சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

153 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 29, 2021, 8:05:07 PM8/29/21
to vallamai, housto...@googlegroups.com
சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)
---------------------------------

தமிழ்நாட்டில் ஹிந்து சமயத்தின் கோவில்களில் ஏற்படும் மாற்றங்கள் புதிதானவை. தஞ்சை மாவட்டத்தின் பழைய சைவ சித்தாந்த ஆதீனங்கள் மூன்றும், திருப்பேரூர் வீரசைவ மடமும், சிரவை கௌமார மடாலயமும், பழனி ஸ்ரீலஸ்ரீ சாதுசுவாமிகள் மடாலயம், குன்றக்குடி ஆதீனம், காஞ்சி சங்கர வேதாந்த மடம், மதுரை ஆதீனம் ...  போன்ற இந்து சமயத் தலைமை பூண்டுள்ள ஆதீனகருத்தர்கள் வழிநடத்துவார்கள். இராமகிருஷ்ண பரமஹம்சர் மிஷன், தபோவனம் போன்றவையும் பங்கேற்க வேண்டும். ஃபேஸ்புக், யுட்யூப் போன்ற காணொளி ஓடைகளில் பல அறிஞர்களும், அரசியலாரும் தத்தம் கருத்துகளைச் ஆங்கிலம், தமிழில் சொல்லிவருகின்றனர். இப்போது, வேளுக்குடி உ.வே. (உபய வேதாந்த) கிருஷ்ணன் சுவாமிகளின் பேச்சைக் கேட்டேன்.
பாரதத் திருநாட்டின் இரண்டு செம்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற அர்ச்சகர்கள் உருவாகவேண்டும் என வேளுக்குடி அறிவுரை தருகிறார், கேட்டருள்க: https://youtu.be/bJNfdYakWUg   .
https://www.youtube.com/c/VelukkudiDiscourses/videos

அண்மைய இக் காணொளி, ஹூஸ்டன் மீனாக்‌ஷி ஆலயத்தில் வேளுக்குடியின் சொற்பொழிவுகள் சிலவற்றைக் கேட்டதை நினைவூட்டின. ஒருமுறை, ஏன் சீவில்லிபுத்தூர் என்றுதான் பயன்படுத்த வேண்டும் என விளக்கினார். எல்லாக் கல்வெட்டுக்களிலும், பரம்பரையாகவும் அவ்வூர், பிரதேச மக்கள் உபயோகிப்பது சீவில்லிபுத்தூர்தான். ஒரு கல்வெட்டில்கூட திருவில்லிபுத்தூர் இராது என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர் என்றுதான் இருக்கும் என்றார். அது சரியே. வ் உடம்படு மெய்யாகி, திரு இல்லா ஊர் என்று பொருள்தரக் கூடாது என்பதற்காகத் தான் சீவில்லிபுத்தூர் என்று தேர்ந்தெடுத்தனர் என்றார். எப்படியாயினும் மொழியின் வியாபகத்தன்மைக்கு (Language Diversity), பழைய பெயர்கள், அவ்வூர் மக்கள் பயன்படுத்தும் பெயர்களின் பயன்பாடு அவசியம். ஸ்ரீ > சீ என்பதற்கு லக்ஷ்மி என்பது மாத்திரம் பொருளன்று. ஸ்ரீ என்னும் ஸம்ஸ்கிருதச் சொல் பிராகிருத பாஷைகளிலும், தமிழிலும் சிரீ, சீ (சிரீதரன், சீதரன் என ஆழ்வார் பாசுரங்களிலும், சீரங்கசாமி, சீவில்லிபுத்தூர், ...) என்றும், திரி, திரு என்றெல்லாம் ஆகிறது. நம்பி+ஸ்ரீ ==> நம்பூதிரி. அவ்வகையில், பத்மஸ்ரீ தமிழில் பதுமதிரி என்றாகும். தாமரைத்திரு வ. சுப்பையாபிள்ளை (சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர்). பிறந்த உடனே, ஸ்ரீ சேர்த்தும் நம்பூத்திரி போன்ற வழக்கங்கள் மாறிவருகின்றன. திரு என்பதும், சீ என்பதும் ஸ்ரீ என்பதன் தற்பவச் சொற்கள் என்கிறபோது, ஏன் எப்பொழுதும் மக்கள் பயன்படுத்தும் சீவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆக வேண்டும்? தமிழின் பரப்பளவை ஏன் குறுக்கவேண்டும்?

https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/Sri%20Villiputhur.pdf
ரசிகமணி டிகேசியின் தாயார் ஊர், சீலத்தூர் (=சீவில்லிபுத்தூர்)
https://www.hindutamil.in/news/literature/32121-.html
சீலுத்தூர் ராஜ்கௌதமன்,
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12587
மல்லி கிழான் காரியாதி (புறம் 177). இவன் மல்லி என்னும் ஊர்க்குத் தலைவன். அவ்வூர் சீவில்லிபுத்தூர் அருகில் இருந்த ஒரு ஊர்,
http://puram400.blogspot.com/2010/09/177.html
ஏடு எண் 138
ஆண்டாள் மாலையை அணிதல்
காரியப்பேர், மேல்மணியம், ஸ்தானிகள் சூழ, கருப்பையா முன் நடக்க,
அந்தச் சமயமதில்ச் சீவில்லிபுத்தூர்  ஆச்சி நாச்சியார் தன் மாலை,
சந்தோசமாய் அணிந்து, மாயாவுதாரன் சாடினார்  வான்புரவி,
கடிவாளந்தான் மீள்க்கக் கார் நிறத்தோன் பொன்புரவி கன நாட்டியம்தான் ஆட,
வெடி எழுப்பும் சத்தமுடன் வெட்டிவேர் சப்பரத்தில் வெகு விரசாய்த்  தான் நுழைய,
கோவிந்தா என்ற சத்தம் எங்கும் துலங்கிக் கோல முகில் போல் முழங்கி,
கூடற் புராணம் - சீவில்லிபுத்தூர் பட்டாசாரியன் விண்டுசித்தன் பற்றி,
http://books-kalairajan.blogspot.com/2019/08/blog-post_20.html
https://ta.wikisource.org/
wiki/பக்கம்:வைணவ_புராணங்கள்.https://ta.wikisource.org/wiki/பக்கம்:வைணவ_புராணங்கள்.pdf/104

குதிரைக்கு குர்ரம் என்றால், ஆனைக்கு அர்ரம் என்பது பொருந்துவதில்லை. எனவே, தமிழைக் காப்போம் என்று கூறி அரசு கட்டிலில் அமரும் கக்‌ஷிகள் பழைய தமிழ் மரபுகளை மதித்துக் காத்தல் அவசியம். உதாரணத்திற்கு, இன்னோர் ஊர்ப்பெயரைக் காட்டுகிறேன். வேளிர் குடியில் ஆவிக் குடிகள் பெரும்பெயர் பெற்றவர்கள். ஆய், ஆவி நாடு என்று பொதிகை மலைப் பகுதியிலும், பழனி மலைப்பகுதியிலும் 2000 ஆண்டு முன்னே ஆண்ட குடியின. ஆக்களை ஓம்புதலில் சிறந்தோர் எனப்பொருள். அதே போல, சிறுபாணாற்றுப்படை புகழும் ஓவி, ஓய்மான் குடிகள் வருகின்றனர். பகைவரை ஓய்க்கும் மா (குதிரைப்படை) கொண்ட மன்னன் எனப் பொருள். மயில்கள் ஆர்ந்த ஊர் மயிலாப்பு எனத் தேவாரத்தில் படித்திருப்பீர்கள். இன்றைய மயிலாப்பூர். அதுபோல், ஓய்மான் ஆர்ந்த ஊர் (ஓ(ய்)மா + ஆர்(ந்) + ஊர் = ஓமாந்தூர். நேர்மையின் இலக்கணமாக, எளிமையின் பேருருவாக விளங்கிய விவசாய முதலமைச்சர் ஓமாந்தூர் இராமசாமியாரின் சொந்த ஊர் இது. இதனைத் தவறாக, ஓமந்தூர் எனப் பத்திரிகைகளில் இப்போது காண்கிறோம்.

தமிழ் இந்தியாவின் பழமையான செம்மொழி. பாரத பார்லிமெண்ட்டால் செம்மொழி என்று முதன்முதலாக அறிவித்த மொழி. எப்பொழுதுமே, ஒரு மொழியின் பரப்பளவு விசாலமாகிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தியாவின் பக்தி இலக்கியங்களிலே, இந்தியாவின் செம்மொழி ஆகிய ஸம்ஸ்கிருதத்தில் உள்ள ஆகச் சிறந்த பக்தி இலக்கியம் ஸ்ரீமத் பாகவதம். இதன் அடிப்படையாக, தமிழ் ஆழ்வார்களின் பாசுரங்கள் திகழ்கின்றன. ஒரு மொழியின் அழிவு, சொல்வளத்தை இழப்பதால் ஏற்படும். ஆழ்வார்கள், ஸ்ரீதர என்னும் வடசொல்லைச் சீதரன், சிரீதரன் என்று மொழிபெயர்ப்பர். என் முன்னோர் ஒருவர் பெயர் சீரங்கசாமி.  சீரங்கம், சீவைணவம், சீவில்லிபுத்தூர், சீகத்தம் (< ஸ்ரீஹஸ்தம், திருமந்திரம்), சீகாரியம் (ராஜராஜீசுவரம் உடையார்கோயில் சீகாரி யஞ் செய்வானுக்கும் (S. I. I. ii, 311)), சீதனம், சீதாளி (தாளிப்பனை), சீதேவி, சீபாதம், சீமங்கலி (பாணன், நாவிதன்), சீமான், சீபலி, சீபண்டாரம்,, சீமத்து (செல்வம்), சீமந்தம் (சீர்), சீமுகம் (கடுதாசி) சீவலி (ஸ்ரீபலி), ... என்றெல்லாம் எழுத்திலும் சொல்லிலும் தமிழிலும் பயன்படுத்துவது வழக்கம்.

வடநாட்டில் இருந்து சீவில்லிபுத்தூர் வந்தடைந்த பெற்றோரின் மகன், ரங்கராஜ பாண்டே டிவி ஜர்னலிஸ்ட்.  சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் பல நூற்றாண்டுகளாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை மக்கள் சீலத்தூர் (அ) சீலுத்தூர் என்று பேச்சில் சொல்லுவது வழக்கம்.

இனி வரும் நூற்றாண்டுகளில் தோன்றும் அர்ச்சகர்கள் இருமொழிப்புலமை பெற்று இந்தியாவின் பழமையில் உள்ள முடிச்சுகளை அவிழ்ப்பார்களாக. Linguistics is the key & it will yield results in solving a tough jigsaw puzzle, in addition to Archaeology, Textual History, Paleogenetics.

நா. கணேசன்
சீசெயந்தி நாள், 2021 (ஸ்ரீஜயந்தி நாள்)

https://ia803108.us.archive.org/27/items/NGanesan_IJDL_2018/NGanesan_IJDL_2018.pdf
Some K-initial Dravidian Loan Words in Sanskrit:
Preliminary Observations on the Indus Language

Tiru Murukan ThuNai: Srimad Kirupanandavaariyar, https://youtu.be/c-meawBiS6M (I think Tamil god, Karthikeyan will make Saivam and Vaishanvam flourish in Tamil Nadu just as it did for 3000 years.)
An important question from the late Madurai Adheenam, https://youtu.be/RpUWVHoooAs (at the end the interview).
https://www.youtube.com/c/KoyilOrg/videos  இது தென்கலை சம்பிரதாயம்.
பகவத் விஷயம் - திருவாய்மொழித் தனியன்கள்,
இதுபோல், சைவத்திலும், தலபுராணங்கள், அவற்றின் கதைகள், சுருக்கமாகவும், இலக்கிய நயம் மிக்க செய்யுள்களையும் விளக்கும் சைவ சமயச் சொற்பொழிவாளர்களை சைவ ஆதீனங்கள் தோற்றுவிக்க வேண்டும். சைவ சமய பிரபந்தங்கள், தலபுராணங்கள், ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டு விளக்குவோர் மிகுதல் வேண்டும். சைவ, வைணவ நூல்களை, கும்பாபிஷேக மலர்கள், கட்டுரைகள், மணிவிழா மலர்கள் ... பிடிஎஃப் செய்து https://archive.org போன்ற இலவச தளங்களில் இடுவோர் இயக்கமாக வளரவேண்டும்.

kanmani tamil

unread,
Aug 30, 2021, 12:03:45 AM8/30/21
to vallamai
இப்பவும் சீலுத்தூர் வழக்கில் உள்ளது. (என் பதின்பருவத்தில் கூட அங்கு வாழ்ந்த உறவினர்கள் அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) படிப்பறிவு இல்லாக் கிராமத்தோர் வாயில் தமிழ் இன்றும் உயிருடன் உள்ளது. 

கல்வியின் அடையாளம் என்ற பெயரில் நவநாகரிகம் என்ற மயக்கில் 'ஸ்ரீவி' என அழைப்போர் பெருகி வருகின்றனர். 

திருவில்லிபுத்தூர் என்பது 'அருவி'க்கு நீர்வீழ்ச்சி எனப் பெயர் வைத்த தமிழ் மேதாவித்தனம் தான். 

ஆய்குடிக்கு விளக்கமளித்து அறிவு கொளுத்தியமைக்கு நன்றி. 

ஓமந்தூர் விளக்கம் புதிது. சிறப்பு.

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdNZyDFhoUaPsnjGRGSjV26ayi8T9SizQ-AenEPzuFA6g%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Aug 30, 2021, 12:10:32 AM8/30/21
to vallamai
மல்லிபுத்தூர் இப்பவும் அதே பெயரில் உள்ளது. 
சிவகாசியிலிருந்து வில்லிபுத்தூர் போக மல்லியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். 
கல்வெட்டுகளில் மல்லிவளநாடு என்ற தொடர் உள்ளது என்பர். 

அச்சிறிய ஊர் ஒரு சந்திப்பின் புள்ளி. அங்கிருந்து மதுரைக்கு நேரடிப் பாதை உள்ளது. பழைய வண்டிப்பாதை... கரடுமுரடாகக் கிராமங்களின் ஊடே செல்லும். 

சக 

N. Ganesan

unread,
Aug 30, 2021, 6:20:08 AM8/30/21
to vallamai
On Sun, Aug 29, 2021 at 11:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இப்பவும் சீலுத்தூர் வழக்கில் உள்ளது. (என் பதின்பருவத்தில் கூட அங்கு வாழ்ந்த உறவினர்கள் அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) படிப்பறிவு இல்லாக் கிராமத்தோர் வாயில் தமிழ் இன்றும் உயிருடன் உள்ளது. 

கல்வியின் அடையாளம் என்ற பெயரில் நவநாகரிகம் என்ற மயக்கில் 'ஸ்ரீவி' என அழைப்போர் பெருகி வருகின்றனர். 

திருவில்லிபுத்தூர் என்பது 'அருவி'க்கு நீர்வீழ்ச்சி எனப் பெயர் வைத்த தமிழ் மேதாவித்தனம் தான். 

ஆய்குடிக்கு விளக்கமளித்து அறிவு கொளுத்தியமைக்கு நன்றி. 

ஓமந்தூர் விளக்கம் புதிது. சிறப்பு.

ஓமாந்தூர் தான் ஊர்ப்பெயர்.
நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன.

அண்ணாமலைப் பல்கலை, கோகலே ஹால், தென்புறச் சுவர். ஓமாந்தூரார் திறந்துவைத்த கல்வெட்டு.
சோமலெ, விவசாய முதலமைச்சர் ஓமாந்தூரார், (பதிப்பு, நா. மகாலிங்கம், பொள்ளாச்சி)
....

N. Ganesan

unread,
Aug 30, 2021, 1:36:02 PM8/30/21
to vallamai, housto...@googlegroups.com
சீவில்லிபுத்தூர் எனத் தமிழில் வழங்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பேரங்கள்,
https://www.vikatan.com/spiritual/gods/97049-

கோதையின் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஐந்து வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். மூலவருக்கு சூடிக்கொடுத்தாள் என்பது திருப்பெயர்.

கௌதுக பேரம் எனப்படும் (செல்வ) ஆண்டாளின் திருப்பெயர் மல்லி வளநாடி. முற்காலத்தில் இந்த பகுதிக்கு 'மல்லி வளநாடு’ என்பது பெயர். இந்த நாட்டை ஆள்பவள் எனும் பொருளில் இப்பெயர் வழங்குகிறது. இந்தத் திருமேனி வெள்ளியால் செய்யப் பட்டது. இவளை மல்லிநாடாண்ட மடமயில் என்பர்.
கோதையின் தரிசனம்!

ஸ்நான பேரம் எனப்படும் திருமஞ்சனத் திருமேனிக்கு புதுவை ஆண்டாள் என்பது பெயர். புதுவை என்பது ஸ்ரீவில்லிபுத்தூரின் பெயர்களில் ஒன்றாகும்.

வீதி கண்டருள்வாள் எனும் உற்ஸவத் திருமேனிக்கு 'திருப்பாவை பாடினாள்’ என்பது பெயர்.

நித்தியோற்ஸவராக (பலிபேரம்) உள் வலம் வந்து ஸ்ரீபலி சாதிக்கும் ஆண்டாளுக்கு, 'வேயர் பயந்த விளக்கு’ என்பது பெயர்.

- ஆட்சிலிங்கம், சென்னை-4

>
> முக்கியக் காரணம் மக்களுக்கு ஸ்ரீ என்பது சீ என்று தமிழில்
> வழங்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களில்,
> கல்வெட்டுகளில் இருப்பதை இன்றைய தமிழில் இருக்கும் சொல்.
>
> இதில் சீ என்பதைத் திரு என மாற்றத் தேவையில்லை. உ-ம்:
> ஸ்ரீதரன் சீதரன் என்றால் போதும். திருதரன் என்று மாற்றத் தேவையில்லை.
>
> நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2021, 11:49:58 PM8/30/21
to vallamai, housto...@googlegroups.com
<<<
இப்பவும் சீலுத்தூர் வழக்கில் உள்ளது. (என் பதின்பருவத்தில் கூட அங்கு வாழ்ந்த உறவினர்கள் அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) படிப்பறிவு இல்லாக் கிராமத்தோர் வாயில் தமிழ் இன்றும் உயிருடன் உள்ளது.

கல்வியின் அடையாளம் என்ற பெயரில் நவநாகரிகம் என்ற மயக்கில் 'ஸ்ரீவி' என அழைப்போர் பெருகி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் என்பது 'அருவி'க்கு நீர்வீழ்ச்சி எனப் பெயர் வைத்த தமிழ் மேதாவித்தனம் தான்.

ஆய்குடிக்கு விளக்கமளித்து அறிவு கொளுத்தியமைக்கு நன்றி.

ஓமாந்தூர் விளக்கம் புதிது. சிறப்பு.

சக
>>>

ஔவை துரைசாமிப்பிள்ளை, புறநானூற்று உரையில், சீவில்லிபுத்தூர் என்ற பெயரின் தோற்றத்தை விளக்கியுள்ளார்:
மகிழம் > வகுளம் (நம்மாழ்வார் = வகுளாபரணர்) ஆதற்போல், மல்லி > வல்லி > வில்லி ஆகியுள்ளது. பனாட்டு > பினாட்டு; பன்னுதல் > பின்னுதல் (திருப்பூர் பின்னலாடை, கடா > கிடா, ...)
“மல்லிகிழான் காரியாதி

காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளதோர் ஊர். இவன் வேளாண்குடி முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ் பெற்றவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பன் விண்ணந்தாயனை யும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச் சென்று அவனது கைவண்மையைக் கண்களிப்பக் கண்டார். அங்கே இம்மல்லி கிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து புளிச்சுவையை விரும்பிக் களாப்பழத்தையும், துடரிப்பழத்தையும், விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து குடநாட்டு மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும் பனையோலையில் வைத்து விடியற்காலையில் உண்பதையும் கண்டனர். உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர், வேந்தர் நெடுநகர் முன்னே நின்று கண் சிவக்க, நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில் பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும், இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்.”

“இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக் களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப் புத்தூரே பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லி புத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டாளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய் தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் “பளியர்” என இந்நாட்டவரால் வழங்கப்படு கின்றனர்.”

சீயன் = ஸ்ரீயன் (கந்தரந்தாதி)
https://kaumaram.com/anthathi/nat_019.html

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் - நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகள் ஒதுமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்

----

குறித்தொருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்தவூர் விண்டுசித்தர் நீடூர் - பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூரெனு ஐவர்க்குத் தானிரந்தான்
வாழ்வில்லி புத்தூர் வளம் - நூற்.  திருப். அந். 48 (திவ்யகவி)

ந. சி. கந்தையாபிள்ளை, தமிழ்ப் புலவர் அகராதி
ஞானசம்பந்த தேசிகர்: (16ஆம் நூ.) இவர் பாண்டிநாட்டுச் சீவில்லிபுத்தூர் வேளாளர்; சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த தசகாரிய அகவல், நவரத்தின மாலை, பண்டாரக் கலித்துறை, சொக்கநாதக் கலித்துறை, பேரானந்த சித்தியார் முதலியன இவர் பாடிய நூல்கள்.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்: (சங்ககாலம்) தங்கால் என்பது திருத்தண்கால் என இக்காலத்து வழங்கும். இது சீவில்லிபுத்தூருக் கருகிலுள்ள விட்டுணுகோயிலுள்ள இடம். இவர் பாடியது: நற். 368.

திருவேங்கடையர்: (14ஆம் நூ.) இவர் சீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வேதியர். உவமான சங்கிரகமியற்றியவர். உவமான சங்கிரகம் புகழேந்திப் புலவர் செய்ததாகக் கூறப்படுவதுமுண்டு.

Country Herald, கிராம தூதன்
கௌரவ பத்திராதிபர்: இரா. கு. நல்லகுற்றாலம்பிள்ளை, சீவில்லிபுத்தூர்
https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0001385_கிராம தூதன் 1942 மார்ச்சு.pdf

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008856_எனதுயிர்த்_தோழர்_திருவாளர்,_இ_மு_சுப்பிரமணிய_பிள்ளையவர்கள்_வரலாறு.pdf  (சீவில்லிப்புத்தூர் இந்து உயர் பள்ளிக்கூடம்)

https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/திராவிட நாடு (ஜூன் 2, 1946).pdf
கலைஞர் பால் கருணை காட்டுக (பாகவதர்-கிருஷ்ன் கைது விடுதலை கோரி) பல ஊர்களில் - சீவில்லிப்புத்தூர்  உள்பட - தீர்மானம்.

ராயகோபுரம் - தமிழ்நாட்டின் சின்னம்,
https://www.bbc.com/tamil/india/2013/09/130919_rajaduraiontempletower

வெண்பா
வேசையரே மல்குமூர் வீதியிலார் வந்தாலும்
பேசிவலை வீசிப் பிடிக்குமூர் - ஆசைமயல்
பூட்டுமூர் கையிற் பொருள்பறித்தே யோடுகொடுத்
தோட்டுமூர் சீவிலிபுத் தூர். 249

இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சீவில்லிபுத்தூரிற் பாடிய கவி.
(ஔவை துரைசாமிப் பிள்ளை, தமிழ் நாவலர் சரிதை)

https://vallinam.com.my/version2/?p=7227 சுளுந்தீ - முத்துநாகு (பழைய பாணர்களில் ஒரு பகுதியினராகிய மங்கலர் பற்றிய நாவல்).
கன்னிவாடி அரண்மனையும் அதன் எல்லைகளையும் விரித்து சித்திரமாக்குவதில் முத்துநாகு வெற்றி பெற்றுவிட்டார். சாலைகள் வழியே திசையை அனுமானிப்பதில்தான் எவ்வளவு அபத்தமுள்ளது. கன்னிவாடியிலிருந்து மலை ஏறி மலைக் காடுகள் வழியாகவே மூணாருக்குச் செல்வதும், அங்கிருந்தபடியே வெள்ளிமலை சாப்டூர் சந்தையூர் வழியாக சீவில்லிபுத்தூர் செல்வதுமாக கதையினூடே பல மைல்கள் பிரயாணத்தை நாவல் சாத்தியமாக்கியுள்ளது.

நா. கணேசன்
>

> முக்கியக் காரணம் மக்களுக்கு ஸ்ரீ என்பது சீ என்று தமிழில்
> வழங்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களில்,
> கல்வெட்டுகளில் இருப்பதை இன்றைய தமிழில் இருக்கும் சொல்.
> சீவில்லிபுத்தூர் அப்பிரதேச மக்கள் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில்
> இருக்கும் சொல். சீலத்தூர், சீலுத்தூர் என்றும் சொல்வர், அதிலும் சீ (< ஸ்ரீ) உள்ளது.
>
> இதில் எல்லாம் சீ என்பதைத் திரு என மாற்றத் தேவையில்லை. உ-ம்:

> ஸ்ரீதரன் சீதரன் என்றால் போதும். திருதரன் என்று மாற்றத் தேவையில்லை.
> ஸ்ரீதனம் சீதனம் என்றால் போதும். திருதனம் என்று மாற்றத் தேவையில்லை.
> எங்கேயோ சென்னையில் இருந்துகொண்டு பழைமையான ஊர்ப்பெயர்களை
> மாற்றி, தமிழின் பரப்பைக் குறுக்குதல் சரியன்று.
>
> நா. கணேசன்

kanmani tamil

unread,
Aug 31, 2021, 1:21:05 AM8/31/21
to vall...@googlegroups.com
ஏற்கெனவே சொன்னது தானே...

On Mon, Aug 30, 2021 at 8:49 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
<<<
இப்பவும் சீலுத்தூர் வழக்கில் உள்ளது. (என் பதின்பருவத்தில் கூட அங்கு வாழ்ந்த உறவினர்கள் அப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) படிப்பறிவு இல்லாக் கிராமத்தோர் வாயில் தமிழ் இன்றும் உயிருடன் உள்ளது.
கல்வியின் அடையாளம் என்ற பெயரில் நவநாகரிகம் என்ற மயக்கில் 'ஸ்ரீவி' என அழைப்போர் பெருகி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூர் என்பது 'அருவி'க்கு நீர்வீழ்ச்சி எனப் பெயர் வைத்த தமிழ் மேதாவித்தனம் தான்.
ஆய்குடிக்கு விளக்கமளித்து அறிவு கொளுத்தியமைக்கு நன்றி.
ஓமாந்தூர் விளக்கம் புதிது. சிறப்பு.
சக
>>>
ஔவை துரைசாமிப்பிள்ளை, புறநானூற்று உரையில், சீவில்லிபுத்தூர் என்ற பெயரின் தோற்றத்தை விளக்கியுள்ளார்:
மகிழம் > வகுளம் (நம்மாழ்வார் = வகுளாபரணர்) ஆதற்போல், மல்லி > வல்லி > வில்லி ஆகியுள்ளது. பனாட்டு > பினாட்டு; பன்னுதல் > பின்னுதல் (திருப்பூர் பின்னலாடை, கடா > கிடா, ...)
“மல்லிகிழான் காரியாதி
காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளதோர் ஊர். இவன் வேளாண்குடி முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ் பெற்றவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பன் விண்ணந்தாயனை யும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச் சென்று அவனது கைவண்மையைக் கண்களிப்பக் கண்டார். அங்கே இம்மல்லி கிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து புளிச்சுவையை விரும்பிக் களாப்பழத்தையும், துடரிப்பழத்தையும், விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து குடநாட்டு மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும் பனையோலையில் வைத்து விடியற்காலையில் உண்பதையும் கண்டனர். உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர், வேந்தர் நெடுநகர் முன்னே நின்று கண் சிவக்க, நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில் பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும், இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்.”
“இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக் களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப் புத்தூரே பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லி புத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டாளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய் தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் “பளியர்” என இந்நாட்டவரால் வழங்கப்படு கின்றனர்.”

மல்லி இப்போதும் தனி ஊராக உள்ளது. 'வில்லி' என்பதன் பெயர்க்காரணம் நீங்கள் சொன்னதாக இருக்கலாம். பளியர் இன்று பேச்சு வழக்கில் பளிங்கர் எனப்படுகின்றனர்.
பளிஞர் அய்யனார் மலையிலிருந்து ஒரு மலை ஏறி இறங்கித் தேனி சென்று விடுவர். அய்யனார் மலை சீலுத்தூர் அருகே ராஜபாளையத்தில் உள்ளது. அங்கிருந்து தெற்கே ghat road ஒன்று அய்யப்பன் கோயிலுக்கு இட்டுச் செல்லும். இப்போது அக்கணவாய் தூர்ந்து போய் உள்ளது.
சக 

நா. கணேசன்
>
> முக்கியக் காரணம் மக்களுக்கு ஸ்ரீ என்பது சீ என்று தமிழில்
> வழங்கும் என்பதற்கு நல்ல உதாரணம் சீவில்லிபுத்தூர் என இலக்கியங்களில்,
> கல்வெட்டுகளில் இருப்பதை இன்றைய தமிழில் இருக்கும் சொல்.
> சீவில்லிபுத்தூர் அப்பிரதேச மக்கள் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில்
> இருக்கும் சொல். சீலத்தூர், சீலுத்தூர் என்றும் சொல்வர், அதிலும் சீ (< ஸ்ரீ) உள்ளது.
>
> இதில் எல்லாம் சீ என்பதைத் திரு என மாற்றத் தேவையில்லை. உ-ம்:
> ஸ்ரீதரன் சீதரன் என்றால் போதும். திருதரன் என்று மாற்றத் தேவையில்லை.
> ஸ்ரீதனம் சீதனம் என்றால் போதும். திருதனம் என்று மாற்றத் தேவையில்லை.
> எங்கேயோ சென்னையில் இருந்துகொண்டு பழைமையான ஊர்ப்பெயர்களை
> மாற்றி, தமிழின் பரப்பைக் குறுக்குதல் சரியன்று.
>
> நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 31, 2021, 9:47:04 AM8/31/21
to vallamai, housto...@googlegroups.com
On Tue, Aug 31, 2021 at 8:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
மிகவும் பழைய ஊரைப் புத்தூர் என்பது சரியா?
"திருவுள்ளபழவூர்" என்பது இன்னும் பொருந்துமோ?

ஔவை விளக்கியுள்ளாரே. 1500 ஆண்டு முன்னே, புதுசா உருவாக்கின ஊர் புத்தூர்.
மல்லிபுத்தூர் என்று பெயர், மல்லி வளநாட்டுப் புத்தூர். எனவே, புதுவை, தென்புதுவை
எனச் சீவைணவ நூல்களிலே காணலாம்.

மரைக்காடு என்பது பழம்பெயர். ர, ற வேறுபாடு தமிழில் அழிந்த காலத்தில் தேவாரமும்
(மறைக்காடு) ஏற்பட்டது. இதையொட்டிய கதைகளை விரிவுபடுத்தினவர் சேக்கிழார்.
மரை என்பது Antelope என்பதற்குத் தமிழர் அமைத்த பெயர். மிகப் பொருத்தமான காரணப்பெயர்.
பலருக்கும் antelope, deer வேறுபாடு தெரியாது. மரைக்காட்டு மரை தான் கொற்றி ஊர்தி.
சிவபிரான் கையினில் ஏந்துவது. வேட்டையாடி இம் மரையின் உரி போர்த்தார் என வேத
இலக்கியங்களிலே காணலாம். கருமரைகள் வேதாரணியத்து ஈசனை வணங்குவதாக
சம்பந்தர் பாடியுள்ளார். மரை > மறை > மறைக்காடு ஆனதைத் திருமந்திரமணி துடிசைகிழார்
போன்றோர் ஒரு நூற்றாண்டு முன்னரே விளக்கினர்.
இக் கருமரை 4700 ஆண்டுகளாக, இந்திய வானியலில் உள்ளது:

-----------------------

மரைக்காடு மறைக்காடு என் ஆகி புராண உற்பத்தி போல,
மல்லிபுத்தூர் > வல்லிபுத்தூர் > வில்லிபுத்தூர் (சீவில்லிபுத்தூர்/ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஔவை துரைசாமிப்பிள்ளை, புறநானூற்று உரையில், சீவில்லிபுத்தூர் என்ற பெயரின் தோற்றத்தை விளக்கியுள்ளார்:
மகிழம் > வகுளம் (நம்மாழ்வார் = வகுளாபரணர்) ஆதற்போல், மல்லி > வல்லி > வில்லி ஆகியுள்ளது. பனாட்டு > பினாட்டு; பன்னுதல் > பின்னுதல் (திருப்பூர் பின்னலாடை, கடா > கிடா, ...)
“மல்லிகிழான் காரியாதி

காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளதோர் ஊர். இவன் வேளாண்குடி முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ் பெற்றவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பன் விண்ணந்தாயனை யும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச் சென்று அவனது கைவண்மையைக் கண்களிப்பக் கண்டார். அங்கே இம்மல்லி கிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து புளிச்சுவையை விரும்பிக் களாப்பழத்தையும், துடரிப்பழத்தையும், விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து குடநாட்டு மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும் பனையோலையில் வைத்து விடியற்காலையில் உண்பதையும் கண்டனர். உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர், வேந்தர் நெடுநகர் முன்னே நின்று கண் சிவக்க, நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில் பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும், இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்.”

“இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக் களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப் புத்தூரே பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லி புத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டாளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய் தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் “பளியர்” என இந்நாட்டவரால் வழங்கப்படு கின்றனர்.”

சீயன் = ஸ்ரீயன் (கந்தரந்தாதி)
https://kaumaram.com/anthathi/nat_019.html

~NG

kanmani tamil

unread,
Aug 31, 2021, 10:14:40 AM8/31/21
to vallamai
புறப்பாடலின் கொளு மல்லிகிழான் என்று தான் சொல்கிறது. 

மல்லியிலிருந்து ஆறேழு கி.மீ. தள்ளி இருப்பது வில்லிபுத்தூர். 
அது புதிதாகத் தோன்றி வில்லி புத்தூர் ஆனதால் echo ஆகி மல்லிபுத்தூர் எனும் பெயர்வழக்கு உருவானது எனலாம். 
சக 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 31, 2021, 10:16:50 AM8/31/21
to housto...@googlegroups.com, vallamai

---------- Forwarded message ---------
From: N. Ganesan <naa.g...@gmail.com>
Date: Tue, Aug 31, 2021 at 9:25 AM
Subject: Re: சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்)
To: Santhavasantham <santhav...@googlegroups.com>

On Tue, Aug 31, 2021 at 8:57 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Human mind is fickle. It keeps jumping from one thing to another.

How long can someone be called newly wed?
So, puththoor (new town) has to become "pazhaiya oor"after sometime.  Is that not so?
Just wondering.

New York remains New York. It does not become Old York.
Meanwhile, Bhajan songs will have to continue in Tamil and other languages.

N. Ganesan

On Tue, Aug 31, 2021 at 9:46 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Aug 31, 2021 at 8:14 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
மிகவும் பழைய ஊரைப் புத்தூர் என்பது சரியா?
"திருவுள்ளபழவூர்" என்பது இன்னும் பொருந்துமோ?

ஔவை விளக்கியுள்ளாரே. 1500 ஆண்டு முன்னே, புதுசா உருவாக்கின ஊர் புத்தூர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMqyHTWknLb26Gd0aJjKqpkU2L3GqFun5oHCttHx27F_A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 1, 2021, 12:40:53 PM9/1/21
to vallamai
On Tue, Aug 31, 2021 at 9:14 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
புறப்பாடலின் கொளு மல்லிகிழான் என்று தான் சொல்கிறது. 

மல்லியிலிருந்து ஆறேழு கி.மீ. தள்ளி இருப்பது வில்லிபுத்தூர். 
அது புதிதாகத் தோன்றி வில்லி புத்தூர் ஆனதால் echo ஆகி மல்லிபுத்தூர் எனும் பெயர்வழக்கு உருவானது எனலாம். 
சக 

மல்லிபுத்தூர் வில்லிபுத்தூர் என்பதன் எதிரொளி (reflection) என்பதை ஏற்கிறேன்.
 
kanmani tamil

unread,
Sep 1, 2021, 1:09:20 PM9/1/21
to vallamai

N. Ganesan

unread,
Sep 9, 2021, 4:22:07 PM9/9/21
to housto...@googlegroups.com, vallamai, ctamil
Thanks, Smt. Bavani. This is from Santi Sadhana trust (Murray S. Rajam publishers), edited by prof. Y.Subbarayalu. Volume I, I suppose. I bought the paper copy of Vol.II, unfortunately Vol. I was not available in the bookstore then.
https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kuly#book1/
will try to get the Volume I also in Tamil Digital Library.

T. N. Subramanian, Epigraphical Glossary:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010712_கல்வெட்டுச்_சொல்லகராதி.pdf
in a modern format, by Aravamudan,
https://archive.org/details/vvv_20200701_20200701_2202/page/n1/mode/2up

இவற்றில் சேர்த்த வேண்டிய ஒரு கல்வெட்டுப் பெயர்ச்சொல் உள்ளது: சீவில்லிபுத்தூர் என்பதாகும்.
(1) சீவில்லிபுத்தூர் - கோச்சடை பந்மரான த்ரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டியர்க்கு எனத் தொடங்கும் கல்வெட்டு. இந்தியக் கல்வெட்டு அறிக்கை 519/1926.

(2) இ.க.ஆ. அறிக்கை: 520/1926

சீவில்லிபுத்தூர்

(3) இ.க. அறிக்கை 530/1926
சீவில்லிபுத்தூர் - ஸ்ரீ குலசேகரதேவர்

(4) இ.க. ஆ. அறிக்கை: 563 / 1926
சீவில்லிபுத்தூர்
திருமல்லிநாட்டு சீவில்லிபுத்தூர் சீபராங்குசப் பேரேரியில்

குறிப்பு : இக் கல்வெட்டுகளில் எல்லாம் ஸம்ஸ்கிருத வார்த்தைகள் கிரந்த லிபியில் உள்ளன. ஆனாலும், ஊர்ப்பெயர் சீவில்லிபுத்தூர் என்றிருத்தல் மிகச் சிறப்பு. எனவே தான், திருவில்லிபுத்தூர் என்ற அண்மைய திருத்தம் தேவையில்லாதது. இதனால், தமிழின் பரப்பளவு மிகக் குறுகும். what we need is Linguistic diversity, and our forefathers have shown the way on the approaches to preserve them. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும், சீவில்லிபுத்தூர் என்றும் பல நூற்றாண்டுகளாக ஆளப்பட்டுள்ளது. சீலத்தூர்/சீலுத்தூர் எனவும் பொதுமக்கள் வழக்கிலும் சீ (< ஸ்ரீ) உள்ளது.

Reference: இரா. இரகுநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர், 2008, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010752_ஸ்ரீவில்லிபுத்தூர்.pdf

ஓர் உதாரணம் தருகிறேன்: என்னிடம் நிரஞ்சன் பாரதி “அடங்ஙொப்புரானே" விளக்கக் கேட்டிருந்தார். அதில் ஆண்பால் விளி, “அட” குறுகி “ஙொப்புரானே” என்றும் புழங்கும். இவை  “அட, உங்க(ள்) பிரானே” என்பதன் மாற்றம் ஆகும். தம்பிரான், தம்பிராட்டி என்பன தம்புரான், தம்புராட்டி எனவழங்குதல் போல, அடங்ஙொப்புரானே என்கிறோம். இதனை, பத்மினி நடித்து மோகனா, தில்லானா மோகனாம்பாள் எனப் பட்டம் பெறும்போது சிவாஜி சொல்வதில் கேட்கலாம். எம்ஜிஆர் பாட்டும், பின்னரும் பாடல்கள் அடங்கொப்புரானே என உண்டு. “அப்பர் ஆணை” என்ற விளக்கம் பொருந்துவதாய் இல்லை: (1) அப்பர் என்று எந்தக் கம்யூனிட்டியும் பயன்படுத்தக் காணோம். (2) Also, everyone does not issue orders, only royals, or Sambandhar tell "aaNai namathE". (3) there is no retroflex, N in this phrase at all. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் தொல்காப்பியர். பிரான் என்ற சொல் அன்றாடத் தமிழில் மறைந்துவிட்டதால், இத்தகு நூதன விளக்கங்கள் வருகின்றன. அதுபோலத்தான், 1500 ஆண்டு காலமாக, கல்வெட்டிலும் உள்ள சீவில்லிபுத்தூர், சென்னை போன்ற இடத்தில் இந்த மொழிவளம் அறியாதாரால், ஸ்ரீவில்லிபுத்தூர் எனவே திருவில்லிபுத்தூர் எனத் தற்போது மாற்றுகின்றனர். அவர்களில் பலருக்கும் தமிழ் தாய்மொழி யன்று.  சீவில்லிபுத்தூர் என்றே தமிழ் முன்னோர்கள் வழியில் சொல்வோம்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Sep 9, 2021, 11:10:58 PM9/9/21
to vallamai
'அடஙொப்புரானே' க்கு இப்படி ஒரு விளக்கம் உள்ளதா!!!

எனக்குப் புதுச் செய்தி 
அருமை 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 10, 2021, 12:12:39 AM9/10/21
to vallamai, Niranjan Bharathi
On Thu, Sep 9, 2021 at 10:10 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'அடஙொப்புரானே' க்கு இப்படி ஒரு விளக்கம் உள்ளதா!!!

எனக்குப் புதுச் செய்தி 
அருமை 
சக 

சீவில்லிபுத்தூர் பாண்டிநாட்டின்கண் உள்ளது. பாண்டிமண்டல சதகப் பாடல்:

பொருந்தியசீ வில்லிபுத்தூ ரின்மேவிய புண்டரிகத்
திருந்தருளே செய்திடுநாச் சியாரம்ம னென்பவளைத்
தரும்பெரும் பொன்மதி சீர்கருணைப் பெயர்தாங்குகின்ற
வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன்மண்டலமே
                             - பாண்டிமண்டல சதகம் 16.

ஸ்ரீ ஆண்டாள் சந்திரகலாமாலை, திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம், ((1950+ நூலில் கண்டபடி.
கொங்குமண்டல சதகம், சோழமண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், பாணிமண்டல சதகம்
என்பவற்றால் அறியலாகும் வரலாறுகள் பல.

<<<
>>>\
 
kanmani tamil

unread,
Sep 10, 2021, 1:27:30 AM9/10/21
to vallamai
சதக இலக்கியத்தில் கிடைக்கும் எந்தத் தரவையும் பண்டைய வரலாறு என்று முடிபுரைக்க இயலாது. 

அந்த சதகத்தில் பயன்பட்டிருக்கும் மொழிநடை; அது தோன்றிய காலத்து மொழி இயல்பைக் கொண்டிருக்கும். 

மொழி வரலாறுக்கு மட்டுமே சதகத்தை நம்பலாம். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 10, 2021, 1:31:10 AM9/10/21
to vallamai
On Fri, Sep 10, 2021 at 12:27 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சதக இலக்கியத்தில் கிடைக்கும் எந்தத் தரவையும் பண்டைய வரலாறு என்று முடிபுரைக்க இயலாது. 

அந்த சதகத்தில் பயன்பட்டிருக்கும் மொழிநடை; அது தோன்றிய காலத்து மொழி இயல்பைக் கொண்டிருக்கும். 

மொழி வரலாறுக்கு மட்டுமே சதகத்தை நம்பலாம். 

சக 

சதகங்கள் இல்லையென்றால் பல நுண்வரலாறுகள் (மைக்ரோஹிஸ்டரி) அறிதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
புலவர், புரந்தார், அவர்களின் சமயங்கள் எனப் பல செய்திகள் கிடைத்திருக்காது,

NG

kanmani tamil

unread,
Sep 10, 2021, 2:40:40 AM9/10/21
to vallamai
அது அரசியல் வரலாறா? 
இல்லையே. 
சக 

kanmani tamil

unread,
Sep 10, 2021, 3:14:56 AM9/10/21
to vallamai
சமூக வரலாறு எனலாம் 
சக 

N. Ganesan

unread,
Sep 15, 2021, 10:20:03 PM9/15/21
to vallamai, housto...@googlegroups.com
தமிழ் நாட்டின் மண்டல சதகங்கள் பழைய நுண்வரலாறுகள் (மைக்ரோ-ஹிஸ்டரி) பலவற்றைத் தெரிவிப்பவை.
அவ்வகையில் பாண்டிமண்டல சதகமும் ஒன்று. சீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றிய குறிப்பு உள்ள பாடல்
அதில் இருக்கிறது. இந்த அரிய நூலைப் பல ஓலைச் சுவடிகளுடன் ஒப்பிட்டு வெளியிட்டவர்
சீகாழி ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை ஆவார். பல அரிய நூல்களை அச்சிட்டவர்.

மதுரை ஐயம்பெருமாள் ஆசிரியர் இயற்றிய பாண்டிமண்டல சதகம்
சீர்காழி : ஸ்ரீ அம்பாள் பிரஸ் , 1932, 20 பக்கம்.
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7kuI3&#book1/
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0024495/TVA_BOK_0024495_பாண்டிமண்டல_சதகம்.pdf

        கட்டளைக் கலித்துறை
  --------------------
பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்
திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்
தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற
வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.  (16)

சரியான முறையில் அலகிட்டுத் தரக் கேட்டிருந்தேன். வித்துவசிகாமணி முத்துத்தாண்டவராயபிள்ளை பதிப்பின்
மூலம் கிட்டியது. இன்னும் 2 (அ) 3 லட்சம் பழைய நூல்களை இணையத்தில் காப்பதால் தமிழின் ஆழம் மிகும்
என்பதுறுதி. இவை நனவாக, அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் உணர்ந்து செயல்படல் அவசியம்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Sep 16, 2021, 12:24:45 PM9/16/21
to vallamai
வரலாற்றிற்கு எந்த இலக்கியத்தையும் சான்றாக்கக் கூடாது என்பது தான் விதி. வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே இலக்கியத்தை நாடுவர். 

அக்கொள்கைக்கு விலக்காகும் தகுதி தொகையிலக்கியத்திற்கு மட்டும் தானே உண்டு. 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 16, 2021, 3:53:42 PM9/16/21
to வல்லமை
On Thursday, September 16, 2021 at 11:24:45 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
வரலாற்றிற்கு எந்த இலக்கியத்தையும் சான்றாக்கக் கூடாது என்பது தான் விதி. வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே இலக்கியத்தை நாடுவர். 

அக்கொள்கைக்கு விலக்காகும் தகுதி தொகையிலக்கியத்திற்கு மட்டும் தானே உண்டு. 

சக 

இல்லை.

நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages