பெருமாள் - சொல் ஆராய்ச்சி

462 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 15, 2008, 10:29:01 AM6/15/08
to santhavasantham
சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் ஒரு நடிகை "பெருமாளே பெருமாளே" என்று அடிக்கடி கூறுவதாக ஒரு விமரிசனத்தில் கண்டேன்.
 
'பெருமாள்' என்ற சொல் எப்பொழுது தோன்றியது? எனக்குத் தெரிந்த அளவில் தேவாரத்தில் இச்சொல் கண்டிலேன். திவ்வியப் பிரபந்தத்தில் சற்றுத் தேடியதில் 'பெருமான்' என்ற சொல்லே கண்டேன்.
 
பெரியபுராணத்தில் உள்ளது.
 
திருப்புகழில் பெரும்பாலான பாடல்களில் உள்ளது. ஆயினும், ஒரு பக்தர் 'பெருமாளே' என்றால், அது தற்காலத்தில் விஷ்ணுவையே சுட்டுகிறது. ஏன்?
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன் 

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 16, 2008, 10:15:50 PM6/16/08
to santhav...@googlegroups.com

OTL: perumAL  1. person of eminence; 2. title of Ce1ra king; 3. Vis2n2u; 4. God
perumAn2  1. nobleman, great person; 2. king; 3. elder; elder brother; 4. God, as, Siva, Vis2n2u; 5. lady 
கழக அகராதி: பெருமாள்= பெருமையில் சிறந்தோன்; சேர பட்டப்பெயர்; கடவுள்;
பெருமான்=  அரசன், குரு, சிவன், தலைவன், திருமால், பெருமையில் சிறந்தோன், மூத்தோன்

ஆக, இரு சொற்களும் பெருமை வாய்ந்தவரைக் குறிப்பனவே. (பெருமம் = பெரியது; பெருமா = பெரும் மா - பெரிய விலங்கான ஆனை. இதை ஒட்டி, பெருமாள்= பெரும் ஆள் எனக் கொள்ளலாமோ? மான் என்பதற்குப் பெரியோன் என்ற ஒரு பொருள் உண்டு)

தாங்கள் துதிக்கும் கடவுள் வடிவங்களைத் தனிப்படக் குறிப்பதற்காக, பெருமான் என்ற சொல்லைச் சைவப் பெரியோரும், பெருமாளை வைணவப் பெரியோர்களும் எல்லா இடங்களிலும் கையாண்டிருக்கலாம். அருணகிரியார் காலத்தில் இவ்விரு குழுவினர்களுக்கும் இருந்த பூசல்களைக் கண்டு அவர்களுக்குக் கடவுளின் உண்மைத் தன்மையை உணர்த்தத் தமது திருப்புகழ் போன்ற படைப்புகளில் பெருமாளே என்று சிவன் மைந்தனான குகனை அழைத்திருக்க வாய்ப்புள்ளது. திருப்புகழில் அனைத்துத் தெய்வங்களின் பெருமையையும் அவர் அழகுற வெளிப்படுத்துவதும் இதே நோக்கத்தில் தான் என்று அறிஞர் கூறுவர். 

இதுபோக, சேர மன்னர்களைப் பெருமாள் என்று அழைக்கும் வழக்கம் இருந்தது பற்றி அறிவோம். அந்தப் பெருமாள்களில் ஒருவர் இசுலாமிய மதத்தைத் தழுவிய வரலாறைக் கீழ்க்கண்ட குறிப்புச் சொல்கிறது:

Cheraman Perumal Bhaskara Ravi Varma (also known as Cheraman Perumal) was a Keralite king from Kodungalloor who is believed to be the first convert to Islam in India in the 7th century AD
Cheramanperumal of Kodungalloor, left for Makkah, embraced Islam, and accepted the name Thajudeen. He married the sister of then King of Jeddah. On his return trip, accompanied by many Islamic religious leaders, led by Malik-ibn-Dinar (RA), he fell sick and passed away. But he had given introductory letters for the team to proceed to 'Musiris' (Kodungallur, the Chera capital. The visitors came to Musiris and handed over the latter to the reigning king, who treated the guests with all respect and extended facilities to establish their faith in the land. The king also organised help for the artisans to build the first Mosque at Kodungallur, by converting Arathali temple into a Juma-Masjid. It was built in 612 A.D., and the area around it had been ear-marked for the team's settlement.
He is also connected with the Tabi'in Malik Ibn Dinar with this tradition:from kerala.com

..அனந்த் 16-6-2008

2008/6/15 Siva Siva <naya...@gmail.com>:

Siva Siva

unread,
Jun 17, 2008, 12:05:35 AM6/17/08
to santhav...@googlegroups.com
Project Madurai-ல் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்  நான் தேடிய அளவில், பெருமாள் என்ற சொல்லின் எந்த வடிவையும் (பெருமாளே, பெருமாளை,..) 12 ஆழ்வார் பாடல்களில் காண்கிலேன்.
 
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


 
2008/6/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jun 17, 2008, 12:23:25 AM6/17/08
to santhav...@googlegroups.com


2008/6/17 Siva Siva <naya...@gmail.com>:

Project Madurai-ல் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்  நான் தேடிய அளவில், பெருமாள் என்ற சொல்லின் எந்த வடிவையும் (பெருமாளே, பெருமாளை,..) 12 ஆழ்வார் பாடல்களில் காண்கிலேன்.
 
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 
தனி உரையாடலில் குறிப்பிட்டதைப் போல, தெய்வத்தின் குரலில் (ஐந்தாம் தொகுதி) புருஷோத்தமன் என்பதன் தமிழாக்கம் 'பெருமாள்' என்று குறிப்பிடுகிறார்.   அருணகிரிநாதர் முருகனைப் பெருமாள் என்று அழைப்பதையும் குறிப்பிட்டு, இருந்த போதிலும் இது திருமாலுக்கே சிறப்பாக உரியது என்று சொல்கிறார்.  புருஷ உத்தமனுக்கே பெரும் ஆள் என்ற பெயர் பொருந்தும் என்பது அவர் சொல்வது.
 
அருணகிரி நாதர் ஆச்சரியங்களின் தொகுதி.  அவரிடம் உள்ள ஆட்சி, அவருக்கு முன்னால் இல்லாதது.  'ஒருவரைப் பங்கில் உடையாள்' என்று உமையைப் பாடியவர்.  வலது பக்கத்தில் சிவனை வைத்தவள் என்று வேறு யாரும் பாடியதில்லை. 
 
அப்படி, பெருமாளே என்று சுமார் எழுபது சதம் திருப்புகழ் பாக்கள் முடிகின்றன.  தம்பிரானே என்று இருபது-இருபத்தைந்து சதமும், சூராந்தகனே போன்ற அரிய விளிகளோடு மீதமும் முடிகின்றன.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 17, 2008, 12:27:41 AM6/17/08
to santhav...@googlegroups.com


2008/6/17 Siva Siva <naya...@gmail.com>:

Project Madurai-ல் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்  நான் தேடிய அளவில், பெருமாள் என்ற சொல்லின் எந்த வடிவையும் (பெருமாளே, பெருமாளை,..) 12 ஆழ்வார் பாடல்களில் காண்கிலேன்.
 
 
இந்த அரிய தகவல் கவனத்துக்கு உரியது.  கம்பன், ஆழ்வாரதியர்கள் பயன்படுத்தாத ராமசந்திரன், கோதண்டம் ஆகிய பெயர்களோடு பெருமாளையும் சேர்க்க வேண்டியதுதான் போலிருக்கிறது.  கம்பனில் நம்பன், பெம்மான், ஆளுடையான் எல்லோரும் இருக்கிறார்கள்.  பெருமாள் இருக்கிறாரா என்று தேடிவிடுகிறேன். 
 
ராமசந்திரன், கோதண்டம், பெருமாள் போன்ற ஆட்சிகள் எந்தக் காலத்திலிருந்து பயன்பாட்டுக்கு வந்தன என்பதும் நல்ல கேள்வியே. 

Pas Pasupathy

unread,
Jun 17, 2008, 2:07:10 PM6/17/08
to santhav...@googlegroups.com
 
-இல் தேடியதில் 'பெரியபுராண'த்தில் 'பெருமாள்' வருவது தெரிகிறது.
 
(கம்பர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை)
 
அக்காலத்திற்கு முன்பே சேரமான் பெருமாள் ... சுந்தரர் காலம் (கி.பி. 9-ஆம்
நூற்றாண்டு ?) தானே அவர்?.. அந்தச் சொல்லைத்  தன்பெயரில்  பயன்படுத்தி இருக்கிறார்.
 
அதற்கு முன்?
 
பசுபதி

Siva Siva

unread,
Jun 17, 2008, 4:25:11 PM6/17/08
to santhav...@googlegroups.com
சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையிலும், நம்பி ஆண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியிலும், இவர் 'கழறிற்று அறிவார்' என்றே குறிப்பிடப் பெறுகிறார். 
 
"பெற்றோர் பெருமாக்கோதையார் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.....
.......
பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயர் இவர்க்கு வழங்கலாயிற்று.
.........
"

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008/6/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

Pas Pasupathy

unread,
Jun 17, 2008, 6:05:26 PM6/17/08
to santhav...@googlegroups.com
இவருக்கும் முன்னிருந்த அரசர் 'குலசேகரப் பெருமாள்'.; ஓர் ஆழ்வார்;
'பெருமாள் திருமொழி' என்றே இவருடைய பாசுரங்கள் அழைக்கப்படும்.
 
இவர்களைப் 'பெருமாள்' வம்சம் என்றே ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.
 
 
அரசர்களைத் திருமாலின் பரம்பரை என்பது ஒரு பழைய மரபு.
எல்லாச் சேர அரசர்களுக்கும் இந்தப் 'பெருமாள்' என்ற பெயர் இருந்திருப்பதாகத்
தெரிகிறது. 
 
பசுபதி
17-6-08

 

Hari Krishnan

unread,
Jun 17, 2008, 10:15:07 PM6/17/08
to santhav...@googlegroups.com


2008/6/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

 
-இல் தேடியதில் 'பெரியபுராண'த்தில் 'பெருமாள்' வருவது தெரிகிறது.
 
(கம்பர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை)
 
முன்மடலில் சொன்னதுபோல் பெருமான், எம்பெருமான் எல்லாம் இருக்கின்றன. (எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்று பரதனைப் பார்த்து குகன் நெக்குருகும் இடம் ஓர் எடுத்துக் காட்டு.)  பெருமான் என்ற பெயர் திருமால், ராமன் முதலானோர்களுக்கு மட்டுமின்றி, சிவனுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்திரஜித் எய்த பிரமாத்திரத்தை இலக்குவன் அழி்த்த சமயத்தில் தேவர்களுக்கு சிவபெருமான் சொல்வதாக வரும் பாடலில் -
 

விண்ணோரது கண்டார்வய வீரர்க்கினி மேன்மேல்

ஒண்ணாதன உளவோவென மனந்தேறின ருவந்தார்;

கண்ணார்நுதல் பெருமானிவர்க் கரிதோவெனக் கடைபார்த்

தெண்ணா திவை பகர்ந்தீர்பொருள் கேளீரென விசைத்தான்

 

என்று சிவனுக்கும் பெருமானைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

 

ஆளுடையாய், அருளாய், அருளாய் என்று மாயா சீதை புலம்புவதையும், 'என்னை ஆளுடையான்' என்று மிகப் பல இடங்களிலும் காணலாம். 

 

ஆனால், ஒரேயொரு பெருமாளைக்கூட காணவில்லை.  டிஜிடல் ஸர்ச் உறுதிசெய்கிறது. 

N. Ganesan

unread,
Jun 10, 2022, 4:31:41 PM6/10/22
to சந்தவசந்தம்
On Tuesday, June 17, 2008 at 5:05:26 PM UTC-5 பசுபதி wrote:
இவருக்கும் முன்னிருந்த அரசர் 'குலசேகரப் பெருமாள்'.; ஓர் ஆழ்வார்;
'பெருமாள் திருமொழி' என்றே இவருடைய பாசுரங்கள் அழைக்கப்படும்.
 
இவர்களைப் 'பெருமாள்' வம்சம் என்றே ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.
 
 
அரசர்களைத் திருமாலின் பரம்பரை என்பது ஒரு பழைய மரபு.
எல்லாச் சேர அரசர்களுக்கும் இந்தப் 'பெருமாள்' என்ற பெயர் இருந்திருப்பதாகத்
தெரிகிறது. 
 
பசுபதி
17-6-08



பெருமாள் - சொல்லாட்சி
------------------------

2008-ம் ஆண்டின் இழை இது.

பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.

பிணங்கொள் - பெருமாள் :: இரண்டிலும் -ள் ஓசைநயம். பல தேவாரப் பதிப்புகளில் உள்ளபடி.

(2) http://tamilconcordance.in/TVRM-APPconc-1-pe1.html#பெருமாள்
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4

----------

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் எல்லாம் பெருமான் தான். ஆனால், பெருமாள் என்ற சொல்லைப் பயன்படுத்தலும் உண்டு.
https://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=638
     காலை யெழுந்திருந்து
         கரிய குருவிக் கணங்கள்
     மாலின் வரவு சொல்லி
          மருள் பாடுதல் மெய்மை கொலோ
     சோலைமலைப் பெருமாள்
          துவாரா பதி யெம்பெருமாள்
     ஆலினிலைப் பெருமாள்
          அவன் வார்த்தை யுரைக்கின்றதே (594) -     நாச்சியார் திருமொழி 9-8

--------------

கம்பனில் பெருமாள் என்ற சொல் கிடையாது. ஆனால். அவருக்கு முன் வாழ்ந்த சேக்கிழார் “பெருமாள்” என்ற சொல்லை நிறையப் பயன்படுத்துகிறார். சேக்கிழார் தான் அருணகிரிக்கு இதில் முன்னோடி.
http://tamilconcordance.in/ppuranamconc-1-pe1.html
பெருமாள் (15)
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் - 5.திருநின்ற:7 29/1
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் - 6.வம்பறா:2 55/3
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் - 7.வார்கொண்ட:4 23/4
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி - 7.வார்கொண்ட:4 69/1
தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது - 7.வார்கொண்ட:4 72/1
திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள்
   எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி - 7.வார்கொண்ட:4 128/2,3
செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் - 7.வார்கொண்ட:4 132/2
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் - 7.வார்கொண்ட:4 137/1
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் - 7.வார்கொண்ட:4 148/1
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் - 7.வார்கொண்ட:4 148/4
பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் - 7.வார்கொண்ட:4 152/1
எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் - 12.மன்னிய:6 1/3
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி - 13.வெள்ளானை:1 3/3
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை - 13.வெள்ளானை:1 21/3
உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப - 13.வெள்ளானை:1 22/1

    பெருமாள்-தமை (1)
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப - 7.வார்கொண்ட:4 71/2

    பெருமாள்-தனை (1)
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி - 13.வெள்ளானை:1 3/3

    பெருமாளுடன் (1)
பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் - 7.வார்கொண்ட:4 146/4

    பெருமாளும் (1)
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் - 7.வார்கொண்ட:4 38/1
 
    பெருமாளை (3)
முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே - 7.வார்கொண்ட:4 65/1
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள - 7.வார்கொண்ட:4 75/1
பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை
   வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் - 13.வெள்ளானை:1 21/3,4

குலசேகரப் பெருமாள், பெருமாள் திருமொழி, நம்பெருமாள், ... போன்றன பேச்சுவழக்கில் இருந்து இலக்கியம் ஏற்றுக்கொண்ட காலம் கி.பி. 1000+ எனலாம்.

மகோதை நகர பெருமாள் வம்சாவளி அரசர்கள் - இவர்கள் கொச்சி ராஜாக்கள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின்
வஞ்சி என்னும் கரூர் சேரநாட்டுத் தலைநகரமாக இல்லாது போயிற்று. கொச்சிப் பகுதிக்கு நகர்ந்தது. இதனைச் செய்தவர்கள் சோழர்கள் ஆவர்.
கரூரில் இருந்த வித்துவக்கோடு என்னும் அரண்மனைப் பெருமாள் கோவில், பட்டாம்பி அருகே மாற்றப்பட்டது. தமிழ்க் கல்வெட்டு உண்டு.
சேக்கிழார் என்ற பெயரும் அதில் உண்டு.
https://en.wikipedia.org/wiki/Chera_Perumals_of_Makotai

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 11, 2022, 9:38:34 AM6/11/22
to Santhavasantham

பெருமாள் - சில குறிப்புகள்
----------------------

(1)
தற்காலத் தமிழுக்கு இலக்கண நூல் செய்தவர் சரவணத்தமிழன். நல்ல புலவர். சில ஆண்டு முன் மறைந்தார்.
தமிழ் நூல்: பாவும் உரையும்
நூற்றியற்றியோன்: இலக்கணப் புலவன் த.சரவணத்தமிழன்  https://www.tamilvu.org/node/67626

ஆள் என்ற விகுதி இந்தியா முழுக்க திராவிட மொழிகளில் பல உண்டு. இது சம்ஸ்க்ருதத்திலும் எதிரொளிக்கிறது: மைநால (மீன்பிடிப்போன்), சண்டால (உபநிஷத்), ...
தமிழிலே -ன் என பெரும்பாலும் ஆண்பாற் பெயர்கள் வரும். ஆனால், -ள், -ல் என்று முடியும் ஆண்பால் பெயர்களும் உண்டு (உ-ம்: பெருமாள், அண்ணல்) என்பதனைச் சரவணத்தமிழன் விளக்கியுள்ளார்:
https://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=15&pno=32
 85. நூ: னகர இறுதி ஆண்பாற் சொல்லே.

    பொ: ஆண்பாற் சொற்கள் ‘ன்’ இறுதியை உடையன.

    சா: கண்டனன், கண்டான்.

    இதனை அன், ஆன் எனக்கூறும் முறை உறுப்பியலுக்கு ஒத்தலின்
ஆங்கும் இறுதிபற்றியே பாற்சொற்கள் நிகழும் எனும் தொல்காப்பியமுறை
நேரிதாம் என்பது மொழியியல் ஆதலின் அம்முறையில் இங்குக்
கூறப்பெறும்.  பெருமாள் (பெரும் - ஆள்) என்னும் ஆட்பொருட்
பற்றியதும், தோன்றல், ஏந்தல் என்னும் தொழிலாகு பெயர்களும் இறுதிவேறு
படலும் பிறநோக்கி அமைத்துக்கொள்க.

---------------

(2) சிவன், பிள்ளையார், முருகன், நாயனார், ஆழ்வார், ... எனப் பல ஆண்பெயரிலும் பெருமாள் உண்டு. ஆனால், பெருவாரியாக இற்றைத் தமிழில் பெருமாள் என்றால் மஹாவிஷ்ணு தான். சேரமான் பெருமாள், குலசேகரப் பெருமாள் ... எனச் சேர ராஜாக்களுக்கு பெருமாள் டைனாஸ்டியால் வந்த பெயர். இராமனுக்குப் பெருமாள் என்ற பெயரும், அவனைப் பாடிய குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்பது பற்றிய ஸ்ரீவைஷ்ணவர் விளக்கம்: https://medium.com/@AmmU_MaanU/தினம்-ஒரு-பாசுரம்-46-6f4ab944a3d3

இன்று சேரலர் கோன் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி என்ற பிரபந்தத்திலிருந்து, அரங்கனை மங்களாசாசனம் செய்யும் ஒரு அழகிய பாசுரத்தைக் காண்போம். அதற்கு முன் ஆழ்வார் பற்றிய சிறுகுறிப்பு:

சேரநாட்டில், கோழிக்கோடு தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் அதிதீவிர பக்தி கொண்டவர். ராமாயண சொற்பொழிவுகள் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் கொண்டவர் இந்த ஆழ்வார்!
இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! கோதண்ட, சீதா, ராஜா ராமனாக அவதரித்த பெருமாளுடைய இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாகக் கருதியதால் குலசேகர ஆழ்வாருக்கு‘பெருமாள்’ என்ற திருநாமமும் உண்டு.
எப்படி ராமன் பெருமாள் ஆகிறான்? ராமனுக்கு புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பது ஒரு முதன்மையான திருநாமமாகும். இதன் தமிழ் வடிவமே “பெருமாள்” (பெரும் + ஆள்), கடவுளைக் குறிக்க தொன்று தொட்டு நம்மிடையே புழங்கும் முதன்மைச்சொல்.

---------------------
(3)
கணபதியைப் பெருமாள் என்பது:  காஞ்சிப் பெரியவர்.
முருகன் திருமணத்தில் மூத்தவர் பங்கு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி)

அடுத்தாற்போல் தம்பி ஸ்வாமியுடைய விவாஹம். வள்ளி கல்யாணம் என்று உத்ஸவமாகப் பண்ணும் விவாஹம். கதை, உபந்நியாஸம், ட்ராமா, ஸினிமா, டான்ஸ்-ட்ராமா என்றெல்லாம் அமர்க்களமாகப் பண்ணுகிறதற்கு இடம் கொடுக்கிற விவாஹம்.

அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும்-விக்நேச்வரர் மதயானையாக வள்ளியைத் துரத்திக் கொண்டு வந்ததால் தான் அவள் ஸுப்ரம்மண்யரிடம் சேர்ந்தாள் என்ற கதை. இந்த இடத்திலே மூத்தது மோழையில்லை, காளைக்கு மேலே, மத்த கஜமே என்று அண்ணா ஸ்வாமி காட்டினார். வள்ளி சேரமாட்டேன் என்கிறாளே என்று தம்பிதான் அப்போது செயலில்லாமல் நின்றார். அப்புறம் தமையனாரைப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் இடையூறு நீங்கும் என்று அந்த மஹாசக்திமானான தேவஸேனாநாயகர் புரிந்து கொண்டார்; விக்நேச்வரரை ஸ்மரித்து வேண்டிக்கொண்டார். அவரும் உடனே தம்பிக்கு ஸஹாயம் செய்வதற்காக மத யானையாக வந்து வள்ளியை துரத்தியடித்து, தம்பியை அவள் சேரும்படிப் பண்ணினார். “கைத்தலம் நிறைகனி” என்ற பிள்ளையார் வணக்கத் திருப்புகழில் இதைச் சொல்லித்தான் முடித்திருக்கிறது.* அதிலே “சிறு முருகன்” என்று சொல்லியிருக்கிறது. இதற்கும் முந்தி சின்னஞ்சிறு முருகனாக இருந்தபோதுதான் அவர் சூர ஸம்ஹாரமே பண்ணி, பிற்காலத்தில் “ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த:” [படைத்தலைவர்களில் நான் முருகன்] என்று கீதையில் கிருஷ்ணர்கூட சொல்லும்படியான கீர்த்தியடைந்தது. அப்படிப்பட்டவர் இப்போது நல்ல கட்டிளம் காளைப் பருவத்திலே ஒரு ஸாதாரண வேடப் பெண்ணை அடைய முடியாமல் செயலற்றுப் போயிருந்தார். அந்த அசக்த நிலையை வைத்துத்தான் – வயஸை வைத்தல்ல – “சிறு” முருகன் என்று அருணகிரிநாதர் போட்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கார்யஸித்தி ஏற்படச் செய்த “பெரும்” ஆள் – பெருமாள் – விக்நேச்வரர்தான்.

அதனால்தான் திருப்புகழ்களின் முடிவில் ஸுப்ரம்மண்யருக்கே உரியதாக: வருகிற “பெருமாளே” என்ற வார்த்தையை இந்தத் திருப்புகழில் மட்டும் விக்நேச்வரருக்குச் சூட்டி முடித்திருக்கிறார். தம்பியையே இஷ்ட தெய்வமாகக் கொண்ட அருணகிரிநாதர் அவரைச் “சிறு”வராக்கி அண்ணாவைப் “பெருமாள்” என்று பெருமைப்படுத்துவது விசேஷம்!

ஆக, ஸுப்ரமண்ய ஸ்வாமியின் விவாஹத்தில் நேராகவே விக்நேச்வரருக்குப் ‘பார்ட்’ இருக்கிறது. Key role என்றே சொல்லும்படியாக இருக்கிறது.

* அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
             அப்புன மதனிடை இபமாகி
         அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
            அக்கண மணமருள் பெருமாளே!


----------------------
(4)
ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? (அருள்வாக்கு). கல்கியில் காஞ்சிப் பெரியவர்
https://periva.proboards.com/thread/8807/

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் - என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம்.

ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு.

‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள்.

மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம்.

-----------------

தெரிவு: NG

On Fri, Jun 10, 2022 at 3:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Tuesday, June 17, 2008 at 5:05:26 PM UTC-5 பசுபதி wrote:
இவருக்கும் முன்னிருந்த அரசர் 'குலசேகரப் பெருமாள்'.; ஓர் ஆழ்வார்;
'பெருமாள் திருமொழி' என்றே இவருடைய பாசுரங்கள் அழைக்கப்படும்.
 
இவர்களைப் 'பெருமாள்' வம்சம் என்றே ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.
 
 
அரசர்களைத் திருமாலின் பரம்பரை என்பது ஒரு பழைய மரபு.
எல்லாச் சேர அரசர்களுக்கும் இந்தப் 'பெருமாள்' என்ற பெயர் இருந்திருப்பதாகத்
தெரிகிறது. 
 
பசுபதி
17-6-08



பெருமாள் - சொல்லாட்சி
------------------------

2008-ம் ஆண்டின் இழை இது.

பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
Tevaram Concordance, French Institute, Pondicherry

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/47bcf8fb-1e53-44e2-a434-3f673a2b1673n%40googlegroups.com.

Virus-free. www.avg.com

Siva Siva

unread,
Jun 11, 2022, 12:30:56 PM6/11/22
to santhavasantham
Looks like Google decided that my earlier message needs moderator's approval!
Hope this reply gets to the group thread now!

On Fri, Jun 10, 2022 at 4:43 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Good to see your interest in researching word histories.

I do not know if I have mentioned this before in any other thread. When relying on digital versions of literature - one needs to be careful about potential digitization errors in the documents that are used as source for research, concordance, etc.

Regarding the appar thevaram verse you quoted, you can see a more correct version of that song here:

The Swami of Kadavur Mayanam is - பெருமான் அடிகள்


V. Subramanian



On Fri, Jun 10, 2022 at 4:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பெருமாள் - சொல்லாட்சி
------------------------

2008-ம் ஆண்டின் இழை இது.

பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.

பிணங்கொள் - பெருமாள் :: இரண்டிலும் -ள் ஓசைநயம். பல தேவாரப் பதிப்புகளில் உள்ளபடி.

(2) http://tamilconcordance.in/TVRM-APPconc-1-pe1.html#பெருமாள்
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4
.......

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 11, 2022, 12:52:24 PM6/11/22
to Santhavasantham
On Sat, Jun 11, 2022 at 11:30 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Looks like Google decided that my earlier message needs moderator's approval!
Hope this reply gets to the group thread now!

On Fri, Jun 10, 2022 at 4:43 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Good to see your interest in researching word histories.

I do not know if I have mentioned this before in any other thread. When relying on digital versions of literature - one needs to be careful about potential digitization errors in the documents that are used as source for research, concordance, etc.

True. But old editions of Tevaram has this PerumAL version also. That is why I gave two websites with PerumAL. which one is the correct one I am not sure. There is a difference of opinion in this.

Please see:
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4

(2) Tevaram Concordance, French Institute:
  • perumāḷ: 1
    • 5-038_(7) piṇam koḷ kāṭar---perumāḷ_aṭikaḷē

அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.

Given these two, பெருமாள்அடிகளே old version might be corrected looking at the other verses.
But the question remains what was the original? perumAL or perumAn.

Thanks,
N. Ganesan


Regarding the appar thevaram verse you quoted, you can see a more correct version of that song here:

The Swami of Kadavur Mayanam is - பெருமான் அடிகள்


V. Subramanian



On Fri, Jun 10, 2022 at 4:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

பெருமாள் - சொல்லாட்சி
------------------------

2008-ம் ஆண்டின் இழை இது.

பெருமாள் என்னும் சொல்லை முதலில் இலக்கியத்தில் பயனுறுத்தவர் அப்பர் அடிகள் ஆகலாம்.
(1) பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் பெருமான் அடிகள் என்று இருக்க,
7-ம் பாடல் மட்டும் பெருமாள் என்கிறது:
அணங்கு பாகத்தர், ஆரணநால்மறை
கணங்கள் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்குஉறும்
பிணம் கொள் காடர்---பெருமாள்அடிகளே.

பிணங்கொள் - பெருமாள் :: இரண்டிலும் -ள் ஓசைநயம். பல தேவாரப் பதிப்புகளில் உள்ளபடி.

(2) http://tamilconcordance.in/TVRM-APPconc-1-pe1.html#பெருமாள்
பெருமாள் (1)
பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே - தேவா-அப்:1454/4
.......

நா. கணேசன்
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/AGQH03ye3DA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMaQ68qXCxi2YG%2BGfPUU4pCbrJQkTVnkncCETFs13WL4Q%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jun 11, 2022, 12:59:26 PM6/11/22
to Santhavasantham

<<< ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். >>> காஞ்சி பெரியவர்

<<< எப்படி ராமன் பெருமாள் ஆகிறான்? ராமனுக்கு புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பது ஒரு முதன்மையான திருநாமமாகும். இதன் தமிழ் வடிவமே “பெருமாள்” (பெரும் + ஆள்), கடவுளைக் குறிக்க தொன்று தொட்டு நம்மிடையே புழங்கும் முதன்மைச்சொல்.>>> ஶ்ரீவைஷ்ணவர்கள்.

புருடோத்தமன் என்றால் ராமபிரான் என்பது முக்கியப் பொருளாம். 108 திருப்பதிகளில் நாங்கூரில் மட்டும் 6 திருப்பதிகள். அங்கே, உள்ள திருப்பதி திருவண்புருடோத்தமம். இங்கே, பெருமாளைத் தெரிசித்தால் அயோத்தியில் ராமபிரானைத் தரிசித்த பலன்கிடைக்கும். அயோத்தியில் ராமனுக்குத் திருக்கோயில் எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டிலே உள்ள அயோத்தி திருவண்புருடோத்தமம் என்னும் திருப்பதி. https://youtu.be/DolgegRgt8A

திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்த திருத்தலம். ராமன் கதையைச் சொல்லிப் 10 பாசுரங்களைத் தொடங்குகிறார்:
(1258) கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்
           அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்
           செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்
           வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

பொதுவாக, பெருமாளை கிருஷ்ணனாக வழிபடுவது பல தலங்களிலும், நாலாயிரத்திலும் வழக்கம். இதனை, நாலாயிரம் வழிவந்த ஶ்ரீமத் பாகவதத்தில் - வடமொழியின் மிகச் சிறந்த பக்தி இயக்க நூல் - பார்க்கலாம். Hardy, Friedhelm (2001). Viraha-Bhakti: The Early History of Krsna Devotion in South India (Oxford University South Asian Studies Series). Oxford University Press படிக்கவேண்டிய நூல்: https://en.wikipedia.org/wiki/Friedhelm_Hardy

ஆனால், திருவண்புருடோத்தமத்தில் பெருமாளை ஶ்ரீராமபிரானாக வழிபடுதல் மரபு. “திருவண் புருஷோத்தம நாயகனை’, வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர். https://drdayalan.wordpress.com/tag/மணிமாடக்-கோயில்/
http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2221&id1=50&id2=18&issue=20140930

திருவண்புருடோத்தமத்துப் பெருமாளை ஶ்ரீராகவன் என்றே சொல்லும் சோழர்காலக் கல்வெட்டு:
1054ம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற அச்சாசனத்தில் இவ்வூரின் பெயர் ‘நாங்கூர்’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. “ஸ்வஸ்திஶ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோட்பரகேசரி வர்மற்கு யாண்டு 4ஆவது நாங்கூர் பள்ளி அகரத்து ஶ்ரீராகவேற்கு நாரணன் வைகுந்தனான அனந்தகோப முத்தரையனைச் சாத்தி இவன் மைத்துனன் பாலைச் சேந்தனான தென்கரை நாட்டு முத்தரையன் நொந்தா விளக்கு ஒன்றனுக்கு உடலாகக் குத்த வெள்ளாடு 200 நாற்பது. இவை இவ்வூர் ரக்ஷை’’ - எனத்திகழும் இக்கல்வெட்டு வாசகம் பல முக்கிய செய்திகளை எடுத்துரைக்கின்றது.

வீரபாண்டியனைப் போரில் வீழ்த்திய பெரு மன்னனான பரகேசரி என்ற பட்டம் பூண்ட அரசனான ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆட்சியாண்டான கி.பி. 960ல் நாங்கூர் என்னும் இவ்வூரில் திகழ்ந்த ராமபிரான் திருக்கோயிலில், ராமன் முன்பு ஒரு நந்தா விளக்கு தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் என்பான் நலம் பெற வேண்டி பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன் என்பான் 240 வெள்ளாடுகளை கோயிலுக்கு முதலீடாக அளித்தான்.

ஶ்ரீராகவன் திருக்கோயில் = திருவண்புருடோத்தமம். குடவாசல் பாலு அண்ணனிடம் பேசி உறுதிசெய்தேன்.

நா. கணேசன்

Siva Siva

unread,
Jun 11, 2022, 1:02:39 PM6/11/22
to santhavasantham

IFP edition - Vol-2 - page 149:
image.png

N. Ganesan

unread,
Jun 11, 2022, 1:09:40 PM6/11/22
to Santhavasantham
On Sat, Jun 11, 2022 at 12:02 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

IFP edition - Vol-2 - page 149:
image.png


yes. IFP has both versions.
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOYabKezO02OFTQ63ObZz2-fqc2o%2BjsSOCyBFUqGO3cTw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 11, 2022, 1:23:01 PM6/11/22
to santhavasantham
Good to see your interest in researching word histories.

I do not know if I have mentioned this before in any other thread. When relying on digital versions of literature - one needs to be careful about potential digitization errors in the documents that are used as source for research, concordance, etc.

Regarding the appar thevaram verse you quoted, you can see a more correct version of that song here:

The Swami of Kadavur Mayanam is - பெருமான் அடிகள்


V. Subramanian



.......

நா. கணேசன்

Siva Siva

unread,
Jun 11, 2022, 1:49:20 PM6/11/22
to santhavasantham
Please send the scanned copy of the page in the IFP books showing the other version of that verse that you had seen.
Thanks.

N. Ganesan

unread,
Jun 11, 2022, 2:00:37 PM6/11/22
to Santhavasantham
On Sat, Jun 11, 2022 at 12:49 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Please send the scanned copy of the page in the IFP books showing the other version of that verse that you had seen.
Thanks.

You can see it here in the IFP website:
Tevaram Concordance, French Institute:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Jun 11, 2022, 2:16:36 PM6/11/22
to Santhavasantham
தேவாரத்தில் இன்னொரு பாடலிலும் பெருமாள் என்ற சொல் பழைய பதிப்புகளில் அச்சாகியுள்ளது.
கடவூர் மயானப் பாடல்.

(1) ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்நாட்டின் ஊரும் பேரும்,
“கடவூர் மயானத்துப் பெரிய பெருமாள் அடிகளே”.

(2) முனைவர் வ. சு. செங்கல்வராயபிள்ளை,
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/தேவார_ஒளிநெறி-சுந்தரர்.pdf/page582-1536px-தேவார_ஒளிநெறி-சுந்தரர்.pdf.jpg
”பெரிய பெருமாள் அடிகளே”. - கடவூர் மயானம்.

அண்மைக்காலப் பதிப்புகளில் பெரிய பெருமான் அடிகளே என மாறிவருகிறது.

நா. கணேசன்

lns2...@gmail.com

unread,
Jun 12, 2022, 5:55:44 AM6/12/22
to சந்தவசந்தம்
ஆதாரபூர்வமான நாலாயிர திவ்யப்ர்பந்த பதிப்புகளில் நாய்ச்சியார் திருமொழி பாசுரத்தில் வருவது 'சோலைமலைப் பெருமான் துவராபதியெம் பெருமான்' என்பதே. பாடபேதமும் கண்ணில் படவில்லை. பார்க்க புதூர் அக்ரகாரம் S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் அவர்களின் பதிப்பு.

அச்சுப் பிரதியில்  இப்பாசுரத்திற்கான பாடத்தில் 'பெருமாள்' என்று வருவது அபூர்வம் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

Srini

N. Ganesan

unread,
Jun 12, 2022, 6:00:27 AM6/12/22
to Santhavasantham
ஆமாம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages