்பு, ...). எழுத்து அக் கருவியைக் காட்டுகிறது. எனவே, அது காரியம். காரியம் (எழுத்து), ஒலிகள் ஆகிய கருவிக்குப் பெயராக ஆதலால் காரியவாகுபெயர். காரைக்குடியில் தமிழன்னை கோயிலில் அமர்ந்திருக்க, வரித்தாய், ஒலித்தாய் இருபுறமும் சூழ நிற்கின்றனர்.

ஆக, முதலில் எழுத்து = சித்திரம். இந்த ஓவியக் குறியீடு பின்னால் உயிர், மெய் ஆகிய அக்‌ஷரங்களுக்கு பயன்படத் தொடங்கியது. மொழிக்கு அடிப்படையான உயிர், மெய் என்னும் ஒலிகளைக் குறிக்கும் காரியத்துக்கு எழுத்து (=ஓவியம்) ஆகிவரும் கருவி ஆவதால் எழுத்தைக் காரியவாகுபெயர் என்றனர்.

-----------------

நான் நேற்று எழுதியது. பல முன்னோர்கள் அறிவித்துள்ளமை இப்போது கண்டேன்.
மயிலைநாதர், நன்னூலின் முதல் உரையாசிரியர், எழுத்து, சொல் - கடவுள் வாழ்த்தில் வருவன ஆகுபெயர்கள் என முதலில் கூறியவர். பின்னர், சங்கரநமச்சிவாயர், ...

சோழவந்தான் (சோழாந்தகபுரம்) அரசஞ் சண்முகனார், திருக்குறள் ஆராய்ச்சி, 1908 (செந்தமிழ்) ஆய்விதழில் சொல்லியுள்ளார். பக். 387:
“அகர முதல - அகரமாகிய காரணத்தையுடையனவென்க. எழுத்தெல்லாம் - எழுத்தின் வகைகளெல்லாமென்க. எழுத்து ஒலிவடிவெழுத்தும், வரிவடிவெழுத்துமென இருவகைப்பட்டு அவை ஒவ்வொன்றும் பலவாகுமென்க. எழுத்து - தொழிற்பெயர். அஃதெழுதப்படும் இயல்பினவாய ஒலிவடிவையும் வரிவடிவையுமுணர்த்தலின் ஆகுபெயர்.”
https://books.google.com/books?id=YpG5AAAAIAAJ&
(பேரா. கு.ஞா. சோழவந்தான் ஊரினர்.)

இலக்கணக்கடல் தி. வே. கோபாலையர்,
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/D04.html
எழுத்து : நான்மடியாகுபெயர் ஆதல் -
தன் பொருளை விட்டுத் தன்னுடன் தொடர்புடைய பொருளைச் சுட்டும் பெயரே ஆகுபெயர். ஒரு பெயர் முறையே விட்டு விட்டு நான்காவதாக ஒரு பொருளைச் சுட்டுதல் நான்மடியாகு பெயராம். எ-டு : எழுத்து - இது தொழிற்பெயர்; ஒலியை யுணர்த்துதலின் ஆகுபெயர் ஆகிறது. இது முதல்மடி. அடுத்து இதனையும் விட்டு, ஒலியினது இலக்கணம் என்றா வது இருமடி. இதனையும் விடுத்து, அவ்விலக்கணம் கூறும் நூலையுணர்த்துதல் மும்மடி. அதனையும் விடுத்து, இங்ஙனம் கூறிற்று எழுத்து - இங்ஙனம் அறிவித்தது எழுத்து - எனக் கருமகருத்தாப்பொருளையும் கருவிக்கருத்தாப் பொருளை யும் உணர்த்துவது நான்மடியாகுபெயராம். (கூறப் படும் எழுத்துஇலக்கணம் கருமம் ஆகிய செயப்படுபொருள் ஆதலும், எழுத்திலக்கணத்தால் செய்தி அறிவிக்கப்படுதலின் அது கருவியாதலும், எழுத்துக் கூறிற்று - எழுத்து அறிவித்தது - என்புழி முறையே ஆமாறு அறிந்து கொள்க.) (இ. கொ. 86)

பொள்ளாச்சி நா. மகாலிங்கம், பழைய அச்சு நூலைப் பெற்று (பஞ்சமரபு கண்டுபிடித்த பெரும்பும்புலவர் போன்றோரிடம்) இலக்கண விளக்கம் பதிப்பிக்க உதவினார்.  தி. வே. கோ. இலக்கணக்கொத்து, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடாக வெளிவந்தது. அதில், இ.கொ. நூலும், (இலக்கணக்கடல் உரையும்):
https://www.tamilvu.org/slet/l4330/l0H00uri.jsp?pglink=368&pno=242

”எழுத்து என்னும் தொழிற்பெயர் அப்பொருளைவிட்டுப் பால்பகா அஃறிணைப் பொதுப்பெயராய்’ அப்பொருளை விட்டு ஓவியம் முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப் பெயராய். அப்பொருளை விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடி ஆகுபெயராய். அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்து எழுத்து’ எனக்கருமக் கருத்தாவையும், கருவிக்கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி ஆகுபெயராய் நின்று பல பொருள்பட்டது காண்க. இங்ஙனம் பலபல தொழிற்பெயர்க் குணங்களை விரிக்கின் பெருகும். அமைக.

[வி-ரை:

எழுதப்படுவது எழுத்து - தொழிற்பெயர்.
எழுதப்பட்ட வடிவம் எழுத்து - பொருட்பொதுப் பெயர்.
எழுதப்பட்ட அகரம் முதலியன - சிறப்புப் பெயர்.
அகரம் முதலியவற்றின் ஒலி வடிவம் - ஆகுபெயர்.
அகரம் முதலியவற்றின் ஒலியிலக்கணம் - இருமடி ஆகுபெயர்.
அவ்வொலியிலக்கணம் கூறும் நூல் - மும்மடி ஆகுபெயர்.

எழுத்துக் கூறப்பட்டது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருமக்கருத்தா ஆதலும், எழுத்து அறிவித்தது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருவிக்கருத்தாவாதலும் நான்மடி ஆகுபெயர் என்பது விளக்கப்பட்டது.]”

நா. கணேசன்

kanmani tamil

unread,
Apr 18, 2023, 11:20:18 PM4/18/23
to vallamai
அருமை. 
குழுமத்தார் செய்யும் புண்ணிய காரியங்களில் இத்தகு விளக்கங்கள் சேர்கின்றன. 

சங்கர நமச்சிவாயர் உரையைப் படிக்கும் போது (இளங்கலை வகுப்பில்) எந்த ஆசிரியரும் இந்த மாதிரியான உரைப் பகுதிகளைப் பாடமாக எடுக்க மாட்டார். அவருக்கு அவரது ஆசிரியர் சொல்லிக் கொடுத்து இருக்க மாட்டார். ஆண்டாண்டு காலமாகத் தாவிப் பறந்து போயே... பழக்கம். 

எந்தக் கேள்வித் தாளிலும் இதை ஒட்டிய கேள்வி வராது. 

முதுகலையில் நன்னூல் பாடமே இருக்காது. 

நான் போகிற காலத்தில் விட்டுப் போன விளக்கங்களை எல்லாம் வாசிக்கிறேன்.

ஆனாலும் இலக்கணப் பிரியர்களைத் தவிர; என்னைப் போன்றவருக்கு இது கொஞ்சம் வேப்பம்பூப் பச்சடி மாதிரி தான். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcz%3DEnPe4GWrE4C_ODvwCCwe3jnu3JObiumWq2sFG0%3D%3Dw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 21, 2023, 4:10:34 PM4/21/23
to Santhavasantham
எழுத்து என்பது எழுது- என்னும் வினையின் தொழிற்பெயர். ஓர் உருவத்தை சித்திரத்தால் எழுப்புவது என்பதால் எழு- > எழுத்து என்ற பெயர்ச்சொல் ஏற்பட்டது. ஓவியக் குறியீடு பின்னால் உயிர், மெய் ஆகிய அக்‌ஷர ஒலிகளுக்கு பயன்படத் தொடங்கியது. மொழிக்கு அடிப்படையான உயிர், மெய் என்னும் ஒலிகளைக் குறிக்கும் காரியத்துக்கு எழுத்து (=ஓவியம்) ஆகிவரும் கருவி ஆவதால் எழுத்தைக் காரியவாகுபெயர் என்றனர்.

மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், நன்னூல் சொல்லதிகாரத் தீர்த்தங்கரர் வாழ்த்தில் வரும் சொல் “கருவியாகுபெயர்” என்கிறார். சொல் என்பது மனிதருக்கு ஒரு மொழியின் (a language) பொருளை ஒருவருக்கொருவர் விளங்கச் செய்யும் கருவி (communication tool). விலங்குகளினின்றும் மாந்தரைப் பிரிக்கும் அற்புதமான கருவி *சொல்* தான். எனவே, சொல் என்பது அதன் இலக்கணத்தை உணர்த்தும்போது ஒரு கருவியாகுபெயர் என்கிறார் மகாவித்துவான். சொல்லின் இலக்கணம் உரைக்கும் அதிகாரம் சொல்லதிகாரம். Word, formed from single or more letters, is a fundamental unit of a language which serves as a tool of communication.

 “யாழ் இனிது, குழல் இனிது”, யாழ், புள்ளாங்குழல் என்பன கருவிகள். இங்கே, கருவியாகுபெயராய் இசைக்கருவிகள் உருவாக்கும் இசையைக் குறித்தன. அதுபோல, சொல் என்னும் கருவி கடவுள் வாழ்த்தில் வரும்போது, சொற்களின் இலக்கணத்தைக் குறிக்கிறது. எனவே, சொல் - கருவியாகுபெயர், நன்னூல் கடவுள் வாழ்த்தில்:
    முச்சக நிழற்று முழுமதி முக்குடை
   அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே.
இதனுள், சொல் என்பது கருவியாகுபெயர்.

சொல் - கருவி. என்னை? பேரா. க. வெள்ளைவாரணனார் விளக்கியுள்ளார்.
“ சொல்லதிகாரம்
‘எழுத்துஞ் சொல்லும் பொருளும்நாடி’ என மேற்பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய தொல்காப்பியனார், இப்படலத்தாற் சொல்லிலக்கணங் கூறுகின்றார். அதனால் இது சொல்லதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. சொல் என்பது முற்கூறிய எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாகும். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினாலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடியொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாதலின் இவை சொல்லெனப்படா, இவற்றை அரவம், ஓசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தினால் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்களையும் அறிவிக்கும் ஓசையென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிற பொருளை உணர்த்தியவழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் கூறுவர் உரையாசிரியர். ஒருவர் தாம் பொருளை உணர்தற்கும், பிறர்க்கு உணர்த்தற்கும் *கருவியாய்* நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதியுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளையுணர்த்துவான் ஒருவன்  சொல்லின் துணை கொண்டன்றிப் பொருளை யறிவுறுத்தல் ஆகாமையின் அவனது தொழிலைச் *சொல்லாகிய கருவிமேல்* ஏற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக்கருத்தாவாகக் கூறுவர் தொல்காப்பியர்.”
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0007185/page/n9/mode/2up?view=theater

நன்னூல் கடவுள் வாழ்த்து
---------------------------------------
கொங்கு நாட்டிலே வாழ்ந்து தமிழுக்கு இலக்கணம் தந்தார் பவணந்தி முனிவர். தொல்காப்பியம் கூட ஆட்சியில் இல்லாது ஒரு சில இடங்களிலே தான் அறியப்பட்டது. ஆனால், நன்னூல் அறியாத தமிழ்ப்புலவோர் அன்றும் இன்றும் இலர். சமண சமயத்துத் தீர்த்தங்கரர் இருபது நால்வர். அவர்களில் உலகில் வாழ்ந்து சமண சமயத்தை ஒழுங்கு செய்து தந்தவர்கள் கடைசி இருவர். எழுத்து அதிகாரத்தை கடைசித் தீர்த்தங்கரர் மகாவீரரை வாழ்த்தியும், சொல் அதிகாரத்தை 23-ம் தீர்த்தங்கரர் ஆகிய, பார்சுவநாதரை வாழ்த்தியும் பவணந்தி முனிவர் நன்னூலை யாத்தருளினார். அசோகு மகாவீரரின் தீக்‌ஷாவிருட்சம். ஆத்தி மரம் பார்சுவரின் தீட்சாவிருட்சம். எனவே, சமணக் குரத்தியார் ஔவையார், தமிழ் கற்கத் தொடங்கும் பிள்ளைகளுக்கு ஆத்திசூடி பாடித் தந்துள்ளார். இந்த ஔவையார், அதியமானுக்கு நெல்லிக்கனி ஈந்த சங்ககால ஔவைக்குப் பின்வந்தவர். விநாயகர் அகவல், கொன்றவேந்தன், மூதுரை ... போன்ற சைவசித்தாந்தி ஔவையாருக்குச் சில நூற்றாண்டுகள் முற்பட்டவர். சமணர்கள் தமிழ்க் கல்வியைப் பள்ளிகளில் கற்பிக்கத் தொடங்கிய காலத்தில் எழுந்த தொடக்கக்கல்வி நூல் ஆத்திசூடி.  ஐந்தலை நாகத்தின் கீழ் உலகினைக் காக்கும் அச்சுதன் பார்சுவநாதர் என்பது சமணர் சமயக்கொள்கை.

பிற பின்,
நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages