பிரபத்து ரஞ்சன் சர்க்கார் அமெரிக்காவில் உள்ளது போன்ற சுதந்திரம் (liberty) இருக்கக் கூடாது என்கிறார். மேலும் குற்ற செயலில் ஈடுபடுவோர் பிள்ளை பெற அனுமதிக்கலாகாது என்கிறார். இதை ஏன் சொல்கிறார் என்றால் அவ்வப்போது சிறைக்கு செல்லும் பெற்றோரால் பிள்ளையை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல பிள்ளைகளின் மனநிலையில் குற்றம் தவறல்ல என்ற எண்ணம் நிலைத்து விடும் என்பதால் தான். இதன் அடிப்படையில்தான் நான் எனது கருத்தை முன்வைத்தேன்.
எமது
வீட்ட ருகே
இருந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியின் 17வயது மகள் ஆட்டோ ஓட்டும் பறையரோடு உடன்போக்கானாள் ஓராண்டுக்கு பின் ஒரு குழந்தை பிறந்தது அதன் பின் அவள் சில மாதங்களில் இறந்து போனாள். காரணம் பட்டினி சாவு. கணவன் சோறு போடவில்லை.
எமது வீட்டருகே இன்னொரு ஐயங்கார் பெண் வசுமதி வயது 26. அக்காள், அண்ணன்கள் மாப்பிளை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேலைபார்க்கும் மிடத்தில் மாதவ ராவு என்பவனோடு ஓடிப்போனாள் தனக்கு வீட்டார் சேர்த்து வைத்திருந்த 26 சவரன் நகையோடு. 2 ஆண்டுகள் கழித்து பட்டினி சாவடைந்தாள்.
எனது ஒன்றுவிட்ட மாமன் மகள் வீட்டார் மாப்பிளை பார்க்கும் வ வேளையில் ஒரு நாயுடு பையனோடு ஓடிப்போனாள். அவனுக்கு ஓட்டலில் டேபிள் துடைக்கும் வேலை தான். குழந்தை பிறந்தது வறுமை தாண்டவம் ஆடியது. அவளது மைத்துனன் தம்பி குடும்பத்தை சோறு இட்டு கைப்பற்றினான். அப்படி உதவி வராதிருந்தால் இவளும் செத்திருப்பாள்.
எமது வீட்டருகே ஒரு சைவ உணவு கோமுட்டி செட்டிப் பெண் நாயுடு பையனோடு ஓடிப்போனாள் 3 மாதம் வாழ்க்கை ஓடியது. பையனுக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் அவன் உடனடியாக வளைகுடாநாட்டில் வேலை தேடி சென்றுவிட்டான். விடுமுறை காலத்தில் மட்டும் தமிழகம் வருவான் மனைவியை பார்க்க. இப்படி காதல் திருமணம் செய்பவர் அத்தனைபேரும் வருமானம் அற்ற வெறும் பயல்கள். அதனால் குறுகிய காலத்தில் இப்பெண்கள் மாண்டுபோயினர்.
இப்படித்தான் ஒரு ஐயங்கார் பையன் வளர்த்தியான பார்த்த மாத்திரத்தில் சொக்கிப்போகும் அழகுள்ள மார்வாடிப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். 6 மாதம் வாடகை கொடுக்க முடிந்தது அதன் பின் மாமனாரிடம் கெஞ்சி அவரோடு அவர் வீட்டிலேயே வீட்டு மாப்பிள்ளையாக தங்கிக் கொண்டான். அவன் ஒழுக்கமானவன் என்பதால் மாமனார் அவனை ஆதரித்தார். அவர் ஆதரிக்காமல் போயிருந்தால் வாழ்க்கை தோல்வி அடைந்திருக்கும்.
பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களே கூட வருமானம் இல்லாமல் தோல்வி அடைகின்றன. எமது எதிர்வீட்டு தெலுங்கு பிராமணர் தன் மக்களுக்கு மணம் செய்து வைத்தார், ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அவன் ஒரு நல்ல வேலையில் இருப்பதாக பொய் சொல்லி மணம் புரிந்தனர். அவன் 10 வது கூட தேறவில்லை. பீடா கடை வைத்து வருமானம் ஈட்டிவந்தான். விளைவு வறுமை.
எனது சித்தியை மாப்பிள்ளை வீட்டார் பொய் சொல்லி தமது வீட்டு பிள்ளைக்கு மணம் முடித்தனர். ஆனால் அவர் ஒரு cutpiece கடையில் தான் வேலை பார்த்தர். திடீர் என்று வேலை போய்விட்டது. வேறு வேலை தேடிக்கொள்ளாமல் வீட்டிலேயே தங்கி பொழுது போக்கினார். கருவுற்றிருந்த எனது சித்தி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னை கொளுத்திக்கொண்டு மாண்டு போனாள். அவளது துன்பத்திற்கு எனது தாத்தாவான அவளது தந்தை தான் முக்கிய காரணம். ஏனென்றால் அவரது 52 வது வயதில் என் சித்தி பிறந்தாள். 55 ஆம் வயதில் என் தாத்தா தனது ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இனி வருமானம் இல்லை எதெதோ இடத்தில ஆசிரியர் வேலையில் அமர்ந்தார். ஆனாலும் அவளது 16 ம் வயதில் இறந்து போனார். அவளை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பு அவளது அக்காளான எனது பெரியம்மா தலையிலும் எனது மாமா தலையிலும் விழுந்தது. இதனால் என் பெரியம்மா திருமணம் தள்ளிப்போனது. பின்பு எப்படியாவது மணம் முடித்தால் போதும் என்று எதையும் ஆராயாமல் cutpiece கடை மாப்பிளைக்கு மணம் முடித்தனர். விளைவு சித்தி தற்கொலை.
மேற்கண்ட காரணங்களால் தான் நான் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான வருவாய் உள்ளவர் மட்டுமே மணம் முடிக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்றேன். தனக்கே சோறு இல்லாதவன் தன் பெண்டு பிள்ளைகளுக்கு ஒருபோதும் சோறு இட முடியாது. அதனால் தான் ஒவ்வொரு பிள்ளை பெறுவதற்கு முன் அரசின் அனுமதி பெற்று தான் பிள்ளை பெற வேண்டும் என்று சட்டம் வேண்டும் என்றேன். இதனால் காதல் திருமணம் ஒழியும், குழந்தை திருமணம் ஒழியும், வயோதிகத்தில் பிள்ளை பெறுவதும் ஒழியும். இன்றைய சமூக சீர்கேட்டிற்கு மக்கள் சரியாக திட்டமிடாமையே காரணம். எனவே அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறல்ல. கண்மூடித்தனமான சுதந்திரம் துன்பத்தில் தான் முடியும்.
இப்படி தனது அறிவற்ற செயலுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு மனிதன் அரசையும் கடவுளையும் குற்றம் கூறுகிறான்.