என் பெயர் இராம்நாத் பகவத். முதற்கண், சந்த வசந்தத்தில் இருக்கும் அத்துணைக் கவிஞர்களுக்கும் சிறியேனின் சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள். மாபெரும் கவிஞரும் இசைக்கலைஞருமான திரு அசோக் சுப்பிரமணியம் அவர்களுக்கு, அற்புதமான இந்த மரபுக்கவிதை வலைக்குழுவில் என்னையும் இணைத்ததற்கு என் உள்ளார்ந்த நன்றிகள்.
தொழில் அடிப்படையில் நான் ஒரு Actuary (காப்பீட்டுக் கணிப்பாளர்). United India Insurance நிறுவனத்தின் Appointed Actuary ஆக பணிபுரிகிறேன். மரபுக் கவிதைகள் எழுதுவதும், தமிழிலக்கியங்கள் படிப்பதும், தமிழ் மொழியில் சொல்லாய்வு செய்வதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
மரபுக்கவிதையின் யாப்பிலக்கணத்தின் வகைகளையும் அடிப்படைக்கூறுகளையும் தெய்வத்திரு பசுபதி Sir அவர்கள் எழுதிய கவிதை இயற்றிக் கலக்கு என்ற நூலைப் படித்துச் சற்றே புரிந்துகொண்டேன். அவர்க்கும் இத்தருணம் என் உள்ளார்ந்த வணக்கங்கள்.
இவை தவிர, நான் ஒரு கர்நாடக இசைப் பாடகன். சங்கீத நாடக அக்காடெமி Fellow திரு. S R ஜானகிராமன் அவர்கள் என் குரு. அவரிடம் இசை பயிலக்கிடைத்ததை எனக்குக் கிட்டிய அரும்பெரும்பேறாகக் கருதுகிறேன். பாடல்களும் இயற்றியுள்ளேன்.
உதாரணத்திற்கு: தமிழ் மொழியின் அழகைப் பற்றி நான் இயற்றிய பாடலை திருமதி ரஞ்சனி காயத்திரி அவர்கள் பாடி, அன்றைய தமிழ் மொழி தமிழ்த்துறை அமைச்சராக பணிபுரிந்த திரு. mafoi பாண்டியராஜன் அவர்கள், அரசு சார்பாக "செம்மொழிக்குச் செவ்விசைப்பாட்டு" என்று 2019ம் ஆண்டு வெளியிட்டார். இந்தப் பாட்டின் இணைப்பு பின் வருமாறு:
https://youtu.be/SNWifNVJD1c?si=SDLzzZc_KvTGBtoFதமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் உள்ள அழகான கருத்துகளைப் பரிமாறுவதற்குத் "தமிழ்ச்சிமிழ்" என்ற குறுங்காணொலித் தொடர் ஒன்றையும், இசைப்பற்றிய கருத்துகளைப் பரிமாற குறுங்காணொலித் தொடர் ஒன்றையும், என் ஊடக வலைப்பக்கங்களில் பதிவிடுகிறேன்.
என் ஊடக வலைப்பக்க இணைப்புகள் பின் வருமாறு:
Facebook:
https://www.facebook.com/ramnath.bhagavath/Instagram:
https://www.instagram.com/ramnathbhagavath/Youtube
https://www.youtube.com/@ramnathbhagavath932திரு இளையராஜா அவர்களின் மிகப்பிரபலமான "தும்பி வா தும்பக்குடத்தில்" என்ற பாடல் மெட்டுக்கு அம்பாளைப் பற்றி வார்த்தைகள் அமைத்துப் பாடியிருந்தேன். அதனை அவர் கேட்டுவிட்டு மகிழ்ந்து பாராட்டினார். இந்தப் பாடலின் இணைப்பு பின்வருமாறு:
https://youtu.be/Ez-cTxsaelM?si=QcuAjcosgDZ_m_4Cகவிப்பெருந்தகைகள் இருக்கும் இந்த அமைப்பில் அடியேனும் இருப்பது, எனக்குக் கிட்டிய பெரிய வாய்ப்பு. இதன் மூலம், மேலும் மரபுக்கவிதைகள் குறித்து அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், புனைய முயல்வதற்கும், அடியேனுக்குப் பெருந்துணையாக இருக்கும்.
பணிவுடன்,
பேராவலுடன் எதிர் நோக்கி,
இராம்நாத்