Fwd: Indira Priyadarshini - Sravanam

1 view
Skip to first unread message

Rajaram Krishnamurthy

unread,
May 21, 2026, 11:12:15 PM (11 days ago) May 21
to Chittanandam V R, Markendeya Yeddanapudi, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, Mani APS, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, Societyforservingseniors, Sanathana group, thatha patty, Kerala Iyer

 

கற்றலில் கேட்டலே நன்று”, “கற்றிலனாயிலும் கேட்க.” - இவை சான்றோர் வாக்கு. முன்னர், ஏடுகள் அரிதாகவே கிடைப்பனவாதலாலும், முறையான பாடசாலைகளும் அரியனவாகவே இருந்தன என்பதாலும், வீடுகளிலே அமர்ந்து வாசித்து, மகிழுவதும் அரியதாகவே இருந்தது. இந்த நிலையில் பொது மன்றத்தில் பலர் கூடியிருக்க, ஒருவர், ஒரு நூலையோ, பாடத்தையோ உரக்கப் படித்து அதற்குப் பொருளும் விளக்கமும் சொல்லுதல் என்பது அன்றைய நிலையாக இருந்தது ; அதுவே கல்வி முறையாகவும் இருந்தது. எனவே, கேள்வி அல்லது செவிவழிச் செல்வம், அன்று பெரிதும் பாராட்டத் தகுந்ததாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் விளக்குதல் என்பது உரைத்தல் என்பதாகவும் இருந்தது. ஒரு நூலையோ, பாடத்தையோ, ஒரு குழு அல்லது கூட்டத்தின் முன்னால் உரைப்பது என்பது அப்படியே அந்த நூலை வரிவரியாக வாசிப்பது அல்லது ஒப்பிப்பது என்பதாகாது. மாறாக, அதனை விளக்குவது, உடனிருப்போரின் ஐயங்களை நீக்குவது, அவர்களுடைய வினாக்களுக்கு விடைகள் தருவது, கேட்போரின் கருத்தை ஈர்ப்பது என்பதாக அது இருந்தது. இது, இன்றைய நடைமுறையில், பாடம் சொல்லுவது, பாடம் கேட்பது உள்ளிட்ட கல்வி முறை (Pedagogy) ஆகும். உரையின் இத்தகைய பண்பு போன்றதுதான், திறனாய்வின் அடிப்படைப் பண்பு ஆகும். திறனாய்வில் பல புதிய கொள்கைகள் பெருகிவிட்டபோதும், அது கல்விசார்ந்த ஒரு முறையியலாக மேலை நாட்டவர் பலரால் இன்றும் கருதப்பட்டு வருகிறது.

1.2.1 இறையனார் அகப்பொருளுரை தரும் விளக்கம்

     அறுபது நூற்பாக்கள் கொண்ட இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல் என்று வழங்கப்பெறும் நூலுக்கு உரைகள் சில எழுதப்பட்டன ; ஓதப்பட்டன. அவற்றுள் சிறந்த ஒன்றை (அதாவது இன்று வழங்குகின்ற உரையை) உருத்திர சன்மன் என்பவன் தேர்ந்தெடுத்தான் என்று அந்த உரை கூறுகிறது. இந்த உரைதான், முதன்முதலாக முச்சங்கங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. அந்த உரை கூறும் சில செய்திகள் இங்கே நமக்கு ஏற்புடையனவாக இருக்கும். மூலநூல் எதுவாயினும் - அது இறையனாரின் அகப்பொருள் நூலாயினும் - அதற்கு     உரை என்பது இன்றியமையாதது. உரை சொல்லும் போதுதான், மூலநூல் சரியான விளக்கம் பெறுகிறது. இவ்வழி, திறனாய்வு எவ்வளவு அவசியமானது என்பது தெரியவரும். ஒரு நூலுக்குப் பல உரைகள் எழக்கூடும். ஆயின் எல்லாம் மிகச் சரியான விளக்கங்களைத் தரும் என்பதில்லை. அவையும் மதிப்பீடு செய்வதற்குரியவையே. இந்த அகப்பொருளுக்குச் செய்யப்பட்ட உரை, புலவர்கள், சான்றோர்கள் பலர் இருக்கும் அவையில் உரைக்கப்பட்ட உரையாகும். மேலும், இது தொடர்ந்து பல தலைமுறைகளாக வரிசையாகச் சொல்லப்பட்டு வந்தது. ‘மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார், தம்மகனார் கீரங்கொற்றனார்க்கு உரைத்தார் ; அவர் தேனூர்கிழார்க்கு உரைத்தார் ; அவர், படியங்கொற்றனார்க்கு உரைத்தார்...’ என்று இப்படியே வரிசைப்படுத்திக் கூறிச் செல்லுகிறது, உரை. இதன்மூலம் உரை     என்பது     தொடர்ந்து பல தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் படியாக, போற்றும் படியாக இருக்க வேண்டும் என்ற கருத்துப் புலப்படுகிறது. திறனாய்வு, தலைமுறை இடைவெளிகளை இட்டு நிரப்புவது ; ஒரு செய்தியைப் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது. {TAMIL VIRTUAL ACADEMY}

    இறையனார் அகப்பொருளுரை பல வகைகளில் சிறப்புடையது. பழைய மரபுகளைக் கொண்டு வந்து ஒப்பவைத்து சொல்லுதல், புதிய செய்திகளைச் சொல்லுதல், பிறருடைய கருத்துகளைச் சொல்லி அவற்றை, ஏற்புடையனவெனின் ஏற்றுக் கொள்ளுதல், அல்லவெனில் மறுத்தல், வினாக்களை எழுப்புதல், அவற்றிற்கு விடைகள் சொல்லுதல், நூற்பாக்கள் சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வந்து சொல்லுதல் என்று பல பண்புகளை இதிலே காணலாம். இவையெல்லாம் திறனாய்வு நெறிகள் உகந்தவை. தமிழ் உரைமரபு, இவ்வாறு திறனாய்வின் வரலாற்றோடு இணைந்திருக்கிறது.

                Pazhamozhi nanuru  urai:     அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியர் மாரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மையானதாகும். -உணற்கினிய இன்னி பிறிதுழி இல்லென்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்--கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலின் கேட்டலே நன்று. தானே கற்று வரும்போது எழும் ஐ  யங்கள் தீர்வின்றி போகும்; ஆகவே பொருள் அறிந்து கற்றுப் பயனடைய வேண்டுமானால், ஆசிரியர் ஒருவனை அண்டிக் கேட்டுத் தெளிவதே சிறப்பு. கற்றலின் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பதும் இதுவே. 143 144. முட்டாள் கற்றும் பயனில்லை

         மலைச்சாரல்களிலே, பாறைகளின் மேல் வீழ்கின்ற அருவி கள் பலவாக விளங்கும் நல்லநாட்டையுடையவனே சொல்லப் போகும் சொற்களைக் கவனத்திலே கொண்டு, துடியிலே பண் உண்டாக்கலாம். அதுபோல, நல்ல அறிவு இயல்பாக இல்லாத வர்களைக் கல்வி போதிப்பதால் அறிவுடையவராக நிலை பெறுத்தவே முடியாது. ஆகையினாலே, நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே உலகத்தில் முற்றிலும் செல்லுபடியாவதில்லை என்று அறிவாயாக

    நற்கறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவபோல் வெற்பறைமேல் தாழும் இலங்கருவி நன்னாட! கற்றறிவு போகா கடை. - தட்டுவார் இல்வழித்துடியினின்றும் பண் எழுவதில்லை. அதுபோல, அறிவுறுத்துவார் இல்லாத போது கடையரின் அறிவும் செயற்படாது. அவர் கற்றும் பயனில்லை. அவர்க்குக் கற்பிப்பது வீண் என்பது கருத்து கற்றறிவு போகா கடை” என்பது பழமொழி. - 144 145 கல்வியை நாளும் கற்க தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச்சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலே தளர்ச்சியானது தோன்றலாம்.அதனால், சோர்வு அடையவே கூடாது.

K RAJARAM IRS 22526  


---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittan...@gmail.com>
Date: Thu, 21 May 2026 at 19:53
Subject: Fwd: Indira Priyadarshini - Sravanam
To:




ஸ்ரவணம்

இந்திரா ப்ரியதர்ஷிணி 


ஸ்ரவணம். இதன் சரியான தமிழ் வடிவம் கேள்வி என்பதாகும். இந்தக் கேள்வி வினா அல்ல. கேட்கும் செவித் திறன். கேட்பது எப்படி திறனாகும்? கேள்வியின் போது வாயை மூடும் ஒரு தன்மை வேண்டி வருதலாலும்,  கேட்பதை கூர்ந்து கவனிக்க வேண்டி இருப்பதாலும் அது திறம். 

இதை எழுதுகையில் 'ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறம்' என்றும் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சாதிப்பதும் நினைவுக்கு வருகிறது. ஆனேறேழ் வென்று ஏறு தழுவி நப்பின்னைப் பிராட்டியைக் கண்ணன் மணந்தான்.  இறைவனுக்கு அடிமையாக இருத்தல் திறம். அடிமை வாழ்வு திறம். இறையிடம் மட்டும்.  சப்த நாடியும் ஒடுங்கி ஐம்புலனும் அடங்கி அவனன்றி சரணல்லால் சரணில்லை என்று இருத்தல் பெரிய திறம்தான். மீளா அடிமை உனக்கே ஆளாய் என்பது தம்பிரான் தோழர் வாக்கு. 

ஏனென்றால் 'எனது, யானும்' அருணகிரிப் பெருமான் காட்டுவது மாதிரி வேறாகி 'எவரும், யாதும்' யானாகும் இதய பாவானாதீதம் வந்தாலன்றி இதெல்லாம் சாத்தியமில்லை. பாழும் "நான் மற்றும் எனது" நம்மோடு கூடக் கூட "மண்டை உள்ள மட்டும் சளி உண்டு" என வந்து கொண்டே இருக்கும். இதைச் சுருட்டி வைக்க வேண்டும். 

கேள்வி என வள்ளுவம் அதிகாரம் வைத்திருக்கிறது.'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்      தலை.'  செல்வத்தில் தலையாய செல்வம் கேட்டல். இந்தக் கேட்டல் ஒருவரின் கருத்து, மனக்குமுறல், நம்மைப் பற்றிய பின்னூட்டம், பரிந்துரை, ஆலோசனை, இடித்துரை எனப் பலவகைப்படும். கேட்கும் போது குறுக்கிடீன்றிக் கேட்க வேண்டும். திறந்த மனதோடு கேட்க வேண்டும். யாரிடம் இருந்தும் கேட்கக் காது வேண்டும். நம்மின் வலியாரைக் கேட்பது தவிர்க்க இயலாது. நம்மின் மெலியாரைக் கேட்டல் மிக மிக அவசியம்.  இது அஹங்கராம் மேலிட்டால் இயலாது. வாய் புறப்பட்டு விடும். 

அதுவும் அதிகாரத்தில் இருப்பவர் காதுகளை நன்கு திறந்து வைத்து நாலாப்பக்கம் இருந்து கேட்க நாளங்கள் வைத்திருக்க வேண்டும். தலைமை தனிமை மாயை. கேட்க விரும்புவதே பேசப்படும். 'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்'. இன்று பல பெருங் குழுமங்களில் மிகப் பெரிய அவலம் இந்தக் கேள்வி இன்மை தான். பல வியூகங்கள் பொய்க்க கேள்வி மற்றும் நிதர்சன அறிவின்மை தான் காரணம். எப்போதும் பலர் குழுக்களைக் கூட்டி அதில் தலைமை தாமே பேச, அதற்கு நாலு பேர் கை தட்டி துதி பாட மிக மோசமான நேர விரயம். 

தற்கொலை முயற்சி செய்வார் கூட யாரேனும் இறுதி நொடியில் அவர்கள் மனம் பேசுவதை இடை மறிக்காமல் புத்தி சொல்லாமல் கேட்டால் மாறி விடுவார்களாம். சிறு வயதில் குழந்தைகள் நிறையக் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஈகோ குறைவு. நமக்கு வாய், சாப்பிட, பேச அறிவுரை, சொல்ல, வயதாகும் போது ஏகத்துக்கு நீண்டு விடுகிறது. இன்றைய அவசர உலகில் கேள்வி பெரும் திறம். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்ற ஞானத்தின் படிநிலைகளில் முதலாவதாக இருப்பது ஸ்ரவணம். 

இதனை, கேட்டல் ஞானம் என்றே சிவஞான சித்தியார் குறிப்பிடும்  கேள்வியில் ஞானம் அபாரம். குருகுலக் கல்வி ஸ்ரவணம். மனனம். என்ன விந்தை என்றால் தோல்வி ஆய்வு குறை தீர்க்கும் கூட்டங்களில் கூட பெரு நிறுவனத் தலைமைகள் மருந்துக்குக் கூடக் செவி திறந்து கேட்பதில்லை. முழு நேரமும் அவர்களே பேசி விட்டு சம்பிரதாயத்திற்காக  மனித வள? மகநீயர்கள் "யாரேனும் ஏதேனும் இப்போது சொல்ல விழைகிறீர்களா" என்று கேட்க இரண்டு துதியுடன் கூட்டம் முடிகிறது. ஆர்வக் கோளாறில் இளந்துருக்கியர் வாய் திறக்க முற்பட்டால் மனித வளம் "நேர அவகாசம் முற்றியதால் பின்னால் தனியாகத் தொடர்பு கொள்ளலாம்" என்று சங்கூதி விடுவார்கள். தலைமை,  மனித வளம் வேறு பசையுள்ள பாட்டைக்குப் போகும். திறமுள்ள இளந்துருக்கி புதிய பசுந்தரை நோக்கிப் பாயும். நல்ல அடித்தளம் உள்ள நிறுவனத்திற்கும் இங்ஙனம் கேளாமையால் சங்கூதப்படும். என்ன ஊதிய பின் தான் தெரிய வரும். 

நம் தனி மனித வாழ்விலும் தந்தை தாய் மனைவி கணவன் தோழர் குழந்தைகள் எல்லார் பேசுவதையும் கேட்க நாம் செலவிடும் தருணங்கள் நிச்சயம் வாழ்வில் உணர்வு சேர்ப்பவை. வீட்டில் இறை நாமம் எப்போதும் ஒலித்துக் கேட்க நல்ல அதிர்வலைகள் உண்டாகும். எல்லாம் வல்ல இராமபிரானும் சொல்லின் செல்வனும் எளியோர் சொல் கேட்க நாம் எம்மாத்திரம்?  ஸ்ரவணம் மதுரம். மதுராதிபதே அகிலம் மதுரம். நாள் இனியது.

இந்திரா ப்ரியதர்ஷிணி 

**********************************************************

சித்தானந்தம் 

indirapriyadarsini m

unread,
May 21, 2026, 11:24:25 PM (11 days ago) May 21
to Rajaram Krishnamurthy, Chittanandam V R, Markendeya Yeddanapudi, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, Mani APS, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, Societyforservingseniors, Sanathana group, thatha patty, Kerala Iyer
நன்றி சார்

--
You received this message because you are subscribed to the Google Groups "societyforservingseniors" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to society4servingse...@googlegroups.com.
To view this discussion, visit https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAL5XZor%3Dad1PDat1ga%2B_V7LvmY%2BMR7-Z8NtmdCWQ0NynHwC9mw%40mail.gmail.com.

Rajaram Krishnamurthy

unread,
May 21, 2026, 11:49:57 PM (11 days ago) May 21
to indirapriyadarsini m, Chittanandam V R, Markendeya Yeddanapudi, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, Mani APS, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, Societyforservingseniors, Sanathana group, thatha patty, Kerala Iyer
WELCOME ALWAYS nICE WRITINGS KR 
Reply all
Reply to author
Forward
0 new messages