தயவுடையீர் ! வந்தனம் !
நேற்று 8.9.2019 ஞாயிறு அன்று சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை 12ம் ஆண்டு ஜீவகாருண்ய பெருவிழாவில் தமிழகம் ,புதுவை மற்றும்
பன்னாட்டு சன்மார்க்க அன்பர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.அகவற் பாராயணம் , சொற்பொழிவு , அன்னம் பாலித்தல் , சான்றோர்களுக்கும், உபயதாரர்களுக்கும் பாராட்டும் பரிசளிப்பும்,
மாணவ மாணவியருக்கு கல்வி உதவி போன்ற அற்புதமான ஜீவகாருண்ய நிகழ்வுகளும் மிக இனிதாக
நடந்தறியது. தீபம் அறக்கட்டளை நிர்வாகிகள்
திரு. பாலகிருஷ்ணன் ஐயா
திரு. சதுரகிரியார் ஐயா
திரு. திலீப் ஐயா உள்ளிட்ட தீபம் நிர்வாக குழுவினரின் அறப்பணி சிறந்தோங்கிடவும்
சன்மார்க்க உலகம் வாழ்த்தி மகிழ்கின்றது.
திருவருட்பா இசை சொற்பொழிவு வழங்கிய
தயவுதிரு. ஜீவ.சீனுவாசன் ஐயா அவர்களை தீபம் அறக்கட்டளையும் சன்மார்க்க அன்பர்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
👏👏👏💐💐💐💐💐
செய்தி வடிவம்
சன்மார்க்க சேவை மையம்.