Fwd: எழுத்தின் நுட்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்

41 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Nov 24, 2022, 9:41:27 AM11/24/22
to vallamai
'விளாங்காய்' ?!!!
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..

சி.ஜெயபாரதன் (அணுவியல் விஞ்ஞானி, கனடா);

“கூவிளங்காய் வேண்டும், கருவிளாங்காய் ஏன் வேண்டாம்?

தேவைக்கு வெண்பாவில் சேர்” என்கிறார்.  

செவ்வாய், புதன்வியாழன், வெள்ளிசனி, ஞாயிறு

திங்கள் கிழமைநாள் ஏழு.” என்பதும் அவரது படைப்பே.

4.2 செய்யுள் பயிற்சி நாப்பழக்கத்தால் தான் நம்பிக்கை ஏற்படுத்தும். ‘நேர்நிரை இணைந்த நிரையசை நடுவிலுள்ள காய்ச்சீருக்கு’ விளாங்காய்ச்  சீர் என்று தனிப்பெயர் கொடுத்து வழங்குவது; நினைவிற் கொண்டு பயில மாணவர் பின்பற்றும் நடைமுறையே. அதை நூலில் சொல்லித்; தவிர்ப்பது சரி என்ற கருத்தை நிலைநாட்டுவது; தமிழ்ச்செய்யுள் வாசிப்புப்பயிற்சி  போதாததால் ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவைக் காட்டுகிறது. 

4.3 மக்கள் முயற்சிச்சுருக்கம் காரணமாகவும், சோம்பேறித்தனம் காரணமாகவும் தத்தம் பேச்சுமொழியில் பல மாற்றங்களைத் தம்மை அறியாமலேயே ஏற்படுத்தி விடுகின்றனர் என்ற; உலக முழுமைக்கும் பொதுவான மொழியியல் கொள்கை; செய்யுள் வாசிப்பிற்கும் ஏற்றதே. பெருந்தமிழ் ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.

 4.4 செப்பலோசை பல நுட்பமான நெளிவு சுளிவுகளை உள்ளடக்கியது. வெண்பாவில் பிள்ளையுடன் தாய் பேசும் செப்பலோசை கொஞ்சும்;     ஆசிரியரின் செப்பலோசை அறிவுறுத்தும்; பாட்டிகதையின் செப்பலோசை நீளும்; பக்தனின் செப்பலோசை உருகும்; இப்படி இன்னும் பல. இதனால் தொல்காப்பியரும், அமிதசாகரரும்  சொல்லாத கருத்தை விதியாகத் திணிப்பது தேவையற்றது.

4.5 பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர். 

சக 

---------- Forwarded message ---------
From: மதுரன் தமிழவேள் <madhur...@gmail.com>
Date: Wed, 23 Nov 2022, 9:04 am
Subject: எழுத்தின் நுட்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்
To:kanmani...@gmail.com

ஒரு கட்டிடத்தை ஆக்குவன துண்டங்கள் (blocks), பிறகு அத்துண்டங்களுக்குள் இருக்கும் செங்கற்கள் என்றெல்லாம் விளக்க முடியும் என்றாலும் அடிப்படையில் அக்கட்டிடத்தை நிரப்பி நிற்பவை அணுத்துகள்களே என்பது போல, ஒரு செய்யுளின் அமைப்பை விளக்குவதற்கு அடி, சீர், அசை முதலான உறுப்புகள் பயன்பட்டாலும் அடிப்படையில் அப்பாட்டினுள் நிறைந்திருப்பது பல்வகை எழுத்தொலியே. அணுவைக் காணும் கூர்மை கட்புலனுக்கு இல்லை என்பதால் அதைவிடப் பெரிய அலகுகளை வகுத்துப் பகுத்துக் காண்கிறோம்.

சிதறாத மனங்கொண்டு கவிபாடுவோர்க்கு அடிகளிலும் அவற்றுளுறையும் சீர்களிலும் அவற்றுளுறையும் அசைகளிலும் கூர்த்துத் தெரிபவை எழுத்தொலிகளே. எழுத்தொலியில் மனம் ஒருமுகப்படுமென்றால் அசை பிறழாது; அதன் காரணமாகச் சீர் பிறழாது; அதன்வழி அடி பிறழாது; தளை பிறழாது; தொடை பிறழாது. எழுத்தே அடிப்படை.

முழுக்கட்டுரை:

https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/

N. Ganesan

unread,
Nov 24, 2022, 10:10:49 AM11/24/22
to vall...@googlegroups.com, madhur...@gmail.com
On Thu, Nov 24, 2022 at 8:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'விளாங்காய்' ?!!!
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..

4.5 பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர். 

பாவலர் வரதராசு விளச்சீரை விளாங்காய்ச் சீர் என நினைத்துப் பேசினார். திருக்குறளில் ஏராளமான விளச்சீர்கள் உள்ளன. அதைத் தவறாக, இந்த வெண்பாவின் செப்பலோசை விதி எனக் கருதிவிட்டார். எனவே, இதனை மேற்கோள் காட்டி, இவ் வெண்பா விதி இல்லை எனக் காட்டவியலாது. துணைவினை என்பது பற்றி இலக்கணத்தில் 17-ம் நூற்றாண்டில் தான் இலக்கண விதிகள் ஆராயப்பட்டன. எத்தனையோ, வேதவியல் இலக்கணங்கள் 20-ம் நூற்றாண்டில் கண்டறியப்பெற்றன. அதுபோன்றது புலவர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் கண்ட வெண்பா நுட்பவிதி.

மா. வரதராசன் ஏராளமாக, விளாங்காய்ச் சீர்கள் திருக்குறளில் உள்ளன. எனவே, இவ்விதி இல்லை. திருக்குறளில் ஆராய்ந்தால் அவ்வாறு ஒரு விளாங்காய்ச் சீரும் வள்ளுவர் அமைக்கவில்லை எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, தப்பாக, குறளையும், விளாங்காய்ச் சீர் பற்றிய வெண்பா விதியையும் சொல்லும் வரதராசு இ-மெயிலை வைத்து இந்த வெண்பா நுட்பத்தை மறுதலிக்க இயலாது.

நா. கணேசன்
 
சக 

---------- Forwarded message ---------
From: மதுரன் தமிழவேள் <madhur...@gmail.com>
Date: Wed, 23 Nov 2022, 9:04 am
Subject: எழுத்தின் நுட்பங்கள்: விளாங்காய்ச்சீர் – விளங்கா(ய்)ச் சீர்
To:kanmani...@gmail.com

ஒரு கட்டிடத்தை ஆக்குவன துண்டங்கள் (blocks), பிறகு அத்துண்டங்களுக்குள் இருக்கும் செங்கற்கள் என்றெல்லாம் விளக்க முடியும் என்றாலும் அடிப்படையில் அக்கட்டிடத்தை நிரப்பி நிற்பவை அணுத்துகள்களே என்பது போல, ஒரு செய்யுளின் அமைப்பை விளக்குவதற்கு அடி, சீர், அசை முதலான உறுப்புகள் பயன்பட்டாலும் அடிப்படையில் அப்பாட்டினுள் நிறைந்திருப்பது பல்வகை எழுத்தொலியே. அணுவைக் காணும் கூர்மை கட்புலனுக்கு இல்லை என்பதால் அதைவிடப் பெரிய அலகுகளை வகுத்துப் பகுத்துக் காண்கிறோம்.

சிதறாத மனங்கொண்டு கவிபாடுவோர்க்கு அடிகளிலும் அவற்றுளுறையும் சீர்களிலும் அவற்றுளுறையும் அசைகளிலும் கூர்த்துத் தெரிபவை எழுத்தொலிகளே. எழுத்தொலியில் மனம் ஒருமுகப்படுமென்றால் அசை பிறழாது; அதன் காரணமாகச் சீர் பிறழாது; அதன்வழி அடி பிறழாது; தளை பிறழாது; தொடை பிறழாது. எழுத்தே அடிப்படை.

முழுக்கட்டுரை:

https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs0JVPHgf6Ox%2BGNPKkfrh-snquG_ocHAPpNohxZuqxmWw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 24, 2022, 10:24:22 AM11/24/22
to vall...@googlegroups.com, madhur...@gmail.com
அன்பின் டாக்டர் கண்மணி கணேசன் அவர்களுக்கு,

பாம்பன் சுவாமிகள் மிகப்பெரும் தமிழ்ப்புலவர். அவர் பாடிய 6666 செய்யுள்கள் நம்மிடையே இருக்கின்றன. எல்லா யாப்பிலும் பாடிய தமிழறிஞர், கவிஞர், சித்தர்பிரான். விளாங்காய்ச் சீர் பற்றிய வெண்பா நுட்பத்தைச் சொல்லியுள்ளார். மா. வரதராசன் தவறாகத் திருக்குறளைப் புரிந்துகொண்டு ஏராளமான விளாங்காய்ச் சீர் குறளில் உள்ளன என்பது பெரும்பிழை. அதை வைத்து விளாங்காய்ச் சீர் விதியைத் தவறு எனல் building sand castles.

ஈரடி கொண்ட குறள்வெண்பாவில் தொடங்கி ஆயிரம் அடிகள் வரை நீளும் கலிவெண்பா வரை மேற்சொன்ன பொதுவிலக்கணத்தின்படி பாடப்பெறும். எனினும் வெண்பாவில் விளாங்காய்ச்சீர் (விளா = குறில், நெடில் நிரை) வரலாகாது. ஏலவே சொன்னதைப் போல இது வேறு இடங்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மீளவும் இங்கு விரித்துரைக்காமல் பாம்பன் சாமிகள் கூறிய விளக்கத்தை இங்கே தருகிறேன்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து :

“ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையில் குறில்நெடில் இணைந்த நிரையசை உடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத் தகுவனுமான ‘தம்பிரானே’ என்பது போன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணா எனவும், வரின் ஓசைநயங் கெடும் எனவும் அறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கும் இந்நியாயங் கொள்க.”

N. Ganesan

unread,
Nov 24, 2022, 5:41:10 PM11/24/22
to vall...@googlegroups.com
On Thu, Nov 24, 2022 at 8:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> 'விளாங்காய்' ?!!
> ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..
>
>
> 4.5 பாவலர் மா.வரதராசனும், ‘வல்லமை’ மின்னிதழ் நிறுவனர் திரு.அண்ணாகண்ணனும் இப்புதுக்கருத்து தேவையற்றது என்கின்றனர்.
>
>

வெண்பா நிறையப் பாடும் மதுரன் தமிழவேள் போன்றோர் விளக்கம் முக்கியமானது.

(1) மா. வரதராசன் திருக்குறளில் ஏராளமான விளாங்காய்ச் சீர் இருப்பதாக எழுதினார்.

திருக்குறளில் விளாங்காய்ச் சீர் எதுவுமில்லை எனக் காட்டினர்.

(2) அண்ணாகண்ணன் காளமேகம் வெண்பாக்கள் பல தந்து இவை விளாங்காய்ச் சீர் எனக் கொடுத்திருந்தார்.

அவை தட்டுப்பிழை, சீர்பிரிப்புப் பிழை என அச்சுநூல்களில் இருந்து காட்டினர்.

(3) ஜெயபாரதன் எழுதினார்.
எதுவுமே புதிதாக வரும்போது, ஒரு ஷாக், அதற்கு ரியாக்‌ஷன் இருக்கும்.

Considering the data from Corpus Linguistics on what Tamil poets and scholars have codified,
the above three affirm that what Pamban SaamikaL and others say on veNpaa rule is valid.

NG
for info purposes.
Reply all
Reply to author
Forward
0 new messages