வசதி போல் வாழும் தமிழ்

20 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Jul 10, 2026, 1:52:48 PM (5 days ago) Jul 10
to vallamai
எந்த ஒரு மொழியிலும் அதைப் பயன்படுத்தும் சமுதாயம் சார்ந்த  தாக்கம் இல்லாமல் போகாது. தமிழிலும் தமிழ்ச் சமுதாயத்தின் தாக்கத்தைப் பல கோலங்களில் காண இயல்கிறது.
அவற்றில் ஒன்று 'ஒற்று மிகுதலும் மிகாமையும்' ஆகும். 
கம்பு + தோசை = கம்புத்தோசை என்பது சென்ற நூற்றாண்டு வரை வழங்கிய தமிழின் போக்காக இருந்தது.
ஆனால் இந்த நூற்றாண்டில் அவ் வழக்கு மறைந்து கம்பு தோசை என்றே பேசவும் எழுதவும் படுகிறது.
குடும்பங்களே தனித்தனியாக (nuclear) வாழ்ந்து வரும் சமுதாயத்தில் சொற்கள் கூடப் புணர்ந்து ஒன்றுவதைத் தவிர்ப்பதைக் காண இயல்கிறது. கம்பும் தோசையும் 'என் இடத்தில் நான் இருக்கிறேன்; உன் இடத்தில் நீ இருந்து கொள்' என்று சமரசம் செய்து கொள்வதைப் போல ஒட்டாமல் ஒன்றாமல் தனித்தனியே வழங்குகின்றன. 

image.jpeg

சக
20260710_081102 (1).jpg

Raju Rajendran

unread,
Jul 11, 2026, 10:22:03 AM (4 days ago) Jul 11
to vall...@googlegroups.com
பிரித்து எழுதும்போது ஒற்று தேவையில்லை. தமிழில் வல்லினங்கள் சொல்லின் முதலெழுத்தாக வரும்போது மட்டும் வல்லினமாக ஒலிக்கும். பிற இடங்களில் மெலிந்து ஒலிக்கும். அப்படி மெலியாமல் இருக்கவே ஒற்று இடுகிறோம். காட்டு: கூகை, காக்கை.

இரண்டு பெயர்ச்சொற்களையும் இரண்டு வினைச்சொற்களையும் ஒற்றைச்சொல்லாக கருதி சேர்த்து எழுதணும் என்பதை தற்காலத்தில் மறந்துவிட்டோம்.

வெள்., 10 ஜூலை, 2026, 10:52 AM அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct%2BxNBj%2B-noJisTSDe2TjgnAadnc61jjoPsM4YqXJ-%2Bog%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages