திராவிடம் என்பது தமிழ்ச் சொல் அல்ல!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5A6aNrAhDDOLYeA2e1CtZ2ENjGX%3D10tt6JPrnoUePX3A%40mail.gmail.com.
அதெல்லாம் இருக்கட்டும். எங்கள் தமிழ் பாட்டன் கட்டிய கோவிலில் சமற்கிருதத்தில் வழிபாடு எதற்கு?... கால காலமாக தமிழ் தான் இருந்தது. எப்படி எதற்கு வடமொழி புகுந்தது. நாங்கள் எதற்கு சமற்கிருத வழிபாட்டில் எங்கள் தமிழ் சாமிகளை வணங்கவேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6QfO%2Bx9sKi0AZYgcCsxr_i4x7WmiP7FopfTDq1XjKupA%40mail.gmail.com.
அந்த அளவிற்கு அரசர்களையும் முட்டாளாக்கி இருக்கிறீர்கள். கடவுளின் பெயரால்...அரசர்களின் நலன் என்ற போலி நம்பிக்கையூட்டலின் பெயரால்..வேறென்ன சொல்ல... முதல் நூற்றாண்டில் இல்லாத சமஸ்கிருத ஆதிக்கம் 5-ஆம் நூற்றாண்டில் மெல்ல தொடங்கி 13-ஆம் நூற்றாண்டிலேயே அதிக ஆதிக்கம் செலுத்தியது எப்படி?...எல்லாம் ஏமாற்று வித்தையாலதான்... உங்க புருடாவை வேறு யாரிடமாவது கூறுங்கள்...
உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்?
உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CA%2BvLfz04p5RfL58aEPJ7XScU5JyCqo41-MDqevaixJ1Si7VKcw%40mail.gmail.com.
உங்கள் தாய்மொழி சமற்கிருதத்திற்கு நன்றாக வக்காலத்து வாங்குகிறீர்கள். ஒரு வேலை மன்னர்கள் கற்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம். மன்னன் கற்றான் என்பதற்காக மக்களும் கற்றுக்கொள்ளவேண்டுமா? அதென்ன மக்களின் மொழியா?. எங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியானாலும் கற்றுக்கொள்வோம். ஆனால் இதுதான் வழிபாட்டு மொழி இதில்தான் செய்வோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?. நோகாமல் கோவிலுக்கு உட்கார்ந்துகொண்டு எங்கள் அன்னை தமிழை வெளியே தள்ளி உங்கள் அன்னை சமற்கிருதத்தை தூக்கி பிடிப்பது என்ன நியாயம்?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7e-M0hcAyt9Fo4VZ%2B8r73WgDFVSgj1Pp_sj3dV%3D0VdOQ%40mail.gmail.com.
இதோடு உங்களுடனான கருத்து பகிர்வை நிறுத்திக்கொள்கிறேன். கருத்து இல்லாமல் அல்ல. உங்களை போன்ற வெறி பிடித்த எண்ணம் கொண்டவர்களிடம் தர்க்கம் செய்வதை விட ஒதுங்கி போவதே சிறந்தது. நன்றி. வணக்கம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj55DLUTMfF5O%3D_569z0hVZDx5q0g4OfdNLJ1Y1O14x9oQ%40mail.gmail.com.
On Saturday, August 14, 2021 at 11:05:58 PM UTC-7 samoogam wrote:/// முதலில் வழிபாட்டிற்குரிய இடத்திற்குள் செல்லும் போது பாரம்பரிய உடைகளை மட்டும் அணிந்து செல்லும் விதமாக உரிய நெறிப்படுத்தலை மிகப்பெரிய அளவில் மக்களை சேரும் விதமாக ஏதேனும் செய்தால் நலமாக இருக்கும் .///
ஏதோ உடை என்று ஒன்றை உடுத்தி வந்தால் சரிஎல்லோரும் சட்டை போட்டுக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்அரைகுறை ஆடையுடன் வருவதை நிறுத்த வேண்டும்குறிப்பு:எனது கருத்து சேசாத்திரியின் இழையின் பொருண்மையை திசை திருப்பாமல் இருக்க,புதிய இழையில் ......
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/72b9abbf-7b2d-4291-aebb-31d94e3f366fn%40googlegroups.com.
சட்டை போட்டுக் கொண்டுவந்தால் நன்றாக இருப்பதை வலியுறுத்தும் அதே சமயத்தில் பெண் குழந்தைகளை கையில்லா ஆடை (sleeveless dress என்று நினைக்கிறேன்) மற்றும் கண்ணாடி போன்று அணிந்தும் அணியாத்து போன்ற ஆடை (transparent) பலர் நன்றாகவே பழக்கி வருகிறார்கள். கேட்டால் இந்த வயதில் போடாமல் எந்த வயதில் என்கிறார்கள்.ஆடைக்குண்டான
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj55DLUTMfF5O%3D_569z0hVZDx5q0g4OfdNLJ1Y1O14x9oQ%40mail.gmail.com.
ஓநாயின் அறிவுரை எனக்கு தேவையில்லை. இரண்டகம் செய்யும் வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். அது கேவலமான புத்தி. இது எனது வேண்டுகோள். இல்லையென்றால் நான் சுக்குநூறாக உடைத்துக்கொண்டு இருப்போம் உங்கள் சகுனி வேலைகளை...
தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம்!...-- கே.எஸ். இராதாகிருஷ்ணன்------------------------------------------------------------திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.------------------------------------------------------------
தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறானதாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்திரிக்க சிலா் விரும்புகின்றனா். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வாா்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சம்ஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை ஆண்டவா்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரா்களாய் விட்டாா்கள் (அதிகாரம் 10, 44-ஆவது செய்தி, மனுதா்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. ‘தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹு ஆஸ்வாத்ய தவயத்’”என்கிறது ஆதிசங்கரரின் ‘சௌந்தா்ய லஹரி’.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீா் சுவட்டில் தென்னாட்டு பிராமணா்களை ‘திராவிட பிராமணா்கள்’ என்று குறிபிட்டுள்ளது. பாா்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வைணவ ஆச்சாரியாா் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றாா் எல்லீஸ்.சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல ‘பாகவதம்’ என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56 நாடுகளில் திராவிட நாடும் ஒன்று.
விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன் முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்.இராமாநுஜா் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், ‘திருக்கோளூா் பெண்பிள்ளை ரகசி’யத்தில் இராமாநுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது.திரமிளம்,“திராவிடம்”எ
ன்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. திரமிள சங்கம் மதுரை சமண முனிவா் வஜ்ரநதியால் கி.பி 470-இல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்ற பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிடுகின்றனா். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம்.தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னா் விக்கிரம சோழனின் 11-ஆவது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது.“திரிபுவன சக்கிரவா்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிா்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம்– 714, பக் 670, செளத் இண்டியன் டெம்பிள் இன்ஸ்கிரிப்ஷன் - வால்யூம் 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது.இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூா் தற்போதைய தமிழகத்தின் கரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.‘யிப்படி அநேகஞ் சதுா்யுகம் பூசை கொண்டருளிய தேவா் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோா்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தா் பிரியன் பக்தவத்சல பாா்பதி வல்லவன் பாா்பதி மநோகரன் பாா்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவா்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பாா்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்..’” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் புலவா் செ. இராசு).இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவா் செ. இராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளாா். இந்தச் செப்பேடும் 1584-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு வலுசோ்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூா்காங்கேயா் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.‘செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பாா்வதி தேவியம்மான அா்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்..’ (பக் 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துபி ஆண்டில் எழுதப்பட்டது). இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், ‘திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் போ் பெற்றவரான, சான்றோா் குலத்தில், மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகா் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான..’ (பக் 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தா், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியாா் போன்றவா்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞா் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 - 1936) வாழ்க்கை வரலாற்றை கபாலி சாஸ்திரி எழுதினாா். ‘வாசிஷ்ட வைபவம்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் திராவிட தேசத்தில் ‘சோ்மாதேவி’ என்ற இடத்தில் கிா்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவா்களால் பாரத்வாஜாச்ரமம் ஒன்று நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது (‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்’ - பழ. அதியமான்).
திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளாா். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் திவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியா் ச.வே. சுப்பிரமணியம் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றாா். பிஷப் காா்டுவெல் 1856-இல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் திராவிடம் என்ற பதத்தை நிலைநாட்டிய அதே காலகட்டத்தில் அயோத்தி தாசா், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பைத் தொடங்கினாா். 1899-இல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு ‘திராவிடப் பிரகாசிகை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.பிஷப் காாடுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனாா், ‘திராவிட நல் திருநாடு’”என்று குறிப்பிட்டிருக்கிறாா். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907-இல் ‘திராவிடாபிமானி’”என்ற வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறாா். ‘திராவிட உத்கல வங்கா’ என்று பாடுகிறது இரவீந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.
பெரியாா், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழைமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. தமிழா் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வாா்த்தை புழக்கத்தில் உள்ளது.திராவிடம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயா் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிட தேசியம்.கட்டுரையாளா்: செய்தி தொடா்புச் செயலளாா், திராவிட முன்னேற்றக் கழகம்.

அமெரிக்கா கனடா ஆத்திரேலியா போன்ற மேலை நாடுகளில் வாழும் தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் தமது நாட்டில் trouser உடன் திரியும் ஆடவரை நிரந்தரமாக பேன்டு போட வைத்தால், two piece ல் திரியும் கடற்கரை மாதுகளை நாகரீகமான உடைய அணியச் செய்தால் "மானம் காத்த மற மங்கை" என்ற பட்டத்தையும் "மானம் காத்த மறதமிழன் என்ற பட்டத்தையும் நான் மின் முகவரி மூலம் அனுப்ப அணியமாக உள்ளேன். இதற்கு 100 பேரை அவ்வாறு மாற்றிய காணொளியை அனுப்பினால் போதும்.சென்னை சவுகார் பேட்டையில் பெண்கள் சிலர் தெருக்களில் கீழ்வரும் படத்தில் உள்ளது போல திரிகின்றனர். இதற்கு மேலாடை இல்லாத ஆடவர் எவ்வளவோ மேல். இத்தகு ஆடைகள் போட்டு பெண்கள் வரக்கூடாது.
On Sunday, August 15, 2021 at 8:27:18 PM UTC-7 sseshadri69 wrote:அமெரிக்கா கனடா ஆத்திரேலியா போன்ற மேலை நாடுகளில் வாழும் தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் தமது நாட்டில் trouser உடன் திரியும் ஆடவரை நிரந்தரமாக பேன்டு போட வைத்தால், two piece ல் திரியும் கடற்கரை மாதுகளை நாகரீகமான உடைய அணியச் செய்தால் "மானம் காத்த மற மங்கை" என்ற பட்டத்தையும் "மானம் காத்த மறதமிழன் என்ற பட்டத்தையும் நான் மின் முகவரி மூலம் அனுப்ப அணியமாக உள்ளேன். இதற்கு 100 பேரை அவ்வாறு மாற்றிய காணொளியை அனுப்பினால் போதும்.சென்னை சவுகார் பேட்டையில் பெண்கள் சிலர் தெருக்களில் கீழ்வரும் படத்தில் உள்ளது போல திரிகின்றனர். இதற்கு மேலாடை இல்லாத ஆடவர் எவ்வளவோ மேல். இத்தகு ஆடைகள் போட்டு பெண்கள் வரக்கூடாது.பிறகு ஏன் கோவிலில் அரைகுறை ஆடை பெண்களை சிலை வடித்து வைத்து கண்டு களிக்கிறார்கள்
திராவிடம் குறித்து மாரிராஜன் தொல்லியல் இலக்கிய சான்றுகள் கொடுத்து எழுதிய கட்டுரை. மேலுள்ள சுட்டியில் இருக்கிறது.பலபடங்கள் கொடுத்து எழுதியுள்ளார் .வெட்டி ஒட்டுகையில் படங்கள் வரவில்லை. ஆர்வம் உள்ளவர் சுட்டி வழி சென்று படிக்கலாம்.திராவிடம் ....-- மா.மாரிராஜன்திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்....தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்....
இப்பெருமைமிகு சொல்லை....இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்....ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!! இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க இலக்கியங்கள் கூறும். ஆனால் வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்?சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை...
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட என்றார்கள். ஆக திராவிட என்பது தமிழ்வழி வந்ததல்ல.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது. அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார். திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார். இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.
இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர் என்று கூறுவார்கள். இது திராவிட அரசியல் தாக்கத்தால் உண்டானது இவ்வாறு கூற தமிழருக்குத்தான் உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு. தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது. ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?
தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம்.எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது.ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8).
இதுவும் தமிழ் வழிச்சான்று அல்ல மாறாக அயலவர் தவறாக, சிதைவாகப் பலுக்கியது
மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர். எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்....திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்?இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?ஒரு நீண்ட பட்டியலே உள்ளது ....
அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில் கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி...."ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"
தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.(Epigraphia Indica. Vol. 20.No. 7 )'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது. தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது. இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு. காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக, வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.
அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து)
ஆக, த்ரமிட, திரமிளா என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.
வடமொழியில் தமிழ் எவ்வாறு குறிக்கப்பட்டது என்பதை ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..1.காமிகாகமம்என்னும் ஆகம நூல்..அர்ச்சனா விதி படலம்...தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்) அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும் பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்."ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வாஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..
2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான 'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது தமிழ் எழுத்துகளைக் குறிக்கிறது.
3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.
4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.
5. ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது.
6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா ஸங்கா' என்கிறார்.
7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.
8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.
9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.
12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.
13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.
14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.
16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில், "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.
18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது. கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர் தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.
19 . கி.பி.10 ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர், பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்", அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.
///ஒரு தமிழ் நூலில் கூட திராவிட என்ற சொல்லாட்சி தமிழை குறித்து இல்லையே. ///தமிழ்த்தாய் வாழ்த்து ???
திராவிட வேதம் என அறியப்படும் நூல் எது?_________________கோடிட்ட இடத்தை நிரப்புக
அடுத்தது திராவிடம்.
“திராவிடம்” என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல் பாகவதத்தில் (8-5-49) வருகிறது. தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள், முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள். எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.. பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார். தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு) “….வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார். வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ராபர்ட் கால்டுவெல்ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (கி.பி. 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.
“தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான “திராவிட இனம்” என் கருத்தாக்கம்தான்.
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils to allied people in inferior grades of culture. The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an ethnological distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory.
P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார். ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ.வெ.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது. தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில், ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.
நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் “திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.“ – ஜனவரி 5, 2011.
ஆகவே, எனக்கு என்னவோ வைணவ இலக்கியவாதிகள்தான் திராவிடக் கருத்தியல் அடிமைகளாகத் தெரிகிறார்கள்.
பிற்காலத்தவர்கள் எல்லாம் முற்காலத்து நடைமுறை வழக்கை,
அதாவது திராவிடம் = தமிழ் என்ற வழக்கை
இவர்களை அடியொட்டி பின்பற்றினார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
// வால் என்று குறிப்பிட்டது வைணவ ஆச்சாரியர்களை//நானும் அவர்களைத்தானே குறிப்பிட்டேன்!!!!இப்பொழுது; திராவிட = தமிழ் என்று கூறிக் கொண்டிருந்தவர் யார் என்று தெரிந்ததன்றோ...அவர்கள் கூற்றுப்படி ......திராவிடம் = தமிழ்அவ்வாறென்றால்திராவிடர் = தமிழர்என்றுதான் பொருள் கொள்ள முடியும்
திராவிடம் = தமிழ் என்றால்திராவிடர் = தமிழர் என்றுதான் பொருள் கொள்ள முடியும் என்பது.அதாவது ஒரு பொருட் பன்மொழி
பாரதம் என்றாலோ இந்தியா என்றாலோ அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை அரசியல் ஆக்குவதில்லை.எது குறிப்பிடப்படுகிறது என்று புரிந்து கடந்து செல்வார்கள். அவ்வாறே ஆங்கிலம் இங்கிலீஷ் என்பது போல எத்தனை எத்தனையோ இணைகள் இவை யாவும் காலக்கோட்டில் அந்த அந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்ப கையாளப்படும்/கையாளப்பட்ட சொற்கள்
இந்தியன் நேஷனல் காங்கிரஸ் பார்ட்டி என்பதைப் பேராயக் கட்சி என்றால் அதன் கொள்கை மாறிவிடுமா ?கம்யூனிஸ்ட் பார்ட்டி என்றாலோ பொதுவுடமைக் கட்சி என்றாலோ கட்சியின் கொள்கை மாறப்போவதில்லை - அது சமத்துவம்தான்நீங்களும் திராவிட, திராவிட முன்னேற்ற, அண்ணா, அம்மா என்று கட்சிகள் ஊர்வாகிக் கொண்டே சென்றாலும் அவை தமிழர் என்ற பொருண்மையில் உள்ளவை என்று புரிந்து கொள்ளத் தடை ஒன்றும் இல்லை
மக்களின் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் எங்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் "இயக்கத்தின்" பெயர் எதுவாக இருந்தால் என்ன - அதுவும் அது சென்ற நூற்றாண்டின் அரசியல்.
ஒன்றில் நீங்கள் தெளிவு பெறுவது நலம்.தமிழ் மக்களுக்குத் தமிழக வரலாறு தெரியும்.மீண்டும் வலியுறுத்த .... திராவிடக் கழகம் என்று பெயர் இருந்தால் அதன் அடிப்படைக் காரணம் சென்ற நூற்றாண்டு அரசியல் சூழல் / தேவை இதை அரசியல் செய்வது உள்நோக்கம் கொண்டது.
திராவிட என்ற வடமொழிச் சொல்லைத் தமிழாக மாற்றவேண்டும் என்ற குறள் எழுப்புவாதிறக்குப் பதில் ...உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் ஏன் அனைத்து கோயில் பெயர்களையும் அனைத்து கடவுளர் பெயரையும் தமிழாக்குவேன் என்று களத்தில் இறங்கக் கூடாது? சமஸ்கிருதத் தாக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது? உங்கள் தமிழார்வத்தைச் சரியான முறையில் செயலாக்கப் படுத்தலாமே!!!
பாருங்கள் திபெத்தில் வாழும் மக்கள் சாங்போ என்று தான் இன்றும் பிரம்மபுத்திராவைக் கூறுகின்றனர்.ஆனால் நம் தமிழருக்கோ ஒவ்வொரு சாமியின் பெயரும் சமஸ்கிருதம், கோயிலின் பெயரும் சமஸ்கிருதம்,பிறக்கும் குழந்தைகளுக்கும் சமஸ்கிருதப் பெயர் தமிழராக நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கலாமே.அரசியல் .... தேவையில்லை; அதுவும் வேண்டும்பொழுது சமஸ்கிருத ஆதரவு, வேண்டும்பொழுது சமஸ்கிருத எதிர்ப்பு,என்ற சூழ்ச்சி அரசியல் கொஞ்சமும் தேவையில்லை.
அத்தகைய செயல்பாடு கற்றவர் புழங்கும் இடத்தில் அவர்களை முட்டாள் என நினைத்துச் செயல்படுவதுஅத்துடன் தயக்கமின்றி முட்டாள் மூடர் என்ற வசைச் சொற்கள் கொண்ட பதிவுகளையும் அச்சில் ஏற்றவே கூசும் சொற்களையும் பதிவிடுவது முதிர்ச்சி பெறுங்கள் சேசாத்திரி நீங்கள் எங்கு, என்ன, யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற சூழலைப் புரிந்து கொண்டு பதிவிடுங்கள்
வைணவ ஆச்சாரியர்கள் திராவிட வேதம் என்றது தெலுங்கு நூலையா ?
திராவிட வேதம்

ஆதரிப்பது வேறு காலக்கோட்டில் வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. அத்துடன் ஒரு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றுவது தேவையில்லை.
///திராவிடம் தமிழ் இனக்கேடு என்பது தமிழர் வாழ்வியல் அனுபவம்///‘திராவிட வித்யாபூஷணம்’ - உ வே சா அவர்களின் சிலையின் கீழேஇவ்வாறு எழுதி வைத்தால் சரிப்பட்டு வராதுதமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது வேண்டுமானால் உறங்கச் செல்லலாம்
திராவிடம் என்ற சொல்லின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பு மையம் கொண்டுள்ள சரியான இடம் எதுவென்று உணர்ந்தால் போதுமே.
திராவிடம் குறித்து மாரிராஜன் தொல்லியல் இலக்கிய சான்றுகள் கொடுத்து எழுதிய கட்டுரை. மேலுள்ள சுட்டியில் இருக்கிறது.பலபடங்கள் கொடுத்து எழுதியுள்ளார் .வெட்டி ஒட்டுகையில் படங்கள் வரவில்லை. ஆர்வம் உள்ளவர் சுட்டி வழி சென்று படிக்கலாம்.
திராவிடம் ....
-- மா.மாரிராஜன்திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்....தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்....
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்....
இப்பெருமைமிகு சொல்லை....இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்....ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!! இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க இலக்கியங்கள் கூறும். ஆனால் வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்?சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை...
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட என்றார்கள்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது. அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார். திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார். இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.
இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை. ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர் என்று கூறுவார்கள். இவ்வாறு கூற தமிழருக்குத்தான் உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு. தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது. ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?
தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம்.எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது.ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8).
மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர். எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்....திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்?இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?ஒரு நீண்ட பட்டியலே உள்ளது ....
அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில் கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி....
"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"
தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.(Epigraphia Indica. Vol. 20.No. 7 )'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது. தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது. இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.
பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு. காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு. செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக, வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.
அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து)
ஆக, த்ரமிட, திரமிளா என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.
வடமொழியில் தமிழ் எவ்வாறு குறிக்கப்பட்டது என்பதை ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..1.காமிகாகமம்என்னும் ஆகம நூல்..அர்ச்சனா விதி படலம்...தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்) அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும் பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்."ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வாஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"
ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான 'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது தமிழ் எழுத்துகளைக் குறிக்கிறது.3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.5. ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது.6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா ஸங்கா' என்கிறார்.
7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.
8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.
9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.
11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.
12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.
13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.
15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.
16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில், "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.
18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது. கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர் தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.
19 . கி.பி.10 ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர், பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்", அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.
--References:1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும்.3. Epigrphia Indica Vol. 20.4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில் - திராவிடக்குறிப்பு
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/71962bc7-14c3-4c5c-8157-059343003d5fn%40googlegroups.com.