"கல் தோன்றி மண் தோன்றா" புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம்

862 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 16, 2023, 3:23:39 AM7/16/23
to தமிழ் மன்றம்
"கல் தோன்றி மண் தோன்றா" புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் 


பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

- புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை


கல் என்ற சொல்லுக்கு மலை என்ற பொருளும் உண்டு. மண் என்ற சொல்லுக்கு வயல் என்ற பொருளும் உண்டு. இதற்கு திருக்குறளிலும் மற்ற சங்கத் தமிழ் பாடல்களிலும் ஆதாரங்களைக் காணலாம்.


என் விளக்கம்: கல் என்றால் மலை என்றும் மண் என்றால் மருத வயல் என்றும் பொருத்தமில்லா பொருளை உரைக்கின்றனர். 

தெளிந்த கடல் நீர் போர்த்திய உலகில் பொய் அகல நாளுக்கு நாள் புகழ் ஈட்டுவதில் வியப்பு ஒன்றுமில்லை.  (கை அகல) நீண்டு அகலும்படி ஒளி தோன்றி இருள் கவியாத இடைப்பட்ட பகல் பொழுதில் போர் செய்ய வாளேந்தி முன் சென்ற  மூத்த குடி புகழ் ஈட்டியது என்பதே இதன் பொருள். இதாவது கல் என்பதற்கு வெண்மையான ஒளி என்று தான் பொருள். மலை என்பதோ குறிஞ்சி என்பதோ இதற்கு பொருள் அல்ல. அதே போல் மல் > மள் > மண் என்பது கருமையை குறிக்கும் இரவு ஆகும். அக்காலத்தே   போர் பகலில் செய்யப்படுமே அன்றி இரவில் அல்ல. எனவே போர் குறித்த செய்தியில் குறிஞ்சி மலைக்கும் மருத வயலுக்கு இங்கே எந்த தொடர்பும் இல்லை என்பதை சிந்திக்க மறந்து விட்டார்கள். 

Seshadri Sridharan

unread,
Jul 16, 2023, 5:34:08 AM7/16/23
to தமிழ் மன்றம்



முதன்முதலாக இந்த விளக்கம் தந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று படித்த நினைவு.

கனடா தமிழர் பேரா செல்வா கல் என்பதற்கு கருமைப் பொருள் தான் உண்டு வெண்மைப் பொருள் இல்லை என்று தருக்கம் செய்தார். அப்போது நான் கல் வேருக்கு வெண்மைப் பொருள் உண்டு என்று சில சொற்களை தேடி இட்டேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த விடையும் வரவில்லை. இப்போது வெள்ளொளி என்ற பொருளில் இப்பாடல் வரியில் சொல்லாட்சி உள்ளது சிறப்பு.

மூத்த குடி என்பது போரில் தேர்ந்த தலைமுறை தலைமுறையாக போர் செய்கின்ற போர்க்குடியை பட்டடைகுடியை குறிக்கும். 

வல் / வய் > வள் > வளவள என்றால் இரைசலிட்டு பேசுவது. வயங்கொலி நீர் என்றால் ஓயாமல் இரைச்சலிடும் கடல் என்று தான் பொருள். ஆனால் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தெளிந்த என்று தவறாக சுட்டியுள்ளனர்.



Sethuraman Muthusamandi

unread,
Jul 16, 2023, 7:58:43 AM7/16/23
to tamil...@googlegroups.com
வணக்கம். உலகம் வெடிப்பால்\மலர்வால் உண்டானது.நெருப்புக்கோளமாக இருந்த து. மழைபெய்தால் கீழேவிழாது. வெப்பம் மழையைநீராவியாக்கிமேலே அனுப்பும். பலகாலம்போராட்டம்  தொடர்ந்த து.பின் மேற்பரப்பு  மழைக்கு இடம் அளித்த து.உலகு குளிர்ந்தபோதுஉலகெல்லாம் கல்பரப்பாக இருந்த து.பின்நீரோட்டத்தால் பாறைகள் சிதறின.மண் உண்டானது. கல்லுக்குப்பின்தான் மண்.அறிவியல்விளக்கம். தமிழர் மூத்தகுடி. மண்தோன்றும் முன்பே தோன்றிய குடி  என்பது உயர்வு நவிற்சி. மூத்த குடி பற்றிய செய்தி. மூத்தகுடியில் தோன்றியவர் வாள்ஏந்து குடியாகலாம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7AkvgbsNb6GEc_Hd9uncRjSEOuucT-sbejbq4MXbaftA%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Jul 16, 2023, 8:47:21 AM7/16/23
to தமிழ் மன்றம்


குறிஞ்சித் திணையில் மக்கள் எலும்பைக் கூர்படுத்திய அம்பையும் ஈட்டியையும் பயன்படுத்தினர். ஆயுதம் செய்யத் தேவையான இரும்பு, செம்பு பயன்பாடு மருத நாகரிகத்தில் தான் தோன்றியது. வாள் செய்ய இரும்போ செம்போ தேவை. 

மேலும் இப்பாடல் இடம்பெறும் கரந்தைத் துறை என்பது பகைவர் கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்டு வர செய்யப்படும் போராகும். இது மருத நாகரிக வளர்ச்சி பெற்ற காலம் ஆகும். இவற்றை கவனத்தில் கொள்ளாமல் "கல்" என்றால் குறிஞ்சி என்பதை ஒரு பொறியாகக் கொண்டு பிழையான கருத்தை முன் வைத்தார் அப்துல் ரகுமான். இதை பிடித்துக் கொண்ட சில பேராசிரியர்கள் என் இந்த கருத்தை ஏற்கவியலாது என்கின்றனர். இது இவரும் சிந்தனை இல்லாதவர் என்பதையே காட்டுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages