ஆசீவகமும் அரசியலும்

85 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Apr 25, 2021, 11:24:28 PM4/25/21
to தமிழ் மன்றம்

Seshadri Sridharan

unread,
Apr 26, 2021, 4:46:33 AM4/26/21
to தமிழ் மன்றம்
அண்மைக் காலமாக தமிழ் தேசியத்தின் பெயரால் ஆசீவகம் தான் தமிழர் மதம் என்ற கருத்து  அரசியல் முழக்கமாக முன்வைக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக இந்து மத வெறுப்பு எதிர்க் கருத்தாகவே ஆசீவகம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஆசீவகம் நால் வர்க்க வாழ்க்கையின்  துறவு நெறியை ஒரு கூறாகவே கொண்டது என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்க வில்லை. அந்த மரபு தமிழர் மரபு அன்று.  அது இமாச்சலத்தில் வாழ்ந்த பிராமணரால் இந்தியாவின் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.  அதையே சமணம், புத்தம் பெரு நெறியாக கடைபிடித்தன. தமிழ் பிராமணர்கள் கையாண்ட கணி, அந்தை ஆகிய சொற்களையே ஆசீவகமும் கைக்கொண்டது. அது தனக்கு என்று தனியே சொற்களை உருவாக்கிக்கொள்ள வில்லை என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. மாமண்டூர் கல்வெட்டில் குறிக்கப்படும் கணி  பிராமணரை குறிப்பது அதுவே மாங்குளம், மறுகால்தலையில் ஆசீவகரையும் குறிக்க வந்துள்ளது. வெளிப்படையாக இது ஆசீவகர் என்று தெளிவாக சொல்லும்படி எந்த கல்வெட்டும் இல்லை சித்தர் ஆவியுடன் பேசும் (clairvoyant) முறையில் தான் இன்னின்ன ஆசீவகம் என அறிய முடிகிறது, கணினந்தசிரியரை தவிர்த்து பார்த்தால் மேலும் 6 கல்வெட்டுகள் தாம் ஆசீவகர் தொடர்பானவை. அவை கீழே 

கல்வெட்டு 1:1  > கணிய் நந்த அஸிரிய்இ  குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

 கல்வெட்டு 1:2 > கணிய் நத்திய் கொடிய்அவன் 

கலவெட்டு 1:3 > கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

கல்வெட்டு 1:4 > கணிஇ நதஸிரிய் குவ[ன்] -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன் 

மறுகால்தலை: கல்வெட்டு 6:1> வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்.

மேட்டுப்பட்டி: கல்வெட்டு 9:6> சந்தந்தை சந்தன்

மேட்டுப்பட்டி கல்வெட்டுகள் பலவற்றில் அந்தை என்பதற்கு பிச்சை கொண்டு வாழும் பிராமணத் துறவி என்று (clairvoyant) விளக்கம் சொல்லிவந்த இராமச்சந்திர பாபுஜி இந்த கல்வெட்டை மட்டும் ஆசீவக துறவி என்றார்.

அழகர்மலை: க ல்வெட்டு 12:12 > கணிநாகன் கணிநதன் இருவர் அமகல் 

ஆனைமலை: கல்வெட்டு 19:1> இவகுன்றது உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் / அத்துவாயி அரட்டகாயிபன்

தேமொழி

unread,
Apr 26, 2021, 6:46:16 AM4/26/21
to தமிழ் மன்றம்
/// கணி  பிராமணரை குறிப்பது///

எந்த கல்வெட்டு கலைச்சொல்  அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?

Seshadri Sridharan

unread,
Apr 26, 2021, 10:27:17 AM4/26/21
to தமிழ் மன்றம்
On Mon, Apr 26, 2021 at 4:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// கணி  பிராமணரை குறிப்பது///

எந்த கல்வெட்டு கலைச்சொல்  அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?

எந்த அகராதியிலும் கிடையாது. தியானத்தில் உயர்நிலை எய்தியவருக்கான பட்டம் கணி. ஆசீவகம் பிராமணருக்கு பிற்பட்ட மதம் அதிலும் தடம்பிறழ்ந்த பிராமணரால் உருவான மதம் அது.  பிராமணர் பயன்கொண்ட சொல்லையே ஆசீவகம் பயன்கொண்டதால் பிராமணரை குறிப்பது என்றேன். தவறு ஒன்றும் இல்லை. இதில் ஒன்று பாருங்கள் ஆசீவகம் தோன்றிய காலத்தில் உருவான சமணர் இச்சொற்களை பயன்கொள்ளவில்லை. ஏனெனில் அது வடநாட்டில் இருந்து வந்தது. 

 ஒரு முகாமையான செய்தி ஆசீவகத்தை தமிழர் மதம் என முன்மொழிந்த ஆதிசங்கரன் இன்று மாய்வுற்றார். கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆசீவக கருத்தாக்கம் தமிழ் இணைய உலகில் அதிவேகமாக பரவி ஒரு கலக்கலை உண்டாக்கியது என்பது முழு உண்மை. பசியெடுத்தவனுக்கு ஏதேனும் தின்றாக வேண்டிய நிலை. அப்படித்தான் இந்த தமிழன் ஆசீவக கருத்தாக்கத்தை விழுங்கினான்.  

Seshadri Sridharan

unread,
Apr 26, 2021, 10:41:48 AM4/26/21
to தமிழ் மன்றம்
”ஆசீவகத்தின் அழியாச் சின்னங்கள்’ என்ற அவரது சின்னஞ்சிறு நூல் தான் என்னைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தூண்டியது. அன்னாரது மறைவு தமிழ்தேசியர்களுக்கும்,ஆசிவக ஆய்வாளர்களுக்கும் மிகப் பெரிய இழப்பே.எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

image.png    image.png

தேமொழி

unread,
Apr 26, 2021, 2:20:59 PM4/26/21
to தமிழ் மன்றம்
On Monday, April 26, 2021 at 7:27:17 AM UTC-7 sseshadri69 wrote:
On Mon, Apr 26, 2021 at 4:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// கணி  பிராமணரை குறிப்பது///

எந்த கல்வெட்டு கலைச்சொல்  அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?

எந்த அகராதியிலும் கிடையாது.

kaniyan.jpg

மேலும்:

----- ஆசாரக் கோவை வழியாக எவ்வாறு வானியல் கணிக்கும் தொழில் ஒருசாரருக்கு என ஒதுக்கப்பட்டது என அறியலாம். 

 “அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப திலை. (92)

பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.
------------------------------------

இனி நீங்கள் இதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று எண்ணும் கல்வெட்டுக் கலைச்சொற்களுக்கு ஒரு தனி அகராதி எழுதிவிடுதல் நலம். 

அல்லது என் அகராதிப்படி இதன் பொருள் இதுவாக இருக்கிறது என்றோ உங்கள் பொருள் விளக்கத்தில் குறிப்பிடுதலும் நன்றே. 

நான் கல்வெட்டு தொல்லியல் என்பவற்றை ஏதோ ஆர்வத்தால் படித்துக்கொண்டிருப்பவள், அத்துறையில் கற்றுத் துறைபோகிய வரலாற்று ஆய்வாளர் அன்று. ஆயினும் உங்கள் பதிவுகளில் எதிர்பாரா விளக்கங்களைக் காண்பது வழக்கமாகவே உள்ளது. 

C.R. Selvakumar

unread,
Apr 26, 2021, 4:07:41 PM4/26/21
to தமிழ் மன்றம்

முனைவர் தேமொழி,

ல்ல காட்டு (“கணிமுற்றூட்டு”), நல்ல கருத்து.

நன்றி.

அன்புடன்

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/2744341b-fffe-4132-b210-6d4b8ceaabd8n%40googlegroups.com.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Seshadri Sridharan

unread,
Apr 26, 2021, 10:33:54 PM4/26/21
to தமிழ் மன்றம்
On Mon, Apr 26, 2021 at 11:51 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Monday, April 26, 2021 at 7:27:17 AM UTC-7 sseshadri69 wrote:
On Mon, Apr 26, 2021 at 4:16 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
/// கணி  பிராமணரை குறிப்பது///

எந்த கல்வெட்டு கலைச்சொல்  அகராதி நூலில் அப்படி பொருள் கொடுக்கப்பட்டுள்ளது, மேற்கோள் தர இயலுமா?

எந்த அகராதியிலும் கிடையாது.

kaniyan.jpg

மேலும்:

----- ஆசாரக் கோவை வழியாக எவ்வாறு வானியல் கணிக்கும் தொழில் ஒருசாரருக்கு என ஒதுக்கப்பட்டது என அறியலாம். 

 “அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப திலை. (92)

பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.
------------------------------------

இனி நீங்கள் இதன் பொருள் இதுவாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று எண்ணும் கல்வெட்டுக் கலைச்சொற்களுக்கு ஒரு தனி அகராதி எழுதிவிடுதல் நலம். 

அல்லது என் அகராதிப்படி இதன் பொருள் இதுவாக இருக்கிறது என்றோ உங்கள் பொருள் விளக்கத்தில் குறிப்பிடுதலும் நன்றே. 

நான் கல்வெட்டு தொல்லியல் என்பவற்றை ஏதோ ஆர்வத்தால் படித்துக்கொண்டிருப்பவள், அத்துறையில் கற்றுத் துறைபோகிய வரலாற்று ஆய்வாளர் அன்று. ஆயினும் உங்கள் பதிவுகளில் எதிர்பாரா விளக்கங்களைக் காண்பது வழக்கமாகவே உள்ளது. 

அந்தை, அந்தணன் ஆகிய சொற்கள் பண்டு பிச்சை எடுத்து வாழும் துறவு பிராமணரை குறித்தது. அந்தணன் பின்னாளிலும்  பிராமணரை தான் குறித்தது ஆனாலும்  பல்லவர் காலத்திலேயே பிராமணர்  பிச்சை கொண்டு வாழும் துறவு வாழ்வை கை விட்டுவிட்டனர். வாழ்க்கை முறை மாறிய பின்னும் அச்சொல்லை பயன்படுத்தியது குற்றம். ஆனாலும் அச்சொல் சமூகத்தில் அதிக மதிப்பை பெற்றிருந்ததால் அதை பயன்படுத்தினர்.

கணி என்பது தியானத்தின் மூலம் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே குறி சொல்லும் திறன் பெறுபவர் கொண்ட பட்டப் பெயர். ஆனால் பிற்காலத்தில் வானிலையை வைத்து எதிர்காலத்தை கணித்து கூறுவதை குறிப்பதாக ஆகியிருக்கிறது. இதுவும் அந்தணன் போல குற்றம் உடையதே. 

Reply all
Reply to author
Forward
0 new messages