நேற்று இன்று நாளை

115 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Apr 30, 2020, 10:15:43 AM4/30/20
to தமிழ் மன்றம்
நேற்று - இன்று - நாளை  

நேற்று இன்று நாளை என்பதே எளிதாக உள்ளது. இருந்தும் 4 - ம் வேற்றுமையான கு என்பதை சேர்த்து நேற்றைக்கு > நேத்திக்கு, இன்றைக்கு > இன்னிக்கி, நாளைக்கு > நாளைக்கி என்பது சரியா? அல்லது இரண்டிற்கும் வேறுபாடு ஏதேனும் உண்டா? அல்லது பேச்சின் ஊடே  அவ்வப்போது வந்து, வந்து என்று பொருளில்லாமல் சேர்க்கப்படும் குப்பை போன்றதா இந்த கு. தமிழறிஞர் தெளிவித்தால் நன்று. 

தமிழ் இந்தியப் பொது மொழியாக வேண்டும், உலகப் பொது மொழியாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதில் பாழ்பட்ட கட்டடத்தில் ஒட்டியுள்ள ஒட்டடை போல் தொங்கிக்கொண்டுள்ள இந்த இலக்கணப் பிழைகள் தொலைக்கப்பட வேண்டாமா? 

rajam

unread,
Apr 30, 2020, 9:23:03 PM4/30/20
to tamil...@googlegroups.com, Seshadri Sridharan
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 9-ஆம் திருமொழி, பாசுரம் 3212, வரி 1:

என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள் 

பிற பின்னர்,
ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5KSST8%2Bm45P%2BW-AGKQ7PueDW40jsMEsibguZf0PTjmyQ%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
May 2, 2020, 4:14:27 AM5/2/20
to தமிழ் மன்றம்
On Fri, May 1, 2020 at 6:53 AM rajam <ra...@earthlink.net> wrote:
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 9-ஆம் திருமொழி, பாசுரம் 3212, வரி 1:

என்னாவ தெத்தெனை நாளைக்குப் போதும் புலவீர்காள் 

பிற பின்னர்,
ராஜம்

எனக்கு தேவை இலக்கிய மேற்கோள் அல்ல. சரி அல்லது தவறு என்றால் ஏன் என்று காரணம் காட்டவேண்டும். 

C.R. Selvakumar

unread,
May 2, 2020, 8:56:07 AM5/2/20
to தமிழ் மன்றம்
நான் தமிழறிஞன் அல்லேன். ஆயினும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

முதலில் நீங்கள் கூறிய ஒரு கருத்தைப்பற்றிக் கூறுகின்றேன்.
// தமிழ் இந்தியப் பொது மொழியாக வேண்டும், உலகப் பொது மொழியாக வேண்டும்
என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதில் பாழ்பட்ட கட்டடத்தில் ஒட்டியுள்ள
ஒட்டடை போல் தொங்கிக்கொண்டுள்ள இந்த இலக்கணப் பிழைகள்
தொலைக்கப்பட வேண்டாமா?   //

யார் ஆசைப்படுகின்றார்கள் அப்படியெல்லாம்?
முதலில் தமிழ் தமிழர்களின் தாய்மொழியாக வாழ்மொழியாக
அறிவு, கலை, வணிக, இசை,வழிபாட்டு, ஆட்சிமொழியாக
செழித்து இருந்தாலே பேரின்பம். இந்தியாவின் அலுவல் மொழிகளில் 
ஒன்றாக ஏற்கனவே உள்ளது. பொதுமொழியாக ஆக முடியாது.
ஆகவேண்டிய தேவையும் இல்லை. உலகமொழியாகவும் ஆகவும்
முடியாது ஆகவேண்டிய தேவையும் இல்லை. ஆங்கிலம்,
எசுப்பானியம் போன்றவை இரண்டாம் மொழியாக உள்ளன.
அதுபோல செவ்விலக்கிய அறிவுலகத்தில் கிரேக்கம் இலத்தீன்
போன்ற மொழிகள் போல் தமிழும் ஒன்றாக இருக்கக்கூடிய ஒன்றே.
அரபி, பாரசீகம், சமற்கிருதம் போல் தமிழும் இருக்கலாம்.

ஏன் நான்காம் வேற்றுமை உருபு கு என்பது வருகின்றது என்பது
கேள்வி.  (" அல்லது பேச்சின் ஊடே  அவ்வப்போது வந்து,
வந்து என்று பொருளில்லாமல் சேர்க்கப்படும் குப்பை போன்றதா இந்த கு. ")
வந்து, வந்து  என்பது ஓர் இடைச்சொல் போன்றது.
பேச்சைத் தொடரும்பொழுது இடைவெளியை நிரப்ப
வருவது. இது 'குப்பை' அன்று. மிகப்பல மொழிகளிலே
இடையே நிரப்ப அம், உம்,  அ, எர் என்று ஏதேனும் ஓர்
ஒலியை இடுகின்றார்கள். அது போன்றதே இதுவும்.

மொழியில் நுட்பனான மரபுகள் இருக்கும் அவற்றைப்
பழிப்பது மொழியின் மீது ஏதோ ஒவ்வாமை இருப்பதைத்தான்
காட்டும். எனக்குத் தலை வலிக்கின்றது என்பது ஒரு மரபு
சொற்றொடர். என் தலை நோவுகின்றது என்றாலும் சரியான
பொருள் தருவதில்லை. என்னுடைய தலையில் நோவு இருக்கின்றது
என்றாலும் அதனை உணரும் நான் என்பது இருக்கவேண்டியதாக
உணரும் கருத்தும் உண்டு. எனவே எனக்குத் தலை வலிக்கின்றது
என்பது என் தலை வலியை யான் உணர்கின்றேன் அல்லது
தலையில் ஏற்படும் வலி/நோவு எனக்கு உணரும்படி உள்ளது
என்பது போன்ற பொருள் தருகின்றதாகக் கொள்ளலாம்.
இவற்றை விளக்குவது கடினம். அதுபோல இன்றைக்கு, நாளைக்கு
நேற்றைக்கு என்பன பொருளுடையனவே. இப்போதைக்கு என்பது
இப்பொழுதுக்கான என்று பொருள். அதுபோலவே நாளைக்கு என்பது
நாளைக்கான ஒரு நிகழ்வு பற்றியது. நாளைக்கு வருகின்றேன் என்றால்
என் வருகை நாளைக்கு என்பது போன்ற பொருள். இதுவும்
மரபு சார்ந்த சொற்றொடரே, நுட்பப் பொருள் வேறுபாடும்
வழக்காறும் காட்டும். உனக்கு அந்தப் பெட்டியைத் தந்தேன்
என்பதில் உள்ள நான்காம் வேற்றுமைப் பொருளில் வரும்
பொருளைப் போன்றதே நாளைக்கு என்பதும். இது அக்காலப்பொருளுக்கு
என்று சுட்டுவது என்று கொள்ளலாம்.

இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை...

அன்புடன்
செல்வா





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5KSST8%2Bm45P%2BW-AGKQ7PueDW40jsMEsibguZf0PTjmyQ%40mail.gmail.com.


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Seshadri Sridharan

unread,
May 2, 2020, 10:22:24 AM5/2/20
to தமிழ் மன்றம்
உமது கருத்து நன்று உள்ளது  

rajam

unread,
May 2, 2020, 3:59:28 PM5/2/20
to tamilmantram, Seshadri Sridharan
வணக்கம், சேசாத்திரி.

///எனக்கு தேவை இலக்கிய மேற்கோள் அல்ல. சரி அல்லது தவறு என்றால் ஏன் என்று காரணம் காட்டவேண்டும்.///

ஓ! அப்படியா?! இதோ உங்கள் கேள்விக்கு விடையும், என் கருத்துமாக …


சரியே. 
(கழக வெளியீடு), தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமை மயங்கியல், நூற்பா #27, வரி #6 பார்க்கவும். 
‘காலத்தின் அறி கிளவியும் …’ 

என் முதற்கருத்து:
இன்னும் விளக்கமாக, மொழியியல் நோக்கில் எழுத இயலும். ஆனால் உங்கள் சொல்லாட்சிகளும் மனப்போக்கும் என் ஆர்வத்தைக் குறைத்துவிட்டன.
குப்பை, ஒட்டடை, முட்டாள், தொலைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் தன்னுணர்வை வெளிப்படுத்தி subjective-ஆக எழுதினால் உங்கள் மையக்கருத்து நீர்த்துப் போய்விடுகிறது. 
[தற்குறிப்பு: இலக்குவனாரின் மாணவியாய் இருந்த காலத்தில் ஈ.வே.ராவின் ‘விசிறியாக’ மாறும் நிலைமைக்குப் போனேன், ஆனால் அவருடைய வன்முறை, வன்சொற்கள், இனக்காழ்ப்பு, பரப்புரை போன்றவை என்னை விலக்கிவிட்டன. அதுவும் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்வேன்.] 

என் அடுத்த கருத்து:
இலக்கியமே, அதுவும் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தமே, பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குப்பை என்றோ ஒட்டடை என்றோ ஒத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

என் மூன்றாம் கருத்து:
இயக்கம், போராட்டம், அரசியல், சாதி போன்றவையெல்லாம் மொழியில் குறுக்கிடுவது என் ஆர்வத்தைச் சிதைக்கிறது. பொதுவாகவே இந்த மாதிரி வன்முறை வழக்கு எனக்கும் சிலருக்கும் இடையே உள்ள நட்பில் தோய்வை ஏற்படுத்தியிருக்கிறது.

நிற்க.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துத்தான்  எனக்குப் பழக்கம், என் மாணவர்களாக இல்லாவிட்டாலும் தெரிந்துகொள்ளும் ஆர்வலருக்கு விளக்கியும் பழக்கம். ஆனால் … மேற்கொண்டு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை … 

என் வேண்டுகோள்;
1. முதலில் உங்கள் இயக்கம்/குறிக்கோள்/நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக விளக்கவும்.
2. ஒலியிலிருந்து தொடங்கி, எழுத்து, சொல் எனத் தொடர்ந்து, பிறகு ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வினாக்கள் உங்களுக்கு இருக்கின்றன என்று தெரிவிக்கவும்.
3. எந்தக் காரணத்தைக்கொண்டும் பிறரையோ பிற வழக்கையோ குறைத்துப் பேசவேண்டாம்/எழுதவேண்டாம்.
4. பிறர் சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லாமல், நீங்களே காலவாரியாக ஒவ்வொரு காலத்திலும் இலக்கண இலக்கிய பேச்சு வழக்காறுகள் எப்படியெப்படி வழங்கிவந்திருக்கின்றன என்று தெரிந்துகொண்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

 
பிற பின்னர், தேவையானால்,
ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
May 7, 2020, 4:36:56 AM5/7/20
to தமிழ் மன்றம்
On Sat, May 2, 2020 at 6:26 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
மொழியில் நுட்பனான மரபுகள் இருக்கும் அவற்றைப்
பழிப்பது மொழியின் மீது ஏதோ ஒவ்வாமை இருப்பதைத்தான்
காட்டும். 

என் மந்தமான சிந்தனை இப்போது தான் இந்த எண்ணம் தோன்றியது. எல்லாம் மரபு என்றால் அதனை யாரும் தீண்டக் கூடாது என்றால் பிறகு ஒரு மொழியில் குற்றம் குறைகளை களைவது எப்போது?

This day என்பதை இன்றைய தினம் என்று மொழிபெயர்த்து விட்டனர் அரசியலர். அதை அப்படியே நீட்டித்து நேற்றயை தினம், நாளைய தினம் என்றும் ஆக்கிவிட்டனர். இன்று, நேற்று, நாளை என்பதே போதும் என்ற மனம் இல்லாததால் இந்த சுமை ஏற்றப்பட்டது. தினம் ஒரு அயல் சொல் என்பது மட்டுமல்ல அது ஒரு தேவையற்ற சுமை என்பதை நம்மில் பலரும் உணரலில்லை. இந்த சுமையை திராவிட அரசியல் ஏற்றவிட்டதாகத் தெரிகின்றது. இப்போது கூறும் இது தேவையா? வேண்டாமா என்று.

இது எப்படி என்றால் பேச்சுவார்த்தை என்பதை போன்றது. பேச்சு என்பதே talk, negotiation என்றாகும் போது வார்த்தை என்ற கூடுதல் சுமை ஏன்? இப்போது புரிகின்றதா நேற்று, இன்று, நாளை என்பதில் தினம் என்ற சுமையை.

Seshadri Sridharan

unread,
May 8, 2020, 8:10:30 AM5/8/20
to தமிழ் மன்றம்
 This day என்ற ஆங்கில சொல்லை "இதேநாளில்" என்று குறிக்காமல் "இன்றைய தினம்"  என்று குறித்ததால் சரிப்பட்டுவராதா என்பவர் நேற்றைய தினம், நாளைய தினம் என்பதை ஆங்கிலத்தில் எப்படி குறித்தனர் என்று சொல்ல வேண்டும்.  நேற்று, நாளை என்ற scooter போதும் எனும் போது கூடவே "தினம்" என்ற steppne எதற்கு?    அது சுமை தானே?

திற, மூடு என்பதை open பண்ணு, close பண்ணு என்ற இரட்டை சொல்லால் சுட்டுவது சுமை தானே. தமிழன் இப்படி இரட்டை சொல்லை சேர்த்து தான் தமிழை அழிக்கிறான்.   அப்படித்தான் அர்-ஆர்  உடன் "கள்" சேர்த்து இரட்டை பன்மையாக்கினான். 

ஒன்று தெரியுமா? தெலுங்கர், கன்னடர், மராட்டியர், தமிழர் என்பது தான் இலக்கண விதி. இதை தெலுங்கர், கன்னடர், மராட்டியர், தமிழர் என்றும் எழுதலாம் தப்பில்லை ஆனால் தெலுங்குகாரர், கன்னடக்காரர், மராட்டிக்காரர், தமிழ்க்காரர் என்று எழுதுவதே சரி என்கிறான் இப்போது. எதற்கு இந்த "காரன்" என்ற தேவையற்ற, சுமையான steppne.   

பேச்சு வழக்கு தமிழ்தான் இலக்கிய வழக்குத்  தமிழின் சீர்மையை குலைகின்றது.

rajam

unread,
May 9, 2020, 10:56:25 PM5/9/20
to tamil...@googlegroups.com, வல்லமை, Seshadri Sridharan
வணக்கம், சேசாத்திரி.

உம் ஆய்வு என்னை வியக்கவைக்கிறது!!!

1. ஆங்கில மொழியின் கட்டமைப்பும் தமிழின் கட்டமைப்பும் வேறுபட்டவை. ஓர் ஆங்கிலச் சொல்லை யாரோ எப்படியோ மொழிபெயர்த்ததை வைத்துக்கொண்டு தமிழின் தன்மையைத் ‘துப்புரவு’ செய்ய இறங்கியிருக்கிறீர்கள்-போல!!!

1a. ஆங்கிலம் syntactic language, தமிழ் agglutinate language. இதைப் புரிந்துகொண்டால் மொழிபெயர்ப்புச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளலாம். 


2. ///திற, மூடு என்பதை open பண்ணு, close பண்ணு என்ற இரட்டை சொல்லால் சுட்டுவது சுமை தானே. தமிழன் இப்படி இரட்டை சொல்லை சேர்த்து தான் தமிழை அழிக்கிறான்.   ///

இல்லை, சுமையில்லை. ‘பண்ணு' என்ற சொல்லைப் பயன்படுத்திய தமிழன் தமிழை அழித்திருந்தால் இன்று நீரும் யானும் தமிழில் உரையாடிக்கொண்டிருக்க மாட்டோம்! ஒரு மொழியை யாராலும் அழிக்க முடியாது

2b. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு … இவை போன்ற பழைய இலக்கியங்களில் ‘பண்ணி’  என்ற சொல்லாட்சியைக் கூர்ந்து நோக்கி ஒரு முடிவுக்கு வரவும்.


3. ///ஒன்று தெரியுமா? தெலுங்கர், கன்னடர், மராட்டியர், தமிழர் என்பது தான் இலக்கண விதி. இதை தெலுங்கர், கன்னடர், மராட்டியர், தமிழர் என்றும் எழுதலாம் தப்பில்லை ஆனால் தெலுங்குகாரர், கன்னடக்காரர், மராட்டிக்காரர், தமிழ்க்காரர் என்று எழுதுவதே சரி என்கிறான் இப்போது. எதற்கு இந்த "காரன்" என்ற தேவையற்ற, சுமையான steppne.   /// 

கரம், காரம், கான் ஆகியவை சாரியை (தொல்காப்பியம் பார்க்க). ஒரு பெயர்ச்சொல்லை அடுத்துவரும் பின்னொட்டு என்றும் சொல்லலாம். இதை மிக ஆற்றல் வாய்ந்த 'சொல்லியக்கி’யாகக் கருதுகிறேன்.

ஆங்காரம், விகாரம், கஞ்சகாரரும், துன்னகாரரும் … போன்ற சொல்லாட்சிகளைத் தொகை நூல்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களிலும் பார்க்கவும்.

உம் ஆய்வுக்கு என் வாழ்த்து!
ராஜம் 
 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages