--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7doScExgx4kCgUMD7e69Fc970NuhYx%2BGGYsu1qxhKHw7w%40mail.gmail.com.
அவை சங்கச்சொற்கள் அல்ல, தங்கச் சொற்கள்
இனியவே பொருத்திக் கொள்ளவேண்டும்.
பலராமன் என்னும் நண்பர் அருமையான கலைச்சொற்களைக்
கதையில் இயல்பாக இனிதாகப் பொருத்தி ஆண்டுள்ளார்.
ஒரு கிரந்த எழுத்தும் இல்லை. பேச்சு நடையில்
சொல் வடிவில் சிறிது உறழ்ச்சி . புதிய
கண்ணோட்டத்தில் விருவிறுப்பாக ஓடும் கதை. ஒரு
புதிய பாங்கில் எழுதியுள்ளார்.
அமேசானில் கிட்டுகின்றது. பெயர்: எதிர்கால நினைவுகள்

அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6hd-r8zfA_Fw%3Ds2xTzUVeirEtPQm%3DRPrmZ5R%2B_XHC43AQ%40mail.gmail.com.
அச்சச்சோ, அப்படியெல்லாம் இல்லை சொ.வி ஐயா!
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGKcnahusE1rx2uTS9nOpAgmnm8z2YomNM9%2BR7b%2BVeF%2BOKTybg%40mail.gmail.com.
என் கருத்துகளை உங்களின் கருத்துக்குக்கீழே இட்டுள்ளேன்.
1. முதலில் … மன்பதை என்ற சொல்லை எப்படிப் பிரிக்கவேண்டும் என்று தெரியவேண்டும்.
சங்க இலக்கியத்தில் ஆளப்பட்ட சொல்லை (பின்னரும் பல இலக்கியங்களிலே
ஆளப்பட்ட சொல்லை) எப்படிப் பிரிக்கவேண்டும் என்று உங்களைப்போன்ற
தமிழறிஞர்கள்தாம் சொல்லவேண்டும்.
2. அடுத்து … இதே போல அமைப்புள்ள … ‘பதை’ என்ற ‘பின்னொட்டு’ அமைந்த சொற்களைக் கண்டறியவேண்டும்.
ஆம், ஆனால் தேடிப்பார்த்த அளவிலே ஏதும் கிடைக்கவில்லை.
கட்டாயம் ஓரிரு சொற்களாவது இருக்கவேண்டும் என்பது
என் எதிர்பார்ப்பு. இன்னும் தேடவேண்டும். சொற்களின் பகுதிகளைத்
3. nome (https://en.wikipedia.org/wiki/Nome), ome (https://en.wikipedia.org/wiki/Ome)
இப்பொழுது நிறுவப்படாத என் கருத்துகளைப் பகிர்கின்றேன்.
மன்பது + ஐ = மன்பதை ஆகும் (உகரம் நீங்கி ஐகாரம் ஏற்றல்).
பொதுவாக வினைச்சொல்லாக இருந்தால் தொகு + ஐ = தொகை
வகு + ஐ = வகை என்பன போன்று பெயர்ச்சொற்கள் ஆக்கலாம்.
மன்பது என்பது வினைச்சொல் போல தெரியவில்லை
மன்பது என்பதை மன்+பது என்று பிரிக்கவேண்டுமா மன் > மன்பு+அது என்று
பிரிக்கவேண்டுமா என்றும் தெரியவில்லை.
பற்று என்னும் சொல் சேர்வது பற்றிக்கொள் என்னும் பொருள் தரும்
பற்றம் என்றும் ஒரு சொல் உள்ளது இதன் பொருள் கூட்டம், கற்றை என்று
அகராதி சொல்லுகின்றது (கழக அகராதி).
தமிழ்ப்பேரகராதியும் கீழ்க்கண்டவாறு காட்டுகின்றது:
பற்றம் paṟṟam , n. பற்று-. 1. Collection; mass, as of hair; கற்றை. குழற் பற்றத்தையும் (சீவக. 1707).
2. Crowd, multitude; கூட்டம். ஆட்டுப்பற்றம். Nāñ. 3. Thickness, bulk; கனம். (J.)
4. Swelling; வீக்கம். 5. Grasping, taking hold, bearing; துணையாகப் பிடிக்கை.
பற்றம் > பத்தம் என்றும் ஆகி குவியல் என்னும் பொருள் தருகின்றது
தமிழ்ப்பேரகராதி:
பத்தம்¹ pattam , n. cf. பற்றம். Mass, heap, collection; குவியல். தூற்றும்பத்தம் (பட்டினத்துப். கோயிற்றிரு. 2)
பத்தம் பத்து ஆகி பது எனக் குறுகியிருக்கலாமோ என்றும் கருதலாம்.
மன்+பது + ஐ என்பது ஒரு வகையில் கூடும் ஆனால் பது என்பதல் சொல் வடிவமும்
பொருளும் உறுதிப்படவேண்டும்.
பதை என்பது சேர்க்கை, கூட்டத்தொகுதி என்னும் பொருள் சுட்டுவதாக
உணர்கின்றேன் ஆனால் உள்ளுணர்வன்றி தக்க சான்று கிட்டவில்லை.
பதை என்பது முழுமையான தொகுதியைச் சுட்டுமென்றால் பயனுடைய
ஒரு பின்னொட்டுச் சொல்லாக இருக்கும்.
அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/0EB96003-C9BA-4B61-B963-A92BED2C9EE2%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/BBAC11E9C8904CE0B6B1E6D1D733C9E0%40LAPTOPOEHTB0H7.
Tēvāram 4:36__2
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;---நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்---குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்---பழனத்து எம் பரமனாரே.
-- jlc (in Müssen)
மிக்க நன்றி இழான் (Jean-Luc).
கில்-கில்-தல், கிற்றல் என்பதைப் பார்த்திருக்கின்றேன். செய்யகில்லேன் என்று
நானே சில இடங்களில் பயன்படுத்தியும் உள்ளேன். இது நன்கு அறிந்த
சொல்லாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் இசானபோர்டு இசுட்டீவர்
(Sanford Steever) இந்தக் ‘கில்’ என்னும் சொல்லைப்பற்றி புதிய கண்டுபிடிப்பாக
எழுதியதைப் பார்த்து சற்று அதிர்ச்சியுற்றேன்.
இதைபற்றி அப்பொழுதே எழுதவேண்டுமென்று நினைத்தேன்.
தமிழ்ப்பேரகராதி தெளிவாக, கில்-தல், கிற்றல் பற்றிக் கூறுகின்றது:
கம்ப இராமாயணத்திலே பல இடங்களில் வருகின்றது இச்சொல்.
“துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்” என்று ஈரிடங்களில் வருகின்றது.
அன்புடன்
செல்வா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/be8c76b9-7b52-627b-f7f4-36c9eb6aa42c%40gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7eNB1HC9jJcz%3DUfK26v6%2BW45iovk5LWE%2Be9sJukofpfZw%40mail.gmail.com.
((PARI 12, lines 36-39))
Best wishes
-- Jean-Luc (in Müssen)
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.
அம்மையீர்,
வணக்கம்.
பரிபாடல் - உரை பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு பக் 268-9
….துறை
முன்றுறை நிறையணி நின்றவர் மொழிமொழி
ஒன்றல பலபல வுடனெழுந் தன்றவை
எல்லாந் தெரியக் கேட்குநர் யாரவை
கில்லா கேள்வி கேட்டன சிலசில
என்னும் வரிகளுக்கு
துறை முன்றுறை நிறையணி மொழிமொழி - அப்பொழுது அவ் வையையின்கண் நீராடுந் துறையின்
முன் நிறைந்த அணி அணியாக நின்ற மாந்தர் மொழிகின்ற மொழிகள்.
ஒன்றல பலபல உடனெழுந்தன்று - ஒன்றையொன்று ஒவ்வாது பலபலவாக ஒருகாலத்தெழுந்தன.
யாரவை எல்லாம் தெரிய கேட்குநர்- யாரே அம்மொழிகளை எல்லாம் பொருள்விளங்கக் கேட்க
வல்லார்.
கில்லா - அவை கேட்டல் கூடா
கேட்டன சிலசில - எம்மாற் கேட்கப்பட்டன ஒருசிலவேயாம்
என்று விளக்கம் தருகின்றார்.
.
இது பற்றிய என் கருத்துகள்:கில்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று நினைக்கின்றேன்.
எனவே கில் என்பது அடிச்சொல் என்று கருதுகின்றேன். இதன் பொருள் இயலுதல், (ஒன்றைச் செய்யும் வல்லமை கொண்டிருத்தல்). இப்பொருள் இப்பாட்டில் முற்றிலும் பொருந்துவதாகவே கருதுகின்றேன்.
பொ.வே.சோ அவர்கள் கூறும் “கூடா”: என்பது ‘சேராத, முடியாத, செய்ய இயலாத (நடைபெறாத, நடைபெற இயலாத) என்னும்
பொருளில் ஆண்டுள்ளார் என்று கருதுகின்றேன்.
அன்புடன்
செல்வா
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/B546168F-A962-42E5-9528-E6D8AC564701%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/0cc96960-dd0b-4a47-8594-9f2567c98fc4n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/0481CC70-C2A7-46AA-AFCB-571BFE096D26%40earthlink.net.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7fWuvRqoqOKL4OyHkc3RtAxn%3Drj05C0xm8yG6OT2fSaMg%40mail.gmail.com.
<VSR_Gram_page_423_extract.png><VSR_Gram_page_424_extract.png>
நானும் வலிமிகுந்திருக்கவேண்டுமே என்று நினைத்தேன்.
ஏன் அப்படி மிகவில்லை (ஏதும் எழுத்துப்பிழையா அல்லது
வேறு ஏதேனும் காரணம் பற்றியா) என்று தெரியவில்லை.
அன்புடன்
செல்வா