ஆத்மா எங்கே ?

8 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 6:54:24 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்துக் களைப்பு !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள்களின் 
விளிம்பித் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
மனிதச் சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது போதி மரம்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
ஓர் பெரு வெடிப்பு 
நேர்ந்து 
கீழ் வானம் சிவந்து
ஆத்மா
உதயமாகும்
ஞான ஒளியாய் !


S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 8:56:54 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan
சில மாற்றம்

On Wed, Apr 1, 2020 at 6:53 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்த மழைத் துளிகள்
   வெள்ளமாய்
   ஓட வில்லை !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள் பாதைகளின் 
விளிம்பைத் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
   இறைக்கை இல்லாத, 
சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது சிந்தனை யானது
   போதி மர வெய்யிலைத்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
   மூளைக்குள் 

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 10:02:45 AM4/2/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan

மனித ஆத்மா

சி. ஜெயபாரதன், கனடா


கூடு விட்டு கூடு பாயும்
ஆத்மா ! இயங்கும்
வீடு விட்டு
வேறு வீடு தாவும்
மாய ஆத்மா !
உன் கை விரல்களை
உனக்காக 
எழுத வைக்கும்
ஆத்மாவை 
இல்லை, இல்லை என்று 
சொல்லி 
உன்னை நீயே அனுதினம்
ஏமாற்ற லாமா ?


மாட்டு வண்டி கிடைத்தால்
மனித ஆத்மா
பாட்டுப் பாடி ஓட்டுது !
சக்கரம் இரண்டுடன் சாயும்
சைக்கிள் வண்டியை 
தக்க முறையில் 
தராசு நிறுப்பது போல்
பளு ஊஞ்சல்
ஆடித்
தரை மீது ஓட்டுது !
எரிசக்தியில்   
நான்கு சக்கரத்தில்
நகரும் காரை
துரிதமாய் ஓட்டுது 
அரிய ஆத்மா !
பறவை போல்
ஆகாய விமானத்தை 
வான்வெளியில்,
வாயு மீதேறிப் பறக்க
வைத்து
வந்து இறங்குது 
கம்பீரமாய் !
கப்பலைக்
கடல் அலைகள் மீது
புயலை 
எதிர்த்து ஓட்டுது !
இப்போது ராக்கெட்டை 
இயக்கி
நிலவுக்குப் போய்
இறங்கி
முதல் தடமிட்டுப் புகழுடன்
பூமிக்கு மீண்டது 
மனித ஆத்மா !


எந்த வாகனம் உள்ளதோ
அந்த வாகனம்
இயக்கிச்
சொந்தம் ஆக்குது 
ஆத்மா !
உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !
உயிர் என்னும் 
ஓர் மாய உந்து சக்தி
ஆத்மா 
இயக்கா விட்டால் 
உடம்பு வெறும்
முப்பக்க
எலும்புக் கூடு !

++++++++++++++



வேந்தன் அரசு

unread,
Apr 2, 2020, 11:12:07 PM4/2/20
to தமிழ் மன்றம், mintamil, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
<உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !)

பேய்களுக்கு உடம்பு இல்லையே

வியா., 2 ஏப்., 2020, பிற்பகல் 7:32 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 11:46:54 PM4/2/20
to vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZQ8%2BPKMnakB2Ed%2Bed%2BYB6cpAkgzWPkAL1_K%2B8UJrMsA%40mail.gmail.com.

rajam

unread,
Apr 3, 2020, 1:02:04 AM4/3/20
to S. Jayabarathan, vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
ஹ்ம்ம்ம் … 

பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?
Reply all
Reply to author
Forward
0 new messages