களமர் > களவர் ?

62 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 15, 2022, 11:55:23 AM9/15/22
to vallamai
தொகையிலக்கியத்தில் உள்ள 'களமர்', 'களவர்' ஆகிய இரு சொற்கள் தொடர்புடையனவா?
சக 

N. Ganesan

unread,
Sep 15, 2022, 8:09:28 PM9/15/22
to வல்லமை
இரண்டும் பொருள் வேறுபடும் சொற்கள் அல்லவா?

N. Ganesan

unread,
Sep 15, 2022, 8:37:39 PM9/15/22
to vall...@googlegroups.com
இரண்டும் பொருள் வேறுபடும் சொற்கள் அல்லவா?

களமர் kaḷamar , n. < களம்². 1. cf. kalama. Inhabitants of an agricultural tract, husbandmen; மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் கள மருங் கூடி (சிலப். 10, 125). 2. Sudras; சூத்திரர். (சூடா.) 3. Warriors; வீரர். கள்ளார் களம ரிருஞ் செரு மயக்கமும் (மதுரைக். 393). 4. Slaves; அடி மைகள். களமர் . . . செம்பொன் வளமனை பாழாக வாரி (பு. வெ. 3, 15).

On Thursday, September 15, 2022 at 10:55:23 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
தொகையிலக்கியத்தில் உள்ள 'களமர்', 'களவர்' ஆகிய இரு சொற்கள் தொடர்புடையனவா?
சக 
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/UXotALVgFy0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/96a3c392-bbaf-48dd-bc28-c33ab7bd550cn%40googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 16, 2022, 2:54:22 AM9/16/22
to vallamai
களமர் வயலில் இறங்கி உழுதோராவர். ஆனால் திணைமாந்தராகிய
உழவரினின்றும் வேறுபட்ட இனத்தவர்.  வேளிரோடு இணைத்துப் பேசப்படுபவர் (நன்னன்,
பிசிராந்தையார்- இவர்கள் இருவரைத் தவிர மதுரைக்காஞ்சி மதுரையை ஒட்டி நிகழ்ந்த வேளாண்மை பற்றிப் பேசும் போது களமர் இடம் பெறுகின்றனர்.). எனது ஆய்வுக்கட்டுரை: "தொகையிலக்கியக் கால அரசியலில் வேந்தரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்" பார்க்கவும்- 'தமிழ்ப் பேராய்வு' மின்ஆய்விதழ். 

களவர் என்ற சொல் இன்றைய பதிப்புகள் எதிலும் இல்லை. ஆனால் புல்லியைக் 'கள்வர் கோமான் புல்லி' என்கின்றனர். புல்லி ஒரு குறுநில மன்னன். கரும்பனூர் கிழானின் துணையுடன் நெல் வேளாண்மை செய்து புகழ் பெற்றவன் (எனது ஆய்வுக்கட்டுரை: தொகையிலக்கியக் கால அரசியலில் மன்னரும் பிற தமிழ்ச் சமூகத்தாரும்- இனம் மின்ஆய்விதழ்). 

பழைய ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்திருக்காது எனக் கேள்விப்பட்டு இருப்பதால் எனக்கு ஐயம்.

'களவர்' என்ற இனத்தை அடையாளம் காண இயலாமல்... பொருள் புரியாமல் 'கள்வர் கோமான்' ஆக்கினரோ?!

களமர் <> களவர் ஆகியிருக்க வாய்ப்பு உண்டல்லவா?!
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcwiBAjp6Bh6Vv40aQNRmHoH39LHj2U4HMqX9JfAJ%3DKGQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 16, 2022, 7:45:19 AM9/16/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com

களம்: மிகப் பழைய சொல். கதிர் அடிப்பதற்கும், அணங்கைச் சாய்ப்பதற்கு கடம்பு மாலை சூடி, வேலன் ஆடுவதற்கும், நீலம் என்னும் அவிரிச்செடியை இடித்துச் சாயம் செய்வது போன்ற தொழில்களுக்கும் பயன்படுவது. சிந்துவெளியிலே, வட்டமான மேடைகள், செங்கற்களை radial-ஆகப் பாவி நடுவிலே குழியுடன் பல கிடைக்கின்றன. இதில் மர உரல்கள் இருந்துள்ளன. அதில் அவுரிச்செடியின் நீலச் சாயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, ரிக்வேதத்தில் உள்ள உலூகல என்ற சொல், உரல்-களம் என்ற த்ராவிடச் சொல் ஆகும் என எழுதியுள்ளேன். 20+ ஆண்டு இருக்கும். கதிர் தூற்றும் களம், இளஞ் சேங்கன்றுகளைப் பூட்டி தாம்பு அடிக்கும் களம், பொலிக் களம், கொல்லனின் உலைக்களம், வீரரின் போர்க்களம், ... இத்துடன் தொடர்புடையது களமர் எனுஞ் சொல்.

கள்- இருள்/கருமை என்னும் பொருள் உடையது. நீங்கள் சொல்வது போல, களவர் கோமான் புல்லி எனப் படிக்கமுடியும். இதனை ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய ‘கள்ளர் சரித்திரம்’ போன்ற நூல்களில் காண்க. வேங்கடத்துக்கும், அதற்கு வடக்கேயும் சோழமண்டலத்தோடு பெருந்தொடர்பு இருந்துள்ளது. களவர்/கள்வர் கள்ளர். ஆந்திராவில், ஆரியர்கள் (பௌத்தம் மிக அதிகமாக ஆந்திரா, இலங்கையில் உண்டு). அவர்கள் வேங்கட தேசத்தாரைக் களவர் என்று நிறங் காரணமாக அழைத்தார்களோ? களப்பிரர், களப்பாளர் இதெல்லாம் களவர்/கள்வர் உடன் தொடர்புடைய சொல் தான். திருமங்கை ஆழ்வார் கள்ளர் குலத்திலே அவதரித்தவர். மங்கை மன்னன் அவர். அவரைக் கலியரசன், கலிகுலம் என்றெல்லாம் வடமொழியில் குறிப்பிடுகின்றனர். கலி = கருமை. கலி யுகம் = இரும்பினால் பெற்ற பெயர். கருமையானது. களவர் என்ற சொல் கரிய/இருண்ட நிறம் தொடர்புடையது.

எனவே, களமர் வேறு. களவர் வேறு எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 16, 2022, 10:30:45 AM11/16/22
to vallamai
///குமி-தல்/குவி-தல். கோமணம்/கோவணம் போல.///Dr.Ganesan wrote on 16th November 8.10pm

நன்றி. 
மொழியிடை ம் > வ் மாற்றத்திற்கு உரிய சான்றுகள். 
குமிதல்> குவிதல் 
கோமணம் > கோவணம் 
இவை போன்றே; களமர் > களவர் என மாறி வழங்கியது என்றால் தவறெனச் சொல்ல இயலாது. 
இது போன்ற மாற்றங்கள் இன்னும் பிற இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். 

சக 

kanmani tamil

unread,
Nov 17, 2022, 8:04:28 PM11/17/22
to vallamai
சமட்டு> சவட்டு
சவரி> சமரி(=கவரி/கமரி, சாமரை), 
உமணர்> உவளம், 
கமலை> கவலை (ஏற்றத்தின் சால்) 
நேம்பு/நேமு- > நேவு- > நாவுதல்/ நாம்புதல்
நன்றி, முனைவர் கணேசன் 
சக 

N. Ganesan

unread,
Nov 17, 2022, 8:17:28 PM11/17/22
to வல்லமை
இவை இரண்டாம் எழுத்து மாறுபாடு: ம/வ.

களமர், களவர் வெவ்வேறு பொருள். இது மூன்றாம் எழுத்து.

kanmani tamil

unread,
Nov 17, 2022, 9:56:12 PM11/17/22
to vallamai
இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து எல்லாம் மொழியிடை எழுத்துக்களே. 
சக 

kanmani tamil

unread,
Nov 17, 2022, 10:21:48 PM11/17/22
to vallamai
இரண்டு உயிர்களுக்கு இடையில் இருக்கும் /ம்/ >> /வ்/ என மாறுகிறது. 
சக 

kanmani tamil

unread,
Nov 25, 2022, 8:23:05 PM11/25/22
to vallamai
ம்- > -வ்- மாற்றத்திற்கு மற்றுமோர் சான்று 

///காமிண்டன் >> காமுண்டன் >> காவுண்டன்....கவுண்டன்.....
காமிண்டன் என்பது காடுகளை வெட்டி, நாடாகத் திருத்துவோர் என்னும் பொருளில் அமைந்த சொல்/// Dr.Ganesan wrote on 24th November 

நன்றி 
சக 

kanmani tamil

unread,
Nov 25, 2022, 10:39:16 PM11/25/22
to vallamai
மற்றுமோர் சான்று...

///பாம்பு தெலுங்கில் பாமு, பழங் கன்னடத்தில் பாவு என வருகிறது.
துளு மொழியில் பாவு > ஹாவு என்கின்றனர்./// Dr.Ganesan wrote on 24th November 

நன்றி 
சக 

kanmani tamil

unread,
Nov 25, 2022, 11:11:36 PM11/25/22
to vallamai
அடுத்தது...
கெம்- > செவ்-
/// கெம்- என்பது தொல்திராவிட மொழியில் உள்ள தாதுவேர் ஆகும். கெம்- =>> செம்- என ஆகிறது. செம்மை, செந்தமிழ், செம்- செவப்பு /சிவப்பு எனத் தமிழில் மாறுகிறது. ///
Dr.Ganesan wrote on 24th November 

நன்றி 
சக 

N. Ganesan

unread,
Nov 26, 2022, 9:21:44 AM11/26/22
to vall...@googlegroups.com
களமர், களவர் அடிப்படைப் பொருள் வேறுபாடு உண்டு.

பஞ்சமர் - நால்வர்ணத்திற்கு வெளியே எனப் பழைய பெயர்.
பஞ்சவர் - பாண்டவர்கள் (மகாபாரதம்).

பஞ்சவர், பஞ்சமர் வேறுபாடு போல,
களமர், களவர் வேறுபாடு உள்ளது.

kanmani tamil

unread,
Dec 16, 2022, 10:56:19 PM12/16/22
to vallamai
அப்படிச் சொல்ல இயலாது 

On Sat, 26 Nov 2022, 7:51 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
களமர், களவர் அடிப்படைப் பொருள் வேறுபாடு உண்டு.

பஞ்சமர் - நால்வர்ணத்திற்கு வெளியே எனப் பழைய பெயர்.
பஞ்சவர் - பாண்டவர்கள் (மகாபாரதம்).

பஞ்சவர், பஞ்சமர் வேறுபாடு போல,
களமர், களவர் வேறுபாடு உள்ளது.

ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும் /paanjc/ என்ற சொல் வடமொழித் தொடர்பு உடையது. எனவே அதைத் தமிழ் இலக்கணத்திற்குச் சான்று ஆக்குவது தவறு எனக் கருதுகிறேன். 
சக 

On Thu, Sep 15, 2022 at 7:37 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

இரண்டும் பொருள் வேறுபடும் சொற்கள் அல்லவா?

களமர் kaḷamar , n. < களம்². 1. cf. kalama. Inhabitants of an agricultural tract, husbandmen; மருதநில மாக்கள். கருங்கை வினைஞருங் கள மருங் கூடி (சிலப். 10, 125). 2. Sudras; சூத்திரர். (சூடா.) 3. Warriors; வீரர். கள்ளார் களம ரிருஞ் செரு மயக்கமும் (மதுரைக். 393). 4. Slaves; அடி மைகள். களமர் . . . செம்பொன் வளமனை பாழாக வாரி (பு. வெ. 3, 15).

On Thursday, September 15, 2022 at 10:55:23 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
தொகையிலக்கியத்தில் உள்ள 'களமர்', 'களவர்' ஆகிய இரு சொற்கள் தொடர்புடையனவா?
சக 
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/UXotALVgFy0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/96a3c392-bbaf-48dd-bc28-c33ab7bd550cn%40googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdw9n%3Ds-kE9xFHONekej34smg-KUW%3DW8x_zSzkueaP5sg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 17, 2022, 11:20:30 AM12/17/22
to வல்லமை
Reply all
Reply to author
Forward
0 new messages