தமிழ் மரபுகள்

155 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jun 18, 2025, 11:09:38 AM6/18/25
to vallamai
/// ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

 இதுவே தமிழின் சிறப்பு ///


தெரிவு: சக

kanmani tamil

unread,
Jun 20, 2025, 11:37:15 PM6/20/25
to vallamai
மேலே பார்த்தது தமிழ் இலக்கணத்தில் சொல்மரபு 


இந்தப் பதிவில் காண்பது தமிழ் நாட்டுச் சிற்பக்கலை மரபு.

ஒரு லிங்கத்தின் மூன்று பாகங்கள்:
பிரம்ம பாகம் 
விஷ்ணுபாகம் 
ருத்ர பாகம் 

இப் பெயர்கள் வடமொழிப் பெயர்கள் தாம்; ஆனால் மரபு தமிழ்மரபு எனலாம். அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி என்னுள் எழவில்லை. கேள்வியை மக்கள் எழுப்புவர் என்பது அப்பட்டமான உண்மை. 

ஒரு காலகட்டத்தில் எதையும் வடமொழியில் சொல்வதே மேதாவிலாசம் என்ற கொள்கை நிலவியதன் விளைவு. 

வேறொரு சான்று விளக்கம் பார்க்கலாம்...
நம் தமிழகத்து இலக்கிய வரலாற்றில் மதுரையில் எழுந்தருளி இருக்கும் சோமசுந்தரப் பெருமானை மையப்படுத்தித் தோன்றிய கதைகள் திருவிளையாடற் புராணக் கதைகள். அவற்றுக்கு முதன் முதலில் இலக்கிய வடிவம் தந்த போது வடமொழியில் தான் எழுதினர்- ஹாலாஸ்ய மகாத்மியம். பிறகு தான் தமிழ்ப்படுத்தப் பட்டது. 

நிகழ்காலத்தில் எதுவும் ஆங்கிலப் பெயர் பெறுகிறது அல்லவா?! அது போல...

சக 

kanmani tamil

unread,
Nov 4, 2025, 12:00:54 AM11/4/25
to vallamai
அரைஞாண் கொடி > அரணாக்கொடி 
அரைஞாண் > அரைநாண் 
அரை = இடுப்பு 
இன்று இதை இடுப்புக்கொடி என்றும் அழைப்பர். 

தமிழர் வாழ்வியலில் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் 'இழை கட்டும்' சடங்கு இன்றும் பெரும்பாலோரிடமும் காணப்படுகிறது. இதைக் 'கயறு கட்டுதல்' எனவும் சொல்வர். பிறந்த குழந்தை மிகுதியும் அழுது கொண்டே இருந்தாலும்; இரவில் தூங்காமல் அவஸ்தைப் படுத்தினாலும் 'சீக்கிரம் இழை கட்டு' என்று பெரியோர் சொல்வது உண்டு. 

இச்சடங்கில் குழந்தையின் கையிலும் இடையிலும் மஞ்சள் தடவிய நூலிழைகளைக் காப்பாகக் கட்டுவர். கையில் கட்டும் இழையில் வசம்பு (குழந்தை வளர்ப்போர் வசம்பு என்று வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்; அதன் மருத்துவ குணம் குறைந்து விடும் என்று நம்பிக்கை. பேர் சொல்லா° என்பர்.) மணிகளையும் பூலாங்கிழங்கு மணிகளையும் கோர்த்திருப்பர் அத்துடன் பால்காப்பு (பண்டைக் காலத்தில் சங்கினால் ஆன காப்பு ; தற்போது ப்லாஸ்டிக்), யானைக்கண்ணி வளையல் (அல்லது கருவளை) இரண்டையும் சேர்த்துக் காட்டுவர். இடையில் மஞ்சளில் நனைத்த நூலிழையைக் கட்டுவர். வசதிக்கேற்ப தங்கக் கொடியுடனோ; அல்லது வெள்ளிக் கொடியுடனோ சேர்த்துக் கட்டுவதும் உண்டு.

தாய்வீட்டில் மகப்பேறுக்குப் பிந்தைய பக்குவம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது; கணவனின் பெற்றோர், உடன்பிறந்தோர், உற்றார், உறவினர் அனைவரும் சேர்ந்து பிள்ளை இருக்கும் இடம் தேடி வந்து; தம் வீட்டில் மரியாதைக்கு உரிய மூத்த பெண்களில் பெரியவரை வைத்தே இழை கட்டுவர். சில சமூகங்களில் குழந்தையின் தகப்பன் கூடப் பிறந்த சகோதரி மட்டுமே இழை கட்டும் உரிமை உடையவள் ஆவாள். சிவகாசியில் அவளுக்கு 'அப்பன் கூடப் பிறந்த கப்பலரசி' என்ற பட்டப்பெயர் உண்டு. அப்படிக் கட்டப்படும் இழை... குழந்தை வளர வளர இறுக்கும். பின்னர் அதைக் கறுப்புக் கயறாக மாற்றி ஆண்டிற்கு ஒரு முறை புதுக்கயறு வாங்கிக் கட்டுவோம்.

தொண்ணூறுகளில் கூட கடைத்தெருக்களில் இந்தக் கறுப்புக் கயறு / சிவப்புக் கயறைத் தொங்க விட்டுக் கொண்டு விற்பவர்களைக் காணலாம்.    

///*வெள்ளி அரணாக்கொடி*

இதைப் பழைய காலத்தில் விவசாயக் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்..

விவசாயக் குடும்பம் மட்டுமே இல்லை; கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில்... தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.

என்ன... அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) மட்டுமே அணிந்து இருப்பார்கள். இதைப் பார்த்துப் பார்த்துப் பழகி... 

ஆனால் இன்றைய பேரன்மார்கள்... !? இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்டத் தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.

அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.

ஆண்களின் இடுப்பில் உரசிக் கொண்டே இருக்கும் அரணா என்பது ஆண்களின் விந்தணுப் பையில் இருக்கும் விந்தணுக்களை அழிவில்லாது காப்பாற்றிக் கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.

ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார். இந்த சனி பகவான் நம் உடலில் ஆங்கிலத்தில் ஸ்பைனல் கார்ட் எனச் சொல்லப்படும் நடுத் தண்டுவட எலும்பு அடுக்குகள் உள்ளே இருந்து ஆட்சி செய்கிறார். முதுகுத்தண்டு வட 32 எலும்பு அடுக்குகள் கூட கருப்பு நிற நரம்பில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த தண்டுவட எலும்புக்கு கீழே அடித்தளத்தில் சுக்கிரன் எனும் வெள்ளி இருந்தால்... அந்தத் தண்டுவடம் விலகுதல் / பாதிக்கப்பட்டு விடுதல் போன்றவை இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்ட மனிதன் ஆக வைக்கிறது..

அதே போலத் தான் பெண்களின் இடுப்பில் ஒட்டியாணம் தங்கத்தினால் அணிவிக்கப்படும்

இது அந்தப் பெண்ணின் கருப்பையில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து நல்ல விதமாக மகப்பேறு எனும் குழந்தைப் பேறு பெற உதவுகிறது.

எம்மைப் பொறுத்தவரை திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதியினருள் ஆண் வெள்ளி அரணாக்கொடி அணியும் போது; தன்னுடைய விந்தணு உற்பத்தி அதிகப்படியான அளவில் கொண்டு வர உதவும்.
பெண் தங்க அரணாக்கொடி அல்லது... தன் தொப்புளில் சிறிதளவு ஆவது தங்கம் அணிய கர்ப்பம் தங்கும் என நம்பலாம்...

ஆண்களுக்கு இன்னொரு குறிப்பு: 
தற்போதைய இளைஞர்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். சிறு வயதிலேயே (31 வயது) பைக் அதிகமாக ஓட்டுவதால் தண்டுவடம் கொஞ்சமாக வலி கண்டு சிகிச்சைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை அவர் வெள்ளி அரணாக்கொடி அணியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அணியச் சொன்னேன். ஆறு மாத காலத்திலேயே தன் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருந்த நிலை மாறி விட்டதை மிகப்பெரும் அதிசயமாக மீண்டும் வந்து சொன்னார்கள்.

கண்ட கண்ட நகைகளை வாங்கி அணிவதை விட்டு தேவைக்கேற்ப நகைகளை அணியலாம்.
*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*
*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*
*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*
*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*///

முந்தைய தலைமுறையின் ஆண்கள் கடைசிக் காலம் வரை கட்டினர். பெண்கள் குழந்தைப் பருவத்தில் மட்டுமே கட்டினர். 

இந்தத் தலைமுறையில் பள்ளிக்கூடம் போனவுடன் கட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். 

சில சமூகத்தார் இந்த அரணாக்கயறில் சில சங்கதிகளைச் சேர்த்துக் கோர்த்துக் கட்டி விடும் வழக்கமும் முன்பு இருந்தது. 

ஜோதிட ரீதயாகச் சொல்லப்படும் விளக்கங்கள் பற்றிய உண்மைத் தன்மை தெரியவில்லை. 

உடல்நலம் சார்ந்த நன்மைகள் பற்றி மருத்துவர்கள் தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். 

ஆனால் எங்கள் தலைமுறை வரை பிள்ளைகளுக்கு கறுப்புக்கயறு கட்டுவது கண்படாமல் இருக்க... என்ற நம்பிக்கை வழக்காறு உள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Nov 15, 2025, 11:53:12 PM11/15/25
to vallamai
இழவு வீடுகளில் ஒப்பாரி வைக்கும் மரபு நகர்ப் புறத்துச் சமூகங்கள் சிலவற்றில் முற்றிலும் அருகி விட்டது.  
இரண்டு அல்லது மூன்று மணித்துளிகளுக்கு மேல் யாரும் அழுவதே இல்லை என ஆகி விட்டது. காரணம் தனியாக ஆராயப்பட வேண்டியது. 

சில சமூகங்களில் கூலிக்கு ஆட்களை வரவழைத்து ஒப்பாரி பாடச் சொல்வதையும் நேருக்கு நேர் பார்க்கிறேன். மைக் வைத்துப் பாடச் செய்வர். அப்படி ஒப்பாரி பாடுவோர் மாரடித்து அழுவர். இனி வரும் தலைமுறைக்கு 'மாரடித்தல்' என்றால் என்ன என்றே தெரியாமல் போய் விடும்.

இரண்டு கைகளாலும் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு அழுவர். 
கூலிக்கு ஒப்பாரி வைப்போர் கைக்கும் மார்பிற்கும் வலிக்காதபடி தன்மையாக அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பர். அதனால் தான் ஈடுபாடு இன்றிப் பணி செய்வதைக் 'கூலிக்கு மாரடிக்கிற மாதிரி' என விமர்சிக்கும் சொலவடையும் சமுதாயத்தில் வழங்குகிறது. 

இந்த ஒப்பாரி தமிழரது நாட்டார் வழக்காறுகளில் ஒன்று. ஒப்பாரி, மாரடிப்பின் சூட்சுமத்தைப் பின்வரும் முகநூல் பதிவு எடுத்து உரைக்கிறது. 


சிறுமியாக இருந்த பொழுது... தாத்தா இயற்கை எய்திய அன்று; உறவுப் பெண்கள் சிலர் பாட்டியோடு இருபுறமும் தோள்களில் கைபோட்டு வட்டமாக அமர்ந்து குனிந்து ஒருசேர அப்புறமும் இப்புறமுமாக அசைந்தாடிய படி பாடிக் கொண்டே அழுதது இன்னும் என் மனக்கண்ணை விட்டு அகலவில்லை (தாத்தா என்னைப் பொத்திப் பொத்திப் போற்றி வளர்த்த பாசப் பெட்டகம் அல்லவா!). அப்படி ஒப்பாரி வைக்கும் போது இடையில் அவ்வப்போது ஒலியோடு நீளமாக மூச்சை உள்வாங்கி; பிறகு சிணுங்கி வெளிவிடுவர். அவற்றைக் குறிக்கும் கலைச்சொற்கள் இழுவை, சிளுக்கு என்பன.

தமிழகத்து  ஒப்பாரியில் இடம் பெறும் இரண்டு தவிர்க்க முடியாத கூறுகள்: இழுவையும் சிளுக்கும் ஆகும்.

ஒலியோடு  நீண்ட மூச்சை உள்வாங்கும் இழுவையைத் தொடர்ந்து; உள்வாங்கிய மூச்சை ஏக்கம் கலந்த ஒலியோடு சேர்த்து 
வெளிவிடும் சிளுக்கு ஆகிய இரண்டும் பிரிக்க முடியாதவை. இழுவைக்குப் பிறகு தான் சிளுக்கு தொடர இயலும்.  

ம.கா.பல்கலை.யில் நாட்டார் வழக்காற்றியல் துறையில் பணியாற்றிய திருமதி விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் 1990வாக்கில் ஒளவையின் ஒப்பாரியை இழுவையோடும் சிளுக்கோடும் எம் கல்லூரி இலக்கியமன்றக் கூட்டத்தில்  பாடிக்காட்டினார்.

இந்த ஒப்பாரி தான் புறம்.235.

சிறியகள் பெறினே எமக்குஈயும் மன்னே (1)

பெரியகள் பெறினே (2) 

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே (3)

சிறுசோற் றானும் நனிபல 
கலத்தன் மன்னே (4)

பெருஞ்சோற் றானும் நனிபல 
கலத்தன் மன்னே (5)

என்பொடு தடிபடு வழிஎலாம் எமக்குஈயும் மன்னே (6)

அம்பொடு வேல்நுழை வழியெலாம் தானிற்கு மன்னே (7)

நரந்தநாறும் தன்கையால் (8)

புலவுநாறும் என்தலை 
தைவரும் மன்னே (9)

அருந்தலை இரும்பாண ரகல்மண்டைத் துளைஉரீஇ (10)

இரப்போர் கையுளும் போகிப் (11) 

புரப்போர் புன்கண் பாவை சோர (12)

அம்சொல்நுண் தேர்ச்சிப் 
புலவர் நாவில் (13)

சென்றுவீழ்ந் தன்றவன் (14)

அருநிறத் தியங்கிய வேலே (15)

ஆசுஆகு எந்தை யாண்டுளன்கொல்லோ (16)

இனிப் பாடுநரு மில்லை பாடுநர்க்கொன் றீகுநருமில்லை (17)

பனித்துறைப் பகன்றை 
நறைக்கொள் மாமலர் (18)

சூடாது வைகியாங்கு
பிறர்க்கொன்று (19)

ஈயாதுவீயும் உயிர்தவப் பலவே (20)

திணை: பொதுவியல்; 
துறை: கையறுநிலை.
அதியமான்நெடுமான் அஞ்சி மாய்ந்த போது ஔவையார் பாடியது. 

இப்பாடல் வாய்மொழி இலக்கிய வகைகளுள் ஒன்றான ஒப்பாரி என்பதற்கு இதன் யாப்பமைதியே சான்று.

முதலடியில்  நான்கு சீர்கள்..........இரண்டாமடியில் இரண்டு சீர்கள்; இங்கு மூன்றாவதாக அமைய வேண்டியது இழுவை ; நான்காவதாக அமைய வேண்டியது சிளுக்கு..........எட்டாவது அடியில் மீண்டும் ஒரு இழுவையும் சிளுக்கும் இடம்பெறும் ........அதற்கேற்பவே அந்த அடியில் சீர்கள் உள்ளன.
அதேபோல் பதினொன்று, பதினான்கு, பதினைந்து, பத்தொன்பதாம் அடிகளிலும்... 

சக 


kanmani tamil

unread,
Nov 21, 2025, 11:11:27 PM11/21/25
to vallamai

/// #தென்மாவட்டத்தில்   பனைநாரால் முடையப்பட்ட பெரிய பெட்டியைக் #கடகம் என்போம். #பனைஓலை யால் முதலில் முடைந்து அதன் பிறகு பனை மட்டையில் உள்ள நாரைப் பக்குவப்படுத்தி அதன்மீது கோர்ப்பார்கள். அல்லது முழுக்கப் பனை நாரால் பின்னுவார்கள். இவற்றுள் சிறிய பெட்டியை #நார்ப்பெட்டி என்றும் அதைவிடக் கொஞ்சம் பெரிய பெட்டியைச் சீர்ப்பெட்டி என்றும் மிகப்பெரிய பெட்டியைக் கடகம் என்றும் அழைப்பார்கள். எங்கள் வீட்டில் கூட ஒரு காலத்தில் கடகம் இருந்தது.  

வண்ணக் கலவையைக் காய்ச்சி அதில் பக்குவப்படுத்தப்பட்ட நார்களை அவித்து உலர வைத்து முடைவார்கள். திருமணத்தில் இப்பெட்டிக்கு முக்கியப்பங்கு உண்டு. திருமணச்சீராக இப்பெட்டி கொடுக்கப்பட்டது. இந்தப்பெட்டியில் தான் பலகாரம், முறுக்கு, அரிசி கொடுப்பார்கள். திருமணத்தின்போதும் அரிசையைச் சீர்ப்பெட்டியில் வைத்துத்தான் அளப்பார்கள். நாங்கள் வழக்கில் பொட்டி (பெட்டி) என்றுதான் சொல்வோம். #ஓலக்கொட்டான், #ஓலப்பொட்டி, #நாருப்பொட்டி, #சீருப்பொட்டி, #கடகம் ,#வெத்தலக்கொட்டான்...

"#கடகப்பெட்டி"எனும் #அரிசிப்பெட்டி.

கடகப் பெட்டி என்பது என்ன..?

நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த பொருள் கடகப்பெட்டி.
கடவாப் பெட்டி என்பது (சொல்) பேச்சுவழக்கு.
#பனையோலை யால் செய்யப்படும் பெரிய பெட்டி.
பைகளின் காலத்திற்கு முன் பொருட்கள் வாங்க; கொண்டு செல்லப் பயன்பட்ட பெட்டி.

இன்றும் விழா நாட்களில் சோறு பொங்கி தட்டப் பயன்படும் ஓலைப்பாய்,
திருச்செந்தூரில் கிடைக்கும் சில்லுக்கருப்பட்டி அடைக்கப்பட்ட #ஓலைக்கொட்டான்
இரண்டுமே இதன் சகோதரிகள்.

பனையோலையை நன்கு ஊற வைத்து பின்னப்படும் கடகம் தேர்ந்த கலை நுட்பம் மிக்க வேலை. யாழ்ப்பாணக் கடகங்கள் புகழ் மிக்கவை.
அலங்கார வேலை மிக்கவை.
சங்க காலத்தில் இதன் பெயர் "#வட்டி"

"அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தோடு சென்ற #வட்டி பற்பல
மீனோடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வமன்று
தன்செய்வினைப் பயனே.
சான்றோர் செல்வம் என்பது
சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென்பதுவே."

#மிளைகிழான்_நல்வேட்டனார்.

இந்த #நற்றிணைப் பாடலில் வரும் வட்டி என்பது பனையோலைப் பெட்டியாகும்.
'வட்டியில் விதைகளைக் கொண்டு சென்று விதைத்து விட்டு; மீன் பிடித்து அதில் போட்டு; வீடு திரும்பும்' என்பது பொருளாகும்.

அன்றாட வாழ்வில் கடகத்தின் இடம் இதுவெனில் பண்பாட்டில் இதன் இடம் முக்கியமானது.
எங்கள் குடும்பப் #பெண்தெய்வத்தின் இருப்பிடம் இந்தக் கடகப்பெட்டிதான்.

அதுபோலவே தெக்கத்தி பக்கம்
பெண்மக்களுக்கு வாழ்வில் இரண்டு முறை அரிசிப் பெட்டி போட்டுப் புகுந்த வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஒன்று...  திருமணம் ஆன மறுநாள் 
இரண்டு... தந்தை இறந்த ஒரு வாரத்தில்....

இப்படி இரு சமயங்களில் கடவாப்பெட்டியில் 
அரிசி, பருப்பு, காய்கறி போட்டு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டுமெனில் பெண்ணின் சகோதர முறைக்காரனே கொண்டு சென்று புகுந்த வீட்டில் சேர்க்க வேண்டும்.
இதனால் கடவாப் பெட்டிக்கு 
'அரிசிப் பெட்டி' எனும் பெயருண்டு.
பின்னாளில் குழந்தையை முன்னிட்டு மாமியார் மருமகள் இடையே சடவு வரும் போது
"புள்ளய அரிசிப் பெட்டியிலயா கொண்டு வந்தா?! அது எம்புள்ள தந்தது.."என மாமியார்க்காரி கேட்பதுண்டு. இன்று கடகப் பெட்டி இல்லை.
ஈய/சில்வர் வாளிகளில் அரிசி, பருப்பு போடப்படுகிறது.
ஆனாலும் அதன் பெயர் அரிசிப் பெட்டி தான். ஒரு வார்த்தை தான் எவ்வளவு விசயங்களைக் கொணர்கிறது 'கடகப் பெட்டி'

#பாலிதீன் பொருட்களைத் தவிர்த்துப்  பனைத்தொழிலை ஆதரியுங்கள். 

#பனைத்தொழில் காப்போம்
#பனைமரங்கள், #பனைஏறிகளைப் போற்றுவோம்.

#பனைஓலை 💚
#தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்..///


தெரிவு:சக

சக்திவேலு கந்தசாமி

unread,
Nov 21, 2025, 11:43:39 PM11/21/25
to vall...@googlegroups.com
அறிய வைத்ததற்கு நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctCgO4h2PGA8%3DkE9Vx-PyVNM9tmwCNj_dHBqp_qqje7bA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 27, 2025, 1:10:58 AM11/27/25
to vallamai
இறைச்சியைச் சுட்டு உண்ணும் முறை மனித குல வரலாறளவு பழமையான மரபு ஆகும். இன்றும் மீனைச் சுட்டு உண்ணும் வழக்கம் நதிக்கரைகளில் நாம் மிகுதியாகக் காணக் கூடியதே. 

ஒகேனக்கலில் ஆடி மாதம் வெள்ளம் வந்தவுடன்  எண்ணிலடங்காதோர் நம் கண் முன்னே ஆற்றில் மீன் பிடித்துக் கரையில் சுள்ளிகளை மூட்டிச் சுட்டு விற்கின்றனர். 

வீட்டில் கோட்டடுப்பில் சமையல் முடிந்தவுடன் மாங்கொட்டை, பலாக்கொட்டை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருவாடு ஆகியவற்றைச் சுட்டு உண்பது 1970கள் வரை இருந்த நடைமுறையே. 
அப்போதெல்லாம் நெல் அவித்த அடுப்பில் (கணப்பு மிகுதியாக இருக்கும்) சுடுவதற்காகவே பண்டங்கள் காத்து நிற்கும். 

தொகையிலக்கியம் மீன் சூடு, பிற சூடுகள் பற்றி மிகுதியான தரவுகளைத் தருகிறது. 

மீன், முயல், பன்றி, ஆடு, மான், முள்ளம் பன்றி, உடும்பு, ஆகியவற்றின் ஊனைச் சுட்டு உண்டனர். 

சுடப்பட்டது சூடு

போர் நிமித்தமாகப் பாண்டிய நாட்டிற்குள் நுழைந்த சோழநாட்டு வீரர் அங்கு பனங்கிழங்கைச் சுட்டுத் தின்றனராம் (புறம்.225).
கிடாய்க்கறியைச் சூட்டுக்கோலால் கிழித்துச் சுட்டமையை 'விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப' என்கிறது புறம்.366. 'சூடுகிழிப்ப'= 'சூட்டுக் கோலால் கிழித்து'. 
இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட ஊன் சூடு 'காழிற்சுட்ட கோழூன் கொழுங்குறை' எனப்படுகிறது (பொரு.105). காவலர் வீழ்த்திய பன்றியைச் சுடவேண்டிய பக்குவத்தைக் கூறுகிறது மலைபடுகடாம் (அ.247-249). சுத்தமாகப் பன்றித் தோலின் மேல் உள்ள மயிரினை இராவி நீக்க வேண்டுமாம். 
பாலும் தேனும் கலந்த வரகுச்சோற்றுக்குக்  குறு முயலின் மென்மையான கொழுத்த சூடு ஒத்த துணை உணவானது (புறம்.34).
தீயில் சுடும் முள்ளம்பன்றி ஊனின் மணம் 'கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்’ எனப்படுகிறது  (புறம்.325).
ஊர்மன்றில் நின்ற முதுமரத்து அணங்கிற்கு எலிச்சூடு படைத்தனர் (நற்.83).

வாடூன் ஆகிய பதப்படுத்தப்பட்ட கருவாடு, புதிதாகப் பிடித்த மீன் (பச்சூன்)  இரண்டையும் சுட்டு உண்டனர்.
கருவாட்டை   இரும்பு நாராசத்தில் குத்திச் சுட்டு விருந்தளித்தனர். 'சூடுகிழித்து வாடூன் மிசைய' என்கிறது  புறம்.396. போர்மறவர் தம்முள் போட்டியிடும் முன் இறால்மீன்  சூடு உண்கின்றனர் (பட்டினப்பாலை அ.63).

வலைஞர் பச்சைமீனைச் சுட்டு வழிச்சென்ற  பாணர்க்கு அளித்தனர் (பெரு.275-282). இது ‘தண்மீன் சூடு’ ஆகும். 
ஓர் இரவுப் பொழுது நீரில் ஊறிய நெல்லுச் சோறாகிய கொக்குகிர் நிமிரலுக்குரிய இணை  ‘பசுங்கண் கருனைச்  சூடு’ ஆகும்; அதாவது பச்சை மீனைச் சுட்ட கருனை (புறம்.395). கருனை=sidedish
கோப்பெருஞ்சோழன் வேளாண் பணியாளர்க்கு ‘ஆரல் கொழுஞ்சூடு’ அளித்தான் (புறம்.212); அதாவது கொழுத்த ஆரல் மீனின் சூடு.  

கப்பைக் கிழங்கும் சுட்ட மீனும்- ஒரு மரபுசார் உணவுமுறை:

/// கப்பையும் மீனும் பற்றிய பதிவு மறுபடியும் ஒரு சுற்றுக்கு வர அண்ணன் பிரிட்டோ Britto Antony சுட்ட சாளை மீன் பற்றி ஓருமைப்படுத்தினார் 
(ஞாபகப்படுத்தினார் என்பதற்கு எங்க ஊரில் இன்றும் பயன்படுத்தப்படும் பழந்தமிழ்ச் சொல்; தமிழ் தெரியாத பிற தமிழ்நாட்டுக்காரர்கள் இதற்காக நாங்கள் மலையாளம் பேசுவதாகச் சொல்வார்கள்.). 

நான் சிறுவனாக இருக்கும் போது குறிப்பிட்ட மாதங்களில் சாளை வரத்து அதிகமாக இருக்கும் . சில நாட்களில் அளவுக்கதிகமாக சாளை மீன் வரத்து வாங்குவார் இல்லாத அளவுக்குச் செல்லும் . அதிக சாளை வரத்தும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் வேறு வழியின்றி அது கருவாடுக்குத் தான் போகும் . அது போன்ற நாட்களில் வேடிக்கை பார்க்கக் கடற்கரைக்குச் சென்றால் கூட 
“லே மக்கா! கொஞ்ச சாளையை அள்ளிட்டுப் போய்ச் சுட்டுத் தின்னுங்க” என சொல்வார்கள். நாலைந்து பேர் சேர்ந்திருந்தால் இரு கைகளிலும் முடிந்த அளவு சாளையை அள்ளிக் கொண்டு கரையை விட்டு வெளியே வருவோம். அப்போதெல்லாம் விறகு வைத்த நல்ல பெரிய அடுப்பு... யார் வீடாக இருந்தாலும் சரி; உள்ளே போய் “சாளைய சுட்டுக் குடுங்க“ என்போம் . அவர்கள் “குடுங்க மக்கா” என வாங்கி அப்படியே அடுப்புக்குள் கனலுக்கு நடுவே தள்ளி விடுவார்கள் . அம்புட்டுத் தான். அதில் மசாலோவோ, உப்போ எதுவுமோ கிடையாது. கடற்கரையிலிருந்து அப்போது வந்த சாளை எதுவரை சுட வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொன்றாக கவ்வி எடுத்து வெளியே போடுவார்கள். ஒரு தட்டில் எடுத்து பரப்பி வைத்தால் முடிந்தால் கொஞ்டம் அவித்த மரவள்ளிக் கிழங்கோடு சாப்பிடுவோம் . கைவைத்தாலே மேலிருக்கும் செதிலும் தோலும் தனியாக வரும். சுளையாக சுட்ட மீன். அதெல்லாம் அனுபவித்துப் பார்க்க வேண்டியது (படத்தில் இருப்பது சாளை அல்ல).

பொதுவாக வட தமிழ்நாட்டில் பெரிதாக யாரும் சாப்பிடாத மரவள்ளிக் கிழங்கு குமரி மாவட்டத்தில் எல்லோருக்கும் பிடித்தமான உணவு என்பது தெரிந்தது தான் . காரணம் மரவள்ளிக் கிழங்கை அவித்து மீனோடு சாப்பிடும் கப்பையோடு அது நிற்பதில்லை. அது கிழங்கு கூட்டு , கிழங்கு தேங்காய் பிரட்டல் , கிழங்குக் களி , கிழங்குப் புட்டு என பல வடிவங்களில் செய்யப்படும் . போதாதற்கு மரவள்ளிக் கிழங்கை வெட்டிக் காயவைத்து அதை வெட்டுக்கிழங்கு என பல வகைகளில் சாப்பிடுவார்கள் . அப்படியே கடித்து சாப்பிடுவது, அரைத்து மாவாக்கி களியாக, புட்டாக அதோடு ஆணம் என ஒரு வகை உணவு செய்வார்கள் கிழங்கைக் கொண்டாடும் குமரி மக்கள்!

https://www.facebook.com/share/16jua6dDXN/

இவ்உண்ணுமுறையின் எளிமையைத் தான் அகம்.110 ‘இழிந்த கொழுமீன் வல்சி’ என்று பரதவப் பெண்கள் வாய்மொழியாகக் கூறுகிறது. 

எண்ணெயில் வறுத்து எடுப்பதும் பொறித்து உண்பதும் மேம்பட்ட உணவுமுறை எனச் சொல்லப்படும் தரவுகளும் உள. 

ஆனாலும் சுட்ட மீனின் ருசி உண்டு வளம் கண்ட நாவினர்க்குத் தெரியும்.

சக 

kanmani tamil

unread,
Dec 2, 2025, 8:02:15 PM12/2/25
to vallamai
/// கார்த்திகையில் பனை ஓலையில் கருப்பட்டி கொழுக்கட்டை / தென் தமிழகத்தின் கலாசாரப் பண்டிகை உணவு.///


அந்த ஓலை மணமும் கருப்பட்டி மணமும் சேர்ந்து மூக்கைத் துளைக்கும்; உண்பதைத் தவிர்க்க முடியாது. 

செய்முறை:

ஓலையை மூடி வேக வைப்பதில் வேறு முறையும் உண்டு. 


ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாது.

பனை மரமும் ஓலையும் இல்லாத எங்கள் ஊரில் கார்த்திகை தீபத்தன்று...
விரதம் இருப்போர் விரதம் விடும் வரை கடலை உருண்டை பிடித்து வைத்து அவ்வப்போது அதை மட்டும் உண்பது வழக்கம். 
விரதம் மேற்கொள்ளாதவர் அதே உருண்டையைப் பலகாரமாகச் செய்து வைத்து ருசிப்பது வழக்கம். 

தொகைஇலக்கியம் பெரிய கார்த்திகை அன்று அவல்பாயசம் செய்வதைக் காட்சிப் படுத்துகிறது (அகம்.141). 

சக 

kanmani tamil

unread,
Dec 3, 2025, 11:13:11 PM12/3/25
to vallamai
வீட்டுக் கதவில் மாவுக்கையின் அச்சுப் பதிக்கும் வழக்கம். 

/// 25 வருடங்களுக்கு முன்பு என் தந்தை எனக்குச் சொன்ன கதை.

திருக்கார்த்திகையை முன்னிட்டுக் கொழுக்கட்டை அவிப்பதற்காக ரெடி செய்த அந்த மாவை வைத்து இது போல் கதவுகளில் தன் கைகளால் அச்சு போடும் பழக்கம் இன்றளவும் கிராமங்களில் இருந்து  வருகிறது.

அதன் விளக்கம் என்ன என்று நான் சிறுவயதில் என் தந்தையிடம் கேட்டபோது, எனக்கு என் தந்தை  சொன்ன கதையை தங்களுடன் பகிர்கிறேன்.

திருக்கார்த்திகை அன்று அனைவரது வீட்டிலும் வீட்டின் திண்ணையிலும் மற்றும் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் திருவிளக்கு ஏற்றி கொழுக்கட்டை அவிழ்த்து வழிபாடு செய்வது வழக்கம். 

அந்தக் கொழுக்கொட்டை அவிப்பதற்காக, மாவு பிசைந்து கொழுக்கட்டை எல்லாம் வைத்து முடித்த பிறகு, கையில் இருக்கும் அந்த மாவை கொண்டு கதவுகளில் இது போல் அச்சு விடுவார்கள்.

எதற்காக அப்பா இப்படி கையை வைத்து அச்சு விடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு என் தந்தை சொன்னார்... 'ஏனென்றால் அனைவரது வீட்டிலும் விளக்கு ஏற்றிக் கொழுக்கொட்டை அவித்து இருக்கிறார்களா என்று மாவடிராசா  பார்க்க வருவார்; வந்து பார்த்துவிட்டு  சிவபெருமானிடம் போய் சொல்வார். நாம் இப்படி அச்சு வைத்து விட்டோம் என்றால் கதவை வந்து மாவடிராசா பார்த்து விட்டுக் கொழுக்கட்டை அவிழ்த்து விட்டார்கள் என்று சிவபெருமானிடம் போய் சொல்வார். அதற்காகத்தான் இப்படி அடையாளத்துக்காக வைக்கிறோம்' என்று என் தந்தை எனக்கு 25 வருடங்களுக்கு முன்பு சொன்ன கதை.

அதற்கு இது இதுதான் அர்த்தமா என்பது சரியாக எனக்குத் தெரியவில்லை.  வேறு ஏதாவது அர்த்தம் இருந்தால்; உங்கள் ஊரில் வேறு ஏதாவது சொல்வார்கள் என்றால்; அதை கமெண்டில் தெரிவிக்கவும். தெரியாதவர்களும் தெரிந்து கொள்வார்கள் தங்கள் கருத்தினால்... 

அதுபோக உங்கள் ஊரிலும் இப்போதும் இது போல் பனை ஓலையில் கொழுக்கொட்டை செய்தாலும் அதை கமெண்டில் தெரிவிக்கவும்; தங்கள்  ஊரையும் பதிவு செய்யவும். 

நாம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்பது உண்மை, ஆனால் இந்த செயலுக்கும் ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.///


எங்கள் பக்கத்தில் சாப்பிடுற விஷயம் எதுவும் மறக்க மாட்டோம்; ஆனால் இப்படி அச்சுப் பதிக்கும் வழக்கம் இங்கு இல்லை.

சிவகாசியில் பனைஓலைக் கொழுக்கட்டை யாரும் அவிப்பதில்லை; ஆனாலும் என்னுடன் பணி செய்த ஸ்ரீவில்லிபுத்தூர்த் தோழி கொண்டு வந்து கொடுப்பார். ருசியாக இருக்கும். 

தெரிவு: சக

kanmani tamil

unread,
Dec 4, 2025, 8:14:52 PM12/4/25
to vallamai
மாவலி செய்முறை:

மாவலி? /மாவளி? எது சரி? ஆய்விற்கு உரியது. 

/// 1950 களில் கார்த்திகைத் திருநாள் மூன்றுநாள் பண்டிகையாக வெகு 
விமரிசையாகக் கொண்டாடப் பட்டது...

கார்த்திகைத் திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்கு சமம்.

பனை மரத்தின் பூக்களை இதற்குப் பயன்படுத்துவர். பொதுவாகக் கார்த்திகை மாதம் மழை அதிகமா பெய்யும். அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடியே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க . 

ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம், ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களை செங்குத்தாக நிறுத்தி தீயை வைக்கணும்... அதை எரியவிடாமல்; பூப்போல பொசுங்கணும்... அந்த மாதிரி பதம் வேணும்... கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதைப் புகைய விட்டுப்; பூசணி இலைகளை மேல போட்டு; மண்ணை அள்ளி மூடிடணும். மாலை நாலைந்து மணிக்கு மண்ணைத் தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்); அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம; நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சாத் தான் பூ நல்லா கொட்டும்.). அரைச்ச தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டிக் கட்டி வச்சிடணும்.

பனைமரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும்.); ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு; நடுப்பகுதியை மட்டும் எடுத்து இருபுறமும் உள்ள முள்ளைச் சீவி; மட்டையை மூன்றாக முக்கால் அளவு பிளந்து; துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி; மட்டையை கட்டிடணும். மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவித்; தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி தயார். மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும். பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.

உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும்; மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும்; கயிறின் அளவு சுத்துகிற ஆளைப் பொறுத்து அமையும்.

மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும், உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு.///

https://www.facebook.com/share/p/1CLf9YGqZZ/

எங்க ஊரில் சிறுவர்கள் பழைய டயரைக் கொளுத்திச் சுற்றுவர். 

வீட்டுப் பெண்கள் வாசலில் குங்கிலியம் கொளுத்துவோம். 

பல குடும்பங்களில் தீபாவளியன்று ஆடவர் வெடிக் கடைகளிலும்; அது தொடர்பான பணிகளிலும் அயலூரிலும் இருப்பர் ஆதலால்; கார்த்திகையைத் தான் குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடுவதாக அமையும். அன்று தான் வீட்டில் வெடியும் வாணவேடிக்கையும் போட்டு மகிழ்வர். போட்டு முடித்தவுடன் வெடிக் குப்பைகளைக் கூட்டி வைத்துச் சொக்கப்பனை கொளுத்துவோம். 

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 5, 2025, 7:56:41 PM12/5/25
to vallamai
மாவளி சுற்றும் காட்சி:

https://www.facebook.com/share/r/1XpQ9Rp2ct/

சக 

kanmani tamil

unread,
Dec 6, 2025, 7:08:28 PM12/6/25
to vallamai
திருக்கார்த்திகை அன்று பிரம்மனாலும் பெருமாளாலும் அடிமுடி அறியவொண்ணா நெருப்புப் பிழம்பாகக் காட்சி கொடுத்த சிவபெருமான் பற்றிய தொன்மத்தை அடியொட்டி நிகழ்த்தும் சொக்கப்பனைக் காட்சி... 


சொக்கநாதப் பெருமானின் ஓங்கிய நெருப்பு உருவத்தைப் பனை ஓலைகளால் ஏற்றுவதால் 'சொக்கப்பனை'

சக 

kanmani tamil

unread,
Dec 9, 2025, 8:44:57 PM12/9/25
to vallamai
மறந்து போன தமிழர் மரபு-
குப்பை நாச்சியார் என்ற மூத்த தேவி பூஜை 


மூத்ததேவியே மூதேவி என்று மருவியதாகவும்; ஜேஷ்டா தேவி என்ற வடமொழிப் பெயர் பெற்று 'சேட்டை' என மருவியதையும்; இன்று மக்களிடம் செல்வாக்கு இழந்ததையும் அழிந்த வரலாறாக அறிகிறோம். 

தெரிவு: சக 

kanmani tamil

unread,
Dec 10, 2025, 7:32:32 PM12/10/25
to vallamai
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் கார்த்திகைப் போக்கு வழிபாடு:

/// கார்த்திகை போக்கு என்றால் என்ன?
தென் மாவட்டங்களில், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து காலம் காலமாக, நடத்தி வரப்படும் வழிபாடு ஆகும்,

இந்த வழிபாடு குறிப்பாகக் கார்த்திகை மாதங்களில் வரும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் கோவில்களில்; அதாவது வடக்குத்தி அம்மன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த வழிபாட்டின் போது ஊர்களில் உள்ள தெருக்களில் எல்லாம் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு; நான்கு மண்ணாலான கும்ப கலசங்களை சாமிக்கு முன் வைத்து; பட கஞ்சி வேகவைத்து அதைப் படையலில் வைத்து (பட கஞ்சி என்றால் நவதானியங்கள் அனைத்தையும் போட்டு வேக வைப்பது); சர்க்கரைப் பொங்கல்,  தேங்காய், பழம் என பூஜை சாமான்கள் அனைத்தும் வைத்து; இரவு 12 மணிக்கு மேல் பூஜை செய்து; ஊருக்கு எல்லையில் இருக்கும் சுடலை மாடசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று; அங்கேயும் பூஜை செய்துவிட்டுத்; திரும்பி அம்மன் கோவிலுக்கு வந்து; அந்தக் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட அந்த நான்கு மண் கும்ப கலசங்களையும் நான்கு இளநீர்களையும் எடுத்துக்கொண்டு; ஊரை விட்டு வெளியே உள்ள எல்லைப் பகுதியில் நான்கு முக்குகளிலும் அந்த நான்கு மண் கும்ப கலசங்களையும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு முக்கில் வைத்துத்; தேங்காய், பழம், பிற பூஜை சாமான்களோடு பூஜை செய்துவிட்டு; அந்தக் கும்ப கலசத்தையும் இளநீரையும் அங்கே வைத்துவிட்டு வந்து விடுவார்கள்.

இது எதற்காக என்று என் முன்னோர்களிடம் கேட்டபோது, அவர்கள் எனக்குச் சொன்ன பதிலை தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

'இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து செய்து வரும் வழிபாடு. இது எதற்காக என்றால் முன்காலத்தில் எல்லாம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடுமையான மழை பெய்யும். 
அந்த மழைக்காலம் முடிந்தவுடன் கார்த்திகை மாதங்களில் பல பேர் நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள். இப்பொழுது போல அப்போது எல்லாம் மருத்துவமனையோ மருத்துவ வசதியா எதுவுமே கிடையாது.
கார்த்திகை மாதத்தில் தான் அதிக இறப்புகள் ஏற்படும். அந்த இறப்புகள் இனிமேல் நடக்கக்கூடாது என அம்மனுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்து கொண்டிருக்கிறோம்.
அதுபோக ஊருக்கு வெளியே உள்ள தீய சக்திகள் எதுவும் ஊருக்குள் வராமல் இருப்பதற்காகவும்; ஊர் எல்லைப் பகுதியான நான்கு பக்கங்களிலும் கும்ப கலசங்களை வைத்துக் காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து காக்க வேண்டும் என்பதும் வரலாறு' என்று என்னிடம் என் முன்னோர்கள் கூறினார்கள்.

நவதானியங்களால் வேக வைத்து செய்யப்பட்ட அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுப்பதும் வழக்கம், 

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்பது மட்டும் உண்மை. சில சம்பிரதாயங்கள் பக்தியோடு சேர்ந்த அறிவியல் பூர்வமானதாகவும் இருக்கும் என்பதும் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சம்பிரதாயத்திற்கும் பக்தியோடு சேர்ந்த அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருக்கலாம்.

உங்கள் ஊரில் இது போல் வழக்கம் உள்ளதா? இதுபோல் வேறு ஏதாவது வழக்கம் உள்ளதா? என்பதையும் கமெண்டில் தெரிவிக்கவும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்.///


'படகஞ்சி' என்ற சொற்றொடர் 'படையல் இடும் கஞ்சி' என்ற பொருளில் வழங்கி வந்துள்ளமை தெரிகிறது. 

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 18, 2025, 7:23:05 PM12/18/25
to vallamai

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி:
https://www.facebook.com/share/v/1ANuqbaY9Q/

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 25, 2025, 8:37:23 PM12/25/25
to vallamai
சதய நட்சத்திரமும் சஷ்டி நன்னாளும் கூடிய மார்கழியின் நாள் வெகு சிறப்பு வாய்ந்தது. தென்னாட்டு இந்துக்களின் மாபெரும் வழிபாட்டு நாட்களில் இந்நாள் முக்கியமானது

இந்த நாளின் பெரும் பாரம்பரிய வழிபாடுகள் தமிழகத்தில் பிரிட்டிஷ் காலத்திலே... கைவிடப்பட்டன. இப்போது இரு தமிழ்பேசும் இனங்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன; ஒன்று நகரத்தார் எனும் செட்டியார்கள், இன்னொன்று ஈழத்தமிழ் இந்துக்கள்... 

அடிப்படையில் இது கார்த்திகை தீபத்தன்றே துவங்குகின்றது. அது திருக்கார்த்திகை மட்டுமல்ல; பெரிய கார்த்திகையும் கூட‌.

அந்தக் கார்த்திகை பௌர்ணமியில் இருந்து அடுத்த 21 நாட்கள் இருக்கும் நோன்புக்குப் பெயர் 'பிள்ளையார் நோன்பு'. அது சஷ்டியும் சதயமும் கூடும் இந்நாளில் நிறைவடையும். அடுத்த 10 நாட்கள் திருவெம்பாவை படித்து மார்கழி திருவாதிரைக்குத் தயாராகும் நாட்கள். 

அந்த மார்கழித் திருவாதிரை முடிந்தபின் அடுத்த 14 நாட்கள் மகர சங்கராந்திக்கானவை. அதை அடுத்துத் தைப்பூசம் என முருகப் பெருமானுக்கானது.

பிள்ளையார் நோன்பு முடியும் நாளில் ஈழத்தவர் கோவில்களில் விநாயக வழிபாடும் கொண்டாட்டமும் கொழுக்கட்டையும் மிக பிரமாண்டமாக உண்டு.

செட்டியார்களுக்கு ... மார்கழி சதயம் மிக முக்கிய நாளாக அமையக் காரணம் மாணிக்கவாசகரும், அவருக்கு அக்காலச் செட்டியார்கள் செய்து கொடுத்த சத்தியமும்...

செட்டியார்கள் வாழ்வு கடலோடி வாழ்வு... அக்காலமே கடாரம், சீனா, மலாக்கா, தாய்லாந்து, இலங்கை, பர்மா என எல்லா இடங்களிலும் வியாபாரம் செய்தவர்கள், அங்கே பௌத்தமும் சமணமும் இருந்ததால் இவர்களுக்கு அவற்றினை முழுக்க விலக்க முடியவில்லை; அதனில் சிக்கிக் கொண்டார்கள். 
அப்படியான செட்டியார்கள்... இனி எக்காலமும் இந்துக்களாய் இருக்கவேண்டும் என மாணிக்கவாசகர் கோரியபோது; அவர்கள் 'திருவண்ணாமலை சிவன் மேல் ஆணையாகச் சைவர்களாக இருப்போம்' என இதே மார்கழி மாத சதயநாளில் சத்தியம் அருளினார்கள்.

இதைப் புதுப்பித்து நினைவு கூர்வது இன்றும் செட்டியார்களிடம் உண்டு. சில நாகரீக செட்டிகள் இதன் அடிப்படைக் காரணத்தை மாற்றிச் சொன்னாலும்; அவர்கள் சைவம் திரும்பி நிலைத்திருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள். 

இந்நாளில்தான் 'இழை எடுத்தல்' எனும் சடங்கு அங்கு விசேஷம்... அங்கேதான் மாணிக்கவாசகர் கால உடன்படிக்கை வரும்.

பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் மறுநாளிலிருந்து செட்டியார்கள் பிள்ளையார் நோன்பு விரதத்தை ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாள் முழுதும் விரதமிருந்து மாலைப் பொழுது சாய்ந்ததும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு நாளையும் எப்படி கணக்கு வைப்பார்கள் என்றால் அன்று செட்டியார்களின் புதுவேட்டியில் அல்லது துண்டில் இருந்து ஒரு நூலை அதாவது ஒரு இழையினை எடுத்து கணக்கு வைப்பார்கள். இது செட்டிநாட்டுப் பெண்களின் முக்கிய மரபு. 

அப்படி 21 நாள் இருபத்தோரு இழை சேர்ந்ததும் அதை ஒரு திரியாக உருட்டுவார்கள், பெரிய திரியாக அதை சேர்த்துவிடுவார்கள். அப்படியே பச்சரிசி மாவில் கருப்பட்டி கலந்து ஒரு விளக்கு செவ்வார்கள். அது திருவண்ணாமலை போல் இருத்தல் வேண்டும் என்பது விதி. இந்த இழைகளை ஒன்றாக்கி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி பல இழைகளாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். கருவுற்ற பெண்ணிற்கு ஒன்று என்றும் அவளது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஒன்று என்றும் கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். கைம்பெண்களை மட்டும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவதில்லை. எண்ணிக்கையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இழையை நறுக்குவது இல்லை. 21ம் நாள் சில சம்பிரதாயங்களைச் செய்வர்.
இந்நாளில் மணமாகிச் சென்ற பெண்களுக்கும் உறவுப் பெண்களுக்கும் சீர் அனுப்பும் மரபும் உண்டு. 21ம் நாள் குடும்பமே கூடிப் பிள்ளையார் நோன்பு அன்று; மாலை நேரம் வீட்டினைக் கழுவித் துடைத்துச் சுத்தம் செய்து பூசையறையில் ஒரு பெரிய கோலம் இடுவர்.  அதன் பின்னர் பூசைக்குத் தேவையான கருப்பட்டி அப்பம், பொரி, அவல், எள்ளுப் பொரி முதலான 21வகை உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைக்க எடுத்து வைத்துக் கொள்கின்றனர்...
அப்பத்தை எண்ணெயில் இடும்போது சங்கு ஊதுவது ஒரு வழமை.

இன்னும் பச்சரிசி அரைத்த மாவில் பழைய ஏடுகளை எடுத்து அதில் சுற்றியிருக்கும் நூலை மூழ்கச் செய்யும் சம்பிரதாயம் உண்டு, அதற்கு 'தும்பு பிடித்தல்' எனப் பெயர். 

பின் ஆவாரம்பூ உள்பட 21 பூக்கள் கொண்ட ஒரு பூச்செண்டைத் தயார் செய்து; குடும்பத்தின் மூத்த செட்டியார் தலைப்பாகை கட்டிக் கொண்டு கையில் ஆவாரம்பூச் செண்டைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வருவர். அவரைப் பின்தொடர்ந்து வீட்டில் உள்ள ஆண்களும் வீட்டிற்குள் வருவர்.

இதன் பின் பூஜைகள் பல நடந்த பின் திருவண்ணாமலை சாயலில் செய்யப்பட்டிருக்கும் மாவிளக்கில் நெய் விட்டுத் தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தோடு கொழுக்கட்டையை அதாவது; அந்த மாவிளக்கை வாயில் இட்டு விழுங்குவர்.

எப்போதும் நாங்கள் இந்துக்கள் எனும் நெருப்பு எங்களுள் உண்டு; திருவண்ணாமலை சிவன் எங்களுக்குள் இருக்கின்றான் என்பதை சொல்லும் தாத்பரிய மரபு இது.

எல்லாமே சைவத்தைப் புதுப்பிக்கும் காட்சி. புதிதாக ஒரு விழா அங்கே இந்து சுவடிகளைக் காப்போம் எனத் 'தும்பு பிடித்தல்' என உறுதியெடுக்கப்படுகின்றது. 

இழைகள் சேர்த்து திரியாக்கி உண்ணும் நாள் என்பதால் இதனை 'இழை எடுத்தல்' என்பார்கள்... குறிப்பாகச் செட்டிப் பெண்கள் இதனைத் தவற விடுவதில்லை. 

கடல் கடந்த இனம் அவற்றை இன்னும் தொடர்கின்றது

இந்து சமயத் தாத்பரியமும் புனிதமும் வழிவழி மரபும் சமணர் பௌத்தர் காலத்தில் இருந்து மாறிய நுணுக்கமான வரலாறும் செட்டிகளிடமும் ஈழமக்களிடமுமே நிரம்பியிருக்கின்றன...

https://www.facebook.com/share/1FyTfiu11G/

ஜைன பௌத்த மதங்கள் தோன்றியமைக்கு மொழிப் போர் தான் முதன்மைக் காரணம் என எண்ண இடம் உள்ளது. 

காலந்தோறும் தமிழகத்தில் சமயச் சண்டை, போட்டி, பூசல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. 

ஆனாலும்... 
சூரியனை வழிபடும் சௌரம், கணபதியை வழிபடும் காணாபத்யம், குமரவழிபாடாகிய கௌமாரம், சக்திவழிபாடாகிய சாக்தம், சிவனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம் மட்டுமின்றி ஜைன பௌத்த மதங்கள் அனைத்தையும் உள்வாங்கியே இந்து சமயம் உருவானது. 

மரபுகளில் வரலாறு பொதிந்து இருப்பது தவிர்க்க இயலாதது. 

இதில் மனவேறுபாட்டை வளர்க்க முனைவது விரும்பத் தகாதது.

தெரிவு:சக

kanmani tamil

unread,
Dec 27, 2025, 6:24:11 PM12/27/25
to vallamai
திருமணச் சடங்குகள் ஒவ்வொரு சமூகத்திலும் பலவாறாக வேறுபட அமைவது தமிழகத்தின் மரபுவளம் எனலாம். 

கீழ்காணும் காணொலி ஐயர் சமூகத்தின் புதுபணத் தம்பதியர்க்கு நிகழ்த்தும் ஊஞ்சல்,  பால்பழம் கொடுத்தல், பிடிசோற்று உருண்டை சுற்றிக் கண்ணேறு கழித்தல், நீர் ஆரத்தி ஆகிய மரபுகளைக் காட்டுகிறது. 


இதே பால்பழம் கொடுக்கும் சடங்கு பிற சமூகங்களிலும் உள்ளது (ஊஞ்சல் தவிர). பிடிசோற்று உருண்டையால் சுற்றிக் கண்ணேறு கழிப்பதும்; நீர் ஆரத்தியும் கூட; தவிர்க்க இயலாத சம்பிரதாயங்களாகப் பிற சமூகங்களில் காணப்படுகின்றன. 
பேச்சு வழக்கில் ஆலாத்தி என்று அழைப்பர். மேலே சுட்டிய இருவகை ஆலாத்திகளுடன் சூட ஆலாத்தியும் சேர்த்து மூன்று ஆலாத்திகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அதற்கு மேல் அவரவர் வசதிக்கும் விருப்பத்திற்கும் கற்பனைத்  திறனுக்கும் ஏற்ப 21ஆலாத்திகள் வரை எடுப்போர் உள்ளனர். 

தெரிவு:சக

seshadri sridharan

unread,
Dec 29, 2025, 10:06:36 PM12/29/25
to vall...@googlegroups.com
On Sun, 28 Dec 2025 at 04:54, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
திருமணச் சடங்குகள் ஒவ்வொரு சமூகத்திலும் பலவாறாக வேறுபட அமைவது தமிழகத்தின் மரபுவளம் எனலாம். 

கீழ்காணும் காணொலி ஐயர் சமூகத்தின் புதுபணத் தம்பதியர்க்கு நிகழ்த்தும் ஊஞ்சல்,  பால்பழம் கொடுத்தல், பிடிசோற்று உருண்டை சுற்றிக் கண்ணேறு கழித்தல், நீர் ஆரத்தி ஆகிய மரபுகளைக் காட்டுகிறது. 



இவள் என் அத்தையின் பேத்தி உமா. கேட்டரிங் நடத்துகிறாள்  

kanmani tamil

unread,
Feb 23, 2026, 2:55:33 AMFeb 23
to vallamai
நெல் சேமித்து வைக்கும் முறைகள் 

/// பத்தாயம்
தானியங்கள முக்கியமா நெல் சேமிச்சி வைக்குற இடமிது. ஒவ்வொரு வீட்டுலயும் ஒவ்வொரு விதத்துல இருக்கும். சிலர் களிமண்ணால கட்டி வச்சிருப்பாங்க அதோட பேரு குதிர். சிலர் வைக்கோலால திரிச்சி களி மண்ண பூசி வச்சிருப்பாங்க. அது பேரு... கட்டாயம். சில வீடுகள்ல மேற்கூரைல இருக்கும். அது பேரு மச்சு. சிலர் கல்லாலயே கட்டி வச்சி படியெல்லாம் கட்டி வச்சிருப்பாங்க. அது பேரு கோட்டை.
இப்படி பலமுறைகள்ல நெல்ல சேமிச்சி வச்சி தேவையானப்போ தேவையான அளவ எடுத்து அவிச்சி குத்தி அரிசியாக்கி சாப்பிடுவாங்க.
ஆனா இப்போ நேரடியா வயல்களுக்கே வந்து வியாபாரிகள் கொள்முதல் செஞ்சிக்கறதாலயும் உடனுக்குடனே வித்துடறதாலயும் இதுக்கான பயன்பாடு குறைஞ்சிட்டு. அதனால நிறைய வீடுகள்ல இந்த மாதிரி பொருட்கள பாக்குறதே அரிதாகிடுச்சி.
ஒரு காலத்துல எங்க வீட்டுலயும் இத பயன்படுத்திட்டு தான் இருந்தாங்க. இப்போ சில வருசமா பயன்படுத்தல. ஆனாலும் இருக்கு. இது எட்டடுக்கு நிலையாம். இரண்டு அடுக்கு கரையான் அரிச்சதால இந்த ஆறுதான் மீதமிருக்கு. இனியாவது பத்திரமா பாதுகாக்கனும்.











#பொக்கிஷம் #பத்தாயம் #nostalgicmemories #nostalgia #tenth #grainstorage #storagetanks #grainhandling #oldisgold #old #oldcollection///

https://www.facebook.com/share/p/185dCVtyzC/

பேச்சுத் தமிழை அப்படியே மாற்றம் ஏதும் இன்றி எழுத்து ஆக்கி இருக்கிறார் பதிவர்... 
என் போன்றோருக்கு இம்மரபுகள் எல்லாம் புதுச் செய்திகளே. 

தெரிவு:சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S NEELAKANTAN

unread,
Feb 23, 2026, 2:13:23 PMFeb 23
to vall...@googlegroups.com
பத்தாயம் என்று சொன்னவுடன் எனக்கு நினைவில் வந்தது என்னுடைய அரை மனை வீட்டில் (கன்னியாகுமரி
மாவட்டம், நாகர்கோவிலில் ஒரு கிராமம் வடிவீச்வரம் நான் பிறந்து வளர்ந்த கிராமம். என்னுடைய தாத்தவிற்கு
2 ஏக்கர் நிலம் திருனெல்வெலி ரோட்டில் இருக்கும் தேரேகால் புதூர் என்ற ஊரில் இருந்தது. ஒரு பாட்டக்காரன்
உதவியுடன் ஆண்டில் 2 முறை நாற்று நடவு செய்து, அறுவடை செய்து அதை நெல்லாக்கி நாகர்கோவில் கலெக்டரின்
பெர்மிட் அனுமதியுடன் இரண்டு மாட்டு வண்டிகளில் எங்கள் வீட்டிற்கு வந்து அதை வீட்டின் இரண்டாவது அறை (றேழி) யில் அப்படியெ குமித்து வைப்பது வழக்கம். அந்த நெல்லை வீட்டின் முன்புரம் உள்ள இடத்தில் நெல்லை இரண்டு நாள் காய வைத்து பின்னர் வீட்டில் மச்சிலில் இருக்கும் பத்தாயத்தில் (மரத்தால் செய்யப்பட்ட 10 அடி நீளமும் 4அடி அகலமும் 3 அடி உயரமும் உள்ள அறையில் உலர்ந்த நெல்லை சேமித்து வைப்பது வழக்கம் .பின்னர் வீட்டிற்கு வேண்டிய நெல்லை அரிசியாக்கி அதை பாவிளில் இருக்கும் ஒரு பெரிய டிரம்மில் போரிக் பவுடர் கலந்து வைப்பது வழக்கம். மீதி நெல்லை நல்ல விலை வரும்போது (21 மரைக்கால் அளவு நெல் = 1 கோட்டை என்ற கணக்கில் விற்றுவிடுவர். இந்த நிகழுவுகள் 1955 முதல் 70 வரைக்குகம் நான் பார்த்து அனுபவித்தவை. இப்போது அந்த வீடும் இல்லை பத்தாயமும் இல்லை. எல்லாம் நினைவில் மாத்திரம் இருக்கும் நினைவலைகள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் 

செம்புர் நீலு (நீலகண்டன்)



--



 

kanmani tamil

unread,
May 2, 2026, 12:57:11 AMMay 2
to vallamai
/// இறந்தவர்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?
 
இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்டுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்குப் பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர்.

இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து இறுதிச் சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதிச் சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்குத் தெரியாது. இந்தப் பதிவில் அனைத்து இறுதிச் சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களைப் பார்க்கலாம்.

மூக்கில் பஞ்சு வைப்பது:

இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனைத் தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும் வாயையும் சேர்த்துக் கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் இருந்து வெளிப்பட்டுப் பரவாமல் இருக்கத்தான்.

விளக்கேற்றுவது:

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டுப் பிரிந்த பின்; அது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறத் தொடங்கிவிடும். ஆன்மீக ரீதியாக அவர்களது உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனைத் தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்குத் திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும். ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்குச் செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்:

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகி விடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்கில் பயன்படுத்தப்படும் ஒற்றைத் திரியானது ஒளிரும் ஆன்மாவைக் குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதிச் சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் நேரமாகும். மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களைத் தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகக் கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களை எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

மூங்கில் பாடை:

மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது. இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்த உடலுக்குக் கவசமாக அலைகளை ஏற்படுத்தக் கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது:

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்துக் கட்டப்படும். உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

மண்பானை:

இறந்த உடலைச் சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்தப் பல பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது. அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாகப் பரவக்கூடியவை.///


பாதி புரிகிறது...

சக 

Raju Rajendran

unread,
May 4, 2026, 8:27:43 AMMay 4
to vall...@googlegroups.com
🙂

சனி, 2 மே, 2026, 10:27 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran

kanmani tamil

unread,
May 16, 2026, 7:45:28 PMMay 16
to vallamai
ஊஞ்சலாட்டத்தின் மகத்துவம் 

/// முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியைத் தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராகச் செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை (நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றிப் பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.


தமிழிலக்கியத்தில் கலம்பக உறுப்புகளில் ஒன்று ஊசல். "ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல் 
உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்" நந்திக்கலம்பகம் 
1975ல் படித்தது. பாடலைப் படிக்கும் போது அந்த இழுவையான (meter) ஒலிஒழுங்கு ஊஞ்சலாடுவது போலவே இருக்கும். 

நாட்டார் பாடல்களில் ஊசல் என்பதன் பொருளே முற்றிலும் வேறு. 

தெரிவு:சக




kanmani tamil

unread,
May 19, 2026, 12:42:37 AMMay 19
to vallamai
/// பெரியவங்க எதுக்காக சொன்னாங்க.?

#கோவில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம்...

காரணம்: கோவில் இல்லாத ஊர்களில் ஏன் குடியிருக்கக் கூடாது? அக்காலங்களில், கோவில்கள் மட்டுமே ஒரு ஊரின் உயரமான கட்டிடமாக இருக்கும். அவற்றிலும் உயரமான தேக்கு மரத்தாலான கோவில் கொடிமரங்களின் உச்சியில் செப்புத்தகடு பொருத்தியிருப்பார்கள்.
கொடிமரத்தின் கீழ் சிலர் பிரார்த்தனைகளுக்காக கல் உப்பைக் கொட்டியிருப்பர். மழைக்காலங்களில் இடியோ, மின்னலோ அப்பகுதியைத் தாக்கும் போது உயரமாக உள்ளவைகளைத் தான் முதலில் தாக்கும். அவ்வகையில் உயரமான கொடிமரம் அவற்றைத் தாங்கி பூமிக்குள் அனுப்பிவிடும் ஆற்றல் வாய்ந்தது. இதன் மூலம் அந்தப் பகுதி இடி,மின்னல் பாதிப்புகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.
கொடிமரத்தின் உச்சியில் உள்ள செப்புத்தகடுதான் அக்கால இடிதாங்கியாக செயல்பட்டது. இதே போலத்தான்  கோவில்களில் கருவறைகள் எனும் இறைவன் சன்னதிகளின் கோபுர உச்சியில் இருக்கும் கலசத்தில் உள்ள தானியங்கள் இடி, மின்னலை ஈர்த்து அவற்றை தன்னுள் ஏற்கும் ஆற்றல் மிக்கவை. மேலும் கோபுரங்களின் உயரங்களின் அளவில் அவை இடி, மின்னலில் இருந்து மக்களைக் காக்கும் பரப்பளவும் அதிகரிக்கும். எனவேதான் அக்காலங்களில் கோவிலை விட உயரமாக வீடுகள் கட்டினால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று மக்களை பயமுறுத்தி வைத்தார்கள். அக்காலங்களில் இடிதாங்கி என தனிப் பயன்பாடு இல்லாததால் மக்களை இவ்வாறு சொல்லி; இயற்கை பாதிப்புகளிலிருந்து காத்து வந்தனர். அதிக படிப்பறிவு இல்லாத மக்கள் இதுபோல இறைவன் பெயரைச் சொன்னால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள் என்ற காரணத்தால் பெரியோர்கள் அக்காலத்தில் இவ்வாறு சொல்லிவைத்தனர்.

#பிறந்த குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கக்கூடாது.

காரணம்: பிறந்த குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கக் கூடாது; மீறி எடுத்தால்
குழந்தைகளின் ஆயுள் குறைந்து விடும் என்று மக்களை பயமுறுத்தி வைத்தனர் பெரியோர்கள். ஏன்?
பத்துமாதம் தாயின் கருப்பை இருட்டில் வளரும் குழந்தை பின்னர் தாய்மடியில் வளர்ந்து உலக நடைமுறைகளை... பகல் இரவு வேலைகளைக் கண்களால் கண்டு வளர்ந்தாலும் குழந்தைகளை நேராக சூரியனைப் பார்க்க வைப்பதில்லை. அதற்குக் காரணம்- பிறந்த குழந்தைகளின் கண்களில் உள்ள கருவிழியை... பார்வைத் தன்மையை அதிக கதிர்வீச்சு கொண்ட சூரியக் கதிர்கள் பாதித்து; குழந்தைகளின் கண் பார்வையைச் செயல் இழக்கச் செய்துவிடும் என்பதால் மட்டுமே.
இயற்கை சூரிய ஒளியே குழந்தைகளின் கண்பார்வைத் திறனைக் குறைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் போது செயற்கை ஒளிவெள்ளம் பாய்ச்சி அக்காலங்களில் ஸ்டுடியோக்களில் புகைப்படங்கள் எடுத்ததால் குழந்தைகளின் கவனத்தை திசைதிருப்பும். அந்த செயற்கை ஒளிக்கதிர்களை குழந்தைகள் ஆர்வமாகக் காணும் போது; அவற்றால் கண்பார்வைக் குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும் என்றே நம் முன்னோர்கள் குழந்தைகளை இரண்டு வயது வரை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. இக்கால விஞ்ஞான வளர்ச்சிகளில் புகைப்படம் ஸ்டுடியோவில் எடுப்பதுபோய்; வீடுகளில், கைபேசிகளில் குழந்தைகளின் குறும்புகளை வீடியோக்களாக எடுக்கும் காலம் வந்துவிட்டது. ஆயினும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை படங்கள் எடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. அதைவிட 'பிளாஷ்' எனும் செயற்கை ஒளி பாய்ச்சி எடுப்பது அறவே கூடாது.

#திருஷ்டி கழிப்பது :

புதுமணத் தம்பதிகளையோ மகப்பேறு முடிந்து குழந்தையுடன் வரும் பெண்களையோ அல்லது நீண்ட காலம் வெளியூரில் இருந்துவிட்டு வரும் உறவுகளையோ, அவர்கள் வீட்டில் நுழையுமுன், ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது, காலங்காலமாக, தமிழர் வாழ்வில் கடைபிடிக்கப்படும் ஒரு மரபு.
இது என்ன மூடநம்பிக்கையா? இல்லை வேறு ஏதேனும் மதச்சடங்கா?
இரண்டும் இல்லை, நம் முன்னோரின் அறிவியல்பூர்வமான, அற்புத விஞ்ஞான செயல்முறைதான் அது.

#ஆரத்தி:

தாம்பாளம் எனப்படும் பெரிய தட்டு, மஞ்சள் சுண்ணாம்பு மற்றும் தண்ணீர். தாம்பாளத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் மஞ்சள்தூளுடன் சுண்ணாம்பை கலக்க, தண்ணீர் சிகப்பு நிறமாக மாறிவிடும், அதில் ஒரு வெற்றிலையை வைத்து, அதில் சூடம் ஏற்றி, வீட்டுக்கு வருபவர்களின் முன் அவர்களின் தலையை மூன்று முறை சுற்றிய பிறகு ஒரு ஓரமாக அந்த நீரைக் கொட்டிவிடுவதையே, திருஷ்டி கழித்தல் என்கிறோம்.

இதன் அறிவியல் விளக்கம் என்ன?
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புபவர்களுக்கு, பொது இடத்தில் காணப்படும் வியாதித்தொற்று பாதிப்புகள் உடலில் இருக்கும்.
இதுபோலவே, வெளியூரில் இருந்து பயணம் செய்து வருவோர் மீதும் தொற்றுக்கள் இருக்கும். இவற்றுடன் அவர்கள் வீட்டின் உள்ளே சென்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் எளிதில் பரவி, உடல் நலப்பாதிப்புகளை உண்டாக்கும் தன்மையுடையது.
எனவேதான், உலகின் மிகச்சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை மற்றொரு கிருமிநாசினியான சுண்ணாம்புடன் நீரில் கலந்து, அதன்மேல் வெற்றிலையில் உள்ள சூடத்தின் தீப ஒளியை, அவர்கள் உடல் மேல் பரவலாகக் காட்டி சுற்ற, உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் எல்லாம், மஞ்சள் சுண்ணாம்பு கலவையுள்ள நீரின் ஆற்றலில் உள்ள அந்த தூய ஒளியின்பால் ஈர்க்கப்பட்டு, அழிந்துவிடும். எனவேதான், இவற்றை வெறுமனே அறிவியல் ரீதியாகச் சொன்னால், அதெல்லாம் எனக்கு எந்த பாதிப்புகளும் வராது என்று ஏற்க மறுப்பார்கள் என்றுதான், கண் திருஷ்டி நீங்க ஆரத்தி எடுப்பதாக, சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர். பெரியவர்கள், வெறுமனே மதச்சடங்குக்காக எதையும் சொல்லிவைக்கவில்லை, அதில் எல்லாம் அரிய அறிவியல் உண்மைகளை, ஒளித்தே வைத்திருந்தார்கள் என்பதை அறிந்தால், நாம், என்ன இந்த காலத்திலும், இப்படி மூட நம்பிக்கைகள், என்று மூத்தோர் சொல்லை அவமதிக்கமாட்டோம் தானே..

இதேபோலத்தான், தினமும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் அனைவரும், கை கால் முகம் கழுவிவிட்டே, அடுத்த வேலையில் ஈடுபடவேண்டும் என்றும் சொன்னார்கள். இன்றைய பள்ளிக் கல்லூரி வயது பிள்ளைகள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் வரை, எத்தனை பேர் இந்த சுத்தத்தை கடைபிடிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே.. வெறுமனே, நாட்டுக்கு 'சுவாச் பாரத்', தூய்மை இந்தியா! என்று முழக்கமிட்டு வந்தால் போதுமா?
முன்னோர் சொன்ன கருத்துகளில் மதிப்பு வைத்து, வீடுகளில், மனதில் சுத்தத்தை கடைபிடிக்க, வீடும், சமூகமும் நலமாகும்.

#குழந்தை பிறக்கவில்லையா? அரசமரம் சுற்றிவா!

காரணம் : இன்றைய தலைமுறை கேலி பேசும் ஒரு மூத்தோர் வாக்கு இது, குழந்தை இல்லாததற்கு மரத்தை சுற்றினால், பிறந்துவிடுமா?
மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சையின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தால், குழந்தை பிறந்துவிடும், இதற்கு எதற்கு மரத்தை சுற்றுகிறீர்கள் என்று ஏளனம் வேறு செய்வார்கள். ஆயினும் முன்னோர் சொன்னதன் விளக்கம் இவர்கள் அறிந்தால், நிச்சயம் அப்படி சொல்லமாட்டார்கள். முன்னோர்கள் மரங்களை அவை தரும் நல்ல மருத்துவ குணங்களுக்காக, கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிவந்தார்கள்.
மரங்களில் உயர்வாக, மரங்களின் மன்னனாகக் கருதப்படும் மிகத்தொன்மைவாய்ந்த அரசமரத்தின் வேரில் பிரம்மாவும் மரத்தின் நடுப்பகுதியில் பெருமாளும் மரத்தின் உச்சியில் சிவபெருமானும் இருந்து அருள்பாலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. ஆன்மீக ரீதியில், இந்த தெய்வ மரத்தை சுற்றி வந்தால், குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அறிவியல் விளக்கம் என்ன? மனிதன் சுவாசிக்க, ஆக்சிஜன் தேவை என்பது நாமறிவோம். நாம் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியிடுவோம். உயரிய தன்மை கொண்ட மரங்கள், மனிதன் வெளியிடும் கார்பனை உள்ளிழுத்து, அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அந்த வகையில், அரச மரம் மிக அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் ஆற்றல் மிக்கது. காலைவேளைகளில், பெண்கள் இந்த மரத்தை சுற்றி வரும்போது, இயற்கையான ஆக்சிஜன் எனும் பிராணவாயு அவர்களின் சுவாசத்தின் வழியே, உடலில் பரவி, அவர்களின் மகப்பேறு அடையும் ஆற்றலைத் தூண்டும் சுரப்பிகளை சீர் செய்து, கருப்பையை வளமாக்கும்.
இந்த சுவாசித்தலின் மூலமே, உடல் குறைபாடுகள் நீங்கி, விரைவில் மகப்பேறு அடையும் நிலையை அடைவார்கள் என்பதே, இதன் அறிவியல் உண்மை. தற்போதைய நவீன மருத்துவ ஆய்வுகளும் இதை உறுதிசெய்கின்றன. ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் ஆன்மீகத்தில் இணைத்து கூறிய இந்த அறிவியல் உண்மை, வியந்து போற்றத்தக்கதல்லவா!


தெரிவு: சக

kanmani tamil

unread,
May 20, 2026, 9:28:27 PM (13 days ago) May 20
to vallamai
பொதுவாகவே இந்து முறைப்படி நடைபெறும் பல சடங்குகளில் மண்கலயம் வைத்து அதில் நூல் சுற்றி வழிபாடு செய்வது வழக்கம்.
எதற்காக என்று தெரியுமா?

பூஜையில் தெய்வத்தை மனதில் வேண்டி மந்திரங்கள் ஓதும்போது அந்த மண் கலயத்தில் உள்ள நூலில் தான் முதலில் அந்த கடவுளின் சக்தி வந்து இறங்கும்.

பின்பு அந்த நூலின் வழியாக அந்த மண் கலயத்தின் உள்ளே அந்த தெய்வ சக்தி சென்று அந்தப் பூஜையை ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார்.

Mani Mannan


நம்பிக்கை தானே வாழ்க்கை!

தெரிவு:சக 

kanmani tamil

unread,
May 22, 2026, 9:06:14 PM (11 days ago) May 22
to vallamai
/// #மரப்பாச்சி 
#பல் #முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளை செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..

கடிக்கும் போது ஈட்டி மரத்தால் செய்த மரப்பாச்சியின் சுவை அந்த குழந்தையின் நாவின் வழியாக உமிழ் நீருடன் வயிற்றுக்குள் போகும்..

இப்படி உடம்பில் உள்புகும் போது குழந்தைகளுக்குச் 
செரிமானக் கோளாறு, தொழுநோய் பிரச்சனை,
வயிற்றுப்போக்கு உபாதைகள் ஏற்படாது..

சொல்லப்போனா இதுவும் ஓர்வகை தடுப்பூசிதான்..

அதனாலேயே அந்த காலத்துல குழந்தைகள் கைகளில் மர பொம்மைகளை கொடுத்திருக்காங்க பெரியவங்க ....

குழந்தைகள் விளையாடி மகிழ..இயற்கையான ஒரு உள்நாட்டு தயாரிப்பு..

ஆனா இப்போ மரபொம்மைகளுக்கு பதிலா சீனா பிளாஸ்டிக் பொம்மையை வீம்புக்கு விலை கொடுத்து வாங்கி பெருமைகொள்கிறோம்..!

நம்ம நாயா அலைஞ்சு சேர்த்து வைக்கிற காசு,சொத்து,வீடு,சொகுசு வாகனம், பொன், பொருள் இவை எல்லாத்தையும் விட உயர்ந்தது ஒண்ணு 
இருக்கு தெரியும்ங்களா?

அதுதான் நோயில்லா பெருவாழ்வு..

இதை விட பெரும் செல்வம் வேறு என்ன கொடுக்க முடியும் நம் பிள்ளைகளுக்கு..

ஹிந்து திருமணங்களில் ஒரு நிகழ்வாக மணமக்கள்... மரப்பாச்சி பொம்மைகளை தொட்டிலிட்டு ஆட்டுவது...

 தேங்காய் உருட்டுவது..

 அப்பளம் நொறுக்குவது...

 பானைக்குள் மோதிரம் போட்டு எடுப்பது ...

போன்ற சடங்குகளில்....

முக்கிய பங்காக மரப்பாச்சி பொம்மைகள் விளங்கியது..

மணப்பெண்ணின் தாய் வீட்டு சீதனமாக இந்த மரப்பாச்சி பொம்மை வழங்கப்படும்...

தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்பொழுது இந்த பொம்மையின் அவசியம் புரியும்...
குழந்தைகளுக்கு தலைவலி , ஜலதோஷம் போன்ற சமயங்களில் இந்த மரப்பாச்சி பொம்மையை இழைத்து தாய் பாலில் கரைத்து காமாட்சி விளக்கில் காய்ச்சி
வெதுவெதுப்பான
இதமான சூட்டில் நெற்றியில் பற்றுப்போட ஜலதோஷம் நீங்கும்...

குழந்தையும் அயர்ந்து தூங்கும்..

நாங்கள் சிறுவயதில் டெய்லர் கடையில் 
வெட்டி தூக்கி எறியப்படும் ....துணி துண்டுகளை எடுத்து வந்து இந்த பொம்மைக்கு விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்திருக்கிறோம்...

மரப்பாச்சி பொம்மை அந்தந்த ஊர் இயற்கை அங்காடிகளிலும், 
ஊர் சந்தைகளிலும் கிடைக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்க.. இனி உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் பெரிய பெரிய மால்களில் உள்ள பேபி பவுடர்..சோப்.. கிஃப்ட் பாக்ஸ்.. பிளாஸ்டிக் பொம்மைகள் போன்றவை வாங்குவதை தவிர்த்து உள்நாட்டு பொருட்களான மரப்பாச்சி பொம்மைகளை வாங்கிப் பரிசளிப்போம்..
நம் கைவினை கலைஞர்களை ஊக்குவிப்போம்...///


ஈட்டிமரம் என்பது எது? தெரியவில்லை. ஆனால் 'பொம்மைக்கட்டை' என வழங்கும் இவ்வகைப் பொம்மைகளை மருந்துக் கல்லில் உரசி நெற்றியிலும் உச்சிக்குழியிலும் பற்றுப் போடும் நடைமுறையை நானும் பேரப் பிள்ளைகள் வளர்ப்பு வரை பின்பற்றி இருக்கிறேன். Very effective. 

தெரிவு:சக

kanmani tamil

unread,
May 25, 2026, 11:15:49 PM (8 days ago) May 25
to vallamai
திருஷ்டி படாமல் இருக்க...

/// கண் திருஷ்டி படாமல் இருக்க என்னென்ன செய்யலாம்? – நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆன்மீகமும் வாழ்வியல் ஞானமும்...

கண் திருஷ்டி அல்லது துஷ்ட திருஷ்டி என்பது வெறும் பொறாமைப் பார்வை மட்டுமல்ல;... ஒருவரின் வளர்ச்சி, செல்வம், அழகு, திறமை, குடும்ப மகிழ்ச்சி போன்றவற்றைப் பார்த்து பிறர் மனதில் எழும் ஏக்கம் அல்லது எதிர்மறை எண்ணங்கள் நுண்ணிய ஆற்றலாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை பல தலைமுறைகளாக நிலவி வருகிறது.

இது அறிவியல் ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையாக இருந்தாலும்; உலகின் பல கலாச்சாரங்களிலும் 'தீய பார்வை' பற்றிய கருத்துகள் காணப்படுகின்றன. தமிழர் மரபிலும் கண் திருஷ்டியைத் தவிர்க்கப் பல வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

கண் திருஷ்டி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன?

பாரம்பரியமாகக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் அதை கண் திருஷ்டியுடன் தொடர்புபடுத்துவர்:

காரணமின்றி உடல் சோர்வு ஏற்படுதல், அடிக்கடி சிறு சிறு நோய்கள் வருதல், வீட்டில் சண்டை, மனக்கசப்பு அதிகரித்தல், தொழில் அல்லது வியாபாரத்தில் தடைகள் ஏற்படுதல், பணம் வந்தாலும் நிலைக்காமல் போதல்
குழந்தைகள் அடிக்கடி அழுதல் அல்லது உடல்நலக்குறைவு,
புதிய முயற்சிகளில் எதிர்பாராத தடை; இவை அனைத்திற்கும் கண் திருஷ்டியே காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது. உடல்நலம், மனஅழுத்தம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்களும் இருக்கலாம். இருப்பினும் பாரம்பரிய நம்பிக்கையில் இத்தகைய அறிகுறிகள் திருஷ்டியுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன.

ஆரத்தி எடுக்கும் பழக்கம் ஏன் வந்தது?

திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், புதிய வீடு புகுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஆரத்தி எடுத்து திலகம் இடும் வழக்கம் தமிழகத்தில் பண்டு தொட்டுக் காணப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் வளத்தையும் பார்த்து ஏற்படக்கூடிய பொறாமைப் பார்வை அல்லது எதிர்மறை ஆற்றல்களை அகற்றும் குறியீட்டுச் சடங்காக இதைக் கருதினர்.
ஆரத்தி எடுத்த பிறகு அதனை வீட்டிற்கு வெளியே கொட்டுவது; தீய சக்திகள் வீட்டிற்குள் தங்காமல் நீங்குவதன் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

வாழைமரம் ஏன் கட்டப்படுகிறது?

திருமண வீடுகள், விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற இடங்களில் குலை தள்ளிய வாழைமரங்களை வாசலில் கட்டுவது ஒரு பழமையான மரபு.
வாழை மரம் வளம், வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், திருஷ்டி தோஷங்களை ஈர்த்து அகற்றும் சக்தி அதற்கு உண்டு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
இதனால் சுப நிகழ்ச்சிகளில் வாழைமரம் தவறாமல் இடம்பெறுகிறது.

எலுமிச்சையும் மஞ்சளும்:

திருஷ்டி நீக்கும் சின்னங்கள்
பல கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் முன்பாக வெட்டப்பட்ட எலுமிச்சையில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி வைப்பதை நாம் பார்த்திருப்போம்.
எலுமிச்சை புனிதத்தையும் சுத்தத்தையும் குறிக்கிறது.
மஞ்சள் மங்களத்தின் அடையாளம்.
குங்குமம் சக்தியின் அடையாளம்.
இந்த மூன்றும் சேர்ந்து நல்ல ஆற்றலை வரவேற்று, எதிர்மறை சக்திகளை விலக்கும் குறியீட்டு வழிபாடாகப் பார்க்கப்படுகிறது.

ஆகாச கருடன் கிழங்கு:

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆகாச கருடன் கிழங்கு என்று அழைக்கப்படும் ஒரு வகை கிழங்கை வாசலில் தொங்கவிடும் பழக்கம் உள்ளது. அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கயிற்றில் கட்டி; வீட்டின் நுழைவாயிலில் தொங்க விடுவார்கள்.
இது தீய பார்வைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி அகற்றும் என்று மக்கள் நம்புகின்றனர்.

கல் உப்பின் பயன்பாடு:

கல் உப்பு பல பாரம்பரிய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
குளிக்கும் போது வாரம் ஒருமுறை நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்துக் குளிப்பது உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

வீடு துடைக்கும் போது...
தரையை துடைக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்வதும் பலர் கடைப்பிடிக்கும் பழக்கமாகும்.
இது வீட்டில் சுத்தத்தையும் புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அமாவாசை, பௌர்ணமி தூப வழிபாடு:

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் வீட்டில் தூபம் காட்டும் பழக்கம் பல குடும்பங்களில் உள்ளது.
சாம்பிராணியுடன் வெண் கடுகு மற்றும் சில மூலிகைத் தூள்களை கலந்து தூபம் போடுவது வீட்டை நறுமணமாக்குவதோடு, ஆன்மீக சூழலையும் உருவாக்குகிறது என்று கருதப்படுகிறது.
இதனால் மன அமைதி அதிகரிப்பதாக பலர் அனுபவம் கூறுகின்றனர்.

எலுமிச்சை – மிளகாய் மாலை ஏன் கட்டப்படுகிறது?

கடை வாசல்களில், வாகனங்களில், அலுவலகங்களில் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயை நூலில் கோர்த்து தொங்க விடுவதை நாம் அடிக்கடி காண்கிறோம். இதற்குப் பல பாரம்பரிய விளக்கங்கள் கூறப்படுகின்றன.
முக்கியமாக...

எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து அகற்றும் குறியீடாகக் கருதப்படுகிறது.
எலுமிச்சையின் வாசனை மற்றும் மிளகாயின் காரத் தன்மை சில பூச்சிகளைத் தடுக்கும் என்று மக்கள் நம்பினர்.
புதிய தொழில் அல்லது முயற்சிகளுக்கு பாதுகாப்பு வேண்டி இதைக் கட்டும் வழக்கம் உருவானது.
இது ஒரு பாரம்பரிய கலாச்சார நடைமுறை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை மரம்:

வாஸ்து மரபுகளில் எலுமிச்சை மரம் வளர்க்கப்படும் வீடுகளில் நல்ல ஆற்றல் நிலைக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் நறுமணம், பசுமை, மருத்துவப் பயன்பாடுகள் ஆகிய காரணங்களால் அது மங்களகரமான மரமாகக் கருதப்படுகிறது.
பலர் வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் எலுமிச்சை மரம் வளர்ப்பதையும் விரும்புகின்றனர்.

வாசலில் கண்ணாடி வைப்பதற்கான காரணம்:

சிலர் வீட்டின் வாசலில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்துவார்கள்.
இதற்குப் பின்னால் உள்ள நம்பிக்கை என்னவென்றால், வீட்டை நோக்கி வரும் எதிர்மறை ஆற்றல் அல்லது தீய பார்வை கண்ணாடியில் பிரதிபலித்து திரும்பிச் செல்லும் என்பதாகும்
இது பல கலாச்சாரங்களிலும் காணப்படும் ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும்.
மீன் தொட்டி வளர்ப்பது

வீட்டில் மீன் தொட்டி: 
பலரால் மங்களகரமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக சிவப்பு மற்றும் கருப்பு நிற மீன்களை வளர்ப்பது நல்ல ஆற்றலை அதிகரிக்கும் என்று வாஸ்து மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.
மீன்கள் நீந்தும் காட்சியைப் பார்ப்பது மன அமைதியையும் தருகிறது.

கண் திருஷ்டி கணபதி:

பல வீடுகளின் வாசலில் “கண் திருஷ்டி கணபதி” படத்தைப் பார்க்கலாம்.
கணபதி விநாயகர் அனைத்துத் தடைகளையும் நீக்கும் தெய்வமாக கருதப்படுவதால், அவரின் உருவத்தை வாசலில் வைப்பது பாதுகாப்பு மற்றும் மங்களத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

திருஷ்டி நீக்கும் தலம் திருவிடந்தை:

திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பக்தர்களால் திருஷ்டி நீக்கும் தலமாகவும் போற்றப்படுகிறது.

இங்கு அருள்புரியும் நித்யகல்யாணப் பெருமாளும் தாயாரும் தனித்துவமான திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.
திருமணத் தடை நீங்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும், திருஷ்டி நீங்க வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.

இந்த மரபுகள் நமக்கு சொல்லும் பாடம்-
கண் திருஷ்டி பற்றிய நம்பிக்கைகளை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பார்க்கலாம்.
ஆனால் இந்தப் பழக்க வழக்கங்களின் பின்னால் ஒரு முக்கியமான கருத்து உள்ளது:

வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், 
தினமும் விளக்கேற்றுதல்,
நல்ல எண்ணங்களை வளர்த்தல், இறை நம்பிக்கையுடன் வாழ்தல்;
பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளைத் தவிர்த்தல்,
குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநிறுத்தல்
இவை அனைத்தும் வாழ்க்கையை நல்ல பாதையில் வழிநடத்தும் பண்புகளாகும்.

உண்மையில், பிறர் மீது பொறாமைப்படாமல் வாழ்வதும், நம் வாழ்க்கையை நன்றியுணர்வுடன் வாழ்வதும் தான் எந்தத் திருஷ்டியையும் விட பெரிய பாதுகாப்பாகும்./// 

#கண்திருஷ்டி #ஆன்மீகம் #தமிழர்பண்பாடு #விநாயகர் #நித்யகல்யாணபெருமாள் #வாஸ்து #ThannasiAppar


தெரிவு: சக

Raju Rajendran

unread,
May 26, 2026, 7:45:35 PM (7 days ago) May 26
to vall...@googlegroups.com
Money plant

செவ்., 26 மே, 2026, 8:45 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages