தனிப்பெயர் (பழைய முகநூல் பதிவு)

7 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Aug 13, 2025, 8:31:13 PMAug 13
to தமிழ் மன்றம்

 

தனிப்பெயர்கள்

செ. இரா. செல்வகுமரன்

·

Last edited 5 மே, 2021

·

3 minute read

தனிப்பெயர்கள்

தனிப்பெயர்கள் (proper nouns) பற்றிய சில
கருத்துகள்.

ஆங்கிலமும்-பிரான்சியமும்
--------------------------------------------
ஆங்கில மொழியானது பிரான்சிய மொழிக்கு மிகவும்
கடன்பட்ட ஒன்று. 400 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின்
அரசர்களின் தாய் மொழிகூட ஆங்கிலமல்லாது பிரான்சியமாக இருந்தது. இங்கிலாந்தில் உயர்மொழியாய் பிரான்சியமே இருந்தது.
ஆங்கிலம் கீழ்மட்ட உழைப்பாளர்களின் மொழியாய் இருந்தது.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை.

இன்றைய ஆங்கிலத்தில் ஏறத்தாழ 29% பிரான்சியம்
29% 
இலத்தீன் (பிரான்சியம் ஓர் இலத்தீன மொழி).

ஆக ஆங்கிலத்தில் 58% பிரான்சியமும் இலத்தீனும்.

பிரான்சியத்தின் மொழிப்பெயர்
--------------------------------------------------
பிரான்சிய மொழியைப் பிரான்சியர்கள் le français 
என்றழைத்தார்கள் என்பதை ஆங்கிலேயர் மிகமிக
நன்றாகவே அறிவார்கள். அவர்களின் மொழியை
ஆங்கிலேயர் ஆங்கிலத்திலும் Français என்றோ Fransay என்றோ அழைத்திருக்க முடியும். ஆனால் le français என்னும் மொழியை
French 
என்று அவர்கள் அழைத்தார்கள். அது அவர்களின் மொழி
வழக்கமாக இருந்திருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட.ஆனால்

என்று அவர்கள் அழைத்தார்கள். அது அவர்களின் மொழி
வழக்கமாக இருந்திருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட.ஆனால்

"proper noun" 
ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

அது ஒருபுறம் இருக்க,
ஆங்கிலேயர் French என்கின்றார்கள் என்பதற்காகத்
தமிழில் நாமும் பிரெஞ்ச், ஃபிரெஞ்ச் என்று சொல்ல வேண்டுமா? 

இத்தாலியர்கள் Lingua francese என்கின்றார்கள்.

தமிழில் பிரான்சே என்று சொல்லலாம், ஆனால் பிரான்சியம்
என்று முறையாக தமிழ்மரபுக்கு ஏற்ப வழங்குகின்றோம்.
பிரெஞ்ச் என்று வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதலாகாது
என்பது தமிழின் அடிப்படையான இலக்கண விதி.

எசுப்பானியம் (español )
-----------------------
ஆங்கிலேயர்களுக்கு español (ஆங்கிலத்தில் Spanish) மொழியின்
பெயர் மிகமிக நன்றாகத் தெரியும்.
ஏன்Espanyol என்று சொல்லாமல்
முதல் e என்னும் எழுத்தொலியை விட்டுவிட்டும்
பின்னே -ish எனச் சேர்த்தும் Spanish என்றார்கள்? 

)
-----------------------
ஆங்கிலேயர்களுக்கு español (ஆங்கிலத்தில் Spanish) மொழியின்
பெயர் மிகமிக நன்றாகத் தெரியும்.
ஏன்Espanyol என்று சொல்லாமல்
முதல் e என்னும் எழுத்தொலியை விட்டுவிட்டும்
பின்னே -ish எனச் சேர்த்தும் Spanish என்றார்கள்? 

"proper noun" 
ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

பிறமொழிப்பெயர்கள்
-----------------------------------
ஆங்கிலேயர்கள் Finnish, Danish, Swedish 
என்றெல்லாம் -ish என்னும் பின்னொட்டு இட்டு அழைக்கும்
வழக்கத்தைச் சில மொழிகளுக்கு ஆள்கின்றார்கள்.

இருக்கட்டும்.

ஆனால் தமிழர்கள் ஏன்ஆனால் தமிழர்கள் ஏன் சற்றும் சிந்திக்காமல் அவர்களைப்
பின்பற்றி ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், டேனிஷ், சுவீடிஷ்
என்கின்றார்கள்? இவை தமிழின் இலக்கண விதிகளைப்
பல நிலைகளில் மீறுகின்றனவே!
தமிழில் முறையாக எசுப்பானியம்
(எசுப்பொன்யால் என்பதைச் சற்றே மாற்றி எசுப்பானியம்),
தென்மார்க்கியம் (அல்லது தேனீசியம்), சுவீடியம், 
போலந்தியம், பின்லாந்தியம் என்பதுபோல வழங்கலாம்.

ஐயையோ புரியாது என்பது அறியாமையாலும்
(
ஓழுக்கம் பேணவேண்டும் முறைமை பேணவேண்டும் என்னும் அறியாமையும் உலக வழக்குகளை அறியாமையும்)
கொஞ்சமும் சிந்திக்காமல் ஆங்கிலத்தின் மொழிப்
பின்னொட்டுகளைச் சிந்திக்காமல் பின்பற்றுவதாலும், 
தமிழை, தமிழ் முறைமைகளை, மதியாமையாலும் தன் பதிப்புணராமையாலும் என்பதால் எனத் துணியலாம்.

கிசுவாகிலி மொழி
-------------------------------
Swahili என்றொரு மொழி ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்றது.
இது பாண்டு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
உண்மையில் இம்மொழியின் பெயர் Kiswahili. ஆனால்
ஆங்கிலேயர் முதல் மூன்றெழுத்துகளை வெட்டிவிட்டார்கள்.

Swahili 
என்றொரு மொழி ஆப்பிரிக்காவில் பேசப்படுகின்றது.
இது பாண்டு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
உண்மையில் இம்மொழியின் பெயர் Kiswahili. ஆனால்
ஆங்கிலேயர் முதல் மூன்றெழுத்துகளை வெட்டிவிட்டார்கள்.

"proper noun" 
ஐ மாற்றலாகாது என்னும் குரல் என்னாயிற்று?

தமிழில் "proper noun" என்னும் ஒரு கருத்துருவே கிடையாது.
-----------------------------------------------------------------------------------------

தமிழிலோ "proper noun" என்னும் ஒரு கருத்துருவே கிடையாது.
இது ஆங்கில இலக்கண விதிகளைத் தமிழ்மீது திணித்தல் ஆகும்.
ஆங்கில விதிமுறைகளை, அதுவும் சரிவர உணராமல்
தமிழ் மீது திணிக்கின்றார்கள். போலியாக நாகரிகம்
பேசுகின்றார்கள்!

"proper noun" 
என்னும் கருத்து ஐரோப்பிய மொழிகளில்
-----------------------------------------------------------------------------------


இந்த "proper noun" என்னும் கருத்தே ஐரோப்பிய மொழிகளிலேயே
மிகவும் மாறுபட இயங்குகின்றது என்பதையும் அறிந்துகொள்ள
வேண்டும். மொழிக்கு மொழி இலக்கணம் மாறுபடும்.
ஆங்கிலத்திலே மாதத்தின் பெயர்களை எழுதும்பொழுது
முதலெழுத்து தலைப்பெழுத்தாக (பெரிய எழுத்தாக) இருக்கவேண்டும். January, February December என்பதுபோல.
இவற்றை january, december என்றெல்லாம் சிறிய எழுத்துடன்
தொடங்கி எழுதினால் பிழை. அவற்றைத் திருத்துவார்கள்.

ஆனால் பிரான்சிய மொழியில்
இப்படி யன்று. janvier, février, mars, avril, mai, juin, juillet, 
août, septembre, octobre, novembre, décembre 
என்றுதான் எழுதுவார்கள்.
முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக எழுதினால் பிழை. பொருள்
வேறுபடும்.

இதே போலத்தான், கிழமையின் பெயர்களையும் ஆங்கிலத்திலே
Friday, Sunday 
என்றெல்லாம் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாகஎழுதவேண்டும். பிரான்சியத்தில் அப்படி இல்லை.
lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche. 
என்றெழுதுவார்கள்.

இடாய்ச்சில் (செருமன்) மேசை நாற்காலி போன்ற
எல்லாப் பெயர்ச்சொற்களிலும் முதலெழுத்தைப்
பெரிய எழுத்தாக எழுதவேண்டும். Tisch, Stuhl, Baum
(table, chair, tree). 

எசுப்பானிய மொழியிலும் மாதங்களின் பெயர்களும்
கிழமைகளின் பெயர்களும் சிறிய எழுத்தில்தான்
தொடங்குகின்றன

இன்னும் விரிவாக இவ்விதிகளைப் பற்றிக் கூறலாம்.
ஊர்களின் பெயர்களையும் ஒவ்வொருமொழியும்
அவர்களிண் வழக்கங்களின் படித்தான் எழுதுகின்றார்கள்
New York 
என்பதை எசுப்பானியத்தில்
Nueva York 
என்றெழுதுவார்கள்

இலத்தீன எழுத்துகளிலேயே எழுதும் பல
ஐரோப்பிய மொழிகள் London என்னும்
பெருநகரத்தின் பெயரை எப்படி
எழுதுகின்றார்கள் என்று பாருங்கள்:
"Londres in Catalan, Filipino, French, Galician, Portuguese, and Spanish; 
Londino (Λονδίνο) in Greek; Londen in Dutch; 
Londra in Italian, Maltese, Romanian, Sardinian and Turkish; 
Londër in Albanian; 
Londýn in Czech and Slovak; 
Londyn in Polish; 
Lundúnir in Icelandic; 
Lontoo in Finnish." (
உதவி விக்கிப்பீடியா)

ஏன் இலத்தீன எழுத்துகளில்தானே எழுதுகின்றார்கள்,
London 
என எழுதலாம்தானே!! ஏன் அப்படி
எழுதவில்லை? ஒவ்வொரு மொழிக்கும்
ஒவ்வொரு முறைமை இருக்கும், ஊர்ப்பெயர்களின்
பின்னொட்டு முறை இருக்கும். இவற்றை மதித்தல்
வேண்டும். தமிழில் இலண்டன் என்றெழுதுவது வேண்டும்.
"
லண்டன்" என்றெழுதுவது தவறு - தமிழிலக்கணத்தின்படி.

இதேபோல Deutschland என்று தன்னாட்டை அழைக்கும் நாட்டை
ஆங்கிலேயர் Germany என்கின்றார்கள். இதனைப் பிரான்சியர்
Allemagne 
என்கின்றார்கள், சுவீடிய மொழியில் Tyskland என்கின்றார்கள்.
பின்லாந்தியத்த்ல் Saksa என்கின்றார்கள். இப்படியாக
30-40 
நாடுகளில் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு விதமாக
அழைக்கின்றனர். நாம் தமிழில் இடாய்ச்சுலாந்து அவர்களின்
மொழியை ஒட்டி ஆனால் டகரத்தில் தொடங்கலாகாது என்பதால்
இ எனச் சேர்த்து ஒலிக்கின்றோம். ஆங்கிலேயரைப் பின்பற்ற
வேண்டுமென்றாலும் செருமனி என்று சொல்லலாம்.
அந்நாட்டின் மொழியில் ஜ என்னும் ஒலியே கிடையாது
அவர்களின் நாட்டை ஜெர்மனி என்பது அறவே தேவையற்றது.
இடாய்ச்சு மொழி அறிந்த தமிழர்களே தங்களின்
சாய்வு காரணமாகவோ பிற காரணங்களுக்காகவோ
ஜெர்மனி என்கின்றார்கள். இடாய்ச்சுலாந்து எனச்சொல்லி
அந்நாட்டினர் சிலர் மகிழ்வதைக் கண்டிருக்கின்றேன்.
இடாய்ச்சுலாந்தின் பெயரைப் பல்வேறு நாட்டினர் அழைக்கும் பெயர்களைக் இணைப்பில் காணலாம்.


இதுபோல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
மொழிக்கு மொழி மாறுபடும் இடங்களைச் சுட்டிக்காட்ட
முடியும்.

சுருக்கமாகச் சொன்னால்:

1) தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது
2) 
தமிழில் வல்லின மெய்யெழுத்தில் ஒரு சொல் முடியலாகாது.
3) 
மேலுள்ளவற்றை உள்ளடக்கிய இலக்கணம்: தமிழில் முதலெழுத்து, கடைசி எழுத்து, இடையே வரும் எழுத்துக்கூட்டல்கள் ஆகியவற்றை அறிந்து பயன்படுத்தவேண்டும்
4) 
தமிழெழுத்துகளில் எழுதுதல் வேண்டும், இவை 247 ஏ.
5) 
கூடிய மட்டிலும் தமிழிலக்கண விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்
(
இவை அறிவார்ந்தவை, நுணுக்கம் மிக்கவை என்பது போற்றி
அறிய வேண்டுவது).
6) 
தனி மாந்தப் பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும்
வணிகப் பெயர்களையும் சிறப்புப்பெயர்களையும்
தமிழின் இலக்கண விதிகளுக்கு உட்பட
எழுதுதல் வேண்டும். தேவை எனக் கருதினால் மொழிபெயர்த்தும்
எழுதலாம், ஆனால் இது கூடிய மட்டிலும் தவிர்க்கவேண்டியது.
அப்படிப் பெயர்த்தால் தமிழில் குற்றமென்று கொள்ளத்தேவையில்லை.
அதற்காக எல்லா வணிகப்பெயர்களையுமோ
பிற பெயர்களையுமோ மொழிபெயர்க்கக் கிளம்பிவிடலாலாது.
7) 
உலகளாவிய அலகுகள் (கிலோமீட்டர், நானோமீட்டர், ஆம்பியர்), 
தனிமங்களின் பெயர்கள் முதலான பல வகையான
சொற்களை மொழிபெயர்க்காமல், ஏற்புடைய முறைமைபேணி
தமிழின் இயல்புக்கு ஏற்ப வழங்கல் வேண்டும்.
8) 79 
கிரந்த எழுத்துகளையும், 26 முதல் 52 வரையிலான இலத்தீனஎழுத்துகளையும் விலக்கி எழுதுதலே நல்ல முறை.
சிறப்பு நூல்களிலும் கணிதம் போன்ற துறைசார்ந்த நூல்களிலும்
இவற்றுக்கு வேண்டியவாறு விலக்குகள் கொள்ளலாம், ஆனால்
கலைச்சொற்களில் இவற்றைக் கலக்காமல் உருவாக்குவது
முக்கியம்.

நன்றி.

செல்வா
மார்ச்சு 21, 2019
வாட்டர்லூ, கனடா

Govindasamy Thirunavukkarasu

தங்களது அறிவார்ந்த எழுத்துக்கள் நூல் வடிவம் பெறவேண்டும் ஐயா. தங்களது சிந்தனைகள் தமிழர்களுக்கு தேவை.

Arul Natarajan

முன்மொழியப்படுகிறது

 

தமிழ நம்பி

என் சுவரிலும் படிப்போர்க்குக் கொடுக்கிறேன் ஐயா.

இறையரசன் பா.

சிறப்பு

Ravisankar Gangadharan

உங்கள் வாதங்கள் உங்கள் கண்ணோட்டத்ததில் சரியாக இருக்கலாம். மற்றவர்களுக்கும் தம்தம் மொழிப்பற்றிய கண்ணோட்டம் உண்டு.ஏனைய உலகமொழிக்காரர்கள் செய்வதையெல்லாம் நாமும் பின்பற்றவேண்டும் என்கிறீர்களா?குண்டிச்சட்டியில் குதிரையோட்டம் சரியல்ல. அதைத்தாண்டி வரவேண்டும்.

வேல்முருகன் சுப்பிரமணியன்

உங்களின் மொழிக்கண்ணோட்டம் யாது?

குண்டுச்சட்டியில் குதிரையோட்டம் என்று எதைச்சொல்கிறீர்கள். ஆம், அப்படிச்செய்யமுடியாதுதான்.

Ravisankar Gangadharan

வேல்முருகன் சுப்பிரமணியன்ஒரு மொழியின் பயன்பாட்டில், செயல்முறையில் நடப்பவை பெரியத்தாக்கத்தை ஏற்படுத்தாதவரை மொழியின் பல அடிப்படை விடயங்கள், தன்மைகள் சிதையுமோ என அஞ்சவேண்டியதில்லை.

வேல்முருகன் சுப்பிரமணியன்

Ravisankar Gangadharanபுரியவில்லை. ஓர் எடுத்துக்காட்டு கொடுங்கள். எது பெரியதாக்கம்?

Ravisankar Gangadharan

வேல்முருகன் சுப்பிரமணியன்இந்த விவாதத்தில் துவக்கத்திலிருந்து உள்ளோருக்கு நான் குறிப்பிட்டது புரியும்.

வேல்முருகன் சுப்பிரமணியன்

Ravisankar Gangadharanசும்மாவந்து வெறுப்பேற்றி ஓர் அறிவார்ந்த கட்டுரையை வெறுமனே உணர்ச்சிக்குவியலாக அமையும்படியான தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி புரிகிறது.

Ravisankar Gangadharan

வேல்முருகன் சுப்பிரமணியன்அப்படியா? அது உங்கள் கருத்து. என் நோக்கமல்ல. ஏனெனில் I am not a saddist. Instead of commenting on me, respond to my statements as Mr Selvakumar do. Right? Don't do any loose interaction please!

வேல்முருகன் சுப்பிரமணியன்

அவர் ஒருமொழியைப்பற்றி பேசவில்லை. பலமொழிகளைப்பற்றிப்பேசுகிறார். நீங்கள் அதை குண்டி/குண்டுச்சட்டி என்று குறிக்கின்றீர்கள்.

வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழ் எனும் நம் மொழியின் பெயரை இன்னொருமொழி Tamil என்று எடுப்பதிலும் பிரிதொருமொழி Tamoul என்று எடுப்பதிலும் எந்தச்சிக்கலும் இல்லை. இது குண்டுச்சட்டியோட்டமாகாது!

அப்படியேதான் English எனும் மொழி தமிழால் ஆங்கிலம் என்று மிக எளிதாகவும் இயல்பாகவும் எடுக்கப்பட்டு எழுதப்படுகிறது.

அதேசொல்(English) மக்களைக்குறிக்கும்போது தமிழ் அதை உயர்திணையாக எடுத்து ஆங்கிலேயர் என்கிறது. இதெல்லாம் மிக இயல்பானது. முகத்தை இறுக்குவதால் மொழியின் இந்த இயல்பான இயக்கம் மாறிவிடாது! 

+++

தமிழின் இடஞ்சார்ந்த வல்லினவொலிப்பையும், உயிர் என்றால் என்ன மெய் என்றால் என்ன குற்றுயிர் என்றால் என்பதையும் அறியும்பொழுது தமிழ்கொண்டிருக்கும் எழுத்தமைப்பின் மெய்யான மாண்பு புலப்படும். 

உங்களுக்கு தமிழ்மொழியின் எழுத்தமைப்புபற்றிய புரிதல் உண்டா?

Ravisankar Gangadharan

Ravisankar Gangadharan

வேல்முருகன் சுப்பிரமணியன்1.உங்கள் அளவிற்கு எனக்கு புரிதல் அதாவது அறிவு கிடையாது. 2.பெயர்சொல் பற்றி செல்வகுமார் ஐயாவின் தொகுப்பு சிறப்பு. அதை பாராட்டி பதிவு செய்துள்ளேன் என்பதை அறியவும். 3.தமிழில் பெயர்களை கிரந்த எழுத்துக்கள் கலந்து/கலக்காமல் எழுதலாம் என்பது தொடர்பாக நானும் ஐயாவும் நீண்ட தொடர் விவாதம் அவ்வப்போது செய்து கொண்டிருக்கின்றோம்அது எங்களுக்கு புதிதல்ல. 4. குண்டு/குண்டிச்சட்டியில் குதிரை....... என நான் குறிப்பபிட்டதின் பொருள் என்ன என்று ஐயாவிற்குத் தெரிவித்துவிட்டேன். தவறான மனக்கருத்து ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும் வேண்டியுள்ளேன். 5. நாங்கள் இருவரும் தம் தம் கருத்தில் உறுதியாக. உள்ளோம் என்பதுதான் முடிபு. 6.சும்மா வந்து வெறுப்பேற்ற நான் இங்கு எந்த வெட்டிவேலையும் செய்துகொண்டிருக்க

வில்லை என்பதை கூற விரும்புகிறேன். 7. ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய வற்றைப் பதிவிடுகின்றேன். அவ்வளவுதான். ஐயாவைப் போன்றோ தங்களைப்போன்றோ தங்களை ஒத்தோர்ப் போன்றோ அறிவார்ந்தவன் அல்லன். மிக்க நன்றி.

வேல்முருகன் சுப்பிரமணியன்

Ravisankar Gangadharanமிக்க நன்றி!

 

செ. இரா. செல்வகுமரன்

Ravisankar Gangadharan, குண்டுச்சட்டியிலோ குண்டிச்சட்டியிலோ குதிரையும் ஓட்டவில்லை நீர்யானையையும் ஓட்டவில்லை. மொழியியல் பேராசிரியராக இருக்கும் உங்களின் கருத்தைக் கண்டு வருந்துகின்றேன். உலக மொழிகளில் முக்கியமான சில மொழிகளில் (ஆங்கிலம், பிரான்சியம்இடாய்ச்சு, எசுப்பானியம்) எவ்வாறு * proper noun" என்பதில் சிலவற்றைத் தங்கள் மொழியில் இலக்கணம், மரபின்படி எழுதுகின்றார்கள் என்று காட்டியுள்ளேன். ஒவ்வொரு மொழியும் அந்தந்த மொழியில் இலக்கணம் மரபின்படி எழுதுகின்றார்கள் என்று காட்டியிருந்தேன். எப்படி ஆங்கிலத்தில் le français என்பதை மாற்றி French என்று எழுதியிருக்கின்றார்கள் என்றும் español , Kiswahili ஆகிய மொழிகளைத் திரித்து எழுதியுள்ளார்கள் என்றும் இன்னும் சில "proper noun" என்னும் பெயர்ச்சொற்களைத் திரித்து 

தங்கள் மொழியில் இலக்கணத்துக்கும் இயல்புக்கும் மரபுக்கும் ஏற்றவாறு எழுதியுள்ளார்கள் என்றும் காட்டியிருக்கின்றேன். உலகில் ஏறத்தாழ எல்லா மொழிகளுமே அவரவர் மொழிகளின் இலக்கணம் இயல்பு, மரபின் படியேதான் எழுதுகின்றார்கள். இந்த உரிமை மற்றமொழிகளைவிட மிக நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ள தமிழ்மொழிக்கு இருக்கக்கூடாதா

பேராசிரியரே, குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டமா?!! தமிழர்கள் 2000 ஆண்டுகளாகக் கிழக்கு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் பரக்க வணிகம் முதலானவை செய்தவர்கள். பூம்புகார் போன்ற நகரங்களில் பல மொழி பேசும் மக்கள் பெருகியிருந்தார்கள். தமிழர்கள் கிழக்கே சீனா, வியத்துநாம், கம்போடியா, தாய்லாந்து சென்று வணிகமும் அரச உறவும் பேணியவர்கள். பாபிலோனியாவில் தமிழர் மரபணுகூடப் பரவியிருப்பதாக ஆய்வு சொல்லுகின்றது. இது ஏதோ பெருமைக்காக உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லவில்லை. நெடுங்காலமாகப் பல மொழிகளை அறிந்தவர்கள். பல மொழியாளருடன் உறவாடியவர்கள். ஏன் சமற்கிருதத்திலே கூட அதிக அளவில் படைப்புகள் செய்தவர்கள் தமிழ்நாட்டவர். எனவே தமிழர்கள் பல மொழிகளின் இயல்புகளை ஏறத்தாழ 2000 ஆண்டுகளாக அறிவர். மற்ற எந்த மொழியாரிடமும் இல்லாத அளவில் தனிச்சிறப்பாக எழுத்துகளை வரையறை செய்தது முதல், செவ்விய இலக்கணமும் படைத்துள்ளனர். குண்டுச்சட்டியா? யாரைப்பார்த்து பேராசிரியரே முறைமீறி உரைக்கின்றீர்? தமிழர்களின் மொழிநுணுக்க அறிவு ஆகச்சிறந்தவற்றுள் ஒன்று, முன்மைமிக்கதும். குண்டுச்சட்டியைத் தாண்டி வரவேண்டும் என்பது உங்களின் தவறான பிழையான பார்வை..

Ravisankar Gangadharan

செ. இரா. செல்வக்குமார் ஐயா! 1.இலக்கண மரபுப்படி எழுதவேண்டும். 2.இலக்கணம் இயல்பு மரபின் படியேதான் எழுதுகின்றார்கள். சரி. தமிழர் அனைவரும் அப்படியேதான் எழுதுகிறார்கள். இதில் உங்களுக்கு என்ன ஐயப்பாடு? தேவையற்ற உணர்ச்சிவயப்பாட்டில் தாங்கள் தடுமாறுகின்றீர்கள… 

மேலும் காண்க

செ. இரா. செல்வகுமரன்

Ravisankar Gangadharan /// பிறர் கூறுவது கூறவருவது என்ன என்பதை முதலில் அமைதியாயாக அமர்ந்து சிந்தனை செய்யுங்கள். பிறகு எழுதுங்கள்/// இதுதான் நீங்கள் செய்ய வேண்டியது! குண்டுச்சட்டி என்றெல்லாம் கூறுவதை நிறுத்திவிட்டு, என்ன சொல்ல வருகின்றார்கள், அதில் பொரு… 

மேலும் காண்க

Ravisankar Gangadharan

செ. இரா. செல்வக்குமார் ஐயா! உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல. அயலகத் தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. தமிழ்ச்சூழலில் வாழும் எம் போன்றோர் கருத்தை, சிந்தனையை நீங்கள் புரிந்து கொள்ள இயலாது. மொழி என்றால் என்ன என்பதை …

மேலும் காண்க

செ. இரா. செல்வகுமரன்

Ravisankar Gangadharanநீங்கள் நான் சொல்லவந்ததைப் புரிந்துகொள்ளாமல் பேசுகின்றீர்கள் என்பதை உங்களின் இவ்வரிகள் உணர்த்துகின்றன.

//தமிழம் அவற்றை பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம். பிறமொழிச்சூழலில் உள்ளவற்றை அப்படியே தமிழ் மொழியும் பின்பற… 

மேலும் காண்க

தெய்வ சுந்தரம் நயினார்

பேராசிரியர் ரவிசங்கர் அவர்களே. பேரா. செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தமிழ் சொல்லமைப்புதொடர்பான சில கருத்துகளை முன்வைத்து, தமிழில் தனிப்பெயர்கள் இவ்வாறு அமைந்தால் சிறப்பு என்று கருதுகிறார். பேராசிரியர் பொறியியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியபோதிலும் தமிழ்மொழி ஆய்வில் மிகச் சிறப்பான கருத்துகளை முன்வைப்பவர். மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர். மிகவும் மென்மையானவர். யாரையும் மனம் புண்படும்படி எதையும் எப்போதும் சொல்லாதவர். தெளிவான ஆதாரங்களை முன்வைத்து தனது கருத்துகளை எப்போதும் நிறுவுபவர். தனிப்பெயர்கள்பற்றிய அவரது முன்வைப்புகளில் தவறு ஏதும் இல்லை. தமிழ்ச் சொல்லுக்கென்று மொழியசை இலக்கணம் இருக்கிறது. அதைப் பின்பற்றவேண்டும் என்று கருதுகிறார். அதில் தவறு ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன். ஆனால் அதைத் தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவார்களா என்பது மற்றொரு ஐயம். ஆனால் அதற்காகப் பேராசிரியரின் மனம் புண்படும்படி கருத்துகளை முன்வைக்கவேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள். பேராசிரியர் செல்வக்குமார் அவர்களே. முனைவர் ரவிசங்கர் ஒரு நல்ல மொழியியல் ஆய்வாளர். குறிப்பாக, பேச்சொலியியலில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அத்துறையில் பணியைத் தொடர்கிற ஒரு சில ஆய்வாளர்களில் ஒருவர். பேராசிரியர் க. முருகையன் அவர்களின் மாணவர். பொதுவாக அவர் யாரையும் புண்படுத்தும்படியாகப் பேசவேமாட்டார். மிக அமைதியானவர். எப்போதும் இன்முகம் கொண்டவர். இருப்பினும் இந்தக் கருத்தாடல் தொடரில் சற்று வேகம் காட்டிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாகத் தங்கள் மனம் புண்படவேண்டும் என்று நினைத்து எதையும் சொல்லியிருக்கமாட்டார் என்பது எனது கருத்து.

செ. இரா. செல்வகுமரன்

பேராசிரியர் தெய்வ சுந்தரம் நயினார் அவர்களே, உங்களின் கருத்துகளுக்கு மிகவும் நன்றி ஐயா. நான் பேராசிரியர் இரவிசங்கர் அவர்களின் கருத்தைப் படித்த பொழுது நெருடல் தந்தது உண்மையே, ஆனால் மனம் புண்படவில்லை. அவரும் தன் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். அது தெளிவு …

மேலும் காண்க

தெய்வ சுந்தரம் நயினார்

தங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன். மொழியைச் சிதைக்க அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக, தமிழ்ச் சொற்களுக்கென்று தெளிவான மொழியசை விதிகள் உள்ளன. அவற்றை எழுத்துத்தமிழில் உறுதியாகக் கடைபிடிக்கவேண்டும். மொழியசை விதிகள் ( சொல் முதல் எழுத்து, சொல் இறுதி எழுத்து, … 

மேலும் காண்க

செ. இரா. செல்வகுமரன்

தெய்வ சுந்தரம் நயினார் ஐயா, //// தமிழ்ச்சொல் தரவை நாங்கள் ஆய்வுசெய்துவருகிறோம். மிகவும் வியப்புக்குரிய தெளிவான விதிகள் தமிழ்ச்சொற்களில் நிலவுகின்றன. தமிழின் மொழியசை விதிகளைக் காப்பாற்றுவதற்காகவே சாரியைகளும் சந்திகளும் நிலவுகின்றன. பொருள் மயக்கங்களையும… 

மேலும் காண்க

தெய்வ சுந்தரம் நயினார்

உயிரெழுத்து ஆ-வுக்கான துணையெழுத்தையும் ( கா) , இடையின மெய்யெழுத்தாகிய ர - என்பதையும் வேறுபடுத்தி எழுதப் பலரும் தவறுகிறார்கள். தமிழ் எழுத்துருக்களை உருவாக்குகிறவர்கள் இதை உணர மறுக்கிறார்கள். அதுபோன்று சொல்களை எங்கு இணைத்து எழுதவேண்டும், எங்கு எழுதக்கூடா… 

மேலும் காண்க

செ. இரா. செல்வகுமரன்

தெய்வ சுந்தரம் நயினார் ஆம் ஐயா!

 

மாறன் பக்கிரிசாமி

ஐயா, Cambridge என்ற சொல்லை தமிழிலக்கணவிதிப்படி சொல்வது எவ்வாறு? (நண்பர்வட்டத்தில் அதை கம்பங்குறிச்சி என்று மாற்றி, கம்பம் என்று சுருக்கி விளித்துக்கொண்டிருக்கிறேன். 🙂)

Thamo Suntharamoorthy

இலங்கையில், 'நீர்கொழும்பு' (சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நகரம்) என ஓர் நகருண்டு. இதனை சிங்கள மொழியில், 'மீகமுவ' என அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் 'நிகம்பு' (Negombo) என்பார்கள்.

Hungery, இடாய்ச்சு மொழியில், Ungarn (உங்கார்ன்) எனப்படுகிறது.

அந்தந்த மொ… 

மேலும் காண்க

மணி மணிவண்ணன்

Ukraine என்ற நாட்டின் பெயரை அவர்கள் மொழியில் Ukrayina உக்ரயினா என்கிறார்கள். கெர்மானியரோ அதை உக்ரையினி என்பது போல் பலுக்குகிறார்கள். தமிழில் விக்கிப்பீடியா அதை உக்ரைன் என்கிறது. இப்படிப் பிறநாட்டுப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், மொழிப்பெயர்கள் என்பவற்றைத

மேலும் காண்க

கவிக்கோ ஞானச்செல்வன்

அரிய செய்திகள் அறியத்தந்தீர்;மகிழ்ச்சி நன்றி.

செ. இரா. செல்வகுமரன்

கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா, மிக மகிழ்ச்சி 🙂

10/22

 

 

இதன் தொடுப்பு:

https://www.facebook.com/notes/10157344134250966/ தனிப்பெயர்கள் 21 மார்ச்சு 2019

அன்புடன்

செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

rajam

unread,
Aug 13, 2025, 10:00:33 PMAug 13
to tamil...@googlegroups.com
தனிப்பெயர்” என்ற சொல்லாட்சியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!!  
இதை எந்த மரபிலக்கணத்தில் காணலாம்? 

நன்றி,
ராஜம்                   

ஐயா, Cambridge என்ற சொல்லை தமிழிலக்கணவிதிப்படி சொல்வது எவ்வாறு? (நண்பர்வட்டத்தில் அதை கம்பங்குறிச்சி என்று மாற்றி, கம்பம் என்று சுருக்கி விளித்துக்கொண்டிருக்கிறேன். <image.png>)
இலங்கையில், 'நீர்கொழும்பு' (சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள நகரம்) என ஓர் நகருண்டு. இதனை சிங்கள மொழியில், 'மீகமுவ' என அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் 'நிகம்பு' (Negombo) என்பார்கள்.
Hungery, இடாய்ச்சு மொழியில், Ungarn (உங்கார்ன்) எனப்படுகிறது.
அந்தந்த மொ… 
மேலும் காண்க
Ukraine என்ற நாட்டின் பெயரை அவர்கள் மொழியில் Ukrayina உக்ரயினா என்கிறார்கள். கெர்மானியரோ அதை உக்ரையினி என்பது போல் பலுக்குகிறார்கள். தமிழில் விக்கிப்பீடியா அதை உக்ரைன் என்கிறது. இப்படிப் பிறநாட்டுப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், மொழிப்பெயர்கள் என்பவற்றைத
மேலும் காண்க
அரிய செய்திகள் அறியத்தந்தீர்;மகிழ்ச்சி நன்றி.
கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா, மிக மகிழ்ச்சி <image.png>
10/22

 

 

இதன் தொடுப்பு:

https://www.facebook.com/notes/10157344134250966/ தனிப்பெயர்கள் 21 மார்ச்சு 2019

அன்புடன்

செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cDSygC-%3DND4SoioEqTvSPkKsXRJMETa1oqDBQEzGXm9A%40mail.gmail.com.

C.R. Selvakumar

unread,
Aug 14, 2025, 12:52:26 PMAug 14
to tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com
வணக்கம் அம்மையீர!

என் கேள்வியும் அஃதே! 😄

இப்பதிவிற்குக் காரணம் பலரும் ஆங்கிலத்தில் உள்ள இலக்கணத்தையும் மரபுகளையும் தமிழில் ஏற்ற முனைகின்றார்கள். அதனை மறுக்கும் முகமாக நான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இதனைத் தேடினால் கிடைப்பது அரிதாக இருப்பதால் இங்கு இப்போதைக்குப் பதிவு செய்து வைத்தேன்.

நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா அம்மா?  

அன்புடன்
செல்வா
Sent from my iPhone

On Aug 13, 2025, at 10:00 PM, rajam <ra...@earthlink.net> wrote:

“தனிப்பெயர்” என்ற சொல்லாட்சியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்!!  

C.R. Selvakumar

unread,
Aug 14, 2025, 6:16:19 PMAug 14
to tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com
அம்மையீர்,
நானும் கட்டுரையில்
 தமிழில் "proper noun" என்னும் ஒரு கருத்துருவே கிடையாது.”

தெளிவாகச்சொல்லுயுள்ளேன்.

கருத்துக்கு நன்றி

அன்புடன்
செல்வா
Sent from my iPhone

On Aug 14, 2025, at 12:52 PM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

வணக்கம் அம்மையீர!

rajam

unread,
Aug 14, 2025, 9:12:31 PMAug 14
to tamil...@googlegroups.com
கவலற்க! தேவையானால் கீழ்க்காணும் தொல்காப்பியப்பகுதியைப் பரப்புங்கள்

நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே
வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே
கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு …        (மதுரைத்திட்டத் தொகுப்பு)  

பிற பின்னர்,
ராஜம் 


Reply all
Reply to author
Forward
0 new messages