அன்புள்ள தேமொழி அவர்களே,
அருமையாக கட்டுரை. மிக்க நன்றி.
உங்கள் கட்டுரையில் “மற்றும்” என்னும் சொல்லைப்
பல இடங்களில் இருந்து நீக்கியும், கிரந்த எழுத்துகளைக் களைந்தும் (இரண்டோர் இடங்களில
விட்டிருக்கின்றேன்). ஒருமை-பன்மை, ஓர்-ஒரு ஆகிய திருத்தங்களையும் செய்து
கீழே இட்டுள்ளேன். படித்துப்பாருங்கள் ஏதும் பெரிதாக மாற்றம் இருப்பதாக பெரும்பாலானோர்
உணரமாட்டார்கள். எளிய ஒழுக்கமான நடை உரம் சேர்க்கும். என் “திருத்தங்கள்” மிக மிகச் சிறியவை.
இவற்றை நீங்களோ பிறரோ ஏற்கவேண்டுமென்பதற்காகச் செய்யவில்லை. இப்படிச் செய்தால்
பெரிதாக ஏதும் மாற்றமோ, கருத்தோட்டத்தில் தடையோ இருக்காது என்று காட்டவே செய்தேன்.
கடைசியாக க.அ. நீலகண்ட சாத்திரி என்றெழுதுவதே நல்லது. முதலிலோ முதலில் வரும் ஒன்றிரண்டு
இடங்களிலோ கே.ஏ. நீலகண்ட சாத்திரி என்று பிறைக்குறிகளுக்குள் எழுதிக்காட்டிவிட்டு
மற்ற இடங்களில் க. அ. நீலகண்ட சாத்திரி என்றெழுதுவ்து நல்ல முறை.
அன்புடன்
செல்வா
கே. ஏ. நீலகண்ட சாத்திரி என்பது ‘கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி’ (K. A. Nilakanta Sastri) என்பதன் சுருக்கம். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் எளிய நியோகி பிராமணர் குலத்தில் ஆகத்து 12, 1892 அன்று பிறந்துவரலாற்றாளர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர் என்று பலவகையில் வரலாற்றுத்துறைக்குப் பங்காற்றி, சூன் 15, 1975 அன்று தமது 82 ஆம் வயதில் மறைந்தார். இவர் பள்ளிப் படிப்பையும், அதைத் தொடர்ந்து இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் முடித்தார். பின்னர் அவரது அண்ணன் நல்கிய பொருளாதார உதவியுடனும், மாணவர் உதவித் தொகை வழங்கிய ஆதரவிலும் மேற்படிப்பை சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் முடித்து சென்னை மாநில அளவில் முதன்மை மாணவராகத் தேர்வு பெற்று முதுநிலை படிப்பை முடித்தார்.
இவர் தம் ஆசிரியப் பணியை 1913 இல் துவங்கி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராக 5 ஆண்டுகள், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 2 ஆண்டுகள் எனப் பணிபுரிந்தார். சீனிவாச சாத்திரியின் பரிந்துரையினை ஏற்று பண்டிதர் மதன் மோகன் மாளவியா அவரை வாரணாசி இந்து பல்கலைக்கழகப் பேராசிரியராக ஏற்றக் கொண்டார் (சிரீராம், 2009). இரு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பொழுது புதிதாகத் துவக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைக்கல்லூரியின் (சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரி) முதல்வராகப் பொறுப்பேற்று மாணவர்களின் எண்ணிக்கை 70 இல் இருந்து 700 வரை வளர்ச்சியுறும் வகையில் எட்டு ஆண்டுகள் கலைக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பங்களித்தார். பிறகு 1929ல் திருச்சி நேசனல் கல்லூரியில் ஓராண்டு வரலாற்றுப் பேராசிரியர் பணி, தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் பொறுப்பேற்று 1947 வரையிலும், அதன் பிறகு தொடர்ந்து மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் பேராசிரியராக 1956ஆம் ஆண்டுவரை என இவரது பேராசிரியர் பணி தொடர்ந்தது. மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கெளரவ இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு வரை இவர் யுனெசுக்கோவின் தென்னிந்தியப் பாரம்பரிய கலாச்சார நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். இந்தியப் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதை 1957ல் இவருக்கு அளித்து இந்திய அரசு இவருக்குச் சிறப்பு செய்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக 1959 ல் தென்னிந்திய வரலாறு பற்றிப் பல சொற்பொழிவுகள் வழங்கினார்.
இவரது வரலாற்று நூல்களும் ஆய்வுகளும் வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. அவரது நூல்கள் வரலாற்றைச் சான்றுகள் அடிப்படையில் வழங்குவது அவற்றின் சிறப்பு என்று வரலாற்றுத் துறை அறிஞர்கள் பாராட்டுகள் வழங்கினர். அவ்வாறே இவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் உண்டு. இவரது இந்து சமயச் சார்பும், சமற்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு போன்ற கருத்தாக்கமும் இவரது எழுத்தில் வெளிப்படுவதாக விமர்சனங்களும் உள்ளன (சங்கர் கோயல் – 2005) .
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கே. ஏ. நீலகண்ட சாத்திரியை 20 ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் என்று பாராட்டுவார். கே. ஏ. நீலகண்ட சாத்திரி பற்றி அவர் குறிப்பிடும் மற்றொரு செய்தியும் உண்டு. ‘கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்’ என்ற கட்டுரையை வங்காள வரலாற்றாளர் சாதுநாத்து சருக்கார் (Jadunath Sarkar) 1915ல் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியிட்டார். அக்கட்டுரையில், வரலாறு குறித்த படைப்புகள் வட்டார மொழிகளில் குறைவாக உள்ளன. அக்குறை நீக்க வட்டார மொழிகளில் வரலாற்று நூல்கள் எழுதி வெளியிடப்பட வேண்டும், வட்டார மொழியில் வரலாற்றுப் பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அப்பொழுது நெல்லை கல்லூரியில் ஆசிரியப் பணியிலிருந்த கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தமிழைவிட ஆங்கிலம்தான் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வசதியாக இருப்பதாகவும், வட்டார மொழிகள் அந்த வளமையான மொழிகளாக இல்லாமையே அதற்குக் காரணம் என்று சாதுநாத்து சருக்காரின் கருத்துக்கு மறுப்புக் கருத்து தெரிவித்து செய்தித்தாளில் எழுதினார். இக்கருத்துக்கு சுப்பிரமணிய பாரதியார் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார் எனப் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி (A.R.Venkatachalapathy) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் கே. ஏ. நீலகண்ட சாத்திரி அந்த அளவு தமிழறியாதவர் என்பதுவும், தமிழ் இலக்கியங்களை ச. வையாபுரிப்பிள்ளையின் விளக்கங்களோடுதான் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும், அதனால் காலமாற்றத்துக்கு ஏற்ப கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களால் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்பதும் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் கருத்து.
சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆன நொபொரு காராசிமா (Noboru Karashima) அவரது “தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு” (A Concise History of South India, 2014), என்ற நூலில் கே. ஏ. நீலகண்ட சாத்திரியின் தென்னிந்திய வரலாற்று நூலின் சிறப்பை முழுமையான, துல்லியமான ஆய்வு எனப் பாராட்டுகிறார். அத்துடன், கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஒரு பிராமணராக இருந்த காரணத்தால் அவர் “தென்னிந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியில் வட இந்திய மற்றும் சமற்கிருத கலாச்சாரத்தின்” பங்கை வலியுறுத்த விரும்பி அவ்வப்போது வரலாற்றை எழுதுவதில் சார்பு நிலையை மேற்கொள்கிறார் என்றும் சுட்டிக் காட்டினார்.
இவரது சமற்கிருத சார்பு மற்றவர்களாலும் சுட்டிக் காட்டப்பட்டதுண்டு. அவர் இளவயது ஆய்வாளராக இருக்கையில், தமிழருக்கென்று நன்கு முதிர்ச்சியடைந்த நிலையில் தனிப்பண்பாடு இருந்தது என்றும் அது அயலார் தாக்கத்தால் பின்னர் மாறியது என்றும் கூறியவர் கே. ஏ. நீலகண்ட சாத்திரி. இருப்பினும் பிற்காலத்தில் சங்க காலத்தின் பண்பாடு என்பது இரண்டு தனித்துவமான திராவிட-ஆரியப் பண்பாட்டின் கலவை என்றும் கூறத் துவங்கினார். இறுதியில் இந்தியாவின் பண்பாட்டின் அடிப்படை சமற்கிருதம்தான், தமிழகப் பண்பாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற கருத்தை முன்வைக்கத் துவங்கினார் என்கிறார் கணபதி சுப்பையா (2007). இவரது இந்த கருத்தாக்கம் மட்டும் மலேசியாவில் சென்ற நூற்றாண்டில் வெற்றி பெற்றிருந்தால் இன்று சிங்கப்பூரின் சட்டமன்ற மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ தமிழ் இல்லாது போயிருந்திருக்கலாம்.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த நாடுகளில் பொதுமக்கள் அனைவரின் உயர்கல்விக்காகப் பல கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் உருவாகின. இந்த நிலை இந்தியாவிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த பிற பிரித்தானிய காலனி நாடுகளிலும் நிகழ்ந்தன. உயர்கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழியாக அந்நாட்டின் மொழியாகவும் தெரிவு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழியாகப் பரிந்துரைக்கப் பட்ட சமற்கிருதம் நாட்டின் செம்மொழி எனக் கூறப்பட்டது. சமற்கிருதம் என்பது ஒரு சமயத்தின் மொழி என்ற பரவலான கருத்து தாக்கத்தால் ஆங்கிலேயர் இதை ஏற்காமல் முடிவெடுக்கும் பொறுப்பை கல்வி நிலையங்களிடமே ஒப்படைத்தனர். செம்மொழித் தகுதி சமற்கிருதத்திற்கு மட்டுமல்ல தமிழுக்கும் அத்தகைய தகுதி உண்டு என்று முதன் முதல் எதிர்க்குரல் எழுப்பியவர் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியரான பரிதிமாற் கலைஞர். முடிவில் அந்தந்த வட்டாரங்களில் எது மக்களின் மொழியாக வழக்கத்தில் உள்ளதோ அதுவே உயர்கல்வி திட்டத்திற்கான இரண்டாம் மொழி என்ற தீர்மானம் செய்யப்பட்டது (விசுவநாதன், 2004).
இதே நிலை ஒருங்கிணைந்த நாடுகளாக இருந்த மலேசிய-சிங்கப்பூர் நாடுகளிலும் இருந்தது. இன்று இந்தியப் பின்புலம் கொண்ட அந்நாட்டு மக்களில் தமிழரே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர், 60% கக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தமிழரே (சிங்கப்பூர் மக்கட் தொகையில் சீனர் – 75%, மலாய் – 13%, தமிழர் – 5%, பிற இந்தியர் – 4%, மற்றவர் – 3%); சென்ற நூற்றாண்டிலும் இதே நிலைதான் இருந்தது. 1819 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழர் பெருவாரியாகக் குடியேறி இருந்தனர். ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), மலாய், தமிழ் மொழிகள் துவக்கத்திலிருந்து நாட்டின் புழக்கத்திலிருந்தது. அதிக இந்தியர் பேசியது தமிழே. மலேயா பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட பொழுது குடிபெயர்ந்த இந்தியப் பின்புலம் கொண்டவருக்கான மொழியாக என்ன மொழியை பல்கலையில் துவக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இந்திய நாட்டின் சார்பில் பேராளராக கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஆங்கிலேய அரசால் மலேயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். கே. ஏ. நீலகண்ட சாத்திரி இந்தியா மொழியாக சமற்கிருதம் இருக்க வேண்டும் என்று கூறி சமற்கிருத மொழியைப் பரிந்துரைத்தார். இதைக் கண்டு வெகுண்டு, 10000 தமிழர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் இறங்கினார் தமிழர்களின் தலைவராக விளங்கிய கோ. சாரங்கபாணி. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளிக்கப்பட்டு சிங்கப்பூர் தமிழர்களின் தலைவராகப் பாராட்டப்பட்டவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி. இவர் தமது எதிர்ப்பு முயற்சியால் போராடி வெற்றி பெற்றதால் இந்திய மக்களுக்கான மொழியாக (Department of Indian Studies at the University of Malaya in Singapore) பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார் சிங்கப்பூர் கவிஞர். நா. ஆண்டியப்பன் (2020). தமிழவேள் கோ. சாரங்கபாணி முன்னெடுப்பில்தான் சிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாகவும் தமிழ் இருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
கே. ஏ. நீலகண்ட சாத்திரி வரலாற்றை எழுதுகையில் கிடைக்கும் இலக்கியச் சான்றுகள், தொல்பொருள், கல்வெட்டு, நாணயவியல், வெளிநாட்டுப் பயணியர் பதிவு செய்த செய்திகள் ஆகிய ஐந்து சான்றுகளையும் கண்டறிந்து அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து வரலாற்றை எழுதும் முறையைக் கையாண்டார். மேலும், கே. ஏ. நீலகண்ட சாத்திரியைப் பொருத்தவரை வரலாறு குறித்து அவர் கருதியது, வரலாறு என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே வரலாறு கற்கும் மாணவர் அவர்களுக்குக் கிடைக்கும் சான்றுகள் எங்கு எடுத்துச் சென்றாலும் அதன் வழியில் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் வரலாற்றின் முடிவுகள் ஒவ்வொரு தலைமுறையினராலும் அவர்களது காலத்தின் சூழலுக்கு ஏற்ப பார்க்கப்பட்டுப் புரிந்து கொள்ளப்படும்.
இவர் சற்றொப்ப 40 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல தென்னிந்திய வரலாற்று நூல்கள், குறிப்பாகத் தமிழக வரலாறு குறித்த நூல்கள். கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களின் நூல்களை (1) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவரது முக்கியமான வரலாற்றுப் படைப்புகள், (2) பண்பாடு மற்றும் சமூக வரலாறு குறித்த அவரது படைப்புகள், (3) அவர் பதிப்பித்த வரலாற்று நூல்கள், (4) வரலாற்று ஆய்வுமுறைகள் குறித்து அவர் எழுதிய நூல்கள், (5) குறிப்பிடத்தக்க அவரது சிறிய கட்டுரைகளும் இன்னபிற படைப்புகளும் எனப் பகுக்கலாம் என்று சங்கர் கோயல் (2005) வகைப்படுத்துகிறார். 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 30 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும். பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும், ஆரிய-திராவிட பண்பாட்டுத் தொடர்பு போன்ற தலைப்புகள் கொண்ட இவரது நூல்கள் தமிழக வரலாறு கற்பவருக்கு இன்றியமையாத வரலாற்று நூல்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d036ffb4-2d62-4be3-9fa5-18424a32fbd4n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fuTZguiFtkr_oO%3DYjCORXpoSVwJZgy5sBmVmCtK-LKSA%40mail.gmail.com.
On Feb 13, 2021, at 3:30 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d036ffb4-2d62-4be3-9fa5-18424a32fbd4n%40googlegroups.com.
<kan-sastri.JPG>
அடடாவோ!
என்ன ஒரு குமுறல்! சிரிப்புத்தான் வருகின்றது!
நான் சொன்னதைப் பாருங்கள் (கீழே). பொதுவில் இட்ட கட்டுரை, அது பற்றி
என் கருத்தை பொதுவில் வைத்துள்ளேன். இதில் எதுவும் ஒளிவுமறைவு
இல்லை. இது ஒரு கருத்தினை எடுத்துக்காட்ட செய்துகாட்டப்பட்டது.
இது இன்னொரு பதிப்பன்று. கருத்துகளைப் பகிர இட்டிருக்கின்றேன்.
பெரிதாக ஏதும் மாற்றமோ, கருத்தோட்டத்தில் தடையோ இருக்காது என்று காட்டவே செய்தேன்.
செல்வா
பேரா செல்வா,அனுமதி இன்றி மூல வரலாற்று ஆசிரியர் மூலப் படைப்பைத்
திருத்துவது, திருத்திக் காட்டுவது, திருத்துவதை நியாயப்
அன்புள்ள தேமொழி அவர்களே,
உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. மீண்டும்
சொல்லிக்கொண்கின்றேன். உங்கள் கட்டுரையைத்
திருத்துவது என் நோக்கம் அன்று. கிரந்தத்தைக் களைந்து
எழுதினால், ஏதும் பெரிதாக கருத்தோட்டம் தடைபடாது
என்பதை உணரலாம் என்பதற்காகவே செய்துகாட்டியது.
நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி.
உங்களுடையதாவது புதினமல்லா கட்டுரை.
முன்னர் புதுமைப்பித்தன் கதை ஒன்றையும்
இப்படி கிரந்தம் நீக்கி எழுதிக்காட்டினேன்.
கதையோட்டத்திலோ சுவையிலோ ஏதும்
குறைவு பட்டதாக யாரும் சொல்லவில்லை.
இவை வெறும் செய்துகாட்டல்தானே அன்றி
‘திருத்திய பதிப்பு’ அன்று.
ஆங்கிலத்தில் Tamil என்றெழுதுவதை ஏற்கின்றோம்.
சமற்கிருதம் அல்லது சமசுகிருதம் என்றெழுவதை ஏன்
தனித்தமிழ் என்று கருதுகின்றனர். தனி ஆங்கிலம் என்று
யாரும் சொல்கின்றர்களா?
அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/0b63bd24-087e-4ee0-be71-26f1bdb1c261n%40googlegroups.com.
////ஆங்கிலத்தில் Tamil என்றெழுதுவதை ஏற்கின்றோம்.
சமற்கிருதம் அல்லது சமசுகிருதம் என்றெழுவதை ஏன்
தனித்தமிழ் என்று கருதுகின்றனர். தனி ஆங்கிலம் என்று
யாரும் சொல்கின்றர்களா?
அன்புடன்
செல்வா////
பேரா செல்வா,
Tamil என்பதை ஏற்பதாய் ஏற்றுக் கொள்ளும் செல்வா Thamizh என்று தானாக முன்னோடியாக ஏன் எழுதத் தயங்குகிறார் ???
பிறரும் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.
சி. ஜெயபாரதன்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7crZtOpjCCDgJHuVfXxeCEyyuPTzAj%2BXThsJDRqfVCJ%3Dw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/82955705-1661-42d7-b260-783456fff370n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/eeee8e36-cc7d-4e33-a275-a7b71be4adf6n%40googlegroups.com.
////அன்புள்ள தேமொழி அவர்களே,
உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. மீண்டும்
சொல்லிக்கொண்கின்றேன். உங்கள் கட்டுரையைத்
திருத்துவது என் நோக்கம் அன்று. கிரந்தத்தைக் களைந்து
எழுதினால், ஏதும் பெரிதாக கருத்தோட்டம் தடைபடாது
என்பதை உணரலாம் என்பதற்காகவே செய்துகாட்டியது.
நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி.
உங்களுடையதாவது புதினமல்லா கட்டுரை.
முன்னர் புதுமைப்பித்தன் கதை ஒன்றையும்
இப்படி கிரந்தம் நீக்கி எழுதிக்காட்டினேன்.
கதையோட்டத்திலோ சுவையிலோ ஏதும்
குறைவு பட்டதாக யாரும் சொல்லவில்லை.
இவை வெறும் செய்துகாட்டல்தானே அன்றி
‘திருத்திய பதிப்பு’ அன்று. /////
பேரா செல்வா, இப்படி வாடிக்கையாக மூலத்தை மாற்றும்
கள்ளத் தனத்தை பல்லாண்டு செய்து வருவதை, செய்ததை
நியாயப் படுத்தி மூலபடைப்புகளில், தன் கயமைத்தனத்தை
நிலைநாட்டி, தூய தமிழருக்குத் தலைவராய் கீரீடம் அணிந்துள்ளார்.
இந்த கள்ளப் பணிக்கு முன்பே திட்டமிட்டு, அந்தண மேதை நீல கண்ட சாஸ்திரிக்கு பொட்டு வைத்து, ஒரு பலி ஆடாய்
வெட்டுவதற்கு முனைவர் தேமொழி [பெரியார் சீடர், பிராமண வெறுப்பாளர் ] ஏன் வலையில் ஏற்றினார் என்று
தெரிய வில்லை எனக்கு. அந்தணர் சாஸ்திரி மூலத்தை அனுமதி
யின்றி மாற்றிய பேரா செல்வாவை, கைதட்டிப் பாராட்டுகிறார்
தேமொழி.
=======================
|
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/eeee8e36-cc7d-4e33-a275-a7b71be4adf6n%40googlegroups.com.
////நான் மதுரைக் கல்லூரியில் 1950 - 1952 ஆண்டுகளில் பியூசி. ////
///1950 - 1952 ஆண்டுகளில் பியூசி படித்திருக்க வாய்ப்பே இல்லை.
இண்ட்டர்மீடியட் என்ற இரு ஆண்டு கல்வி முறை இருந்த காலம் அது.ஐயா, நீங்கள் அப்பொழுது பிறந்து, படித்திருந்தாலும் மறந்துவிட்டீர்கள்.
நான் அப்பொழுது பிறக்கவே இல்லை என்றாலும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ///
என் அப்பாவுடன்தான்; அவர் கும்பகோணம் கல்லூரியில் படித்த பொழுதுதான் இண்ட்டர்மீடியட் முடிவுக்கு வந்தது.அவர் இரு ஆண்டு கல்வி முறை இண்ட்டர்மீடியட் என்பதை முடித்து வைத்தார். (அவருக்கு அடுத்து வந்த மாணவர்கள் பியூசி படிக்கத் துவங்கினார்கள்)நான் என் பங்குக்கு பியூசி என்பதை முடித்து வைத்தேன் (1978-1979).இவை எல்லாம் முடிவல்ல மற்றொரு தொடக்கம்.------1950 களின் மத்தியில் இண்ட்டர்மீடியட் கல்வி முறை மாற்றி அமைக்கப் பட்டது.1955-57 காலத்துக் கல்வியாண்டில் படித்தவர்களே கல்லூரிகளில் இறுதிப் பிரிவு இண்ட்டர்மீடியட் வகுப்பு மாணாக்கர்கள்.இண்ட்டர்மீடியட் வகுப்புகளுக்குப் பதிலாக ஓராண்டு பயிலும் புகுமுகவகுப்புகள் (Pre University Course, popularly known as PUC) கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.கல்வியாண்டு 1956-57 புகுமுகவகுப்பில் படித்தவர்களே முதல் பிரிவினர்.///தேமொழி ஒரு திறமுள்ள கூரிய ஆயுதம் ஏந்திய கருப்பணிப் போராளி. பாருங்க, உங்க பெயரைச் சொல்லி நகைப்பாளி
நானென்று நெஞ்சைக் கீறுவது எத்தகைய சாணக்கியம் ? /////
////ஐயா என்னிடம் சாட்டை, தடி போன்ற ஆயுதங்கள் இல்லை. ///
////அத்துடன் ராஜம் அம்மா என்னையும் நகைச்சுவை எழுத்தாளர் என்று பாராட்டியுள்ளார்கள். ////
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/6f049fc3-9b5a-422e-befe-89054ff65928n%40googlegroups.com.
தேமொழிநீல கண்ட சாஸ்திரியை இழுத்து வந்து, மூல வரலாற்றைப்பேரா செல்வா நாசமாக்க, ஊக்குவித்த முதல் காரணியாக, துணையாக இருந்தது ஏன் ? ஏன் ? ஏன் ? யார் அனுமதியில்செய்தீர் ???
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/9ceb1c43-9bd7-44eb-81eb-6c4cf296f907n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/1f940eb6-e58b-4cd5-9107-4a6881fddca5n%40googlegroups.com.
கட்டுரையில் ஏன் உங்கள் பெயரைக் குறிப்பிட வில்லை ???
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/3f790747-2b95-4350-8920-e3ff627b407bn%40googlegroups.com.
தேமொழி,சாஸ்திரி என்பதை நீங்களே சாத்திரி எழுதக் கூசியபோது, தீரர் பேரா செல்வா இன்னும் சில் நாட்களில்விக்கிபீடியால் தான் திரித்த மூல நீல கண்டசாத்திரி எழுதப்படுவார்.
நீங்கள் திருடிய இழைகள் ஈதோ :
திரு. செயபாரதன்,
உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதா?
கள்ளத்துவம், திருடு, கயமை போன்ற சொற்களின்
பொருள்கள்தாம மறந்துவிட்டனவா?
பாரதியார் சாத்திரம் என்று பல இடங்களிலே எழுதியுள்ளாரே.
திரைப்பட பாடல் ஒன்றில் கூட சாத்திரி என்று வருகின்றதே
தமிழில் தமிழெழுத்துகளில் எழுதுவது கண்டு இவ்வளவும்
கொதிப்பா? வியப்பில்லை, வியப்பில்லை. உங்களின் போக்குகளை
அறிவேன்தானே. அறிவுநாணயம் இல்லாமையை அறிவேன்தானே.
பல குழுமங்களுக்கு தில்லுமுல்லுத்தனமாக அனுப்பி
திருகுவேலை செய்பவர்தானே. ஏன் இப்படி?
அன்புகொள்ளுங்கள், நல்லது செய்யுங்கள். கருத்துமாறுபாடு
இருந்தால் மாறுபடுங்கள். பண்புடன் பகிருங்கள்.
காலமும் வாய்ப்பும் பொன்னானவை.
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/a8a87b35-e615-4a78-a090-55ced8249b83n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7dHSVLGPOT431n6%2Bp%3DuxX81nFwf4SE2fTf7MVvyRBFi3Q%40mail.gmail.com.
Graham Bell என்பவரின் பெயரில் வரும் முதல் சொல் கிராம் என்று வரும், கிரஹாம் என்றன்று
என்று எடுத்துச் சொன்னாலும், இல்லை இல்லை நான் கிரஹாம் என்றுதான் எழுதுவேன் என்று
கிரந்தப்பற்றால் கூறினீர்கள். ஆபிரகாம் என்றெழுதினால் “தூய தமிழ்” ஆகிவிடுமே
என்று ஆப்ரஹாம் என்றெழுதுவீர்.
புதுமைப்பித்தனின் படைப்பு மூலத்தை மாற்றவில்லை.
ஓர் உண்மையை விளக்க ஒரு செய்துகாட்டல்.
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/6f049fc3-9b5a-422e-befe-89054ff65928n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/7266DFB1-8B55-4FF9-9721-03D63C2DB6AB%40earthlink.net.